அதிரூபனின் விழிகள் இரண்டும் சிவந்து முகம் கோபத்தில் கொப்பளித்துக் கொண்டு இருந்தது .…
“வார்த்தையை அளந்து பேசு…!” என நிதானமாக அவன் கூறிடவும் ரேவந்த் இதழ் வளைத்து நண்பனையும் அவனது மனைவியையும் மாறி மாறி பார்த்தவன்,
” நான் வார்த்தையை பார்த்து பேசணுமா..?? உன் பொண்டாட்டி என்னை அறைவா நான் பார்த்துட்டு இருக்கணுமா ..?? அவ்வளவு தான்ல நான் எல்லாமே ..?
நீ என்னை ஏமாத்திட்ட ரூப்… உனக்கு நான் முக்கியமே இல்ல ..
நீயும் நானும் வாழ்க்கை முழுக்க காதலோடு சந்தோஷமா இருப்பேன்னு நினைச்சேன்..
ஆனா இப்ப இவளால நான் கஷ்டப்படுறேன் …அது தெரிஞ்சும் என்னை நீ இப்படி வார்த்தையால கொல்லுற..!” என தழுதழுத்த குரலில் பேசிடவும் அதிரூபனும் கண்களை இறுக மூடி தலையை திருப்பிக் கொண்டான் …
நடக்கும் நாடகத்தை கைகள் கட்டியபடியே வேடிக்கை பார்த்துக் கொண்டு இருந்தாள் அவந்திகா…
மேலும் ஏதோ பேச வந்த ரேவந்த்தின் முன்பு கை நீட்டி தடுத்த அதிரூபன்,
” அவ பண்ணது தப்பு தான்.. நான் உன்கிட்ட மன்னிப்பு கேட்கிறேன்.. போதுமா..?..
வேணும்னா என்னை அடிச்சுக்கோ ..!” என அதிரூபனே அவனிடம் சரணடையவும் அவனை ஆச்சரியமாக பார்த்து வைத்தாள் அவந்திகா…
அவளுக்கு மட்டுமல்ல ரேவந்த்துக்குமே ஆச்சரியமாக இருந்தது…
அவன் இந்த அளவு இறங்கி வருவான் என நினைக்கவே இல்லை ரேவந்த்…
“என்ன பேசுற கரூப் அவளுக்காக நீ என்கிட்ட மன்னிப்பு கேக்குறியா..?? அவளும் நீயும் ஒன்னா எனக்கு..??” என கேட்டதும் அதிரூபனுக்கு என்ன பதில் கூறுவது என்றே தெரியவில்லை …
“தயவு செஞ்சு எனக்காக அவளை மன்னிச்சிரு.. ப்ளீஸ்..” என மன்றாடும் குரலில் கேட்டதும் ரேவந்த்தின் மார்பு கோபத்தில் ஏறி இறங்க அவந்திகாவை ஆத்திரத்துடன் பார்த்தவன் பின் அதிரூபனை பார்த்துவிட்டு,
” உனக்காக மன்னிக்கிறேன்..” என்று விட்டு விருட்டென் அங்கு இருந்து வெளியேறி விட்டான் …
அதிரூபன் தனது பின்னந்தலையை அழிந்த கோதி கொண்டு விட்டத்தை பார்த்து தலையை உயர்த்தி கண்கள் மூடினான் …
அவனை நோக்கி ந
மெல்ல நடந்து வந்த அவந்திகா,
” எங்கே போயிருந்தீங்க..??” என்று தான் தனது அழுத்தமான குரலில் கேட்டு வைத்தாள்…
அதில் மெல்ல விழிகளை திறந்து விட்டத்தை பார்த்தவன் பின் மெல்ல தன் உடலை தளர்த்தி அவளை பார்த்தான்..
