அத்தியாயம் 2

“மதி நர்மதா கான்டாக்ட் நம்பர் உனக்கு வாட்ஸ் அப் பண்ணி இருக்கேன் ஏற்கனவே நர்மதா போட்டோ உன்கிட்ட இருக்குல பார்த்து  சேஃபா இரு”என்றார் திவ்யா அஷ்வத்தின் தாய்.

“ஆன்டி நீங்களும் அங்கேயே வந்துடுங்களேன்” 

திவ்யா நடத்தும் Constructions கம்பெனி தற்போது மும்பையின் மிகப்பெரிய Residential Township Project-ஐ கட்டிக்கொண்டு இருந்தது.

நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள்… Project Engineers… Site Managers… Clients…

தினமும் அவளது ஒரு முடிவுக்காக காத்திருந்தார்கள்.

அனைத்தையும் ஒரே நாளில் விட்டுவிட்டு சென்னை கிளம்ப முடியாது.

கம்பெனியின் Project Director-க்கு பொறுப்புகளை ஒப்படைத்து… வங்கிக் கணக்குகள்… ஒப்பந்தங்கள்… Site Inspection… Legal Documents…

அனைத்தையும் சரிபார்த்த பிறகே திவ்யா அஷ்வத்தால் மும்பையை விட்டு கிளம்ப முடியும்.

“இன்னும் ஆறு மாதம் பொறுடா மதி… எல்லா Project-யும் Hand Over பண்ணிட்டு நாங்களும் சென்னை வந்துடறேன் ”

“மாம் அதுவரை  மதி நம்ம கூடவே இருக்கட்டுமே இப்ப ஏன் அவளை அனுப்பனும் பாவம் அவ தனியா போய் என்ன பண்ணுவா” என்று அஸ்வத் தோழிக்காக பேச

“அவ அப்பா கூட இருப்பது தான்டா அவளுக்கு பாதுகாப்பு  எந்த உரிமைல  நம்ம கூட இருப்பா. ..நாளைக்கே அந்த ராக்கேஷ் என் அத்தை பொண்ணை அனுப்புங்கன்னு வந்து நிப்பான் அவ அப்பா கூட இருந்தா யாராலயும் ஒன்னும் பண்ண முடியாது ஒரு 6 மாதம் தான் நாம அங்க போய்ட்டா அப்புறம் மதியை நாமளே பார்த்துகலாம்”

 

“மதி டார்லிங் அதான் நீ உன் அப்பா கூட இருக்க போறே ஹேப்பி தானே உனக்கு அங்க போய் கரெக்ட் டைம்க்கு சாப்பிடு தினமும் கால் பண்ணு தனியா எங்கேயும் போய்டாத என்ன”என்று பொறுப்பான நண்பனாக பேசினான் அஷ்வத்.

“ஓகே டா நீயும் ஆண்டி டிஸ்டர்ப் பண்ணாம ஒழுங்கா இரு வீட்டிலே இரு ப்ரெண்ட் பார்ட்டினு எங்காயவது சுத்த போய்டாத அப்புறம் அந்த ராக்கேஷ் கிட்ட எந்த வம்பும் வச்சுகாதடா”

“உத்தரவு மகாராணி” என ஏர்போர்ட் என்றும் பாராமல்  கையை மடக்கி குனியவும் 

“போடா அராத்து” அவன் தோள்பட்டையில் செல்லமாக  அடியை போட்டு திவ்யாவிடம் திரும்பினாள்.

 

“ஆன்டி உங்களை ரொம்பவே மிஸ் பண்ணுவேன் நீங்க மட்டும் இல்லேன்னா இந்நேரம் நான் என்ன ஆகி இருப்பேனோ தெரியாது”என அணைத்து கொண்டு அழுதவளை

“அதான் எல்லா தொல்லையும் உன்னை விட்டு விலகிருச்சே எதுக்கும் நீ அழ கூடாது  என்னமோ தாய் வீட்ல இருந்து புகுந்த வீட்டுக்கு போற பொண்ணு மாதிரி அழுகுற நர்மதா உன்னைய நல்லா பார்த்துப்பா நீ எதுக்கும் கவலை படாத”என அவள் கண்ணீரை துடைத்து விட்டாள்.

