அத்தியாயம் 28

கணவன் மனைவி இருவரும் அவரவர் பாதையில் ஒன்றாக இணைந்தே கரம் கோர்த்து முன்னிறே துவங்கினர்…

 

தன் மாமனாரின் நகைக்கடை என்றாலும் எடுத்ததும் அவளுக்கு பொறுப்பினை தந்திடவில்லை …அதை அவள் உண்மையில் விரும்பவும் இல்லை என்று கூறலாம்…

 

முதலில் ஒவ்வொன்றை பற்றியும் சுகன்யா தான் விலாவாரியாக எடுத்துரைத்தார்…

 

நேரடியாகவே அவளிடமே கேட்டு விட்டிருந்தார் சுகன்யா,

 

” நீ இவங்க கூட இருந்து கத்துக்கணும்னு நினைக்கிறியா..??” என அங்கிருந்த ஊழியர்களை சுட்டி காட்டி கேட்டவர் பின்,

 

” இல்ல பொறுப்பில் இருந்து கத்துக்கணும்னு நினைக்கிறியா..?? தெளிவா சொல்லு.._  என்றதும் முற்றிலும் தடுமாறி விட்டிருந்தாள் நறுமுகை…

 

சிறுது யோசித்தவள் பின் தன் மாமியாரிடம் ,

 

“நான் முதல்ல இவங்களோட இருந்து சின்ன சின்ன விஷயங்களையும் கத்துக்குறேன்…

எனக்கு இன்ட்ரஸ்ட்டடா இருந்தா அதுக்கு அப்புறம் என்ன பண்ணலாம்னு பார்க்கலாம் அத்தை…”  என்றதும் அதுவும் சுகன்யாவிற்கு சரியென படவும் ஊழியர்களோடு ஊழியராய் பணிபுரிய ஆரம்பித்தாள் நறுமுகை…

 

மற்றவர்கள் அவளுக்கு மரியாதை தந்து ஒதுங்கி நின்றாலும் இவள் அவர்களுடன் இயல்பாகவே பேசினாள் …அவர்களுடன் சேர்ந்து ஒவ்வொன்றையும் கற்றுக் கொண்டாள்… ஆரம்பத்தில் சற்று கடினமாக தான் இருந்தது ..

 

அங்கிருந்த ஒவ்வொரு தங்கநகை டிசைன்களை பார்க்கும் போதும் கண்ணை கவரும் …

கவரும் உண்மையில் தேசிங்கனை மனதில் மெச்சிக்கொண்டாள் நறுமுகை…

எத்தனை கலா ரசிகனாக இருந்து இருந்தால் இத்தனை விதவிதமான நகைகளை அலங்கரித்து இருப்பார் தன் கடைகளில் என வியந்து தான் போனாள்…

 

முதலில் தடுமாறினாலும் உடன் இருப்பவர்களின் ஒத்துழைப்பால் கொஞ்சம் கொஞ்சமாய் ஒவ்வொன்றாய் கற்றுக்கொள்ள ஆரம்பித்தாள்…

 

போதாத குறைக்கு சுகன்யாவும் அவ்வப்போது தான் வேலை செய்யும் சமயங்களில் அவளை இழுத்துக் கொண்டு வந்து தன்னுடன் அமர வைத்து கணக்கு வழக்குகளை எப்படி பார்க்க வேண்டும் என ஒவ்வொன்றையும் சொல்லிக் கொடுக்கலானார் .…

 

இப்போது தான் அனைத்தும் டெக்னாலஜி வசம் ஆயிற்றே…கையில் இருந்த டேப்பில் கவனம் பதித்து ஒவ்வொன்றாக சொல்லி கொடுத்தார்…

 

கணக்கு என்றாலே அவளுக்கு கசக்கும் அதை முகத்தில் காட்ட முடியுமா..? அதுவும் மாமியார் முன்பு ..

