அத்தியாயம் 27

இங்க அவந்திகாவும் மதிய உணவு இடைவெளி வந்ததும் ஒருவாறு தன் வேலைகளை முடித்து விட்டு நேரத்தை பார்த்தவள் அதிரூபனின் அறைக்கு தான் சென்றாள்…

 

கதவை திறந்து கொண்டு உள்ளே சென்றிட அங்கு அதிரூபன் இல்லாது இருக்கவும் விழிகள் சுருக்கி சுற்றும் முற்றும்  பார்த்தவள் அவனது தனி அறைக்கும்  சென்று பார்த்தாள்…

 

எங்கும் அவன் இல்லாது இருக்கவும்,

 

“எங்க போனான் இந்த லூசு பையன்..?” என வாய் விட்டே கூறியவள் வெளி வந்து அங்கு இருந்த ஊழியரிடம் அதிரூபனை பற்றி கேட்டாள்…

 

“சார் அப்பவே வெளியே போயிட்டாரு மேடம்… எதுவும் சொல்லல ..!” என்றதும் சரியென தலையசைத்த அவந்திகா,

“சொல்லாம கொள்ளாம எங்கு போயிருப்பான்  இவன்…?” என யோசனையுடன் இருந்தவள் பிறகு மதிய உணவை தான் மட்டும் தனியே உண்டு விட்டு மீண்டும் தன் வேலையை பார்க்க துவங்கினாள்…

 

தன் வேலையை  முழுவதுமாய் முடித்தவள்  அதிரூபனிடம் கோப்பையை காட்டுவதற்கு மீண்டும் அவனது அறைக்கு  சென்றாள்…

 

ஆனால் அப்போதும் அவன் அங்கு இல்லாது இருக்கவும் சற்று துணுக்குற்ற அவந்திகா மெல்ல கீழ் இறங்கி வந்து ஊழியர்கள் அனைவரையும் பார்த்தாள் …

 

அனைவரும் அவரவர் வேலையை பார்த்துக் கொண்டு இருந்தனர்… யாரிடமும் வாய் விட்டு கேட்க தோன்றவில்லை அவளுக்கு…

 

அச்சமயம் ரேவந்த் யாருடனோ பேசிவிட்டு  அவளை நோக்கி வந்தவன் அவளை மேலும் கீழும் பார்த்து  சிரித்து விட்டு அவளை தாண்டி செல்லும் நேரம் சட்டென அவனை தடுத்து நிறுத்தி இருந்தாள் அவந்திகா…

 

“ரேவந்த் ஒரு நிமிஷம்..?”  என்றதும் நின்று இரு புருவங்களை உயர்த்தி அவளை ஆச்சரியமாக பார்த்தவன்,

 

” என்ன..?” என சலிப்பாக கேட்டிட அவனது செயலில் கடுப்பாக வந்தது அவந்திகாவிற்கு…

 

இழுத்துப் பிடித்த பொறுமையுடன் அவனைப் பார்த்து,

 

” அதிரூபன் எங்க  போயிருக்காருன்னு தெரியுமா…?”  என கேட்டதும் ரேவந்த் பதில் அளித்து இருக்கலாம் ..

 

ஆனால் அவனோ வாயை வைத்துக் கொண்டு சும்மாக இராமல் சுற்றி இருந்த அனைவரையும் ஒரு பார்வை பார்த்தான்..

 

அனைவரும் தங்களது  வேலையை பார்த்துக் கொண்டிருந்தாலும் ஒரு கண் இவர்கள் மீது தான் இருந்தது …

 

அதை கவனித்த ரேவந்த் உதடு மடக்கி இது தான் தக்க சமயம் அவளை அவமானப்படுத்தலாம் என உள்ளுக்குள் திட்டம் திட்டியவனாய் ,

 

“என்ன மேடம் கட்டுன பொண்டாட்டி நீங்க உங்களுக்கே உங்க புருஷன் எங்க இருக்காருன்னு தெரியலையே ..!.

