அத்தியாயம் 8

இறுக்கமான புஜங்களோடு கட்டுட மேனியில் உடல் முழுவதும் வியர்வை துளிகள் பளபளக்க ருத்ரன் தன் அறையில் இருந்த ஜிம் ரூமில் உடற் பயிற்சி செய்து கொண்டு இருந்தான் 

“ருத்ரா” கதவை திற என அறைகதவை போட்டு உடைத்து கொண்டு இருந்தார் சரோஜா 

உடற்பயிற்சி  செய்து கொண்டு இருந்தவன் எவ்ளோ வேணும்னாலும் உடைத்து கொள்ளுங்க நான் திறக்க மாட்டேன் என்பது போல் வியர்வை வழிந்தோட உடற்பயிற்சி செய்து கொண்டு இருக்க அதே அறையில் கட்டிலில் போர்வைகுள் சுகமாக உறங்கி கொண்டு இருந்தான் சந்தோஷ் 

வசதிக்கு குறைவில்லாமல் இருந்தாலும் அண்ணன் தம்பிகள் இருவரும் ஒரே அறையில் தான் தங்க வேண்டும் திருமணம் ஆகும்  வரை பேர பேத்திகளுக்கு தனி அறை கிடையாது இது சரோஜா பாட்டியின் உத்தரவு 

“டேய் ஜிம் பாடி சரோ டார்லிங்  உன்னை தானே ஏலம் விட்டு இருக்கு உன் காதுல விழலையா சன்டே அதுவுமா நிம்மதியா  தூங்க முடியுதா ச்சை இனிமேல் சனிகிழமை ராத்திரி எல்லாரும் சாப்பிடும் சாப்பாட்டில் தூக்க மாத்திரை கலந்துடனும் அப்ப தான் நிம்மதியா தூங்க முடியும்” கண்ணை மூடி கொண்டே தூக்கத்தை கைவிடாதவனாக புலம்பினான் சந்தோஷ்

உடற் பயிற்சி கூடத்தில் இருந்து வெளிவந்தவன் மெல்லிய துண்டால் உடலில் வழிந்தோடிய வியர்வையை துடைத்தபடி   “ஸார் தினமும் 8 மணிக்கு தானே எழுந்திருக்கிறீங்க என்னவோ தினமும் அதிகாலையில் எழுவது போல் அலுத்துகற” 

“சன்டே என்பதால் டிஸ்டர்பென்ஸ் இல்லாம சுகமா தூங்கலாம் மற்ற நாளில் அப்படியா உன் போன் உரையாடலோட தான் அந்த நாளே விடியும் உன் குரலை கேட்டுட்டே தூங்கனும் ” பெரிதாக அலுத்து கொண்டான்.

“நல்லா பத்து மணிநேரமாவது தூங்கினாதான் என் கண்ணு அழகான பொண்ணுங்களை தேடி எனக்கான லைஃப் பார்டனரை  தேடி டூயட் பாட முடியும்”

எனக்காக  பிறந்தவ  எங்கே இருக்கியோ எனதழகி எனக்கு வாக்கப்பட்டு வருஷங்கள் போனால் என்ன….. 

என்று கர்ன கொடுரமாக தலைகாணியோடு உருண்டு பாடி கொண்டு இருக்க

“டேய் டேய் பாட்டை கேவலபடுத்தாத  இப்படி கழுதை மாதிரி கத்துற நேரத்துல உன் உடம்பை உடற்பயிற்சி செய்து ஃபிட்டா வச்சுகிட்டா  தானே பெண்களுக்கு ஆபத்து நேரும் போது உதவி செய்து அவங்களை இம்பரஸ் பண்ண முடியும்” 

“நமக்கெல்லாம் தூக்கத்தை விட்டு வோர்க் அவுட் பண்ண முடியாதுப்பா ஆளை விட்ரு நீ இவ்ளோ தூரம் வொர்க் அவுட் பண்ணி என்ன பிரயோஜனம் சுத்த வேஸ்ட் உன் போன்ல ஒரு பொண்ணோட நம்பராவது இருக்குதா ஏன் ஒரு போட்டோவாவது வச்சுஇருக்கியா” என ஒற்றை கண்ணை மட்டும் திறந்து கேட்கவும் மதியின் முகம் மனதில் வந்து இதமான சுக உணர்வை ஏற்படுத்தியது  ருத்ரனுக்கு

