“ஏன்ம்மா…. என்னைய எதுவும் பேச விடலை…. கொஞ்சம் நாம எடுத்து சொல்லி இருந்தா ருத்ரா சம்மதித்து இருப்பானே”என்றார் பாக்கியம்
“சம்மதிச்சு இருப்பான்னு நீ நினைக்கிறியா…கண்டிப்பா சம்மதிச்சு இருக்க மாட்டான்… நம்ம மேல வெறுப்பு தான் வந்து இருக்கும்…. அதோட நீ மதிய பத்தி பேசி அவனுக்கு இல்லாத எண்ணத்தை நீயே வர வைத்து இருப்ப…. அதான் உன்னை அமைதியா இருக்க சொன்னேன் கொஞ்சம் நாள் இந்த விசயத்தை ஆற போடுவோம்”என்றதும்
“நான் பாட்டுக்கு தானே இருந்தேன்… நீங்கதான் மாமாவை பத்தி பேசி பேசி என் மனசுல ஆசைய வரவைச்சீங்க… இன்னிக்கு நான் நடந்துகிட்டதை வைத்து தான் மாமா என்னைய தப்பான பொண்ணுனு நினைச்சு வேண்டாம்னு சொல்லிட்டார்” என்று கண் கலங்கியவள்
“இதுக்கு நீங்க இரண்டு பேர் தான் காரணம் நீங்க எதுவும் பேச வேண்டாம் நானே மாமா கிட்ட பேசறேன் மாமா நான் சொன்னா கண்டிப்பா கேட்பார்”
ஷிவானி மனதில் இனியும் பொய்யான நம்பிக்கையை வளர விரும்பாத சரோஜாவோ “ஷிவானி பேச வேண்டாம்னு சொல்லல…. ஆனா அவன் ஒரு விஷயம் வேண்டாம்னு முடிவு பண்ணிட்டா திரும்ப அந்தபக்கம் திரும்பி கூட பார்க்க மாட்டான் அது உனக்கே தெரியுமே” என்றதும்
“இந்த அறிவு உங்களுக்கு ஏன் முன்னேயே வரல…அப்ப ஏன் என் மனசுல ஆசைய வளர்த்தீங்க அம்மாச்சி.., சரி விடுங்க எனக்கு நம்பிக்கை இருக்கு மாமா நான் சொன்னா கண்டிப்பா கேட்பார் என்னை கல்யாணம் பண்ண சம்மதிபார்” என சொன்னவளை பார்த்த பாக்கியம் சரோஜாவிற்கு தான் என்னவோ போல் ஆனது.
சந்தோஷ் காதில் ஏர்பாட் மாட்டி கொண்டு பாடலை கேட்ட படி கண் மூடி படுத்து இருக்க ருத்ரனோ தூக்கம் வராமல் புரண்டு புரண்டு படுத்தவனின் நினைவு மொத்தத்தையும் மதியே ஆக்ரமித்து இருந்தால்
என்ன இவன் இன்னும் தூங்காம நெளிஞ்சுட்டு இருக்கான் என சந்தோஷ் திரும்பி ருத்ரனை பார்த்தான் அவனோ இன்னும் புரண்டபடி படுத்து இருந்தான்
என்ன ஆச்சு இவனுக்கு படுத்ததும் தூங்கி விடுவானே….ஜட்டிகுள்ள எறும்பு எதுவும் போய்டுச்சா என்ன இப்படி நெளியிறான் என ருத்ரனை கவனிக்க ஆரம்பித்தான் சந்தோஷ்
ராட்சசி என் மண்டை குள்ள புகுந்துகிட்டு தூங்க விடாம டார்ச்சர் பண்றா என ருத்ரன் வாய்குள் முனுமுனுக்க அது சரியாக சந்தோஷ் காதிலும் விழுந்து விட்டது
என்னடா ஆச்சு ருத்ரா உனக்கு காலைல எழுந்தா காலில் சக்கரத்தை கட்டியது போல ஓடனும் தூங்குடா என சந்தோஷ் தூங்கி விட்டான் என நினைத்து ருத்ரன் சத்தமாவே புலம்ப
