அத்தியாயம் 39

அத்தியாயம் 39

 

ஶ்ரீஜாவிடமிருந்து அழைப்பு வர அவ்வளவு நேரம் இருந்த இலகுத்தன்மைத் தொலைந்தது.

இருவரும் விவாகரத்துப் பெற இருப்பது முதல் அவனது வாரிசு ஶ்ரீஜாவின் வயிற்றில் வளருவதை வரை நினைவில் வந்து போக இவளது முகம் கூம்பியது.

அவளது ஒவ்வொரு முகபாவனையையும் உள்வாங்கிய காளையிவனது முகமும் அடுத்த நொடி இறுகித் தான் போனது.

“அவசரமா வா”

அவன் கூற நிமிர்ந்து அவனைப் பார்த்தவள் அழைப்பை ஏற்போமா வேண்டாமா? என்ற சிந்தனையில் இருக்க  அவளுக்கு அருகில் நெருங்கியவன் அவளது அழைப்பேசியை எடுத்து அதைப் பார்த்தான்.

பின் அதைத் துண்டித்தவன் அவளை அழுத்தமாகப் பார்த்தான்.

“உனக்குத் தேவையானது எது தேவையில்லாதது எதுன்னு இன்னும் உனக்குப் புரியல்ல”

அவன் கூற என்றும் போல் புரியாமலேப் பார்த்தாள் அவனை.

அவளை விட்டு விலகியவன் 

அறையில் இருந்து வெளியேறினாள்.

“எனக்கு என்ன தேவ..”

அவளுக்கு சத்தியமாக புரியவில்லை..

தேவகி அழைக்கும் சத்தம் கேட்க அறையை விட்டு வெளியேறினாள்.

தேவகியும் ஞானவேலும் சேர்ந்திருக்க.

“எங்கள ஆசிர்வாதம் பன்னுங்க”

நேத்ரா தான் அக்ஷரனது முழங்கைக்கு தனது முழங்கையால் இடித்து அவனையும் சேர்த்து அவர்களிடம் ஆசிர்வாதம் பெற குனிந்தாள்.

இருவரும் புன்னகைத்துக் கொண்டே,

“நூறு வருஷம் புள்ள குட்டிகளோட சந்தோஷமா வாழனும்”

மனாதார ஆசிர்வாதம் செய்தனர்.

பின் நால்வரும் கீழே சென்றனர் அந்த ஆடை நேத்ராவிற்கு சற்று பாரமாகத் தான் இருந்தது 

அக்ஷரன் அவளுக்கு அருகில் நெருங்கி அதைப் பிடித்துக் கொண்டான்.

இவளுக்குத் தான் அத்தை மாமாவின் முன்னர் ஒரு மாதிரியாகியது.

“என்ன பன்றிங்க விடுங்க”

அவள் கூற அவன் எதுவும் பேசவில்லை.

“அத்தையும் மாமாவும் இருக்காங்க”

அவள் சங்கடமாகக் கூறினாள்.

அவர்களுக்கோ அது கண்ணுக்குக் கூட விளங்கவில்லை.

“ஸோ வாஆஆட் உன்னோட ட்ரஸ்ஸ கலட்டினேனா.. இல்லையே அப்புறம் என்ன”

அவன் அசால்ட்டாகக் கூற இவளுக்குத் தான் பக்கென்று இருந்தது.

“என்ன பேச்சு இது”

அவனிடம் கூற முடியாமல் தனக்குள்ளே கூறிக் கொண்டாள்.

அவன் சென்று அவள் அமருவதற்கு முன்னிருக்கையின் கதவைத் திறந்து விட,

இவளோ,

“மாமா இருக்கட்டும்”

தனது மாமனாருக்கு விட்டுக் கொடுத்தாள்..

“இல்ல நீ இரு உனக்கு கன்ஃபடபளா இருக்கும்”

அவளிடம் கூறியவன் திரும்பி தனது தந்தையைப் பார்த்து,

“அப்பா உங்களுக்கு ஒரு ப்ரொப்ளமும் இல்லையே”.

