அத்தியாயம் 15

கிட்டத்தட்ட மணி ஏழாகிவிட்டது… நறுமுகை இன்னும் வீட்டிற்கு கிளம்பவில்லை …கவிதாவும்,

 

” சீக்கிரமா முடிச்சுட்டு கிளம்பிடுடி..”  என்று விட்டு ஆறு மணி போல கிளம்பி சென்று இருந்தாள் அவள்…

 

விக்ரம் இன்னும் வந்த பாடு இல்லை… அவனுக்கு அழைத்து தான் செய்து முடித்து விட்டதாக கூறவும் மனம் வரவில்லை..

 

எப்படி எல்லாம் பேசி விட்டான்..?

அவன் வரும்போது வரட்டும் அதுவரை தான் மட்டும் காத்துக் கொண்டு இருக்கலாம் என லேப்பில் தான் இருந்தாள்…

 

அங்கு பிஎச்டி செய்யும் ஒரு அக்கா கூட நறுமுகையிடம் கூறி பார்த்தார் ,

 

“விக்ரம் சார் எங்க இருக்காருன்னு பாரு முகை…நீ பண்ணது எல்லாம் வேஸ்ட் ஆயிடும் அப்பறம்…”

 

“அது… போன்ல சார்ஜ் இல்லக்கா… போன் பண்ண முடியாது …” என வேண்டும் என்றே பொய் உரைத்து விட்டாள்…

அந்த அக்காவும் ,

 

“சரி இரு நான் கால் பண்ணி சொல்றேன் ..”

 

“இல்ல பரவாலக்கா இருக்கட்டும்…”

 

” நீ சும்மா இரு.. நீயும் இங்க இருந்து வீட்டுக்கு போகணும்ல…” என அவள் மீது அக்கறை காட்டியவர் விக்ரமிற்கு அழைத்து விஷயத்தை கூறிட ..அடுத்த ஐந்தாவது நிமிடத்தில் விக்ரம் லேபிர்க்கு வந்திருந்தான்…

வந்தவன் நிரல்யாவே தான் அழுத்தமாக பார்த்தவாரு வந்திட,

 

“ முடிஞ்சிடுச்சா..?”

 

” முடிஞ்சிருச்சு சார்.. எடுத்து வச்சுட்டேன்..”  என்றதும் ,

 

“செக் பண்ணி பார்த்தீர்களா..?”

 

” பார்த்தேன்… நீங்க செக் பண்ணிடுங்க..!”  என குரலில் எவ்வித உணர்வையும் காட்டாது பேசினாள் நறுமுகை…

 

விக்ரம் அனைத்தையும் சரிபார்த்தவன் அவன் ஒவ்வொரு தட்டினையும் பார்த்து கூறிய அனைத்தையும் நோட்டில் குறிப்பெடுத்துக் கொண்டாள் நறுமுகை…

 

நேரத்தை பார்த்தான் ஏழை தாண்டி இருந்தது… நெற்றியை நீவியபடி அவளை பார்த்தவன்,

 

” வீட்டுக்கு கிளம்புங்க நறுமுகை…”  என்றதும்,

 

” இதெல்லாம் கிளீன் பண்ணி வச்சிறேன் சார்..”  என்றவளை பல்லை கடித்து நோக்கியவன்,

 

“ பரவால்ல இருக்கட்டும்.. காலையில வந்து கிளீன் பண்ணிக்கலாம்..”

 

” இருக்கட்டும் சார் ..வேற யாராவது டெஸ்ட் பண்ண தேவைப்படும் நான் கிளீன் பண்ணி வச்சுட்டே போறேன்…”  வீம்புக்காகவே பேசுகிறாள் என புரிந்தது…

 

” என்னவோ பண்ணுங்க..”  என்று விட்டு வெளியேறியவனை பார்த்த நறுமுகைக்கு கண்கள் கலங்கியது…

 

அனைத்தையும் சுத்தம் செய்து விட்டு பையை எடுத்துக் கொண்டாள்.. 