என்கிட்ட வந்து கேக்குறீங்க..??”  என படு நக்கலாக பதில் உரைத்ததும் அந்த பேச்சு அவந்திகாவிற்கு சுத்தமாக பிடிக்கவில்லை …

 

என்னதான் அவர்கள் மூவருக்கும் இடையில் பகை இருந்தாலும் இப்படி ஊழியர்கள் முன்பு அவர்களது முதலாளியை அவமதிப்பது போல பேசியது அவளால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை… 

 

“மைண்ட் யுவர் வேர்ட்ஸ் ரேவந்த்.. அவர் உங்களோட பாஸ்.. அது எப்போதும் மைண்ட்ல இருக்கட்டும்..!”  என இழுத்து பிடித்த பொறுமையுடன் தன்மையாகவே எடுத்து உரைத்தாள்…

 

ஆனால் ரேவந்த் இடுப்பில் இருக்கரங்களையும் வைத்துக் கொண்டா அவளை எள்ளலாக பார்த்தவன் ,

 

“எனக்கு பாஸ் தான்.. உங்களுக்கு தான் புருஷன் ஆச்சே ..! உங்க வீட்டுக்காரரை இன்னும் கைக்குள்ள வச்சுக்கல போலையே..!..”என சத்தமாக கேட்டவன் அவள் புறம் குனிந்து,

 

“ஒருவேளை வைச்சுக்க  தெரியலையோ…!..நான் சொல்லி தரட்டுமா…??”  என அசிங்கமாய்  சிரித்து கூறிய கணம் பளாரென அவனை அறைந்து இருந்தாள் அவந்திகா …

 

அத்தனை பேர் முன்பும் அவள் அறைவாள் என எதிர்பார்த்தியாத ரேவந்த் தன் கன்னத்தில் சுரீரென ஏற்பட்ட வலியை உணர்ந்த பின்னர் விழிகள் விரிய அதிர்ச்சியுடன் அவளை பார்க்க.. சுற்றி இருந்தவர்களோ இருக்கையில்  இருந்து எழுந்தே விட்டு இருந்தனர் …

 

அவந்திகா அவனை தீ பார்வை பார்த்து விரல் நீட்டி,

 

” இன்னொரு முறை பாஸ்ங்கற மரியாதை இல்லாம தேவையில்லாத பேச்சு பேசினீங்க…???  உங்க சீட்டை கிழிச்சு எரிஞ்சிடுவேன்… யாருகிட்ட என்ன பேசணும்னு ஒரு மேனர்ஸ் இல்ல …இடியட்…

 

உங்களை எல்லாம் எப்படி தான் வேலைக்கு வெச்சி இருக்காருன்னு தெரியல.. போய் இங்க இருக்குற ஒவ்வொரு ஸ்டாஃப் காலை கழுவி குடிங்க..

 

அவங்க எப்படி பாஸ்க்கு மரியாதை தர்றாங்கறது தெரியும்..”  என ஒவ்வொரு வார்த்தையையும் சாட்டையால் அவனை அடித்திட …

ரேவந்த் கொலை வெறியுடன் அவளைப் பார்த்தவாறு இருந்தவன் ஏதோ பேச வரும் கணம் அங்கு அதிரூபன் வந்து விட்டு இருந்தான்…

 

” என்ன நடக்குது இங்க..??” என்கிற கேள்வியில் அனைவரும் திரும்பிப் பார்க்க.. ரேவந்த் மற்றும் அவந்திகா நின்றிருந்த நிலையை பார்த்துவிட்டு ஏதோ சரி இல்லை என்பது மட்டும் புரிந்து கொண்ட அதிரூபன் வேகமாக வந்து அவந்திகாவின் புறம் நின்று ,

 

“என்ன ஆச்சு…?”  என ரேவந்தை ஒரு கணம் பார்த்துவிட்டு மனைவியிடம் கேட்டு வைத்தான்… 

 

அவளும்,

 

” எங்க போயிருந்தீங்க ..??  நீங்க எங்கன்னு இவர் கிட்ட  கேட்கிறேன் உங்களை நான் கைக்குள்ள வச்சுக்க தெரியாம இருக்கேன்னு என்கிட்ட மரியாதையை இல்லாம பேசுறாரு இந்த ஆளு..

