மதுரியாவுக்கும் தெரியும் இது அதிகப் படி உரிமை தான். ஆனா அவளை பொறுத்த வரைக்கும் அவளுக்கு வேறே வழியும் தெரியலே. நேரமும் இல்லே. அதிர்ச்சியிலே இருந்து முதல்லே சுதாரிச்சுது ப்ரதீப். “ஏய்.. லூசு.. என்ன ஆச்சு உனக்கு? படிக்கற எனக்கு கல்யாணம் பண்ணணும்-னு கேட்கிறே?”-னு சிரிச்சுட்டே கேட்டான். “ஏன்? காலம் பூரா படிச்சுட்டே, பாஸ்ட்லேயே இருக்கறதா ப்ளான் பண்ணியாச்சோ?”-னு கேட்டா மதுரியா. “இப்போ என்ன அவசரம் வந்துச்சு?”-னு அழுத்தமாவே கேட்டான் ப்ரதீப். “ம்ம்ம்… அவசியம் வந்திருக்கு. காதலை மறைச்சுட்டு சுத்தற என் பிரதர்… அட்லீஸ்ட் கல்யாணம் பண்ணாலாவது அதை வெளிக் காட்டுவாரா-னு பார்க்க”னு சொன்னா மதுரியா. “என்ன உளர்றே? நான் யாரையும் காதலிக்கலே.. ஒண்ணுமில்லே.. நீங்களா கற்பனை பண்ணிக்கிட்டா.. அதுக்கெல்லாம் பதில் சொல்ல முடியாது”-னு கோபமும் அழுத்தமுமா ப்ரதீப் சொல்லவும் ரீனாவே அசந்து போனா. இவன் மனசு மாறவே மாறாதோ, நம்ம தான் ரொம்ப எதிர்பார்க்கிறோமோ இப்படி எல்லாம் யோசிச்சா ரீனா. சந்திரனுக்கு நந்தினி லவ் ப்ரேக்-அப் தெரிஞ்ச சமயத்துலயிருந்து பரவற வெறுமை இப்போவும் மனசுலே பரவ பெருமூச்சு விட்டார் சந்திரன்.
ஆனா நம்ம ஹீரோயின் ராங்கிக்காரிக்கு அதெல்லாம் எதுவுமே இல்லை. உண்மையிலேயே பொறுமையா பேசி புரிய வைக்கணும்-னு தான் நினைச்சா.. ஆனா அவன் பேசின விதத்துக்கு கோபம் வரவும் “உங்க மனசுலே எதுவும் இல்லே தானே?”-னு காரமா கேட்கவும், “ஆமா… எவ்வளோ வாட்டி கேட்டாலும் என் மனசுலே ஒண்ணும் இல்லே தான். முளைச்சு மூணு இலை விடலே.. பேச்சை பார். சின்ன பொண்ணா லட்சணமா பேசு”-னு கோபம் குறையாம பேசினான் ப்ரதீப். “ரைட்..”-னு சொல்லி வேகமா போய் அவன் கையை தூக்கி தன் தலையிலே வைச்சு, “இப்போ சொல்லுங்க.. உங்க மனசுக்கு யார் மேலேயும் விருப்பம் இல்லே-னு.. காதல் இல்லேன்னு.. சலனம் இல்லேன்னு சொல்லுங்க.. சொல்லிட்டீங்கன்னா இந்த நிமிஷத்துலே இருந்து ரீனா உங்க லைஃப்லே இருக்கமாட்டா.. நானும் உங்கக் கிட்ட அதைப் பத்தி பேச மாட்டேன்… ம்ம்ம்… சொல்லுங்க”-னு இறைஞ்சா.
