அத்தியாயம் 40

அத்தியாயம் 40

 

தேவகி நீட்டியதைப் புரியாமலேப் பார்த்தாள் நேத்ரா.

“என்ன அத்த இது”

சொம்பு மற்றும் டம்ளரை யோசனையாகப் பார்த்தாள்.

“இது.. இன்னைக்கு சாந்திமுகுர்த்தம் வைக்கலாம்ன்னு ஜோசியர் சொன்னாரு”

தேவகிக் கூற இவள் அதிர்ந்தாள்.

“என்ன”

அலறியே விட்டாள்.

“ஐயோ கண்ணு நீங்க ஏற்கனவே வாழ்க்கை ஆரம்பிச்சிருப்பிங்க ஆனா எங்களோட மனத் திருப்திக்காக நம்ம ஜோசியர்க்கிட்ட கேட்டோம் இதுவும் ஒரு சம்பிரதாயம் தான்டா.. உங்க கல்யாணம் தான் நெனச்சது போல நடக்கல்ல அதான்”

தேவகிக் கவலையுடன் கூற இவளுக்கு பக் பக்கென்றாகியது..

“ஐயோ அத்த அது..”

இவள் தயங்கினாள்.

“அவன்கிட்டயும் சொல்லிட்டேன்.. இந்தாடா”

அவர் கையில் இருந்ததை இவள் கையில் மாற்றி விட்டார்.

“இதுக்கா இந்த புடவைய கட்ட சொன்னாங்க”

சற்று நேரத்திற்கு முன்னர் அழகிய வெள்ளை நிறத்திலாலான ஜோஜட் சேலை ஒன்றைக்  கொடுத்து அணிந்து வருமாறு தேவகிக் கூறவும் மறுக்காமல் வாங்கி அணிந்தாள்.

அது எதுக்கான முன் ஆயத்தம் என இப்பொழுது தான் புரிந்தது.

தேவகிக் கூறி விட்டு செல்ல இவள் தான் தயங்கிக் கொண்டே அறைக்குள் நுழைந்தாள்.

ஓடவும் முடியாது ஒழியவும் முடியாது என்ற நிலை இவளுக்கு.

இவள் அறைக்குள் நுழையவும் வெற்று அறை தான் இவளை வரவேற்றது.

“இவங்க எங்க போனாங்க”

சுற்றும் முற்றும் தேட குளியலறையில் கேட்ட நீர் சத்தம் அவன் அங்கு இருப்பதை உறுதிப் படுத்தியது.

 

“பேசாம இதக் கொண்டு போய் வெளியக் கொட்டிட்டு புடவைய மாத்திக்கிட்டு படுத்துடுவோமா..”

தனக்குள் நினைத்தாலும் வெளியே செல்ல முடியாதே அத்தையும் மாமாவும் இருப்பார்களே என்ற உண்மை உறைக்க அங்கு நின்றுக் கொண்டு பேந்த பேந்த விழிப்பதைத் தவிர வேறு வழியில்லை காரிகைக்கு.

ஒரு சில நிமிடங்களில் குளியலறை கதவுத் திறக்கப்படும் சத்தத்தில் திரும்பிப் பார்த்தாள் அவளது கணவன் தான் டவலால் தலையைத் துடைத்துக் கொண்டு வெளியே வந்தான்.

அவனை நேருக்கு நேர் பார்க்க முடியாமல் சூரியக் காந்தி மலர் சூரியன் மறைந்ததும் எவ்வாறு தலையைக் குனித்துக் கொள்ளுமோ அது போல தலையைக் குனித்துக் கொண்டாள்.

ஒரு சில நொடிகள் சென்ற பின்னும் அவன் பேசுவது போல் விளங்கவில்லை தானாக தலையை நிமிர்த்தி அவனைப் பார்க்க அவனும் மார்புக்குக் குறுக்காகக் கைகளைக் கட்டிக் கொண்டு விழியகற்றாமல் அவளையேப் பார்த்துக் கொண்டிருந்தான்.

என்றும் இல்லாதவாறு பார்வையின் பரிணாமம் வேறு மாறியிருந்ததைப் போல் இருந்தது இவளுக்கு.

