அத்தியாயம் 4

“அறிவு கொழுந்தாட்டம் பிள்ளைய மட்டும் கூட்டிட்டு வந்து இருக்க அங்கே அந்த மும்பை பொண்ணு அவ அப்பா கிட்ட நல்லா பழகி உறவாடி ஒட்டிகிறதுக்கா  போய்  பிள்ளைய விட்டுட்டு வா” என சரோஜா பாட்டி சொன்னதும்.

“அப்படிலாம் நடக்காது பாட்டி மாமாக்கு அந்த பொண்ணு வருவதில் இஷ்டம் இல்லாத மாதிரி தான் தெரியுது அத்தை தான் தேவையில்லாத வேலை பாக்குறாங்க” என்றான் ருத்ரன் 

“அட கூறு கெட்டவனே பெற்ற பொண்ணு மேல் உள்ள கோபமெல்லாம் பார்க்காத வரைக்கும் தான் அந்த பொண்ணை பார்த்தா முகத்தை திருப்பிகிட்டா போவாறு மகள் மேல் பாசம் திரும்பிட்டா அப்புறம் நர்மதா அவருக்கு 2ம் பட்சமா தான் தெரிவா…பாட்டி சொல்றதை கேளுப்பா போ”

“நீங்க பண்றது யோசிப்பது எதுவும் சரியில்ல சேகருக்கு தெரிந்தா வருத்தபடுவவார் பாவம் அந்த பொண்ணு இவ்ளோ வருஷம் கழித்து அப்பாவை பார்க்க வந்து இருக்கா அந்த பொண்ணை ஏன் கஷட்டபடுத்தறீங்க” என்று தாயையும் ருத்ரனையும் கண்டித்தார் கிருஷ்ணன்.

“அதெல்லாம் நான் பார்த்துகறேன்… விடுங்கப்பா மாமா தப்பா நினைக்க மாட்டார் அவங்க அம்மா வழி சொந்தம் யாரும் இருக்காங்களான்னு கேட்டு அனுப்பி விட்ரலாம் பபயப்படாதிங்க ” தான் யோசனையை கூறினான்

“நான் இரண்டு பேரையும் கொண்டு போய் விட்டுட்டே வர்றேன்” என்றவனிடம்

“மாமா அப்போ இன்னிக்கு வெளியே போகலையா ” வெளியே செல்வதற்காக கிளம்பி வந்து நின்றாள் ஷிவானி

“அடுத்த வாரம் எல்லாருமா சேர்ந்து தீம் பார்க் போகலாம் தருண் ராகுல் இல்லாம எப்படி நாம மட்டும் போறது ”

“எல்லாம் அவளால தானே  ச்சே” என காலை தரையில் உதைத்து தன் கோபத்தை வெளிபடுத்தினால் ஷிவானி

தருண் ராகுல் கூட அமைதியாக தான் இருந்தார்கள் ஷிவானியின் குழந்தைதனமான பிடிவாதத்தை கண்டு புன்னகை புரிந்தவன்  சந்தோஷை அழைத்து போக சொன்னான் 

“ஒன்னும் வெண்டாம் போங்க” என்றவளை சமாதான படுத்திய ருத்ரனை  கண்ட சரோஜா இருவரையும் நெட்டி முறித்து ஆசிர்வதிப்பது போல் செய்தார். 

எவ்வளவு அழகு சீக்கிரம் இவங்க கல்யாணத்தை பார்க்கனும் என்று கடவுளிடம் ஆயிரத்தில் ஒன்றாம்  தடவையாக வேண்டுதலை வைத்தார் 

தருண் ராகுலிடம் அந்த மதி கூட பேச கூடாது என ஆயிரம் சத்தியம் வாங்கி தான் சென்று விட போனவன்  ஊஞ்சலில் மதி ஆடுவதை பார்த்து தருண் ராகுலை உள்ளே அனுப்பி விட்டு மதியை நோக்கி சென்றான்.

