அத்தியாயம் 16

  நறுமுகை குமாரின் பிறந்த நாளிற்காக பீச்சுக்கு கிளம்பி சென்ற சமயம் தான் விக்ரம் கல்லூரிக்கு வந்ததே…

 

வந்தவனது சகாக்கள் கேண்டினில் இருந்திட அவர்களுடன் சென்று டீ குடித்தபடி பேசிக் கொண்டிருந்தான்…

 

அப்போது சாமுவேல் அங்கு வந்தான் ..சிறிது நேரத்திற்கு முன் தான் வந்திருந்த சீனியர் மாணவர்களில் ஒருவன் சாமுவேலை பார்த்து பேசி இருந்தான்..

“எங்கடா அவசரமா கிளம்புறீங்க..??”

 

“ அதுண்ணா குமார் தெரியும்ல.. அவனுக்கு இன்னைக்கு பிறந்தநாள்.. அதான் எல்லாரும் சேர்ந்து பீச்சுக்கு போய் கேக் கட் பண்ண போறோம்னா…”

 

குமார் என்றதும் நறுமுகை தான் நினைவுக்கு வந்தது சாமுவேலுக்கு…

 

“ஓஹோ… அப்படியா.. யார் யாரெல்லாம் போறீங்க டா..? குமாரோட பிரண்ட்ஸும் வராங்களா..?”

 

” ஆமாண்ணா… ஜான் அப்புறம் அந்த நறுமுகை இருக்காளே அந்த பொண்ணு வரா.. வேற யார் வராங்கன்னு தெரியல.. மத்த டிபார்ட்மெண்ட்ஸ்ல  இருந்து குமார் பிரெண்ட்ஸும் வராங்கன்னு ஜான் சொல்லிட்டு இருந்தான்..” 

அவர்கள் பேசிக் கொண்டிருக்கும் போதே சாமுவேலுக்கு அழைப்பு வந்தது,

 

” சரிடா என்ஜாய் பண்ணிட்டு வாங்க ..” என்று விட்டு சென்றிருந்தான் ..

இப்போது விக்ரமை பார்த்ததும்,

 

” என்ன விக்ரம் நறுமுகை பீச்சுக்கு போயிருக்கு போல..?”  என குரலில் கிண்டல் வழிந்தது…

 

விழிகள் சுருக்கி சாமுவேலை பார்த்தவன்,

 

“ பீச்சுக்கா..???”

 

” ஆமா  குமாருக்கு பிறந்தநாள் போல கிளம்பி போயிடுச்சு…உன்கிட்ட சொல்லலையா…..?” என்றதும் பக்கத்தில் இருந்த இன்னொருவனும்,

 

” குமார் பிறந்தநாளுக்கு இந்த பொண்ணு ஏண்டா போது..?”  என கேலியாக பேசிடவும்.. சாமுவேல் இதுதான் சாக் என்று ,

“குமாருக்கு பிறந்தநாளுல அதான் ஓடிச்சு போல..!ஹஹஹஹஹ”  என்றதும் அங்கிருந்தவர்கள் சின்னதாய் சிரித்துக் கொண்டனர்..

மேலும் தொடர்ந்த சாம வேல்,

 

” ஏற்கனவே அவங்க ரெண்டு பேருக்குள்ள ஏதோ கனெக்ஷன் இருக்குன்னு சொல்லிட்டு இருக்காங்க.. இப்ப இந்த புள்ள வேற ப்ராஜெக்ட் பண்ணாம ஓடிப் போயிடுச்சு ..எப்படி தான் இப்படி எல்லாம் இருக்குதுங்களோ..?”  என வேண்டும் என்றே இட்டு கட்டி பேசினான்…

 

கூட்டத்திலிருந்த விக்ரமின்   நண்பன் ஒருவன்,

 

” விடு சாமுவேல் யாருக்கு யாரை பிடிச்சு இருக்கோ அவங்க கூட தானே இருக்க முடியும்…”  என்றதும் சாமுவேலும் விக்ரமை பார்த்தவாறு,

 

