அத்தியாயம் 31
அக்ஷரன் நேத்ராவைத் தனது அணைப்பில் இருந்து விலக்கி விட அவள் விதிவிதிர்த்துப் போனாள்.
கலங்கிய விழிகளால் அவனை ஏறிட்டுப் பார்த்த பாவையவளோ தனது கணவனது முக பாவனையில் கலக்கமாக அவனைப் பார்த்தாள்.
அவனும் தன்னை நம்பவில்லையோ..??
என்ற பார்வை பாவையிடம்.. அவன் அவளை முறைத்துப் பார்த்து விட்டு அங்கு குழுமியிருந்தவர்களையும் ஒரு முறைத் திரும்பிப் பார்த்தான் முறைப்பாக,.
அங்கிருந்தவர்களுக்கோ அக்ஷரன் எதுக்கு இங்கு வந்திருக்கிறான் எனத் தெரியவில்லை.
அந்த படத்தின் நாயகியோ அவசரமாக அக்ஷரனுக்கு அருகில் ஓடி வந்து குலைவாக,.
“ஹாய்.. ஸர் நீங்க எங்க இங்க..”
நெளிந்துக் கொண்டு ஒரு மார்க்கமாகக் கூற நேத்ரா தான் விழித்தாள்.
“எதுக்கு இப்போ இவ்ளோ வழியுறா”
உள்ளுக்குள் புகை வராமல் இல்லை இருந்தாலும் கலக்கமாகக் கணவனையேப் பார்த்துக் கொண்டிருந்தாள்.
“இங்க என்ன நடக்குது”
அக்ஷரன் தயாளனிடம் கேட்க அவரோ தயக்கமாக அவனைப் பார்த்தார்.
அவருக்குத் தான் தெரியுமே.. அக்ஷரனது அடாவடித்தனமும்,கோவமும்.
“இதோ இங்க நிக்குறாளே இவ தர்ஷனோட அந்த ரூமுக்குள்ள போய்”
அந்த படத்தின் நாயகி ஆர்வக் கோளாறில் அவசரப்பட்டு சொல்லிக் கொண்டுப் போக வசனத்தை முழுதாக முடிக்கக் கிடைக்காமல் தரையில் சுருண்டு விழுந்து கன்னத்தில் கை வைத்துக் கொண்டு அக்ஷரனை அதிர்ச்சியாகப் பார்த்தாள்.
அங்கு நின்றிருந்த அனைவருக்கும் அதிர்ச்சியே.!!
ஏன் அவனவளும் வாயின் மேல் கை வைத்து அதிர்ச்சியாகப் பார்த்தாள் தன் கணவனை.
கை முஷ்டி இறுக, உள்ளங்கையை இறுக மூடி கோவத்தைக் கட்டுப்படுத்த போராடிக் கொண்டு பற்களைக் கடித்துக் கொண்டு அந்த நாயகியைப் பார்த்தவன்.
இரண்டு காலையும் மடக்கி இடது காலின் தொடையில் கையை ஊன்றி வலது கையின் ஆட்காட்டி விரலை நீட்டி அந்த நடிகையைப் பார்த்து,
“இதுக்கப்புறம் ஏதாச்சும் பேசின தொலச்சிடுவேன் ஜாக்கிரத”
பற்களுக்கிடையில் சிறைப்பட்டு வார்த்தைகளை விட அவனது ஐயனார் அவதாரத்தில் அங்கிருந்தவர்கள் பயந்து தான் போனார்கள்.
அந்த நடிகையை சொல்லவே வேண்டாம்.
அவன் அறைந்ததில் கன்னம் கன்றிப் போய் இருக்க கண்களோ அவளது அனுமதி இன்றியே கலங்கியது பயத்தால்.
அந்த நடிகையை அழுத்தமாகப் பார்த்துக் கொண்டு எழுந்து தனது முழு உயத்திற்கும் நிமிர்ந்து நின்றவன்.
தனது மனையாளைத் திரும்பிப் பார்க்க அவளோ எச்சில் விழுங்கிக் கொண்டு அவனைப் பார்த்தாள்.
அவளைப் பிடித்து இழுத்து தன்னருகே நிறுத்த அவன் இழுத்த இழுப்பில் அவன் மேலே வந்து மோதி நின்றாள்.
அவளைத் தனக்கு மிக அருகில் நிறுத்தி அவது இடையில் கைப் போட்டுக் கொண்டு அங்குள்ளவர்களைப் பார்த்தவன்.