 

இது தான் அந்த பொண்ணா என பார்த்தவன் உரிமையா ஊஞ்சலில் ஆடிட்டா இருக்க இரு வர்றேன் என நின்றனை ஏகத்துகும் இடித்து கொண்டே இருந்தாள் 

ஒருத்தர் மேல் இடிப்பது கூடவா தெரியாது திமிர் பிடித்தவள் மும்பையில்  வளர்ந்தவள் தானே அதான் கொஞ்சம் கூட கூச்சம் இல்லாம ஒருத்தன் மேல் உரசிட்டே இருக்கு என அவளை தப்பாக நினைத்து பிடித்து தள்ளி விட்டான்.

கீழே விழுந்தவள் ஒருவனை இடித்தது கூடவா தெரியாமல் இருந்தோம் வருத்ததுடன் விலகி இருந்த துப்பாட்டாவை சரி செய்தபடி “ஸாரி ஸார் நான் உங்களை கவனிக்கலை”

இவ பெரிய ரதி அப்படியே பார்த்தும் மயங்கிடுவோம் பாரு அவள் துப்பாட்டா சரி செய்ததை எரிச்சலுடன்  அதென்ன அப்பான்னு கத்துறா எல்லாரும் அம்மான்னு தானே கத்துவாங்க அப்பா பாசத்தை காட்டி இங்கேயே டேரா போட ப்ளானோ பாட்டி இவளை பற்றி சொன்னது எல்லாம் கரெக்ட் தான் என மோசமாக அவன் மனதில் பதிந்து போனாள் வெண்மதி

 “யார் நீ கேட் திறந்து வைத்து இருந்தா நீ பாட்டுக்கு உள்ளே வந்துருவியா” பார்வையாலே அவளை எரித்து விடுவது போல பார்த்தான்.

போன் பேசியபடி வேற யாருடைய வீட்டுகுள்ளே சென்று விட்டேனா  என தான் வீட்டை பாரத்து  இல்லையே இது அப்பா வீடு தானே என்று  முகத்தில் கடுமையை பூசி

“மிஸ்டர் யார் நீங்க வீடு எதுவும் மாறி வந்துட்டீங்களா நீங்க தான் நான் ஊஞ்சல் ஆடும் இடத்துக்கு வந்து வம்பு பண்றீங்க கேட் திறந்து இருந்தா நீங்க பாட்டுக்கு வருவீங்களா”என அவன் பேசிய வார்த்தையை வைத்து அவனையே திருப்பி கேட்டாள்.

“ஏய் என்ன….ரொம்ப உரிமையா ஊஞ்சலில் ஆடுற இது என் அத்தைகாக மாமா வாங்கியது இங்கே அவங்க  குடும்பம் மட்டும்  தான் இருக்கனும் எல்லாம் அனுபவிக்கனும் நீ என்னமோ புதுசா உறவு கொண்டாடிட்டு வர்ற கொஞ்சம் கூட கூச்சம் நாச்சம் இல்ல அது சரி நீ உன் அம்மா மாதிரி…” 

“ருத்ரா எப்ப வந்த உள்ளே வராம இங்கே என்ன பண்ற” சேகர் வந்து கேட்கவும் சடுதியில் முகத்தை மாற்றி

 “அப்புறம் பேசலாம் பாய்” என சிரித்தபடி மதியிடம் இருந்து திரும்பி சேகரிடம் பேசியபடி உள்ளே சென்றான். 