எல்லாருமே திகைச்சு போனாங்க. ப்ரதீப் பேயடிச்ச மாதிரி ஆனான். “ரியா…”ன்னு அலறி கையை உருவ டிரை பண்ணான். ஆனா உருவ முடியலே. டைட்டா பிடிச்சிருந்தா. “ரியா… என்னை படுத்தாதே ப்ளீஸ்”-னு கெஞ்ச ஆரம்பிச்சான். “சாரி தீப்… எனக்கு உண்மை வேணும்”-னு பிடிவாதமா நிக்கவும், அவன் கை ஒரு வாட்டி மதுரியாவோட தலையை அழுத்தமா பிடிச்சு, “ஒத்துக்கறேன்.. எனக்கு ரீனா மேலே விருப்பம், சலனம் இருக்கு.. அது காதலான்னு தெரியலே”-னு சொல்லி ‘ஊப்ஸ்’-னு பெருமூச்சு விட்டான். ரீனாவுக்கும் சந்திரனுக்கும் அவ்வளோ சந்தோஷம். “சபாஷ்! புலிக்குட்டி-டா ரியா நீ! ரொம்ப சந்தோஷம் எனக்கு”-னு சொன்னார் சந்திரன். ப்ரதீப்போட கையை அவ தலை மேலே இருந்து எடுத்து, “உங்க குழப்பம் எனக்கு புரியுது தீப். போய் ரெண்டுப் பேரும் பேசுங்க. அப்புறம் முடிவு சொல்லுங்க. என்ன அங்கிள்? அவங்க ரெண்டு பேரும் போகட்டுமா?”-னு கேட்டா மதுரியா. “தாராளமா… ஆனா அவன் என்ன முடிவு பண்ணாலும் ரீனா தான் எனக்கு மருமக”-னு சந்தோஷமா சொன்னார் சந்திரன். “உன்னை??? போயி பேசிட்டு வந்து வைச்சுக்கிறேன்… சரியான ராங்கி”-னு மதுரியா கிட்ட பல்லை கடிச்சுக்கிட்டு போனான் ப்ரதீப்.
ரீனாவும் ப்ரதீப்பும் மொட்டை மாடியிலே கையிலே காஃபியோட அமைதியா இருந்தாங்க. ஒரு சங்கடமான அமைதி. “ரீனா… நான்… நான்.. எனக்கு உன்னை ரொம்ப பிடிக்கும். ஆனா லவ்.. அதுக்கு எனக்கு தகுதியிருக்கா-னு தெரியலே.. அதோட எனக்கு நிறைய கன்ஃப்யூஷன்ஸ் இருக்கு. கொஞ்சம் க்ளேரிடி வேணும். ஸோ, இந்த வாட்டி வெட்டிங்லே அவசரம் வேண்டாம்-னு நினைக்கிறேன். எனக்கு கொஞ்சம் டைம் வேணும் ரீனா. மத்த படி உன்னை மாதிரி பார்ட்னர் கிடைக்க நான் லக்கி தான்”-னு மனசுலே படறதை தயக்கமிருந்தாலும் சொல்லிட்டான் ப்ரதீப். “எனக்குப் புரியுது. அதுனால தான் நானும் ப்ரஷரைஸ் பண்ணாம இருந்தேன்”-னு அவளும் சொன்னா. “ஓ… இது பூரா பூரா ரியா மேடத்தோட ப்ளானோ?.. நினைச்சேன்.. நீயும் அவளும் நிறைய விஷயத்துலே ஒரே மாதிரின்னாலும், அவ அதிரடி… நீ கொஞ்சம் நிதானம்”-னு சிரிச்சான் ப்ரதீப். “ம்ம்ம்.. ரியா கொஞ்சம் முன்கோபி.. ஆனா நல்லவ”-னு சொன்னா ரீனா. “ம்ம்ம்.. எல்லாம் சரி.. இப்போ இந்த அதிரடிக்கு என்ன தேவை வந்துச்சு?”-னு கேட்டு திகைக்க வைச்சான்.
ரீனா கொஞ்ச நேரத்துக்கு ஒண்ணுமே பேசலே. அப்புறம், “தீபு, நீங்க எங்களை – முக்கியமா ரியாவை – நம்பறீங்க தானே?”-னு கேட்கவும், “என்ன பீடிகை எல்லாம் பலமா இருக்கு?”-னு புருவம் தூக்கினான். “கேட்ட கேள்விக்கு பதில் வேணும்”-னு பிடிவாதமா ரீனா கேட்கவும், “சொல்லித் தான் தெரியணுமா? மனசார நம்பறேன்.. ரியா நம்ம ரெண்டு பேருக்கும் நல்லது தான் பண்ணுவா-னு நம்பறேன் போதுமா?”-னு கேட்டான் ப்ரதீப். “அப்போ காரணத்தை கேட்காதீங்க.. நேரம் வரும் போது ரியாவே சொல்லுவா”-னு சொன்னா ரீனா. “ம்ம்ம்… சரி.. கேட்கலே! அதை விடு… மேடம் விதுரனை மீட் பண்றாதா முடிவு பண்ணிட்டாங்க போல”-னு கேட்கவும் திகைச்சுப் போனா ரீனா.
