அத்தியாயம் 14

அத்தியாயம் 14

அவளை இமைக்காமல் பார்த்துக் கொண்டே, அவளுக்கு முன்னே இருந்த இருக்கையில் கால் மேல் கால் போட்டு அமர்ந்தான் ராவணன்.

அவளோ குரலை செருமி விட்டு, தன்னை நிலைப்படுத்தியவள், “என்ன சார் விஷயம்?” என்று கேட்க, அவளையே பார்த்து இருந்தவன், “கம்பிளைன் கொடுக்க வந்திருக்கேன்” என்றாள்…

ஏதோ ஏடா கூடமாக அவளை சீண்ட வந்து இருக்கின்றான் என்று புரிய, “என்ன கம்பிளைன்?” என்று கேட்டாள்.

அவளது காக்கி ஷேர்ட்டை அழுத்தமாக பார்த்து விட்டு, அவள் விழிகளை பார்த்தவன், “என்னோட ஷேர்ட்டை காணோம்” என்றான்.

அங்கே இருந்த போலீஸ்காரனோ விசாலாட்சியிடம், “அக்கா எனக்கு காதுல ஏதோ பிரச்சனைன்னு நினைக்கிறன், ஷேர்ட்டை காணோம்னு கேக்குது” என்றான்.

“டேய் எனக்கும் அப்படி தான் டா கேக்குது, நமக்கு காதுல பிரச்சனை இல்லை, சாருக்கு வேறே ஏதோ பிரச்சனை போல” என்று சொல்ல, அங்கே அவனை வெறித்து பார்த்த மோகினியோ, இதழ் குவித்து ஊதிக் கொண்டே சலிப்பாக இரு பக்கமும் தலையை ஆட்டிக் கொண்டாள்…

ராவணனோ, “கம்பளையின் எடுக்க முடியுமா? இல்லையா?” என்று ஒற்றை புருவம் உயர்த்தி கேட்க, அங்கே நின்ற விசாலாட்சிக்கு பொறுமை போய் விட்டது…

“சார் ஷேர்ட் காணாம போனது எல்லாம் நாங்க எஃப் ஐ ஆர் ல எழுத முடியாது… சின்ன புள்ள தனமா இருக்கும் சார்” என்றார்.

தலையை திருப்பி அவரை ஆழ்ந்து பார்த்த ராவணனோ, “அப்போ ஷேர்ட் ஐ வீடு புகுந்து திருடுனா அது திருட்டு இல்லையா?” என்று கிண்டலாக கேட்க, “வீடு புகுந்து நகை நட்டை திருடுறத பார்த்து இருக்கேன், இத யாரு சார் திருடி இருக்க போறாங்க?” என்று கேட்டார்.

அவனோ இப்போது முன்னால் திரும்பி மோகினியை பார்த்தவன், “எல்லாம் உங்க இன்ஸ்பெக்டர் மேடம் தான்” என்றானே பார்க்கலாம்.

அங்கே நீர் அருந்திக் கொண்டு இருந்த போலீஸ்காரன் ஒருவனுக்கே இதனை கேட்டு புரையேறியது…

விசாலாட்சியோ, “எங்க மேம் ஆஹ்?” என்று கேட்க, ராவணனும், “இல்லன்னு சொல்ல சொல்லுங்க பாப்போம்?” என்றான் மோகினியை இமைக்காமல் பார்த்துக் கொண்டே…

இப்போது மோகினியை விசாலாட்சி தொடக்கம் எல்லாரும் பார்க்க, ‘மானத்தை வாங்குறான்’ என்று மனதுக்குள் திட்டியவனோ, “நீங்க கிளம்புங்க சார், ஈவினிங் அனுப்புறேன்” என்றாள் வேறு வழி இல்லாமல்…

அவனை இங்கே இருந்து அப்புறப்படுத்தினால் நிம்மதியாக இருக்கும் என்று தோன்றியது…

“அதெல்லாம் நான் நம்ப மாட்டேன், இப்போ இங்க எனக்கு ஷேர்ட் வந்து ஆகணும்” என்று சொல்ல, அவளுக்கு தலை விண் விண்ணென்று வலித்தது… 

எரிச்சலுடன் எழுந்து கொண்டவள், “முருகன், வண்டியை எடுங்க, வீட்டுக்கு போயிட்டு வரலாம்” என்று சொல்லிக் கொண்டே விறு விறுவென நடந்தவள், வண்டியில் கடுப்பாக ஏறி அமர்ந்தாள். 