அவன் கேட்க.

“ அச்சோ இப்போ இதுவா பிரச்சின கண்ணு முன்னாடி உட்காரு ஏங்க நீங்க வாங்க”

தேவகிக் கூறி விட்டு தனது கணவனை அழைத்துக் கொண்டுச் சென்று பின்னிருக்கையில் ஏறி அமர்ந்தார்.

“நீ போய் உட்காரு”

அவள் ஏறி அமர்ந்ததும் கார்க் கதவை மூடி விட்டு சென்று தனது இருக்கையில் அமர்ந்தவன் காரை எடுத்தான்.

அவளுக்கோ ஶ்ரீஜாவைப் பற்றியே யோசனை ஓடிக் கொண்டிருந்தது.

“அவங்ககூட அந்த ஹோட்டல்ல இருந்தது யாரு.. அவ்ளோ நெருக்கமா இருக்குற அளவு யாரா இருப்பாங்க”

இதே தான் மண்டைக்குள் ஓடியது.

“இவர அவங்க ஏமாத்துறாங்களோ.. அப்பிடி மட்டும் இருக்கக் கூடாது..”

அவளாக நினைத்துக் கொண்டாள்.

“இவங்ககிட்ட சொல்வோமா ம்ஹும் வேணாம்..  அது யாருன்னு நானே தேடிக் கண்டுபுடிக்குறேன்”

“அடியே இன்னைக்கு என்ன நாள்ன்னு மறந்துடுச்சா.. நீ என்னன்னா அத பத்தி யோசிக்கவே மாட்டியா. இன்னைக்காச்சும் சந்தோஷமா இரு”

மனசாட்சி நியாபகப்படுத்தியது.

“நிரந்தரமில்லாத சந்தோஷம் தானே”

மனம் சோர்வாகியது.

இவள் தனக்குள்ளே உழன்றதால் அக்ஷரன் அழைத்தது கேட்கவில்லை.

அவளது தோளை சற்று அழுத்திப் பிடித்து உலுக்கவே சிந்தையில் இருந்து தெளிந்தவள் அவனை மிரண்டு போய் பார்த்தாள்.

“என்ன கனவு கண்டுக்கிட்டிருக்க.. இறங்கு”

அவன் கூறவே ஹோட்டல் வந்திருந்ததை உணர்ந்து கார்க் கதவைத் திறந்துக் கொண்டு இறங்கினாள்.

தேவகியும் ஞானவேலும் ஏற்கனவே இறங்கிப் போயிருந்தனர்.

“அத்தையும் மாமாவும் எங்க”

அவள் கேட்க அவளுக்கு அருகில் வந்து நின்றவன்.

“ம்ம் நீ தூங்கும் போதே இறங்கிப் போய்ட்டாங்க இப்போ வா நாம உள்ள போகனும்”

அவன் கூறி அவளது கரத்தைப் பிடித்துக் கொண்டு செல்ல அவனது கரத்தையும் அவனது கரத்துக்குள் இருந்த தனது கரத்தையுமே பார்த்தாள்.

நிரந்தரமற்ற உறவல்லவா..??

நீடிக்காத உறவல்லவா…??

ஹோட்டலின் உள்ளே சென்றவள் அந்த ஹோட்டலினது அலங்கரிப்பிலும் அழகிலும் ஒரு நொடி மிரண்டாள் என்று தான் சொல்ல வேண்டும்.

கோடி கணக்கை வாரியிறைத்து தான் அந்த ஹோட்டலை அலங்கரித்து இருந்தனர்.

படங்களில் எவ்வாறு ஹோட்டல்கள் அலங்கரிக்கப்பட்டிருக்குமோ அவ்வாறே தான்.

அவ்வளவு அழகாக அனைத்தும் தனி வெள்ளை நிறத்தில் தான் அலங்கரிக்கப்பட்டிருந்தது.

இவள் அவ்விடத்தை சுற்றிப் பார்த்துக் கொண்டே ஸ்டேஜிற்கு வந்திருந்தாள்.

