மெல்லிய கணமில்லாத புடவையை தான் அணிந்திருந்தாள் நறுமுகை…
அவளது மாமியாரே போதும் போல அவளுக்கு …பார்த்து பார்த்து அலங்காரம் செய்தார் அவளுக்கு… ஒற்றை மருமகள் ஆயிற்றே ..!
அதுவும் மகனுக்கு அத்தனை பொருத்தமாக இருப்பதால் ஏனோ அவருக்கு நறுமுகையை மிகவும் பிடித்து விட்டிருந்தது. …
“ரெண்டு பேரும் எப்பவும் சந்தோஷமா இருங்க.. ஆரம்பத்துல சின்ன சின்ன சண்டை எல்லாமே வரும் அதெல்லாம் புரிஞ்சு ஒருத்தருக்கு ஒருத்தர் விட்டு கொடுத்துட்டு போனாதான் வாழ்க்கை ரொம்ப நல்லா இருக்கும்.
எங்களுக்கும் உங்க அப்பா அம்மாக்கும் நீங்க ரெண்டு பேரும் தான் இருக்கீங்க.. அதனால பொறுப்பா நடந்துக்கோங்க ..” என தன்மையாய் பேசிய மாமியாரை பிடித்து விட்டிருந்தது நறுமுகைக்கு..
அவள் கரத்தில் பால் செம்பை தந்து விட்டு அறைக்கு வெளியே விட்டு சென்றுவிட்டார் சுகன்யா…
நறுமுகைக்கு பயமில்லை மாறாக ஒரு பேராவல்தான் மனம் முழுக்க இருந்தது…
ஏற்கனவே நடந்த கூடலின் காரணமாக கூட இருக்கலாம் ..
மெல்ல கதவை திறந்து விட்டு எட்டிப்பார்த்திட அங்கு விக்ரம் பட்டு வேட்டி சட்டையில் பளிச்சென்று நின்றிருந்தவன் பெண்ணவளை பார்த்ததும் முத்துப் பற்கள் தெரிய சிரித்திட… அவனது புன்னகை அவளுக்கும் தொற்றிக் கொண்டது…
சிரித்தவாறு உள்ளே நுழைந்தவள் அவளே கதவை தாழ் போட்டு விட …அவளை பார்த்தவாறு மெல்ல நடந்து வந்த விக்ரம் அவள் கரத்தில் இருந்த பால் செம்பை வாங்கி அருகே இருந்த மேசையில் வைத்து விட்டு அவளது இருபுற தோள்களையும் இருக்கமாய் பிடித்துக் கொண்டு அவளது விழிகளை மாறி மாறி பார்த்தான்…
இருவருக்கும் ஒருவர் மீது ஒருவர் நேசம் பீரிட்டு எழுந்தது… அவளை தன் நெஞ்சோடு இறுக அணைத்து கழுத்தில் முகம் புதைத்துக் கொண்ட விக்ரமிற்கும்… அவனை பாந்தமாய் அணைத்துக் கொண்ட நறுமுகைக்கும் மனம் நிறைவாக இருந்தது …
இந்த நொடி இருவரும் எப்படி உணர்கிறோமோ அதே போலத்தான் வாழ்வின் கடைசி நொடி வரை இருவரும் உணர வேண்டும் என மனதில் நினைத்துக் கொண்டனர் …
இருகணைத்துக் கொண்டு நீண்டதொரு பெரு மூச்சு விட்டவன் மெல்ல அவளை தன்னிடமிருந்து பிரித்து நிமர்த்தி கன்னத்தை தாங்கிக் கொண்டு,
” இந்த ஃபீல் செமையா இருக்குல நறு…!” என ஆசையாய் கேட்டதும் ஆமென்று தலையசைத்தாள்.