 

அவளுடன் இருந்த அக்காவும் லேடிஸ் ஹாஸ்டலில் தான் தங்கி இருக்கிறார்… கல்லூரிக்குள்ளேயே இருப்பதால் அவரும் கிளம்பி சென்று விட்டார் ..

பையனை எடுத்துக் கொண்டு தளர்ந்த நடையுடன் படி இறங்கி வந்தாள் நறுமுகை… தொண்டையெல்லாம் அடைத்தது …

 

விக்ரம் திட்டி விட்ட நிமிடத்தில் இருந்து பச்சை தண்ணீர் கூட அருந்தாது வேலை பார்த்து வந்தாள்…

அவள் மெதுவாய் படி இறங்கி வந்த சமயம் சட்டென அவள் பின்னே வந்த யாரோ அவள் கையைப் பிடித்து இழுத்திட அதில் அதிர்ந்து போனவளாய் திரும்பிப் பார்த்தவளுக்கு சற்று ஆசுவாசமானது அங்கிருந்து விக்ரமை கண்டதும் …

 

அவனும்,

 

” வெளியே வெயிட் பண்ணு நான் டிராப் பண்றேன்..”  என்றதும் வேகமாக அவனது கையை உதறிவிட்டு,

 

” தேவையில்ல நானே பார்த்துக்கிறேன் ..” என இரண்டு இரண்டு படியாய் தாண்டி விறு விறுவென சென்று விட்டாள்…

 

விடுவானா அவன்..??

நான்கு படியாய் தாண்டி வந்து அவளை மீண்டும் மறித்து நின்ற விக்ரம்,

 

” இதுக்கு மேல பஸ் புடிச்சு போனா இன்னும் லேட் ஆகும் சொன்னா கேளு நான் டிராப் பண்றேன் …” என்றவனை இப்போது நன்றாக நிமிர்ந்து பார்த்தவள்,

 

” எதுவும் தேவை இல்லைன்னு சொல்றேன் ..நான் பார்த்துக்குறேன்..யாரோட கரிசனமும் எனக்கு வேண்டாம்…” 

என அவனது பதிலை எதிர்பார்க்காது படி இறங்கி சென்று விட்டாள்…

 

ஆனால் விக்ரம் விடவில்லை அவளுக்கு முன்னே விறுவிறுவென்று நடந்து சென்று பைக்கை எடுத்துக்கொண்டு அவள் பின்னாடியே தான் சற்று இடைவெளி விட்டு வந்தான்..

ஏனெனில் கல்லூரியில் இருந்து வெளிவருவதற்கே அரை மணி நேரம் ஆகுமே.. அதுவும் இந்நேரத்திற்கு யாரும் இருக்க மாட்டார்கள்..

தன்னந்தனியாக இவளை எப்படி விட்டு செல்ல முடியும்..?

கேட் வந்த பின்னர் அவளுக்கு முன்பாக பேருந்து நிறுத்தத்தில் சென்றிட முன்னே சென்று விட்டான்…

 

நறுமுகைக்கு வரும் வழி எங்கிலும் கண்ணீரை துடைத்துக் கொண்டே தான் வந்தாள்…

 

அவளால் இன்று விக்ரம் பேசிய பேச்சினை அவ்வளவு எளிதாக ஜீரணிக்க முடியவில்லை.. அவள் தவறு செய்து விட்டால் தான்.. இல்லை என்று கூறிட முடியாது தான்…

 

ஆனால் அதற்காக இப்படித்தான் அனைவர் முன்பும் பேசுவதா.?