ஸ்டேஜும் வெள்ளை நிற ஓர்கிட் மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.

அந்த ஹோட்டலின் அலங்கரிப்பு முறை மனதிற்கு இதம் அளிக்கும் வகையில் தான் இருந்தது.

இருவரும் ஜோடியாக ஸ்டேஜில் ஏறி நின்றனர்.

இவளுக்குத் தான் வியர்க்க ஆரம்பித்தது.

அந்த விழாவின் நாயகி இன்று அவள் தானே..!

அனைவரும் அவளையே குறுகுறுவெனப் பார்ப்பது போல் தோன்ற விழிகளை இறுக மூடிக் கொண்டாள்.

உள்ளங்கை வேறு வியர்க்க ஆரம்பிக்க அவன் இன்னும் அவளது கையை விட்டிருக்கவில்லை.

பிடித்திருந்த அவளது கையை இன்னும் சற்று அழுந்தப் பிடித்து அழுத்திக் கொடுக்க விழியைத் திறந்து அவனைப் பார்த்தாள்.

அவனோ அவளையேப் பார்த்துக் கொண்டு விழிகளைத் திறந்து மூட ஏதோ புதுத் தெம்புக் கிடைத்தது போல் இருந்தது அவளுக்கோ.

சற்று மனதின் படபடப்பது குறைந்திருந்தது.

“ஓஓஓஓஹ்.. நாங்களும் வந்திருக்கோம்பா எங்களையும் கவனிங்க”

அண்கள் பட்டாளமேக் கத்திக் கொண்டு வந்தனர் மேடை ஏறி.

அன்று பிறந்த நாள் விழாவில் இருந்தவர்கள் தான்.

அக்ஷரன் அவர்களைப் பார்த்து சற்பு இதழ் விரிக்க நேத்ரா அவர்களைப் பார்த்து புன்னகைத்தாள்.

“ஹெப்பி மேரிட் லைஃப் நண்பா.. ஹெப்பி மெரிட் லைஃப் தங்கச்சி”

ஒருவன் இருவருக்கும் வாழ்த்த 

“தேங்க்ஸ்டா”

அக்ஷரன் கை குலுக்கினான் நேத்ரா புன்னகைத்தாள்.

பின் ஒவ்வொருவரும் வந்து இருவருக்கும் வாழ்த்தினார்கள்.

தயாளனும்,தர்ஷனும் மேடை ஏறி வந்தனர்.

“இனிய திருமண நல்வாழ்த்துக்கள்”

தயாளன் இருவருக்கும் வாழ்த்த அக்ஷரன் என்றும் போல் இதழை சற்று விரித்தான் என்றால்,நேத்ரா புன்னகைத்தாள்…

“ஹெப்பி திருமண லைஃப்”

தர்ஷன் புன்னகைத்துக் கொண்டேக் கூற 

“ரொம்ப தேங்க்ஸ்”

நேத்ராக் கூற 

“தேங்க்ஸ்”

அக்ஷரனும் கூறினான்.

சிறிது நேரத்தில் ஆட்கள் குறைய வைட்டர் ஒருவன் பழரச கிளாஸ் ஒன்றை கொண்டு வந்து கொடுக்க அதை எடுத்து அக்ஷரன் நேத்ராவிடம் நீட்டினான்.

“உங்களுக்கு”

அதைப் பெற்றுக் கொண்டே அவள் கூற அவன் எதுவும் பேசவில்லை.

அவள் அரைவாசிக் குடித்து முடித்து கிளாஸை கையில் வைத்துக் கொண்டிருக்க அதை பறிக்காத குறையாக வாங்கி எடுத்தவன் அந்த பழரசத்தை ஒரு மூச்சில் குடித்து விட்டு அங்கிருந்த வைட்டரை அழைத்துக் கொடுத்தான் கிளாஸை.

இவள் தான் நொடி நேரத்தில் என்ன நடந்தது எனத் தெரியாமல் விழித்தாள்.

