அத்தியாயம் 20

தன்னுடைய ஆடைகளை எல்லாம் அலமாரியில் அடிக்கி வைத்து கொண்டு இருந்தாள் அவந்திகா…

அவள் அரவத்தை பார்த்ததும் அறைக்கு உள்ளே வந்த அதிரூபன் அவள் ஆடைகளை அலமாரியில் அடுக்கி கொண்டிருப்பதை கண்டுவிட்டு அமைதியாக சென்று இருக்கலாம்…

 

சும்மா போவதை வேட்டியில் போட்டு கொண்ட கதையாகி தான் போனது…

 

” என்னுடைய செல்ஃப்லையும் இடம் இருக்கும் நீ அதுல கூட வெச்சிக்கோ..”  என ஏதோ பெருந்தன்மையாக கூறுவது போல கூறியதும் அவனை தலை திருப்பி நிதானமாக பார்த்தவள்,

 

“உங்களை தொட்டாலே பாவம்னு சொல்றேன்.. இதுல உங்க ட்ரெஸ் இருக்கிற இடத்துல  என் ட்ரஸை நான் வைக்கணுமா.??.. ம்ஹூம் எனக்கு தேவையே இல்லை..”  என்றதும் முகத்தில் அரை வாங்கிய உணர்வு அதிரூபனுக்கு…

 

வேகமாக அவளுக்கு பின்னாடி சென்று நின்றவன்,

 

” என்னடி ஓவரா தான் பேசிட்டு இருக்க..?  எனக்கு என்ன தொழு நோயா இருக்கு..தொடறதுக்கே அருவருப்புனு  சொல்லிட்டு இருக்க..??”  என எகிறினான்…

 

இப்போது அவனை நன்றாக   பார்த்து ,

 

“தொழுநோய் இருக்கிறவங்களை கூட ட்ரீட்மென்ட் பண்றதுக்கு தொட தான் செய்வாங்க …அவங்க உடம்பு வெளியில் அப்படி இருந்தாலும் அவங்க உள்ளுக்குள்ள நல்ல மனசோட தான் இருப்பாங்க…

தனக்கு வந்த இந்த நோய் வேற‌ யாருக்கும் வர கூடாதுனு வேண்டிக்க கூட செய்வாங்க…

ஆனா நீங்க..?? வெளிய நல்லா இருந்தாலும் மனசு பூரா அழுக்கமும் அசிங்கமுமா தான் சேர்ந்து கிடக்குது… அதான் உங்க சுயநலத்துக்காக என் வாழ்க்கையை நாசம் பண்ணிட்டீங்க ..!” என அவனுக்கு மேல் அவள் எகிறி இருந்தாள்..

 

வார்த்தைகளை அம்பாய் பிரயோகப்படுத்தி மீண்டும் மீண்டும் அவனை குற்ற உணர்ச்சியில் தள்ளிக்கொண்டே இருந்தாள் அவந்திகா.. 

 

அவளது அந்த வார்த்தைகளை கேட்டதும் ஆத்திரம் தலைக்கேறியது அதிரூபனுக்கு…

 

தலையை அழுந்த கோதி கொண்டு அவளை பார்த்தவன்,

 

” என்னை இப்படி கஷ்டப்படுத்தி பார்க்கறதுல உனக்கு என்னடி சந்தோஷம்..??”  என சற்று ஆதக்கமாக கேட்டு வைத்தான்…

அவன் அவளுக்கு செய்ததை மறந்து விட்டான் போல…

 

அவனை இப்போது தலை சாய்த்து நக்கலாக  பார்த்தவள்,

 

” உங்களுக்கு தான் என்னை பிடிக்காதே அப்போ நான் என்ன பேசினாலும் உங்களுக்கு ஏன் கஷ்டமாகுது ..??” என கேட்ட நொடி பேச்சற்று போனான் அதிரூபன்…

எப்படி சென்றாலும் அவனை திருப்பித் திருப்பி அடிப்பவளிடம் என்ன பேசிவிட முடியும் அவனால்.. 