அவன் பேசியதிலே தெரிந்தது அவன் நர்மதாவின் அண்ணன் பையன் என்று ஆனால் அவன் பேசிய வார்த்தையின் வீரியத்தில் அவள் மனம் மிகவும் காயமடைந்து விழிகள் கலங்கி போனது

 கலங்கிய விழிகளை துடைத்து கொண்டு 

கீழே இருந்த போனை எடுத்தவளோ அதிர்ந்து போனால் 

 போனில் அஷ்வத் எல்லாவற்றையும் கேட்டு கொண்டு இருந்ததை கண்டு தலையிலே அடித்து கொண்டால் 

அய்யோ இவனை எப்படி சமாளிக்க சரி சமாளிப்போம் என்று உதட்டை கடித்து கொண்டு  என்ன சொல்வது என யோசிக்கும் போது “ா” என அஷ்வத்தின் குரல் அவள் காதில் ஈட்டியாக ஒலித்தது.

“அ..அஷ்வத் அது சித்தியோட ரிலேட்டிவ் போல”

“ அதுக்கா என்ன வேணும்னாலும் பேசுவானா உன்னைய தள்ளி வேற விட்டானா நீ கீழே விழுந்த சத்தம் கேட்டது இடியட் அறிமுகம் இல்லாத பொண்ணு கிட்ட என்னவெல்லாம் பேசுறான்”

“இல்ல அஷ்வத் தப்பு என் மேலயும் இருக்கே நான் அவர் மேல இடித்ததினால தான்”

“மதி நான் எல்லாத்தையும் கேட்டுட்டு தான் இருந்தேன் அங்கிள் எதுவுமே சொல்லலயா அவருக்கு நீ வந்தது பிடிக்கலையா நீ இரு நான் அங்கிள் கிட்ட பேசறேன்”

“டேய் டேய் அப்படி எதுவும் பண்ணிடாத அப்புறம் அப்பா எப்பவுமே என்கிட்ட பேச மாட்டார் ” என்றாள் தழுதழுத்த குரலில் 

“உன் கிட்ட இன்னுமும் பேசலையா”

உளறி தொலைகாத உளறு வாயே என தன் வாயில் அடித்து கொண்டவள்

“என்னை சொல்லவிடாம நீயா பேசிட்டு இருந்தா எப்படி நீ ஆன்ட்டி எப்படி என் மேல் கேரிங்கா இருக்கிங்களோ அது போல தானே சித்தி வீட்லயும் நினைப்பாங்க”

“நான் என்ன கேட்கிறேன் நீ என்ன சொல்ற”

“நான் இன்னும் பேசி முடிக்கல”

“சரி சொல்லு ”

“என்னால சித்தி வாழ்க்கைல எதாவது குழப்பம் வந்துடுமோனு  தான் என்கிட்ட அந்த காட்டான் அப்படி பேசி இருக்கும் இப்ப எனக்கு எதாவது ஆபத்து வந்துடுமோன்னு நீ பயப்படுற மாதிரி சித்திகாக யோசித்து இருப்பாங்க இதுல என்ன தப்பு”

” அவன் உன் அம்மாவோட உன்னை கம்பேர் பண்ணி பேசுறான் உனக்கு உரிமை இல்லன்னு சொல்றான்  ராஸ்கல்….. உனக்கு இல்லாத உரிமையா  அவனுக்கு எவ்ளோ தைரியம் இப்படி பேச”என கத்தினான்

“உண்மைய தானே சென்னாங்க விடு  ராக்கேஷ் உன்கிட்ட எதுவும் பிரச்சினை பண்ணலயே”

“பேச்சை மாத்துறியா மதி ”

“பாதில விட்டுட போன எனக்கு என்ன உரிமை இருக்கு அஷ்வத் என்னால எந்த பிரச்சினை வேண்டாம்னு தான் சொல்றேன் என்னால முடியலடா பிரச்சினை சண்டைய பார்த்து பார்த்து நான் ரொம்ப டயர்டாகிட்டேன் நான் என் அப்பா சித்தி தம்பிங்கள பார்க்க தான் வந்தேன் அவங்களோட இருக்க போற ஸ்வீட் மேமரிஸ் போதும் சண்டை வேணாம்டா”