போலீஸ் நிலையத்துக்கு வந்து என்ன அழிச்சாட்டியம் எல்லாம் பண்ணிக் கொண்டு இருக்கின்றான்…

எரிச்சலாக இருந்தது…

வீட்டுக்கு வந்தவளோ அவனது ஷேர்ட்டை எடுத்துக் கொண்டே விறு விறுவென செல்ல, அங்கே குழந்தையுடன் அமர்ந்து இருந்த நீலாவோ, “அண்ணாவோட ஷேர்ட் போல இருக்கே” என்றாள்.

திக்கென்று இருந்தது மோகினிக்கு…

ஆனால் காட்டிக் கொள்ளாமல், பதிலும் சொல்லாமல், மீண்டும் வண்டியில் ஏற வண்டியை ஓட்டிக் கொண்டே, “மேம் கேட்டா கோச்சுக்க மாட்டிங்களே” என்றான் முருகன்.

“ம்ம் என்ன?” என்று மோகினி கேட்க, “ஷேர்ட்டை எல்லாம் எதுக்கு மேம் திருட்டிட்டு வந்தீங்க?” என்று கேட்க, அவனை திரும்பி முறைக்க, “ஐயோ இல்ல, ஏன் எடுத்துட்டு வந்தீங்கன்னு கேட்க வந்தேன்” என்று கதையை மாற்றினான்.

“ஆஹ் வேண்டுதல்” என்று சொன்னவளோ, போலீஸ் நிலையத்துக்குள் நுழைய, அங்கே இருக்கையில் அமர்ந்து, அவளது மேசையின் மேலே காலை நீட்டி வைத்த ராவணன், வட்டம் வட்டமாக புகையை ஊதிக் கொண்டு இருந்தான்.

மோகினிக்கு கோபத்தில் உச்சி முடி எழுந்து நின்றது தான் மிச்சம்…

அங்கே நின்ற போலீஸ்காரர்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டு இருந்தார்கள் தவிர, யாரும் எதுவும் அவனிடம் சொல்லவில்லை…

அது இன்னுமே கடுப்பை கிளப்ப, “இங்க இருக்கிற யாரும் எதுவும் சொல்ல மாட்டிங்களா?” என்று சீறிக் கொண்டே, மேசையில் ஷேர்ட்டை தூக்கி போட்டவள், “இடத்தை காலி பண்ணுங்க சார்” என்றாள்…

அவனோ ஷேர்ட்டை எடுத்து, பார்த்தவன், அப்படியே ஏறிட்டு அவளை பார்த்துக் கொண்டே, ஷேர்ட்டை நுகர, அவளோ சங்கடத்துடன் முகத்தை பக்கவாட்டாக திருப்பிக் கொண்டாள்…

அவனோ, அவளை ஒரு குறும்பு சிரிப்புடன் பார்த்துக் கொண்டே எழுந்தவன், கையில் இருந்த சிகரெட்டை கீழே போட்டு காலினால் அழுத்தி விட்டு, அங்கே சுற்றி இருப்பவர்களை பார்த்தவன், “இன்ஸ்பெக்டரே திருடனா இருக்கலாமா? தப்பு தானே” என்று கேட்க, விசாலாட்சி, இல்லை என்கின்ற தோரணையில் ஆட்டி மறுபடி ராவணனுக்கு பயத்தில் ஆம் என்கின்ற தோரணையில் ஆட்டினார்…

ராவணன் ஒரு சிரிப்புடன், இப்போது கடுப்பாக நின்ற மோகினியை நெருங்கி வர, அவளுக்கோ நெஞ்சில் நீர் வற்றி போனது…

அடித்தால் திரும்ப அடித்து விடுவாள்.

ஆனால் இவன் முத்தம் கூட அடிக்க கூடியவன் ஆயிற்றே… 

சட்டென இரு அடிகள் அவள் பின்னால் செல்ல, “என்ன பார்த்து அவ்ளோ பயமா என்ன?” என்று கேட்டுக் கொண்டே, அவன் இரு அடிகள் வைத்து நெருங்கி நின்றவன், அவளை விழிகளுக்கு நேரே பார்த்துக் கொண்டே, அவள் காதருகே குனிய, அவள் அப்படியே மூச்சை இழுத்து பிடித்துக் கொண்டு நின்று இருந்தாள்.

