அத்தியாயம் 17 (USAP)

அத்தியாயம் 17 

 

ஜெயிலுக்கு அழைத்து வரப்பட்ட அரசுவுக்கு ஏகபோக வரவேற்பும் மரியாதையும் தான் சிறைக் காவலரான ராஜதுரையோ, “சார் எப்படி இருக்கீங்க? உங்கள பார்த்து எவ்வளவு நாளாச்சு?”

 

என்று கட்டித்தழுவிக் கொள்ள அரசுவோ, “இது என்ன கல்யாண வீடா? அடிக்கடி வந்து போக தேவை இருந்தா வருவேன், அது சரி நீர் என்ன ஓவரா நெஞ்ச நக்குறீரு?”

 

என்றதும் தலையை சொரிந்த ராஜதுரையோ, “அது வந்து சார் ப்ரோமோஷன் பத்தி சொன்னேனே”

 

என்று பவ்யமாக அவனை பார்க்க அரசுவோ, “எல்லாம் நடக்கும், அது சரி அப்பறோம் நம்ம பசங்க எல்லாம் எங்க?”

 

என்று கேட்க ராஜதுரையோ, “எல்லாம் உள்ள தான் சார் நீங்க சொன்ன மாதிரியே எல்லாம் பக்காவா இருக்கு”

 

என்றதும், “ம்ம், அப்பறோம் இது நம்ம மச்சான்”

 

என்று சயந்தனை பக்கத்தில் இழுக்க அவனுக்கோ இந்த சிறைவாசம் முற்றிலும் புதிதல்லவா இடத்தை ஒரு வித ஒவ்வாமையுடன் பார்த்து வைக்க ராஜதுரையோ,

 

“என்ன சார்? பார்ட்டி ஜெயிலுக்கு புதுசா?” என்று மெதுவாக வினவ அரசுவோ,

 

“ஆமா ரொம்ப புதுசு ஜெயில்னா இப்டி இருக்கும்னு ஏட்டுல படிச்சவர்”

 

என்றதும் ராஜதுரையோ, “உங்க மச்சானா சார்?” என்று ஆச்சரியமாக கேட்க அரசுவோ,

 

“அவ்ளோ பெரிய யோக்கிய சிகாமணியெல்லாம் இல்ல, ஜெயிலுக்குள்ள வராம தப்பு பண்ற அளவுக்கு நேக்கு அவ்ளோ தான், அப்படி தானே மச்சான்”

 

என்று சயந்தனையும் கூட்டு சேர்க்க அவனோ அரசுவை பார்த்து முறைத்து வைத்தானே தவிர பேசவில்லை.

 

இதே சமயம் அகச் செழியனோ, “அந்த அரசு என்ன சொல்ல வர்றான்? எனக்கு ஒன்னுமே புரியல அவனோட மனசுக்கு நெருக்கமான இடம் எது? இல்லாட்டி திசை திருப்ப பார்க்குறானா?”

 

என்று சிந்தித்துக் கொண்டிருக்க அகமேந்தியோ, “நாம ஏன் இதபத்தி துரியோதனன் கிட்ட கேட்கக்கூடாது அரசுவுக்கு மனசுக்கு நெருக்கமானவங்கன்ன அது துரியோதனன், இன்னொன்னு நம்ம அச்சு”

 

என்று அச்சுதனை பார்க்க அவனோ, “ம்க்கும், அவன புரிஞ்சிக்க ஒரு யுகம் வேணும் அண்ணி அவன் என்ன யோசிக்கிறான்? என்ன பண்றான்னு? யாருக்குமே தெரியாது அவனா யோசிப்பான் அவனா பண்ணுவான்”

 

என்று கூற அகமேந்திக்கு ஏனோ தன் கண் முன்னால் இருக்கும் பொருள் கண்ணுக்கு தெரியாத தோற்ற மயக்கம்,

 

இதே சமயம் துரியோதனனின் வீட்டில் பானுமதி எரிச்சலுடன் உள்ளே நுழைந்தபடி, 
“யார கேட்டு என் ப்ரஸ்ஸ விலைக்கு வாங்குன?”

 

என்று துரியோதனனிடம் எகிறிக் கொண்டு வர அவனோ சாவகாசமாக சுருட்டை பற்ற வைத்தபடி, “யாரு கிட்ட கேட்கணும்?”

 

என்றதும் பானுமதியோ மூக்கு விடைக்க,”என்கிட்ட கேட்கணும் ஸார் ஏன்னா அந்த பிரெஸ்ஸுக்காக உயிரை பணயம் வச்சு ஆர்ட்டிகல் எழுதி இருக்கேன்”

 

என்று கத்த துரியோதனனோ சாவகாசமாக, “எப்படி எல்லாரோட பெட் ரூமுக்குள்ள எட்டி பார்த்தா?”