“உங்களுக்கு எப்படி? சொன்னாளா?”-னு கேட்டா ரீனா. “ஒரு யூகம் தான். அவ்வளோ தான்!! இப்போ ப்ராப்ளம் சால்வ்ட். போய் பார்த்தா ஒண்ணு சேர்ந்துடுவாங்க. தே டிசர்வ் டு”-னு சொன்னான் ப்ரதீப். “இல்லே தீப்.. நாட் தட் ஈஸி”-னு சொல்லவும் குழப்பமா பார்த்தான் ப்ரதீப். “ரீனா என்னாச்சு? ஏதாவது ப்ராப்ளமா திரும்ப?”-னு கேட்டப்போ ரீனா, அவளுக்கு மதுரியாவுக்கும், விதுரனைப் பத்தி நடந்த பேச்சை பத்தி மட்டும் சொன்னா. “கஷ்டம் தான். அனல் பறக்கிற கோபம் இருக்கும். ஏன்னா அவர் சுவாதியை டேட் பண்ண ஸ்டார்ட் பண்ணிட்டார் இல்லே? அவளுக்கு பொசஸிவ்னெஸ்.. அதான் கோபம். அது விதுரன் தான் சரி பண்ணணும். ஒண்ணு மட்டும் தெரியும் ரீனா. ரியா விதுரனை ரொம்ப டீப்பா லவ் பண்றா. கஷ்டமோ நஷ்டமோ அவரை மீட் பண்ணணும்-னு முடிவு பண்ணப்புறம் முகத்துலே இருக்கற தெளிவு இந்த பத்து மாசமா போராடியும் வரலியே”-னு கேட்டான் ப்ரதீப். “நான் சாய்ஸ் கிடையாது. என்னால அப்படி இருக்க முடியாது-னு திட்டவட்டமா சொல்லிட்டா தீபு”-னு ஆதங்கமா ரீனா சொல்லவும், “கரெக்ட்… எந்த பொண்ணும் அதைத் தான் சொல்லுவா. அதை விதுரன் தான் க்ளியர் பண்ணணும். அவருக்கு ரியா வேணும்னா சரி பண்ணணும்”-னு தோளை குலுக்கினான். “மீட் பண்றப்போ என்னவாகுமோ?”-னு பயந்தா ரீனா. “நாட் டு வொர்ரி டியர். நான் கண்டிப்பா மீட் பண்ண ரியா கூட போகப் போறேன்.. ஓகே? சில்!”-னு சொல்லவும் ரீனாவும் ஸ்மைல் பண்ணா. அப்புறம் ரெண்டு பேரும் கீழே போனாங்க.
“ஆமா ரியா… இந்த அதிரடி ஐடியா எப்படி வந்துச்சு?”-னு கேட்டார் சந்திரன். “கொஞ்ச நாளா யோசிச்சுது தான் அங்கிள். எனக்கு நந்தினி, ப்ரதீப்பை வேண்டாம்-னு சொல்லி வேறொருத்தரை கல்யாணம் பண்ணிட்டு போயிட்டா-னு தெரிஞ்சதுலே இருந்து ப்ரதீப் மனசை மாத்தணும்-னு ஐடியா தான். சே… பொண்ணா அவ? வாயிலே நல்லா வருது”-னு மதுரியா திட்டும் போதே மொட்டை மாடியிலே இருந்து ரெண்டு பேரும் இறங்கி வந்தாங்க. “விடும்மா… விட்டுத் தள்ளு… இப்போ தான் தங்கம் மாதிரி ஒரு பொண்ணை கூட்டிட்டு வந்துட்டியே? மேலே சொல்லு”-னு சந்திரன் டைவர்ட் பண்ணார். “ஹாங்… முதல்லியே நினைச்சேனா.. அப்புறம் பார்த்தா உங்க புத்திர சிகாமணியும் என் ஃப்ரெண்டை சூப்பரா சைட் அடிக்கறாரு. அவ பார்க்காத நேரம் அவளை பார்வையிலேயே முழுங்கிடுவாரு”-னு அபிநயத்தோட சொல்லவும் சந்திரனும் ரீனாவும் சிரிச்சுட்டாங்க. “அடிங்க… ராஸ்கல்.. பூனை மாதிரி இருந்துட்டு என்னை நோட்டம் பார்க்கறியா? உன்னை என்ன பண்றேன்னு பாரு”-னு மதுரியாவை விரட்டினான் ப்ரதீப். “தீபா… சும்மா இரு. சின்ன பொண்ணை அதட்டாதே”-னு சொன்னார் சந்திரன். “யார் சின்ன பொண்ணு? இவளா??”-னு முறைக்கவும், சந்திரன் பின்னாடி நின்னு குறும்பா சிரிச்சா. அந்த சிரிப்புலே அப்படி ஒரு அழகு. “விதுரன் சறுக்கி விழுந்ததுலே ஆச்சர்யமே இல்லை. இன்னும் கூட நிச்சயமா எந்திரிச்சிருக்க மாட்டார்”-னு ரீனாவுக்கு மட்டும் கேட்கிற மாதிரி சொன்னான் ப்ரதீப்.
