தன் லக்கேஜில் இருந்த தான் வரைந்து வைத்த ஓவியங்களை எடுத்து பார்த்த வெண்மதி அந்த ஓவியங்களையேல்லாம் நெஞ்சில் அணைத்து கொண்டு அப்படியே கட்டிலில் அமர்ந்தாள்
8 வயதில் நடந்த சம்பவமாக இருந்தாலும் நன்றாகவே நினைவு இருந்தது.
அப்போழுது வீட்டில் எந்நேரமும் சண்டையாகவே இருக்கும் ஸ்வேதா தன் பிறந்த வீட்டிற்கு வெண்மதியோடு சென்று விட்டாள்.
அன்னம் தன் அப்பாவை மோசமாக திட்டும் போது கையில் இருந்த ரப்பர் பந்தை எடுத்து பாட்டியின் மீது தூக்கி அடித்து விட்டாள் வெண்மதி.
“அய்யயோ இந்த கொடுமைய நான் எங்கே போய் சொல்லுவேன் என் மகளுகாக பேச வந்த என்னைய அந்த பாவி மகளை ஏவி விட்டு அடிக்கிறானே விளங்குவானா அனாதை பயலுக்கு இவ்வளவு திமிர் இருந்தா எங்களுக்கு எப்படி இருக்கும்”
“என் அப்பாவை திட்டாதிங்க பாட்டி” என்று வெண்மதி எதிர்த்து பேசவும்
“மதி இது என்ன பழக்கம் வயசுல பெரியவங்க அவங்கள அடிக்கலாமா” ஸ்வேதா சகோதரன் தின்று கொண்டு இருந்த மிக்ஸர் பாக்கேட்டுடன் பேசினான்.
“அப்போ ஏன் அப்பாவை திட்டுறீங்க நீங்க அப்பாவை திட்டினா நான் அப்படி தான் செய்வேன்” குழந்தைகள் முன் நாம் எது செய்தாலும் அது குழந்தையின் மனதில் பதியும் என்பது இந்த முட்டாள்களுக்கு தெரியவில்லை.
“உனக்கு திமிர் அதிகமாயிருச்சு” என குழந்தை என்றும் பாராமல் முதுகிலே நன்கு அடித்தாள் அன்னம்.
“அடி இன்னும் 4 அடியை சேர்த்து அடி அப்போவாவது திமிர் குறையட்டும்” என்றான் மிக்ஸர்
8 வயது குழந்தையின் மேனி அடியை தாங்க முடியாமல் வலியை கொடுத்து பயத்தில் அழ ஆரம்பித்தாள் வெண்மதி ஸ்வேதா வீட்டில் இல்லாதது வேறு கூடுதல் வசதியை கொடுத்தது அவர்களுக்கு.
“இங்கே பார் உன் அப்பாகிட்ட சொன்ன அப்புறம் உன் அப்பாவும் அம்மாவுக்கும் சண்டை அதிகமாகும் போய் சொல்றதுனா சொல்லு எனக்கு ஒன்னுமில்லை”
“இ…இல்ல சொல்ல மாட்டேன் அப்பா வேணும்” என மூச்சு விட முடியாமல் தேம்பி அழுதாள்.
“அப்பா வேணும்ல அப்ப வாயை துறக்க கூடாது சரியா” என சுட்டு விரலை காட்டி மிரட்டினாள்
சேகர் மீது இருக்கும் ஆத்திரத்தை எதற்கெடுத்தாலும் வெண்மதி போட்டு அடிப்பாள் அன்னம். தாயிடம் பாட்டி அடிப்பதை சொல்ல நினைத்தாலும் ஸ்வேதா வீட்டில் இருப்பதில்லை அப்பா அம்மா சண்டையில் வீட்டில் நடப்பதை யாரிடம் சொல்வது என தெரியாமல் அழுவாள்.
இருவருக்கும் விவகாரத்து ஆனதும் குழந்தையை கேட்டு வந்தவனிடம் ரூமில் வெண்மதியை கட்டி போட்டு விட்டாள் ஸ்வேதா.
“என் குழந்தைய கொடு நான் பாட்டுக்கு போய்டறேன்”.
“அவ என் பொண்ணு கொடுக்க முடியாது உன்னால ஆனதை பார்த்துக்க”என திமிருடன் ஓங்கி கதவை சாற்றினாள்.