” எதிர்பார்க்கவே இல்லை எதையுமே …
எதிர்பார்க்காமலேயே என்னென்னவோ விஷயம் எல்லாம் நம்ம வாழ்க்கையில நடந்திருச்சுல….?” என அவள் முகம் பார்த்து கேட்டதும் கண்களை தாழ்த்திக் கொண்டு சிரித்தவாறு ஆமென்று தலையசைத்தவளது முகத்தை தன்னை நோக்கி நிமிர்த்தியவன்,
” வாயைத் திறந்து பதில் சொல்லுடி…”என அடிக்குரலில் சீறினான் அப்போதும் பல் இளித்துக் கொண்டு…
“நிஜம்மாவே எனக்கு என்ன பதில் சொல்றதுன்னு தெரியலங்க…
இந்த நிமிஷம் வரைக்கும் ஒவ்வொன்னும் கனவு மாதிரி இருக்கு…
என்னை பார்த்தாலே நீங்க தான் அவ்வளவு கோபப்பட்டீங்களானு இப்போ நினைச்சாலும் எனக்கு சிரிப்பு தான் வருது …
உங்களை பார்த்தா எனக்கு அப்படி நடுங்கும்.. ஆனா இப்ப எல்லாமே மாறிடுச்சு… நம்ம வாழ்க்கையில நாம எதையும் எதிர்பார்க்கல ..ஆனா நாம எதிர்பார்க்காமலே நமக்கு எல்லாம் நடக்க… இதை பார்க்கும் போது ரொம்பவே சந்தோஷமா இருக்கு..” என மனதிலிருந்து பேசியதை மீண்டும் பாந்தமாய் அணைத்து நெற்றியில் அழுந்த முத்தமிட்டவன் கிசுகிசுப்பான குரலில் ,
“ரொம்ப ஈகரா வெயிட் பண்றேன்…ஸ்டார்ட் பண்ணலாமா…?” என மோகக் குரலில் கேட்டதும் அவளது காது மடல் தான் அவனது வார்த்தைகளின் உஷ்ணத்தில் சிவந்து போனது…
கண்கள் மூடி எச்சிலை விழுங்கி கொண்டவளை இன்னும் கிறக்கமாய் பார்த்து வைத்தவன் நொடி தாமதிக்காது அவளது கன்னத்தை பற்றி இழுத்து இதழோடு இதழ் கோர்த்துக் கொண்டான்…
பிஎச்டி ஆய்வுக் கட்டுரைகளுக்காக இரவு முழுதும் விழித்திருந்தவனுக்கு, இன்று தன் முன்னே இருக்கும் நறுமுகை எந்தத் தத்துவத்தை விடவும் ஆழமானவளாகத் தெரிந்தாள் அவனுக்கு.…
அவள் பட்டுப்புடவையின் சரசரப்பும், மல்லிகைப் பூவின் வாசனையும் அந்த அறையை ஒரு நந்தவனமாக மாற்றியிருந்தது.…
எம்எஸ்சி முடித்திருந்தாலும், இப்போது அவனிடம் பாடம் படிக்கப் போகும் ஒரு மாணவியைப் போலவே தெரிந்தாள் அவனுக்கு …
அந்த அறையில் மௌனம் நிலவவில்லை, அது ஒரு மெல்லிய சங்கீதமாக நிறைந்திருந்தது..…
எரியும் ஒற்றை விளக்கின் சுடர், சுவரில் அவர்களின் நிழல்களை ஒன்றாகக் கலந்து வரைந்து கொண்டிருந்தது.…
அவளை கைப்பிடித்து மெத்தைக்கு அழைத்து வந்து அமர்த்தினான்… அவன் அருகில் அமர்ந்ததும், அவளது உலகமே அந்தச் சிறிய இடத்திற்குள் சுருங்கிவிட்டது போலிருந்தது.…
விக்ரம்,
“இந்த நிமிஷம் நமக்காகவே படைக்கப்பட்டது நறு அதனால் நாம என்ஜாய் பண்றோம்…” என கைகளை விரித்து பேசியதும்
அவள் பதில் பேசவில்லை…
அதற்கு மேல் பொறுக்க மாட்டாது பெண்ணவளை மெத்தையில் சாய்த்து கழுத்தில் முகம் புதைத்து அவனது தேடலிற்கான முதல் புள்ளியை ஆரம்பிக்கலானான்…
அவள் மேனியில் இதழால் அவன் இடும் ஒவ்வொரு முத்தத்திற்கும் அந்தரங்கமாக ஏதேதோ கூறினான்…
அவளால் பதில் பேச முடியவில்லை …மாறாக அவளது இமைகளின் அசைவும்.. விரல் நகங்களை அவன் மேனியில் அவள் அழுத்திய விதமும் அவளது உள்ளுக்குள் நடக்கும் போராட்டத்தைச் சொல்லாமல் சொன்னன.…
அது பயமல்ல; ஒரு புதிய வாழ்க்கையை நோக்கிய இனிய தயக்கம்….முதலில் நடந்த அவசர கூடலில் நேரமின்மையால் ஆடைகளை கூட முழுதாய் விலக்கிட வில்லை…
ஆனால் இப்போது இருவரது மேனியிலும் துணி என்ற ஒன்று இல்லாது போனது…
கண்களுக்கு மட்டும் தான் கொள்ளையடிக்கும் உரிமை இருக்கிறதா..??? இல்லவே இல்லை என்பது போல ஆணவனது கரங்களும் இதழ்களும் போட்டி போட்டு கொண்டு அவளது மேனியை கொள்ளையடித்துக் கொண்டு இருந்தன…
முதலில் நடந்த கூடல் கொலைப்பசியில் இருப்பவனுக்கு கிடைத்த உணவு போல அவசர அவசரமாய் நடந்து முடிந்து இருந்தது…
தற்போது நடக்கும் கூடல் தனக்கு முன் இருக்கும் அறுசுவை உணவுகளை ஆர, அமர, ரசித்து, ருசித்து,புசித்து என நின்று நிதானமாக உண்டுக் கொண்டிருக்கிறான் விக்ரம்…
அவன் அவளது முகத்தை மென்மையாக ஏந்திப் பார்த்த போது, அவளது கண்களில் தெரிந்த ஈரம் அவனுக்கு ஒரு பேருண்மையைப் புரியவைத்தது…
அந்தப் பார்வையில் ஒருவருக்கொருவர் சரணடையும் ஒரு மகத்தான புரிதல் இருந்தது.…
அவள் மார்பில் நடந்த ஆராய்ச்சியில் பெண்ணவளது தலைமுடியை மெல்லக் காதோரம் ஒதுக்கிவிட்டபோது, அந்தச் சிறு தீண்டல் அவளது உடலில் ஒரு மின்சாரத்தைப் பாய்ச்சியது...