“நேத்து சொல்ல நினச்சேன், ஆனா நான் எந்திரிக்கும் போது நீ இல்ல, சும்மா சொல்ல கூடாதுடி, நேத்து செமயா கம்பெனி கொடுத்த, இப்போவே உன்னை தூக்கிட்டு போய் என்னென்னவோ பண்ணும்னு தோணுது, போலீஸ் ஸ்டேஷனாச்சேன்னு விட்டுட்டு போறேன்” என்று சொல்லிக் கொண்டே மெதுவாக விலகி அவளது சிவந்த கண்களை பார்த்தவன், மெதுவாக விழிகளை தாழ்த்தி அவள் இதழ்களை பார்த்து விட்டு, மீண்டும் அவள் விழிகளை பார்த்தவன், “உன்னை எப்படி எப்படியோ பழி வாங்க நினச்சேன், ஆனா இப்படி தான் பழி வாங்க முடியும் போல, அடங்க மாட்டேங்குது டி” என்று சொல்லிக் கொண்டே, அவள் முகத்தில் இதழ் குவித்து ஊதி விட்டு அவளை தாண்டி செல்ல, அவளோ, கண்களை மூடி, திறந்து கொண்டாள்…

அதனை தொடர்ந்து, அங்கே அவர்களையே பார்த்துக் கொண்டு நின்று இருந்த போலீஸ் காரர்களை பார்த்த மோகினியோ, “இங்க என்ன அவுத்து போட்டா ஆடுறாங்க, அவங்க அவங்க வேலைய பாருங்க” என்று சொல்லி விட்டு இருக்கையில் வந்து அமர்ந்த போதிலும், அவள் உணர்வுகள் அடங்க மறுத்தன…

இப்படி பேசியே தூண்டி விட்டு செல்வான் என்று அவள் கனவில் கூட நினைத்தது இல்லை…

நீரை எடுத்து அருந்திக் கொண்டாள்.

மீண்டும் மீண்டும் நேற்று அவனுடன் கலவி கொண்டது தான் நினைவுக்கு வந்தது… 

எங்கேயாவது கவனத்தை செலுத்த நினைத்தவள், அடுத்த கேஸ் ஃபைலை பார்க்க ஆரம்பித்து விட்டாள்…

இப்படியே இரு நாட்கள் கடந்து இருக்கும்…

போலீஸ் நிலையத்துக்கு அவசரமாக அழைப்பு வந்தது…

“மேம் சந்தைல ஏதோ கலவரமாம்” என்று சொல்ல, மோகினியும் ஜீப்பை எடுத்துக் கொண்டு கிளம்பி விட்டாள்.

போலிஸ் ஜீப்பை கண்டதுமே அங்கே இருப்பவர்கள் விலகிக் கொள்ள, ஜீப்பில் இருந்து பாய்ந்து இறங்கியவள் கண்ணில் பட்டது என்னவோ ரத்தம் தெறிக்க தெறிக்க, ஒருவன் கழுத்தை பற்றி முகத்திலேயே குத்திக் கொண்டு இருந்த ராவணன் தான்.

மோகினியை பார்த்து, அவன் தாக்குதலை எல்லாம் நிறுத்தவில்லை…

அவளை பார்த்துக் கொண்டே, இன்னும் ஓங்கி முன்னே இருந்தவனின் முகத்தை தாக்கி இருந்தான்…

மோகினியோ, “ஸ்டாப் இட்” என்று சீறிக் கொண்டே அவ்விடம் வர, ராவணன் அவளை பார்த்துக் கொண்டே, கையில் இருந்தவனை மெதுவாக விட, அவனோ சுயநினைவு இன்றி கீழே விழுந்து விட்டான்.

“இப்போ எதுக்கு இவனை அடிச்ச?” என்று சீறினாள் மோகினி…

அவளை ஆழ்ந்து பார்த்தவன், “மரியாதையா கேளுங்க இன்ஸ்பெக்டர் மேம், பதில் சொல்றேன்” என்று சொன்னான்.