சிறிது நேரம் எதுவும் பேசாமல் மௌனம் காத்து “நல்லா பேச கத்துகிட்டடி சரி பார்த்து பத்திரமா இரு நான் முடிந்தா இந்த மன்த் குள்ள வர்றேன்”

“ஏன்டா ஆன்ட்டி…”

“ஏன்டி நான் உன்னை பார்க்க வந்தாலும் அந்த காட்டு பய கத்துவானா அப்படி கத்துனானா அவன் கழுத்தை பிடித்து கடிச்சு விட்டேறேன் அப்புறம் நம்மள பார்த்தாலே தலை தெறிக்க ஓடிருவான்” என்றதும் ருத்ர பயத்தில் கழுத்தை பிடித்து கொண்டு ஓடுவது போல கற்பனை பண்ணி பார்த்தவள் சிரிக்க ஆரம்பித்தாள்.

“சரியான காட்டுவாசிடா நீ ”

“ஓகே நீ இப்படியே சிரித்தபடி இரு” என அழைப்பை கட் செய்தான். 

சிரித்த முகத்துடன் திரும்பியவளின் சிரிப்பு கொஞ்சம் கொஞ்சமாக தேய்ந்து மறைந்து போனது.

பின்னால் கையை கட்டியபடி அவளையே பார்த்து கொண்டு இருந்தான் ருத்ர பிரசாத்.

அவள் எதையும் கண்டு கொள்ளாமல் நகர அவள் துப்பட்டாவை பறித்து கொண்டான்.

“மிஸ்டர் என்ன பண்றீங்க” என்றாள் துப்பாட்டா நுனியை விடாமல் பிடித்து கொண்டாள்.

“ஹான் தற்கொலை பண்ணிக்க இருந்த உன்னை காப்பாத்துறேன்”

“தற்கொலையா”  

“துப்பட்டாவை எதுக்கு போடனும்னு உனக்கு யாரும் சொல்லி தரலயா” என அவள் மேல் அழகாக துப்பட்டாவை போட்டு விட்டான் 

“ஷாலை இனிமேல் இப்படி தான் போடனும் எங்க பேமிலிக்குனு ஒரு கௌரவம் இருக்கு உன் அம்மா மாதிரி நீயும் கெடுத்துடாத  இப்படி வெளிய சிரித்து சிரித்து பேசுறது அறையும் குறையுமா ட்ரஸ் போடறது எல்லாம் மும்பையோட நிப்பாட்டிகோ” என்று கூறிவிட்டு விறுவிறுவேன சென்று விட்டான்

யாரும் இல்லையேன கழுத்தை ஒட்டி இருந்த துப்பட்டாவை சரிசெய்யாமல் விட்டதை எண்ணி வெட்கினாள் இந்நேரம் வேறு யாராக இருந்தாலும் அசிங்கமாக கமெண்ட் அடித்து இருப்பார்கள் பரவாயில்லை கண்ணியமான காட்டன் போல என அவன் வீசிய வார்த்தைக்கு மதிப்பு கொடுக்காமல் தன் தம்பிகளை  பார்க்க சென்றாள்.

வருண் ராகுல் டிவி பார்த்து கொண்டு இருந்தனர்.

“ஹாய்”என அவர்கள் அருகில் அமர்ந்தாள்.

மதியை கண்டு கொள்ளவும்‌ இல்லை திரும்பவும் இல்லை “நான் வெண்மதி உங்க பேர் என்ன”

 திரும்பி கூட பார்க்காமல் இருந்தவர்களை பார்த்தவள் டிவியில் அப்படி என்ன ஓடுது என பார்த்தாள் விஜய் படம் ஒடி கொண்டு  இருந்தது.