இத்தனைக்கும் அவனுக்கு நிச்சயிக்கப்பட்ட பெண் தானே தான் ..தன்னை இப்படித்தான் அனைவர் முன்பும் அவமானப்படுத்திடுவானா …?என அதையே எண்ணி எண்ணி அழுதவாறு சாலையை கடக்க முற்பட கார் ஒன்று அவளை இடிப்பது போல் வந்திட, இறுதி நொடியில்  சுதாகரித்து நகர்ந்து விட்டிருந்தாள்…

எதிரே பேருந்து நிறுத்தத்தில் இருந்த அனைவரும் அவளை பார்த்து கத்தியை விட்டிருந்தனர்…

 

நறுமுகைக்கு உடல் பயத்தில் நடுநடுங்கியது… ஒரு வழியாக சாலையை கடந்து வந்திட, எதிரில் இருந்தவர்களோ,

 

“ ஏம்மா பார்த்து ரோடு கிராஸ் பண்ண மாட்டியா..?”

 

“ கொஞ்சம் மிஸ் ஆயிருந்தா இந்நேரத்துக்கு என்ன ஆகி இருக்கும் ..?”

 

“இந்த காலத்து பசங்க கவனமாக இருக்ககறதே இல்ல… எங்க தான் யோசனை வெச்சிருப்பாங்களோ ..?”. 

என இஷ்டத்துக்கு பேசினர்..

 

ஏற்கனவே சோர்ந்து போய் இருந்தவளுக்கு இவர்கள் எல்லாம் பேசுவது இன்னும் காயமடைய செய்தது..

அழுகை பீறிட்டு வந்துவிட, அதற்கு முன்னர் கண்ணீர் பெருக்கெடுத்து வழிந்தது கன்னங்களில்..

 

அதை மற்றவர் பார்க்காதவாறு முகத்தை மறைத்தபடி துடைத்துக் கொண்டவள்  சற்று தள்ளி  நடந்து வந்தாள்…அச்சமயம் அவளுக்கு அருகே தன் பைக்கினை வந்து நிறுத்தி இருந்தான் விக்ரம் …

 

இன்று இருசக்கர வாகனத்தில் தான் வந்திருந்தான்… சாலையை சற்று சுத்தி வந்து தான் கடக்க முடியும் .‌சரியாக அவன் அங்கு வரும் நேரத்திற்குத் தான் நறுமுகையும் சாலையை கடந்திருந்தது..

வாகனம் அவள் மீது மோத வருவதை கண்டதும் ஒரு நொடி அவனுக்குமே இதயம் நின்று துடித்தது எனலாம்…

 

வேகமாக அவளை நெருங்கி வந்தவன் ,

 

“பைத்தியம் பிடிச்சிருக்கா உனக்கு..???  இப்ப எதுக்கு நீ இந்த மாதிரி நடந்துட்டு இருக்க..??? கவனமாவே இருக்க மாட்டியா….??? ” என கத்தி விட்டான்…

 

அதிர்ச்சி அடைந்த நறுமுகையும் அழுதவாறு அவனை பார்க்க…மேலும் தொடர்ந்த விக்ரம்,

 

“வந்து வண்டியில ஏறு..” என சீறினான்…

 

” எதுவும் தேவையில்லை.. இந்த ஜென்மத்தை வச்சுக்கிட்டு நீங்க ஒன்னும் கட்டிக்கிட்டு அழ வேண்டாம் ..நான் எப்படியோ போறேன்..”  என அழுதபடி கூறியவளே ஓங்கி அறைய வேண்டும் என்று தான் தோன்றியது விக்ரமிற்க்கு…

 

அங்க யார் இருக்கிறார்கள் என்று எல்லாம் அவன் கருத்திலேயே கொள்ளவில்லை.. யார் இருந்தால் என்ன..?  பார்த்து விட்டு போகட்டும் என்கிற மனநிலையில் தான் இருந்தான்..

 

“ என்னை கத்த வைக்காத நறு… ஒழுங்கு மரியாதையா வண்டியில ஏறுன்னு சொன்னேன்..”

