அத்தியாயம் 15
மெதுவாக விழிகளை திறந்தாள் மோகினி…
சோஃபாவில் எவ்வளவு நேரம் படுத்து கிடந்தாள் என்று பெண்ணவளுக்கு தெரியவில்லை…
அவன் இதழ் ஈரமும், பற்தடமும் மட்டுமே அவள் மேனியை தழுவி இருந்தன…
இப்படியே படுத்து இருப்பது சற்று கூச்சமாக இருந்தது…
மெதுவாக விழிகளை திறந்தவள் கையை நீட்டி துளாவ, இன்றும் அவளுக்கு கிடைத்தது என்னவோ அவனது கருப்பு ஷேர்ட் தான…
ஒரு பெருமூச்சுடன், அதனை அணிந்து கொண்டே, எழுந்து நின்றவள் விழிகள் அவனை தேடினால் அவனை காணவில்லை…
விழிகளை சுற்றி பார்த்துக் கொண்டே, அவன் அறைக்குள் எட்டி பார்க்க, அங்கே ஜன்னல் அருகே நின்று வட்டம் வட்டமாக புகையை விட்டுக் கொண்டு இருந்தான்.
இடையில் ஜீன்ஸ் மட்டும் இருந்தது…
அவள் வருவதை உணர்ந்தானோ என்னவோ சட்டென திரும்பி பார்த்தான்…
அவளுக்கு எப்படி எதிர்வினை ஆற்றுவது என்றே தெரியவில்லை…
சட்டென அவள் அங்கிருந்து நகர போக, “மோகினி” என்று அழைத்தான்.
திரும்பி பார்த்தாள்…
அவளை இரு விரல்களால் அழைத்தான்…
செல்வதா வேண்டாமா? என்று யோசனையுடன் எச்சிலை கூட்டி விழுங்கியபடி அவனை நோக்கி அடி மேல் அடி வைத்து நடந்தாள்…
அவன் ஷேர்ட்டை அணிந்து இருக்க, அதுவோ முட்டி வரை இருந்தது…
போலீஸ் யூனிஃபார்மில் விறைப்பாக இருப்பவளுக்கு, அவன் முன்னிலையில் மட்டும் இந்த மென்மையும் பெண்மையும் எப்படி வந்து சேர்கின்றது என்று அவளுக்கே தெரியவில்லை…
அவன் விழிகள், அவளது உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை படிந்து, மீண்டும் அவள் விழிகளில் நிலைக்க, அவனிடம் ஒரு உஷ்ண பெருமூச்சு…
அருகே வந்தவளை ஆழ்ந்து பார்த்தவன், கரமோ, அப்படியே நீண்டு, அவளது முடியை மெதுவாக பின்னே விலக்கியது…
அவள் அணிந்து இருந்த ஷேர்ட்டின் பட்டன், சற்று கீழே இறங்கி இருந்ததால், ஷேர்ட்டின் காலர் சற்று பின்னே சென்று நேர்த்தியின்றி இருக்க, அவள் கழுத்தில் அவனது பற்தடங்கள் தெளிவாக தெரிந்தன…
சிவந்து இருந்தது…
மெதுவாக கரத்தை நீட்டி, அவள் கழுத்தை பற்றி, அதில் இருந்த தடத்தை பெருவிரலால் வருட, பெண்ணவளுக்கு அந்த வருடல் கூட என்னென்னவோ உணர்வுகளை அள்ளி கொடுக்க, உஷ்ண பெருமூச்சுடன் விழிகளை மெதுவாக மூடிக் கொண்டாள்.
அவளது மூடி இருந்த விழிகளை பார்த்தபடி, மெதுவாக குனிந்து, அவள் கழுத்தில் முத்தம் பதித்த அடுத்த கணமே, அவனை இறுக அணைத்துக் கொண்டாள் பெண்ணவள்.
அவள் கழுத்தில் முத்தமிட்டு விட்டு, மெதுவாக ஏறிட்டு தனது கரத்தில் உருகி குலைந்து நிற்பவளை பார்த்துக் கொண்டே, அடுத்த கையில் இருந்த சிகரெட்டை ஊதிய ராவணனோ, மெதுவாக குனிந்து, அவள் இதழ்களில் இதழ் பொருத்த, இப்போது அவள் மூக்கில் இருந்து புகை வந்தது தான் மிச்சம்..
அவள் இதழ்களில் கிடைக்கும் போதை சிகரெட்டில் கிடைக்காது என்று நினைத்து விட்டான் போலும், சிகரெட்டை தூக்கி ஜன்னலுக்கு வெளியே போட்டு இருந்தவன், முத்தத்தை நிறுத்தவே இல்லை…
அவனுக்கு ஈடாக அவளும் முத்தமிட்டாள்…
இப்படி உணர்வுகள் அடங்க மறுக்கும் என்று இருவருமே எதிர்பார்க்காத தருணம் அது…
முத்தமிட்டுக் கொண்டே, அவள் அணிந்து இருந்த ஷேர்ட்டின் பட்டனை ஒவ்வொன்றாக கழட்டியவன், அவளை தூக்கி இடையில் வைத்துக் கொண்டே, நடந்து சென்றான்.
