அத்தியாயம் 25

சிறிது நேரத்தில் நறுமுகை மட்டும் லேப் இருக்கும் தளத்திற்கு சென்றாள்… அவனும் தன் வேலைகளை முடித்துவிட்டு வந்துவிட… முதலில் நாகராஜன் சாருக்கு தான் ஒன்றாக சேர்ந்து பத்திரிக்கையை நீட்டினர்…

 

அதை பார்த்ததும் உண்மையில் அவர் அதிர்ச்சி தான் அடைந்தார் …

 

“விக்ரம் கல்யாணமா..??? ”

 

“ஆமா சார்… வீட்ல அரேஞ்ச் பண்ணாங்க..”

 

” சூப்பர்… சூப்பர்ப்பா… நறுமுகை தான் பொண்ணா.. ரொம்ப நல்ல விஷயம்.. ப்ராஜெக்ட் பண்ணும் போதே எங்கேஜ்டா அப்போ ..??”என கேட்டதும் ஆம் என்று தலையசைத்து வைத்தான் விக்ரம் …

 

“ரொம்ப சந்தோஷம்ப்பா.. ரொம்ப சந்தோஷமா இருக்கு.. ரெண்டு பேரும் எப்பவும் நல்லா இருக்கணும்…”  என மனதார வாழ்த்து தெரிவித்தார்..…

 

” கண்டிப்பா நீங்க கல்யாணத்துக்கு வரணும் சார் ..”என இருவரும் கோரிக்கை வைத்திட,

 

“கண்டிப்பா வரேன் …”என்று விட்டார்…

 

அதன் பின் ஒவ்வொரு பேராசிரியர்களுக்கும் இருவரும் சேர்ந்து பத்திரிக்கையை வைத்தனர்…

 

அனைவரும் அதிர்ந்து தான் போயினர்.. தலைமை ஆசிரியருக்கும் பத்திரிக்கை வைத்திட அவர் தான் அட்டகாசமான சிரிப்புடன் இருவருக்கும் வாழ்த்தினை தெரிவித்தார்… 

 

பிறகு நறுமுகையின் ஜூனியர் மாணவர்களுக்கும் மொத்தமாய் சேர்த்து பத்திரிக்கை வைத்திட.. அவ்வளவு தான் அனைவரும் ஒன்றாய் சேர்ந்து,

 

” ஹேஏஏஏஏஏஏ…..”  என்று கத்தி விட்டிருந்தனர் …

நறுமுகையின் வகுப்பிற்கும் இருவரும் சேர்ந்து ஒன்றாய் வந்திட…மொத்தப் பேரும் அவர்களை தான் ஆச்சரியமாய் பார்த்து வைத்தனர்…

 

 

ஜான் தான்,

 

“விக்ரம்ண்ணா என்ன விஷயம்..?” என கேட்டிட….விக்ரம் புன்னகையுடன் நறுமுகையிடம் கையை நீட்டினான்….பையில் இருந்து பத்திரிகையை எடுத்து அவனிடம் தந்ததும் அதை வாங்கி கொண்டவன் நேரே கிறிஸ்டோபரை பார்த்து,

 

“இங்க வாடா…”என அழைக்கவும் அவனும் புரியாது அங்கு வந்திட…அனைவரையும் பார்த்தவாறு பத்திரிக்கையை மேலே தூக்கி காட்டிய விக்ரம்,

 

“எனக்கும் உங்க கிளாஸ் பொண்ணு நறுமுகைக்கும் கல்யாணம்….கண்டிப்பா எல்லாரும் வரனும்…” என்றதும் அனைவரது முகத்தாலும் பேரதிர்ச்சி அப்பட்டமாய் தெரிந்தது…

 

அதும் கிறிஸ்டோபரை சொல்லவே வேண்டாம்…

 

“நிஜமாவா…?” என கேட்டவனின் கரத்தில் பத்திரிகையை திணித்து,

 

“உங்க எல்லார் சார்பா இவன்கிட்ட தரேன்…”என்றதும் ஜானும் குமாரும் தான் முதல் ஆளாய் ஓடி வந்து விக்ரமை அணைத்து வாழ்த்து தெரிவித்தனர்.…