அதுவரை அவளுக்குள் இருந்த உலகம் வேறு, இந்த நிமிடம் அவளுக்குத் திறக்கும் உலகம் வேறு என்பதை நறுமுகை அக்கணம் உணர்ந்தாள்…
“இனி நான் வேறு, நீ வேறு அல்ல” என்ற உணர்வு இருவருக்குள்ளும் ஆழமாய் பரவியது….
இரு இதயங்களின் துடிப்பும் ஒரே தாளத்தில் இணைந்த அந்த வினாடியில், அவர்கள் இருவரும் ஒருவருக்கொருவர் வாழ்நாள் முழுவதும் துணையாக இருப்போம் என்ற மௌனமான சத்தியத்தை ஏற்றுக்கொண்டனர்…
அலைகள் மீண்டும் மீண்டும் எவ்வாறு கரையை தொட்டிடுமோ அதே போல அவனது அன்பு அவளை மீண்டும் மீண்டும் நனைத்துக் கொண்டிருந்தது.…
இருவரும் ஈறுயிர் ஓருயிராய் கலந்து தங்கள் தாம்பத்தியத்தை தொடங்கியிருந்தனர்..
அதன் பின்னர் உறவினர்களின் விருந்து என நாட்கள் ரெக்கை கட்டி பறந்தாலும் இரவானால் இருவரும் ஒருவரை ஒருவர் அதிகம் நாடினர்.. பேசினர்.. சிரித்தனர்.. சண்டை போட்டுக் கொண்டனர் என நாட்கள் அழகாய் சென்றது..
தேன் நிலவிற்கு கூட ஒரு வாரம் போல சென்றிருந்தனர்.. இளம் வயது வேகமும் மோகமும் அதிகம் என்பதால் எவ்வித கட்டுப்பாடும் இன்றி தங்களுக்குள் மூழ்கி முத்து எடுத்தனர் விக்ரமும் நறுமுகையும்..
அவள் வயிற்றின் மீது ஆழ்ந்த உறக்கத்தில் தலை வைத்து படுத்து இருந்தான் விக்ரம்.. மெல்ல உறக்கம் கலைய கண்களை கசக்கியபடி சுற்றும் மு ற்றும் பார்த்தவன் பின் நிதானமாய் தன்னவளைத்தான் ஏறிட்டான்.. நேற்று நடந்த கூடலின் விளைவால் களைத்து போய் ஆழ்ந்த உறக்கத்தில் தலைமுடி எல்லாம் கலைந்து உறங்கிக் கொண்டிருந்தாள் நறுமுகை..
அவளது மொத்த அழகையும் பார்வையால் வருடியவனுக்கு இதோ இப்போது தான் அவளை புதிதாக பார்ப்பது போல ‘ப்பாஆ’ என தன்னையும் மீறி வாய் விட்டே கூறிவிட்டு இருந்தான்..
பிறகு இருவரும் ஒரு வழியாய் வீட்டிற்கு வந்து விட அதன் பின் தனது வேலையில் சேர்ந்து இருந்தான் விக்ரம்.. தனது இத்தனை நாள் வருட உழைப்பிற்கான பலனை ஆழ்ந்த அனுபவித்தான் எனலாம்.. தன் கனவு நிறைவேறியதில் அத்தனை மகிழ்ச்சி அவனுக்கு..
முதல் நாள் என்பதால் அடர் நீல நிற முழுக்கை சட்டையினை தான் அணிந்து கொண்டான்.. நீலம் என்றால் அவனுக்கு மிகவும் பிடித்தம்.. ஜெல் வைத்து தலையை படிய வாரி சட்டையில் சுருக்கம் இல்லாது டக்கின் செய்து கொண்டவன்.. தனது மெல்லிய கண்ணாடியையும் அணிந்து கொண்டு முழுதாய் தன்னை கண்ணாடியில் ஒன்றுக்கு இரண்டு முறை திரும்பி திரும்பி பார்த்திட..