“தெரியும் ஆன்டி இல்லைன்னா என்னைய வர சொல்லி இருப்பாஙகளா நான் ஒரு வாரம் இருந்துட்டு அங்க பக்கத்திலே எதாவது வீடு தனியா வாடகைக்கு எடுத்துட்டு போயிடறேன் ”

“ஏன் மதி  நீ தனியா இருப்பது சேஃப் இல்ல”என்றார் அக்கறையாக

“அப்பா அம்மாவால ரொம்பவே கஸ்டபட்டு இருக்கார் இப்ப அவர் பேமிலியோட நிம்மதியாக இருக்கார் அது  என்னால கேட  வேண்டாம் அப்பா தம்பிங்களோட ஒரு வாரம் இருந்துட்டு கிளம்பிடுவேன்” என கசப்பான புன்னகையுன் கூறி அவர்களிடம் விடைபெற்று  கிளம்பினாள்.

“பாஸ் அந்த மதி சென்னைல அவ அப்பாவை பார்க்க போறா போல” என ராக்கேஷின் ஆள் மதுவை பின் தொடர்ந்து வந்து ராக்கேஷிடம் தகவலை சொன்னான்.

“நீ என்ன செய்ற சென்னையில் இருக்கும் உன் ஆளுங்களுக்கு தகவல் அனுப்பி அவ சென்னைல இறங்கியதும் ஃபாலோ பண்ணி   எங்கே தங்குறான்னு பார்க்க சொல்லு” என்று போனை அணைத்தவன், 

மதி, உன் அப்பா கிட்ட போனா எல்லாம் முடிஞ்சதுன்னு நினைக்கிறியா… இனிமேதான் ஆட்டமே ஆரம்பம்.. அங்க உனக்குத் துணையா அந்த அஷ்வத் கிடையாது. உன் அப்பாவே உன்னை வெறுக்கும்படி பண்ணிட்டா, அப்புறம் நீயா  என்கிட்ட வந்துடுவ..என்று கையில் இருந்த சிகரெட்டை மதியின் புகைப்படத்தின் மீது வைத்து அணைத்தான்…. 

          ‌        **************

“அத்தை  அந்த பொண்ணு என்ன குழந்தையா அவளுக்கு வர வழி தெரியாதா என்ன..நீங்க கண்டிப்பா போயே ஆகனுமா” என்று நர்மதாவை கடுப்பேற்றி கொண்டு இருந்தான் ருத்ரன்

“அவளுக்கு இந்த ஊர் புதுசு எப்படி அவளுக்கு வழி தெரியும் நம்மள நம்பி வர பெண்ணை நாம தான பத்திரமா பார்த்துகனும்”.

“அது சரி இவ்வளவு நாள் தன்னை பத்திரமா பார்த்துகாம தான் மும்பைல வளர்ந்தாங்களோ” என நக்கலாக  ருத்ரன் கேட்க

“ப்ச்  ருத்ரா நீ வீட்டுக்கு போ நான் தான் நேற்றே கால் பண்ணி சொல்லிட்டேனே என்னால வர முடியாதுன்னு இப்ப கூட்டிட்டு போக வந்து இருக்கேன்னு வாங்கன்னு சொன்னா என்ன அர்த்தம்”

நீங்க ஏர்போர்ட்டுக்கு போறதும் அந்த பொண்ணு இங்கு வர்றது பிடிகலைன்னு அர்த்தம் என முனுமுனத்தான்…

வெண்மதி வருவதே அவனுக்கு பிடிக்கவில்லை இதில் அவளுகாக அத்தை வராமல் இருப்பது தெரிந்து கையோட கூட்டி செல்ல வந்து இருந்தான்.

“சரி  வருண் ராகுலையாவது கூட்டிட்டு போறேன்னே அவங்களை மட்டும் அனுப்புங்க”

“ப்ச்  சொல்லிட்டே இருக்கேன் நாங்க அடுத்த வாரம் வர்றோம்” நர்மதா சொல்ல

“ம்மா  நாங்க மாமாகூட போறோம்” என வந்து நின்றான் 10 வயதான ராகுல்.