“உங்களுக்கு வேணும்ன்னா வேற ஒன்னு வாங்கி குடிக்கலாமே எதுக்கு என்னோடத பறிச்சி குடிக்கிறிங்க”

இதழையும் மூக்கையும் சுருக்கி அவள் கேட்க,

“ம்ம் இவ்ளோ பெரிய ஹோட்டலுக்கே செலவு பன்ன என்கிட்ட காசு இல்ல அதான் சாப்பாட்டு விஷயத்துல சமாளிக்கலாம்ன்னு நினைக்குறேன் எதுக்கு வீணா ரெண்டு அதான் ஒரே கல்லுல ரெண்டு மாங்காய்”

அவள் அலட்டாமல்க் கூற அவன் கூறியதை நம்பலாமா வேண்டாமா என்ற சிந்தனையில் அவள்.

“ஹேய் நேத்ரா..”

தேவிப்பிரியாவின் குரல் கேட்க அந்த சிந்தனையை கை விட்டவள்.

“வா தேவி”

நேத்ராவும் அவளை வரவேற்றாள்.

அபிலேஷ் நேத்ராவைப் பார்த்து புன்னகைத்து விட்டு அக்ஷரனைப் பார்க்க அவன் அவனைப் பார்க்கவே இல்லையே.

தேவிப்பிரியா நேத்ராவை அணைத்து விடுவித்தாள்.

“எப்பவும் நீயும் அண்ணாவும் சந்தோஷமா இருக்கனும் அடுத்த வருஷம் நீங்க மூனு பேரா இருக்க வாழ்த்துறேன்”

அவள் கூற அவஸ்தையாகிப் போனது நேத்ராவிற்கு அக்ஷரனது பார்வை வேறு குறுகுறுவென அவளைத் துளைப்பது போல் இருக்க தலையை தாழ்த்திக் கொண்டாள்.

“வாழ்த்துக்கள்மா”

அபிலேஷ் நேத்ராவிடம் கூறி விட்டு அக்ஷரனைப் பார்க்க அவனது பார்வை வேறு எங்கோ அல்லவா இருந்தது 

அவர்கள் இருவரும் மேடையில் இருக்க ஒரு ஐம்பது வயதைக் கடந்த பெண்மனி ஒருவர் மேடை ஏறினார்.

அவரைப் பார்த்ததும் அபிலேஷ் மற்றும் தேவிப்பிரியாவின் முகம் மாறியது.

“வாங்கம்மா”

அக்ஷரன் வரவேற்க தேவிப்பிரியாவை முறைத்துப் பார்த்து விட்டு அபிலேஷைப் பரிதாபமாகப் பார்த்த அப்பெண்மனியோ அக்ஷரனது குரலில் திரும்பி அக்ஷரனைப் பார்த்து புன்னகைத்தார்.

அபிலேஷும் அந்த பெண்மனியைப் பார்த்து முறைத்தான் தேவிப்பிரியாவிற்குத் தான் என்ன செய்வதென்றுத் தெரியாமல் தவிக்கும் நிலை.

“திருமண வாழ்த்துக்கள் பா”

நேத்ராவையும் பார்த்து புன்னகைத்தார்.

தேவிப்பிரியா கேள்வியாக அக்ஷரனைப் பார்க்க.

“நா அக்ஷரனோட அம்மா போல”

அப் பெண்மனியே அவரை அறிமுகப்படுத்திக் கொள்ள நேத்ரா புன்னகைத்தாள்.

அவர் சிறிது நேரம் அங்கே இருந்து விட்டு சென்று விட்டார்.

“நேத்ரா நா கீழ போறேன் எதாச்சும் தேவைன்னா கூப்டு”

தேவிப்பிரியாக் கூறி விட்டு இறங்க அவளைப் பிடித்துக் கொண்டு அபிலேஷும் இறங்கினான்.

“அவங்க யாரு.. எதுக்கு அபிலேஷ் அண்ணாவையும் தேவிப்பிரியாவையும் அப்பிடி பார்த்தாங்க”. 

