அப்பா நான் இன்று ரொம்ப சந்தோஷமா இருக்கேன் ஏன் தெரியுமா இனிமேல் அந்த ராக்கேஷ் பயமில்லாமல் நிம்மதியாக தூங்கலாம் அப்புறம் உங்களை தினமும் பார்க்கலாம் நான் உங்களை விட்டு பிரிந்து வந்ததற்கு ஸாரி கேட்கனும்னு நினைத்தேன் ஆனா நான் கேட்க மாட்டேன்பா ஏன் தெரியுமா உங்களை விட்டு வந்ததால் தான் சித்தி உங்களுக்கு கிடைத்து இருக்காங்க நான் உங்களுக்குடன் வந்திருந்தா இப்படி ஒரு லைஃபை எனக்காக நிராகரிச்சு இருப்பீங்க.சித்தி ரொம்ப நல்லவங்க என்னைய நல்லா பார்த்துகிட்டாங்க அந்த காட்டான் கூட என்னைய திட்டினான் ஆனா சித்தி என்கிட்ட இயல்பா உரிமையோடு பேசினாங்க நான் உங்க லைஃபை டிஸ்டர்ப் பண்ண மாட்டேன் அஷ்வத் வந்ததும் நான் போயிடறேன் இப்பேவே போயிருப்பேன் ஆனா சித்தி வார்த்தையை மீறி என்னால போக முடியவில்லை.
டைரியில் தந்தையிடம் பேச நினைத்ததை டைரியில் எழுதிவிட்டு கட்டிலுக்கு அடியில் இருக்கும் பேக்கிள் வைத்தவள் அது யார் கண்ணிலும் சிக்காதவாறு மேலே பரணில் வைத்தாள்.
மும்பைக்கு சென்றதில் இருந்து டைரி மூலம் தந்தையிடம் பேச ஆரம்பித்தவள் இன்று வரை தொடர்கிறாள்.அந்த டைரியில் தான் பல உண்மைகளை ஒளித்து வைத்து இருந்தாள்.
ஒரு வாரத்தில் அந்த வீட்டின் சூழழிற்கு ஏற்ப தன்னை பழகி கொண்டாள் வெண்மதி நர்மதாவிடம் மட்டும் பேசுவாள் சேகரையும் தம்பிகளையும் தொந்தரவு செய்யாமல் தூர நின்று பார்த்து கொள்வதோடு சரி.
நர்மதாவின் அனுமதியோடு தோட்டத்தையும் வீட்டையும் அழகு படுத்தினாள் தன் தந்தையின் பாராட்டை பெற ஆனால் அவர் சிறிதும் கண்டு கொண்டதில்லை
“மதி எப்படி ஒரு வாரத்துல வீட்டையே அழகாக்கி வைத்து இருக்க வேற ஏதோ வீட்டில் இருப்பது போல் இருக்கு” என்று நர்மதா தான் பாராட்டி தள்ளினார்
“நான் படிச்சதே இன்டீரியர் டிசைனிங் தானே சித்தி இதுல பெருமையா பேச என்ன இருக்கு வேலைக்கு ட்ரை பண்ணிட்டு இருக்கேன் அதுவரை இப்படி தான் எதாவது செய்துகனும்”
“வேலைக்கு போக போறியா உனக்கு இந்த ஊர் புதுசாச்சே”
“சும்மாவே இருந்தா போர் அடிக்குதே நான் படிச்ச படிப்புக்கு ஏற்ற மாதிரி நல்ல வேலை கிடைக்கனும் அப்பா வேலைக்கு போக பெர்மிஷன் தரனும்” என்றாள் கவலையாக
“ அதெல்லாம் வாங்கிடலாம் நான் ஒரு இடத்துக்கு போறேன் என் கூட வர்றியா”
“எங்கே சித்தி”
“வா சொல்றேன் போய்ட்டு இரண்டு மணி நேரத்துல வந்துடலாம்”.
டிரைவரை அழைத்து சென்று ஒரு பிரபலமான ரெஸ்ட்டாரன்டிற்கு அழைத்து சென்றாள்.