அதற்குள் சேகர் வரவும் “நர்மதா கிளம்பியாச்சா என்றபடி வந்தவர் ருத்ராவை பார்த்து வா ருத்ரா அத்தையை கூட்டிட்டு போக வந்தியா”என்று அவனை வரவேற்றார்

“ஆமா மாமா ஆனா அத்தை தான் வர மாட்டேங்கிறாங்க”  என்றவனை முறைத்த நர்மதா

“இன்று மதி வர்றா  அதுக்கு தானே நீங்களும் கிளம்பி இருக்கீங்க வாங்க போகலாம் ருத்ரா நீயும் வர்றியா” என்று அவனையும் அழைத்தார்

 

“நர்மதா  அவள் இங்க தான இருக்க போறா அதுக்காக நீ ஏன் போகாம இருக்கனும் நீ வருவேன்னு அத்தை எதிர்பார்த்து இருப்பாங்க நீ வேணா ருத்ராகூட போ நான் டிரைவரை  அனுப்பறேன் மதி வந்துருவா “என்று சேகர் கூறியதை கேட்ட ருத்ரனுக்கே ஆச்சரியமாக இருந்தது வருவது இவர் மகள் தானே என்று யோசித்தவன் அவளை துரத்தறது ரொம்ப ஈஸி போலயே என்று தான் நினைத்தான்.

 

“வேணும்னா நீங்க உங்க மாமியார் வீட்டுக்கு போய் விருந்து சாப்பிட்டு வாங்க நான் வரலை வருனும் ராகுலும் வர மாட்டாங்க நான் தானே மதியை வர சொன்னேன் நானே அவளை போய் கூட்டிட்டு வர்றேன்” என டிரைவரை அனுப்புகிறேன் என சொன்னதில் கோபத்தில் கணவனை முறைத்தபடி பேசினார்

“அப்பா ப்ளீஸ் நான் மாமா கூட போயிட்டு ஈவ்னிங் வந்துடறேன்” என ராகுல் தந்தையிடம் கெஞ்சினான் 

“நர்மதா பசங்க போகட்டும் விடு ரூத்ரா நீ பசங்கள கூட்டிட்டு போ” என்றதும் ருத்ரனும் வெற்றி சிரிப்போடு நாம ஒன்னும் பண்ண வேண்டியது இல்ல போலயே  என்று கிளம்புகையில்

“அத்தை இந்த வருஷம்  சிறந்த சித்தி அவார்ட் கொடுக்கறாங்களாம் உங்க பெயரை ரெக்கமண்ட் பண்ணவா” என்றவனை

“சொந்த அண்ணன் பையனாசேன்னு பார்கிறேன் பேசாம போயிடு ” என்று திட்டினார்

                    ******************

 

ஏர்போர்ட்டில் தன் தந்தையை ஆவலுடன் எதிர் பார்த்து காத்து கொண்டு இருந்தாள் வெண்மதி தன்னை காண தன் தந்தை காத்திருப்பார் தன்னை பார்த்தும் மகிழ்ச்சி அடைவாரா எப்படி பேசுவார் என்ன ரியாக்ட் செய்வார் என்றெல்லாம் எண்ணி கொண்டு வந்தாள்.

ஆனால் தனக்காக யாருமே வந்திருக்க வில்லையேன பார்த்தவளுக்கு முதல் நாளே ஏமாற்றம் தான் கிடைத்தது….ஆனால் சேகர் தாமதமாகவே கிளம்பி வந்ததால் சரியான நேரத்திற்கு வர முடியவில்லை.

 

போனில் நர்மதாவிற்கு அழைக்கலாமா வேண்டாமா என பலத்த தயக்கத்தோடு போனை பார்த்து கொண்டு இருந்தால்.