இருவரும் தயாராகி பார்ட்டிக்கு கிளம்பலாயினர் …

அதியமானும் தயாராகி வந்தார்…

 

அத்தனை வயதிலும் அவர் கம்பீரமாக இருப்பதை எண்ணி சற்று பிரம்மித்து தான் போனாள் அவந்திகா…

அவருக்கு அருகே நின்றிருந்த அதிரூபனை கண்டுவிட்டு அதியமானின் இள வயது தோற்றம் போலவே அவனும் இருப்பதை கண்டவள் பின்பு பெருமூச்சுடன் காரினை நோக்கி சென்றாள்…

 

அதிரூபனும் அவந்திகாவும் ஒரு காரில் வந்திட.. அதியமான் அவரது காரில் வந்தார் ..

 

இது பார்ட்டி என்பதால் சற்று மாடர்னான உடையை தான் அணிந்திருந்தாள் அவந்திகா… அவள் அணிந்து இருந்த ஆடையில் பின்புறம் அவளது பாதி முதுகு தெரிந்தது.. முன்புறமோ கழுத்து சற்று கீழ் இறங்கி இருந்தது..  தரையில் புரண்டு உடலை ஒட்டிய  நீண்ட கவுன் அது… நல்ல அடர் நீலநிற உடை…

 

அவளது உடைக்கேற்பதான் அதிரூபனும் கருநீல நிற கோட் சூட்டினை தான் அணிந்து இருந்தான்…

 

காரில் இருந்து கீழ் இறங்கி இருவரும் உள்ளே நுழைந்திட.. சுற்றி இருந்தவர்கள் ஆரவாரத்துடன் அவர்களை வரவேற்றனர் …

 

அனைவரும் அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்திட.. அப்போது மைக்கை எடுத்த அதியமான்,

 

” குட் ஈவினிங் லேடீஸ் அண்ட் ஜெண்டில்மேன்… நான் இன்வைட் பண்ணதும் எல்லாரும் வந்ததுக்கு ரொம்ப நன்றி….உங்களோட டென்ஷன் ஸ்ட்ரெஸ் எல்லாத்தையும் ஓரம் கட்டி  வெச்சிட்டு இப்ப நீங்க எல்லாரும் இந்த பார்ட்டியை உங்க இஷ்டம் போல என்ஜாய் பண்ணலாம்…. ” என சற்று குரல் எழுப்பி கூறிட அனைவரும் கைத்தட்டி ஆரவாரப்படுத்தினர் …

அதன் பின்னர் மெல்லிசை ஒலிக்கப்பட பலர் தங்கள் இணையுடன் கைப்பற்றி நடனம் ஆடினர்… அவந்திகாவும் அதிரூபனும் தவிர்க்க முடியாது என்பதால் அவர்களும் அவர்களோடு கலந்து நடனமாடினர்…

 

அவளது இடையை பற்றி கொண்டு அவன் நடனமாடிட.‌ ஏனோ அந்த அருகாமை அவந்திகாவிற்கும் சரி, அதிரூபனுக்கும் சரி அவஸ்தையாகவே இருந்தது… 

 

குரங்கு வேடம் போட்டால் குரங்கு போல் தானே நடந்து கொள்ள வேண்டும் என தன் மனதிற்குள் சொல்லிக் கொண்ட அவந்திகா போலியான சிரிப்புடன் அதிரூபனுடன் நடனம் ஆடினாள்…

 

பலர் மது அடங்கிய கோப்பையை கையில் வைத்து கொண்டு அவர்களைப் பார்த்து குரல் எழுப்பிட.. இசை சற்று வேகமான இசை ஒலிக்கப்படவும் சுற்றி இருந்தவர்கள் அதிரூபனையும் அவந்திகாவையும் தான் பார்த்து கத்தி ஊக்கப்படுத்திக் கொண்டே இருந்தனர்… 

எப்போதெடா முடியும் என்கிற மனநிலை தான் அவந்திக்காவிற்கு..