 

என்றது தான் தாமதம் அவளோ, “மைண்ட் யோர் வர்ட்ஸ் துரியோதனா” அவனோ

 

“ஆமா ஆமா நான் மைண்ட் பண்ணிக்கிறேன்., என்ன பத்தி ஆர்ட்டிகல் எழுத என் பெட்ரூம எட்டி பார்த்தவ தானே நீ”

 

என்றபடி சட்டையை நீவிக் கொள்ள பானுமதியோ முகம் சிவந்தபடி, “அது நான் வேணும்னு வரல உன்னோட ஆபீஸ் ரூம்னு நினச்சு… அந்த தீபக் மாறி சொல்லி”

 

என்று தடுமாற துரியோதனனோ, “இல்லாட்டி மட்டும் கிழிச்சு தள்ளிட்டு தான் மறு வேலை பார்த்திருப்ப, அது சரி இன்னைக்கு என்ன சாப்பாடு?”

 

என்றதும் பானுமதியோ, “நான் என்ன பேசுறேன் நீ என்ன”

 

என்று முழுதாக வசனத்தை கூட முடிக்கவில்லை. அவனது அழைப்பேசி ஒலிக்க அதையேற்று காதில் வைத்தபடி அங்கிருந்து அகன்று விட்டான்.

 

இங்கு சிறைச்சாலையில் அரசுவுக்கும் சயந்தனுக்கும் கொஞ்சம் கூட சொகுசுக்கு குறைவேயில்லை.

 

அரசுவோ, “வழமையா ஜெயிலுக்கு வந்தா இங்கே தான் தங்குவேன்”

 

என்று ஒரு அறையை காட்ட அங்கு சோபா, கட்டில் , எ.சி, டிவி என ஜெயிலா ஹோட்டலா என்று தெரியாத அளவுக்கு அத்தனை வசதி சயந்தனோ ஆச்சரியமாக,

 

“மாப்பிள்ளை உண்மையில இது ஜெயில் தானா? எப்படி இப்படி ஒரு செட் அப்?”
 

என்று ஆச்சரியமாக கேட்க அதற்கு அரசுவோ ஷர்ட்டை கழட்டி ஹேங்கரில் மாட்டியபடி,

 

“மச்சான் ஆளுங்கட்சி எதிர்க்கட்சி அதிகாரிங்க எல்லோரும் நம்ம கைக்குள்ள எனக்கு மட்டும் சலுகை கொடுக்கல அவனவன் பண்ண ஊழல், பலான சமாச்சாரம் எல்லாம் லீக் பண்ணி அவன் அரசியல் வாழ்க்கைக்கு நாமம் போட்டுற மாட்டேன்”

 

என்று மெத்தையில் கைகால் பரப்பி படுக்க சயந்தனோ ஆச்சரியத்துடன் உதட்டை வளைத்து “பெரிய ஆள் தான் போ, இதெல்லாம் செழியனுக்கும் குட்டிம்மாவுக்கும் தெரிஞ்சா என்ன நடக்கும்?”

 

என்றதும் அவனோ, “என்ன தின்பண்டம் கிடைக்காத பசங்க மாதிரி கத்தி ஆர்ப்பாட்டம் பண்ணுவாங்க பின்ன ஐ.ஜி ஒரு கால் போட்டதும் பெட்டி பாம்பா அடங்கிருவாங்க வேற என்ன பண்ண முடியும்?”

 

என்று அசால்ட்டாக தோளை குலுக்க சயந்தனோ, “அதெல்லாம் சரி அந்த கிழடுகள இப்பயாவது போட்டு தள்ளிரு இல்லன்னா கவர்மண்ட் ஹாஸ்ப்பிட்டலுக்கு நான் செகண்ட் குவாலிட்டி மெடிசின்ஸ் சப்லை பண்ணது”

 

என்று கூறி முடிக்கும் முன்பே அரசுவோ, “என்னது செகண்ட் குவாலிட்டி மெடிசினா? நீ சப்லை பண்ணது செகண்ட் குவாலிட்டி மெடிசின்ஸ் இல்ல மச்சான் டேட் க்ளோஸான மருந்து அது மட்டுமா சப்லை பண்ண ? ] கோவிட் வாக்சின்ஸ்ல கூட ஸ்கேம் பண்ணிருக்க”

 

என்று கூற கூற சயந்தனின் முகம் கருத்து போனது கண்களோ கோபத்தை தத்தெடுக்க, “போதும் நிறுத்து அரசு, நான் கெட்டவன் தான் ஏன் ஈரப்பசையே இல்லாத ராட்சஸன் தான், அதுக்குன்னு இவ்வளவு கேவலமா எனக்கு சம்பாரிக்க வேண்டிய அவசியம் எனக்கில்ல”

