அத்தியாயம் 18

வரவேற்பு மிகப் பிரம்மாண்டமாக நடைபெற்றுக் கொண்டு இருந்தது…

 

 பரம்பரை பணக்காரர்கள் என்பதால் ஏகப்பட்ட தொழில் அதிபர்களை வரவேற்று இருந்தார் அதியமான்…

 

 தனது ஒற்றை மகனின் வரவேற்பை மிக மிக ஆடம்பரமாக கொண்டாட ஏற்பாடு செய்து இருந்தார்…

அரசியல்வாதிகள்..பிரபல நடிகர் நடிகைகள்..என ஏகப்பட்ட விவிஐபிக்குளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது…

 

விழாவிற்கு மிக மிக அழகாகவும் நேர்த்தியாகவும் தயாராக இருந்தனர் அதிரூபனும் அவந்திகாவும்..

 

  தன்னை  மற்றவர் கண்கள் உறுத்தாத வண்ணம் பார்த்து பார்த்து அலங்கரித்துக் கொள்பவள் அவள்… இப்போது தனது திருமண விழாவிற்கு கூடுதல் கவனம் எடுத்து அலங்காரம் செய்ய சொல்லி இருந்தாள்…

 

 அவள் விரும்பியது போலவே அழகு கலை நிபுணர்களும் அவளை இன்னும் அழகாக காட்டியிருந்தனர் …

 

வழக்கமாக வரவேற்பு என்றால் அனைவரும் மேலைநாட்டு கலாச்சார உடைகளை தான் பெரும்பாலும் அணிவார்கள்..

 

 ஆனால் அதிருபன் அசல் பட்டு வேட்டி சட்டையும்… தங்க நூல் இழைகளாலான காஞ்சிபுர பட்டு புடவை அணிந்து அவந்திகாகவும் தயாராகி இருந்தனர் …

 

இருவரது இதழ்களிலும் அப்படி ஒரு புன்னகை குடி சேர்ந்திருந்தது… 

 

வந்தவர்கள் அனைவரும் அவர்களை வாழ்த்தி பரிசளித்து சென்றிட ..ஒவ்வொருவருக்கும் உதட்டில் தவழ்ந்த புன்னகையுடன் நன்றி சொல்லி அனுப்பினர் …

 

அனைவருக்கும் உணவு கூட வெள்ளி தட்டில் தான் பரிமாறப்பட்டது ..

 

சைவம் ,அசைவம் மற்றும் மேலை நாட்டு உணவு வகைகள் என ஏகப்பட்ட உணவு வகைகள் தயார் செய்யப்பட்டு இருந்தது…

 அத்தோடு இருவரது திருமணத்திற்கு என கிட்டத்தட்ட திருமணத்திற்கு இரண்டு நாட்கள் முன்பிருந்தே பல ஆசிரமங்களில் இலவச உணவும் வழங்கப்பட்டு கொண்டிருக்கிறது…அது அனைத்தும் அதிரூபனின் ஏற்பாடு தான் …

 

வரவேற்பு முடிந்ததும் ஒரு வழியாய் மணமக்கள் இருவரும் சாப்பிட அமர்ந்தனர்.. அதுவரை மகிழ்ச்சியுடன் இருந்தவர்களுக்கு சற்று நேரம் கிடைக்கவும் உதட்டில் உறைந்த புன்னகை துடைக்கப்பட்டு விட்டிருந்தது …

 

அதிரூபன் இறுக்கமாக இருந்தான் என்றால் அவந்திகா ஓரளவு இயல்பாக காணப்பட்டாள் …

 

வலி ஏமாற்றம் இருக்கத்தான் செய்தது …இருந்தும் நடப்பதை பார்த்துக் கொள்ளலாம் என்கிற மனநிலைக்கு வந்துவிட்டாள் போல …

 

அதியமான் அவர்களுடன் அமர்ந்து பேசி சிரித்து கொண்டு  உணவு உண்டார்…

 அவருக்காகவே மணமக்கள் இருவரும் தங்களது உணவை முழுதும் உண்டு முடித்தனர்… 

 

அதிரூபனை தனியே சந்திக்க ரேவந்த் எவ்வளவோ முயன்றான்… ஆனால் முடியவே இல்லை…

 

 அன்று இரவு அப்படியே கழிய காலையில் பிரம்ம முகூர்த்தத்தில் திருமணம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது..