“என்ன”

அவன் கேட்க.

அவனிடம் சொம்பை நீட்டினாள் மீண்டும் தலையைக் குனித்துக் கொண்டு,

“என்னன்னு கேட்டேன்”

சற்று வார்த்தை அழுத்தமாக வெளி வந்தது.

“அது.. சொம்பு பால்”

தடுமாறியது இவளது வார்த்தை.

“ஏனோ.. க்ளாஸ் இல்லையா வீட்ல இதுல கொண்டு வந்திருக்க”

அவன் கேட்டான்.

“அது.. இல்ல அத்த கொடுத்தாங்க..”

“எதுக்கு”

தெரிந்தும் தெரியாதது போல் கேட்டான் அவன்.

“அது.. நமக்கு..”

அதற்கு அடுத்ததாக வார்த்தை வெளிவரவில்லை.

“நமக்கு”

ஒரு அடி முன்னால் எடுத்து வைத்து அவன் கேட்க இவள் இரண்டடி பின்னால் நகர்ந்தாள்.

“சாந்தி…”

முழுதாக வார்த்தை வரவில்லை வெட்கம் பிடுங்கித் தின்றது.

“சாந்தி யாரு உன்னோட ஃப்ரன்ட்டா”

அவன் கேலியாகக் கேட்பது புரிந்தாலும்.

அவன் முன்னால் வைத்த அடிக்கு பதிலாக இன்னும் இரண்டடி பின்னால் வைத்தாள் அவள்.

ஏனோ தடுமாற்றம்?

“இல்ல அது நமக்கு சாந்தி முகுர்த்தமாம்”

அவசரமாகக் கூறி விட்டு தலையைக் குனித்து விழிகளையும் இறுக மூடிக் கொண்டாள்.

அவனது பார்வை உயிர் வரை ஊடுறுவிப் போனது அவளது மூடிய விழிகளாலும் உணர முடிந்தது.

“அப்பிடியா.. அப்பிடின்னா”

அவன் கேள்வியாக நிறுத்த,

இவள் என்ன கூறுவாள் விழியைக் கூட திறக்கவில்லை தலையைக் கூட நிமிர்த்தவில்லை.

“சொல்லு அப்பிடின்னா”

அவனது ஆண்மைக்கே உரிய கம்பீரமான குரலும் அவனுக்கே உரிய பிரத்யேக வாசனையும் மிக மிக அருகில் இருப்பதைப் போல் உணர்ந்தவள் பட்டென தலையை உயர்த்திப் பார்த்தாள்.

அவளது கணவன் தான் அவளுக்கு மிக அருகில் நெருக்கமாக நின்று இடப்புருவத்தை உயர்த்த அவனது அருகாமையில் மேனி எங்கும் படபடப்பு உண்டாக அவசரமாக பின்னால் நகரப் போனவள் சேலை தடுக்க அப்படியே விழத்தான் சென்றாள்.

அவளது இடையோடு கை போட்டு அவளைத் தனக்கு மிக அருகில் நிறுத்தியவன் அவளது நடுங்கும் தளிர்க்கையில் இருந்த சொம்பை எடுத்து அங்கிருந்த மேசையின் மேல் வைத்து விட்டு நிதானமாக திரும்பி அவளைப் பார்த்தான்.

இடையை இறுக்கிய அவனது இரும்புக் கைகள் இன்னும் அகலவில்லை அங்கிருந்து.

முட்டைக்கண்ணை முன்னூறு கிலோமீற்றர் வரை விரித்து அவனைப் பார்க்க அவனோ தன்னுடன் இன்னும் அவளை இறுக்கினான்.

அவளது எலும்புகள் அனைத்தும் உடைந்து விழும் அளவு அவளைத் தன்னுடன் இறுக்க அவனது சிவப்பேறிய விழிகளோ அவளது விழிகளை ஊடுறுவி எதையோ தேடியது.

“அப்பிடின்னா என்ன”

அவளது இதழுடன் இதழ் உரச மிக நெருக்கமா நின்று அவன் கேட்க அவள்க்கு எங்கு வார்த்தைகள் வரும்.

