அத்தியாயம் 22(USAP)
பிறைமதி அறைந்ததில் உறைந்து போய் நின்ற செழியனோ சட்டென தன்னை மீட்டெடுத்துக் கொண்டு, “என்னடி நினைச்சிட்டு இருக்க? என் மேலயே கைவைக்குறீயா”
என்று எகிறிக் கொண்டு வர அவனை ஆழ்ந்து பார்த்த பிறையோ பேசாமலிருக்க தன்னை கட்டுப்படுத்திக் கொண்ட செழியனோ,
“ஊப்” என்று ஊதியவன் அவள் முன் கையை நீட்டியபடி
“பிறை நான் சொல்லுறத பொறுமையா கேளு இது பல பேர் உயிர் சம்பந்தப்பட்ட விஷயம்”
என்று அமைதியாக எடுத்துரைக்க அவளோ, “ஓகே, ஆனா என்னால இதுக்கு எந்த சொல்யூஷனும் கொடுக்க முடியாது அப்டி அவன் உயிரோட இருந்தாலும் இவ்வளவு நாள் மீனுவ கூட அவன் தேடி வரலையே”
என்று தனது சந்தேகத்தை வெளிப்படுத்த செழியனோ, “ஆனா, அவனுக்கு மீனு தேவை உனக்கு மீனுக்கிட்ட ஏதாவது டிபரன்ஸ் தெரிஞ்சிருக்கா?”
என்று பிறையிடம் கேட்க, “இல்ல அப்டி ஒன்னும் பெருசா எனக்கு தெரிஞ்சு கிடையாது”
என்று புருவத்தை சுளிக்க செழியனோ, “அதாவது மத்த சின்ன பசங்களுக்கும் மீனாக்ஷிக்கும்”
என்று இழுக்க பிறைமதியோ கண்களை மூடி ஏதோ யோசித்தவள், “இத எப்படி நான் மறந்தேன் எல்லா பசங்கள விடவும் அவ ரொம்ப கான்செண்ட்ரேட்டட் நம்ம மறக்குற விஷயத்த கூட நமக்கு நினைவுப்படுத்துவா கிட்டத்தட்ட ஹைலி இன்டலிஜெண்ட்”
என்று பிறைமதி தவிப்புடன் கூற செழியனோ மேசையில் ஒரு தட்டு தட்டியவன்,
“ம்ம் அது தான் அது தான் உன்னோட அண்ணனுக்கு வேணும் உன் அண்ணன் பிராணவனோட அபரிவிதமான கண்டுபிடிப்பு அதனால அவள தேடி கண்டிப்பா வருவான்”
என்று செழியன் கூற அவனை நம்பாது பார்த்த பிறையோ, “எப்படி சொல்லுற?”
என்றாள் புருவச் சுளிப்புடன் அதேசமயம் செழியன் ஏதோ சொல்ல வாயெடுக்க பிறைமதியின் அழைப்பேசி ஒலிக்க அதையேற்றவளுக்கு அப்பக்கம் என்ன கூறப்பட்டதோ,
“என்னது மீனுவ நீங்க கிண்டர் கார்டன்ல இருந்து நீங்க பிக் அப் பண்ணலயா?”