“இவ என்னோட பொண்டாட்டி இனிமே இவளப் பத்தி எவனாச்சும் ஏதாச்சும் பேசினன்னு வை.. இங்க இருந்து பொணமாத் தான் போவிங்க”
அழுத்தம் திருத்தமாக அவன் கூறிய விதத்தில் அங்கிருந்தவர்களது தலை தானாக ஆடியது.
பின் திரும்பி கீழே விழுந்து இருக்கும் நடிகையைப் பார்க்க அவளோ பின்னால் நகர்ந்தாள்.
“நீ பொண்ணா இருக்குறதால தப்பிச்ச இல்ல இங்க நடக்குறதே வேற”
மீண்டும் ஒரு முறை அவளை எச்சரித்து விட்டு தனது மனையாளை அழைத்துக் கொண்டு அங்கிருந்து சென்றான் அக்ஷரன்.
அவனது அணைப்புக்குள் இருந்தபடியே அவனை ஏறெடுத்துப் பார்த்துக் கொண்டே அவன் இழுத்த இழுப்புக்குச் சென்றாள் இவள்.
அவனது முகமோ கருங்கற் பாறையை ஒத்ததாக இறுகிக் காணப்பட்டது.
அவளை அழைத்துச் சென்றவன் காரின் முன்னிருக்கையை திறந்து அவளை அமர வைத்தான்.
இவளும் சமத்தாக அமர்ந்துக் கொள்ள மறுபக்கத்தில் தானும் ஏறி காரை எடுத்தான்.
காரிற்குள்ளும் சூடாகவேக் காணப்பட்டது அந்த ஏஸிக் காற்றின் குளுமையைக் கடந்தும்,
அவன் விடும் உஷ்ணக் காற்றே காரின் உள்ளே வெப்பத்தை அதிகரிக்க செய்ததோ என்னவோ.??
இவள் அடிக்கடி அவனது முகத்தைப் பார்ப்பதும் முன்னால் திரும்புவதுமாக இருந்தாள்
கார் ஓரிடத்தில் சடன் ப்ரேக் போட்டு நிறுத்தப்பட்டது.
இவள் அவனைப் பார்க்க அவனோ எதுவும் பேசாமல் காரை விட்டு கீழ் இறங்கினான்.
அது ஆள் அரவமற்ற ஓர் பாதை.
இவன் காரை விட்டு இறங்கி அப்பாதையின் குறுக்கும் நெடுக்குமாக நடக்க இவள் தான் புரியாமல் விழித்தாள்.
அரை நொடி காரிற்குள் இருந்தவள் அடுத்த நொடி காரை விட்டு இறங்கினாள்.
அவனோ கை முஷ்டியை இறுக மூடி கோவத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் அங்கும் இங்கும் நடக்க இவளுக்குத் தான் அவனது கோவத்தில் முதுகுத் தண்டு சில்லிட்டது.
முதல் தடவையாக கல்யாண மண்டபத்தில் எப்படி இருந்தானோ அதே நிலையில் தான் மறுபடியும் இப்பொழுதும்.
இவளுக்கு அவன் அருகில் செல்லக் கூட தைரியம் இல்லை.
இருந்தாலும் இப்பொழுது பேச வேண்டுமே..
இப்படியே இருக்க முடியாதே.
வானம் வேறு இருண்டுப் போய் மழை பெய்யப் போகிறது என்ற அறிகுறியைத் தாங்கியிருந்தது.
அவனுக்கு அருகில் நெருங்கியவள்.அவனது தோளைத் தொட அதற்காகவேக் காத்திருந்தவன் போல் ‘படார்’ என அவள்ப் பக்கம் திரும்பினான்.
இவளோ அவன் திரும்பிய வேகத்தில் பயந்து போய் இரண்டடி பின்னால் நகர்ந்தாள்.
அவளது தோளை இறுகப் பிடித்தவன் அவளைத் தனக்கு அருகில் மிக நெருக்கமாகக் கொண்டு வந்தான்.
அவளோ அவனது மார்பில் முட்டி மோதி நின்றாள்.
அவனது பிடி வேறு வலியை கொடுக்க பற்களைக் கடித்து வலியைப் பொறுத்துக் கொண்டு அவனை ஏறெடுத்துப் பார்த்தாள்..
அவனோ இன்னும் குறையா ருத்ரமூர்த்தி அவதாரம் எடுத்து அவளை முறைத்துப் பார்த்து பஸ்பமாக்கிக் கொண்டிருந்தான்.
அவளது விழிகளையேப் பார்த்தவன்.
“எதுக்குடி இப்பிடி இருக்க”
பற்களுக்கு இடையில் வார்த்தைகளைக் கடித்துத் துப்பினான்.
“எப்..பிடி”
அவனுடன் பேசவே பயமாக இருந்தது அவளுக்கு.