தொண்டைக்குழிக்குள் எச்சில் விழுங்க அவனையே பயப் பார்வைப் பார்த்தாள் பாவை.

அவனது இரும்புக் கரங்களில் இறுகித் தான் போனாள்.

அவனது உடலுடன் அவளது முழு மேனியும் உரச பெண்ணவளுக்கு சிலிர்ப்பு தான்.

அவனது சிவப்பேறிய விழிகள் கோவத்தை அல்ல வேறு எதையோ உணர்த்தப் பார்க்க அதை உணர முடியாமல் பயந்து போய் அவனைப் பார்த்தாள்.

அவளது பயத்தினை அவளது நடுங்கும் மேனியும் பார்வையும் உணர்த்த அடுத்த நொடி அவளைத் தன்னில் இருந்து விலக்கியவன் நான்கு அடிகள் பின்னால் நகர்ந்து இழுத்து ஒரு பெருமூச்சொன்றை விட்டு தனது இரண்டு கைகளையும் இடுப்பில் வைத்து,.

“உஃப்”

வேகமாக இன்னொரு மூச்சை விட்டவன் தலை முடிகளுக்குள் கரத்தை விட்டு அவற்றை அழுந்தக் கோதிக் கொண்டான்.

அவள் தான் இன்னும் பயம் தீராமல் அவனை புரியாமல் பார்த்தாள்.

தன்னை நிலைப்படுத்திக் கொண்டவனது முகம் அடுத்த நொடி இருந்த ஒட்டுமொத்த உணர்வுகளையும் தொலைத்து இறுகிப் போனது என்றும் போல்.

அவளைப் பார்க்க அவளும் அவனையே தான் பார்த்துக் கொண்டிருந்தாள்.

“ஓகே போய் படு”

அவன் கூற அவனது கூற்றுக்கு தலையசைத்தவள் அவனைக் கடந்து செல்லப் பார்க்க,

“ட்ரஸ்ஸ சேன்ஜ் பன்னிட்டு படு”

கூறி விட்டு அடுத்த நொடி அவன் அறையை ஒட்டி அமைக்கப் பெற்றிருந்த அவனது உடற்பயிற்சி அறைக்குள் நுழைந்துக் கொள்ள அவனது முதுகையே வெறித்தன பாவையிவளின் விழிகள்.

அவன் இறுகப்பற்றியிருந்த இடை இன்னும் குறுகுறுத்தது.

அவனது ஆண்மைக்கே உரித்தான நறுமணம் இன்னும் நாசிக்குள் இருப்பது போல் இருந்தது.

அவனது அணைப்புக்குள் இருக்கும் போது எவ்வளவு பயமாக உணர்ந்தாளோ அவன் விலக்கி வைத்ததும் அவ்வளவு வேதனை அளித்தது என்னவோ உண்மை தான்.

என்ன உணர்வென்றுத் தெரியவில்லை.

அவனது அருகாமை பயத்தை அளித்தாலும் அவனது விலகல் வேதனை அளித்தது.

“எதுக்கு அவங்க அப்பிடி பாக்கனும் என்ன பார்வ அது”

இப்பொழுது நினைத்தாலும் உடல் சில்லிட்டது அவனது பார்வையின் வீரியத்தால்.

உடல் ஓய்வுக்காகக் கெஞ்ச ஒரு சுடிதாரை எடுத்துக் கொண்டு குளியலறைக்குள் நுழைந்தவள் மாற்றிக் கொண்டு வந்து வெளியே பார்க்க இன்னும் அவளது கணவன் வந்திருக்கவில்லை.

போர்வையை விரித்து தரையில் போட்டு படுத்தாலும் உறக்கம் வரவில்லை.

என்றும் போல் ஏதேதோ சிந்தனைகள் இருந்தும் இறுதியாக அவனவளது சிந்தனைகள் வர மூடியிருந்த இதழ் சற்று விரிய அவ்வாறே விழிகளை மூடிக் கொண்டாள்.