 

 மணமக்கள் இருவரும் பளிச்சென்று தயாராகி இருந்தனர்… 

 

தங்களுடைய பாரம்பரிய நகைகளை தான் திருமணத்திற்கு அணிய வேண்டும் என வேண்டுகோள் விடுத்து இருந்தார்‌ அதியமான்… 

 

அவரது வேண்டுகோளை அன்புடன் ஏற்றுக் கொண்டாள் அவந்திகா …

 

குங்கும நிற பட்டில் மங்களகரமாய் தயாராகி இருந்தாள் அவந்திகா…

 

 அதிரூபன் தலைக்கு தலைப்பாகை கட்டி ஒரு ராஜா போல தயாராகி இருந்தான்… மணமேடை முழுக்க புத்தம் புது மலர்களால் அலங்காரம் செய்து இருந்தனர்.. 

 

காண்போர் கண்களை பறிக்கும் வண்ணம் வண்ணமயமாகவும் அதேசமயம் மனதிற்கு அமைதியையும் தந்தது அலங்காரம் …

 

புரோகிதர் மந்திரங்களை ஓதிட இங்கு மணமகன் அறையில் இருந்த அதிரூபனும் கண்ணாடியில்  தன்னைத்தானே பார்த்தவாரே நின்று இருந்தான்…

 

அன்று அவள் சத்தியம் கேட்டதும் அவனும் மறுக்காது செய்து கொடுத்திருந்தான்.. அவள் என்ன கேட்க போகிறாள் என ஆவலோடு இருந்திட.. ஆனால் பெண்ணவளோ அங்கு தான் அவனுக்கு வைத்தால் செக் ஒன்று…

 

” நம்ம கல்யாணத்துக்கு அப்புறம் உங்க கிட்ட கேட்கிறேன்…”  என்றதும் உள்ளுக்குள் சற்று பீதியை தான் கிளப்பி இருந்தது அதிரூபனுக்கு …

ஏடாகூடமாக எதுவும் கேட்டு வைத்தாள் என்ன செய்வது என்கிற பயம் தான் அவனுக்கு…

 

ஏற்கனவே ஒருவித அழுத்தத்தில் இருந்தவனுக்கு அவந்திகாவிற்கு செய்து கொடுத்த சத்தியம் இன்னும் அழுத்தத்தை தான் தந்து இருந்தது…

 

 அவள் உணர்ச்சிவசப்படும்படி தான் நடந்து கொண்டால் தேவையில்லாமல் அது தனக்குத்தானே வைத்துக் கொள்ளும் ஆப்பாக கூட அமையலும் என்பதால் தான் தற்போது அடக்கி வாசிக்கிறான் அதிரூபன் …

 

ரேவந்திடமும் சொல்லி விட்டிருந்தான்.. சிறிது காலம் நமக்குள் எதுவும் வேண்டாம் என்று…

 

 அதைக் கேட்டு அதிர்ந்து போன ரேவந்த் என்ன கீதென்று விசாரித்திட… அதிரூபனும்,

 

” அவ ரொம்ப எமோஷனல் ஆகுறாடா கொஞ்சம் விட்டு பிடிப்போம் ..”‌என்றதும் அலட்சியமாக அவனை பார்த்த ரேவந்த்,

 

“நீ அவளை ஏதோ பெரிய ரேஜ்க்கு பார்க்குற…அந்த அளவுக்குலாம் அவளுக்கு சீன்  இல்ல ரூப்….உன்னை கல்யாணம் பண்ண அப்பறம் எப்படியும் அவ நமக்கு அடங்கி தான் ஆகனும்…” என அவளை இன்னும் மட்டமாகவே எண்ணி கூறி வைத்தான் ரேவந்த்.…

“சரிடா…அது அப்போ பார்த்துக்கலாம்…இப்ப நான் சொல்ற‌ மாதிரி இருப்போம்..” என  முடித்துக் கொண்டான் அதிரூபன்…

 

 ரேவந்தும் தன் காதலன் தன் கையை விட்டு சென்றிட மாட்டான் என்கிற நம்பிக்கையில் அதிரூபன் கூறியதற்கு சரியென கூறியிருந்தான்… 

 

மணமகன் அழைப்பதாக கூறவும், அவனது அறைக்கு வந்திருந்தார் அதியமான்..

தந்தையை கண்டதும் முகம் கனிந்தது அதிரூபனுக்கு… அவனது இரு பக்க தோள்களை கெட்டியாக பிடித்துக் கொண்ட அதியமான் ,

 

“அப்படியே ராஜா மாதிரி இருக்க அதி..”  என்றதும் மென்மையாய் சிரித்துக்கொண்டான் அதிரூபன்…

 

“வாழ்க்கையில எல்லாமே உனக்கு கிடைச்சிருக்கு.. அம்மா பாசத்தை தவிர ..! உனக்கு வரப்போற பொண்டாட்டியை நல்லா பார்த்துக்கோ அவ உனக்கு எல்லாமுமா இருப்பா..”  என நம்பிக்கை வார்த்தைகள் அளித்தவரை ஆழ்ந்து பார்த்த அதிரூபன் பின் உதடு பிரிய சிரித்து,

 

” கண்டிப்பாப்பா..”  என்றதும் அவனை இருகணைத்துக் கொண்டார் அதியமான்..

