அத்தியாயம் 32
அவளது மென்மையான இதழில் தன் முரட்டு இதழைப் பதித்து அவளுக்குள் தனது மூச்சுக்காற்றை உட்செலுத்தினான் பொறுப்புள்ள கணவனாக.!
அவளோ அவனது கையை இன்னும் இறுகப் பிடித்து அவனுள் ஒன்றிப் போனாள்.
அவளது உடல் நடுக்கம் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்தது ஆடவணின் உடற் சூட்டின் தயவால்.
அவளுக்கு மூச்சுக்காற்று வழங்குவதற்காக முத்தம் இட்டவன் இன்னும் அவளை விட்ட பாடு தான் இல்லை.
அவனுள் ஒன்றிப் போன அவளது உடல் நடுக்கம் மொத்தமாக நின்றிருக்க இவனுக்குத் தான் அவளைத் தன்னில் இருந்துப் பிரிக்க முடியாமல் போனது.
“ம்ம்..ம்ம்”
அவளது முனகல் சத்தம் கேட்கவே தன்னிலை அடைந்தவன் அவளைத் தன்னில் இருந்து மெதுவாகப் பிரித்து கட்டிலில் படுக்க வைத்தான்.
நிமிர்ந்து நின்றவன் இடுப்பில் கை வைத்து உதட்டைக் குவித்து ஊதினான்.
“உஃப்”
இருந்தும் தலை முடியை அழுந்தக் கோதிக் கொண்டான்.
நேத்ராவினது உடல் நடுக்கம் மொத்தமாக நின்றிருந்த போதிலும் ஆடை நனைந்திருப்பதால் உடல் இன்னும் லேசாக நடுங்கிக் கொண்டிருந்தது.
“முதல்ல இவளோட ட்ரஸ்ஸ மாத்தனும்”
நினைத்தவன் அவளது கன்னத்திற்குத் தட்டினான்.
“எழுந்துரு.. ட்ரஸ்ஸ மாத்திட்டு படு..”
அவளது கன்னத்தில் தட்டி அவளை எழுப்ப முயன்றான்.
ம்ஹும் அவளுக்கு எழுந்து அமரவே முடியவில்லை.
“இங்க பாரு ட்ரஸ் ஈரமா இருக்கு.. மாத்திட்டு படு”
அவன் கூற அவளிடம் எந்தவித எதிர்வினையும் இல்லை.
வேறு வழியில்லை அவளது ஆடையையும் இவன் தான் மாற்ற வேண்டும்.
“ப்ப்ச்ச்”
சலித்துக் கொண்டு சென்று அவளது ஆடையையும் டவலையும் எடுத்துக் கொண்டு வந்தவன் இழுத்து ஒரு பெருமூச்சை விட்டு அவளை நெருங்கியவன்.
முதலில் டவலால் அவளது தலை முடியை நன்கு துடைத்து விட்டான்.
பின் அவளது ஆடையில் கை வைக்கப் பார்த்தவன் ஒரு நொடி தயங்கினான்.
“கன்ட்ரோல் யுஅர் செல்ஃப் ஆக்ஷரன்”
தனக்குத் தானேக் கூறிக் கொண்டவன் அவளது ஆடையைக் களைந்தான் கடினப்பட்டு கண்களைக் கட்டுப்படுத்தியவன் முடிந்த அளவு காரிகை அவளது கண்ணைத் தாண்டி பார்வையை கொண்டு போகவில்லை.
சத்ய சோதனை தான் ஆடவனுக்கு…!!
ஒரு மாதிரியாக அவளது உடலை டவலால் துடைத்து விட்டு ஆடையை அணிவித்தான்.
அவள் தன்னிலையில் இல்லை.
கடினப்பட்டு அவளது ஆடைகளை அணிவித்தவன் அவளை கட்டிலில் மெதுவாக படுக்க வைத்தான்.
இப்பொழுது ஆடவனது முகத்திலோ முத்து முத்தான வியர்வைத் துளிகள் பூத்திருந்தது.
அதை புறங்கையால் துடைத்து விட்டுக் கொண்டவன் அவளையே ஒரு நொடி அழுத்தமாகப் பார்த்து விட்டு அடுத்த நொடி அறையை விட்டு வெளியேறியிருந்தான்.
“ரொம்ப சோதிக்குறா.. ராட்சஸி”
இரு கைகளாலும் முகத்தை அழுந்த துடைத்துக் கொண்டவன் உணர்வுகளைக் கட்டுக்குள் கொண்டு வர படாதபாடு படுவது அவனது சிவப்பேறிய விழிகளில் இருந்தே புரிந்தது.