அவள் விழிகளை மூடிய அடுத்த கணம் அவ்வறையில் இருந்து வெளியே வந்தவன் அந்த அறை நிலையில் சாய்ந்து நின்று இரண்டு கைகளையும் பேன்ட் போக்கெட்டில் விட்டு விழி மூடி படுக்கும் தனது மனையாளையே விழியகலாமல் பார்த்துக் கொண்டிருந்தவன் ஓரிரண்டு நொடிகள் அவ்வாறே இருந்து விட்டு பின் தலையை இரண்டு பக்கமும் ஆட்டிக் கொண்டே சென்று படுத்தான்.

******

விடியலில் சூரியபகவான் தனது வருகையை உணர்த்தும் விதமாக ஒளிக் கற்றைகளை வீசி வீர நடை போட முகத்தில் விழுந்த சூரிய வெளிச்சத்தினால் விழிகளை சுருக்கி கடினப்பட்டு விழிகளைத் திறந்தாள் நேத்ரா.

சூரியக் கதிர்களின் வீரியத்தை பார்த்தால் பத்து மணியைக் கூட தொட்டிருக்கலாம்

அடித்துப் பிடித்து எழுந்தமர்ந்தவள் நேரத்தைப் பார்க்க ஒன்பது நாற்பத்தைந்து எனக் காட்டியது.

“இவ்ளோ நேரம் தூங்கிட்டோமா அத்த வேற இருக்காங்க என்ன நினைப்பாங்க”

எழுந்து நின்றவள் அறையை சுற்றிப் பார்க்க அங்கு ஸோபாவில் குளித்து ரெடியாகி ஃபோன் பார்த்துக் கொண்டிருந்தான் அக்ஷரன்.

“எழுப்பியிருக்கலாமே”

அவனிடம் கூற நிமிர்ந்து அவளைப் பார்த்தவன்.

“ எழும்புறவங்ககிட்ட தான் எழும்புன்னு சொல்லலாம் எவ்ளோ எழுப்பியும் எரும மாடு போல படுக்குறவங்கள எழுப்ப முடியாது”

அவன் கூற இவள் முறைத்தாள்.

“நா எரும மாடா”

அவனிடம் எகிற அவளை மேலிருந்து கீழ் ஒரு மாதிரியாகப் பார்த்தவன்,

“ச்ச்சச்ச எரும மாடு எவ்ளோ சீக்கிரமா எழும்புது… எரும மாட்டுக் கூட எல்லாம் ஒப்பிட முடியாது”

அவன் அமர்த்தலாகக் கூற அவனை முறைத்துப் பார்த்தவள் அறையை விட்டு வெளியேறப் பார்க்க,

“குளிச்சிட்டு போ”

அவன் கூற திரும்பி அவனைப் புரியாமல் பார்த்தாள்.

“எதுக்கு எப்பவும் போல காஃபிய குடிச்சிட்டு குளிப்பேன்”

அவள் கூற இரண்டு தோள்களையும் குளுக்கியவன்,

“வெளியே உங்க அத்த கேள்வி கேட்பா அப்போ சொல்லிக்கோ”

அவளிடம் கூறினான்.

“என்ன கேட்பாங்க”

“ம்ம் குளிக்கல்லையா கண்ணு அப்பிடின்னு”

அவன் சொல்லிக் காட்ட.

“எதுக்..”

கூற வந்தவள் அவனது வேறு மாதிரியான பார்வையில் கூற வந்ததை விழுங்கிக் கொண்டவளுக்குப் புரிந்தது எதுக்காக் கூறுகிறான் என,

“நா குளிச்சிட்டே போறேன்”

வாய்க்குள்ளால் முனகியவள் ஆடைகளை எடுத்துக் கொண்டு குளியலறைக்குள் ஓடினாள்.

“என்ன பேச்சு பேசுறாரு அச்சோ”

தலையில் அடித்துக் கொண்டவளுக்கு முகம் தன்னாலே சிவந்தது.

அவள் குளித்துக் கொண்டு வெளியே வரவும் இன்னும் அவன் அங்கே தான் இருந்தான்.

அவனைப் பார்க்காமலே வெளியே சென்று விட்டாள்.

