அவர்களுக்கென்று பிரத்தியேகமாக அறைகளை புக் செய்து வைத்திருந்தார் அதியமான்…
தேனிலவிற்கு என அனைத்து ஏற்பாடுகளும் அதில் செய்யப்பட்டிருக்க ..அதை பார்த்த அதிரூபன் சலிப்பாக தலையாட்டி கொண்டான்…
அத்தோடு சங்கடமாக அவந்திகாவை பார்க்க அவளோ இவனுக்கும் தனக்கும் சம்பந்தமே இல்லை என்பது போல வெளியே தெரியும் கடலின் அழகை ரசித்தவாறு நின்று இருந்தாள்…
பெருமூச்சுடன் அவளை பார்த்தவன் அவளை நெருங்கி,
” அவந்திகா…!” என அழைத்ததும் தலையை திருப்பி அவன் முகத்தைக் கூட பார்க்கவில்லை …
மூன்றாம் நபருக்கு கூட மரியாதை தந்திடுவாள் போல.. தலையை பக்கவாட்டாக மட்டும் திருப்பி இருந்தாள்…
‘என்ன ?’ என்கிற கட்டளை அதற்குள் மறைந்திருப்பதை அதிரூபனால் புரிந்து கொள்ள முடிந்தது .…
பெருமூச்சு விட்டவன்,
“ அது…”
” பெரிய பாஸ் தான் ஏற்பாடு பண்ணியிருக்காரு… இதுக்கும் உங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை… நீ இதெல்லாம் நினைச்சு வருத்தப்பட்டு இருக்க வேண்டாம்.. நமக்குள்ள எதுவும் நடக்காது..!..”என படபடவென பொறிந்தவள் இப்போது தலையை மட்டும் நன்றாக திருப்பி அவனை அலட்சியம்க பார்த்து,
“இதுதானே சொல்ல போறீங்க..?” என அசட்டையாக அவள் கூறியதும் அவள் வார்த்தைகளில் திகைத்தவன் பிறகு அதைத்தானே அவனும் கூற வந்தான் என்பதால் ஆம் என்று தலையசைத்து வைத்தான் சிறு தடுமாற்றத்துடன்…
பெருமூச்சு விட்டவள்,
” அதான் தெரிஞ்ச கதையாச்சே… உங்க வேலையை நீங்க பாருங்க ..என் வேலையை நான் பார்க்கிறேன்..” என முகத்தில் அடித்தாற் போல கூறிவிட்டு அறைக்குள் சென்று விட்டாள் …
அந்த அறையை மிக அழகாக காட்சி அளித்தது ..அந்த அறையை கண்டதுமே மனதில் இருக்கும் அழுத்தங்கள் எல்லாம் நீங்கி அமைதி குடி பெயர்ந்து விடும் ..
ஆனால் அவளுக்குத்தான் மனித வடிவில் உயிரை எடுப்பதற்காகவே ஒருவன் அங்கு இருக்கிறானே… அவனை அருகில் வைத்துக்கொண்டு எங்கே அவள் மன அமைதியை தேடுவது..?.. என கண்களை மூடி மெத்தையில் படுத்து விட்டாள்…
அவனும் அவளை மேலும் சங்கடப்படுத்த வேண்டாம் என எண்ணி,
” சரி நீ ரெஸ்ட் எடு… நான் ஜஸ்ட் வெளியே வாக் போயிட்டு வரேன்..” என ஷார்ட்ஸ் ஒன்றையும் மேலே கையில்லாத வெள்ளை பனியனும் அணிந்திருந்தவன் விழிகளுக்கு கூலர்சை அணிந்து கொண்டு வெளியே சென்று விட்டிருந்தான்…
அவன் சென்றதும் ஆழ்ந்த மூச்சை இழுத்து விட்டவளுக்கு சற்று ஆசுவாசமாக இருந்தது..