 

கெளசல்யா மற்றும் அஸ்வினி முகத்தில் ஈயாடவில்லை….உச்சபட்ச அதிர்ச்சியுடன் கவிதாவை தான் பார்த்தனர்…அவளோ சிரித்தவாறு இருவரையும் பார்த்திட அதில் கண்டுகொண்டவர்கள்,

 

“ஏய் கவிதா அப்போ உனக்கு முன்னாடியே தெரியுமா…?”என கேட்டதும் அவளும் நடந்ததை சுருக்கமாய் கூறியதும் அஸ்வினி கூட ஏற்றுக்கொண்டாள் நல்வாழ்க்கை முகைக்கு அமைந்தால் சரிதான் என்று…கெளசல்யா முகம் தான் எரிந்தது எனலாம்…

ஆம் கெளசல்யாவிற்கு எப்போதும் முகையின் மீது பொறாமை எப்போதும் உண்டு….ஒருபோதும் அவள் வெளிக்காட்டி கொண்டதில்லை…

 

இளங்கலை படிக்கும் போது இயல்பாக இருந்தாலும் தக்க சமயத்தை எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்தாள் எனலாம் தனது வன்மத்தை கக்கிட…

 

அதற்கு ஏற்றாற்போல முதுகலையில் அனைத்தும் நறுமுகைக்கு எதிராக அமையவும் தனக்கு சாதகமாக்கி கொண்டவள் வேண்டும் என்றே கவிதாவை நறுமுகையிடம் இருந்து பிரித்தாள்…

ஆம் வேண்டும் என்று தான்….கவிதா நறுமுகையின் மீது கொண்டிருக்கும் பாசத்தை காணும் போதெல்லாம் தனக்கு அது போல கிடைக்கவில்லையே என்கிற பொறாமை மற்றும் தாழ்வு மனப்பான்மை எப்போதும் கெளசல்யாவிடம் இருக்கும்…

 

போதாக்குறைக்கு கவிதா நறுமுகையை கொண்டாடுவாள்…

ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து செய்யும் போது உள்ளுக்குள் பொறாமை தீ பற்றி எரிந்தாலும் வெளியே காது வரை சிரித்துக் கொண்டிருப்பாள் கெளசல்யா…

 

தோழிகளை பிரித்தாயிற்று இனி தான் மட்டும் தான் கவிதாவிற்கு…அஸ்வினி கூட அவ்வளவாய் கண்டுக்கொள்ள மாட்டாள் …நறுமுகையின் இடத்தை தான் பற்றி கொண்டோம் என மிதப்பாக இருந்தாள்.…

 

ஆனால் ப்ராஜெக்ட்டிற்கு இருவரையும் ஒன்றாக போட்டதும் உள்ளுக்குள் குமைந்து கொண்டிருந்தாள்…

 

இப்போது தங்களுக்கு கூட சொல்லாமல் நறுமுகை தனது விடயத்தை கவிதாவிடம் கூறி இருக்கிறாள் அத்தோடு கவிதாவும் தங்களிடம் கூறாது இருப்பதை அறிந்து முகம் செத்து விட்டது கெளசல்யாவிற்கு..

உண்மையில் அவளை செருப்பால் அடித்தது போல் இருந்தது…

 

விக்ரம் அனைவரையும் சிரிப்புடன் பார்த்தவன் பின் கிறிஸ்டோஃபரிடம் சத்தமாகவே வேண்டும் என்றே,

 

” இனி நறுமுகையை பத்தி யாரிடமும் தப்பு தப்பா சொல்லிட்டு இருக்க வேண்டாம் கிறிஸ்டோஃபர்….”  என முகத்துக்கு நேரே சொல்லி விட்டு இருந்தான் விக்ரம்…

 

அவனது பேச்சினையை அருகே நின்றிருந்த நறுமுகல கூட எதிர்பார்க்கவில்லை…

அதிர்வுடன் அவனை பார்த்தவள் சட்டென தலை திருப்பி அனைவரையும் ஒரு பார்வை பார்த்து விட்டு விக்ரமின் மணிக்கட்டை  பிடித்து அழுத்தம் வந்தவளாய்,

 

“விக்ரம் …” என்றதும் தன்னவளது தோள் மீது கை போட்டு தன்னுடன் நெருக்கிக் கொண்டு கிறிஸ்டோஃபரை பார்த்தவன் ,

 

“நீ தானே நறுமுகையும் குமாரும் லவ் பண்றாங்கன்னு எல்லார் கிட்டேயும் சொல்லிக்கிட்டு இருந்தது. 