“ம்ம்ம்… அதுவும் சரிதான் ..ஆனா இந்த பொண்ணு கேரக்டர் சரி இல்ல… ஜான் கூடவும் பேசுது ..அந்த  குமார் கூடவும் சுத்துது… ம்ஹூம் கேரக்டர் சரியில்லாத பொண்ணுங்களை எல்லாம் எதுக்கு தான் கூட வெச்சிக்கிறாங்களோ… அந்த குமார் வேற கொஞ்சம் வசதியான பையன் நாளைக்கு ஏதாவது ஆகி இந்த பொண்ணை கழட்டி விட்டானா எவன் கல்யாணம் பண்ணிப்பான்..?”  என வேண்டும் என்றே நறுமுகையை பற்றி தவறாக பேசிடவும் விக்ரமிற்கு கோபம் பொத்துக் கொண்டு வந்தது…

பல்லைக் கடித்து அவனைப் பார்த்தவன் ,

 

“சாமுவேல் …. தேவையில்லாம யாரை பத்தியும் பேச வேண்டாம்… அந்த குமாரோ இல்ல நறுமுகையோ வந்து நாங்க லவ் பண்றோம்னு சொன்னாங்களா? எதுக்கு அவங்களை பத்தி  எதும் தெரியாம பேசிகிட்டு ..??” என எரிச்சலாக கேட்கும் போதே,

 

” அட நீ வேற ஏன் விக்ரம்..?.. அவங்க கிளாஸ் பையன் கிறிஸ்டோஃபர் கூட தான் என்கிட்ட சொல்லி இருக்கான்.. அவன் எதுக்கு தேவையில்லாம அவங்களை பத்தி பேசணும்..? அவன் எவ்வளவு பொறுப்பானவன் ..அவனே சொல்றான் உண்மை இல்லாம தான் இருக்குமா ..?” என்றதும் மற்றொருவனும்,

 

“அட.. அதை விடுங்கப்பா.. யார் யாரையோ லவ் பண்றாங்க.. என்னவோ பண்றாங்க ..நமக்கு எதுக்கு..?”  என்றதும் அப்பேச்சு அதோடு நின்று விட்டது …

 

விக்ரமிற்க்கு கோபமாக வந்தது.. எந்த ஆண் மகனாக இருந்தாலும் தனக்குரியவளை பற்றி யாரேனும் தவறாக பேசினால் கோபம் தானே வரும்..

சாமவேலை  பல்லை கடித்துக்கொண்டு  பார்த்து அங்கிருந்து சென்று விட்டான் விக்ரம் …

 

அவனுக்கு நறுமுகை குமாருடன் சேர்ந்து சென்றது சிறு நெருடலாக தான் இருந்தது.

ஏற்கனவே இருவரும் மற்றவர் வாய்க்கு அவலாக இருக்கும்போது தேவையில்லாத பேச்சுக்கு எதற்கு இடம் அளிக்க வேண்டும்?.. இதெல்லாம் தேவையா?? என்கிற கடுப்புடன் இருந்தான்…

 

அவனுக்கு தெரியாது அல்லவ அவர்களுடன் சீனியர் மாணவர்களும் சென்றுள்ளார்கள் என்று ..

கடுப்புடன் கல்லூரிக்கு உள்ளே வந்திட அச்சமயம் அவனுடைற மற்றொரு நண்பன் அதாவது அன்று பொங்கல் விழாவின் போது நறுமுகை மற்றும் விக்ரமையினை  புகைப்படம் எடுத்தான் அல்லவா அவன் பெயர் கிருஷ்ணா ..

அவனிடம் மட்டும் விக்ரம் தனக்கும் நறுமுகைக்கும் நிச்சயமான விஷயத்தை கூறியிருந்தான்.. ஏனெனில் அவன் மட்டும் தான் இருக்கும் நண்பர்களில் சற்று நெருக்கமானவன் விக்ரமிற்கு…

 

  நறுமுகை மற்றும் விக்ரம் இருக்கும் புகைப்படத்தை கூட அவன் அப்போதே விக்ரமிற்கு  அனுப்பி கேலி செய்திருந்தான்..