 

 பின் மகனை அழைத்துக்கொண்டு மணமேடைக்கு வந்திட ..பிறகு சர்வ அலங்காரத்துடன் அவந்திகாவும் மணமேடைக்கு வந்து அமர்ந்தாள்…

 

இருவரும் சம்பிரதாயங்களை செய்திட ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்ள கூட இல்லை..

 பிறகு புரோகிதர் நீட்டிய தாலியை அதியமான் கையில் எடுத்து மகனுக்கு  தந்திட.. தந்தையை புன்னகையுடன் பார்த்தவாறு மாங்கல்யத்தை கையில் வாங்கிய அதிரூபன் ஒரு கணம் நிமிர்ந்து தனக்கு எதிரே நின்று இந்த ரேவந்தை பார்த்தான் ‌..

 

என்னதான் தன்னை இயல்பாக காட்டிக் கொண்டாலும்  ரேவந்த்தின் விழிகளில் தெரிந்த வலியை கண்டதும் சுருக் என்று இருந்தது அதிரூபனுக்கு…

 

 ஆழ்ந்த மூச்சு இழுத்து விட்டவன் பின் தாலியை தனக்கு அருகே இருப்பவளின் கழுத்தருகே எடுத்துச் சென்ற கணம் அவந்திகாவும் விழிகளை மட்டும் உயர்த்தி அதிரூபனை பார்த்தாள்…

 

 இருவரது பார்வைகளும் ஒன்றோடு ஒன்று பிணைந்து கொள்ள இருவரும் என்ன நினைக்கிறார்கள் என்பது தெரியவில்லை…

 

 அவளது விழிகளை பார்த்தவாறே பெண்ணவளின் கழுத்தில் மூன்று முடிச்சிட்டு தன்னவள் ஆக்கிக் கொண்டான் அதிரூபன்…

 

திருமணம் கோலாகலமாக முடிந்தது…மணமக்களை அழைத்துக் கொண்டு தங்களது வீட்டிற்கு சென்றார் அதியமான்…

 

முதலில் பூஜை அறையில் விளக்கேற்றி மனதார கடவுளை வணங்கினாள் அவந்திகா…பிறகு மணமக்களுக்கு பாலும் பழமும் தந்தனர்…சின்ன சின்ன விளையாட்டுகள் அங்கு அரங்கேறிட எதையும் முகம் சுழிக்காது செய்தனர் மணமக்கள் இருவரும்…

 

பின்னர் சிறிது நேர ஓய்விற்கு பிறகு அவந்திகாவை முதல் இரவிற்காக தயார் செய்தனர் உறவுக்கார பெண்கள்…

கண்ணாடியில் தன்னையே பார்த்தவாறு அமர்ந்து இருந்தவளுக்கு என்ன மனநிலை என்றே தெரியவில்லை..…

 

அவள் கரத்தில் பால் செம்பு தரப்பட அதை எடுத்துக் கொண்டு அதிரூபனின் அன்றைக்கு சென்றாள் அவந்திகா…அங்கு அதிரூபனோ ஒருவித பதற்றத்துடன் அங்கும் இங்கும் நடை பயின்று கொண்டு இருந்தான்…

கிளிக் என்று கதவு திறக்கும் சத்தத்தில் அதிரூபனின் இதயம் ஏகத்துக்கும் துடித்தது…

 

கதவையே பார்த்தவாறு அவன் நின்று இருக்க..உள்ளே வந்த அவந்திகா அவனையே விழி அகலாது பார்த்தவாறு அடி மேல் அடி எடுத்து வைத்தே வந்தவள் பால் செம்பை பட் என்ற சத்தத்துடன் மேசை மீது வைத்தவள் அதிரூபனை நோக்கி அடி மேல் அடி எடுத்து வைத்து நெருங்கி வந்தவள் அவனது சட்டையில் கை வைத்து தன்னை நோக்கி இழுத்தாள்…

 

 

படித்து விட்டு கருத்தினை தெரிவிக்கவும் நன்றி 🙏 ❤️ ❤️ 

❤️ Loading reactions...
0 Comments
Oldest
Newest Most Voted
error: Content is protected !!
Scroll to Top