 

என்று வீர வசனம் பேச சயந்தனை பார்த்து நக்கலாக சிரித்த அரசுவோ, “ஆமா ஆமா கேப்டனுக்கு அடுத்து கொடுத்து கொடுத்தே சிவந்த கைகள் உன் கைகள் தான்”

 

என்று மீண்டும் சிரித்தவன் சிரிப்பை நிறுத்தி விட்டு, “டேய்! மச்சான் நீ எவ்ளோ பெரிய பிராடுன்னு எனக்கு தெரியும். நீ ப்ரொபோசர் வேலை பார்த்த நேரம் என்ன என்ன

 

ஆட்டம் போட்ட உன்னோட தேவைக்கு எத்தனை பேர எப்படியெல்லாம் யூஸ் பண்ணணு ஆல் டீடெயில்ஸ் ஐ நோ சும்மா சீன் போடாத”

 

என்றதும் சயந்தனோ, “ஆமாடா அன்னைக்கு பண்ணேன் தான் ஏன்! இப்போ கூட புது புது ரிசர்ச் பண்றேன் தான் அது வேற இது வேற ஒரு இவ்ளோ பெரிய ஒரு கூட்டத்தையே கொல்லுற அளவுக்கு நான் மோசமானவன் தான் அத நான் ஒத்துக்குறேன்

 

ஆனா இந்த மாதிரி டேட் க்ளோஸான ட்ரக்ச சப்லை பண்ணா என்னோட லைசன்ஸ் கேன்சலாகிரும் மத்த பிஸினஸும் லாஸ் ஆகிரும் உனக்கு புரியுதா இல்லையா? என் ரெபியூட்டேஷனே மண்ணோட மண்ணா போயிரும்”

 

என்று மூச்சிரைக்க பேச அவனை பார்த்து கோணலாக புன்னகைத்த அரசுவோ,

 

“அது தான் வேணும், உன்னோட சாம்ராஜ்ஜியம் மண்ணோட மண்ணா போகனும் அது மட்டும் தான் அவனுக்கும் உன்னோட அப்பாவுக்கும் வேணும்”

 

அப்போது தான் அரசு கூறியதை ஆழ்ந்து கவனித்த சயந்தனோ, “என்ன சொல்லுற? எனக்கு எதுவுமே புரியல”

 

என்று சயந்தன் குழம்பியபடி அரசுவை பார்க்க அதே சமயம் அவன் இருந்த ஜெயிலரின் ஒய்வறை தட்டப்பட, அதை திறந்த அரசுவின் கையில் அழைப்பேசியை கொடுத்த வார்டனோ,

 

“சார் உங்களுக்கு கால்” என்று தயங்கியபடி கூற அரசுவோ புன் முறுவலுடன் அதை காதில் வைத்து,

 

“என்ன நடு மச்சான் சௌக்கியமா?” என்றான் ஒரு வித நக்கல் தொனியில் அவனது குரலை கேட்ட அடுத்த நொடி இப்பக்கம் அழைப்பிலிருந்த யமகனின் பற்கள் அரைப்பட,

 

அரசுவோ, “என்ன நடு மச்சான் மடகாஸ்கர் சூடு இங்கே மட்டும் அனலடிக்குது”

 

என்றதும் யமகனோ, “என்ன அரசு ஒண்ணும் பண்ண முடியாத தூரத்தில இருக்கானுங்குற திமிரா?”

 

அதற்கு அரசுவோ, “அது நான் கேட்க வேண்டிய கேள்வி மச்சான், நீ சரியான ஆளாயிருந்தா இங்கே வா மச்சான் நீயா நானானு மோதி பார்த்துரலாம் சும்மா இது என்ன கண்ணாமூச்சி ஆட்டம்?”

 

அவனது கூற்றில் கண்ணை மூடி திறந்த யமகனோ, “இங்கேபாரு அரசு இது உனக்கு தேவையில்லாத விஷயம் ஒதுங்கி போயிரு அந்த சயந்தன் என்ன பண்ணான்னு உனக்கு தெரியுமா?”