ஒரு நெடிய பெருமூச்சொன்றை விட்டவன் சமயலறைக்குள் நுழைந்தான்.
சிறிது நேரத்தில் ஒரு பால் கிளாசுடன் அவன் அறைக்குள் நுழைய அவனவளோ கட்டிலில் சுருண்டு படுத்திருந்தாள்.
அவளுக்கு அருகில் சென்றவன் அவளைத் தொட உடல் தகித்தது.
“இப்பிடி சுடுது..”
நினைத்தவன் அவளை மெதுவாக எழுப்பி தனது கை வளைவுக்குள் வைத்துக் கொண்டே கொஞ்சம் கொஞ்சமாக பாலை புகட்டினான்.
அவனது செயல் அத்தனையும் அன்னையை ஒத்திருந்தது.
அவளும் லாவகமாக கணவனது தோளில் தலை சாய்த்துப் படுத்தாள்.
அவளது கணவனுக்குத் தான் அடுத்தக்கட்ட சோதனை ஆரம்பமாகியது.
கடினப்பட்டு உணர்வுகளைக் கட்டுக்குள் வைத்திருப்பவனுக்கு மனைவியின் அருகாமை அந்த கட்டுப்பாட்டை கொஞ்சம் கொஞ்சமாக தளர்த்துவது போல் இருந்தது.
பால் கிளாசை அங்கிருந்த மேசையில் வைத்து விட்டு மனைவியைக் கட்டிலில் கிடத்தி விட்டு எழுந்தான்.
அங்கிருந்த அசையக் கூட முடியாமல் அவனது கரத்தை இறுகப் பற்றியிருந்தாள் அவனது மனைவி.
திரும்பி அவளையும் அவள்ப் பற்றியிருக்கும் கரத்தையும் பார்த்தவன் மெதுவாக அவளது கரத்தினை தனது கரத்திலிருந்து பிரித்து விட்டு அவளைப் பார்த்து விட்டு குளியலறைக்குள் நுழைந்தவன் அப்படியே ஷவருக்கு அடியில் போய் நின்று தண்ணீரைத் திறந்து விட்டான்.
விழிகளை மூடிக் கொண்டவனது மோகத்தையும் தாபத்தையும் அந்த தண்ணீரில் கழுவி விடப் பார்த்தானோ என்னவோ..?? இருபது நிமிடங்கள் அவ்வாறே நின்றிருந்தவன் பின் ஆடையை மாற்றிக் கொண்டு வெளியே வந்தான் அவனது மனைவி கட்டிலின் ஓரத்தில் சுருண்டு படுத்திருந்தாள்.
அவளை போர்வையால் போர்த்தி விட்டு அவளைக் கட்டிலில் நடுவில் படுக்க வைக்கப் பார்க்க அவளோ அசையவில்லை.
பின் அவளைத் தூக்கி கட்டிலின் நடுவின் விட்டவன் எழுந்துச் செல்லப் பார்க்க அவளது தாலிச் சங்கிலி அவனது டீஷேர்ட்டுடன் மாட்டிப் பட்டது.
“ப்ச் இது வேறயா”
சலித்துக் கொண்டு அதை எடுக்கப் பார்க்க அவனவளோ கரத்தால் அவனது இடையைப் பிடித்துக் கொண்டு அவனது மார்பின் மேல் தனது முகத்தைத் தேய்த்து விட்டுக் கொண்டு தனது உறக்கத்தைத் தொடர ஆடவனது கரமோ அந்தரத்தில் மிதந்தது.
விழிகளோ விரிந்துக் கொண்டது.
ஆனந்தத் தொல்லை தான் இவள்..!!
கீழ் உதட்டைக் கடித்து பெருமூச்சொன்றை விட்டு தனது உணர்வுகளைக் கட்டுக்குள் கொண்டு வந்தவன் அதில் வெற்றியும் கண்டு விட்டான்.
பின் அவசரமாக அந்த தாலிச் சங்கிலியில் இருந்து தனது டீஷேர்ட்டை விடுவித்தவனுக்கு காரிகையவளது கரத்தை எடுக்கத் தான் முடியவில்லை.
தலையை இரண்டு பக்கமாக ஆட்டியவன் அப்படியே கட்டிலில் படுத்துக் கொண்டான்.
அவனவளோ இன்னும் வசதியாக அவனுள் ஒன்றிப் போக அவளது தோளை சுற்றித் தனது கரத்தை படரவிட்டவன் அவளது முகத்தையே ஓரிரண்டு நொடிகள் உற்று நோக்கி விட்டு அப்படியே கண்களை மூடிக் கொண்டான்..
கண்கள் மூடியிருந்தாலும் இதழோ சற்று விரிந்திருந்தது.