முதன் முறையாக அவளை ‘டி’ போட்டு பேசியிருக்கிறான்.
அவள் உணர்ந்தாளா??
அவன் உணர்ந்து தான் சொன்னானா??
“எப்பிடியா”
எனக் கூறியவன் அவளது தாடையை இறுகப் பற்றினான்.
வானில் இருந்து நீர்த்துளிகள் மண்ணைத் தொட ஆரம்பித்திருந்தது.
“உனக்காக நீ எப்போ பேச ஆரம்பிப்ப ஹ்ம்ம்”
புருவம் உயர்த்தி அவன் கேட்க என்றும் போல் புரியாமல் விழித்தாள் நேத்ரா.
“இப்பிடி பார்க்காதே இரிட்டேடிங்”
அவன் சலிப்பாக் கூறி விட்டு அவளை விட்டு விலகி தலை முடியை இரண்டு கைகளாலும் அழுந்தக் கோதிக் கொண்டவன்.
“நா அந்த டைம் அங்க வந்திருக்கல்லன்னா என்ன பன்னிருப்ப”
பேன்ட் பொக்கெட்டில் இரண்டு கைகளையும் விட்டபடி நிதானமாக மிக மிக நிதானமாக அவன் கேட்க இவளுக்குத் தான் பதில் தெரியவில்லை.
“என்ன பன்னிருப்பேன்”
அவள் அவளிடமே கேட்டுக் கொண்டாள்.
“ஒன்னும் பன்னியிருக்க மாட்ட அழுதுக்கிட்டிருப்ப அவ்ளோ தான்”
உள்ளேயிருந்து ஒரு குரல் வந்தது..
உண்மையும் அது தானே..!
அவளவனைக் கண்டதும் தன்னைப் பாதுகாக்கவே அவன் வந்துள்ளான் என எண்ணி ஓடிச் சென்று அவனை அணைத்துக் கொண்டதும் அவன் தன்னை விலக்கி விட்டதும் அவனும் தன்னை நம்பவில்லையோ என எண்ணி கலங்கித் தவித்தாளே.
மழை வேறு வலுப்பெற ஆரம்பித்திருந்தது.
அவன் அவளைத் தான் பார்த்துக் கொண்டிருந்தான்
அவளும் பதில் சொல்லத் தெரியாமல் இல்லை பதில் தெரியாமல் அவனைப் பார்க்காமல் தலையை குனித்துக் கொண்டு நின்றிருந்தாள்.
மழை சோவென பெய்ய ஆரம்பித்தது.
அவன் அசையவில்லை அவளும் அவனுக்கு முன்னால் அசையாமல் நின்றிருந்தாள்.
“இங்க பாரு நீ உனக்காக முதல்ல பேசு தப்பு செஞ்சாலும் தப்ப நியாயப்படுத்த அந்த குற்றவாளிக்கு உரிமை இருக்கு ஆனா நீ தப்பு செய்யல்லன்னாலும் அத ஒத்துப்ப போல இருக்கு..”
அவன் அந்த மழையின் சத்தத்தில் கத்திக் கூறினான் இல்லாத பொறுமைய இழுத்துப் பிடித்துக் கொண்டு,
அவன் கூறியதைக் கேட்டவளுக்கும் புரிந்தது.
அந்த இடத்தில் தான் எதுவுமேக் கூறவில்லையே.
தன்னை நியாயப்படுத்தவும் இல்லை அதைத் தான் அவன் கூறுகிறான் எனப் புரிந்ததும் அமைதியாகத் தலையைக் குனித்துக் கொண்டாள்.
உடல் வேறு நடுங்க ஆரம்பித்தது மழையின் தயவால்,
“நா அந்த டைம் வரல்லன்னா நீ பாட்டுக்கு அந்த தப்ப ஒத்துக்கிட்டு அழுதுகிட்டு தான் இருந்திருப்ப”
அவன் கூற அவள் எதுவும் பேசவில்லை.
உண்மையும் அது தானே..!!
அவள் நடுங்குவதை உணர்ந்தவன் அவளுக்கு அருகில் சென்று அவளைத் தொட அவளோ உடல்நடுங்க அவனுள் ஒன்றிப் போனாள்.
மின்சாரம் தாக்கப்பட்டது போல் உணர்ந்தவனுக்கோ அவளை முன்னர் போல் விலக்க முடியவும் இல்லை தோணவும் இல்லை.
அடை மழையில் தான் இருவரும் நின்றிருந்தனர்.
அவள் அவனுள் ஒன்றிப் போக இவன் தான் இவ்வுலகிலே இல்லை.
“நே..த்ரா”
முதல் முறை ஆடவனின் வார்த்தைகள் திணறியது.