 

ஒரு நிலைக்கு மேல் அனைவரும் அவர்களைப் பார்த்து,

 

“ரூபன் கிஸ் ஹெர்…” 

 

“ரூபன் கிஸ் ஹெர்…” என குரல் எழுப்பவும் அவளை கரத்தால் ஒரு சுற்று சுற்றியவன் சட்டென அவளை பிடித்து இழுத்து  கீழே சாய்த்திட ..அவனது கைவளைவில் வாழைத்தண்டு போல ஒடிந்து இருந்தவள் அவனது கழுத்தை கட்டிக்கொண்டு தான் சற்று அதிர்வுடன்  அவனை பார்த்திருந்தாள்…

 

அந்த நடன அசைவை பார்த்து விட்டு இன்னும் ,

 

“கிஸ் ஹெர்…”

 

” கிஸ் ஹெர்…” என கூச்சல் எழுப்பிட அதிரூபன் கண்களை இறுக மூடி திறந்தவன் சற்றும் யோசிக்காது அவளது இதழோடு இதழ் ஒற்றி விட்டிருந்தான். …

 

அதில் அனைவரும் கரகோஷமிட பிறகு மெதுவாய் அவளை விலக்கியதும் அவந்திகா பேய் அறைந்தது போல மூச்சு வாங்கியவாறு மெல்ல அவனை விட்டு விலகி நின்றாள்…

 

அதிரூபனும் மூச்சு வாங்கியவாறு அவளை பார்த்தவன் சட்டென அவளது தோளில் கை போட்டு அழுத்தம் தந்திட …அதில் சுயம் வந்த அவந்திகா அனைவரையும் பார்த்து மெல்லிய சிரிப்பு ஒன்றை தந்து விட்டு அங்கிருந்து அகன்று விட்டிருந்தாள்…

 

செல்பவளது முதுகை ஒரு கணம் பார்த்த அதிரூபன் பின்பு தன் தந்தைக்கு அருகே சென்றிட…அதியமானின் நீண்ட கால நண்பர்  மது அடங்கிய கோப்பையை  அவனது கையில் தந்து ,

 

“ரொம்ப நல்ல டான்ஸ் பண்ணீங்க ரூபன்..”  என்றதும் மென்மையாய் சிரித்துக்கொண்டான் அதிரூபன்… 

சிறிது நேரத்தில் அவந்திகாவும் அங்கு வந்து சேர்ந்தாள்… அவளது முகம் இயல்பாக இருப்பதை கண்ட பின்னர் தான் அதிரூபன் சற்று ஆசுவாசமடைந்தான் …

அதன் பின்னர் பார்ட்டி இனிதே நிறைவுற காரில் சென்று கொண்டிருந்த இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்ள கூடவில்லை…

 

ஜன்னல் ஓரம் பார்த்தவாறு இருந்த அவந்திகாவின் விழிகள் இரண்டும் சிவந்து காணப்பட்டது …

 

கண்ணீரோ இப்போதே விழுந்து விடவா என்பது போல நிலைகுத்தி நின்றிருந்தது …

 

அவள் ஏதேனும் கோவப்படுவாள்.. தன் கன்னத்திலேயே அறைவாள் என என்னென்னவோ எதிர்பார்த்து இருந்தான்..

 

ஆனால் அவள் ஏதும் பேசாது அமைதியாக இருக்கவும் அதுவே அவனுக்கு ஏதோ போல் இருந்தது… 

 

அவன் ஒன்றும் அவளை ஆசைப்பட்டு முத்தமிடவில்லை… சுற்றி இருப்பவர்கள் கத்திக் கூச்சலிடவும் வேறு வழி இல்லாது தான் அவளை முத்தமிட்டு இருந்தான்..