 

அதற்கு அரசுவோ, “தெரியும்” என்றான் இறுகிய குரலில், யமகனோ குழப்பத்துடன்,

 

“தெரிஞ்சுமா அவனுக்கு சப்போர்ட் பண்ற? அவன என் கிட்ட ஒப்படைச்சிரு இது எங்க பகை நாங்க பார்த்துக்குறோம்”

 

அதற்கு இடிஇடியென சிரித்த அரசுவோ, “ஆமா அத தான் நானும் சொல்லுறேன் உங்க பகைய நீங்க தீர்த்துக்கனும் அடிச்சிக்கிட்டு சாகணும் அப்பாவி மக்கள் என்னடா பண்ணாங்க? அவங்கள போய் ச்சே”

 

என்று உறும யமகனோ தனது விசாலமான அறைக்குள் உலவியபடி, “வாவ் சாத்தான் வேதம் ஓதுது, நீ மட்டும் யோக்கியமா? உன் தங்கச்சிக்காக தானே அந்த அகமேந்திய கல்யாணம் பண்ண”

 

அதற்கு அரசுவோ, “நான் பழிக்காக கல்யாணம் பண்ணேன் இல்லன்னு சொல்லவே இல்லையே ஆனா நீ பண்ணதும் நான் பண்ணதும் ஒன்னு கிடையாது யமகா நீ

 

சப்ளை பண்ண மருந்தால இறந்தவங்களும் கண் பார்வை இழந்தவங்களும் ஏராளம் உன்னோட பகைக்காக ஆயிரக்கணக்கான மக்கள பலியெடுத்தது நியாயமே இல்ல”

 

என்று உறுதியாக கூற அதற்கு யமகனோ, “முடிவா என்ன சொல்ல வார?”

 

அரசுவோ, “என்ன சொல்லுறது நடு மச்சான் மோதி பார்த்துரலாம் நீயா நானானு, உன்ன ஜெயிலுக்குள்ள உட்காரவச்சு களி திங்க வைக்கல நான் ஆற்றலரசு இல்லடா”

 

அதற்கு யமகனோ, “உன்னோட அரசியல் வாழ்க்கைய முடிவுக்கு கொண்டு வந்து உன்ன காலத்துக்கும் முடக்கி போடலன்னா நான் அந்த அரிச்சந்திரனுக்கு பிறக்கலடா”

 

என்றதும் அரசுவோ, “நடு மச்சான் அவசரப்பட்டு கண்டதையும் பேசாத நான் ஜெயிச்சிட்டேன்னு வையேன் அப்பறோம் ஊர் உலகம் உன்ன அப்பன் பெயர் தெரியாதவன்னு சொல்லாது,

 

நம்ம குடும்ப மானம் என்னத்துக்கு ஆகுறது? பேசாம உன் புகையிலை பிஸ்னஸ் கோல்டு மைனிங் பிஸ்னசை உன் தங்கச்சிய கட்டுனதுக்கு சீதனமா எனக்கு தர்றதா சபதம் போட்டா அரசு ஹேப்பி அண்ணாச்சி நானும் உத்வேகமா வேலை பார்ப்பேனில்ல இல்லன்னா ஒரு தெம்பு வராதில்ல மச்சான்”

 

என்று அவனது தொழிலில் கைவைக்க யமகனோ, “கில்லாடிடா நீ, எப்படி நீ மட்டும் இப்டி யோசிக்கிற?”

 

என்றதும் அரசுவோ அங்கு வந்த அதிகாரிகளுக்கு வணக்கம் வைத்தபடியே, “எல்லாம் சத்தியசீலன் ஜீன் தான் மச்சான்”

 

என்றதும் யமகனோ, “சரி தான் அப்பனுக்கு பிள்ள தப்பாம பிறந்திருக்க, ஓகே நான் தோத்தா என் பிஸ்னஸ் உனக்கு தான், அக்ரீமண்ட்டே போட்டுக்கலாம்”

 

அதற்கு அரசுவோ, “சபாஷ் சரியான முடிவு மச்சான், இப்போ பரமபத ஆட்டத்த ஆரம்பிக்கலாம்”

 

என்று அழைப்பை துண்டித்து விட்டு தலைக்கு பின்னால் கையை வைத்து நெட்டி முறித்துக் கொண்டு, அங்கிருந்த ராஜதுறையிடம்,

 

“எதிரி இல்லாத வாழ்க்கை டிகாஷனும் பாலும் கலக்காத ப்ளாக் காஃபி மாறி சப்புன்னு நல்லாவே இருக்காது எதிரின்னு ஒருத்தன் இருந்தா தான்யா பால் காஃபி மாறி செம்மயா இருக்கு”

 

என்று கூற ராஜதுரையோ, “நீங்க சொன்னா சரி தான் சார்” என்றார் பவ்யமாக,

 

அரசுவோ அதற்கொரு வித மர்ம புன்னகை பூத்தானே தவிர பதில் கூறவில்லை.

                                                        தொடரும்…

 

❤️ Loading reactions...
0 Comments
Oldest
Newest Most Voted
error: Content is protected !!
Scroll to Top