“ரியாம்மா… என் மருமக வீட்டைப் பத்தி சொல்லலியே?”-னு கேட்டார் சந்திரன். “சொல்லிட்டா போச்சு. ரீனா அப்பா இளங்கோ அங்கிள், xxxx இன்ஜினீயரிங் காலேஜ்லே மெக்கானிகல் இன்ஜினீயரிங் ப்ரொஃபசர். அவங்க அம்மா கன்யா ஆண்டியும் அதே காலேஜ்லே மேத்ஸ் ப்ரொஃபசர். ரீனாவுக்கு ஒரே தம்பி. பேர் தீனா. அவன் எங்களுக்கு நேர் எதிர்.. ரொம்ப அமைதி. ஆர் ஈ சி திருச்சியிலே எலக்டிரானிக்ஸ் தேர்ட் இயர் படிக்கறான். எக்ஸ்டிரா இன்ஃபர்மேஷன் – எனக்கும் ரீனாவுக்கும் பள்ளிக்கூட நட்பு”-னு சொன்னா மதுரியா. “அதான் இப்படி ஆயிட்டா… இல்லேன்னா உருப்பட்டிருப்பா”-னு கிண்டல் பண்ணான் ப்ரதீப். “நீங்க எவ்வளோ கிண்டல் பண்ணாலும் கோபப்பட்டாலும் எனக்கு சந்தோஷம் தான். சரியான நேரத்துல சரியான விஷயம் தான் பண்ணேன்”-னு கையை ஆட்டி ஆட்டி சொன்னா. “உன்னை பேசி ஜெயிக்க முடியுமா? சரி… எப்போ விதுரன் வீட்டுக்கு?”-னு நேரடியாக் கேட்டான் ப்ரதீப்.
மதுரியா ரீனாவை முறைக்கவும், அவ அசடு வழிஞ்சுட்டே ப்ரதீப் பின்னாடி மறைஞ்சா. “இப்போதைக்கு இல்லை.. முதல்லே மண்டேயிலே இருந்து ப்ரேம் சாருக்கு கீழே இண்டர்ன்ஷிப் ஸ்டார்ட் பண்ணணும். அப்புறம் தான் இதை யோசிக்கணும்”-னு சொன்னா மதுரியா. “ம்ம்ம்ம்… தனியா போகாதே. சரி வராது. நானும் வர்றேன்”-னு கொஞ்சம் அழுத்தமாவே சொன்னான் ப்ரதீப். “ம்ம்ம்… எனக்கும் தனியா போற ஐடியா எல்லாம் இல்லை. எப்போ போறதுன்னாலும் உங்களை கூட்டிட்டு போறதா தான் ப்ளான். ஆனா உங்களை தனியா அனுப்பினது என்னைப் பத்தி பேசறதுக்கு இல்லை”-னு சொன்னா மதுரியா. “ஆமா… தெரியுமே! அதனால தான் நாங்க எங்களைப் பத்தியும் எங்களுக்கு முக்கியமான விஷயம் பத்தி மட்டுமே பேசினோம்”-னு பதில் வந்துச்சு ப்ரதீப் கிட்டே இருந்து. “ஓஹோ.. அப்போ முடிவு என்னாச்சு-னு கேளுங்க அங்கிள்?”-னு சந்திரன் கிட்டே சொல்லவும், “எல்லாம் பண்ணியாச்சு. கல்யாணம் கொஞ்ச நாள் கழிச்சுத்தான்”-னு சொன்னான்.
