அத்தியாயம் 16
யாருக்காகவும் காத்திருக்காது பொழுது புலர அரசு தான் எப்போதும் போல் முகம் கழுவி பவுடர் ஜவ்வாது என தோரணையாக புத்துணர்ச்சியுடன் மணக்க மணக்க கிளம்பியபடி,
” என் இனிய பொன் நிலாவே பொன்நிலவில் என் கனாவே
நினைவிலே புது சுகம்தர ர ரா த த தொடருதே தினம் தினம் தர ர ரா த த”
என்று மீசையை முறுக்கி வழமையாக கையில் வைத்திருக்கும் சீப்பில் தாடியை சீவி முடியையும் வாரி கலைத்தபடி சயந்தனை திரும்பி பார்க்க அவனோ சோபையிழந்து முகத்தில் ஒரு வித வேதனையுடன் கன்னத்தில் இருந்த வடுவையும் அதற்கு மருந்திட்டவளின் நினைவையும் மீண்டுமீண்டும் வருடியபடி அமர்ந்திருக்க,
அரசுவோ, “என்ன மச்சான் ரெடியாகல?” என்றான் துள்ளலுடன்
சயந்தனோ, “எங்க?” அதற்கு அரசுவோ,
“ஹான், மைசூர் மகாராஜா பேலஸ சுத்தி பார்க்க” என்றான் நக்கலாக
சயந்தனோ, “ப்ச், கோர்ட்டுக்கு தானே அதுக்கு எதுக்கு ரெடி ஆகணும்?”
என்றான் சலிப்புடன் அதற்கு அரசுவோ, “மொத்த தமிழ்நாடு மீடியாவும் இங்கே தான் குழுமி இருக்கும் அப்போ சாவு வீட்டுக்கு போற மாதிரி போனா நல்லாவா இருக்கும்? சொல்லு கொஞ்சம் அழகா போனா தானே ப்ரெசண்டபிள இருக்கும்”
என்று கூறிக் கொண்டிருக்கும் போதே அச்சுதன், “ம்க்கும், கோர்ட்டுக்கு கிளம்பனும்” என்று செறும,
அதற்கு அரசுவோ, “என்னடா தூக்கம் விழிச்சது ஒரே உடம்பு சூடு போல நல்லா எண்ண தேய்ச்சு குளி”
என்று கூறியதும் அச்சுதனுக்கு ஆத்திரமும் ஆதங்கமும் ஒருங்கே வந்தது. அவனது அன்னை வீட்டில் இருக்கும் போது அவனுக்கு எண்ணெய் தேய்த்து விடுவார். கறி சமைத்துக் கொடுப்பார். தூங்கும் போது தலையை கோதி கொடுப்பார் அடிக்கடி அவன் அறியாது நெற்றியில் முத்தம் வைப்பார்.
எல்லாவற்றையும் மீட்டி பார்த்தவனுக்கு அரசுவின் மீது கொலை கோபம் வந்தது. அதே ஆத்திரத்துடன், “ஏன்டா இப்டி பண்ண? இனி யாருடா எனக்கு”
என்று குரல் கம்ம தமையனின் சட்டையை பிடிக்க அரசுவோ நக்கலாக உதடு வளைத்து சிரித்தபடி, “ஏன் உன்னோட மாமி அதான் கோதை தேய்ச்சு விடமாட்டாளா? இல்ல உனக்கு தான் கையில்லையா?”