 

அதனால் முயன்று தன் கவனத்தை செலுத்தியவளுக்கு சில சமயம் அழுகை தான் வரும் தனக்கு ஒன்றும் தெரியவில்லையே தான் மர மண்டையாக இருக்கிறோமே என தன்னையே கடிந்து கொள்வாள் …

 

அவளது முக வாட்டத்தை கண்டு விட்டு விக்ரம் கூட அவளிடம் கேட்டுப் பார்த்தான் ,

 

“கடைக்கு போக பிடிக்கலைன்னா சொல்லிடுடி.. எதுக்கு பிடிக்காம போயிட்டிருக்க..?”  என்றதும் அவளுக்கு ஒரு மாதிரியாகிவிட்டது…

 

” அப்படி இல்லங்க ..இது தானே ஸ்டார்டிங்.. அதான் ஒரு மாதிரி இருக்கு.. தப்பா ஏதாவது பண்ணிடுவானோ அப்படின்னு ஒரு பயம்..”  என மறைக்காது தன் பயத்தை எடுத்து கூறினாள்…

 

அவளது இடை வளைத்து இறுக்குமாய் அணைத்துக் கொண்டவன்,

 

” தப்பு பண்றது மனுஷ இயல்பு.. தப்பே பண்ணாதவங்கனு யாரும் கிடையாது ….ஒன்ன நாம கத்துக்கணும்னா சின்ன சின்ன தப்பு பண்ணா தான் நம்மளால கத்துக்க முடியும் ..

 

எதுவும் தெரியாம எல்லாம் தெரிஞ்ச மாதிரி காட்டிக்கிறதை விட உனக்கு ஏதாச்சும் தெரியலன்னா அதை  தைரியமா வாயை திறந்து சொல்லு..”  என்றதும் சற்று மனம் தெளிந்தவளாய் சரி என மண்டையை ஆட்டினாள்…

அவளது பின்னந்தலையை பற்றி ஆட்டிவிட்டு,

 

” ப்ராஜெக்ட் பண்ணும் போதும் இதே மாதிரி தான் இருந்த… இப்பவும் இப்படி இருக்காது.. எதுக்கு உள்ளுக்குள்ள பயத்தை வச்சுக்கிட்டு சிரிச்ச மாதிரி இருக்கிறே..

 

நீ அம்மா கிட்டே ஃப்ராங்கா சொல்லு அவங்க பாத்துப்பாங்க ..

உனக்கு ஒன்னு தெரியுமா அம்மாக்கு கூட ஆரம்பத்துல கணக்கு எல்லாம் பார்க்கவே தெரியாது …அப்பா தான் டெய்லி கடைக்கும் கூட்டிட்டு போவாங்க..

 

நீயாவது போனதும் ஏதோ வேலை பார்க்கிற… அம்மாக்கு எதுவும் தெரியாது.. சும்மா போய் உட்கார்ந்துட்டு வருவாங்க… அப்புறம் போக போக தான் அப்பா ஒவ்வொரு வேலையை செய்ய சொல்லவும் அப்பா சொல்ற வேலைய மட்டும் செஞ்சிட்டு வருவாங்களே தவிர அவங்களா இன்ட்ரெஸ்ட் எடுத்து பண்ண மாட்டாங்க …

 

அப்புறம் அவங்களே தான் கொஞ்சம் கொஞ்சமா கணக்கெல்லாம் கத்துக்கிட்டது… அதுலையும் நிறைய முறை தப்பு பண்ணிடுவாங்க ..

 

அப்பா பொறுமையாவும் சொல்வாங்க.. அப்படி இல்லையா கோபப்படுவாங்க.. என்ன பண்றது அவருடைய மூடை பொறுத்து…

 

கீழ விழுந்து எழுந்து தான் இப்ப எல்லாத்தையும் ஃபிங்கர் டிப்ஸில் அம்மா வச்சிருக்காங்க.. அதனால எடுத்ததும் நமக்கு எல்லாமே தெரியணும்னு நினைக்காத.. கொஞ்சம் கொஞ்சம் நீயே ப்ராக்டிஸ் பண்ணு வந்துரும்..”  என்றதும் அவளுக்கு ஓரளவு தன்னம்பிக்கை வந்தது …

 

அதேபோல விக்ரமும் தனக்கு பிடித்த பணியில் சேர்ந்துள்ளதால் உற்சாகமாகவே பலம் வந்தான்..

 

மாணவர்களுக்கு ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து சொல்லிக் கொடுக்கலானான் அவர்களுக்கு புரியும் விதத்தில்..