“ஹாய்” என்ற குரலில் நிமிர்ந்து பார்த்தால் 

“என்னச்சு யாரும் பிக்கப் பண்ண வரலயா”

திரும்ப குனிந்து நர்மதா எண்ணிற்கு அழைத்தாள்

“எப்படி தான் மனசு வருதோ” வழிந்தான் ஒரு வழிசல் பார்ட்டி

“இப்படி ஒரு  ப்யூட்டி க்யூனை  வெயிட் பண்ண வைக்கலாமா பாய் ப்ரெண்டோட சண்டையா” அவன் பேச்சை வளர்த்து கொண்டே போக அங்கு நிற்க பிடிக்காமல் தன் ட்ராலியை தள்ளி கொண்டே போனில் நர்மதா எண்ணிற்கு அழைத்தபடி  நடந்தாள்.

“நான் என் பேமிலிய சேன்ட் ஆப் பண்ண வந்தேன் பார்த்த நீங்க தனியா வெயிட் பண்றதை பார்த்தேன் அதான் வாங்களேன்  நானே உங்களை ட்ராப் பண்றேன்”

“நோ தேங்க்ஸ்”

“வாவ் வாட் எ வாய்ஸ் i am  mesmerizing ” என வலிந்து கொண்டு இருந்தான் அந்த வழிசல் பார்ட்டி

“மதி  சாரிம்மா ட்ராஃபிக் அதான் லேட் ஆகிருச்சு”.என்றபடி வந்தாள் நர்மதா.

“சித்தி” என அழைத்து  அவள் பின்னே தேடிய அவள் விழிகள் ஏமாற்றதுடன்

“அப்பா வரலையா” என சோர்ந்த குரலில் கேட்டாள்.

“கார்ல வெயிட் பண்றார் வா” என அவள் ட்ராலியை  தள்ளி கொண்டு நகர்ந்தவளை

“ப்யூட்டி க்யூன் உன் நம்பர் கிடைக்குமா”

“யார் இவன் எதாவது வம்பு பண்ணானா யார்ப்பா நீ தனியா இருக்க பொண்ணு கிட்ட வம்பு பண்றதுக்குனே வருவியே” என கத்த தொடங்கவும் அங்கிருந்து ஓடி விட்டான் அந்த வலிசல் பார்ட்டி.

 

வெண்மதியை பின்தொடர்ந்து வந்த ராக்கேஷின் ஆள் வெண்மதியின் முகவரியை ராக்கேஷிற்கு அனுப்பி இருந்தான்.

 

காரில் பின் இருக்கையில் அமர்ந்தவளை திரும்பியும் பாராமல் வீட்டில் இறக்கி விட்டு சென்ற தந்தை ஏக்கத்துடன் பார்த்தாள்.

 

அட்லீஸ்ட் நல்லா இருக்கியாடாம்மா என தலை வருடி ஒரு கேள்வியை எதிர்பார்த்து இருந்தவளுக்கு ஒரு  பார்வைக்கே அவள் தந்தையிடம் இருந்து அவளுக்கு பஞ்சமாகி போனது.

நர்மதா  இன்முகத்துடேனே பேசினாள். வெண்மதிகான அறையை கீழேயே ஒதுக்கி கொடுத்து இருந்தாள்.

“நீ போய் ஃப்ரஸாகிட்டு வா மதி”

“வீட்ல யாரும் இல்லையா சித்தி வருன் ராகுலுக்கு லீவ் இல்லையா” என குறைந்தபட்சம் தம்பிகளையாவது தூக்கி கொஞ்சி விளையாடலாம் என நினைத்து இருக்க அவள் ஆசையில் தான் மண் அள்ளி போட்டு விட்டானே ருத்ர பிரசாத்.

“அவங்க என் அண்ணா வீட்ல இருக்காங்க சாயந்தரம் வந்துருவாங்க நீ போய் குளிச்சுட்டு வா சாப்பிட்டு தூங்கி எழுந்திரி அதுகுள்ள அவங்களும் வந்துருவாங்க”.

“ஓ சரி” என்று உள்ளே சென்றாள்.

சித்தியை தவிர தான் வந்தது யாருக்கும் பிடிக்கவில்லை என்பது தெளிவாக புரிந்தது ஏமாற்றம் ஒன்றும் புதிதல்ல ஆசையை வளர்த்து கொண்டது நம் தப்பு தான் என  விழிகளில் துளிர்த்து கண்ணீரை துடைத்து விட்டு குளியறைக்குள் புகுந்து கொண்டாள்.