 

அப்புகைப்படத்தையும்  கண்டு நண்பனை திட்டி விட்டவன்  அப்போதே அழித்துவிட்டு இருந்தான்…. பின்னர் முகை தான் தனக்கு நிச்சயமான பெண் என உறுதியானதும் மீண்டும் நண்பனிடம் அப்புகைப்படத்தை அனுப்ப கேட்டிருந்தான் ..

காரணம் கேட்டவனிடம் விஷயத்தை கூறி யாருக்கும் தெரிய கூடாது என கட்டளை இடவும் கேட்ட கிருஷ்ணாவும் மகிழ்ச்சியுடன் நண்பனுக்கு வாழ்த்து தெரிவித்து புகைப்படத்தையும் அனுப்பி இருந்தான் ..

 

இப்போது அவன் தான் சில புகைப்படங்களை அனுப்பி இருந்தான்.. அதை திறந்து பார்க்க அதில் கேக்கினை நறுமுகை குமாருக்கு ஊட்டுவது போல ஒரு புகைப்படம் இருந்தது..

.

ஏனோ அதை கண்டதும் ஆத்திரம் தான் வந்தது விக்ரமிற்க்கு …

 

கிருஷ்ணா வேறு அழைத்து,

 

“மச்சா என் ஆள் கூட இங்க பீச்சுக்கு வந்து இருந்தேன்டா…முகையை பார்த்தேன்…குமாருக்கும் ப்ர்த்டே போல…செலபிரேஷன்ல தான் இருக்கோம் நீயும் வாயேன்”

 

கடுப்பை மறைத்து கொண்டு,

 

“இல்லடா ஒர்க் இருக்கு…நீ பாரு..” என அழைப்பை துண்டித்து விட்டிருந்தான்…

 

இவனுக்கு கூட இன்னும் அவள் ஏதும் ஊட்டி எல்லாம் விட்டதில்லை.. அவனுக்கு மட்டும் ஊட்டி விடுகிறாளே என்கிற உரிமை உணர்வு தான்..

 

அதே கடுப்புடன் லேபிற்கு சென்றிட ..அங்கு லேப்டாப்பில் தன் வேலையை பார்க்கத் தொடங்கினான்..

அச்சமயம் சாமுவேலும் வந்துவிட, யூவி லைட்டின் கீழ் இருக்கும் தட்டினைப் பார்த்தவன் அங்கிருந்தவர்களிடம்,

 

” யார் இதை வச்சது ..??கலரே மாறிடுச்சு.. கரெக்ட் டைம்க்கு எடுக்கனும்னு கூட தெரியாதா..?”  என சத்தம் போடவும் தன் வேலையை பார்த்துக் கொண்டிருந்த விக்ரம் சட்டென்று துணுக்குற்றவனாய் அங்கு சென்று பார்த்தான்..

நேற்று நறுமுகையிடம் அவன் கூறி இருந்தானே இந்த சோதனையை செய்தாக வேண்டும் என்று .‌..அப்படி எனில் அவள் தான் செய்துவிட்டு சென்றுவிட்டு இருக்கிறாள்…

 

குறிப்பிட்ட நேரத்திற்குள் எடுத்தாக வேண்டுமே …இன்னும் எடுக்கவில்லையே என கோபம் மேலோங்கியது அவனுக்கு..

அப்படி என்ன பொறுப்பில்லாத தனம் அவளுக்கு ..?..

வேகமாக கவிதாவை பார்த்து,

“நறுமுகை தான் பண்ணி இருக்கா….ங்க…எப்ப வச்சாங்கன்னு தெரியுமா..?”  என கேட்டதும்,

 

” இல்ல சார்.. எனக்கு தெரியல ..நான் பார்க்கலை அவளை..” என கூறிவிட்டாள்…

 

அதை கேட்டு பல்லை கடித்துக் கொண்டு நின்றிருந்தான் விக்ரம்.. சாமுவேல் அவனது பாவனையை பார்த்து உள்ளுக்குள் சிரித்தவன் சட்டென மின்னல் அடித்தது போல,