அவனை முறைத்துக் கொண்டே, “எதுக்கு சார் அடிச்சீங்க?” என்று கேட்க, ராவணனோ, “போற வர்ற பொண்ணுங்க கிட்ட வம்பு பண்ணிட்டு இருந்தான், அதனால் தான் அடிச்சேன், அரெஸ்ட் பண்ண போறீங்களா என்ன?” என்று கேட்டுக் கொண்டே இரு கைகளையும் நீட்ட, அவளோ, பெருமூச்சுடன், “போலீஸ் நாங்க இருக்கோம், எங்களுக்கு கால் பண்ணி இருக்க வேண்டியது தானே” என்றாள்…

அவனோ, “பண்ண தோணல” என்று சொல்லிக் கொண்டே சுற்றும் முற்றும் பார்க்க, எல்லோரும் அவர்களை தான் பார்த்துக் கொண்டு இருந்தார்கள்…

அங்கே நின்ற முருகனிடம், “நீ போ” என்று சொல்ல, அவனோ மோகினியை பார்க்க, அவளோ, “இப்போ எதுக்கு அவன் போகணும்?” என்று சீறினாள்.

ராவணனோ, “பேசிட்டே இருக்காதே, கொய்ங்ன்னு இருக்குதுல்ல” என்று சொன்னவன் அடுத்த கணமே அவளை ஒற்றைக் கையால் தூக்கி அவன் தோளில் குப்பற போட்டுக் கொண்டு நடக்க ஆரம்பித்து விட்டான்.

ஊரில் எல்லாருமே பார்த்துக் கொண்டு இருக்க, அவன் செய்த செயல் அது…

அவனோ, “அவ ஊருக்கு இன்ஸ்பெக்டரா இருக்கலாம், எனக்கு இன்னும் பொண்டாட்டி தான்” என்று சொல்லிக் கொண்டே நடக்க, “என்னை விடுங்க” என்று மோகினி திமிறிக் கொண்டே கதறியது அவன் காதில் கேட்டால் தானே…

அவளை தூக்கி சென்று தனது வண்டியை திறந்து அதற்குள் உட்கார வைக்க, அவளோ, “இப்போ எதுக்கு?” என்று ஆரம்பித்த அடுத்த கணமே, அவள் இதழ்களில் அவன் இதழ் பொருத்தி இருந்தான்.

பேச வந்த பெண்ணவளது வார்த்தைகள் அடங்கி போக, அவள் இதழ்களை இன்னும் ஆழமாக கவ்வி இருந்தான்.

சற்று நேரம் அவன் முத்தத்தில் பெண்ணவள் மயங்கி தான் இருந்தாள்.

சட்டென நினைவு வந்தவளாக, அவன் மார்பில் கையை வைத்து தள்ளிக் கொண்டே, “யாரும் பார்த்துட போறாங்க” என்றாள் சுற்றும் முற்றும் பார்த்தபடி…

“நான் உன் புருஷன் டி” என்றவன், அவள் பக்கம் இருந்த கதவை மூடி, விட்டு அடுத்த பக்கம் வந்து ஏறி அமர்ந்து, வண்டியை கிளப்பினான்.

அவளிடம் மௌனம்…

அவளும் அவனில் மயங்கி தானே இருக்கின்றாள்.

இல்லை என்றும் சொல்ல தோன்றவில்லை…

அவன் அருகாமை வேண்டும் என்று தோன்றிக் கொண்டே இருக்க, அப்படியே வெளியே பார்த்துக் கொண்டு அமர்ந்து இருந்தவள், “இன்னைக்கு ஷேர்ட்டை கிழிக்க வேணாம், இது ஒன்னு தான் இருக்கு” என்றாள்.

அவனுக்கு சிரிப்பும் வந்து விட்டது…

அடக்கிக் கொண்டே, “ம்ம், அப்போ நீயே கழட்டிடு” என்று சொல்ல, சட்டென திரும்பி அவனை அதிர்ந்து பார்க்க, “எப்படியும் மொத்தமா கழட்டி தானே ஆகணும்” என்றான்.

அவளுக்கு ஐயோடா என்று இருக்க, சட்டென மீண்டும் முகத்தை வெளியே திருப்பிக் கொண்டவள், “நீலா எல்லாம் சொன்னா” என்றாள்.

