பிரிவின் தொடக்கம்…
அதிகாலை…
பாண்டியன் மாளிகை முழுவதும் அமைதியாக இருந்தது.
வாசல் முன் கோலம் போட்டு முடித்த வேலைக்காரப் பெண்கள், சமையலறையில் காலை உணவு தயாரித்துக் கொண்டிருந்தனர்.
பூஜையறையில் விளக்கேற்றி இறைவனை வணங்கிவிட்டு வெளியே வந்தார் செல்வி பாண்டியன்.
அந்த நேரத்தில்…
தரையில் படுத்து உறங்கிய அல்லி மெதுவாகக் கண் விழித்தாள்.
ஒரு நொடி…
கட்டிலில் நிம்மதியாக உறங்கிக் கொண்டிருந்த ஆதவனைப் பார்த்தாள்.
நேற்று இரவு அவன் பேசிய ஒவ்வொரு வார்த்தையும் அவள் காதுகளில் மீண்டும் ஒலித்தது.
“இந்தக் கல்யாணம் என் விருப்பம் இல்ல… என் வாழ்க்கையில் உனக்கு இடம் கிடையாது…”
அவள் கண்களை இறுக்கமாக மூடிக் கொண்டாள்.
“அழக்கூடாது…”
என்று தனக்குத்தானே சொல்லிக் கொண்டு கண்ணீரைத் துடைத்தாள்.
மெதுவாக எழுந்து அறையை சுத்தம் செய்தாள்.
பிறகு குளித்துவிட்டு எளிமையான புடவையில் கீழே இறங்கினாள்.
“வாம்மா…”
என்று புன்னகையுடன் அழைத்தார் ரேணுகா.
“இவ்வளவு சீக்கிரமா எழுந்துட்டியா?”
“தூக்கம் வரல அத்தை…”
என்று மெதுவாகச் சொன்னாள் அல்லி.
ரேணுகா அவளது முகத்தைப் பார்த்தார்.
கண்கள் சிவந்து இருந்தது.
எதுவும் கேட்கவில்லை.
அவள் மனநிலையை புரிந்துகொண்டார்.
“வா… முதல்ல காபி குடி.”
அந்த நேரம்…
“சித்தி…”
என்று ஓடிவந்தாள் குட்டி தியா.
“தூக்கு…”
அல்லியின் முகத்தில் முதல் முறையாக ஒரு சின்ன புன்னகை மலர்ந்தது.
“வாடா செல்லம்…”
என்று அவளைத் தூக்கிக்கொண்டாள்.
“நீ எங்க கூட விளையாடுவியா?”
“விளையாடுவேன்…”
“கதை சொல்லுவியா?”
“சொல்லுவேன்…”
“அப்போ நீ என் பெஸ்ட் சித்தி…”
என்று தியா சிரிக்க…
அங்கிருந்த ரேணுகாவும் சிரித்தார்.
அதே நேரத்தில்…
மாடிப்படிகளில் இருந்து இறங்கி வந்தான் ஆதவன்.
வெள்ளை சட்டையும் கருப்பு பேண்டும் அணிந்து வழக்கம்போல கம்பீரமாக இருந்தான்.
ஒரு நொடி…
அல்லியையும் தியாவையும் பார்த்தான்.
எந்த உணர்வையும் வெளிக்காட்டாமல்…
நேராக டைனிங் ஹாலுக்குச் சென்றான்.
அங்கு…
செல்வராஜ் பாண்டியன் செய்தித்தாளைப் படித்துக் கொண்டிருந்தார்.
அருள் பாண்டியன், கார்த்திக் பாண்டியன், அஜய் ஆகியோர் தொழில் விஷயமாகப் பேசிக் கொண்டிருந்தனர்.
“அப்பா…”
என்று கோப்பை ஒன்றை நீட்டினான் அஜய்.
“இந்த புதிய மில் ஒப்பந்தத்துல கையெழுத்து போட்டா போதும்.”
அருள் பாண்டியன் கோப்பைப் பார்த்துவிட்டு,
“சரி… மாலைக்குள் முடிச்சிடலாம்.”
என்றார்.
கார்த்திக்,
“சென்னை பிராஞ்ச்ல இருந்து நேத்து போன் வந்திருந்துச்சு.”
“அடுத்த வாரம் நாம போகணும்.”
என்றார்.
அப்போது…
ஆதவன் அமைதியாக நாற்காலியில் அமர்ந்தான்.
ரேணுகா அவன் முன் காபியை வைத்தார்.
சில நொடிகள் அமைதியாக இருந்தவன்…
தன் தந்தையைப் பார்த்தான்.
“அப்பா…”
“சொல்லு ஆதவா…”
“நான் இன்னைக்கு சென்னை கிளம்புறேன்.”
அந்த ஒரு வார்த்தையில்…
அங்கிருந்த அனைவரும் அவனைப் பார்த்தனர்.
“என்னடா?”
என்று கார்த்திக் அதிர்ச்சியுடன் கேட்டார்.
“இப்போவா?”
ஆதவன் அமைதியாகத் தலையசைத்தான்.
“சென்னையில நிறைய வேலை pending இருக்கு.”
“தாத்தா சொன்னதாலதான் நான் கல்யாணத்துக்கு வந்தேன்.”
“ஒரு வாரமா எல்லா வேலையும் நின்னு போயிருக்கு.”
“இனிமேலும் லேட் பண்ண முடியாது.”
செல்வராஜ் பாண்டியன் செய்தித்தாளை மடித்து வைத்தார்.
“கல்யாணம் ஆன மறுநாளே கிளம்பணுமா ஆதவா?”
“தாத்தா…”
“வேலைன்னா வேலைதான்.”
“என் பொறுப்பை நான் விட்டுட்டு இருக்க முடியாது.”
ரேணுகாவின் முகம் வாடியது.
“கொஞ்ச நாளாவது இருந்துட்டு போடா…”
“புது பொண்ணு…”
அவள் சொல்லி முடிப்பதற்குள்…
“அம்மா…”
என்று நிறுத்தினான் ஆதவன்.
“நான் முடிவு பண்ணிட்டேன்.”
“மதியத்துக்குள்ள கிளம்பிடுவேன்.”
என்று கூறிவிட்டு எழுந்தான்.
அவன்…
ஒரு நொடி கூட அல்லியைத் திரும்பிப் பார்க்கவில்லை.
ஆனால்…
சமையலறை வாசலில் நின்றிருந்த அல்லி…
அவன் பேசிய ஒவ்வொரு வார்த்தையையும் கேட்டிருந்தாள்.
“கல்யாணம் ஆன மறுநாளே… என்னை விட்டுப் போகப் போறாரா…?”
என்ற எண்ணம் அவளது இதயத்தை நொறுக்கியது.
அவளது கண்ணில் மீண்டும் கண்ணீர் வழிந்தது…