என்றதும் சிவாஸ்கரனோ, “இல்லம்மா நீ தான் யாருக்கிட்டையோ சொல்லி பிக் அப் பண்ண சொன்னியாம்”
என்று சிவாஸ்கரன் தடுமாற,”அப்பா நீங்க கொஞ்சம் அந்த மிஸ் கிட்ட போன கொடுங்க”
என்றவள் அந்த பாலர் பாடசாலைக்கு பொறுப்பான ஆசிரியரை லெஃப்ட் ரைட் வாங்க
சூழ்நிலையை புரிந்துக் கொண்ட செழியனோ,
“பிறை கொஞ்சம் ரிலாக்ஸ் ஆகு, போன என் கிட்ட தா” என்று அவளிடமிருந்து அழைப்பேசியை வாங்கியவன் “ஹலோ! ஐயம் ஏ.சி.பி அகச்செழியன்”
என தன்னை அறிமுகம் செய்து கொண்டவன் அப்பக்கம் இருந்த மீனுவின் ஆசிரியரிடம் தேவையான தகவல்களை பெற்றுக் கொண்டவன்,
தனது குழுவுக்கும் செய்ய வேண்டிய பணிகளை கட்டளையிட்டபடி பிறைமதியிடம் திரும்பியவன், “என்னை இந்த ஒரு முறை நம்பு கண்டிப்பா நான் மீனுவோட வாரேன்”
என்று கூற பிறைமதியோ, “இப்போ கூட உங்கள என்னால நம்ப முடியல ஏ.சிபி சார் ஆனா என்னால என்ன பண்ண முடியும் நான் உயிரா வளர்த்த என் பொண்ணு எனக்கு வேணும்”
என்று அவன் கண்ணை பார்த்து தீர்க்கமாக கேட்க அவனோ, “கண்டிப்பா கூட்டிட்டு வருவேன்”
என்றான் உறுதியான குரலில் அதே சமயம் வெளிநாட்டு எண்ணிலிருந்து அவனுக்கு அழைப்பு வர அதையேற்று காதில் வைத்தவன் அப்பக்கம் யார் பேசப் போகிறார்கள் என்று கணித்தவன் போல்,
“இங்கே பாரு யமகா மீனு என் தங்கச்சி குழந்தையும் தான் அப்படி விட்டுற மாட்டேன் கண்டிப்பா அவள பத்திரமா கூட்டிட்டு வருவேன்”
என்று உறுதியாக கூற யமகனோ, “உன்ன நம்பி மட்ட மல்லாக்கா படுத்து கிடக்க நான் ஒன்னும் கையாலாகாதவன் கிடையாது., நான் இந்தியா வந்துட்டேன் என் மீனுவுக்காகவும் பிறைக்காகவும் ஒழுங்கா வந்து என்ன பிக் அப் பண்ணிக்கிட்டு கழட்டுற ஆணிய கழட்டு”
என்று அழுத்தமாக கூற செழியனுக்கோ முகம் கோபத்தில் சிவந்தது. மனதுக்குள், ‘என்ன தைரியமிருந்தா என் பிறைன்னு சொல்லுவான் பிறை எனக்கு மட்டும் தான்’
என்று ஏதேதோ சிந்தித்தவன் அங்கு கண்கள் கலங்கி கையை பிசைந்துக் கொண்டிருந்த பிறையிடம் திரும்பி,
“ஏய்! இங்கே வாடி” என்று அழைத்தவன் அவள் கன்னத்தை வலிக்கப் பற்றி,
“நான் மீனுவோட வந்த அடுத்த மூணு நாள்ல உனக்கும் எனக்கும் கல்யாணம் என்னை மீறி எவன் மேலயாவது பார்வை போச்சு அவன கொன்னு அந்த இடத்துல சமாதி கட்டிருவேன்”
என்று மிரட்டி விட்டு வெளியேறியிருந்தான். அவளோ, ‘மீனு வந்ததும் இந்த பொறுக்கி கிட்ட இருந்து எப்படியாவது தப்பிச்சு போயிரனும்’
என்று மனதுக்குள் எண்ணிக் கொண்டாள்.
இங்கு சிறைச்சாலையில் காலை உணவுக்காக கைதிகள் வெளியே அழைத்து வரப்பட அங்கு புதிதாக அழைத்து வரப்பட்ட கைதிகள் இருபது பேரும் ஒருவொருக்கொருவர் கண்களால் சைகை செய்து எதையோ கதைத்து கொள்ள
அவர்களை கூர்ந்து நோக்கிய சயந்தனோ, “அரசு அவனுக இன்னைக்கே நம்ம கதைய முடிக்க பிளான் பண்ணிட்டானுக போல”
என்று முணுமுணுக்க அரசுவோ வாயருகில் கொண்டு சென்ற உணவை அப்படியே தட்டில் போட்டுவிட்டு, “அப்போ மீனுவ இந்திரன் கடத்திட்டான்”
என்று லேசாக முறுவலிக்க சயந்தனோ, “எந்த இந்திரன் அடுத்து மீனு யாரு?”