இப்போது ராவணனுக்கு தெளிவாக புரிந்தது, அவள் ஏன் தனது ஸ்பரிசத்தில் மயங்கி நிற்கின்றாள் என்று…

“ம்ம், ரிஷியை நீ தான் கல்யாணம் பேசுனியாம்னு கேள்விப்பட்டேன்” என்றான் ராவணன்.

“சீக்கிரம் கல்யாணம் பண்ணி வச்சுடணும்” என்று அவள் அவனை பார்க்காமலே சொல்ல, “பண்ணி வச்சுடலாம்” என்றான்…

நீலா என்று சொன்னதுமே இருவருக்கும் மெதுவாக கோபமும் அழுத்தமும் குறைய, பேசிய விஷயங்களும், எதார்த்தமாக இருந்தன…

ஒரு வழியாக அவளை தனது வீட்டுக்கு அழைத்து வந்தவன், இறங்கிக் கொள்ள, அவளோ சங்கடத்துடன் இறங்கிக் கொண்டாள்.

இப்படி உடல் தேவைக்கு முரண் படாமல் வந்து விட்டோமே என்று சங்கடமாக இருந்தாலும், அவன் மீது சின்ன கோபம் கூட வர மாட்டேன் என்று அடம் பிடித்துக் கொண்டு இருக்கின்றதே அவள் மனது…

அவன் கதவை திறந்து கொண்டே உள்ளே செல்ல, அவளும் பின்னே சென்றாள்.

ஷேர்ட்டை கழட்டி சோஃபாவில் போட்டு விட்டு, அப்படியே சோஃபாவில் அமர்ந்தவன், அவளை ஏறிட்டு பார்த்து ஷேர்ட்டை கழட்டும் படி சைகை செய்தான்.

அவளோ அவனை அதிர்ந்து பார்க்க, “கிழிஞ்சா அப்புறம் நான் பொறுப்பு இல்லை, ஷேர்ட்டும் தர மாட்டேன்…” என்றான் அடக்கப்பட்ட சிரிப்புடன்.

அவளுக்கு கடுப்பாக இருந்தாலும், தன்னை மீறி மேனியில் சிலிர்ப்பு தோன்ற, அவனை பார்க்காமலே ஷேர்ட்டின் பட்டனை ஒவ்வொன்றாக கழட்டினாள்.

அவளை இமைக்காமல் பார்த்துக் கொண்டு இருந்தவன், எச்சிலை கூட்டி விழுங்கிக் கொண்டே பெருமூச்சு ஒன்றை விட்டுக் கொண்டான்…

அவளோ மொத்தமாக ஷேர்ட்டை கழட்டி இருக்க, அவள் கையை பற்றி இழுத்து, தனது மடியில் வைத்துக் கொண்டே, “என்னடி இப்படி இருக்க?” என்று கேட்டான், கரகரத்த மோகம் கலந்த குரலில்…

அவள் பதில் சொல்லாமல் தலையை திருப்பிக் கொள்ள, அவள் கழுத்தினுள் முகம் புதைத்தவன், “என்னை ஜெயில் உள்ள அனுப்புன உன்னை எப்படி எப்படியோ பழி வாங்க நினச்சேன், ஆனா முடியவே மாட்டேங்குது, இப்படி பழி வாங்கிக்கிறேன்” என்று சொல்ல, அவளுக்கு தன்னை மீறி சிரிப்பும் வந்து விட்டது… அடக்கிக் கொண்டே, எச்சிலை கூட்டி விழுங்க, அவன் கரமோ, அவளது மிச்ச மீதி ஆடைகளுக்கு கொஞ்சம் கொஞ்சமாக விடுதலை கொடுத்தது…

கூச்சத்தில் நெளிந்தாள்.

அவனே அவள் அங்கங்களை மறைத்துக் கொண்டான்.

சோஃபாவில் அவளை தூக்கி போட்டவன், மேலே படர, அவள் கரமோ, அன்று போல இல்லாமல், இன்று அவனை ஆர தழுவிக் கொண்டது…

சோஃபா மஞ்சமாக, அவள் இதழில் ஆரம்பித்து, அவளை மொத்தமாக ஆட்கொள்ள ஆரம்பித்து இருந்தான் இந்த மோகினியின் ராவணன்…  

❤️ Loading reactions...
3 Comments
Oldest
Newest Most Voted
error: Content is protected !!
Scroll to Top