அதைக் கேட்ட கவிதா முதல் கொண்டு ஒட்டுமொத்த மாணவர்களுக்கும் அதிர்ச்சியாக இருந்தது .…

 

கிறிஸ்டோஃபர் முகத்திலோ ஈயாடவில்லை …

 

“அ…அண்..ணா… அது…”  என பதற்றத்துடன் மழுப்ப முயன்றவன் முன்பு கரம் நீட்டி தடுத்த விக்ரம்,

 

” எனக்கு எல்லாமே சாமுவேல் சொல்லிட்டான்…”என சாமுவேலையும் கிடைத்த இடைவெளியில் போட்டு தந்திருந்தான் விக்ரம் …

 

“சாமுவேல் கிட்ட நீ சொல்லிட்டு இருந்தியாமே அவன் தான் என்கிட்ட சொன்னான்.. முதல்ல ஒருத்தவங்களை உனக்கு பிடிக்கலைன்னா அவங்களை விட்டு விலகிடு..

அத விட்டுட்டு தேவையில்லாம தப்பு தப்பா அவங்களை பத்தி காஸிப் பண்ணிட்டு இருக்காத.. இது தான் உனக்கு லாஸ்ட் வார்னிங்..”  என்றதும் கிறிஸ்டோஃபர்  அனைவரையும் தயக்கமாக பார்த்துவிட்டு விக்ரமிடம்,

 

“ சாரிண்ணா…”

 

”  என்கிட்ட கேட்காத கிறிஸ்டோஃபர் நறுமுகை கிட்ட கேளு …ஏன்னா உன்னால அவ தான் ரொம்ப பாதிக்கப்பட்டு இருக்கா..”  என்று விட்டு கவிதாவை தான் தலை திருப்பி  அழுத்தமாய் பார்த்து வைத்தான் விக்ரம்…

கவிதாவிற்கு சட்டென கண்களில் கண்ணீர் குளம் கட்டி விட்டது …

 

கௌசல்யா அஸ்வினி கூட இதை எதிர்பார்க்கவில்லை… அஸ்வினி எதையும் முகத்திற்கு நேரே பேசும் பழக்கம் இருப்பதால் தயங்காது அந்த இடத்தில் கேட்டு விட்டிருந்தாள்,

 

” எதுக்கு கிறிஸ்டோஃபர் இது மாதிரி வேலை எல்லாம் பார்த்துட்டு இருக்க ..?? அப்ப வேணும்னே தான் அவளை எங்க கிட்ட இருந்து பிரிக்கறதுக்கு பிளான் பண்ணியா..???

அப்படி என்ன காண்டு உனக்கு..???  கொஞ்சம் கூட வெக்கமாவே இல்லையா உனக்கு..??”  என் இஷ்டத்திற்கு பேச ஆரம்பிக்கவும் விக்ரம் தான்,

 

” அவனை மட்டும் தப்பு சொல்ல முடியாது.. முதல்ல உங்க ஃப்ரண்ட் மேல உங்களுக்கு நம்பிக்கை இருக்கணும் யார் யாரோ என்னவோ சொல்றாங்கன்னு நம்பிட்டு அவளை நீங்க விட்டுட்டீங்களே..!”  என நறுக்கென்று கேட்டதும் அஸ்வினிக்கும் குற்ற உணர்வாகியதால் அமைதியாகி விட்டாள்…

 

பெருமூச்சு விட்ட விக்ரம் ,

 

“ஓகே இந்த பிரச்சனையை இதோட விடுங்க.. இதுக்கப்புறம் நீங்க எல்லாம் எப்ப மீட் பண்ணுவீங்கன்னு எனக்கு தெரியாது..