என்று கேட்கவும் அரசுவோ, “உன்கூட ஒன்னா படிச்ச இந்திரப்பிரணவன் உங்க அப்பாவோட இன்னொரு பொண்ணு யாழினிய கல்யாணம் பண்ணியிருந்தவனும் அவன் தான்”
என்றதும் சயந்தனோ, “என்னடா சொல்லுற? யமகன் தங்கச்சியவா அவன் கல்யாணம் பண்ணினான், யமகன் அவ்வளவு தூரம் கேர்லஸ்ஸான பெர்சன் இல்லையே”
என்று பேசிக் கொண்டிருக்கும் போதே அங்கு உணவு வாங்க தட்டுடன் நின்றிருந்த ஒருவன் அங்கு உணவு வழங்கிக் கொண்டிருந்த அதிகாரியின் கையில் தன் கையில் வைத்திருந்த தட்டை கூரிய ஆயுதமாக வளைத்து மாற்றி தாக்க,
அலறி துடித்துக் கொண்டு அவ்வதிகாரியும் கீழே விழ
சுதாரித்துக் கொண்ட அரசுவோ அவ்விடம் கொஞ்சம் கொஞ்சமாக கலவர பூமியாக மாறுவதை உணர்ந்தவனாக தனக்கு சாதகமாக இருக்கும் அதிகாரிகளுக்கும் கைதிகளுக்கும் கண்ணை காட்ட அவர்களும் அவன் சைகையை புரிந்துக் கொண்டு அடுத்தடுத்து செய்ய வேண்டிய பணிகளை துரிதமாக மேற்கொள்ள
அரசுவின் கவனம் இங்கில்லை என்று அறிந்துக் கொண்ட ஒரு கைதியோ அவனை நோக்கி கத்தியுடன் வர
இடையில் புகுந்து அவனது கையை பிடித்த சயனோ அவனது கையை இறுக்கி பிடித்து முறுக்கி நெஞ்சில் ஓங்கி ஒரு மிதி மிதிக்க அக் கைதியோ
தூரம் சென்று விழ,
அரசுவோ,”இன்னைக்கு தான் மச்சான் உருப்படியா ஒரு காரியம் பண்ணியிருக்க உடம்ப மட்டும் தான் மாடு மாதிரி வளர்த்து வச்சிருக்கன்னு தப்பு கணக்கு போட்டுட்டேன்”
என்று அவ்வளவு நெருக்கடியான சந்தர்ப்பத்திலும் நக்கல் செய்ய சயனோ, “உன் நக்கல் நையாண்டிய விட்டுட்டு இப்பயாவது சீரியஸா இரேன்டா”
என்று சயன் கூற அரசுவோ வேட்டியை மடித்து காட்டியபடி அங்கிருந்த உணவு பரிமாறும் பெரிய கரண்டியை எடுத்தவன்,
“நோ நெவெர் அரசுவுக்கு சீரியஸ் மூடே கிடையாது வரவும் வராது”
என்றபடி தன்னை அடிக்க வந்தவனை சமையல் கரண்டியால் அடி வெளுத்து வாங்க இன்னொரு குண்டனோ பின்னாலிருந்து “ஏய்!” என்று கத்தியபடி அரசுவை நோக்கி கோப்பையை உடைத்து பிளேடாக மாற்றியபடி குத்த வர
அரசுவோ, “என்னடா தம்பி குழம்பு வேணுமா?” என்று கேட்டபடி கொதிக்க கொதிக்க குழம்பை வாரி ஊற்ற சயந்தனும் ஒரு பக்கம் அடி வெளுத்து வாங்கிக் கொண்டிருக்க அதே சமயம்