 

” என்ன விக்ரம் நறுமுகை பண்ணிட்டு பீச்சுக்கு ஜாலியா போயிடுச்சா..?? கொஞ்சம் கூட பொறுப்பே இல்ல அந்த பொண்ணுக்கு.. இதெல்லாம் எதுக்கு தான் காலேஜ் வருதோ.. ஊர் மேயத்துக்கு போய் தொலைஞ்சு இருக்க வேண்டியதுதானே..?”  என வேண்டும் என்று விக்ரம் காதில் மட்டும் விழுமாறு முணுமுணுத்து சென்று இருந்தான் சாமுவேல்… 

விக்ரமோ கண்களை இறுக மூடி திறந்தவன் வேகமாக சாமுவேல் முன்பு வந்து நின்று,

 

” தேவையில்லாம அவளை பத்தி பேசிட்டு இருக்காத சாமுவேல்.. முதல்ல அவ ஒரு பொண்ணு ..இப்படி அநியாயமா பேசாத.. பார்த்துகிட்டு சும்மா இருக்க மாட்டேன் …அவ என்னோட ஸ்டூடென்ட்…”என்றதும் அவனை இதழ் வளைத்து பார்த்த சாமுவேல்,

 

” ம்ம்ம்…. அந்த பொண்ணு உன் பேச்சை கேட்டு டெஸ்ட்டை ஒழுங்கா பண்ணி இருந்திருக்கணும்.. எனக்கு என்ன வந்துச்சுன்னு இப்படி தான் எங்கேயோ போய்டுவாளா..?  நான் ஒன்னும் தப்பா சொல்லலையே..

 

நானும் தான் இந்த கவிதா பொண்ணுக்கு கைடரா இருக்கேன் ..என் பேச்சு கேட்டு அந்த பொண்ணு எப்படி வேலை பார்க்குது..

 

ஒண்ணுத்துக்கும் உதவாக்கரையை வச்சுக்கிட்டு இப்படி பேசுற ..இன்னும் நல்லா திறமையானவளா இருந்துட்டு அவ்வளவுதான் போல.!”  என நக்கலாய் கூறிவிட்டு சென்று விட்டான்..

 

ஏற்கனவே அவள் மீது இருந்த உரிமை உணர்வில் சிறு எரிச்சலில் இருந்தவனுக்கு சாமுவேல் பேச்சு அதிக கடுப்பை தந்து இருந்தது..

அதற்கு அனைத்திற்கும் மேலாக சோதனையை முழுதாய் செய்து முடிக்காமல் இப்படி பாதியிலேயே பொறுப்பில்லாது சென்று விட்டாளே என்று தான் அவனுக்கு ஆத்திரத்தையே கிளப்பி இருந்தது..

அந்த நேரத்திற்கு நறுமுகையும் வந்திட அவ்வளவு தான் அனைத்தையும் அவளிடம் கொட்டி தீர்த்து ஆடி விட்டான் விக்ரம்..

இரண்டு நாட்களாய் இருவரும் சரிவர பேசிக் கொள்வதே இல்லை.. அவள் அவன் கூறும் வேலைகளை மெனக்கெட்டு கவனமாய் செய்து முடிக்கிறாள் அவ்வளவே.. 

அவனும் என்ன தான் தன்னை இயல்பாக காட்டிக் கொண்டாலும் உள்ளுக்குள் தளர்ந்து தான் போயிருந்தான்.. அவள் பேச மாட்டாளா..? தன்னிடம் பழையபடி சிரிக்க மாட்டாளா? என மனதிற்குள் ஏங்கி  கிடந்தான்…

 

நறுமுகையோ இப்படி தன்னை வார்த்தைகளாலேயே நொறுக்கிவிட்டானே..?? எப்படி இவனால் பேச முடிந்தது? என ஆதங்கத்தில் கிடந்தாள்…

பொறுத்து பொறுத்து பார்த்த விக்ரம் அவனே முன்வந்து அவளிடம் பேசி இருந்தான்..

அதுவும் வேறு மாதிரி ..

