அன்பும், காதலும், உணர்வுகளும் மட்டுமே கோலோச்சின அழகான தாம்பத்யம். ரெண்டுப் பேர் முகத்துலேயும் அவ்வளோ நிறைவு, சந்தோஷம். அவன் நெஞ்சுலே தலை வைச்சு படுத்த மதுரியா, “விது.. தூங்கிட்டீங்களா?”-னு கேட்டா. “இல்லேடா… தூக்கம் வரலே”-னு பெருமூச்சு விடவும், “அப்போ நான் கொஞ்சம் பேசலாமா?”-னு கேட்டா. “ஏய்… டிப்பிகல் வைஃப் ஆயிட்டேடீ நீ. இந்த டைம்லே பெடிஷன் போட்டா நடக்கும்-னு தெரிஞ்சு வைச்சிருக்கே?”-னு சிரிக்கவும், “எனக்கும் சில உண்மைகளை ஒத்துக்கணும் விது.. ப்ளீஸ்”-னு சொன்னா மதுரியா. “ஹேய்… என்னாச்சு?”-னு அவளை ஒரு குலுக்கு குலுக்கிக் கேட்டான். “விது.. உங்களுக்கு தெரியாம நிறைய விஷயம் உங்களை வைச்சே பண்ணியிருக்கேன். அது ரொம்ப தப்புத் தான். ஐ அம் எக்ஸ்டிரீம்லி சாரி”-னு சொல்லவும், “ஏய் லூசு.. எனக்குப் புரியுதுடி”-னு சொல்றதுக்குள்ளே, “ப்ளீஸ் விது.. நான் முடிச்சுடறேன்”-னு சொல்லி அவ பேச்சை ஆரம்பிச்சா.
“விது… நிகு பர்த்டேலே நம்ம பிரச்சினை, உங்களை சுவாதி கூட சேர்த்து பார்த்தது எல்லாம் என்னை ரொம்ப ஹர்ட் பண்ணிடுச்சு. நான் ரொம்ப உடைஞ்சுப் போயிட்டேன்.. அதுலேயும் பாட்டிக்கும் பெரிய பிரச்சினைனு தெரியவும் மொத்தமா விழுந்துட்டேன். ஏன்டா இன்னும் இருக்கோம்-னு கூட தோணுச்சு”-னு சொல்றப்போ அவனோட அணைப்பும் இறுகுச்சு. “அப்போ தான் பரத்தப்பா என்னை தேத்தி தைரியம் குடுத்து பிஜிக்கு ஹாஸ்டல்லே இருக்க அரேஞ்ஜ் பண்ணார்.. உங்களுக்கு கூட உங்க மனநிலையை அவர் டெஸ்ட் பண்ணதுலே கோபம் இருக்கலாம்..”னு அவ நிறுத்தவும், “கோபமில்லே மது… யார்னாலும் அதான் பண்ணி இருப்பாங்க. ஆனா கொஞ்சமே கொஞ்சம் பொறாமை தான். அதுவும் இப்போ இல்லே”-னு அவ நெத்தியோட நெத்தி முட்டினான்.
ஒரு புன்னகையோட, “நானும் செங்கல்பட்டு போயிட்டேன்… ஆனா எல்லா நினைவுகளும் என்னை ரொம்ப ஹாண்ட் பண்ணுச்சு. அதனால படிப்பைத் தவிர வேறே எதையும் நினைக்கலே… வெறித்தனமா படிச்சேன்… கிட்டத்தட்ட ஒரு வருஷம் சென்னை வரவே இல்லை.. எனக்கு உங்களையும் சுவாதியையும் கணவன் மனைவியா பார்க்கற சக்தி இருக்கலே விது”-னு சொன்னா. “சே.. லூசு.. என்னைப் பத்தித் தெரிஞ்சுமா அப்படி நினைச்சே?”னு தட்டிக் குடுத்தான்.
