அத்தியாயம் 20(USAP)

அத்தியாயம் 20

 

அடுத்தநாள் சிறைச்சாலையிலுள்ள உடற்பயிற்சி கூடத்தில் அரசு உடற்பயிற்சி செய்துக் கொண்டிருக்க சயந்தனோ அதிக நவீனத்துவமற்று சற்றே பழைமையுடன் இருந்த உடற்பயிற்சி கூடத்தை கண்ணை சுருக்கி பார்க்க,

 

அரசுவோ, “இது ஒண்ணும் உன் பெர்சனல் ஜிம் இல்ல ப்ரிஸன் ஜிம் இப்டி தான் இருக்கும்”

 

என்று அங்கிருந்த பாரில் தலைகீழாக தொங்கியபடி உடற்பயிற்சி செய்துக் கொண்டிருக்க அங்கு வந்த செல்வத்தின் சகோதரன் சிவமோ,

 

“தலைவரே! நம்ம ஜெயிலுக்குள்ள புதுசா சம்பவம் பண்ண ஆள இறக்குறதா பெரியவர் முடிவு பண்ணிருக்கார்”

 

என்றதும் துள்ளி இறங்கிய அரசுவோ, “எதிர்ப்பார்த்தது தான், எத்தனை பேர் இறங்கியிருக்கானுக”

 

என்றதும் அங்கு வந்த ராஜதுரையோ, “இருபது பேர்” என்றதும் அரசுவோ வேட்டியை மடித்துக் கட்டியபடி,

 

“கேங் வார் டூ கலவரமா?, ரொம்ப அறுத பழசான டெக்னிக் தான்” என்றவன்

 

ஒரு சுருட்டை பற்றவைத்தபடி எதையோ சிந்தனை செய்ய அங்கு வந்த இன்னொரு சிறை காவலரோ வியர்த்து விறுவிறுத்தபடி “சார் உங்கள பார்க்க செழியன் சார் வந்திருக்காரு ” என்று அவனிடம் கூற

 

அரசுவோ, “சரி வர சொல்லு” என்று அவரிடம் கூற அவரோ,

 

“சார் நீங்க தான் வரணும் அவரு இங்கெல்லாம் வரமாட்டார்”

 

என்றதும் அவனோ சுருட்டை இழுத்தபடி, “ஏன் உங்க மோருக்கு காலுல சுளுக்கா என்ன?”

 

என்று தெனாவெட்டாக கேட்க அவரோ, “சார் நான் புள்ளைக்குட்டிக்காரன்” என்று இழுக்க

 

அரசுவோ, “அதுக்கு என்ன செய்யணும்?” என்று கேட்க அவரோ

 

அவனை அழுவதை போல் பார்த்து வைக்க, “சரி சரி விட்டா அழுதுருவ போல வாரேன்”

 

என்று பனியனும் மடித்துக் கட்டிய வேட்டியுமாக நடந்து வர அங்கிருந்த கைதிகள் பலரும், “வணக்கம் அண்ணன்!, வணக்கம் தல!, வணக்கம் தலைவரே!”

 

என்று வணக்கம் வைக்க, அவனோ எல்லோரையும் சிறு தலையசைப்புடன் கடந்து வந்து விசாரணை அறைக்குள் நுழைய அங்கு அவனது வரவை எதிர்ப்பார்த்து அவனுக்கு குறையாத திமிர் பார்வையுடன் அமர்ந்திருந்தான் அகச் செழியன்

 

அவனை கண்டதும் பின்னால் எட்டிப் பார்த்த அரசுவோ, “எங்க என் பொண்டாட்டி? நாட்டுக் கோழி குழம்பும் கம்மங்களியும் கொடுத்து விட்டாளா?”

 

என்று கேட்க செழியனோ முஷ்டியை இறுக்கியபடி, “நான் உன்ன விசாரிக்க வந்த போலீஸ் ஆபிஸர், ஒன்னும் ஸ்விக்கி சோமாட்டோ டெலிவரி பாய் கிடையாது”

 

என்று கூலர்ஸை கழட்டி வைக்க மஃப்டியில் இருந்தவனை ஒரு வித நக்கலுடன் பார்த்த அரசுவோ, “என்ன மச்சான் டேட்டிங்கா? இன்னைக்கு பஞ்சுமிட்டாய் கலர்ல பூக்கியா வந்திருக்க”

 

என்று நக்கலாக கேட்க செழியனோ தலையை கோதியபடி பேசாமலிருக்க அரசுவோ நமட்டு சிரிப்புடன்,

 

“இங்கே பாரு எனக்கு தெரியும் உனக்கு அந்த பொண்ணு மேல பீலிங்ஸ் இல்ல இந்த கேஸுக்கும் அவளுக்கும் சம்பந்தமிருக்கு அதுவும் அவளுக்கு தெரியாமலே சம்பந்தப்பட்டிருக்கா அது தான் அவ பின்னாடி சுத்துற”

 

என்றதும் செழியனோ, “இங்கே பாரு அரசு என் பர்சனல் விஷயத்துல தலையிட நீ யாரு?”