 

” முடியாது…” என்றவளது கையைப் பிடித்து,

 

” இப்ப ஏற போறியா இல்ல இறங்கி வந்து அறையவா ..?” என மிரட்டிடவும் இன்னுமே அழுகை வந்தது அவனது செயலில் நறுமுகைக்கு…

 

துப்பட்டாவினால்  முகத்தை  பொத்தி அழுதவாறு அவன் பின்னே ஏறி அமர்ந்து கொண்டாள்… 

 

அதற்குப் பின்னராவது விக்ரம் அமைதியாக இருந்திருக்கலாம்.. ஆனால் அவனோ,

 

” கொஞ்சம் கூட கவனமாக இருக்க மாட்டியா நீ..?? எல்லாத்துலயும் அலட்சியம்.. இதுக்கு தான் உன் மேல எனக்கு கோவம் வரது..

 

ஜஸ்ட் மிஸ் ..இல்லன்னா அந்த வண்டி உன் மேல மோதி இருக்கும் ..எதை பத்தியும் யோசிக்கறதே இல்லை… குழந்தைனு நினைப்பு…” என வரும் வழி நெடிகிலும் திட்டிக் கொண்டே வந்தான் விக்ரம்…

அவனுக்கு இன்னும் தன்னை நிலைப்படுத்தி கொள்ள நேரம் தேவைப்பட்டது…

 

தன் மறு பாதி இவள் தான் என முடிவு செய்து கனவில் அவளுடன் வாழ்ந்து வருகிறான்..அவனையும் மீறி மனமும் உடலும் அவள் மட்டுமே என தீர்க்கமான தீர்மானம் எடுத்து விட்டிருந்தது…

 

நொடியில் அவளுக்கு நிகழ இருந்த விபத்து தவிர்க்கப்பட்டிருந்தாலும் அவன் நெஞ்சம் பதறிக் கொண்டு தான் உள்ளது…

அதை தான் கோபமாக அவளிடம் கொட்டி தீர்த்து கொண்டு வந்தான்…

அதை புரிந்து கொள்ள முடியவில்லை நறுமுகையால்…சூழ்நிலையும் சரி இல்லாது போனால் அவளும் என்ன செய்திடுவாள்…

 

ஒரே ஒரு வார்த்தையாவது ஆறுதலாக பேசி இருந்தால் அவள் மனம் சமாதானம் ஆகி இருக்கும் ..ஆனால் இருக்கும் ரணத்தை இன்னும் கீறு விடுவது போல அவன் திட்டிக் கொண்டே இருக்கவும் மனம் உடைந்து போனாள்..

அவள் வீட்டிற்கு சற்று தள்ளி வண்டியை நிறுத்தி இருந்தான் விக்ரம்… அதிலிருந்து இறங்கிய நறுமுகை அவனை கண்ணீருடன் ஏறிட்டு பார்த்து,

” எதுக்கு என்னை இப்படி திட்டிக்கிட்டே இருக்கீங்க விக்ரம்…? பிடிக்கலைன்னா எதுக்கு என்னை கல்யாணம் பண்ண சம்மதிச்சீங்க ..??? அப்படியே எனக்கு ஆக்ஸிடென்ட் நடந்து இருந்தாலும் ரோட்லயே சாகட்டும்னு விட்டுட வேண்டியது தானே ..நான் செத்தா கூட உங்களுக்கு என்ன வந்துட போது…?”  என  அவளது வார்த்தைகள் ஒவ்வொன்றும் ஆணவனை வெகுவாய் காயப்படுத்தி விட்டது…

 

அவனோ கொஞ்சம் கூட யோசிக்கவில்லை ,

 

“ம்ஹூம் …செத்து போடி.. உனக்காக வந்தேன் பாரு என்னை சொல்லணும் ..” என வார்த்தைகளை அமிலத்தை ஊற்றி அவள் மீது வீசிவிட்டு திரும்பியும் பார்க்காது அங்கிருந்து சென்று விட்டான் விக்ரம்…

 

அவன் கூறி சென்ற வார்த்தையில் முழுதாய் நொறுங்கிப் போய்விட்டிருந்தாள் நறுமுகை…

 

 

❤️ Loading reactions...
0 Comments
Oldest
Newest Most Voted
error: Content is protected !!
Scroll to Top