நேத்ரா அக்ஷரனிடம் கேட்டாள்.

“ அவனோட அம்மா தான் அவங்க”

அக்ஷரன் கூறினான்.

அப்பொழுது தான் அவளுக்கும் புரிந்தது அப்பெண்ணின் பார்வைக்கான அர்த்தம்.

“ஹெலோ”

ஒரு குரல் வர திரும்பிப் பார்த்தாள்

அங்கு ஶ்ரீஜா தான் அப்பாவித்தனமான முகத்தை வைத்துக் கொண்டு நின்றுக் கொண்டிருக்க அவள் அவசரமாகத் திரும்பி அக்ஷரனைப் பார்த்தாள் அவனது முகம் எப்பொழுதும் போல் தான் இருந்தது..எந்த மாற்றமும் இல்லை.

“வாழ்த்துக்கள்”

என வேதனையுடன் புன்னகைத்துக் கொண்டுக் கூற நேத்ரா அவளது முகத்தையே தான் யோசனையாக பார்த்தாள்.

அன்று ஹோட்டலில் பார்த்த அந்த ஶ்ரீஜாவிற்கும் இவளுக்கும் ஆயிரம் வித்தியாசங்கள்.

கண்களில் அளவுக்கதிகமான வேதனையை தாங்கி இவளைப் பார்த்து புன்னகைப்பவளைப் பார்க்கும் போதே நேத்ராவிற்கு என்னவோ போல் ஆகியது.

“அவங்க இவங்களோட அக்காவா இருப்பாங்களோ”

தனக்குள் நினைத்துக் கொண்டாள் அவ்வளவு வித்தியாசம் இருவரது முகபாவனைகளுக்கும்.

“வாழ்த்துக்கள்”

ஶ்ரீஜா மீண்டும் ஒரு முறைக் கூற அவளைப் பார்த்து கடினப்பட்டு புன்னகைத்தாள் நேத்ரா.

அக்ஷரன் எதுவும் பேசவில்லை.

வாழ்த்தி விட்டுஅவள் மேடையில் இருந்து இறங்கிப் போகும் போது அபிலேஷையும் பாவமாகப் பார்த்து விட்டு செல்ல அபிலேஷ் திரும்பி அக்ஷரனை முறைத்துப் பார்த்தான்.

ஆனால் நேத்ராவோ யோசனையாகத் தான் இருந்தாள்.

அவளது முகபாவனையைப் பார்த்த அக்ஷரனோ இரண்டு புருவமும் உயர்த்தி இடது பக்கமாக உதட்டை வளைத்து தனக்குள் புன்னகைத்தான்.

பின் இன்னும் சினிமாவில் பிரபலங்கள் பலர் வந்து வாழ்த்தி விட்டுச் சென்றனர்

வரும் அனைவரும் புகைப்படம் எடுத்தனர்.

அங்கு இருந்த புகைப்படக் கலைஞரும் இவர்களை புகைப்படம் எடுத்தனர்.

நேத்ரா ஏதோ யோசனையாகத் தான் இருந்தாள்.

“சாப்டு”

சாப்பிட வந்து அமர்ந்தும் அவள் அவ்வாறே இருக்க அக்ஷரன் கூறினான்.

“ம்ம்”

அமைதியாக சாப்பிட்டாள்.

தேவகி பார்த்து பார்த்து பறிமாறினார் இருவருக்கும்.

“போதும் அத்த”

“சாப்டு கண்ணு”

அவளிடம் கூறினார்.

பின் இன்னும் சில பேர் வந்து வாழ்த்தி விட்டுக் கூறினார்.

மொத்தத்தில் அனைவருக்கும் அறிவித்து முடித்தான் நேத்ரா தான் தன் மனைவி என்று.

*****

தொடரும்..❤

 

💜அஷு💜

 

 

 

 

 

 

 

 

 

❤️ Loading reactions...
0 Comments
Oldest
Newest Most Voted
error: Content is protected !!
Scroll to Top