“சித்தி வெளியே சாப்பிட வந்து இருக்கோமா ”
“இல்லை இது ருத்ரனுடைய ரெஸ்டாண்ட் ”
“யாரு ருத்ரன் ”
“உனக்கு தெரியாதா நீ இங்கே வந்த அன்று வந்தானே சரி நீ பார்த்தது இருக்க மாட்ட போல ருத்ர பிரசாத் என் அண்ணன் பையன் தான் வா” என அவள் செல்ல வெண்மதி கால் வெரூன்றி அங்கே நின்றது
அய்யோ அந்த காட்டானா அவனை பார்க்க எதுக்கு என்னை அழைச்சுட்டு வந்தாங்க என கலவரமானாள்
“சித்தி நீங்க பேசிட்டு வாங்க நான் கார்ல வெயிட் பண்றேனே” என்று சமாளித்தாள்
“ப்ச் பேசாம வா” என ருத்ரன் அறைக்கு அவள் கையை பற்றி இழுத்து சென்று விட்டார் நர்மதா
போச்சு போ இன்னிக்கு என்ன சொல்ல போறானோ என்று மனம் புலம்பி கொண்டாலும் அவள் கை தனது துப்பட்டாவை சரி செய்து கொண்டது
சிசிடிவி கேமாரா வழியே வேலைகளை சரி பார்த்து கொண்டு இருந்தவன் கணிணியில் இருவரையும் பார்த்த ருத்ர பிரசாத் இவளை ஏன் அத்தை அழைச்சுட்டு வர்றாங்க அவங்க தான் கூப்பிடுறாங்கன்னா இந்த பெண்ணிற்கு அறிவில்லை என எரிச்சலானான்.
“சித்தி…சித்தி வேண்டாம்” என மெதுவாக கதறியதை காதிலே வாங்காமல் உள்ளே இழுத்து சென்று அவன் முன் நிறுத்தினாள்.
“வாங்க அத்தை என்ன அதிசயமா ரெஸ்டாரண்டிற்கு வந்து இருக்கீங்க”
“ருத்ரா நீ இப்ப பிஸியா”
“சொல்லுங்க அத்தை எதாவது எமர்ஜென்சியா இல்லேன்னா என்னை தேடி ரெஸ்டாரண்ட் வரை வந்து இருக்க மாட்டிங்களே” என்று மதியை பார்வையாலே தள்ளி நிறுத்தினான்.
“இவ தான் வெண்மதி”
“ஓ அவங்க திரும்ப மும்பை போறாங்களா டிக்கெட் புக் பண்ணி தரனுமா” கடுமையான குரலில் போய் தொலை என்ற தொனி தெரிந்தது
“ருத்ரா” என்று நர்மதா கத்தி விட்டார்
“சொல்லுங்க அத்தை அப்ப எதுக்கு இங்கே கூட்டிட்டு வந்து இருக்கீங்க” என்று சலிப்பாக கேட்டான்
“ருத்ரா மதிக்கு வேலை அரேஞ் பண்ண முடியுமா”
கோபம் தான் வந்தது உடனே மதியிடம் திரும்பி, “நீ கொஞ்சம் வெளியே இருக்கியா நாங்க கொஞ்சம் தனியா பேசனும்” என்றதும் தான் தாமதம் வெளியே ஓடி சென்று காரில் அமர்ந்து கொண்டாள்.
இந்த காட்டான் இருப்பது தெரிந்தால் நான் ஏன் இங்கே வந்து இருக்க போகிறேன் ருத்ரன் தன்னை அவமானபடுத்தியதை எல்லாம் அவள் கருத்திலே ஏறவில்லை இதெல்லாம் எனக்கு சாதரனமப்பா என்பது போல எடுத்து கொண்டாள்.
“இப்ப நீ எதுக்காக அவளை வெளியே போக சொன்ன”
“என்னை பார்க்க என் அறைக்கு வரனும்னா என் வோர்க்கர்ஸா இருக்கனும் இல்ல என் பேமிலியா இருக்கனும் அவ ரெண்டுமே இல்ல அதான் போக சொன்னேன்”.