முத்தம் தான் நின்ற பாடு இல்லை…
பெண்ணவள் கால்களை அவன் இடையை சுற்றி இறுக கட்டிக் கொள்ள, அவள் கரமோ அவனது கழுத்தை கட்டிக் கொண்டன…
அவளை அப்படியே தூக்கி அங்கிருந்த மேசையில் அமர வைத்தான்.
மெதுவாக அவள் இதழ்களில் இருந்து தன்னிதழ்களை விடுவித்துக் கொண்டே, அவள் விழிகளை நெருக்கத்தில் பார்த்தவனோ, “ஐ திங்க் ஐ லவ் யூ அலாட்” என்று சொல்ல, அவள் விழிகள் சற்று ஆச்சரியத்துடன் விரிந்து கொண்டன.
அவனிடம் இருந்து இப்படி ஒரு வார்த்தையை அவள் எதிர்பார்க்கவே இல்லை…
ஏதோ சொல்ல வந்தவள் இதழ்களில் இருந்து முனகல் தான் வெளி வந்தது…
ஆம் அவளுக்குள் மீண்டும் மொத்தமாக ஊடுருவி இருந்தான்…
அவள் விழிகள் தன்னை மீறி கிறக்கமாக மூடிக் கொள்ள, அவளையே பார்த்து இருந்தவனுக்கு போதையேறியது தான் மிச்சம்…
அவள் தனது கரங்களில் உருகி குழைகின்றாள் என்பதை தாண்டி என்ன போதை இந்த கட்டுடல் ஆண்மகனுக்கு இருந்து விட போகின்றது…
அவளோ பெருமூச்சு விட்டபடி, மெதுவாக விழிகளை திறந்து அவனை பார்த்து, “பேசிட்டே இருக்கும் போது” என்று ஆரம்பித்தாள்…
மீண்டும் பேச முடியாமல், இடை விட்டு, அவள் இதழ்கள் முனக, அவள் விழிகள் கிறக்கமாக மூடிக் கொள்ள, அவனுக்கோ இதழ்களுக்குள் ஒரு குறும்பு புன்னகை…
அவன் பேச விடவே மாட்டான் என்று பெண்ணவளுக்கு இப்போது தெளிவாக தெரிந்தது…
தன்னை கிறக்கமாக்கி, அதில் இன்பம் காண்கின்றான் என்று புரிந்தது…
இப்போது மெதுவாக விழிகளை திறந்து சிவந்த விழிகளால் அவனை நோக்கினாள்.
அவன் விழிகளும் அவளிலேயே படிந்து இருக்க, “பேசுடி” என்று சொன்னான்.
இல்லை என்று தலையாட்டினாள்.
இதழ்களுக்குள் ஒரு வெட்கம் கலந்த புன்னகையும் இருக்க, “பேசுடி” என்றான் மீண்டும்…
“பேசுனா தானே” என்று ஆரம்பித்தவள், மீண்டும் முனகலுடன் முடித்து இருக்க, அவனோ இதழ் பிரித்து சத்தமாக சிரித்தபடி, அவளை மீண்டும் ஆட்கொள்ள ஆரம்பித்து விட்டான்…
அவள் மேசையில் அமர்ந்த நிலையில், அவன் நின்ற நிலையில்…
அந்த இடமே முத்த சத்தத்தினாலும் முனகலினாலும் நிரம்பி கொண்டது…
அன்று அவன் தான் அவளை மீண்டும் ஏற்றிக் கொண்டே போலீஸ் நிலையத்தில் விட சென்றான்.
அவளோ, “இப்படி டியூட்டி பாக்கிற இடையில அழைச்சுட்டு வந்தா, ஸ்டேஷன் ல என்ன நினைப்பாங்க?” என்று புலம்பிக் கொண்டே அமர்ந்து இருக்க, “மேடம் டியூட்டி பார்க்கும் போது தான் அழைச்சு வந்தேன்னு இவ்ளோ நேரம் அப்புறம் தான் நியாபகமே வருதோ?” என்று கிண்டலாக கேட்டபடி வண்டியை ஓட்டினான் ராவணன்.
அவளுக்கு அவன் இப்படி கேட்டதுமே, கொஞ்சம் சங்கடமும் வெட்கமும் தான்.
ஆனாலும் உணர்வுகளை காட்டாமல், “பேச விட்டா தானே” என்று சொன்ன கணம், காரை நிறுத்தியவன், அவளை திரும்பி பார்த்து, “ஸ்டேஷன் வந்திடுச்சு” என்றான் இதழ்களுக்குள் அடக்கப்பட்ட புன்னகையுடன்.
அவளோ அவனை முறைத்து விட்டு இறங்கிக் கொள்ள, “இன்ஸ்பெக்டர் மேடம்” என்றான்.
திரும்பி பார்த்தாள்.