“எழுந்துட்டியா கண்ணு”

முகம் கொள்ளா புன்னகையுடன் நேத்ராவிடம் கூற அவரைப் பார்த்து புன்னகைத்தவள்.

“ஆமா அத்த இன்னைக்கு கொஞ்சம் லேட்”

அவள் சாதாரணமாகக் கூற முகம் சிவக்க சிரித்தவர்.

“பரவல்ல கண்ணு அவன் எழும்பிட்டானா”

அவர் கேட்கும் போதே வெளியே வந்தான் அக்ஷரன்.

“எழும்பிட்டாரு அத்த இருங்க காஃபி போட்டு எடுத்துக்கிட்டு வாரேன்”

அவள் கூற.

“உங்க ரெண்டு பேருக்கும் காஃபி ஊத்துடா கண்ணு நானும் மாமாவும் காஃபி குடிச்சிட்டோம்”

அவர் கூற.

“சரி அத்த”

அவள் அங்கிருந்து நகரப் போக.

“இன்னைக்கும் ட்ரைவிங் கோர்ஸ் இருக்கு ரெடியாகு போகனும்”

அக்ஷரன் கூற தேவகி தான் புரியாமல் பார்த்தார் அவருக்கு இன்னும் தெரிவித்திருக்கவில்லை.

“அது. அத்த நா”

இவள் தயக்கமாகக் கூற,

“ம்ம்மா அவள நா ட்ரைவிங் கோர்ஸுக்கு சேர்த்து விட்டிருக்கேன்”

அக்ஷரன் கூற முகம் முழுக்க புன்னகையுடன்,

“ரொம்ப நல்ல விஷயம்டா இந்த காலத்துல பொண்ணுங்களுக்கும் இது எல்லாம் தெரிஞ்சிருக்கனும் அந்த காலத்துல தான் இதெல்லாம் பெரிய விஷயமா பார்ப்பாங்க ஆனா இப்போ அவசியம் தெரிஞ்சிக்கனும் பொண்ணுங்க”

தேவகி சந்தோஷமாகக் கூற நேத்ராவிற்கும் நிம்மதியாக இருந்தது அவர் ஏதாவது கூறுவாரோ என எண்ணி சற்று பயமா இருந்தாலும் இப்போது நிம்மதியாக இருந்தது.

“இன்னைக்கு ஊருக்குப் போகனும்”

ஞானவேல் வந்து கூற.

“மாமா இருக்கலாமே”

நேத்ரா கூற.

“இல்லடா போகனும்”

ஞானவேல் கூற.

“அடுத்த தடவ வரும் போது சந்தோஷமான விஷயம் சொல்லனும்”

தேவகி நேத்ராவின் காதுக்குள் கூற நேத்ராவோ அவசரமாக திரும்பி அக்ஷரனைப் பார்த்தாள்..

அவன் காஃபி அருந்திக் கொண்டிருக்க இவள் தன்னையறியாமலே தலையை அசைக்க புன்னகைத்துக் கொண்டே அவளது தலையை தடவிவிட்டார் தேவகி..

பின் காலை உணவை சாப்பிட்டு விட்டு தேவகியும்,ஞானவேலும் ஊருக்குக் கிளம்பிவிட நேத்ராவை அழைத்துக் கொண்டு சென்று ட்ரைவிங் கோர்சில் அக்ஷரன் விட்டு விட்டு சென்றான்.

அரைமணித்தியாலத்தின் பின்னர் அக்ஷரனிடம் இருந்து அழைப்பு வந்தது.

அழைப்பை ஏற்றுக் காதில் வைக்க மறுபக்கத்தில் கூறப்பட்ட செய்தில் அழைப்பேசி அவளது கையில் இருந்து நழுவி கீழே விழ சட்டென கண்கள் கலங்கியது.

அதில் கூறப்பட்டதோ அவளது கணவன் விபத்துக்குள்ளாகி இருப்பதாக அல்லவா..??

****

தொடரும்..❤

 

💜அஷு💜

 

❤️ Loading reactions...
0 Comments
Oldest
Newest Most Voted
error: Content is protected !!
Scroll to Top