 

வீட்டை சுற்றி காண்பித்தாள் கல்யாண ஆல்பம் குடும்பமாக அவர்கள் எடுத்து கொண்ட புகைபடங்களை எல்லாம் காட்டினாள் நர்மதா.

அதை பார்க்கும் போது உள்ளிருந்து பீறிட்டு கிளம்பும் ஏக்கத்தை அடக்க வழி தெரியாமல்  ஒவ்வொரு போட்டோயும்  ஏக்கத்துடன் பார்த்து கொண்டு இருந்தாள் மதி  

எத்தனை நாள் ஏக்கம் அது சொல்ல போனால் ஏக்கம் என்பதை விட வாழ்நாள் கனவு என்று தான் சொல்ல வேண்டும் 

“மதி நீ நல்லா பரதம் ஆடுவேன்னு திவ்யா சொன்னாங்க  உனக்கு பரதம்னா பிடிக்குமா”

“அப்பாக்கு பிடிக்கும் ”

“அவருக்கு பரதம் பிடிக்குமா ” இது நமக்கு தெரியலையே என்ற ஆச்சர்யத்துடன் கேட்டாள்

“அப்பா என்கிட்ட சின்ன வயதில் சொல்லி இருக்கார் பரதநாட்டியம் அவருக்கு பிடிக்கும்னு அதான் நான் அப்பாகாக  கத்துகிட்டேன்” என தந்தையின் வரவிற்காக வாசலை பார்த்தபடி கூறினாள்.

“மதி உனக்கு வேற என்ன பிடிக்கும்”

“எனக்கா….  பெருசா எதுவும் எதிர்பார்ப்பு இருந்தது இல்லை.அதை விடுங்க உங்க சமையல் சூப்பர் அப்பா எப்ப வருவாங்க” தன்  விருப்பத்திற்கு முக்கியதுவம் கொடுக்காமல் இருப்பவளை பார்க்கையில் ஷிவானி  சின்ன விஷயத்திற்கு கூட அடம்பிடிப்பது நினைவில் வந்து போனது.

“இப்ப வர்ற நேரம் தான் உனக்கு போர் அடித்தா உன் ரூமிற்கு பக்கத்தில் ஒரு அறை இருக்கு பாரு அதை நீ பரதம் ஆடனும்னா யூஸ் பண்ணிக்க ”

அப்போது நர்மதா போன் அழைக்கவும் “ஒரு நிமிஷம் இரு” என போனை எடுத்துபேசினாள்.

“நர்மதா எத்தனை தடவை தான் உன்னை கூப்பிடுவது” என்று கத்தினார் சரோஜா

“ஏம்மா என்ன வெண்மதி கிட்ட பேசிட்டு இருப்தேன்”.

 

“மாப்பிள்ளை எங்கே ”

“அவர் எப்போதும் போல வேலைக்கு கிளம்பிட்டார்”

“கூறு கெட்டவளே அந்த பொண்ணுக்கு கடையில் சாப்பாடு வாங்கி கொடுத்துட்டு இங்கே வர வேண்டியது தானே அவளுக்கு எதுக்கு சேவகம் பண்ணிட்டு இருக்க”

“இல்லை எனக்கு புரியலை மதி அம்மா உயிரோட இருந்தாலாவது நீங்க கவலை படுவதில் நியாயம் இருக்கு அவ அவளோட அப்பாவை பார்க்க வந்து இருக்கா இதனால எனக்கு எந்த தொந்தரவோ சங்கடமோ இல்லை அதனால நீங்க எதையும் போட்டு குழப்பிக்காதிங்க நான் அப்புறம் பேசுறேன்” என போனை வைத்து விட்டு வேலையை பார்க்கலானாள்.

 

நர்மதா  போனில் பேசுவதை கேட்ட வெண்மதி அறைக்கு சென்று தன் லக்கேஜை எடுத்தாள்….. 

 

தொடரும்……

 

 

❤️ Loading reactions...
0 Comments
Oldest
Newest Most Voted
error: Content is protected !!
Scroll to Top