அத்தியாயம் 26

தன்னவனின் கரம் பிடித்து முதன் முதலாக அவனது வீட்டிற்கு வந்திருந்தாள் நறுமுகை…

 

விக்ரமின் அன்னையான சுகன்யா மற்றும் உறவினர் பெண்களுடன் சேர்ந்து மகனுக்கும் மருமகளுக்கும் ஆரத்தி எடுத்து அவர்களை உள்ளே வரவேற்றனர்…

 

தனது வலது காலை எடுத்து வைத்து தன் புகுந்த வீட்டிற்கு  உள்ளே நுழைந்தாள் நறுமுகை…வீடு நல்ல பெரியதாகவே இருந்தது …

மணமக்கள் ஜோடிகளுக்கு பாலும் பழமும் தந்திட இருவரும் ஆளுக்கு பாதியாய் உண்டு முடித்தனர்… மற்ற சடங்குகளும் ஒருவழியாய் நடந்து முடிந்தது …

உண்மையில் நறுமுகைக்கு மிகுந்த களைப்பாக இருந்தது எனலாம் …

 

கொட்டாவியை கைகளை மறைத்தபடி விட்டுக் கொண்டிருக்க ..அவள் நிலை  உணர்ந்த விக்ரம் அவள் காதோரம் குனிந்து,

 

” ரொம்ப டயர்டா இருக்கா ..?” என கேட்டதும் தயங்கவில்லை அவள்,

 

” ஆமாங்க.. தூக்கமா வருது..”  என மெல்லிய குரலில் உரைத்ததும் அவளது கரத்தில் அழுத்தம் கொடுத்தவாறு தன் அன்னையை தான் தேடினான்..

 

வந்திருந்த உறவினர்களும் பிரம்ம நேர முகூர்த்தம் என்பதால் தூக்கம் கண்களை சுழட்ட ஆளுக்கு ஒரு இடத்தில் படுத்து விட்டிருந்தனர் …

 

மகனின் பார்வை உணர்ந்து அவ்விடம் அந்த சுகன்யா,

 

“ என்னப்பா ஜூஸ் ஏதாவது கொண்டு வரவா..??”

 

“ம்மா… டயர்டா இருக்கா.. ரெஸ்ட் எடுக்கட்டுமே..”  என்றதும் ,

 

“சரிடா …. உன் ரூமுக்கு தான் கூட்டிட்டு போ… நகையெல்லாம் கழட்டி பத்திரமா எடுத்து வைக்க சொல்லு.. நீ வேற ரூம்ல ரெஸ்ட் எடுத்துக்கோ..”  என்றதும் சரியென தன்னவளது கரத்தை பிடித்தபடி மாடி ஏறினான் தன்னறைக்கு செல்வதற்கு…

 

அவளோ,

 

“ மாடியில் தான் உங்க ரூம் இருக்கா..??”

 

” ஆமா.. இந்த வீடு கட்டும்போது எனக்கு மாடியில் தான் ரூம் வேணும்னு கேட்டேன்.. அதனால அப்பா எனக்காக பார்த்து பார்த்து கட்டினாங்க..”  என்றதும் விழிகள் உயர்த்தி ஆச்சரியப்பட்டுக் கொண்டவள்,

 

” எங்க வீட்ல அப்படி எல்லாம் இல்ல.. வயசானா நம்மளுக்கு கால் வலி வரும் அதனால கீழேயே கட்டிக்கலாம்னு எங்க அப்பா அம்மா ஒரே ப்ளோரா கட்டிக்கிட்டாங்க…” என்றதும் வாய்விட்டு சிரித்த விக்ரம் ,

 

“நீ கவலைப்படாத நமக்கு வயசான நான் லிப்ட் வைச்சுடுகிறேன் மாமா உனக்கு..”  என்றதும் இதழ் பிரிய புன்னகைத்துக் கொண்டாள் நறுமுகை.…

 

பூக்களால் கதவிலும் அலங்கரித்து இருந்தனர்… அவற்றை எல்லாம் பார்த்தவாறு நறுமுகை இருந்திட.. மெல்ல கதவை திறந்தான் விக்ரம்..

முதல் ஆளாய் உள்ளே நுழைந்த நறுமுகை அவ்வறையை கண்டு உண்மையில் ஆச்சரியப்பட்டு போனாள்…

 

அத்தனை நேர்த்தியாக வைத்திருந்தான் அறையினை.. புத்தகங்களுக்கென்று ஒரு பக்கத்தையே விட்டிருந்தான்..

பெரிய அலமாரி முழுக்க ஏகப்பட்ட புத்தகங்கள் வைத்திருந்தான் …அவற்றைக் கண்டதும் அடிவயிறு கலக்கம் கொண்டது நறுமுகைக்கு..