திரும்பவும் முயற்சியை கைவிடாதவளாக “விஜய்னா பிடிக்குமா” இப்போழுதும் பதிலில்லை 

பரவாயில்லை நீங்க பேச வேண்டாம் என தம்பிகளையே பார்த்து கொண்டு இருந்தாள் அவர்கள் சண்டையிட்டு கொள்வதும் ஓர கண்ணில் மதியை பார்த்து திரும்பி கொள்ளவும் அவர்களின் முடியை கலைத்து விளையாடி விட்டு எழுந்து தன் அறைக்கு சென்றாள்.

“அக்கா அழகா இருக்காங்கல” என்றான் வருண் ராகுல் காதில் கிசுகிசுப்பாக

“ஆமா ஆனா மாமா பேச கூடாதுன்னு ப்ராமிஸ் வாங்கிட்டாரே” என மதி சென்றதும் இருவரும் ரகசியமாக பேசி கொண்டனர்

இரவு சாப்பிட அழைத்த போது பிறகு சாப்பிட்டுகறேன் என தவிர்த்து விட்டு அவர்கள் சாப்பிட்டதும் தனியே அமர்ந்து உணவருந்துவதை பார்த்த நர்மதா அவளுடன் அமர்ந்து பேசி கொண்டு இருக்க “ம்மா  வாங்க அப்பா வெயிட் பண்றார்” என்று வந்து நின்றான் வருண்.

“இருடா அக்கா சாப்பிட்டதும் வர்றேன் அக்காவையும் கூப்பிட்டு வர்றேன்டா.” என்று நர்மதா சொன்னதும்.

ஓரகண்ணால் வெண்மதியை பார்த்தவன் அவள் அவனையே பார்ப்பதை உணர்ந்து ஓடி விட்டான்.

“எப்போதும் சாப்பிட்டு கொஞ்ச நேரம் கார்டன்ல பசங்களோட பேசிட்டு விளையாடுவோம்”

“நீங்க போங்க சித்தி  நான் பார்த்துகறேன்”

“நீ சாப்பிட்டு வா மதி “என கார்டனுக்கு என்று சென்று விட்டாள்.

மதி உணவருந்தி விட்டு கிச்சனில் சாப்பிட்ட தட்டை கழுவி வைக்கையில் கார்டனில் சேகர் வருண் ராகுலோடு கண்ணை கட்டி விளையாடுவது தெரிந்தது.

அப்படியே நின்று பார்த்து கொண்டு இருந்தாள் 

அவள் அப்பா இவ்வளவு சிரிப்பதை இப்போழுது தான் பார்கிறாள் நர்மதா வருண் ராகுல் மூவரும் சேகரிடம் மாட்டாமல் ஓடி கொண்டு இருக்க அவர்களை தேடி அலைந்து சோர்வுடன் உட்கார்ந்தவரை மூவரும் சேகரின் கையை பிடித்து சந்தோஷமாக விளையாடி கொண்டு இருப்பதை பார்த்தவளுக்கு உள்ளுக்குள் ஏக்கம் சோகம் அவர்களுள் தானும் ஒன்றாக முடியாத ஆசை எல்லாம் சேர்ந்து அவளை நெஞ்சை நிறைவு செய்ததில் கண்ணில் நீர் ஆறாக பெருகியது.

தன் அறைக்கு வந்து கதவின் மேல் சாய்ந்தவள் அழுகை பீறிட்டு கிளம்பியது 

அடக்க முடியவில்லை 

அடக்கும் எண்ணமும் வரவில்லை 

எப்போதும் விட இன்று அழுகை அதிகமானது கட்டிலுக்கு அடியில் இருந்த மற்றோரு லக்கேஜில் அடுக்கி இருந்த டைரிகளில் ஒன்றை எடுத்தவள் தரையில் அமர்ந்தபடி எழுத ஆரம்பித்தாள்

தன் அப்பாவிடம் பேசுவதாக பாவித்து அந்த டைரியில்  எழுத ஆரம்பித்தாள்.

 

தொடரும்.…

 

❤️ Loading reactions...
0 Comments
Oldest
Newest Most Voted
error: Content is protected !!
Scroll to Top