சந்திரன் தான் குழப்பமாகி என்னப்பா-னு கேட்டார். “அப்பா! எனக்கு ரீனாவை ரொம்ப பிடிச்சிருக்கு. ஆனா மேரேஜுக்கு முன்னாடி கொஞ்சம் டைம் வேணும்பா. எப்படியும் எனக்கு கோர்ஸ் கம்ப்ளீஷனுக்கு ஃப்யூ மந்த்ஸ் இருக்கே.. ப்ளீஸ்பா”-னு ப்ரதீப் சொல்லவும், சந்திரன், மதுரியா ரெண்டு பேருக்கும் மறுக்க முடியலே. அதுக்கப்புறம் இன்னும் கூட கொஞ்ச நேரம் பேசிட்டு இருந்துட்டு மதுரியாவும் ரீனாவும் கிளம்பினாங்க. நாலு பேர் மனசுலேயும் ஒரு நிம்மதி பரவத்தான் செஞ்சுது. அப்புறம் ப்ரதீப்பே ரெண்டுப் பேரையும் டிராப் பண்றேன்-னு சொல்லவும் மதுரியா நழுவப் பார்த்தா. ரீனா அவ தலையிலே ஒரு குட்டு வைச்சு, “மெச்சூர்டா நடந்துக்கிறேன் அப்படின்னு.. இப்படியெல்லாம் விலகிப் போகாதே. பார்க்க சகிக்கலே”-னு முகத்தை சுளிச்சு சொல்லவும் மதுரியா சிரிச்சுட்டா.
அதே சிரிப்போட வீட்டுக்குள்ளே வந்தவ எல்லார் கூடவும் ஜாலியாவே பேசினா. எல்லாருக்குமே ஆச்சர்யம், அதே சமயம் குழப்பம். எதனால இந்த திடீர் மாற்றம்-னு சுபத்ராவுக்குள்ளே பயமே வந்துச்சு இன்னிக்கு என்ன குண்டைத் தூக்கி போடப் போறாளோன்னு. “பரத்… அவ ஏதாவது சொன்னாளா?”-னு மதுரியா அவ ரூமுக்கு போனப்புறம் கேட்டாங்க. அவனும் உதட்டை பிதுக்கி இல்லே-னு தலையாட்டினான். “சுபா… என்ன-னு கேட்க சொல்றே? வருத்தமா இருந்தா ஏன்னு கேட்கலாம். சந்தோஷமா இருக்கறவளை ஏன்-னு எப்படி கேட்க முடியும்?”-னு கேட்டார் நித்தியானந்தம். “இல்லேப்பா திடீர்-னு சந்தோஷம் தெளிவு அதான். எங்கே இன்னொருத்தர் கஷ்டத்துலே சந்தோஷப்படறவளா மாறிட்டாளோ-னு பயம்”னு அவங்க முடிக்கறதுக்குள்ளே, “வாயை மூடு”-னு சீறினார் நித்தியவாசன். “யாரைப் பத்தி என்ன பேச்சு பேசறே? என் பொண்ணு அவ. இன்னொரு வார்த்தை அத்து மீறி பேசினே அவ்வளவு தான்”-னு பொல பொல-னு கிழிச்சு தொங்கவிட்டார். “அப்பா.. விடுங்கப்பா”-னு தியா சப்போர்ட் பண்ணவும், “வேறே என்ன தியா? இப்போ வரைக்கும் ஒரு வார்த்தை – உங்களால தான் என் லைஃப் போச்சு-னு ஒரு நாளாவது சொல்லி இருப்பாளா?”-னு சலிப்பா சொன்னார் நித்தியவாசன். “சாரிப்பா… ஏதோ பயம்”-னு சின்ன குரல்லே சுபத்ரா சொல்லும் போதே நைட் டிரெஸ் சகிதம் சாப்பிட வந்தா மதுரியா.
எல்லாரும் ஏதோ பேசி கலகலத்து சாப்பிடும் போது, “அப்பா, விதுரனுக்கு என்ன ஆச்சுப்பா?”னு சாப்பாட்டை கவனமா சாப்பிட்டு கிட்டே கேட்டா மதுரியா. பரத்துக்கு புரையேறிச்சுன்னா. சாப்பாடு எடுத்த கை அப்படியே அந்தரத்துலேயே நின்னுச்சு நித்தியவாசனுக்கு “என்னப்பா? சாப்பிடுங்க..”-னு சொன்னா. “ஏம்மா? மீட் பண்ணியா?”-னு கேட்டார் நித்தியவாசன். “ஆமாம்பா…. பார்த்தேன்! ஒரு மாசம் முன்னாடி. நடேசன் பார்க் வாசல்லே. நான் கனவுலே கூட நினைச்சு பார்க்காத கோலத்துலே. ஏன்பா? அவர் வை… அது.. அந்த பொண்ணு இருக்கா தானே? அப்புறம் எப்படி?”-னு கேட்டா மதுரியா. இன்னொரு பொண்ணை பொண்டாட்டி-னு கூட சொல்ல முடியலே மதுரியாவுக்கு-னு யார் கவனிச்சாங்களோ இல்லையோ பரத் கவனிச்சு அவளை கூர்மையா பார்த்தான்.
