அத்தியாயம் 17

இருவரும் ஆசிரமத்தில் இருந்து விடை பெற்று வெளிவந்தனர்… அனைவரும் தங்களையே கவனிப்பதால் அதிரூபனிடம் எதையும் வெளிப்படையாக கேட்க முடியவில்லை அவந்திகாவால்…

 

அவள் கார் கொண்டு வராததை கவனித்தவன்,

 

” நானே உன்னை டிராப் பண்றேன் வா..”  என்றதும் மறுக்காது ஏறி கொண்டாள்…

 

இருவரும் சில கணம் எதுவும் பேசவில்லை… பெரு மூச்சை விட்ட அதிரூபன் ,

 

“என்கிட்ட ஏதாவது கேட்கணுமா..?” என அவள் முகம் பார்த்தே கணித்து கேட்டு இருந்தான்…

 

  அவனை தலை திருப்பி பார்த்த அவந்திகா அவனது முகத்தை சற்று ஆழ்ந்து பார்த்துவிட்டு ,

 

“நீங்க பண்ண போற பாவத்துக்காக இந்த சின்ன பசங்களுக்கு லஞ்சம் கொடுக்கிறீங்களா அதிரூபன்..??”  என்றவளது கேள்வியில் திகைத்துப் போய் அவளைப் பார்த்த அதிரூபன்,

 

” வாட் ‌….???” என அதிர்ந்தே போய் விட்டிருந்தான்…

 

கார் ஓட்டியவாறு அவளை பல்லை கடித்துப் பார்த்தவன்,

 

” என்ன பேசுறேன்னு யோசிச்சு தான் பேசுறியா..??”  என சீறியவனை நிதானமாக பார்த்தவள்,

 

” நான் யோசிச்சு தான் பேசுறேன்.. பதில் சொல்லுங்க..?? எனக்கு பண்ண போற பாவத்துக்காக தான் நான் வளர்ந்த ஆஷ்ரமத்துல அங்க இருக்குற பசங்க எல்லாருக்கும் லஞ்சம் கொடுத்து பாவத்தை சரி பண்ண பாக்கறீங்களா..??”  எனக் கேட்டவளது கேள்வியில் உண்மையில் அவ்வளவு கோபம் வந்தது அதிரூபனுக்கு…

 

வண்டியை ஆள் அரவமில்லாத இடத்தில் ஓரம் நிற்பாட்டியவன்,

” இங்க பாரு நான் அப்படி எல்லாம் நினைச்சு இந்த பசங்களுக்கு எதையும் கொடுக்கல.. நீ வளர்ந்த ஆசிரமம் அதான் கொடுக்கணும்னு தோணுச்சு..”  என்றதும் இதழ் வளைத்து அவனைப் பார்த்த அவந்திகா,

 

” நீங்க எனக்கா பண்ண போற பாவத்துக்காக நான் வளர்ந்து

ஆசிரமத்துல லஞ்சம் கொடுக்கிறீங்க அப்போ நான் கேட்ட கேள்வி சரி தான்..!”  என்றதும் அவளிடம் பேசி ஜெயிக்க முடியாது என்பதால் ஆயாசமாக தலையை இருக்கையில் சாய்த்துக் கொண்ட அதிரூபன்,

 

” உன் கிட்ட பேசவே முடியாது அவந்திகா..”  என அவளிடம் சரணடைந்து விட்டான்…

 

அவளோ அவனை இகழ்ச்சியாக பார்த்து,

 

“என் வாழ்க்கையை மொத்தமா அழிச்சிட்டீங்களே.!”  என கலங்கிய குரலில் கேட்கவும் பதில் இன்றி அமைதியாகிப் போனான் அதிரூபன் …

 

அவனை தலை திருப்பி நன்றாக பார்த்தவள்,

 

” நான் என்ன பாவம் பண்ணேன் ..??  யாருமே இல்லாம வளர்ந்த எனக்கு கல்யாணம் குழந்தை குடும்பம்னு அவ்வளவு ஆசையா எதிர்பாத்துட்டு இருந்தேன்…

 

ஆனா எதிர்காலம் எல்லாத்தையும் கேள்விக்குறியாக்கிட்டீங்களே..! இப்போ உங்களுக்கு சந்தோஷம் தானே..?_  என்றதும் அதிரூபனுக்கு பேச்சை எழவில்லை…