அவளோ பேசும் நிலையில் இல்லை அவளது உடல் வெடவெட என நடுங்கியது.
அவளை அணைத்தவாறு காருக்கு அருகில் கொண்டு போனவன் கார்க் கதவைத் திறந்து அவளை உள்ளே அமர வைத்தான்.
அவளோ உடல் நடுங்க அமர்ந்தாள்
பற்கள் வேறு டைப்படித்தது.
அவன் மறுபக்கத்தில் சென்று காரை ஸ்டார்ட் செய்தான்.
அவளது உடல் நடுங்குவதால் காரின் ஏஸியை ஓஃப் பன்னினான் இருந்தும் அவளது உடல் நடுக்கம் குறையவில்லை.
“ஓஹ்.. ஷிட்”
அவளை மழையில் நனைய வைத்துப் பேசிய தனது மடத்தனத்தை எண்ணி தலையில் தட்டிக் கொண்டவன் காரை அசுர வேகத்தில் ஓட்டினான்.
அடிக்கடி அவளது கையை தனது ஒரு கையினுள் வைத்துக் கொண்டு அவளது நடுக்கத்தைக் குறைக்க நினைத்தான் இருந்தும் முடியவில்லை.
அடுத்த பத்து நிமிடங்களில் அவர்களது அப்பார்ட்மென்ட்டின் முன்னால் காரை நிறுத்தினான்.
அவசரமாக இறங்கிச் சென்று அவளது கார்க்கதவைத் திறந்தவன் அவளைத் தனது கைகளில் ஏந்திக் கொண்டு வீட்டிற்குச் சென்றான்.
கதவைத் திறந்து உள்ளே சென்றவன் அறைக்குள்ளே சென்றான் அவளைக் கைகளில் ஏந்தியவாறு.
அவளோ தன்னிலையில் இழந்து விட்டாள் மொத்தமாக,
அவனது கைக்குள் ஒடுங்கிப் போய் உடல் நடுங்க இருந்தாள்.
அவளை அறைக்குள் கொண்டுப் போய் விட்டவன்.
அவளைக் கட்டிலில் கிடத்தி அவளது உள்ளங்கையையும் காலையும் அவசர அவசரமாகத் தேய்த்து விட்டான்.
இருந்தும் பலன் பூச்சியம் தான்.
அவளது நடுக்கத்தின் அளவு குறைந்தபாடில்லை.
எதிலும் நிதானமாக இருப்பவனுக்கு இவளை இந்நிலையில் பார்த்ததும் பதட்டம் மாத்திரம் தான் முன்னாடி வந்தது அவனது நிதானமோ பத்தடி தள்ளி விழுந்தது அவனவளது முன்னிலையில்.
“டாக்டர கூப்டு”
அவனது உள்ளுணர்வு சொல்ல எழுந்துப் போகப் பார்த்தான் வைத்தியருக்கு அழைப்பதற்காக,
ஆனால் போக முடியாதவாறு அவனது மனைவி அவனது கையை இறுகப் பற்றியிருந்தாள்.
திரும்பி அவளைப் பார்த்தான் அவள் அவனது கரத்தைப் பற்றியிருந்த அழுத்தமே உணர்த்தியது அவளை விட்டுச் செல்ல வேண்டாம் என்று,
அவளுக்கு அருகில் அமர்ந்தவன் அவளது கையை தேய்த்து நடுக்கத்தைக் கட்டுப்படுத்தப் பார்த்தான்.
அவளது கண் சொருகி மூச்சுக்காற்றுக்காக ஏங்கி பெரிய பெரிய மூச்சுக்களை இழுத்து விட்டாள்.
அவனோ அவள் இருக்கும் நிலையைப் பார்த்ததும் என்ன செய்வதென்றுத் தெரியாமல் அவளது கன்னத்திற்கு லேசாகத் தட்டினான் இருந்தும் அவள் கண்கள் சொருக மயக்க நிலைக்குச் செல்லப் பார்த்து மூச்சுக்காற்றுக்காக ஏங்கி நிற்க அடுத்த நொடி அவளது இதழில் தனது முரட்டு இதழை பதித்து அவனவளுக்கு மூச்சுக்காற்றை வழங்கினான் பொறுப்புள்ள கணவனாக,
*********
எபி ஷோர்ட்ன்னு புரியுது.. பட் சிட்டுவேஷன் அப்பிடி எப்பிடியாச்சும் தினமும் யூடி கொடுக்கப் பாக்குறேன்.. உங்க பேராதரவுக்கு நன்றிகள் கோடி தங்கம்ஸ்..😍❤
தொடரும்…❤
💜அஷு💜