 

அவளையே பார்த்தவாறு தானும் உள்ளே வந்த விக்ரம் முதல் வேலையாய் அவன் செய்தது கதவை தாழ் போட்டது தான் …

 

உரிமையாய் அவளை பின்னிருந்து அணைத்து கிறக்கமாய் முகம் புதைத்துக் கொண்டவன்,

 

“ரூம் பிடிச்சிருக்கா ..?”

என கிசுகிசுப்பான குரலில் கேட்டதும் பெண்ணவளோ அதற்கு பதில் அளிக்காமல்,

 

” நீங்க என்ன உங்க ரூம்ல ஒரு லைப்ரரியேவே வச்சிருக்கீங்க..?? இவ்வளவுத்தையும் படிப்பீங்களா..?”என வாயை பிளந்தபடி கேட்டு வைத்தாள்… 

 

“பின்ன பிஎச்டினா சும்மாவா..??? நிறைய புக்ஸ் படிச்சு ஒன்னு ஒன்னுத்தையும்  ரெஃபர் பண்ணி பண்ணி பார்ப்பேன்…ப்ச் அதெல்லாம் விடுடி..”  என கிறக்கமாய் அழைத்ததும் அவனது அணைப்பில் கண்களை இதமாய் மூடிக்கொண்டவள்.. தன் வயிற்றின் மீது இருந்த அவன் கரத்தின் மீது தானும் தன் கரத்தை கெட்டியாக பிடித்துக் கொண்டு,

 

“சரி… சொல்லுங்க..” என்றதும் அவளை தன் புறம் சடார் என்று திருப்பி நிற்பாட்டியவன்,

 

” சொல்லுங்கன்னு சொல்லும்போது உடம்பெல்லாம் என்னவோ பண்ணுதுடி…” என்றவன் இருவருக்கும் இடையில் நூலளவு கூட இடைவெளியை தந்திடவில்லை… 

 

அவள் நெற்றியோடு நெற்றி முட்டி இதழோடு இதழ் உரச,

 

” மார்னிங்ல இருந்து எவ்வளவு அவஸ்தையா இருந்தேன் தெரியுமா..?… அவ்வளவு அழகா இருக்க நறு…. உன்னை பார்த்துக்கிட்டே இருக்கணும் போல இருக்குடி… நான் எங்கெல்லாம் உன்னை பார்க்கலையோ அங்க எல்லாம் பார்க்கணும்னு தோணுது..” என வெளிப்படையாகவே எதற்கோ அடிபோட்டான் விக்ரம்…

 

நறுமுகையும் விழிகள் மூடி கிறங்கி இருந்தவள் அவன் பேச பேச அவன் தொடுதலிலும் உரசலிலும் பேச்சிலும் கொஞ்சம் கொஞ்சமாய் தன்னிலை இழக்க ஆரம்பித்தாள்…

மெல்லா அவன் கன்னம் தாங்கியவள் ,

 

“விக்..ரம்… ” என முனங்கிட…

அவ்வழைப்புக்காகவே காத்திருந்தது போல இதழோடு இதழ் ஒற்றி எடுத்தவன் ,

 

“ஐ நீட் யூ ..ரைட் நவ்  நறு…கண்ட்ரோல் பண்ணவே முடியல.. ஏற்கனவே உன் பக்கத்துல இருந்தாலே என்னால சும்மா இருக்க முடியா..து இப்போ உன்னோட முழுசும் எனக்கு மட்டும் தான்… உரிமையா உன்னை பக்கத்துல வச்சிருக்கேன்.. என்னால இதுக்கு மேல நைட் வரைக்கும்லாம் வெயிட் பண்ண முடியாது ப்ளீஸ்…”  என கொஞ்சலாய் அவன் கெஞ்சியதும் அவனது கன்னத்தை அழுந்து பிடித்து தன்னை நோக்கி இழுத்து இதழோடு இதழ் ஒற்றி தன் சம்மதத்தை தந்து விட்டிருந்தாள் நறுமுகை…

 

அவள் கழுத்தில் இருந்த மொத்த அணிகலன்களையும் கழட்டி வைத்து விட்டிருந்தான். ..