சிவமும் அவனது ஆட்களும் உடற்பயிற்சி கூட்டத்திலிருந்த இரும்புகளுடன் ஆட்டத்துக்குள் புகுந்து அரசுவுக்கு எதிரான அதிகாரிகளையும் கைதிகளையும் அடி வெளுத்துவாங்க ஒருவனை கொன்று அவனது உடலையும் தூக்கி வீசியெறிய,
கிட்டத்தட்ட நினைத்தது போலவே சிறைச்சாலைக்குள் ரத்த ஆறு பாய்ந்தது. ஆனால் அரசு அச் சந்தர்ப்பத்தை கூட தனக்கு சாதகமாக பயன்படுத்தி தனக்கெதிராக செயற்படும் ஒவ்வொருவரையும் கொன்று குவிக்க
இங்கு போலீஸ் தலைமையகத்துக்கு சிறையில் நடக்கும் கலவரம் குறித்து அரசுவின் கட்டளைப்படி அரைமணிநேரம் கழித்தே செய்தி கிடைக்க அச்சுதனும் அகமியும் தான் தங்களுக்கு தேவையான படைகளை திரட்டிக் கொண்டு சிறைச்சாலைக்கு விரைந்து செல்ல முற்பட்டு கொண்டிருந்தனர்.
சிறைச்சாலையிலோ சத்யசீலன் தனக்காக ஒதுக்கப்பட்ட தனிமைப்படுத்தப்பட்ட இடத்தில் கூண்டில் அடைப்பட்ட புலியாக அந்த அறையை சுற்றி வந்துக் கொண்டிருந்தார். அவர் நினைத்த காரியம் முடித்ததா இல்லையா என்று அறிந்துக் கொள்ள அவருக்கு அதீத ஆர்வம் நேரத்தையும் வெளிப்புறத்தையும் எட்டிப்பார்த்தபடி
காலத்தை கழித்தவர் அங்கிருந்த மெத்தையில் படுத்து கிடக்க அவரது உடலை ஒரு உயர்ந்த நிழல் மறைக்க,
“என்னடா அரசு” என்றபடி சட்டென திரும்பி பார்த்தவர்,
“நீ இன்னும் இன்னும்” என்று தடுமாற அரசுவோ, “சாகல டேடி” என்று நக்கலாக சிரித்தவன் அங்கிருந்த கட்டில் அமர்ந்தபடி நிதானமாக,
“ஏன் ப்பா இப்படி பண்ண? எதுக்காக ஒரு குடும்பத்தையே கருவறுக்கணும்னு இப்படியெல்லாம் பண்ண?”
என்று கேட்க சத்யசீலனுடைய தொண்டை வறண்டு போக, “நான் நான் என்னடா பண்ணேன்”
என்று கேட்க அரசுவோ, “எக்ஸ்பைரி ஆன மருந்த டிஸ்ட்ரிபியூட் பண்ண அந்த பழியை தூக்கி சயந்தன் மேலையும் யமகன் மேலையும் போட பார்த்த, அந்த யாழினி பொண்ண கொன்ன, எப்படியாவது அகமேந்திய கொல்லனும்னு பிளான் பண்ணி எனக்கு கட்டி வச்ச அவளை தற்கொலைக்கு தூண்டி இருக்க இதெல்லாம் பண்ணது நீ தானே ஏன் பண்ணின?”
என்று அரசு உறுமலாக கேட்க சத்யசீலனோ, “எல்லாம் தெரிஞ்சிக்கிட்டியா மகனே, ஆமா நான் தான் பண்ணினேன் என்னோட சரோஜினிக்காக பண்ணினேன், எனக்கு கிடைக்காத அங்கீகாரத்துக்காக பண்ணினேன்”
என்று பித்து பிடித்தவர் போல் சிரிக்க அரசுவோ அவரை ஆழ்ந்து பார்த்தானே தவிர ஒன்றும் பேசவில்லை.
தொடரும்…