“மதி உன் மாமாவுடைய பெண்”
“அந்த பெண் தான் 1 வாரத்தில் போயிடுவான்னு சொன்னீங்க இப்ப என்னவாம் போக மாட்டேங்கிறாளா”
“நாங்க தான் இனிமேல் அவளை பார்த்துகனும் அவ எங்கேயும் போக மாட்டா மதி எங்க கூட இருப்பதில் உனக்கு என்ன பிரச்சினை”
“இப்ப இதை பற்றி பேசி என்ன ஆக போகுது விடுங்க என்ன விசயமா வந்தீங்க ”
“ரெஸ்டாரண்ட்ல அவளை வேலைக்கு சேர்த்துகோன்னு சொல்ல தான் வந்தேன் அவ பேஷன் டிசைனிங் இன்டீரியர் டிசைனிங் படித்து இருக்கா அவ வேலை பிடித்து இருந்தா நம்ம டெக்ஸ்டைல்ஸ்லயும் வேலை பார்க்கட்டும்”
அதெல்லாம் சரிபட்டு வராது வேண்டாமென சொல்ல வந்தவன் நாம எதாவது சொன்னா அத்தை மனசு சங்கடபடும் அதனால டார்ச்சர் கொடுத்தே அவளா வேலை வேண்டாமென ஓடனும் என திட்டமிட்டவன் “சரி முதல்ல ரெஸ்டாரண்ட்ல வேலை பார்க்கட்டும்” எனவும்
“ நீ வேணா பாரு மதி நல்லா வேலை பார்ப்பா திங்கள்கிழமையில் இருந்து வேலைக்கு வருவா”
“அது ஏன் அத்தை மன்டே வரை வெயிட் பண்ணனும் இன்றே வேலைக்கு சேரட்டும்”
“உன் மாமா கிட்ட சொல்லனும் அதான்”
“நாளைக்கு வீட்டுக்கு வந்துடுவீங்கள ஷிவானி போன வாரமே தீம் பார்க் போகனும்னு சொன்னா நாளைக்கு நீங்க வரலைனா டென்சன் ஆகிடுவா”
“வர்றேன் மதியையும் கூட்டிட்டு வர்றேன் வந்ததில் இருந்து வீட்லயே தான் இருக்கா”
இது வேறயா “ம் கூட்டிட்டு வாங்க” என பேசியபடி வெளியே வந்தவர்கள்
“மதிய எதுவும் சொல்லிடாத பாவம்டா அந்த பொண்ணு உன்னை நம்பி தான் வேலைக்கு அனுப்பறேன்” என மதியை தேடினாள்.
மதி காரில் இருப்பதை பார்த்து “சரி நான் வர்றேன்” என காரில் ஏறினாள் எப்படியும் அவமானத்தில் அவள் அழுது இருப்பாள் என பார்க்க வந்தவன் மதி எப்போதும் போல இயல்பாக இருந்தது ஏமாற்றத்தை தந்தது.
அவமானபடுத்துவது எல்லாம் ஓல்ட் ஸ்டைல் எதாவது புதுசா ட்ரை பண்ணி இவளை ஓட வைக்கனும் என நினைத்தவனுக்கு மதி அவனுக்கு ஏமாற்றத்தை தான் தர போகிறாள் என அவனுக்கு தெரியவில்லை.
“மதி உனக்கு ருத்ரன் ரெஸ்ட்ரண்டில் வேலை கிடைத்து விட்டது மண்டேயில் இருந்து நீ வேலைக்கு போ” என்றதும்
“சித்தி எதுக்கு நான் வெளியவே ட்ரை பண்றேனே”
“நீ வெளியே வேலைக்கு ட்ரை பண்ணலாம் ஆனா உன் அப்பா விடுவார்னு நீ நினைக்கிறியா ருத்ரன் ரெஸ்டாரண்ட்னா கண்டிப்பாக அனுமதி கொடுப்பார்”என்றதும்
தன் விருப்பத்திற்கு மதிப்பு அளித்து இவ்வளவு மெனகிட வேண்டிய அவசியமே இல்லையே தன் அப்பா தன் மீது காட்டுவது மகள் என்ற அக்கறையினால் தான் ஆனால் இவர்கள் முதல் தாரம் மகளை எப்படியோ போ என விட்டுட்டு போகமா என் நலன் பாதுகாப்பு கருதி அவர் அண்ணன் கடையிலே வேலைக்கு சேர்க்க வேண்டிய அவசியம் இல்லையே என்று நெகிழ்ந்து போனாள்
“சரிங்க சித்தி” என்று திரும்பி வெளியே வேடிக்கை பார்த்தவளுக்கு
கதவை திறந்த பயமா இருக்கு 10 வயது வெண்மதி கதவை தட்டி கொண்டு இருப்பதை காதிலே வாங்காமல் பெரிய ஹாலில் சோபாவில் கால் மேல் கால் போட்டு டிவியை பார்த்து கொண்டு இருந்தார்கள் வெண்மதி பாட்டி மாமா ராக்கேஷும் தீனியை கொறித்தபடி படம் பார்த்து கொண்டு இருந்தது அந்த கூட்டம்.