“ஏன்டி ஸ்வேதா அந்த சனியனை துரத்திவிட்டுட்டு உன் வாழ்க்கைய பார்க்க வேண்டியது தானே” என்ற அன்னத்தை
“ம்மா அவ என் குழந்தை சனியன் அது இது பேசுனிங்க அப்புறம் நான் இங்கே இருக்க மாட்டேன்…. அவளை நான் எங்கயும் அனுப்ப மாட்டேன் புரியுதா”
“அது இல்ல நீ ஏன் கஷ்டபடனும்னு தான் சொன்னேன் பரவாயில்லை விடு அவளும் இந்த வீட்ல இருந்துட்டு போகட்டும்”
ஸ்வேதாவை விட்டால் தண்டத்துக்கு இருக்கும் மகன் பேரனுக்கு தன்னுடைய செலவுக்கேல்லாம் யார் பணம் தருவது என ஸ்வேதா இருக்கும் போது எதுவும் பேசமாட்டாள் அன்னம்.வெண்மதியை அடிப்பது எதுவும் தெரியாமல் பார்த்து கொள்வாள்.
குழந்தையை கேட்டு கோர்ட்டில் கேஸ் கொடுத்து இருந்தான் சேகர்.
வெண்மதியிடம் கேட்டாள் கண்டிப்பா அப்பாவிடம் தான் செல்லுவேன் என கூறுவாள் என உறுதியாக நம்பி இருந்தான் சேகர்
ஸ்வேதாவிற்கு வெண்மதியை பற்றி தெரியும் அவ அப்பா கூப்பிட்டால் போய் விடுவாள் என்ன செய்யலாம் என யோசித்தவள் தன் தாயிடம் உதவி கேட்கவும்
“நீ விடு நான் பார்த்துகறேன் நீ போய் உனக்கு வேலை இருந்தாள் பாரு” என்று கூறிவிட்டு ஸ்வேதா சென்றதும் சேலையை இழுத்து சொருகி தன்னை நோக்கி வரும் பாட்டியை பார்த்த வெண்மதி
“அடிக்காதிங்க பாட்டி நீங்க என்ன சொன்னாலும் கேட்கிறேன்” என பயந்து நடுங்கினாள்
“ஆஆஆஆஆ அப்பா அப்பா” என கத்தியவளின் முடியை கொத்தாக தூக்கி
“அடிக்க வந்தா அப்பான்னா கத்துற நீ கண்டிப்பா கோர்ட்ல மாத்தி தான் பேசுவ இரு உன்னைய”என்று கம்பியை எடுத்து காய்ச்சி பிஞ்சு காலிலே சூடு வைத்தது அந்த அரக்கி
“அப்…அப்பா அப்பா கிட்ட போகலை அம்மா கிட்டயே இருக்கிறேன் என தேம்பி தேம்பி அழுது மயங்கி கிடந்தவளை ஸ்வேதா பார்த்து பதறி தான் போனாள்
“என்னம்மா பண்ணி வச்சு இருக்க அய்யோ என் குழந்தை” என்று பதறி காயத்திற்கு மருந்திடவும் தாயை பார்த்தும் பயந்தாள் வெண்மதி
“அ…அ…அம்மா நான் அப்பா கிட்ட போகலை பாட்டிய கிட்ட சொல்லு….சூடு வேணாம் வலிக்குது’ என அனத்தி கொண்டு இருந்தவளை வாரி அணைத்து
“ஒன்னு இல்லை அம்மா இருக்கேன் உன் கூடவே இருக்கேன்” என மகளின் அருகிலே இருந்தாள் அன்று முழுவதும்.
கோர்ட்டில் கேட்ட போது கூட பாட்டி அடிக்கும் சூடுக்கும் பயந்து அப்பாவிடம் செல்ல இஷ்டமில்லை என அழுது கொண்டே கூறினாள்.
சேகர் அழுத அழுகையில் அங்கிருந்தோர் கூட “உன் அப்பா பாவம் பாப்பா அப்பா கூட போய் இரு” சொன்னவர்களின் கையை தட்டி விட்டு பாட்டி திரும்ப சூடு வைத்து விடுவாளோ என்று பயந்து ஓடிவிட்டாள்.