அந்நேரம் அவனை பின் இருந்து அணைக்க முற்பட்ட கரத்தை கண்டு கொண்டவன் விழி விரிய அதிர்ந்தவனாய் சட்டென அவளது கரங்களைப் பிடித்து அவள் புறம் திரும்பி நின்று தன்னை தொடாதவாறு அவளது கரங்களை பிடித்துக் கொண்டவன்,
“ சட்டை கசங்கிடும் நறு “ என விழிகள் சுருக்கி கூறியதும் அவனை முறைத்துப் பார்த்தவளாய் ,
“ ரொம்ப பண்ணாதீங்க விக்ரம்.. நான் தொட்டா சட்டை சுருங்கிடுமா?” என பேசி கொண்டு இருந்தவளின் கரங்களை முதுகுக்கு பின்னே வளைத்து அவளை அழுத்தமாய் பார்த்தவன்,
“ நீ தொட்டா சட்டை சுருங்காது.. நீ என்னை தோட்டதும் நான் உன்னை என்னென்னவோ பண்ணா சட்டை சுருங்கும்ல?” என்றதும் அவனது பேச்சில் அதிர்ந்தவளாய் ,
“ போங்க..” என வெடிக்க பட்டவளின் மூக்கோடு மூக்கு உரசி மெல்ல அவளது இதழோடு இதழை ஒற்றி எடுத்து விட்டு,
“ ஃபர்ஸ்ட் டே ப்ரொபஸரா ஜாயின் பண்ண போறேன்..”; என்றதும் அவனிடமிருந்து கரங்களை விடுவித்துக் கொண்டவள் அவனது கன்னம் தாங்கி,
“ ரொம்பவே சந்தோஷமா இருக்கு விக்ரம் .. ஆல் தி பெஸ்ட்”
“ தேங்க்ஸ் டி” என இருவரும் ஒருசேர கீழ் இறங்கி வந்தனர்..
தேசிங்கனுக்கு மகனை கண்டதும் பெருமையாக இருந்தது.. சுகன்யாவும் தேசிங்கனும் மகனையும் மருமகளையும் அழைத்து கொண்டு பூஜை அறைக்கு சென்றனர் .. இருவரும் பெரியவர்கள் காலில் ஆசீர்வாதம் வாங்கியதும் தேசிங்கண் சின்ன கீற்றாய் மகனது நெற்றியில் விபூதியை பூசி ,
“ உன்னோட லட்சியத்தை நல்லபடியா அடைஞ்சுட்டே.. இதுல இன்னும் நீ முன்னேறி வரணும்!” என மனதார வாழ்த்து தெரிவித்தார்..
சுகன்யாவும் மகனது கன்னத்தில் பாசமாய் முத்தமிட்டு ,
“நீ எப்பவும் சந்தோஷமா இருப்பா…ஆசைப்பட்டது எல்லாம் உனக்கு கிடைக்கணும் “ என்று சொன்னார்..
அதன் பின் அவன் சாப்பிட்டு விட்டு அனைவரிடமும் விடை பெற்று காரில் ஏறி கிளம்பி விட்டான்.. செல்பவனது கார் மறையும் வரை அங்கிருந்து நின்று விட்டே வீட்டிற்குள் வந்தாள் நறுமுகை..
விக்ரமிற்கு மதியமும் சேர்த்து சாப்பாடு அவனுக்கு கட்டித் தருவதால் அனைவருக்கும் சேர்த்து காலையிலேயே மதிய சமையலும் முடிந்து விட்டாயிற்று.. துணிகளை எல்லாம் மிஷினில் போட்ட விட்டு வந்த நறுமுகையிடம் முன்வந்து நின்ற சுகன்யா நேரிடையாக விஷயத்திற்கே வந்தார் ,
“ வீட்டிலிருந்து என்ன பண்ணப் போற முகை ?” என கேட்டதும் தடுமாறி விட்டாள் நறுமுகை..
அவளும் இதை பற்றியெல்லாம் யோசிக்கவில்லை என்பதால் ,
“அத்தை என்ன பண்ணனும்?” என கேள்வியை அவரிடமே கேட்டிடவும் யோசிக்கவே இல்லை சுகன்யா,
“ கடைக்கு வா.. விக்ரம் தான் கடையில எனக்கு இன்ட்ரஸ்ட் இல்ல அப்படின்னு சொல்லிட்டான்.. நீயாவது வா “ என்றதும் மறுக்கவில்லை நறுமுகை .. தேசங்கள் முதலில் கடைக்கு சென்று விட அதன் பின் மற்ற வேலைகளை முடித்துவிட்டு சுகன்யாவும் நறுமுகையும் கடைக்கு கிளம்பிச் சென்றனர்..