என்ன முகமெல்லாம் சிவக்குது இப்ப எதுக்கு சிரிக்கிறான் ருத்ரனை பார்த்த சந்தோஷ் அவனை சந்தேகமாக பார்க்க

“கதவை திறங்கடா” காட்டு கத்தாக கத்திய சரோஜா

“டேய்  இவ்ளோ காலையிலே இந்த அப்பத்தா எதுக்கு  ஸ்பீக்கரே இல்லாம கத்திட்டு  இருக்கு போய் என்னன்னு கேளு நான் திரும்ப தூங்கறேன் ” திரும்பவும் போர்வைகுள் பதுங்கி கொண்டான்.

 

இது சரியில்லை அவ முகம் ஏன் இப்ப ஞாபகம் வருது இனி அந்த மதி இருக்கும் பக்கம் போக கூடாது என தனகுள்  கூறியவன் கதவை திறந்தான்.

“என்ன அப்பத்தா ”

“ஏன்டா நான் எவ்வளவு நேரமா கதவை தட்டுறேன் உன் காதுல விழலை எங்கடா அவன் ”

“தூங்கறான் என்ன விஷயம் அப்பத்தா ”

“போய் உன் அத்தையையும் பசங்களையும் கூட்டிட்டு வா” என்றதும் எரிச்சலானான்.

“அப்பத்தா என்னைய கடுப்பேத்தாம போய்டுங்க மணி என்ன தெரியுமா 7 தான் ஆகுது ராகுல் வருண் எழுந்து இருக்கவே மாட்டாங்க இப்ப போய் என்னைய கூட்டிட்டு வர சொல்ற ”

“நேற்று அந்த மதி பின்னாடியே  நர்மதா போய்டாளாம் ஷிவானி எவ்வளவு வருத்தபட்டா தெரியுமா சித்தி மேல பாசமா இருந்த பெண்ணை இப்படி அழ வைக்கலாமா பாவம் அப்பா இல்லாத பொண்ணுடா”

நேற்று வீட்டிற்கு வந்ததும் ஷிவானி “சித்தி என்னை கண்டுகவே இல்லை மாலுக்கு வான்னு என்னைய கூப்பிடாம மதியோட போய்டாங்க சித்தி இப்படி மாறுவாங்கன்னு நினைக்கலை” ஷிவானி புலம்பி விட்டு சென்று விட சரோஜா இரவு வீடு வந்த ருத்ரனை பிடித்து கொண்டார் 

“ஷிவானிய விட அந்த மதி முக்கியமாயிட்டாளா இது எங்கயாவது நடக்குமா நர்மதா ஏன் இப்படி மாறினா நீ ஏன் அவ கூட போன” 

“ஏன் அப்பத்தா ஷிவானி என்ன சின்ன குழந்தையா இதுக்கு முன்ன அத்தை கூப்பிட்டு தான் போனாளா அவளுக்கு போகனும்னு இருந்தா போக வேண்டியது தானே ”

அவன் பேசுவதை கேட்டு கொண்டு இருந்த பாக்கியம் ஷிவானியும் “இதுவரை பாட்டியை யாரும் எதிர்த்து பேசவில்லை நீங்க பாட்டியவே எதிர்த்து பேசறீங்கன்னா   அதற்கு மதிதான் காரணம்” என பெரிய ஆட்டத்தை போட்டு விட்டாள்.