 

பெரும்பாலானவைகளை பவர் பாயிண்டில் தான் பிரசன்டேஷன் செய்து மாணவர்களுக்கு புரிய வைக்க வேண்டும்..

எவ்வளவு எளிதாக அவர்களுக்கு புரிய வைக்க முடியுமோ அதற்கேற்றது போல ஒவ்வொன்றையும் மெனக்கெட்டு செய்து அவர்களுக்கு கற்றுக் கொடுத்தான் ..

 

அனைவருடனும்  மரியாதையுடனே பழகினான் விக்ரம்.. தனக்கு இருக்கும் பதவி இடம் என அனைத்தையும் உணர்ந்து மாணவர்களிடம் கூட இலகுவாக பழகினாலும் ஒரு எல்லையுடனே நிறுத்தி வைத்தான் …

 

கிறிஸ்டோபர் மற்றும் கௌசல்யா இருவரும் அங்கேயே தான் ph.d சேர்ந்திருந்தனர்.. அவ்வப்போது இருவரையும் ஒன்றாக பார்ப்பான் விக்ரம் .. ஆனால் அலட்டிக்கொள்வதில்லை…

 

என்னதான் விக்ரம் தோழியின் கணவனாக இருந்தாலும் கல்லூரியில் பெரிய பதவியில் இருப்பவன்யிற்றே, அதனால் கௌசல்யா அடக்கி வாசித்தாள்.. தேவையில்லாத நறுமுகை பற்றி அவள் வாயில் இருந்து ஒரு வார்த்தை வருவதில்லை …

 

ஏன் கிறிஸ்டோபர் கூட அன்று அனைவரும் முன்பும் விக்ரம் எச்சரித்ததால் யாரைப் பற்றியும் அவதூறாக பேசுவதில்லை …

வாரத்தில் ஆறு நாட்கள் வேலைகளில் கழிந்தாலும் ஞாயிறு என வந்தால் கணவன் மனைவி இருவரும் பசை போல ஒட்டிக்கொண்டே திரிவார்கள்…

 

ஞாயிறு விக்ரமிற்கு விடுமுறை என்பதால் தேசிங்கன் நறுமுகையை கடைக்கு வர வேண்டாம் எனக் கூறி விடுவார்…

 

சுகன்யாவும்  அவர்கள் இருவருக்கு என மதிய உணவையும் எடுத்துக் கொண்டு வழக்கமாக செல்லும் நேரத்திற்கு கடைக்கு சென்று விடுவார்,…

 

கணவன் மனைவி இருவரும் இரவெல்லாம் போடும் ஆட்டத்தில் நேரம் கடந்து தான் எழுந்து கொள்வார்கள்…

மதியமானால் வெளியே எங்கேயும் சுற்றி விட்டு அப்படியே மதிய உணவையும் முடித்து விட்டே வருவார்கள்… சில சமயம் வீட்டிலேயே இருவரும் சேர்ந்து சமைத்து உண்பார்கள் …

 

ஞாயிறு அவர்களுக்கான நாள்… அன்றும் அப்படித்தான் தன்னவனின் வெற்று மார்பில் மூச்சு வாங்க தொப்பென்று விழுந்தாள் நறுமுகை…

 

” முடியல… விக்ரம்…”  என மூச்சு வாங்க கூறியவளை நொடியில் தனக்கு கீழே கடத்தியவன் மீதி வேலையை தொடர்ந்தவாறு அவளது இதழோடு இதழ் கோர்த்துக் கொண்டான் …

 

ஒவ்வொரு நாளும் இருவருக்கும் காதலும் மோகமுமாய் நாட்கள் கடந்தன..

பின் சிறிது சிறிதாய் தங்களது பொறுப்பை உணர்ந்து செயல்பட்டனர் விக்ரமும் நறுமுகையும் …

 

நறுமுகை இப்போது எல்லாம் ஓரளவு கடையில் தன்னை நிலைப்படுத்திக் கொள்ளலானாள்…

 

இத்தனைக்கும் அவள் அவ்வப்போது தடுமாறிட தான் செய்கிறாள் ..இருந்தும் அச்சூழலுக்கு ஏற்ப தன்னை அழகாய் பொருத்திக் கொண்டாள் நறுமுகை…

 