என்று கேட்க அச்சுவோ, “டேய்! ஏன்டா இப்டி உணர்வே இல்லாம இருக்க கிட்டத்தட்ட ஜடம் போல உனக்கு எப்பிடிடா மனசு வந்துச்சு பெத்து வளர்த்த அம்மாவ போயும் போயும்”
என்று அவ் வார்த்தையை கூட அச்சுதனுக்கு சொல்ல தோன்றவில்லை. அதற்கு அரசுவோ,
“டேய் தம்பி பையா கொஞ்சம் பொறுமையா இரு அந்த பொறுமை மட்டுமில்லன்னா எருமை கூட மேய்க்க முடியாது நீ பாட்டுக்கு எதையாவது நினைச்சு மூக்கை உறிஞ்சிட்டு கிடக்காத என்ன நான் வர ஒரு ரெண்டு வாரமாகும்”
என்று கூறி விட்டு வெளியே சென்றவன் கண்களில் பட்டதென்னவோ அகமி தான் நாக்கை உள் கன்னத்தில் குற்றி சுழற்றியபடி, “ஹேண்ட்கப் போடுறீங்களா மேடம்”
என்றபடி அவள் முன்னால் கையை நீட்ட அகமியோ எரிச்சலுடன் அங்கிருந்த கைவிலங்கை அணிவிக்க அது பூட்டிய சத்தத்தில்
“ஸ்ஸ் ஆ” என்று கவர்ச்சியாக அவன் சத்தம் எழுப்ப, அகமேந்தியின் முகம் கோபத்திலோ வெட்கத்திலோ ஏதோ ஒன்றினால் ஜிவு ஜிவு என சிவந்தது.
அதே கனலுடன், “இப்போ என்னத்துக்கு இப்டி கத்துற? லூசா நீ?”
என்றது தான் தாமதம் அரசுவோ அவள் காதருகில், “என் கிட்டையும் இருக்கு இந்த மாதிரி ஹாண்ட்காப் ஆனா பிங்க் கலர் அத உன் கையில மாட்டுறத சும்மா கற்பனை பண்ணி பார்த்தேனா அதான் சும்மா சுர்ருன்னு ஏறிருச்சு”
என்றதும் அகமிக்கு ஆத்திரம் ஆத்திரமாக வர அவள் கையை ஓங்கியது தான் தாமதம் விலங்கிட்ட கையாலேயே அவளை தடுத்து தன் கைவளைவுக்குள் கொண்டு வந்து கன்னத்தில் ‘பச்சக்’ என்று முத்தமிட்டிருந்தான். அவன்
அவனது செயலால் காவல் நிலையத்திலுள்ள அனைவரும் அவர்களையே பார்த்திருக்க அகமியோ, “ஹவ் டேர் ஆர் யூ? என்ன தைரியமிருந்தா பட்டப்பகல்ல ஒரு ஐ.பி.எஸ் ஆபிசருக்கு கிஸ் கொடுப்ப?”
என்று கையோங்க எத்தனித்த சமயம் அவனது வக்கீலும் துரியனும் காவல் நிலையத்துக்குள் நுழைய அவளை பார்த்து ஒற்றை கண் சிமிட்டியவன்,
“கண்ணுஉஉ கவலைப்படாத நான் உனக்கு அடிக்க சந்தர்ப்பம் தாரேன் ஆனா கையால இல்ல உதட்டால”
என்றதும் அகமியோ, “ச்சீ” என்று திரும்பிக் கொள்ள அரசு தனது வக்கீலிடமும் துரியனிடமும் சாவகாசமாக அமர்ந்து பேசிக் கொண்டிருந்தான். என்ன தான் அவனை கைது செய்து சிறையில் அடைத்திருந்தாலும் இது அவனது கோட்டை ஆயிற்றே அவனை மீறி என்ன செய்ய முடியும்?
செழியனிருந்தாலாவது ஏதாவது செய்யலாம் அவன் நேற்று செய்த அலப்பறையால் அவனை வீட்டிற்கு அனுப்பிய அகமியோ, “கோர்ட் ப்ரொசீஜர நீ பாரு அண்ணா நானும் அச்சுவும் ஸ்டேஷனை பார்த்துக்குறோம்”
என்று அனுப்பிவிட்டது எவ்வளவு பெரிய தப்பென்று இப்போது புரிந்தது. அவளுக்கு
அகமி இவ்வாறு சிந்தித்துக் கொண்டிருக்க பின்னால் இருந்து, “குட்டிம்மா” என்ற ஏக்க குரல் கேட்க அவளோ இறுகிய முகத்துடன்,
“சார் என் பேரு ஐ.பி.எஸ் அகமேந்தி ஒண்ணு மேடம்னு கூப்பிடுங்க இல்லன்னா அகமேந்தின்னு கூப்பிடுங்க”
என்றதும் அவனோ, “குட்டிம்மா அப்டி சொல்லாத அண்ணன் மேல உனக்கு ஆயிரம் வருத்தம் கோபம் இருக்கலாம் அதுக்காக ரெண்டு அடி வேணும்னாலும் அடிச்சுக்கோ என்ன இப்டி தள்ளி வைக்காத உள்ளுக்குள்ள ஏதோ குடையுது”
என்று கூறிக் கொண்டிருக்கும் போதே, “அது ஒண்ணுமில்ல மச்சான் கேஸ் ட்ரபுளா இருக்கும் நேத்து நைட் ஏதோ மட்டமான கடையில டின்னர் வாங்கி இருக்காங்க அதான் நீ ஒண்ணும் கவலைப்படாத”
என்று அவனருகில் வந்தவன், “என்ன மேடம் எப்போ கோர்ட்டுக்கு போறோம்? இப்படியே நின்னா என்ன அர்த்தம்?”