ஸ்வேதா கணவனோடு உல்லாச பயணத்திற்கு சென்று இருந்த சமயத்தில் வயிற்றை பிடித்து கொண்டு அப்பா அப்பா என அழுத வெண்மதியை வயதிற்கு வந்ததும் ரூமில் அடைத்து விட்டு யாரும் கண்டு கொள்ளாமல் அனாதையாக தவித்ததே நினைவிடுகையில் வந்து போனது.
நர்மதாவின் அக்கறை பாசம் மதியின் மனதை நெகிழ செய்தது.திவ்யாவை போல் நர்மதாவின் மேல் மதிப்பு பன்மடங்காக பெருகியது வெண்மதிக்கு.
கார் ஓர் வீட்டின் முன்னால் நின்றது “இது என் அம்மா வீடு வா உன்னைய அறிமுக படுத்தி வைக்கிறேன்”
மறுப்பேதும் சொல்லாமல் இறங்கினாள் தன் சித்திகாக
“நர்மதா வா வா போன வாரம் வரவே இல்லையே நீ”என வரவேற்றார் சாந்தினி
“அண்ணி இவ வெண்மதி “என அறிமுகபடுத்தினார்
“வாம்மா” என சிரித்த முகத்துடன் வரவேற்று வெண்மதியை உபசரித்தார் வெண்மதியை பார்த்ததும் பிடித்து போனது சாந்தினிக்கு
நர்மதாவோடு எல்லாரையும் அறிமுக படுத்தினாள் “சந்தோஷும் என் அண்ணாவும் இல்லை நாளைக்கு வர்றப்ப பாரு” என அனைவரிடம் பேசி கொண்டு இருக்க சாந்தினியை தவிர மற்றவர்கள் வெண்மதியிடம் முகம் கொடுத்து பேச வில்லை எப்போதும் போல் வெண்மதி அதை பெரிது படுத்தவும் இல்லை அமைதியாக அவர்கள் பேசுவதை வேடிக்கை பார்த்தாள்.
“மதி ருத்ரன் ரெஸ்டாரண்டில் வேலைக்கு சேர்ந்து இருக்கிறாள் ” என்று நர்மதா சொன்னதும்
“ஏம்மா நீ என்ன படித்து இருக்க” சரோஜா கேட்டார்
“பி எஸ்சி பேஷன் டிசைன் அன்ட் இன்டீரியர் டிசைனிங் ”
“ என்ன டிசைன்”
“அதாவது மால்கள் குடியிருப்பு வீடுகளில் நல்ல ஒரு லுக்கா வடிவமைப்பது அதாவது டேக்கரேட் பண்றது கல்யாணம் டேக்கரேஷன் பண்ணி தருவது ”
“இதுகேலமா படிப்பு இருக்கு இதை தான் நீ படித்தியா இதை படிச்சு தான் தெரிந்து கிட்டியா அதுசரி உன் அம்மா உருபடியா வீட்ல இருந்தா சொல்லி கொடுத்து இருப்பா ஆனா என் பேத்திக்கு இதெல்லாம் சாதரணம்” என்றதும் ஷிவானியும் பாக்கியமும் கிளுக்கென சிரித்தார்கள்.
நர்மதாவிற்கு தான் சங்கடமாகி போனது
“அத்தை அவங்க வடிவமைக்கிற மாதிரிலாம் நம்மலாள பண்ண முடியாது அதுக்குனு திறமை இருந்தா தானே பண்ண முடியும் நீ சரியான இடத்துல தான் வந்து இருக்க மதி ருத்ரன் கூட போன வாரம் சொன்னானே ரெஸ்டாரண்ட் இன்டீரியர் வொர்க் சரியில்லைனு மறந்துட்டீங்களா” என தன் மாமியார் காலை வாரிவிட்டார் சாந்தினி
“அத்தை பாட்டி ஏதோ சொல்லிட்டு போறாங்கன்னு விடாம மூணாவது மனுஷங்க முன்னாடி என்னையும் மகிழையும் மட்டம் தட்டாதிங்க” என்று வெண்மதியை முறைத்தபடி ஷிவானி எழுந்து உள்ளே சென்று விட அவள் பின்னே மகிழினியும் சென்று விட்டாள்.
தொடரும்.…