 

என்று கேட்க அரசுவோ ” வருங்கால முதல்வர் ஒரு பொண்ணோட பாதுகாப்புல அதிக அக்கறை எனக்கு தான் இருக்கு”

 

என்றதும் செழியனோ, “அதான் உன்ன விசாரிக்க வந்த லேடி ஆபிசருக்கு கிஸ் அடிச்சியா?”
என்று கேட்க அரசுவோ, “இல்லையே என் பொண்டாட்டிக்கு தானே கிஸ் அடிச்சேன்”

 

என்று தோளை அலட்சியமாக குலுக்க செழியனோ, “ஏய்!” என்று பாய்ந்து வர

 

அவனை லாவகமாக தடுத்து பிடித்தவன், “புருஷன் பொண்டாட்டிக்குள்ள என்ன நடக்குதுன்னு பந்தி விசாரணை பண்ண வந்தா இப்பயே கிளம்பிரு முக்கியமான விஷயம்னா மட்டும் பேசு”

 

என்று எழுந்து விட அகச்செழியனோ மூச்சை இழுத்து விட்டபடி, “ஊப், ஓகே யமகன எப்படி உனக்கு தெரியும்? எப்படி கண்டுபிடிச்ச அவன் அரிச்சந்திரன் பையன்னு”

 

என்றதும் அரசுவோ, “இங்கபாரு அத விட முக்கியமான விஷயமிருக்கு முதல்ல அத கண்டுப்பிடி பிறகு இதைப்பத்தி ஆற அமர பேசலாம்”

 

என்று கூற செழியனோ, “எதை பத்தி சொல்லுற? நீ தேடுற நபர் உன் கண் முன்னாடியே இருக்கான் அவன பிடிச்சா தான் சயந்தன காப்பாத்த முடியும் இல்லன்னு வை எல்லா

 ஆதாரமும் அவனுக்கெதிரா இருக்கு சயந்தன் குரூப் ஆப் கம்பெனி மட்டுமில்ல அவனோட சார்ந்திருக்க பல கம்பெனியோட ஷேர்ஸ் சரியும் ஏன் எக்கனமிக்கா ஒரு பெரிய அடி விழும்”

 

என்று எழுந்துக் கொள்ள செழியனோ, “இதப்பத்தி” என்று இழுக்க

 

அரசோ கோணலாக புன்னகைத்தபடி, “அவளுக்கே தெரியாது, அவள மறுபடியும் காயப்படுத்திராத ரொம்ப நல்ல பொண்ணு”

 

என்று கூற அகச்செழியனோ தட்டுத்தடுமாறி ஆமோதிப்பாக தலையசைக்க அரசுவோ, “பரவால்லயே நான் சொல்லுறதுக்கு தலையாட்டுற”

 

என்று விட்டு வெளியே செல்ல எத்தனிக்க செழியனோ, “ஐயம் ஸாரி அப்பறோம் தேங்க்ஸ்”

 

என்று கூற அரசுவோ, “எதுக்கு?” என்றான் ஒற்றை புருவமுயர்த்தி,

 

“இல்ல, உன்ன தப்பா புரிஞ்சுக்கிட்டு அரெஸ்ட் பண்ணதுக்கும் அப்பறோம் இன்வெஸ்டிகேஷனுக்கு ஹெல்ப் பண்ணதுக்கும் மத்தபடி அகமி விஷயத்துல உன்மேல உள்ள கோபம் அப்டியே தானிருக்கு”

 

என்றவன், “உனக்கு” ஏதோ கேட்க வர அரசுவோ,

 

“எல்லாத்தையும் நானே சொன்னா நீ எதுக்கு மேன் போலீசா இருக்க போய் எதையாவது ஒழுங்கா கண்டுப்பிடி அடுத்து உன் ஆளு மேல உன் அண்ணனுக்கு ஒரு கண்ணிருக்கு பார்த்துக்க”

 

என்றதும் செழியனோ, “வாட்?”

 

என்று உறும, “ம்ம் உன் அண்ணன் யமகனுக்கு சொல்லிட்டேன்”

 

என்று கூறி விட்டு கழுத்தில் நெட்டி முறித்தவன் மீண்டும் சிறைக்குள் செல்ல இங்கு அகமியோ,

 

“இந்த கன் தான் எனக்கு வேணும்” என்று விலையுயர்ந்த ஒரு துப்பாக்கியை எடுக்க

 

அவள் முன்னால் நின்றிருந்தவனோ, “மேடம் இது ரொம்ப பவர்புல் உங்களுக்கு இதை வச்சு”

 

என்றது தான் தாமதம் அடுத்த கணமே அவனது அடியாள் ஒருவரின் தொடையை அவளது துப்பாக்கி பதம் பார்த்திருந்தது.

 

அவன் காலை பிடித்துக் கொண்டு கீழே சரிந்து துடிக்க, “என்ன மிஸ்டர் சந்தேகம் தீந்துச்சா?”

 

என்று ஒற்றை புருவமுயர்த்தி விட்டு என்னவோ சிந்தித்தவள் இதழ்கள் கோணலாக வளைய

 

“இந்த மேகசின்ல உள்ள பிப்பிடீன் புல்லட்ஸ்லயும்” என்று ஏதோ சொல்ல வந்தவள் அதை கூர்ந்து கவனிக்க அதில்

 

‘ஐ.ஆர்’ என்ற ஆங்கில வார்த்தை அழகாக பொறிக்கப்பட்டிருப்பதை பார்த்தவள் மனமோ,

 

‘சூப்பர் சரியான இடத்துக்கு தான் வந்திருக்கோம் இது போதும்டா ஒரே கல்லுல ரெண்டு மங்கா அரசுவும் காலி நீயும் காலி’

 

என்று மனக் கணக்கிட்டவள் அசட்டையாக சிரிக்க அவளது எண்ணம் அறியாதவனோ,

 

கணினி திரையில் அகமியை பார்த்தபடி, “என்ன அரசு எனக்கே பொறி வைக்குறீயா? உன் பொண்டாட்டி கையாலேயே உன்னையும் கொன்னு அவளையும் ஜெயிலுக்கு அனுப்புறேன்டா”

 

என்று இருளுக்குள்ளிருந்தபடி சிரித்தான் அவன்,

                                                       தொடரும்…

❤️ Loading reactions...
0 Comments
Oldest
Newest Most Voted
error: Content is protected !!
Scroll to Top