 

கைகளிலும் கண்ணாடி வளையல்களை தவிர்த்து தங்க வளையல்களை கழட்டியவள் கண்ணாடி வளையளையும் சேர்த்து கழட்ட முயன்ற போது அவழல தடுத்து நிறுத்தி,

 

“கண்ணாடி வளையல் இருக்கட்டும்..”  என்றதும் அவனை நிமிர்ந்து பார்த்தவளின் முகம் குங்குமமாய் சிவந்து விட்டிருந்தது…

 

மொத்த நகைகளையும் கழட்டி வைத்து விட்டிருந்தான் விக்ரம்.. கழுத்தில் அவன் புதிதாய் அணிவித்த தங்கத்தாலி மட்டும் அழகாய் மின்னிக் கொண்டு அவனையே அழைத்து கொண்டு இருந்தது…

 

அவளையே ஒரு கணம் கீழிருந்து மேலாக பார்த்தவன் பின் நொடி கூட தாமதிக்காது அவள் இதழோடு இதழ் பொருத்தி மெல்ல முன்னேறி  மெத்தையில் சாய்த்து விட்டிருந்தான்…

இதழில் முத்தமிட்டவாறு கழுத்தில் ஆழ்ந்த தன் முகத்தை புதைத்துக் கொண்டவன் மெல்ல தன் தேடலை துவங்கினான்…

ஆடைகளை முற்றிலும் விளக்காது தேவைக்கேற்ப நெகிழ்த்தியவன் கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறிட அவனது செயலில் நிலை குலைந்து போயிருந்தாள் நறுமுகை …

 

இது நாள் வரை அவளது இதழ்களை தாண்டி பயணித்திடாத அவனது இதழ்கள்… இப்போது அவளது மேனியில் ஆங்காங்கே தடம் பதித்திட..பெண்ணவளது மலர் மேனியோ  அடிக்கடி தூக்கி வாரி போட்டது …

இதற்கு மேல் நேரத்தை கடத்தாது மெல்ல அவளுள் ஊடுருவியவன் தனது அச்சாரத்தை ஆழமாய் பதித்திட.. மென்னவள் வழியில் அலறினாலும் ஆணவனது ஸ்பரிசத்தில் அவனுக்குள் மொத்தமாய் அடங்கிப் போய் விட்டிருந்தாள்… 

ஏற்கனவே அவனது மேனி நெருப்பாய் தகித்துக் கொண்டிருக்கும் அவளது அருகாமையில் ..தற்போது தீப்பிழம்பாய் மாறி அவனைத் தகிக்க செய்தது …

 

பெண்ணவளின் தேகமோ சுடு நீரைப் போல தொட்டாலே சுட்டு விடும்   போல..அந்நிலையில் தான் தன்னவனின் ஸ்பரிசத்தில் கொதித்து கொண்டு இருந்தாள்…

 

தனது இத்தனை வருட பிரம்மச்சரியத்தை தன் உயிரானவளுள் கொட்டி தீர்த்து விட்டிருந்தான் விக்ரம்..

அவசரமான கூடல் தான் ஆனால் இருவருக்கும் முழு திருப்தியை தந்திருந்தது…

மூச்சு வாங்க வியர்வையில் மேனி குளித்துவிட்டு இருக்க.. அவளது மார்பிலேயே தொப்பென்று விழுந்து இருந்தான் விக்ரம் …

 

இருவரின் மனம் மட்டும் அல்லாது அவர்களது மேனியும் ஒன்றோடொன்று காதலுடன் கலந்து விட்டிருந்தது…

பெரிய பெரிய மூச்சுக்களை விடுத்து  சிறிது நேரத்தில் தன்னை ஆசுவாசப்படுத்தி கொண்டவன் பின் மனமே இன்றி அவளிடம் இருந்து விலகி,

 

” நீ போய் பிரஷ்ஷப் பண்ணிக்கோ ..கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடு நான் பக்கத்து ரூமுக்கு போறேன்.. இல்லனா அம்மா அவ்வளவு தான் என்னை..”  என்றதும் புன்னகையுடன் சரியென தலையாட்டியதும் அவளை எழுப்பி குளியல் அறைக்கு அனுப்பி வைத்த பின்பே அவன் அங்கிருந்து சென்றிருந்தான் …

 

கொஞ்ச நேரத்தில் என்னவெல்லாம் நடந்துவிட்டது என நடந்ததை எண்ணி இரு கரங்களால் முகத்தை மூடி தனக்குள் வெட்கப்பட்டு சிரித்துக் கொண்டாள் நறுமுகை…

 

அதன் பின் தன்னை சுத்தப்படுத்திக் கொண்டு மெத்தையில் விழுந்தவள் தான் கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் கழித்து அவளது மாமியார் வந்து எழுப்பும் வரை கொஞ்சம் கூட அசைய கூடவில்லை நறுமுகை… அவ்வளவு களைப்பு அவளுக்கு…

 

அதன் பின் அவளை அலங்காரம் செய்த ஆட்கள் வந்திடவும் மீண்டும் ஒரு முறை தலைக்கு குளித்துவிட்ட பின்னரே அலங்காரத்திற்கு தயாராகினாள் நறுமுகை…

இங்கு விக்ரமோ சின்னதாய் வாயை திறந்து கொண்டு ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தான்.. நறுமுகையை எழுப்பி இன்னும் ஒரு மணி நேரம் கழித்த பின்னர் தான் அவனை எழுப்பி இருந்தார் சுகன்யா.. 