 

“உன்கிட்ட பேசணும் மாடிக்கு வா..!”  என அவள் காதில் மட்டும் கூறிவிட்டு சென்று இருந்தான்…

 

இப்படி திடுதிப்பென அழைத்ததும் அவளால் மறுக்க முடியவில்லை ..அவளுக்கும் அவனிடம் பேசியாக வேண்டிய கட்டாயம் ..

 

அவன் சென்ற சிறிது நேரத்தில் தானும் சென்றாள் நறுமுகை..மொட்டை மாடியில் தான் விக்ரம் பாக்கெட்டில்  கரங்களை நுழைத்தவாறு அவளை பார்த்தவாறு நின்றிருந்தான்…

 

” இப்ப எதுக்குடி மூஞ்சி இப்படி வச்சிருக்கிற..?? பேசவே மாட்டியோ.?”  என்றதும் அவனை நிமிர்ந்து பார்த்தவள்

 

“என்ன பேசணும்னு நினைக்கிறீங்க..?? அதான் அன்னைக்கு செத்துப்போன்னு சொன்னிங்களே..??  இதுக்கு மேல உங்க கிட்ட என்ன பேச இருக்கு ..?” என நறுக்கென்று கேட்டதும் அதில் முகம் கருத்து விட்டது விக்ரமிற்க்கு…

 

உஷ்ண மூச்சை வெளியிட்டவன்,

 

“ நீ பண்ணது தப்புன்னு தெரியலையா உனக்கு …?”

 

“நான் ஒன்னும் வேணும்னே பண்ணல.. என்ன நடந்ததுனு தெரியாம ஒரு எக்ஸ்பிளனேஷன் கூட கேட்காம இப்படி எல்லாம் பேசிட்டீங்க..???

நாளைக்கே ஏதாவது நான் தப்பு பண்ணாலும் இதே மாதிரி தான் எல்லார் முன்னாடியும் நிக்க வச்சு கேள்வி கேப்பீங்களா..?? அசிங்கப்படுத்துவீங்களா? ” என கேட்டவளை பல்லை கடித்துப் பார்த்த விக்ரம் ,

 

“அப்போ நான் பேசுனது மட்டும் தான் மேடம் கண்ணுக்கு தெரியும் …நீ பண்ண தப்பு எதுவும் தெரியாது அப்படித்தானே..?”  என நக்கலாக பேசினாலும் முகத்தில் கடும்பை காட்டி பேசியவனை  வெறித்த நறுமுகை, 

“நான் பண்ணது தப்புதான்.. நான் ஒத்துக்குறேன்.. டெஸ்ட்க்கு வெச்சிட்டு குமாருக்கு கேக் கட் பண்ண போறதா சொன்னாங்க.. சரி போயிட்டு சீக்கிரம் வந்துவிடலாம் நினைச்சேன்…

ஆனா திடீர்னு பீச்சுக்கு  போனும்னு சொல்லிட்டாங்க.. சீனியர் அக்கா அண்ணா எல்லாமே வந்து இருந்தாங்க.. நான் மட்டும் வரலைன்னு சொன்ன தப்பாயிடும்…  அதான் போனேன் “

 

“உன் டெஸ்ட் தப்பா போயிடுச்சே, அவங்களை வந்து ஹெல்ப் பண்ண சொல்ல வேண்டியது தானே..?”  என்னை நறுக்கென்று கேட்டதும் அவனை முறைத்து பார்த்த நறுமுகை,

 

” டெஸ்ட் தப்பான இன்னொரு முறை பண்ண போறேன்.. அதுக்கு இப்படித்தான் பேசுவீங்களா..?”  என சற்று குரல் உயர்த்தி கேட்டதும் அவளை முகம் சுருக்கி பார்த்த விக்ரம்,

 

” கொஞ்சம் கூட உனக்கு மண்டையில மூளைன்னு ஒன்னு வேலை செய்யலையா? நீ ஒரு வேலையில இருக்க அந்த வேலையை பொறுப்பா முடிக்கனும்னு ஒரு பேசிக் சென்ஸ் கூட  உனக்கு இல்ல…