அவந்திகாவும் சலிக்காது அவனது விழிகளை மாறி மாறி பார்த்தவள்,
” உங்களை தான் கேட்கிறேன்.. இவ்வளவு நேரம் எங்க போயிட்டு வந்தீங்க..?? அதுவும் யாருக்கும் தெரியாம..?” என கேட்டதும் பெருமூச்சு விட்ட அதிரூபன்,
” ஒரு முக்கியமான வேலையா போயிருந்தேன்..” என்று மட்டும் உரைத்து விட்டு தனது இருக்கையில் சென்று அமர்ந்து கொண்டான்…
ஏனோ என்றுமில்லாது இன்று அதிரூபன் சற்று வித்தியாசமாகப்பட்டது போல இருந்தது அவந்திகாவிற்கு…
மேலும் மேலும் தூண்டி துருவி எதையும் கேட்டுக் கொள்ளாது அவளும் அறையில் இருந்து வெளியேறி விட்டிருந்தாள்…
நாட்கள் கடந்தன.. அதிருபனை அவந்திகா வீட்டில் வைத்து சீண்டிக் கொண்டு தான் இருந்தாள்…
முன்பெல்லாம் அவள் சீண்டும் போது ஒல்லாம் முறைப்பான்.. திட்டுவான் ..பல்லை கடித்து கோபத்தை கட்டுப்படுத்தி வைப்பான் ஆனால் இப்போது எல்லாம் ஏனோ ஒரு பொம்மை போல இருக்கிறான்..
ஏன் என்று தான் காரணம் யாருக்கும் தெரியவில்லை ..
இரவு அவந்திகா பாதி தூக்கத்தில் எழுந்தவள் பாத்ரூம் சென்று விட்டு படுக்கப் போன போது தான் அருகே அதிரூபன் இல்லாததை அப்போது தான் கண்டாள்…
அங்கும் இங்கும் பார்வையை சுழல விட்டவள் பால்கனியை எட்டிப் பார்க்க அங்கு இருட்டை வெறித்தவாறு நின்று இருந்தான் அதிரூபன் …
தூக்கம் வரவில்லை போல அதனால் தான் அவ்வாறு இருக்கிறான் என அவளாக எண்ணிக் கொண்டவள் தனது உறக்கத்தை தொடர்ந்தாள்…
அடுத்தடுத்த நாட்களும் அவள் பாதி தூக்கத்தில் எழுந்து பார்த்திட தொடர்ந்து அதிரூபன் உறங்காது பால்கனியில் நின்று கொண்டு இருந்தான் …
ஏதோ சரியில்லை என்பது மட்டும் அவந்திகாவிற்கு புரிந்தது …ஆனால் என்னவென்று தான் அவளுக்கு தெரியவில்லை…
அன்றும் அவன் வானத்தைப் பார்த்தவாரு வெற்று உடலுடன் நின்று கொண்டு இருந்தான்… ஏனோ இப்போதெல்லாம் அவனிடம் இருக்கும் கம்பீரம் காணாது ஒருவித தளர்வு வந்து ஒட்டிக் கொண்டு இருந்தது…
அதை அலுவலகத்திலும் கவனிக்க தான் செய்கிறாள் ..
“என்ன ஆச்சு..?” என்கிற சத்தத்தில் தன் சுயத்திற்கு வந்த அதிரூபன் தலை திருப்பி பார்த்தான்..
அங்கு வாசலில் இரவாடை அணிந்து கொண்டு மார்புக்கு குறுக்கே கரங்களை கட்டியபடி நின்று கொண்டிருந்தாள் அவந்திகா…
பெருமூச்சு ஒன்று விட்ட அதிரூபன்,
” எதுவும் இல்லை ..” என கூறி விட்டு மீண்டும் வானத்தை பார்க்கவும்…அவந்திகாவும் சலிப்பாக அவனுக்கு அருகே வந்து நின்றவள் ,
“நானும் பார்த்துட்டு தான் இருக்கேன்… நைட் தூங்காம இங்கே வந்து நிற்கிறீங்க..?? ஏதாவது பிரச்சனையா ..??”என கேட்டதும் அவளை கடைக்கண்ணால் முறைத்ததும் புரிந்து கொண்ட அவந்திகா,
” ஓ ..நான் தான் பிரச்சனைனு சொல்ல வரீங்களா ..?” என அவளாகவே கேட்டதும் சலிப்பாக தலையை இருபுறமும் ஆட்டிக் கொண்ட அதிரூபன் பதில் கூறவில்லை…
கடுப்பான அவந்திகா அவன் புறம் நன்றாக திரும்பி நின்று கம்பியில் சாய்ந்து கொண்டு,