 

பின் அவனும் வரவேற்ப்பிற்காக தயாராகிட.. நேரம் ரெக்கை கட்டி பறந்தது…

லெகங்காவில் பேரழகியாய் தயாராகி இருந்தாள் நறுமுகை… வரவேற்புக்கு மட்டும் கவரிங் நகையை வாங்கி இருந்தாள்…

தன் மருமகளுக்கு கவரிங் நகையா..?  விடுவாரா தேசிங்கன்… கடையிலிருந்து வந்திருந்த வைரமும் பிளாட்டினமும் கொண்ட அழகிய வேலைப்பாடு செய்த நெக்லஸ் அதற்கு தோதான கம்மல் மற்றும் மோதிரத்தையும் மருமகளுக்காக வரவழைத்திட.. சுகன்யா தான் அவளுக்கு அணிவித்து விட்டார்… 

அதன் அழகில் நறுமுகையின் விழிகள் இரண்டும் ஆச்சரியத்தில் விரிந்து கொண்டன…

பின் மணமக்கள் இருவரும் தயாராகி ஒன்றாய் வெளிவந்திட இருவரும் மற்றவரது அழகில் உண்மையில் பிரமித்து தான் போயினர் ..

பிறகு நேரே அங்கிருந்து மண்டபத்திற்கு வந்து விட்டிருந்தனர் ..உறவினர்கள் அத்தனை பேர் சூழ்ந்திருக்க நண்பர்கள் ஒருப்புறம் நடனமாடி அவர்களை வரவேற்றனர்..

அனைவரையும் புன்னகையுடன் பார்த்தவாறு மேடை ஏறினர் ஜோடிகள் இருவரும்..

கல்லூரியிலிருந்து அத்தனை பேரும் வந்திருந்தனர் வரவேற்பிற்கு… இருவரது ஜோடி பொருத்தத்தையும் கண்டு அனைவரும்  வியந்து தான் போயினர் …

கோர்த்திருந்த கரங்களை கொஞ்சம் கூட விலகிக் கொள்ளவில்லை இருவரும் …

நாகராஜன் மற்ற  பேராசிரியர்கள் தலைமை ஆசிரியர் என அனைவரும் ஒன்றாய் மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்து தங்கள் பரிசினை தந்து விட்டு புகைப்படம் எடுத்துக் கொண்டு கீழ் இறங்கினர்..

 

கவிதாவும் அவளது பெற்றோருடன் வந்திருந்தாள்… கௌசல்யா அஸ்வினி கூட வந்திருந்தனர் ..

கௌசல்யாவின் முகத்தைப் பார்த்தாலே அப்பட்டமாய் தெரிந்தது நறுமுகையின் மீதான பொறாமை…

இருந்தும் இதழ்களில் காது வரை புன்னகைத்துக் கொண்டு நறுமுகையே அணைத்து விடுவித்து வாழ்த்து தெரிவித்தாள்…

பின் ஒவ்வொரு உறவினர்களும் மண மக்களுக்கு பரிசினை தந்து வாழ்த்து தெரிவித்து சென்றனர்.. விழா இனிதாய் முடிந்தது…

விக்ரமும் நறுமுகையும் கொஞ்சம் கூட களைப்புக்குள்ளாகாது சிரித்தபடியே நின்றிருந்தனர்..

அவர்களது விழிகளும் அடிக்கடி உரசி கொண்டன.. முன்பு காதல் இருக்கும் இப்போது அதில் பாலில் கலந்த சிறு விஷம் போல காமம் கலந்து அடிக்கடி தீயை பற்ற வைத்திருந்தது.. 

அவளது இடையைப் பிடித்து புகைப்படங்களை எடுக்கும் சாக்கில் கரங்களுக்கு அழுத்தம் கொடுத்திட.. அதில் நறுமுகையின் முகம் தான் சிவந்து போனது..

அப்படி இப்படி என அனைவரும் உண்டு விட்டு வீட்டிற்கு கிளம்பினர்…இரவு சம்பிரதாயத்திற்கு ஏற்பாடு செய்ய மிகுந்த ஆவலுடன் காத்திருந்தான் விக்ரம் 

 

 

❤️ Loading reactions...
0 Comments
Oldest
Newest Most Voted
error: Content is protected !!
Scroll to Top