என்று நக்கலாக கேட்க அவளோ அங்கிருந்த கான்ஸ்டபிளிடம், “கண்ணாயிரம் சார் இவங்கள வண்டியில ஏத்துங்க”
என்றபடி ஜீப்பில் ஏறி கொள்ள நீதிமன்றத்துக்கு வரும் வழியெல்லாம் கோஷமும் ஆர்ப்பாட்டமும் தான் அத்தனையும் அரசுவின் ஆட்கள் தான் அவனுக்கு ஆதரவாக பல மக்கள் களமிறங்கினர். என்று சொன்னால் அது தான் உலகமாக பொய்
பணம் பாதாளம் வரை பாயும் என்பதற்கமைய தன் நண்பன் துரியோதனன் மூலமும் கட்சி விசுவாசிகள் மூலமும் பல லகரங்கள் செலவழித்து மக்களை இறக்கி இருந்தான். சோஷியல் மீடியாவில் தன்னை ட்ரெண்டிங் செய்தியாக மாற்றி இருந்தான்.
கொஞ்சம் கொஞ்சமாக மக்களின் மனதில் தன்னை தியாக செம்மலாக உருவகப்படுத்தி அவ் பிம்பத்தை பதிய வைத்துக் கொண்டிருந்தான்.
ஏற்கனவே ஆளுங்கட்சியின் மீதிருக்கும் அதிருப்தியை தனக்கு சாதகமாக சமயோசிதமாக மாற்றிக் கொண்டிருந்தான்.
நீதிமன்றத்திற்குள் நுழைவதற்காக காவல்துறை வாகனத்தை விட்டு கீழிறங்கிய சமயம் பல நிருபர்கள் அவனை சூழ்ந்துக் கொண்டு பல சரமாரியான கேள்விகளை எழுப்ப அவனோ குறுநகையுடன்
“ஓ.. ஓ உங்க எல்லார் கேள்விக்கும் பதில் சொல்ல எனக்கும் ஆசை தான் அதுக்கான சந்தர்ப்பம் வரும் போது கண்டிப்பா சொல்லுறேன் இப்போ இம்போர்ட்டண்ட் கோஷ்டின்ஸ் ஒன்லி ஏன்னா கோர்ட் டைம வேஸ்ட் பண்ண கூடாது பாருங்க”
என்றதும் ஒரு பத்திரிகையாளரோ, “உங்க அம்மா” என்றது தான் தாமதம் அவன் கண்களில் தாரை தாரையாக கண்ணீர் வழிந்தது. அதே கம்மிய குரலில் ஆனால் உறுதியாக,
“அதுல என்னோட அம்மா இருந்தாங்க அப்டிங்குறதுக்கு உறுதியா எந்த ஆதரமுமில்ல அந்த ஆதரத்த காண்பிச்சாலே தவிர என்னால இத.. இத ஏத்துக்கவே முடியாது என்னோட அம்மா அப்டி என்ன விட்டுட்டு போகமாட்டாங்க”
என்றவன் சட்டென அழுத்தமாக, “அப்டி போகவும் விடமாட்டேன்”
என்றான் அது யாருக்கோ குறிப்பிட்டு கூறுவது போலிருக்க இங்கு யமகனின் கை ஒரு கணம் அந்தரத்தில் நின்றது அவனது உதடுகளோ,
“பிரில்லியண்ட், இந்த முறை தான் சரியான எதிரி கூட யுத்தம் பண்றேன்” என்று புன்னகைத்தபடி கருப்பு ராஜாவை நோக்கி காய்களை நகர்த்த,
இங்கு நீதிமன்ற வளாகத்தில், “சார் இந்த மெடிசினல் ட்ரக்ஸ் கிரைமுக்கும் உங்களுக்கும் சம்பந்தம் இருக்கிறதா ஒரு பேச்சு அடிப்படுதே?”