இந்த இரு நாட்களாக ஷிவானி  எல்லாரிடமும் எரிந்து விழுவதுமாக இருந்தவள் தன் தாய் தங்கையிடமும் அவள் கோபத்தை காட்டி இரவு நேரத்தில் ஒன்றும் இல்லாததை பிரச்சினை ஆக்கி கொண்டு இருப்பவளை கண்டு கடுப்பானான்

“பாட்டி எனக்கு செம டயர்டா இருக்கு நாளைக்கு பேசலாம்” என்று சென்றதும் இப்போ விடியற்காலையிலே நர்மதாவை அழைத்து வர சொல்லி நிற்கிறார்கள் 

“நர்மதா கிட்ட பேசனும் அந்த மதி பொண்ணை சேர்த்தே கூட்டிட்டு வா அவ கிட்ட தான் முக்கியமா பேசனும்”

“அப்பத்தா இதெல்லாம் தேவையா ஷிவானி கிட்ட நான் பேசறேன் ”

ருத்ரன் எவ்வளவு சொல்லி பார்த்தும் கேட்காமல்  ருத்ரனை நர்மதா வீட்டிற்கு அனுப்பி விட்டார் சரோஜா

அவ பக்கமே போக கூடாதுன்னு நினைச்சு அரை மணி நேரம் கூட ஆகலை அதுக்குள்ள அவளை பார்க்க கிளம்பிட்டியா என்றது மைன்ட் வாய்ஸ்

ஏய் மைன்ட் வாய்ஸ் பேசாம  அப்படியே ஓடி போய்டு நானே கடுப்புல இருக்கேன் என்று விரைவாகவே  நர்மதா வீட்டுற்கு சென்றான்.

ஞாயிறு என்பதால் வருண் ராகுல்   இன்னும் தூங்கி கொண்டு இருந்தனர் சேகர் ஜாக்கிங் சென்று விட  நர்மதா  மொட்டை மாடியில் வற்றல் காய வைக்க சென்று இருந்தால்  வெண்மதிக்கு ஆறு மணிக்கு மேல் தூங்கி பழக்க மில்லாததால் எழுந்து குளித்தவள் சரி எல்லாரும் தூங்கிட்டு தானே இருக்கிறார்கள் நினைத்து கொஞ்ச நேரம் பரதம் ஆடலாம் என நர்மதா சொன்ன அறையில் யாருக்கும் சத்தம் கேட்காத வண்ணம் மெதுவாக பாடலை இசைக்க விட்டாள்

நறுமுகையே நறுமுகையே…

நீயொரு நாழிகை நில்லாய்…

செங்கனி ஊறிய வாய் திறந்து…

நீயொரு திருமொழி சொல்லாய்…

அற்றைத் திங்கள் அந்நிலவில்…

நெற்றிதரல நீர்வடிய…

கொற்றப் பொய்கை ஆடியவள் நீயா…

அழகாக  அபிநயம் பிடித்து ஆடி கொண்டு இருந்தாள் மதி அவளோடு சேர்ந்து அவள் கூந்தலும் சேர்ந்து ஆடியதில் அழகோ அழகு.

காரை வெளியவே நிறுத்திய ருத்ரன் உள்ளே சென்றதால் நர்மதாவிற்கு தெரியவில்லை.

கதவு திறந்து இருக்க உள்ளே சென்றான் யாரும் இன்னும் எழுந்திரிக்கலையோ அத்தை  என அழைக்க  போனவன் மெல்லிதாக கேட்ட பாட்டு சத்தத்தில் விழிகளை சுருக்கி பாட்டு சத்தம் வந்த அறையை பார்த்தான்.

யாரு இப்படி காலங்கார்த்தால பாட்டு கேட்பது ஒருவேளை மதியா  சீக்கிரம் எழுந்து விடுவாளா என்ன என கதவை திறக்கலாமா தயக்கத்துடன் யோசனையாக நெற்றியை தேய்த்தவன் கதவை திறக்க போக வேண்டாம்டா  வேண்டாம் கேட்ட மைன்ட் வாய்ஸை அட போட அலட்சியதுடன் கதவை திறந்தவன்

 கண்ட காட்சியில் உறைந்து தான் போனான்  அதிர்ச்சியில் அல்ல அழகோவியமாக நடனம் ஆடும் மதியை கண்டு  அவன் இதயம் தாறுமாறாக துடித்தது

 