வீட்டில் இருப்பதை விட ஏன் வெளியே வேலைக்கு என செல்வதை விட தங்கள் கடையில் நிர்வகிப்பதே அவளுக்கு மகிழ்ச்சியாகவே இருந்தது …

வளவனும் சுரதையும் கூட அவளை பொறுப்பாய் நடந்து கொள்ளுமாறு தான் அறிவுரை வழங்கினர் …

 

நேரம் கிடைக்கும் போது விக்ரம் அவளது பிறந்த வீட்டிற்கும் அழைத்துச் சென்று வருவான்.. ராகினி ரோகினியை அழைத்துக்கொண்டு நால்வருமாய் எங்கேனும் வெளியே சென்று விட்டு வருவார்கள்..

 

நறுமுகை எப்படி விக்ரமின் குடும்பத்தாரோடு பொருந்திக் கொண்டாளோ அதே போல விக்ரமும் நறுமுகையின் குடும்பத்தாருடன் பொருந்திக்கொண்டாள்…

 

இரு வீட்டிலும் ஒற்றைப் பிள்ளைகள் ஆயிற்றே ..! இவர்கள் தானே பெற்றோர்களையும் அவர்களது குடும்பத்தையும் பார்த்துக் கொள்ள வேண்டும்.. அதனால் பொறுப்பாகவே இருந்தான் விக்ரம் ..

இந்நிலையில் தான் நறுமுகைக்கு பிறந்தநாள் வந்தது ..

இரவு அவள் உறங்கிக் கொண்டிருக்க மெதுவாக அறையின் விளக்கை ஏற்றாமல் செல்போன் வெளிச்சத்தில் ஏதோ ஒரு புத்தகத்தை புரட்டிக் கொண்டிருந்தான் விக்ரம் நேரம் போவதற்காக…

சரியாக நள்ளிரவு 12 மணி….சின்னதாய் உறக்கம் கலைந்து கண் முழித்தவள் தூக்கத்திலிருந்து எழும்போது, விக்ரம் பளிச்சென்ற புன்னகையுடன் அவள் கையில் ஒரு அழகான பூங்கொத்தை தந்தான்..

 

அது  மட்டும் இல்லை அவன் அவளுக்காகவே எழுதிய ஒரு கவிதை மடல் இருந்தது அதில்…

உறக்கம் முற்றிலும் கலைந்திட தன்னவன் தனக்காக எழுதி இருந்த கவிதையை மெல்ல வாசிக்கலானாள்…

 

“ஹாப்பி பர்த்டே மிஸஸ் ப்ரொஃபசர்! காலேஜ்ல ஸ்டூடண்ட்ஸ்க்கு மார்க் போடுறது சுலபம், ஆனா உன் கூட கழிச்ச இந்த கொஞ்ச மாச வாழ்க்கைக்கு மார்க் போட சொன்னா… என் சிலபஸ்லேயே அதுக்கு இடமில்ல. பிகாஸ், யூ ஆர் பியண்ட் எக்ஸ்பெக்டேஷன்ஸ்!”என படித்து முடித்ததும் வாய் விட்டே நகைத்தவள் அவனை ஏறிட்டுப் பார்க்க அவள் கரத்தில் ஒரு சிறு பெட்டியை நீட்டினான்…

 

அதை திறந்து பார்த்தவளது விழிகள் இரண்டும்  ஆச்சரியத்தில் விரிந்து கொண்டன அதில் இருந்த  அழகான வைர மோதிரத்தை கண்டதும்…

 

எக்கி அவனை அணைத்து கொள்ள…தன் இறுகிய அணைப்பில் அவளை கிடத்தியவன்,

 

“இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்டீ…” என்றதும் அவனை இதழை வேகமாய் சிறை செய்தாள் நறுமுகை…

 

காலையில் பெரியவர்களிடம் ஆசிர்வாதம் வாங்கிட சுகன்யா அவளுக்கு பட்டுப் புடவையை பரிசளித்தார்…

 

அதை மகிழ்ச்சியாக அணிந்துக் கொண்டு பிறந்த வீட்டிற்கு சென்றிட அங்கு சிறுசுகள் இருவரும் சேர்ந்து கேக் ஏற்பாடு செய்து  நறுமுகையின் பிறந்தநாளை கொண்டாடி விட்டிருந்தனர்…