 

ஏற்கனவே அவளது விடயத்தில் அவனது மனம் குற்ற உணர்வில் தத்தளித்து கொண்டு இருந்தது…

 

இப்போது அவள் நேரடியாக கேள்விகளை கேட்டிடவும் என்ன பதில் கூறி அவளை சமாதானம் செய்வது என தெரியாததால் அமைதியாகவே இருந்தான் …

 

தன் கன்னத்தில் வாழ்ந்த கண்ணீரை அழுந்த துடைத்துக் கொண்ட அவந்திகா,

 

” எனக்குன்னு ஒருத்தன் வருவான்.. என்னை புரிஞ்சுப்பான்… என்னை நல்லா பார்த்துப்பான் …எனக்காக என் கூடவே இருப்பான்… நானும் அவனும் சந்தோஷமா ஒரு வாழ்க்கையை வாழ்வோம்.. நிறைய குழந்தைகளை பெத்துக்கணும்.. அவங்க எல்லாரையும் பார்த்து பார்த்து வளர்க்கணும்னு எவ்வளவு ஆசையா இருந்தேன்…

 

ஆனா இது ஒன்னு கூட எனக்கு நிறைவேறாத அளவு நான் என்ன பாவம் பண்ணேன்…???  சொல்லுங்க..??? நீங்க இப்படி இருந்தீங்கன்னா அது உங்களோட தப்பு ..நான் எந்த தப்பும் பண்ணலையே என்னை எதுக்கு உங்க ரெண்டு பேருக்குள்ள இழுத்தீங்க..??”  என வலி மிகக் குரலில் அவள் கேட்டதும் ஆழ்ந்த மூச்சை இழுத்து விட்டு முகம் சுருக்கி அவளை பார்த்த அதிரூபன்,

” எல்லாமே விதி அவந்திகா.. நான் எப்படி இப்படி மாறினேனோ அதே மாதிரி நீ என்கிட்ட மாட்டணும்னு விதி போல ..” என்றதும் அதை அவளால் ஏற்க முடியவில்லை …

 

“நீங்க பண்ண தப்புக்கு விதி மேல பழி போடாதீங்க ரூபன்…” எனக கத்தியவளை நிதானமாக பார்த்தவன்,

 

” இனி  நாம இதை பத்தி பேசி பிரயோஜனம் இல்லை.. கல்யாணமே நடக்க போகுது இப்ப இந்த பேச்சு தேவையா‌.???

இங்க பாரு எனக்கு உன் நிலைமை புரியுது.. என்னால உனக்கு நல்ல ஹஸ்பண்டா இருக்க முடியாது தான் …

 

ஆனால் உன்னை நல்லா பார்த்துப்பேன்… நான் எவ்வளவு சம்பாதிக்கிறேனோ அதுல முழுக்க முழுக்க உனக்கும் சம உரிமை இருக்கு …

 

வாழ்க்கையை நீ என்ஜாய் பண்ணலாம்..”  என்றதும் அவனை துச்சமாய் பார்த்த அவந்திகா ,

 

“வாழ்க்கை முழுக்க பணம் மட்டுமே இருந்த போதுமா..??”  என  அதிரடியாக  கேள்வி கேட்டதும் நெற்றியை நீவிய படி ஜன்னலை பார்த்தவாறு தன் பார்வையை திருப்பிக் கொண்டான் …

“என்னால முடியல… நான் எதுக்கு இப்படி ஒரு வாழ்க்கை வாழனும்..??? நான் என்ன பாவம் பண்ணேன்..??  என்ன தப்பு பண்ணேன்.??..

விவரம் தெரிஞ்சதுல இருந்து நான் யாருக்கும் எந்த தப்பும் செஞ்சதில்லை.. நான் உண்டு என் வேலை உண்டுன்னு இருக்கிறவ… எனக்கு ஏன் இப்படிப்பட்ட ஒரு வாழ்க்கை அமையனும் ..??” என அவனைப் பார்த்து கிட்டத்தட்ட கத்தியை விட்டுவிட்டாள்…

 

அவளின்மனநிலை அவனுக்கு புரிந்ததால் அமைதியாகவே பல்லை கடித்துக்கொண்டு அமர்ந்திருந்தான் அதிரூபன்..