அடுத்த கணமே மெத்தையில் இருந்து எழுந்து கொண்டவள் வீட்டினை சுற்றி பார்க்கலானாள்…
மாலத்தீவில் உள்ள ஆடம்பரமான நீரின் மேல் அமைக்கப்பட்ட வில்லா அது…
இந்த அறை முழுவதும் மரத்தாலான பலகைகளாலும், பாரம்பரிய மாலத்தீவு பாணி கூரைகளாலும் வடிவமைக்கப்பட்டிருந்தது…
அறையின் வெளிப்புறத்தில் கதவைத் திறந்தவுடன் விரிந்த இந்தியப் பெருங்கடல் பளிங்கு போலத் தெரியும்…
அறைக்கு வெளியே உள்ள பால்கனியில் ரிலாக்ஸ் செய்வதற்கான ஆடம்பரமான சோஃபாக்கள், வெயிலில் காயும் ‘சன் படுக்கைகள்’ (Sun loungers) மற்றும் தம்பதியர் அமர்ந்து பழச்சாறு மது போன்றவை அருந்துவதற்கு சிறிய மேஜை ஆகியவை இருந்தது…
பால்கனியின் முனையிலேயே கடலோடு கடல் கலப்பது போன்ற தோற்றத்தைக் கொடுக்கும் ஒரு சிறிய பிரைவேட் நீச்சல் குளமும் அங்கு இருந்தது…
பால்கனியிலிருந்து நேரடியாக நீலக் கடலுக்குள் இறங்குவதற்கு மரப் படிக்கட்டுகள் நேர்த்தியாக அமைக்கப்பட்டு இருந்தது..
இன்னொரு படுக்கை அறையின் நடுவே தரையில் தடிமனான வெளிப்படையான கண்ணாடி பொருத்தப்பட்டிருந்தது…
அறைக்குள்ளேயே அமர்ந்து கொண்டு கீழே நீந்தும் சுறா மீன்களையும், வண்ண வண்ண பவளப்பாறைகளையும் பார்த்து ரசிக்கலாம்.…
அந்த அறையின் மையப்பகுதியில், கடலைப் பார்த்தவாறு ஒரு பெரிய கிங்-சைஸ் படுக்கை இருந்தது…
அதைச் சுற்றி மெல்லிய வெள்ளை நிறப் பட்டுச் சேலை போன்ற திரைகள் தொங்கி காற்றில் அசைந்தாடி கொண்டு இருந்தது…
படுக்கையில் ரோஜா இதழ்களால் ‘Welcome’ என ஆங்கிலத்தில் அலங்கரிக்கப்பட்டிருப்பதை கண்டதும் முகம் இறுகியது அவந்திகாவிற்கு…
அறையின் வெளிச்சத்தைக் கட்டுப்படுத்தத் தானியங்கி தொடுதிரை (Touch panel) அமைப்புகளும் பொருத்தப்பட்டு இருந்தன..
மாலை நேரங்களில் ரொமான்டிக்கான மஞ்சள் மற்றும் மென்மையான வெளிச்சத்தைத் தரும் விளக்குகள் அவை..