காலேஜில் டிவியில் பரதம் என்றால் சலித்து கொண்டு எழுந்து ஓடுபவன்  இன்றோ பரதம் ஆடி கொண்டு இருந்த மதியின்  நடனத்தை அவள் காட்டும் முகபாவனை வென்பிஞ்சு விரலில் அபிநயம் பிடித்து இடை வளைத்து கண்களில் காட்டும் ஜாலங்களில் தெரிந்த குறும்பு ,வெட்கம், முன்னால் விழுந்த கற்றை கூந்தலும் அவளுடன் சேர்ந்து ஆடியது எதுவும் சலிக்காமல்,அவளின்  அசைவுகளை சொட்டு சொட்டாக  உள்வாங்கி கொண்டு நின்று கொண்டு இருந்தான் 

பெண்கள் என்றாலே அழகு தான் பரத நாட்டியம் ஆடும் பெண்கள் இவ்வளவு அழகாக இருப்பார்களா இது தெரியாமல் போச்சே என அவன் வருத்தபட்டு கொண்டிருக்க

அபிநயம் பிடித்து ஆடி கொண்டு இருந்தவள் ஒருவழியாக தன்னை விழுங்கும் பாரவையை கண்டு கொண்டால் 

 வேகமாக பாடலை நிறுத்த போனை கையில் எடுத்து நிறுத்த முயன்றால் பதட்டத்தில் அவள் கைகள் நடுங்கி போன் கீழே விழ போக வேகமாக உள்ளே வந்து போனை பிடித்து பாட்டை நிறுத்தி அவளிடம் நீட்டினான் 

விழிகளை தாழ்த்தியபடி போனை வாங்கியவளிடம்  குரலை செருமி கொண்டு “அத்தை எங்கே” என்றான்

“சித்தி மாடில இருக்காங்க வற்றல் காய வைக்க போய் இருக்காங்க” அவனை நிமிர்ந்து பாராமலே சொன்னாள்

அவளை ரசித்து நின்றதை  பார்த்து இருப்பாளோ  என்று “அவங்கள மாடி வெயில்ல காய வைச்சுட்டு நீ இங்கே  ஆட்டம் போட்டுட்டு இருக்க கூட இருக்கிறவங்களுக்கு ஹேல்ப் பண்ணனும்னு தோணாதா உனக்காக  அத்தை எவ்ளோ மெனகிடறாங்க” சிடுசிடுத்தான்

அவன் போனதும்  உஃப்  என காற்றை வெளியிட்டவள் ஒரு பொண்ணு இருக்க ரும் ஆச்சேன்னு கதவை தட்டிட்டு வருவோம்னு மேனர்ஸ் இல்லாம இவன் பாட்டுக்கு வந்தான் வெறிக்க வெறிக்க பார்த்துட்டு கத்திட்டு போறான்  என்று அவள் மனம் அவனை திட்டி கொண்டது

நர்மதாவிடம் அப்பத்தா உங்களையும் மதியையும் அழைத்து வர சொன்னதை சொன்னதும் சந்தோஷமாக மதியை கிளம்ப சொன்னாள்

தன் அறைக்குள் சென்றவள் இரவு எழுதிய டைரியை எடுத்து வைக்காமல் இருப்பதை கண்டு தலையில் அடித்தபடி டைரியை  வேகமாக பேக்கில் வைத்து பரணி மேல் தூக்கி போட்ட நேரத்தில் சரியாக வருண் ராகுல் விளையாடியபடி  மதி அறை கதவை திறக்கவும்  மதி பேக்கை மேலே தூக்கி போடும் காட்சி ருத்ரனின் பார்வையில் பட்டது.

என்னத்த மேலே தூக்கி போடுறா என்று அவள் தோட்டத்திற்கு சென்ற நேரத்தில் பரணி மேலே இருந்த பேக்கை பார்த்து விட்டு நர்மதாவை அழைத்து சென்று விட்டான்  

வெண்மதியின் கடந்த காலம் அந்தப் பைக்குள் அமைதியாக உறங்கிக் கொண்டிருந்ததை, அப்போது ருத்ரன் அறிந்திருக்கவில்லை.

 

 

 

❤️ Loading reactions...
0 Comments
Oldest
Newest Most Voted
error: Content is protected !!
Scroll to Top