அவனவள் நாளைக் காலை கேட்கப் போகும் அறிவான கேள்விகளை நினைத்தோ என்னவோ..?!
கதிரவன் காரியத்தில் கண்ணாக காலையிலே கடைத் திறக்க வந்திருக்க அக்ஷரனுக்கும் நேத்ராவிற்கும் தான் இன்னும் விடிந்தபாடில்லை.
அவள் அவனது அணைப்பின் கதகதப்பில் படுத்திருக்க அவனும் அவளை தனது அணைப்பிலே வைத்துக் கொண்டு உறங்கியிருந்தான்.
திரைச்சீலையைத் தாண்டி கதிரவனின் கதிர்கள் அறையில் தெறிக்க திறக்கமுடியாத இமைகளை கடினப்பட்டுத் திறந்தாள் நேத்ரா.
ஏதோ ஒன்றுக்குள் அடைப்பட்டு சுகமானதொரு உணர்வில் இருந்தவள் சற்று விழியுயர்த்திப் பார்த்தாள்.
மிக மிக நெருக்கத்தில் அவளது கணவனது முகம் பெரிய கண் இன்னும் கொஞ்சம் விரிந்தது.
“அச்சோ இவங்ககூட எப்பிடி இங்க”
நினைக்கவே முடியவில்லை இதயம் வேறு எக்குத்தப்பாக எகிறிக் குதித்தது.
அவனது அணைப்பு வேறு இறுகிப் போய் இருந்தது.
அவன் இன்னும் விழித்திருக்கவில்லை.
முதல் முறையாக அவனது அணைப்பில் நினைக்கும் போதே உடலில் உள்ள ஹொர்மோன்ங்கள் சுரந்தது.
அவனது கரம் அவளது இடையைத் தழுவியிருந்தது அதுவும் இறுக்கமாக.
இவளால் ஒரு இன்ச் கூட அசைய முடியவில்லை.
“ஐயோ நா எப்பிடி இங்க வந்தேன்.. இவங்க முழிக்குறதுக்கு முன்னாடி எழும்பி போய்டனுமே.. அவங்க பார்த்தா என்ன நினைப்பாங்க ஐயோ..”
அவனிடமிருந்து விலகப் பார்க்க முடியவில்லை.
அவள் எழுவதற்காக சற்று விலக அவளை இன்னும் அணைத்துக் கொண்டுத் தூங்கினான் ஆக்ஷரன்
“எப்பிடி எழும்புறது..”
அவள் சற்று சத்தமாகவே சொல்லி விட புருவங்கள் முடிச்சிட சற்று அசைந்து படுத்தான் அவள் கணவன்.
“எழுந்துப்பாங்க போலயே”
வாயில் கைவைத்து அவனையேப் பார்த்தாள்.
முதலில் பயந்து போய் பார்த்தவளது பார்வை ஒரு சில நொடிகளில் மாறியது.
அவனது நெற்றியில் நடனமாடும் முன்கற்றை முடிகளை தன்னையறியாமலே ஒதுக்கி விட்டாள்.
பின் அவளது தலை முடியை லேசாக கோதி விட்டாள்.
அவன் சற்று அசைந்துப் படுத்தான்.
அவளது கரமோ அப்படியே நின்றது.
பின் அவனது பிரத்யேக வாசனையை உள்ளுக்குள் இழுத்தவள் அதைத் தனது நுரையீரலுக்குள் அனுப்பினாள்.
அவளறியாமல் அவனையேப் பார்த்துக் கொண்டிருந்தாள்.
“இது தப்பு..”
உள்ளே இருந்து ஒரு குரல் ஒலித்தது.
“ஆனா..”
இவள் இழுக்க.
“உன்னோட மனச தொட்டு சொல்லு உன்னோட உண்மை இவருக்குத் தெரிஞ்சா உன்ன பத்தி என்ன நினைப்பாருன்னு உனக்கே தெரியும்ல அதோட அவர நம்பி இன்னொரு பொண்ணு இருக்காங்க அதோட அந்த பொண்ணு இவரோட கொழந்தைய சுமக்குறாங்க..அவங்களுக்கு துரோகம் பன்னிடாதே”
என்றும் போல் உள்ளே உள்ள மனசாட்சி அவளுக்கு எடுத்துக் கூற ரசனையாகப் பார்த்த பார்வை மாறியது..
“ஆனாலும்..”
தயங்கி நின்ற மற்றொரு மனதை அடக்கி வைத்தவள் இரண்டு கைகளாலும் அவனது கரத்தை எடுத்து விட்டவன் அவசரமாக எழுந்து அமர்ந்தாள்.