முழுமையான சென்ட்ரல் ஏசி, அறை முழுவதும் நறுமணத்தைப் பரப்பும் எசென்ஷியல் ஆயில் டிஃப்பியூசர்கள் என அனைத்தும் இருந்தத
கூடவே பொழுதுப்போக்கிற்காக உள்ளேயே மினி பாரும் இருந்தது… அதனால் விலையுயர்ந்த ஒயின், ஷாம்பெயின் பாட்டில்கள் அடங்கிய சிறிய குளிர்சாதனப் பெட்டியும் இடம் பெற்று இருந்தது…
உலகத் தரம் வாய்ந்த ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் மற்றும் பெரிய ஸ்மார்ட் டிவி மாட்டப்பட்டு இருந்தது…
குளியலை கூட வியக்கும் வகையில் இருந்தது…குளிக்கும் போதே கண்ணாடியின் வழியாகக் கடலைப் பார்க்கும் வசதி கொண்டு இருந்தது…
அதில் கடலைப் பார்த்தபடி அமைக்கப்பட்ட பெரிய ஜக்கூஸி பாத் டப். அதில் நுரை மற்றும் நறுமண எண்ணெய்கள், ரோஜா இதழ்களும் தூவப்பட்டிருந்தது…
அதை கண்டதும் ஏனோ மனம் வலித்து அவளுக்கு…
இதை கூட அவள் கனவில் ரசித்து உள்ளாளே…எதுவும் நடக்கப்போவது இல்லை எனும் போது மனம் வலிக்க தானே செய்யும்…
இயற்கையான வெளிச்சம் விழும் வகையில் அமைக்கப்பட்ட கிளாஸ் ரூஃப் கொண்ட ரெயின் ஷவரும் கூட அங்கு இருந்தது…அதை கண்டு பெருமூச்சு விட்டுக்கொண்டாள் அவந்திக…
இவை மட்டும் அல்லாது விலையுயர்ந்த பிராண்டட் ஆர்கானிக் சோப்புகள், ஷாம்பூகள், மென்மையான பாத்ரோப்கள் மற்றும் பிரத்யேக துண்டுகள் என ஒவ்வொன்றிலும் ஆடம்பரம் அப்பட்டமாய் தெரிந்தது…
அங்கு இருக்கும் அனைத்து வசதிகளையும் பார்த்து அவள் ஒரு கணம் வியந்து தான் போனாள்…இவற்றை எல்லாம் அவள் பார்த்தது கூட கிடையாது..
ஆனால் அனைத்தும் இருந்தும் என்ன பயன்..??… அவளால் அவற்றை அனுபவிக்க தான் முடியுமா.?? அல்லது அதை எல்லாம் கண்டு சந்தோஷம் தான் பட முடியுமா?
உணர்ச்சியற்ற பொம்மையை அழைத்து வந்து ஆடம்பரத்தை புகுத்தினால் அந்த பொம்மையால் மகிழ முடியுமா..?? அனுபவிக்க முடியுமா ?? அந்த மனநிலையில் தான் அவந்திகாவும் இருந்தாள்…
அவளும் அறைக்கு உள்ளேயே இருந்தால் இன்னும் தான் அழுத்தம் அதிகமாகும் என்பதால் இலகுவான ஆடையை மாற்றிக் கொண்டு அறையை திறந்து வெளியே சென்று விட்டாள் …
கடற்கரையை காணக்கான மனம் சற்று அமைதி அடைந்தது… கடலைப் பார்த்தவாரே அமர்ந்திருந்தவள் பிறகு இரவாவதை உணர்ந்த பின்னர் தான் அங்கிருந்து எழுந்து விட்டிருந்தாள்…
கடல் காற்றின் ஈரம் அவளது தகிக்கும் மனதை அமைதியுற செய்து இருந்தது…
இப்போது
மீண்டும் அறைக்கு செல்ல வேண்டும் என்கிற எண்ணமே அவளுக்கு உள்ளுக்குள் கசப்பை உணர வைத்தது …
இருந்தும் சென்று தானே ஆக வேண்டும்.. அறைக்குச் சென்றதும் அதிரூபனை கண்டு கொள்ளாது சாப்பிட்டுவிட்டு உடனடியாக உறங்கிட வேண்டும் அப்போது தான் தன்னால் எதைப் பற்றியும் நினைத்து வருத்தப்பட்டு கொண்டு இருக்க முடியாது என தனக்குத் தானே கூறிக் கொண்டவள் தங்களது அறையை நோக்கி சென்றாள்…
அவள் கதவை திறந்த கணம் அங்கு அதிரூபனை இறுக கட்டிக்கொண்டு நின்றிருந்தான் ரேவந்த்…
இருவரையும் கண்ட அவந்திகாவின் விழிகள் இரண்டும் அதிர்ச்சியில் விரிந்து கொள்ள ..உள்ளமோ ‘ஆக தேனிலவு தங்களுக்கு இல்லை இவர்கள் இருவருக்கும் தான்’ என்கிற நிதர்சனம் புரிந்தது அவளது மூளைக்கு…
படித்து விட்டு கருத்தினை தெரிவிக்கவும் நன்றி 🙏 🙏 🙏