மதுரியா அதை கண்டும் காணாம விட்டுட்டா. “ரியாம்மா ஆறு ஏழு மாசம் முன்னாடி, விதுரன் பெரிய ப்ரைவேட் காண்டிராக்ட் ஒண்ணு கொண்டு வந்தான். ரொம்ப பெரிசு. மூர்த்தி கம்பெனிக்கு மீறியது. மல்டி ஸ்டோரீட் காம்ப்ளெக்ஸ் டைப் ப்ராஜெக்ட்லாம் விதுரன் தானே பார்த்துக்கிட்டான்? அலைஞ்சு புடிச்சு கொண்டு வந்ததால, அதை செஞ்சே தீரணும்-னு பிடிவாதமா இருந்துட்டான் போல. இது வேண்டாம்-னு அப்பாவும் நானும் மூர்த்தி கிட்ட சொன்னோம். ஆனா யார் சொல்லியும் கேட்கலே… கடைசியா மூர்த்தி, அவன் சம்பளம், சேவிங்ஸ் மீறி அதை விட எதுவும் செய்யக் கூடாது-னு சொல்லிட்டான். வேறெ என்ன பண்ணுவான்?”-னு பெருமூச்சு விட்டார் நித்தியவாசன்.
“அப்புறம்..”-னு கேட்டா மதுரியா. “வேறே என்னவாகும்? அந்த பெரிய காண்டிராக்ட் கிடைக்கணும்-னு அகலக்கால் வைச்சான். பணக்கடன், அந்த ப்ராஜெக்ட்லே வர்க் பண்ண புது டீம் ரெக்ரூட்மெண்ட்-னு செலவுக்கு அளவே இல்லாம போச்சு. ஆனா காண்டிராக்ட் மிஸ் ஆகி, பீனா பில்டர்ஸுக்குப் போயிடுச்சு.. அங்கிளுக்கு பெரிய லாஸ். நல்ல வேளை… அதே சமயத்துலே கவர்ன்மெண்ட் காண்டிராக்ட் ஒண்ணு ரிஷியோட ஃப்ரெண்ட் மூலமா கிடைக்கவும், லாஸ் கையை கடிக்காம காப்பாத்திக்கிட்டார். விதுரனுக்கும் அங்கிளுக்கும் பிரச்சினை ஆகவும், தன்னோட அவ்வளவு நாள் சேவிங்ஸையும் வைச்சு வாங்கின கடனை செட்டில் பண்ணிட்டு, தனக்கும் அங்கிளோட சொத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை-னு எழுதிக் குடுத்துட்டு வீட்டை விட்டு போயிட்டான்”னு முடிச்சான் பரத். “ஆமா… அவனோட முதல் ப்ராஜெக்ட் – ‘ஆர்லேண்டோ கேடெட் கம்யூனிடி’-யை முடிச்சதுக்கு அந்த இன்வெஸ்டர் குடுத்த கிஃப்ட்.. அந்த ரோ ஹவுஸ் மட்டும் இல்லேன்னா நடுத் தெருவுலே நின்னிருப்பான்”-னு நித்தியானந்தம் சொல்லவும், “அவசரப்பட்டுட்டீங்களே தாத்தா… அதை அவளே கேட்கறாளா-னு பார்க்கத்தான் சொல்லாம விட்டேன்”-னு முணுமுணுத்தான் பரத். “ஓ… அந்த பொண்ணு,, அவரோடக் கல்யாணம்?”-னு காற்றாப் போன குரல்லே கேட்டா மதுரியா.
“தெரியலே ரியா. நிகேஷோட பர்த்டேக்கு முன்னாடி இருந்தே அவங்களை ஒண்ணா பார்க்கலே.. மூர்த்தி அங்கிளும் விதுரன் அவ்வளோ சீரியஸா இல்லே”-னு சொன்னார்-னு தியா சொன்னதும் அதுக்கு மதுரியா கிட்டே இருந்து எந்த பதிலும் இல்லே.