“அப்புறம் ப்ரதீப்பும் ரீனாவும் ஃபோர்ஸ் பண்ணி சென்னைக்கு கூட்டிட்டு வந்தாங்க. அப்போ தான் உங்களை நடேசன் பார்க் வாசல்லே பார்த்தேன்…. அன்னிக்கு என் உயிரே போயிடுச்சு விது.. என்னுடைய மோசமான கனவுலே கூட நான் உங்களை அப்படி இருக்கற மாதிரி நினைச்சு பார்த்ததில்லே. உடனே உங்கக் கிட்ட வராம தடுத்தது ஒரே விஷயம் தான். நீங்க சுவாதியோட கணவர்- அது மட்டும் தான்… ஆனா எவ்வளோ தடுத்தும், உங்களை நினைக்காம இருக்கவே முடியலே… ஆனா பார்க்கவும் முடியலே.. ஏன்னா எனக்கு நானே உருவாக்கிக் கிட்டக் கொள்கைகள்… வேறே ஒருத்தியோட கணவன் கிட்டே பேசக் கூடாது.. கல்யாணம் முடியறதுக்கு முன்னாடி நிச்சயமானவர் கிட்டே காதலை சொல்லக் கூடாது… உரிமையில்லாம தொடக் கூடாது… ஒழுக்கம்தான் எல்லாத்தையும் விட முக்கியம்.. இப்படி நிறைய! இதனால தான் நான் உங்களையே இழந்தேன் விது.. இதோ இந்த ப்ரேஸ்லெட்டை வாங்கின அன்னிக்கே உங்கக்கிட்டே குடுத்திருந்தா ஒரு பிரச்சினையும் வந்திருக்காது”-னு அழவும், “அடி… பைத்தியம்.. இன்னுமா இதுக்கெல்லாம் காரணம் நீன்னு நெனைச்சுட்டு இருக்கே? இது இல்லேன்னா விக்கி வேறே பிரச்சினை பண்ணியிருப்பான்… விட்டுத் தள்ளு.. அழாதே டீ கண்ணம்மா”-னு சமாதானம் பண்ணான் விதுரன்.
“ம்ம்ம்.. அப்புறம் நான் திரும்பி சென்னை வந்தேன் டிரெயினிங் விஷயமா… அப்போ தீப் என்னை சீனியர் பர்த்டே பார்ட்டிக்கு கூட்டிட்டுப் போனப்போ தான் அசோக்கும் விக்கியும் பேசறதை கேட்டேன்.. எனக்கு எல்லாம் ஆடிப் போச்சு.. உங்க ரெண்டு பேரையும் எப்படியாவது காப்பாத்தணும்-னு தான் எல்லாம் பண்ணேன்”-னு சொல்லும் போது கையால அவ வாயை பொத்தி, “கஷ்டப்படாதேடி! ரீனா எல்லாத்தையும் சொல்லிட்டாங்க”-னு சொன்னான் விதுரன். “விது.. நான்… நான்… ஆரம்ப நாள்லேயிருந்து உங்கக்கிட்ட விஷயத்தை சொல்லாம அதே சமயம் விக்கியோ ரிதேஷோ உங்களை நெருங்காம இருக்க, உங்க மொபைல்லே அவங்க ரெண்டு பேர் நம்பரையும் ப்ளாக் பண்ணேன். அப்புறம் பிரபு அங்கிள்கிட்டேயும் எனக்கு தெரியாம அவங்க ரெண்டுப் பேரும் உங்களை மீட் பண்ணக் கூடாதுன்னு சொல்லியிருந்தேன். சாரி விது.. ரொம்ப சாரி… இது ரொம்ப பெரிய அத்துமீறல்தான். இனி எப்போதும் இப்படி செய்யமாட்டேன்”-னு குற்றவுணர்ச்சியோட சொன்னா மதுரியா.
“ஓ.. அப்போ இந்த தில்லாலங்கடி வேலை உன்னோடது தானா? எனக்கு அவங்க ப்ளாக் லிஸ்ட்லே இருந்தது முன்னாடியே தெரியும்… அது நீயோ-னு கூட ஸ்லைட் டவுட்.. பட் ஏனோ அன்-ப்ளாக் பண்ணணும்-னு தோணலே-னு சொன்னான் விதுரன். “சாரி விது… என் மேலே கோபமா? என்னை நம்பறீங்க தானே?”-னு பாவமா கேட்டா மதுரியா. “ம்ம்ம்… கோபம் தான்.. கோபம் போக என்ன தருவே?”-னு ஒத்தக் கண்ணை அடிச்சு கேட்கவும், “சீ.. உயிரே போயிடுச்சு பயத்துலே”-னு அவனை சாத்தினா. “ஏய்.. அடிக்காதே.. வலிக்குதுடி”-னு சிரிச்சான். ரெண்டுப் பேரும் சிரிச்சு ஓய்ஞ்சதும், “மது… உன்கிட்ட ஒரு ரிக்வெஸ்ட்! அந்த சுவாதியை ப்ளேக்-லிஸ்ட்லேயிருந்து எடுத்துடலாமா? என் பேர்லேயும் தப்பிருக்கு. என்னோட கில்ட் போகறதுக்குத் தான் கேட்கிறேன்”-னு விதுரன் சொல்லவும், “அல்ரெடிப் பண்ணியாச்சு விது. அது ஏதோ கோபத்துலே அப்படிப் பண்ணேன்… நான் அவளை விசாரிச்ச விதமும், அடிச்சதும் தப்பு தான்”-னு சொன்னா மதுரியா. “நீ கொஞ்சம் அடாவடி தான்னாலும்… ரொம்ப நல்லவடி”-னு அவனோட சேர்த்து அணைச்சான். அவன் நெஞ்சிலே நெருஞ்சியா உறுத்தின அன்பு, இப்போ இதமா மாறிப் போச்சு!!