“வீட்டுக்கு நீங்களா வர்றீங்களா? இல்லை தினமும் இப்படி தூக்கிட்டு போகட்டுமா?” என்று கேட்டான்.
மறைமுகமாக அவளை வீட்டுக்கு வந்து விட சொல்கின்றான்…
‘நேரடியா கேக்கிறதுக்கு என்னவாம்?’ என்று வாய்க்குள் முணுமுணுத்துக் கொண்டே, ஸ்டேஷனுக்கு வந்த பெண்ணவளுக்கு அங்கே அவளை பார்த்துக் கொண்டு இருந்த போலீஸ் காரர்களை பார்க்கவே சங்கடமாக இருந்தது…
ஒருவன் போலீசையே தூக்கிக் கொண்டு சென்று இருக்கின்றான்.
அவளால் எதுவும் செய்ய முடியாத நிலை…
யாரையும் பார்க்காமல், மேசையில் அமர்ந்து, ஃபைல்களை புரட்ட ஆரம்பித்து விட்டாள்.
அன்று வீட்டுக்கு வந்ததுமே நீலா, “அண்ணா தூக்கிட்டு போனாராம்ன்னு ஊரெல்லாம் பேசுறாங்க?” என்று கிண்டலாக கேட்க, “இதெல்லாம் உனக்கு நேரத்துக்கே வந்திடுமே” என்று அவளிடம் பதில் சொல்லி விட்டு அறைக்குள் நுழைந்தவளுக்கு ஐயோடா என்று இருந்தது…
கதவை தாழிட்டு விட்டு கதவில் சாய்ந்து நின்று, வெளிப்படையாகவே நெற்றியில் அடித்துக் கொண்டாள் பெண்ணவள்…
அன்று இரவு மந்தாகினியை தூங்க வைத்து விட்டு படுத்து இருந்த பெண்ணவளது அலைபேசியில் மெசேஜ்…
எடுத்துப் பார்த்தாள்.
ராவணன் தான் அனுப்பி இருந்தான்…
“எப்போ வீட்டுக்கு வர்ற?” என்று நேரடியாகவே கேட்டு இருந்தான்.
“யோசிக்கிறேன்” என்று பதில் அனுப்பினாள்.
“யோசிக்க என்ன இருக்கு?” என்று அடுத்த கேள்வி…
நியாயமாக கேட்கின்றான்.
என்ன தான் வீர வசனங்கள் பேசினாலும், ஒருவருக்கு ஒருவர் நிறையவே பிடித்தம் இருக்கிறது என்று வெளிப்படையாக தெரிகின்றதே…
“ஆஹ் கலப்ரிட் கூட எப்படி வாழுறதுன்னு யோசிக்கிறேன்” என்று கிண்டலாக பதில் அனுப்ப, “வாழ தான் முடியாது, மிச்ச எல்லாம் பண்ண முடியுமா?” என்று பதில் வந்தது…
அவளுக்கோ சட்டென அவனுடன் கலந்த நினைவுகள்…
மேனியில் தன்னை மீறி ஒரு சிலிர்ப்பு…
குரலை செருமிக் கொண்டே, “நான் என்ன பண்ணுனேன்?” என்று கேட்க, அவனிடம் இருந்து ஒரு புகைப்படம் வந்தது…
இன்று எடுத்து இருக்கின்றான், அவன் கையணைவுக்குள் அவள் தூங்கிக் கொண்டு இருக்கும் புகைப்படம்…
அவன் கரங்கள் அவளுக்கு ஆடையாக இருந்தது…
கூச்சத்துடன் கண்களை மூடி திறந்தவளோ, “இதெல்லாம் க்ரைம் தெரியுமா? ஒருத்தரோட பெர்மிஷன் இல்லாம இப்படி ஃபோட்டோ எடுக்க கூடாது” என்று பதில் அனுப்ப, “சரி டி அரெஸ்ட் பண்ணு” என்றான் அவன்…
“சீக்கிரம் பண்ணுறேன்” என்று அவள் சொல்ல, “நீ பண்ணலேன்னா நான் பண்ணுவேன், அரெஸ்ட் பண்ணி ஜெயில் ல எல்லாம் போட மாட்டேன், உன்னையே” என்று வசனத்தை முடிக்காமல் விட்டு இருக்க, அவளுக்கு ஐயோடா என்கின்ற நிலைமை தான்.
இப்படி பேசினால் அவளுக்கு இனி எங்கனம் தூக்கம் வரும்?
விட்டால் அவள் தூக்கத்தை மொத்தமாக தொலைத்து விடுவான் என்று புரிய, “எனக்கு தூக்கம் வருது, குட் நைட்” என்று பதில் அனுப்பினாள்…
அவனும் அவள் மெசேஜை பார்த்து மென்மையாக சிரித்து விட்டு, “குட் நைட்” என்று பதில் அனுப்ப, இருவரும் தூங்குவதாக சொல்லி இருந்தாலும், தூக்கம் வந்த பாடு தான் இல்லை…