பட் எல்லாரும் கல்யாணத்துக்கு வரணும்..”  என கூறி விட்டு சென்று விட்டான் …

 

கவிதாவிற்கு பேச்சே வரவில்லை ..நறுமுகையிடம் வந்து அவளது கைகளைப் பிடித்துக் கொள்ள.. அவள் அழுவதை கண்டதும் நறுமுகைக்கும் ஒரு மாதிரியாகி விட்டது,

 

“ அழாத ..கவிதா…”

 

“இல்லடி யார் என்ன சொல்லி இருந்தாலும் நான் உன்னை விட்டு இருக்க கூடாது…சாரி முகை…” என்றதும் தானும் அவளது கைகளைப் பிடித்துக் கொண்டு,

 

“ விடுடி …”

அஸ்வினியும் கூட ,

 

“அவன் இப்படி எல்லாம் பண்ணுவான்னு நினைக்கல.. அவனே உன்னை பத்தி எல்லார்கிட்டயும் தப்பு தப்பா பேசிட்டு எங்க கிட்ட அப்படி பேசினான்…ப்ச் எங்களை முதல்ல சொல்லணும்… ஏன் தான் பேசினதெல்லாம் நம்பினோமோ… சாரிடி ” என்றிடவும் கௌசல்யாவும் கிடைத்த கேப்பில்,

 

” சாரி முகேஷ்…”  என்றதும் அமைதியாக அதை ஏற்றுக் கொண்டாலும் நறுமுகையால் முன்பு போல் அவர்களிடம் ஒட்ட மனம் வரவில்லை…

 

ஒரு முறை பட்ட வடு இன்னும் அவள் மனதில் ஆறாமல் இருப்பதால்…

 

 

 

அதன் பின் விக்ரமின் நண்பர்கள்,அவனுடன் பிஎச்டீ சேர்ந்து செய்தவர்கள் என அனைவருக்கும் இருவரும் சேர்ந்து பத்திரிக்கை வைத்து திருமணத்திற்கு அழைப்பு விடுத்தனர் …

அனைவரும் அதிர்ந்து பின் அவர்களை வாழ்த்தினர் ..

 

 

அனைவருக்கும் பத்திரிக்கை வைத்து முடியவே மாலை கடந்து விட்டது… பிறகு நறுமுகையே,

 

” வீட்டுக்கு கிளம்பலாம்.. அம்மா சீக்கிரமா வர சொன்னாங்க விக்ரம்…”  என்றதும் அவளது கரங்களைப் பிடித்துக் கொண்டவன் ,

 

” ஒருமுறை மாடிக்கு போயிட்டு வரலாமா..??”  என ஆசையாக கேட்டதும் மறுக்க முடியவில்லை நறுமுகையால்…

 

சரி என தலையசைத்தும் இருவரும் கரங்களோடு கரம் கோர்த்து மொட்டை மாடிக்கு சென்றனர்…

 

யாருமில்லை மாலை ஆனதால் நிறைய பேர் வீட்டிற்கு சென்று விட்டிருந்தனர் .‌‌சுற்றிலும் மரங்கள் வேறு அதனால் காற்று நன்றாகவே வீசி அவர்களை குளிர்வித்து கொண்டு இருந்தது …

 

தன் கையைப் பிடித்தவாறு இருந்தவளை பார்த்தவாறு நின்றிருந்தான் விக்ரம்..

நறுமுகையும் அவனையே பார்த்திருந்தவள் பின் மெல்ல தன் கைப்பையைத் திறந்து அதில் இருந்து ஒரு பரிசினையும் அதற்கு மேல் சிவப்பு நிற ரோஜா பூ ஒன்றையும் வைத்து அவனிடம் நீட்டியவள் ,

 

” ஐ லவ் யூ விக்ரம்…”  என்றாள் அவனது விழிகளை நேருக்கு நேராய் பார்த்த தயக்கமே இன்றி… 

விழி விரிய அவளை பார்த்த விக்ரம் இதை எதிர்பார்க்கவே இல்லை …

 