அவனோ இன்னும் அசைந்து நன்றாக உறங்க ஆரம்பித்தான்.
எழுந்து அமர்ந்து தன்னை குனிந்துப் பார்த்தவள் அதிர்ந்து தான் போனாள்.
நேற்று வேறு ஆடை அணிந்திருந்தவள் இன்று வேறு ஆடையில் இருக்க அதிராமல் இருந்தால் தான் ஆச்சரியம்.
“நா எப்பிடி வேற..”
நினைக்கும் போதே அவன் அசைந்தான்.
அவன் விழிகளைத் திறந்து சோம்பல் முறித்துக் கொண்டு தன் முன்னால் இருப்பவளைப் பார்த்தான்.
அவளும் விழித்தாள் அவனைப் பார்த்து.
இப்பொழுது என்ன சொல்லி சமாளிக்க வேண்டும் எனத் தெரியாமல் அவள் பார்த்தாள்.
அவளுக்கு நேற்று பாதையில் அவனுடன் பேசிக் கொண்டிருந்தது மட்டும் தான் நினைவில் இருந்தது வேறு எதுவும் நினைவில் இல்லை.
“அது.. நா..”
தயக்கமாக இழுத்தாள் அவனைப் பார்த்து.
“இப்போ எப்பிடி இருக்கு”
அவன் எழுந்தமர்ந்துக் கொண்டுக் கேட்டாள்.
மறுபடியும் விழித்தாள்.
“எது..”
அவள் கேட்க அவளைப் பார்த்தவனுக்கு புரிந்தது அவளுக்கு நேற்று தன்னிலை இன்றி இருந்ததால் எதுவும் நினைவில் இல்லை என்று,
“எனக்கு ஒன்னுமில்லையே..”
அவள் உதட்டைப் பிதுக்கிக் கூற அவளது இதழில் ஒரு நொடி பார்வை பதித்து விட்டு அவளைப் பார்த்தவன் தலையை இடவலமாக ஆட்டினான்.
“அப்போ நா எப்பிடி இந்த ட்ரஸ்ல”
அவள் புரியாமல் கேட்டிட,
“நீ தானே நைட் இந்த ட்ரஸ்ஸ மாத்தின”
அவன் புருவம் சுருக்கி ஒரு மாதிரியாக அவளிடம் கேட்டான்.
“இல்ல நான்…”
ஏதோ சொல்ல வர.
“அப்போ உனக்கு நியாபக மறதி வேற இருக்கா துக்கத்துல நடந்து கட்டில்ல வந்து படுத்து இருக்க இப்போ இத நோய்”
அவன் கூறிக் கொண்டு சென்றான்.
“இல்ல இல்ல நான் தான் மாத்தினேன் நான் தான்”
அவள் தலையை சொரிந்துக் கொண்டு அவனிடம் கூற பொங்கி வந்த சிரிப்பைக் கட்டுப்படுத்திக் கொண்டு அவளைப் பார்த்தவன்.
“அப்போ ஓகே இல்லன்னா சொல்லு டாக்டர்கிட்ட போகலாம்”
அவன் கூற இவள் விழித்தாள்.
பின்னர் இவன் எழுந்து குளியலறைக்குள் நுழைந்து கொண்டான்.
“அவங்ககிட்ட ஒத்துக்கிட்டதுக்கு.. நா மாத்தவே இல்லையே அவங்க சொன்னது போல எனக்கு நியாபக மறதியும் இருக்கா.. கடவுளே நீ தான் காப்பாத்தனும்”
அவள் கடவுளிடம் அவசர வேண்டுதல் ஒன்றை வைத்தாள்.
பின் அழைப்பேசி அதிர எடுத்துப் பார்த்தாள்.
திரையில் தர்ஷனது எண் ஒளிர தயக்கமாக இருந்தாலும் எடுத்தாள்.
“நேத்ரா டீவிய பாரு அவசரமா”
அவன் அவசரப்படுத்த.
“எதுக்கு..”
இவள் புரியாமல் விழித்தாள்.
“சொன்னா போய் பாரு”
அவன் கூற எழுந்து சென்று தொலைக் காட்சியை உயிர்ப்பித்தவள்.
அங்கு ஓடிக் கொண்டிருந்த செய்தில் திகைத்தாள்.
பிரபல நடிகை நேற்று இரவு தற்கொலை.
என சொல்லப்பட்டது.
அப்பிரபல நடிகை வேறு யாருமல்ல அவளை நேற்று தப்பாக பேசிய அந்நடிகையே தான்.
நேற்று அவளைப் பற்றி அவதூறு பேசியவள் இன்று இவ்வுலகத்திலையே இல்லை..!!
*****
தொடரும்..❤
💜அஷு💜