அந்த ஊரிலே இருந்தால் சேகர் மகள் மனதை மாற்றினாலும் மாற்றி விடுவான் என பயந்து தன் குடும்பத்துடன் புது காதலனை திருமணம் செய்து மும்பைக்கு சென்றுவிட்டாள் ஸ்வேதா
சேகர் ஸ்வேதா இருவருக்கும் தோழியாக இருந்தவள் தான் திவ்யா திவ்யா திருமணம் ஆகி மும்பையில் இருந்ததால் வெண்மதி நல்ல நேரமோ திவ்யா கண்ணில் வெண்மதி பட்டாள் இல்லையென்றாள் அவள் வாழ்க்கை எப்போவோ அழிந்து நாசமாகி இருந்து இருக்கும்.
கதவு தட்டும் ஓசையில் நிகழ் உலகிற்கு வந்தாள் வெண்மதி வேகமாக கையில் இருக்கும் ஓவியங்களை பெட்டியில் வைத்து விட்டு கட்டிலுக்கு அடியில் தள்ளி முகத்தை துடைத்து விட்டு கதவை திறந்தாள்.நர்மதா நின்று இருந்தாள்
“நல்ல தூக்கமா வா சாப்பிடலாம் மணி ஆச்சுல வா”
“இதோ வந்தர்றேன் சித்தி” என துப்பட்டாவை எடுக்க செல்ல அறையினுள் வந்த நர்மதா
“என்ன இன்னும் கப்போர்ட்ல துணி எடுத்து வைக்காம இருக்கு ஒரு 5 நிமிஷம் பொறு இதெல்லாம் அடுக்கி வைச்சுடலாம்”என அவள் திறந்து இருந்த லக்கேஜை எடுக்கவும்.
“இல்ல இருக்கட்டும்”
“ஏன் அடுக்கி வைத்தா உனக்கு எடுக்க ஈஸியா இருக்குமே”
“1 வீக் இருக்க போறதுக்கு எதுக்கு அடுக்கனும் அப்புறம் திரும்ப எடுத்து வைக்கனும் அப்படியே இருக்கட்டும் விடுங்க அப்ப தான் கிளம்பறப்ப ஈஸியா இருக்கும்”.
“போக போறியா எங்க போவ ஒரு வாரம் மட்டும் இருக்க தான் இவ்ளோ துணிகளை எடுத்துட்டு வந்தியா” குரலில் அதட்டல் தோனி
“இங்கே பாரு மதி உன்னை இங்கே வர வைத்ததே நீ தனியா இனிமேலும் கஷ்ட பட கூடாதுன்னு தான் உனக்கு ஒரு கல்யாணம் ஆகிற வரை நீ எங்க கூட தான் இருக்கனும் ஏன் உன் தம்பி அப்பா கூட இருக்க உனக்கு ஆசை இல்லையா” என பேசி கொண்டே அவள் உடைமைகளை கப்போர்டில் அடுக்கி முடித்து இருந்தாள்.
“அது சித்தி நான் என்னால எதுக்கு” என பேச திணறியவளை
“நீ ஒன்னும் பேச வேண்டாம் வா வந்து சாப்பிட்டு அஸ்வத்திற்கு கால் பண்ணு நீ தூங்கும் போது எனக்கு கால் பண்ணி உயிரை வாங்கிட்டான்” நர்மதாவின் உரிமையான பேச்சில் அகமகிழ்ந்தாள்.
“ சரிங்க சித்தி” என்று உணவு மேஜையில் வந்து அமர்ந்தவள் எதிரே சேகர் இருப்பதை பார்த்து தன் அப்பாவிடம் உரிமையாக பேச வேகுவாக தயங்கினாள்
தன்னுடன் வரும்படி கேட்ட தந்தையை விட்டு இப்போ எந்த முகத்தை வைத்து பேச உள்ளுக்குள் தயக்கம் பெருந்தடையாக இருந்தது
தந்தை தன்னிடம் காட்டிய ஒதுக்கத்தையும் புறகனிப்பையும் தன்னை முழுவதுமாக வெறுத்து விட்டார் போல என்ற நினைப்பே கசப்பை கொடுத்தது.