 

அதன் பின்  ஒரு அழகான லாங் டிரைவ் சென்றனர் காரில்…விக்ரம் வண்டியை செலுத்திய படி நறுமுகையை பார்த்தவன்,

 

“நமக்கு கல்யாணம் ஆகி இது முதல் பிறந்தநாள். இனி வரப்போற எல்லா பிறந்தநாளும் உனக்கு ஸ்பெஷலா இருக்கணும்னு நினைக்கிறேன். ப்ரொஃபசரா நிறைய பேருக்கு பாடம் சொல்லிக்கொடுத்திருக்கேன், ஆனா அன்பா எப்படி வாழணும்னு எனக்கு சொல்லிக்கொடுத்தது நீதான்.”என்றதும் அவனது தோளில் இதமாய் தலை சாய்த்து கொண்டாள் நறுமுகை…

 

அதே போல விக்ரமின் பிறந்த நாளும் வந்தது…பாவம் நறுமுகைக்கு தான் என்ன வாங்குவது என்றே தெரியவில்லை…..அத்துடன் வாங்குவதற்காக பணத்தை எப்படி ஏற்பாடு செய்வது என்றும் தடுமாறி இருந்தாள்…

 

சோர்ந்த முகத்துடன் இருந்த மருமகளை கண்ட தேசிங்கன் தான் தன் மனையாளிடம்,

 

“அந்த பொண்ணு முகமே வாட்டமா இருக்கு…என்ன ஏதுன்னு கேட்டியா..?”

“இல்லங்க…”

 

சிறிது யோசித்த தேசிங்கன் தான்,

 

“விக்ரம் பிறந்தநாள் வருது…அவனுக்கு ஏதாவது வாங்க ஆசைப்படும் போல…நீ அவகிட்ட  காசு கொடுத்து என்ன வேணுமோ வாங்கிக்க சொல்லு”என கூறியதும் சுகன்யா கணவர் கூறியது போலவே நறுமுகையிடம் கணிசமான தொகையை தந்து வேண்டியதை வாங்கி கொள்ள சொன்னார்…

 

உண்மையில் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தாள் நறுமுகை…

 

விக்ரமின் பிறந்த நாளும் வந்தது…அவனுக்காக சுகன்யா கோவிலில் அன்னதானம் ஏற்பாடு செய்து இருந்தார்…காலையிலேயே அனைவரும் கிளம்பி கோவிலுக்கு சென்று விட்டனர்…

 

நறுமுகையின் பெற்றோர் மற்றும் பெரியப்பா குடும்பமும் வந்து இருந்தனர்…

 

அனைவரும் விக்ரமிற்கு வாழ்த்து தெரிவித்து சாமியை குடும்பமாய் வணங்கி பின் அனைவருக்கும் விக்ரம் மற்றும் நறுமுகையின்  கரத்தால் அன்னதானம்  அளித்து சிறப்பித்தனர்…

 

பிறகு மாமனாரும் மாமியாரும் புது ஆடையை வாங்கி தந்தனர் மருமகனுக்கு…அதை மகிழ்ச்சியுடன் அவன் ஏற்றுக்கொண்டான்…நறுமுகை கோவிலில் வைத்தே தன்னவளுக்காக பார்த்து பார்த்து வாங்கி இருந்த விலை உயர்ந்த கை கடிகாரத்தையும் பேனாவையும் தந்தாள்…

 

உண்மையில் அவன் எதிர்பார்க்கவே இல்லை…

அவளே அவனுக்கு புது கைகடிகாரத்தை அணிந்து விட்டாள்…பேனாவையும் பாக்கெட்டில் வைத்து அழகு பார்த்தவள்,

 

“இனி இதை மட்டும் தான் நீங்க யூஸ் பண்ணனும்…” என்றதும் புன்னகையுடன் தலையசைத்து வைத்தான் விக்ரம்…

 

இருவரும் அத்தனை மகிழ்ச்சியாக வலம் வந்தனர்…

மகிழ்ச்சி மட்டுமே வாழ்க்கை இல்லேயே…!

 

 

❤️ Loading reactions...
0 Comments
Oldest
Newest Most Voted
error: Content is protected !!
Scroll to Top