ராட்சசியா சரி ரைட் ஷிவானிய வேணாம் சொன்னதுக்கு வேற ரீசன் இருக்கும் போலயே என அவன் பக்கமாக தலையை திருப்பி தூங்குவதை போல கண் மூடி படுத்து இருந்தான் சந்தோஷ்
ருத்ரன் எழுந்து அமர்ந்து சந்தோஷ் தூங்கி விட்டானா என பார்க்க சந்தோஷோ இப்ப எதுக்கு இப்படி க்ளோஸா வர்றான் ஓ நாம தூங்குறோமான்னு செக்கிங்கா என சந்தோஷ் தூங்குவதை போல பாவனையுடன் படுத்து இருந்தான்
இருட்டில் சந்தோஷ் தூங்கி விட்டதாக நினைத்த ருத்ரனோ மேஜையில் இருந்த போனை எடுத்து கேலரியில் இருந்த மதியின் புகை படத்தை பார்க்க ஆரம்பித்தான்
சந்தோஷ் ஒற்றை கண்ணை திறந்து பார்க்க இந்நேரத்துல என்னத்த பார்கிறான் அப்பு டார்லிங் கல்யாணத்தை பற்றி பேசினதுல ஒருவேளை அந்த மாதிரி படத்தை பார்க்க ஆரம்பித்து விட்டானோ என சந்தோஷ் யோசிக்க
சிரித்த முகத்துடன் மதியின் புகை படங்களை தள்ளி கொண்டே வந்தவன் அவள் நடனம் ஆடியதை அவளிற்கு தெரியாமல் எடுத்த வீடியோவை ப்ளே பண்ணினான்
மெலிதாக கேட்ட பாடல் சத்தத்தை கேட்ட சந்தோஷோ அட ச்சை பரத நாட்டியம் பாட்டு கேட்கிறான் போல அதான பார்த்தேன் இவன்லாம் அதுக்கு சரிபட்டு வரமாட்டான்….ஆனா இவன் எப்போ பரதநாட்டியம் பார்க்க அரம்பித்தான் சரி பக்கத்துல போய் பார்போம் என மெதுவாக அவன் பக்கமாக புரண்டு படுத்து அவன் போனை பார்க்க முயன்றான்
சந்தோஷை பார்த்த ருத்ரனோ வேகமாக போனை அனைத்து விட்டான்
ச்சே மிஸ் ஆகிடுச்சே காலையில் பார்த்துகலாம் என நினைத்து இன்னும் தூங்குவதை போல நடித்தான்
சந்தோஷ் அருகில் வந்த ருத்ரன் சந்தோஷின் போனை மெதுவாக எடுக்கவும் சந்தோஷிற்கு தூக்கி வாரி போட்டது
எத்தனை ஷாக் தான் குடுப்பான் என் போன்ல என்ன பண்றான்னு தெரியலையே அய்யோ இப்ப கத்தவும் முடியாதே ருத்ரனின் செயலில் திகிலடைந்து போனான்
சந்தோஷ் போனில் ஓடி கொண்டு இருந்த பாட்டை நிறுத்தியவன் வாட்ஸ் அப்பிற்கு சென்று வெண்மதி நம்பர் இருக்கிறதா என பார்த்தான்….மதிக்கு சந்தோஷ் அனுப்பிய வாட்ஸ் அப் மெஜஜ்களை பார்த்தவன் முகமோ இறுகியது
சந்தோஷ் மட்டுமே அவளிடம் தீம்பார்க்கில் அவளுடன் எடுத்த போட்டோகள் மேசேஜ்கள் அனுப்பி இருக்க மதியோ அதற்கு எந்த பதிலும் அனுப்பி இருக்க வில்லை அதற்கே அவன் கோபமாகிவிட்டான்…. என் நம்பரை தவிர எல்லாருடைய நம்பரையும் வச்சு இருக்கா புலம்பியபடி தன் நம்பரை அவள் எண்ணிற்கு அனுப்பி விட்டு அதை டெலிட் ஃபார் மீயில் அழித்தும் விட்டு ஃபோனை வைத்து விட்டு உறங்கி விட்டான்.