சேகர் நர்மதாவிடம் பேசினான்… சாப்பிட்டான் போனில் யாருடனோ அழைத்து பேசினான் திரும்ப சாப்பிட்டான்.தன் மகள் தன்னை பார்ப்பதை தெரிந்தும் கண்டு கொள்ளவில்லை…
அதற்கு மேல் உணவு தொண்டை குழியை விட்டு இறங்கவில்லை தண்ணீரை குடித்து உணவை உள்ளே தள்ளினாள் மதி
நர்மதாவிற்கு தான் இவர் ஏன் இப்படி இருக்கார் என்றானது “உங்களுக்கு தெரியுமா மதி நல்லா பரதம் ஆடுவாளாம் உங்களுக்கு…”
“நர்மதா சாப்பிடும் போது பேசினா எனக்கு பிடிக்காதுன்னு உனக்கு தெரியாதா”
இது எப்போதிலுருந்து என நர்மதா பார்த்தாள்.
அதற்கு மேல் இங்கு இருந்தால் அழுது விடுவோம் என உணவை அள்ளி ஒரே வாயில் திணித்து கை கழுவினாள்.
“மதி இன்னும் கொஞ்சம்” என சொல்ல வந்தவள் பன் போல் உப்பிய அவள் கண்ணத்தை பார்த்து விட்டு தன் கணவனை முறைக்க மட்டும் தான் முடிந்தது.
“ஏன் இப்படி பண்றீங்க மதி உங்க கிட்ட பேச எவ்ளோ ஆசையா வந்தா”
“நான் வர சொல்லலையே என்னை பார்க்க வரலை…. வேறு வழி இல்லாம இங்கே வந்து இருக்கா ”
“அது கூட நான் தானே வர சொன்னேன் அவ ஏதோ…”
“நர்மதா ப்ளீஸ் பழைய விஷயம் எதுவும் என்கிட்ட பேச வேண்டாம் என் பழைய வாழ்க்கைய மறந்து உன்னால தான் நான் இப்போ சந்தோஷமா இருக்கேன் என் பழைய வாழ்க்கைய ஞாபக படுத்துற மாதிரி மதி வந்து இருக்கா ஒரு அப்பாவா இருந்து சீக்கிரமா அவளுக்கு ஒரு கல்யாணத்தை பண்ணி வக்கிறது என் கடமை அதுகாக தான் அமைதியா இருக்கேன்”
வெளியே வந்து நின்றவளிற்கு அஷ்வத்திடம் இருந்து அழைப்பு வந்தது.
“என்ன மதி ஒருவழியா அஷ்வத்னு ஒரு ஜீவன் உன் ஞாபகத்திற்கு வந்தேனா இன்னும் இல்லையா”
“டேய் டயர்ட் அதான் சாரிடா ”
“ஓ டயர்ட்ல என்னை மறந்துட்டீங்க அப்படி தானே ஓகே ஓகே”
“டேய் இதெல்லாம் ஓவர் நான் இங்கே வந்து ஒரு நாள் கூட ஆகலை அதுக்குள்ள உன்கிட்ட பேசலைன்னு ஓவரா பண்ற”
“சரி சொல்லு அங்கே எல்லாம் ஓகேயா”
“அதெல்லாம் ஓகே தான் நீ சொல்லு ஆன்டி என்ன பண்றாங்க” அஷ்வத்திடம் பேச ஆரம்பித்ததில் மனம் கொஞ்சம் அமைதி அடைந்தது.
பேசி கொண்டே தோட்டத்தில் ஒரு ஊஞ்சலை பார்த்தவள் அதில் அமர்ந்து அடி கொண்டே அஷ்வத்திடம் பேசினாள்.
வேகமாக ஆடியதில் பின்னால் ஒரு சுவரில் இடித்தாள் பேச்சு சுவாரஸ்யத்தில் கண்டுகொள்ளாமல் சுவரை இடித்தபடி ஆடிகொண்டே இருக்க சுவருக்கு கோபம் வந்ததோ ஆடி கொண்டு இருந்தவளை பிடித்து கீழே தள்ளியது.
“அப்பா” என கத்தியபடி குப்புற விழுந்தபின் தான் தெரிந்தது அது சுவரல்ல அல்ல ஒருவன் மேல் இடித்து கொண்டு இருந்து இருக்கிறோம்
ருத்ர பிரசாத் ருத்ர மூர்த்தியாக அவளை முறைத்து கொண்டு நின்று இருந்தான்.
தொடரும்..…