 

அப்படி என்னடி உனக்கு அலட்சியம் ..??? நாளைக்கு நானே செத்து கிடக்குற நிலைமை இருந்தாலும் எனக்கு என்னனே போயிடுவ போல… ச்சீ ..” என முகத்தில் வெறுப்பை அப்பட்டமாய் காட்டினான் விக்ரம்…

 

அவனை  எரிச்சலாக பார்த்த நறுமுகை,

 

“ இந்த அளவு  யோசிக்க ஆரம்பிச்சிட்டீங்களா..??? எனக்கு கல்யாணமே நடக்கலைனாலும் பரவால்ல… உங்களை கல்யாணம் பண்ணிக்க மாட்டேன் ..”

 

எனப் பட்டென்று கூறியதும் தலை திருப்பி அவளைப் பார்த்த விக்ரம் அவளை நெருங்கி வந்து,

 

” ம்ஹூம் …இந்த விஷயத்துக்காக என்னையை வேண்டாம்னு சொல்றல  நறு..?”  என அவனும் குரல் உயர்த்தி கேட்டாலும் அதில் வலி வெளிப்படையாகவே தெரிந்தது…

   அவனைப் பார்க்காது பார்வையை வேறு பக்கம் திருப்பியவள் ,

 

“ஆமா உங்களுக்கு தான் நான் முக்கியமில்லையே… செத்துப்போனு  சொன்னிங்க தானே..”  என்றதும்,

 

” ஆமாடீ.. சொன்னேன் தான்… பின்ன நீ அந்த கார் மேல இடிச்சிருந்தா என்ன ஆயிருக்கும்..??  உன்னை இந்நேரம் ஹாஸ்பிடல்ல படுக்க வைச்சிருப்பாங்க… பார்க்கும்போது எனக்கு அப்படி பதறுச்சுடி ..

 

அதுக்கு தான் சொல்றேன் கொஞ்சம் கூட கவனமாக இருக்க மாட்டியான்னு..??  அது ஏன் உன் புத்திக்கு ஏற மாட்டேங்குது..?? உன் நல்லதுக்கு தானே நான் சொல்றேன்..” 

 

“நீங்க எதுவும் சொல்ல வேண்டாம் விக்ரம்.. கல்யாணத்துக்கு அப்புறம் நீங்க இப்படித்தான் என்னை கஷ்டப்படுத்துறீங்கன்னா எனக்கு இந்த கல்யாணமே வேண்டாம்..”  என மீண்டும் அதிலேயே வந்து நிற்பவளை இப்போது மூச்சு வாங்க பார்த்த விக்ரம்,

 

” என்னை கழட்டி விடுறதுக்காக தான் இப்படி பிளான் பண்றியா நறுமுகை..” . என குத்தூசியாய் வார்த்தைகளை உதிர்த்ததும்  அவனை அதிர்ந்து பார்த்த நறுமுகைக்கு பேச்சே வரவில்லை…

 

“விக்ரம்…”

 

“பேசாதடீ…..நீ தான் என் பொண்டாட்டினு ஆழமா நம்புனேன்…ஆனா அதெல்லாம் ஒரு ம***ம் இல்லைனு நிரூபிச்சிட்டல…”என அவளை பார்த்து கூறியவன் பின்னந்தலையை அழுந்த கோதிக் கொண்டு,

 

“வேணாடீ…நீ இவ்ளோ பிடிவாதமா கல்யாணம் வேண்டாம்னு சொல்லும் போது உன்னை இழுத்து பிடிக்கலை…போ…நானே இந்த கல்யாணத்தை நிறுத்தனதா இருக்கட்டும்…” என பேசி சென்றவனை உயிரற்ற ஜடமாய் பார்த்து வைத்தாள் நறுமுகை…

 

அடுத்த சில நிமிடங்களில் மூன்றாம் மாடியில் இருந்து கீழே குதித்து இருந்தாள் நறுமுகை…

 

 

❤️ Loading reactions...
0 Comments
Oldest
Newest Most Voted
error: Content is protected !!
Scroll to Top