 

மேலும் தொடர்ந்த அவந்திகாவும் ,

 

“எனக்கு  இந்த கல்யாணம் வேண்டாம் அதிரூபன்”

என இறுதியாக கூறிய வார்த்தையில் அதுவரை சிலை போல அமர்ந்து இருந்தவனுக்கு அப்போது தான் உயிர் வந்தது போல திடுக்கிட்டு அவளை திரும்பிப் பார்த்தான். …

“வாழ்நாள் முழுக்க நான் நடப்பிணமா வாழறதுக்கு நான் நிஜமாவே பிணமா ஆகிடுறேன்…” என கூறியதும் அவளை சற்று பதற்றத்துடன் பார்த்தவன்,

 

” எதுக்கு நீ இது மாதிரி பேசிக்கிட்டு இருக்க..??  இங்க பாரு நீ ஆசைப்படாத வாழ்க்கை உன் கால் அடியில் கிடக்குது அவந்திகா.. அதை நீ மிஸ் பண்ண போறியா..??

 

நீ வாழ்நாள்ள எவ்வளவு சம்பாதித்தாலும் எட்டவே முடியாத உயரத்துக்கு உன்னை கொண்டு போக போறேன்.. இதெல்லாம் உனக்கு வேண்டாமா..??” என ஆசை வார்த்தைகளை கூறி அவளை அமைதிப்படுத்த முயன்றான்…

 

ஆனால் தலையை இடவலமாக அசைத்து தனது மறுப்பை தெரிவித்த அவந்திகா,

 

” எனக்கு இது எதுவும் வேண்டாம் அதிரூபன்… உணர்ச்சிகள் உணர்வுகள்  எதுவும் இல்லாம நான் ஏன் வாழனும் ..??? அப்படி என்றால் வாழ முடியாது..”  என்றதும் இழுத்து பிடிக்கப்பட்ட பொறுமையுடன் அவளை பார்த்தவன் ,

 

“சரி வேற என்ன வேணும்..??”  நிதானமாக அவனை பார்த்தவள்,

 

“ நான் என்ன கேட்டாலும் தருவீங்களா ..??”

 

என அழுத்தமாய் கேட்டவளது கேள்வியில் உள்ளுக்குள் துணுக்குற்றாலும் முகத்தில் எதையும் காட்டிக் கொள்ளாதவன்,

 

” என் கூட கல்யாணம் கண்டிப்பா நடந்தே ஆகணும்.. கல்யாணத்துக்கு அப்புறம் விவாகரத்து வேணும்னு கேட்கவே கூடாது..

 

இதைத் தவிர நீ எது கேட்டாலும் உனக்கு நான் பண்ணி தரேன்..”  என்றதும் அவன் முன்பு தனது கரத்தை நீட்டினாள்..

 

” சரி…உங்க அப்பா மேல சத்தியம் பண்ணி சொல்லுங்க..”  என்றதும் திருமணத்தை நிறுத்தப் போவதில்லை தன்னிடம் விவாகரத்தும் கேட்க போவதில்லை வேறு என்ன பெரியதாக இவள் கேட்டுவிட போகிறாள் என அலட்சியமாக எண்ணியவன் தனது வலக்கரத்தை அவளது கரத்தின் மீது அழுந்த பதித்து,

 

” எங்க அப்பா மேல உயிரையே வச்சிருக்கேன்.. அவர் ஒருத்தருக்காக தான் இந்த அளவுக்கு கீழ் இறங்கி உன்கிட்ட நடந்துக்கிட்டேன்… அவர் மேல சத்தியமா சொல்றேன் என்ன கேட்டாலும் நான் தரேன்..”  என வாக்களித்தவனை இப்பொழுது குரூரமாக பார்த்து வைத்தாள் அவந்திகா …

அப்படி இப்படி என நாட்கள் சென்று ஒருவழியாக  திருமண நாளும் வந்தது…

 

படித்து விட்டு கருத்தினை தெரிவிக்கவும் நன்றி 🙏 🙏 🙏 

❤️ Loading reactions...
1 Comment
Oldest
Newest Most Voted
error: Content is protected !!
Scroll to Top