“ப்ச்… உங்களை தானே கேட்கிறேன்.. பதில் சொல்லுங்க…”என கேட்டவள் பின் எதையோ யோசித்து விட்டு,
” என்ன மூடாகி ரேவந்த் கூட ஏதும் பண்ண முடியலைனு ஃபீலிங்ல இருக்கீங்களா ..?” என வெளிப்படையாக கேட்டதும் அவளை விழி விரிய தலை திருப்பி பார்த்த அதிரூபன் அவள் முன்பு கரம் நீட்டி பல்லை கடித்துக் கொண்டு,
” உனக்கு எந்நேரமும் இதே நினைப்பாடி..?? என்னவோ நான் அவனை எந்நேரமும் பண்ணிக்கிட்டே இருக்கிற மாதிரி பேசுற ..??” என அடிக்குரலில் சீறியபடி கேட்டதும் அவள் அவனுக்கு பயப்படவெல்லாம் இல்லை …
“பின்ன நானும் பார்க்குறேன் எப்பவும் கொயிங்னு இருக்கீங்களே அதான் ஒரு வேலை மூடு அதிகமாகி, உங்களால எதுவும் பண்ண முடியலைங்கிற ஃபீலிங்ல இருக்கீங்கன்னு நெனைச்சேன்…”என அசால்ட்டாக கூறியவள் அவன் புறம் சாய்ந்து,
” நான் வேணா ரூம் அரேஞ்ச் பண்ணி தரட்டுமா..??” என கிண்டல் செய்திட… கண்களை இறுக மூடி தன்னை நிலைப்படுத்திக் கொண்ட அதிரூபன் ,
“வார்த்தையால என்னை கொள்ளாத ப்ளீஸ் …ஏற்கனவே நான் ரொம்ப டயர்டா இருக்கேன்..” என சோர்ந்து போய் கூறியதும் வாயில் கை வைத்து அதிர்ந்த அவந்திகா ,
“ஹான்…அடப்பாவி நான் கூட அந்த இத்து போனவனை நினைச்சு தான் கவலைப்படுறேன்னு நினைச்சேன்…
இப்பதான் தெரியுது எனக்கு தெரியாம டெய்லி மேட்டர் முடிச்சுட்டு வரியா..???
அதான் டயர்டா இருக்குன்னு சொல்றியா..?? உன்னை இன்னும் வெச்சி செய்யணும் போல இருக்கே..!” என வாய்விட்டு கூறியவளை கடுப்பாக பார்த்து வைத்தவன் அவள் முன்பு இரு கரங்களையும் கூப்பி ,
“அம்மா தாயே நான் யாரையும் தொடலை.. யார்கிட்டயும் போகல.. போதுமா..?? நீயா கற்பனை பண்ணிக்கிட்டு என்னை சாவடிக்காத..!.. நானே டென்ஷன்ல இருக்கேன் நீ வேற..” என்றதும்
அவனை மார்க்கமாக பார்த்து வைத்தவள்,
” என்னன்னு சொன்னா தானே தெரியும்…? எதுவும் சொல்ல மாட்றீங்க..” என கேட்டதும் கீழ் உதட்டை கடித்துக் கொண்டு விழிகள் சுருக்கி நேரே திரும்பி கொண்டான் அதிரூபன் …
அவனை கடைக்கண்ணால் அவந்திகா பார்த்திட
ட்ராக்ட் பேண்ட் மட்டும் அணிந்து இருந்தவன் மேலே ஏதும் அணியாது தனது கட்டுடல் மேனியை காட்டிக் கொண்டு இருந்தான்…
ஏற்கனவே ஆணழகனாய் இருப்பவன் இப்போது இரவு நேரத்தில் கலைந்த தலை முடியுடன் தவித்துக் கொண்டு அவளை பார்க்கவும் ஒரு கணம் அவனை கண்டதும் மனம் தடுமாறியது அவந்திகாவிற்கு…
சட்டென அவன் புறம் இருந்து நேராக திரும்பி நின்று கொண்டாள் …
“ப்ச்…எனக்கு எதுவும் இல்லை நீ போய் தூங்கு… என்ன பத்தி கவலைப்பட்டதுக்கு ரொம்ப தேங்க்ஸ் ..” என கூறியதும் அவளோ,
” உங்களை நினைச்சு யாரும் இங்க கவலைப்படல ..” எனப் பதில் உரைத்து விட்டு அவனை தாண்டி சென்று விட்டாள்..
செல்பவளை ஒரு கணம் தலை திருப்பி பார்த்தான் அதிரூபன் ..
மருத்துவர் சொன்னதுதான் நினைவுக்கு வந்து போனது…
முகத்தை இரு கரங்களால் அழுந்த தேத்துக் கொண்டவனுக்கு மனம் இன்னும் குழப்பம் அடைந்தது …