என்றதும் அரசுவோ நக்கலாக சிரித்தபடி, “அதுக்கு பின்னாடி யார் இருக்கங்குறத போலீஸ் இன்வஸ்டிகேட் பண்ணிட்டு இருக்காங்க அவங்க கண்டிப்பா உண்மைய கண்டுபிடிப்பாங்க” என்றவன் வாய்க்குள்
“இல்லாட்டி நான் கண்டுபிடிக்க வைப்பேன்” என்று முனங்கி விட்டு “என் மக்களுக்கு எதிரா யாரு செயற்பட்டிருந்தாலும் அவங்களுக்கு கண்டிப்பா தண்டனை கிடைக்கும் கிடைக்கணும்”
என்று கூறி விட்டு நிதிமன்றத்துக்குள் செல்ல யமகனோ, “ஒரு கை பார்த்திருவோம் அரசு நீயா? நானானு?”
என்று கருப்பு ராஜாவை சுற்றி கட்டம் கட்ட இங்கு நீதிமன்றத்திலோ இரு வாரங்கள் அரசுவையும் அவனுடன் இணைந்து குற்றங்கள் புரிந்ததாக கூறப்படும் மூவரையும் தடுப்பு காவலில் வைக்கும்படி நீதிமன்றம் உத்தரவு வழங்க,
அவன் சாதாரணமாக தான் இருந்தான் அகச்செழியனுக்கு தான் இம்மையும் மறுமையும் புரியாத நிலை மனதுக்குள், ‘என்னடா இது? அவனோட வக்கீல் ஒரு வார்த்தை கூட மறுத்து பேசல என்ன நடக்குது இங்க?’
என்ற எண்ணம் தான் வந்தது. அதே சமயம் மத்திய சிறைச்சாலைக்கு அழைத்து வரப்பட்ட அரசுவோ ஜம்மென இறங்கியபடி,
“சின்ன மச்சான் உனக்கு ரெண்டு வாரம் டைம் இருக்கு என் மேல பழிய போடணும்னு பிளான் பண்ணாம ஒழுங்கா இன்வெஸ்டிகேட் பண்ணு உனக்கான க்ளூ என் மனசுக்கு நெருக்கமான இடத்துல இருக்கு”
என்று விட்டு உள்ளே நுழைய செழியனோ, “என்னடா சொல்லுற?” என்று கத்தியது அரசுவின் காதை அடைய நக்கலுடன், “வாங்குற சம்பளத்துக்கு கொஞ்சமாவது வேலை பாரு மச்சான்”
என்று கூறிக் கொண்டே உள்ளே நுழைந்தவன் நெட்டி முறித்தபடி சயந்தனிடம், “மச்சான் இனி நம்ம கோட்டை தான் தண்ணீ தம்மு எது வேணும்னாலும் கேளு எல்லாம் கிடைக்கும் அந்தப்புர செட் அப் கூட இருக்கு என்ன உன் பொண்டாட்டியும் சரி என் பொண்டாட்டியும் சரி வரமாட்டாளுக அதான்”
என்றவன் அங்கிருந்த அதிகாரிகள் கைதிகள் என அனைவருடனும் சகஜமாக கலகலக்க தொடங்கி விட சயந்தன் தான் ‘என்ன விதமான ஜந்துவிடம் மாட்டிக் கொண்டேன்?’ என்று புரியாமல் மலங்க மலங்க விழித்தான்.
தொடரும்…