அவனிடம் மதி நம்பர் இருக்கிறது தான் ஏனோ தன் எண்ணில் இருந்து அனுப்ப அவனால் முடியவில்லை அவளாக தன்னை தொடர்பு கொள்ள வேண்டும் என நினைத்தானோ என்னவோ
ருத்ரன் காலை எப்போதும் போல் எழுந்து உடற்பயிற்சி முடித்து விட்டு குளிக்க சென்றதும் சந்தோஷ் வேகமாக எழுந்து ருத்ரனின் போனை எடுத்தான் நல்ல வேளையாக போன் லாக் ஆகாமல் இருந்தது
அப்படி என்ன தான் பார்த்தான் என அவன் போனை ஆராய அதில் இருந்த வெண்மதி போட்டோகள் வீடியோவை பார்த்தவன் முகமோ அதிர்ச்சியில் வெளிறியது
நாம ஏதாவது கனவு காண்கிறோமா என்ன என தன்னை கிள்ளி பார்த்து கொண்டு
இது எப்ப இருந்துடா நடக்குது ஆனா வொய்ட் மூனை பிடிக்கல பிடிக்கலன்னு சொல்லி திட்டிகிட்டே நல்லா சைட் அடிச்சுட்டு இருந்து இருக்கான்…. இதெல்லாம் வொய்ட் மூன் வந்த ஒரு வாரத்தில் எடுத்து இருக்கான் என்கிட்ட ஒரு வார்த்தை சொன்னானா பாவி வரட்டும் இன்னிக்கு போனை வைக்கவும் அவன் போன் அலறியது
வெண்மதி தான் அழைத்து இருந்தால்
அதை பார்த்ததும் தான் அவனுக்கு ருத்ரன் தன் போனை எடுத்தது நினைவிற்கு வந்தது இந்த திருட்டு பூனை என்னென்ன வேலை பார்த்து வச்சு இருக்கோ தெரியலையே
இவளுக்கு என்ன அனுப்பினான்னு தெரியலையே சரி சமாளிப்போம் என அழைப்பை ஏற்றான்
“சொல்லு வொய்ட் மூன்”
“சந்தோஷ் உனக்கு டிரங் பண்ற பழக்கம் எதுவும் இருக்கா என்ன ”
“எதே ஏன் ஏன் அப்படி கேட்டகிற” என்று திணறனான் இரவு என்னத்தை அனுப்பி தொலைச்சான் தெரியலையே
“அப்ப ஏன் ஏதோ ஒரு நம்பரை எனக்கு அனுப்பி இருக்க ”
அவனுக்கு விஷயம் புரிந்து போனது ருத்ரன் தன் நம்பரை தான் அனுப்பி இருக்கிறான் என
“சொல்லு சந்தோஷ் யார் நம்பர் அது ”
இவன் கிட்ட போனா இல்லை எதுக்கு என் போன்ல இருந்து அனுப்பி தொலைச்சான் இந்த ஜிம் பாடிக்கு இப்ப கெத்து ஒன்றுதான் குறைச்சல் பாரு என மனதினுள் புலம்பியவன்
“ஹிஹிஹி” என சிரிக்கவும்
“இப்ப எதுக்கு இப்படி கேவலமா சிரிக்கிற”
“அது உன்கிட்ட அண்ணா நம்பரை இல்லையா” என கேட்டான்
“யாரு உன் அண்ணா ருத்ரன் நம்பரா”
“ஆமா எனக்கு 10 அண்ணன்னா இருக்கானுங்க பாரு நீ வேற ஏன்ம்மா….எனக்கு இருப்பது ஒரே அண்ணன் மிஸ்டர் ருத்ர பிரசாத் தான் அவன் நம்பர் உன்கிட்ட இருக்கா”என கடுப்புடன் கேட்டான்
“இல்லை” என்றதும்