 இப்பவே இந்த ஆளோட சீட்டை கிழிச்சி வெளியே தள்ளுங்க..”  என அனைவர் முன்பும் ஆட்டம் ஆடி வைத்தாள் அவந்திகா .…

முன்பு ஒருமுறை தவறே செய்யாத போது அனைவர் முன்பும் ரேவந்த் தன்னை அவமானப்படுத்தினான் அல்லவா..

 

 இப்போது அதற்கு சேர்த்து வைத்து தனது பழியை தீர்க்கலானாள் அவந்திகா ..

 

அதிரூபனும் நெற்றியை நீவியபடி இருவரையும் ஆத்திரமாக பார்த்தவன் சுற்றி இருந்த ஊழியர்களை பார்த்து,

 

” இங்கு என்ன பார்வை..??  உங்க வேலைய பாருங்க..”  என அதட்டவும் அனைவரும் தங்களது வேலையில் கவனம் செலுத்தினர் …

 

மனைவியையும் ரேவந்த்தையும் மாறி மாறி பார்த்த அதிரூபன்,

 

” ரெண்டு பேரும் என் ரூமுக்கு வாங்க..!”  என எரிந்து விழுந்தவனாய் லிஃப்ட் ஏறி தனது அறைக்குச் சென்று விட்டான் …

 

தனது அறைக்கு வந்த அதிரூபன் தலையை பிடித்தபடி இருக்கையில் அமர்ந்து விட்டான்..

 

 அந்நேரம் வேகமாக அவந்திகாவை முந்திக்கொண்டு உள்ளே வந்த ரேவந்த்,

 

” என்ன நினைச்சுட்டு இருக்கா இவ..??  சொல்லுடா..??  அத்தனை பேர் முன்னாடி என்னை அறையிறா நீயும் பார்த்துட்டு இருக்க…

 

 இந்த பாரு ரூப் எல்லாமே ஒரு அளவுக்கு தான்… இவ பெரிய பருப்பு மாதிரி நடந்துக்கிறா எவ்வளவு தைரியம் இருந்தா என்னையே எடுத்தெரிஞ்சு பேசுவா..??

 

 எனக்கு தெரியாது அவளை நீ இப்பவே கன்னம் கன்னமா அறையிற..” அவன் மனைவியை அடிக்க அவனுக்கே கட்டளை இட்டான்…

 

    அங்கு உள்ளே இருந்த அவந்திகாவும்,

 

” யாரு யாரு அறையனுமாம்…??”  என கணீர் என கேட்டிடவும் ஆண்கள் இருவரும் தலை திருப்பி அவளை பார்த்தனர் ..

அவந்திகா அசரவில்லை நிதானமாக அவர்கள் நோக்கி நடந்து வந்தவள்,

 

“அத்தனை ஸ்டாஃப்ஸ் முன்னாடி கேள்வி கேட்கிறேன்… கொஞ்சம் கூட நாகரிகம் இல்லாம நடந்துக்கிற… நீ திமிரு எடுத்து பேசுவ நான் பார்த்துகிட்டு இருக்கனுமா..??  உனக்கு அவ்வளவு தான் மரியாதை .!” என விரல் நீட்டி ரேவந்த்தை எச்சரிக்கவும் அவளையும் அவள் நீட்டி இருந்த விரலையும் மாறி மாறி பார்த்த ரேவந்த் வெறியுடன் அவளது கரத்தை தட்டிவிட்டு சட்டென்று அவளது கழுத்தைப் பிடித்து,

 

” என்னடி நானும் பார்த்துகிட்டே இருக்கேன் திமிர் எடுத்து ஆடுற..??  இப்ப கூட நான் நினைச்சா உன் துணியை உருவி உன்னை ஓட விடுவேன் இங்க இருந்து…” என்ற கணம் நொடியில் அவனைப் பிடித்து தள்ளி இருந்தான் அதிரூபன்..

 

” ரேவந்த்த்த்…”  என்ற கர்ஜனையில் அதிர்ந்து போய்  அதிரூபனை பார்த்து வைத்தான் ரேவந்த்…

 

 

❤️ Loading reactions...
0 Comments
Oldest
Newest Most Voted
error: Content is protected !!
Scroll to Top