வாயில் கை வைத்து ஆச்சரியப்பட்டவனாய்,

 

“நறு…”  என்கிற அழைப்புடன் அவளது தோளை சுற்றி கையை போட்டு அணைத்துக் கொண்டவன் அவளது நெற்றியில் அழுந்த முத்தமிட்டு தலை குனிந்து அவளது விழியோடு விழிகள் கலக்கவிட்டவாறு,

 

” ஐ லவ் யூ டூ நறுமுகை…”  என அத்தனை மென்மையாய் உரைத்தவன் அவளது கண்களில் அழுத்தமாய் முத்தமிட்ட கணம் விக்ரமின் கண்கள் கலங்கி விட்டிருந்தது… 

 

இருவரும் திருமணத்தில் இணைவோம் என நிச்சயம் அவர்களே எதிர்பார்க்கவில்லை..

அவர்களது ஆரம்பம் வேண்டுமானால் கோணலாக இருக்கலாம் ..ஆனால் இருவரும் கரை சேரும் இடம் ஒன்று தான்..

 

நாட்கள் வேகமாய் சென்றிட….இருவரது திருமண நாளும் வந்தது…

 

காலையில் திருமணம் மாலையில் வரவேற்பு என ஏற்பாடு செய்திருந்தனர்…

 

அடர் குங்கும நிற காஞ்சிப்புற பட்டு உடுத்தி மேனி முழுவதும் தங்க நகைகளால் அலங்கரித்து இருந்தனர் நறுமுகையை…

 

வளவன் தன் மகளுக்கு என பார்த்து பார்த்து சேர்த்து வைத்து இருந்த நூறு பவுன் தங்க நகையை குறைவின்றி அவளுக்கு அணிவித்து கண் குளிர பார்த்து மகிழ்ந்தார்…

 

விக்ரம் ஏற்கனவே கம்பீரமாக இருப்பான்..தற்போது திருமணத்திற்கு என மீசையை அடர்த்தியாய் விட்டு தாடியை முற்றிலும் மழித்து, தலை முடியினை சீராக வெட்டி பார்க்கவே பளிச் என்று இருந்தான்…

 

தங்க கரை வைத்த பட்டு வேட்டு சட்டையில் ஆணழகனாய் தயாராகி இருந்தான் விக்ரம்….தேசிங்கன் வைத்திருப்பதோ நகைக்கடை…சும்மாவா வைத்து இருப்பார் நகைகளை…?

 

மகள் என்றால் அள்ளி போடலாம்.‌. மகன்  எனாறால் கிள்ளி போடலாம்..என யார் சொன்னது…

இதோ தங்களது ஒற்றை மகனுக்கு காதில் வைரக்கல் பதித்த கடுக்கண்… சற்று தடிமனான சங்கிலி  கழுத்தினை ஒட்டி போட்டிருக்க…அதற்கு அடுத்து நல்ல பார்வையான கொஞ்சம் நீளமான சங்கிலி போட்டு இருந்தான்…அதற்கு அடுத்து இன்னும் நீளமான வைரக்கல் பதித்த டாலர் வைத்த சங்கிலி அணிந்து இருந்தான் விக்ரம்..

ஒரு கரத்தில் வைரக்கல் பதித்த பிளாட்டின பிரேஸ்லெட் அணிந்திருந்தவன் மறூகரத்தில் தங்க கைகடிக்காரத்தை அணிந்து இருந்தான்…

இருவரையும் அவர்களது பெற்றோர் தங்கத்திலும் வைரத்திலும் குளிப்பாட்டி இருந்தார்கள் எனலாம்….…

 

ஒருவரை ஒருவர் காதலுடன் பார்த்தவாரு மணமேடையில் அமர்ந்து இருக்க …அனைவரது ஆசீர்வாதத்தோடு தன்னவள் கழுத்தில் தங்கத்தாலியை அணிவித்து முறைப்படி தன் சரிபாதியாக்கி கொண்டான் நறுமுகையின் விக்ரம்…

.

 

 

❤️ Loading reactions...
0 Comments
Oldest
Newest Most Voted
error: Content is protected !!
Scroll to Top