“ம்….. அதான் அவன் நம்பரை உனக்கு அனுப்பினேன்” என்றதும்
“யாராவது அர்த்த ராத்திரில காண்டாக்ட் நம்பர் அனுப்பு வாங்கலா அதுவும் மிட்நைட் 2 மணிக்கு பேய் கூட தூங்க போய் இருக்கும்”
“ஆனா நான் அனுப்புவேனே ஏன்னா எனக்கு தூக்கத்துல காண்டேக்ட் ஷேரிங் வியாதி இருக்கு ”
“எதேய்”
“அதாம்மா இந்த தூக்கத்துல நடக்கிற வியாதி மாதிரி தூக்கத்துல யார் நம்பரையாவது எடுத்து எல்லாருக்கும் அனுப்பி விட்ருவேன்”
நான் லூசா இல்லை இவன் லூசா என நினைத்தவள் “ரொம்ம்ம்பப நல்ல பழக்கம் தான் நான் வெச்சுடவா”
“அந்த நம்பரை சேவ் பண்ணிக்க”
“அதை நான் அப்பவே அழிச்சுட்டேனே யாருனே தெரியாத நம்பரை நான் ஏன் சேவ் பண்ணனும்னு டேலிட் பண்ணிட்டேன் ”
சிறப்பு என முனுமுனுத்தவன் “அப்ப அவன் நம்பர் உனக்கு வேண்டாமா ”
“எனக்கு எதுக்கு ”
“நீ அவன் கிட்ட தானே வேலை பார்க்க போற எதாவது எமர்ஜென்சினா கால் பண்ண வேணும்ல”
“ப்ச் அதான் விஷ்ணு அண்ணா நம்பர் இருக்கே சரி நான் வச்சுடறேன்” என அழைப்பை துண்டித்து விட்டால்
மதியிடம் பேசியதில் அவளுக்கு ருத்ரன் மீது அவளுக்கு எந்த விதமான எண்ணமும் இல்லை என புரிந்தது
ருத்ரன் மதியை விரும்புவதை அவனால் நம்பவே முடியவில்லை இவன் விளையாட்டுக்கு எதுவும் பண்றானா இல்லை நிஜமாவே லவ்ல விழுந்துட்டானா ஒன்னும் புரியலையே
அப்படி லவ்வா இருந்தா எப்படி அத்தை ஷிவானி அப்பத்தாவை சமாளித்து கல்யாணம் பண்ண போறானோ ஆனா நமக்கு நல்ல என்டர்டைன்மென்ட் தான் எதுவும் தெரியாதது போல காட்டிகாம இருப்போம் என யோசித்தவன் முதுகிலே அடி விழுந்தது ருத்ரன் தான் அடித்து இருந்தான்
“ஆஆஆ ஏன்டா அடிச்ச”
“இங்கே என்ன பண்ற நீ இவ்வளவு சீக்கிரமே எழும்ப மாட்டியே” என கேள்வியாக பார்த்தவனிடம்
“இது என்னடா வம்பா போச்சு உனக்கு பொறுப்பு இல்லை பருப்பு இல்லன்னு திட்டிவீங்க சரி இனிமேலாவது பொறுப்பா இருக்கலாம்னு நினைத்தேன் அதான் சீக்கிரமா எழுந்தேன் ”
“ஓஹோ… அப்ப சரி இன்னிக்கே நீ ஷோரூம்க்கு வா” என்று வெளியே செல்ல தயாரானான்
“இன்னைக்கேவா ”
“ஆமா நீயும் எவ்வளவு நாள் தான் இப்படியே இருப்ப இன்னிலிருந்து ஷோ ரூமிற்கு வா வந்து வேலைய கற்றுக்க”
“அப்புறம் காலையில் உனக்கு யாராவது கால் பண்ணாங்களா” என கேட்டான் ருத்ரன்