 

ஆனால் அவனுக்கு புரியாத ஒன்று எப்படி அவனால் அவளை முத்தமிட முடிந்தது என்பது தான்… 

 

ஒரு வழியாய் வீடும் வந்துவிட.. முதல் ஆளாய் அவந்திகா தான் இறங்கி கொண்டு உள்ளே சென்றாள்.. அவளை பெருமூச்சுடன் பார்த்தவன் தானும் காரில் இருந்து இறங்கி உள்ளே சென்றான் …

 

அவளிடம் விளக்கம் அளித்து சூழ்நிலையை எடுத்துக் கூறிட அதிரூபன் முயன்றான் …ஆனால் அவள் அவனை திரும்பிக் கூட பார்க்கவில்லை…

அவனாக ஏதேனும் பேச விழைந்தாலும் 

அவன் முகம் பார்க்காததை கூட அவனை பொருட்டாக கூட கருதாது நடந்து கொள்வது அவனது ஈகோவை சீண்டி இருந்தது …

 

தன்னை இந்த அளவு தவிர்ப்பவளை தான் மட்டும் எதற்கு பிடித்து தொங்கிக்கொண்டு இருக்க வேண்டும் என அவனும் அதன் பின்னர் கண்டுகொள்ளவதில்லை …

அப்போதும் கூட அவள் அவளது அமைதியை மட்டும் விட்டு விடவில்லை அதை அதிரூபனும் கவனித்து தான் வந்தான்…

 

இடையில் அதியமான் அவர்களுக்கான தேனிலவை  ஏற்பாடு செய்து   தந்திருந்தார்….ஃப்ளைட் டிக்கெட்டை அவனிடம் தந்திட அதிரூபன் புன்னகையுடனே வாங்கிக் கொண்டான் …

 

இதில் அவனே ஆச்சரியப்பட்டது அவந்திகா ஏன் எதற்கு என எந்த கேள்வியும் கேட்காது  ஏன் அவனிடம் வர முடியாது என சண்டை கூட போடாது அவளும் தேனிலவிற்கான உடைகளை எடுத்து வைத்ததை கண்டது தான்…

 

அதிரூபனும் அவளிடம் எதுவும் கேட்டுக் கொள்ளவில்லை.. நிச்சயம் தந்தைக்காகத்தான் தன்னுடன் வர சம்மதித்திருப்பாள் என்பது அவனுக்குத் தெரியும் …

 

இருவரும் கிளம்பி அதியமானிடம் சொல்லிக் கொண்டு மாலத்தீவிற்கு சென்றனர்…

 

இங்கு  ரேவந்த் தன் கைபேசியில் ஓடிக்கொண்டிருந்த காணொளியை திரும்பத் திரும்ப பார்த்துக் கொண்டிருந்தான்…

 

அவனது விழிகள் சிவந்து இருந்தது …முகமோ கோபத்தை தத்தெடுத்து இருந்தது..

 

ஆம் அவன் பார்ப்பது வேறு எதுவும் இல்லை அந்தப் பார்ட்டியில் அதிரூபன் அவந்திகாவை முத்தமிடும் காட்சி தான் அது …

 

கை முஷ்டியை சுவற்றில் குத்தியவன்,

 

” எப்படி ரூப் உன்னால அவளை கிஸ் பண்ண முடிஞ்சது..???  அந்த அளவு உன்னை அவ மயக்கிட்டாளா..???? விடமாட்டேன்… உன்னை என்னை விட்டுப் போக நான் விடவே மாட்டேன்..!”  என உறுதி எடுத்துக் கொண்ட ரேவந்த் அதிரூபன் மாலத்தீவிற்கு சென்றதை அறிந்து தானும் டிக்கெட் புக் செய்து அவர்கள் செல்லும் அதே விமானத்தில் அவனும் ஏறிக்கொண்டான்…

 

படித்து விட்டு கருத்தினை தெரிவிக்கவும் நன்றி 🙏 🙏 🙏 

❤️ Loading reactions...
0 Comments
Oldest
Newest Most Voted
error: Content is protected !!
Scroll to Top