பிடிவாதமாக வர மறுத்த வெண்மதியை தனியே விட்டு செல்லவும் பயந்தாள் நர்மதா சேகர் வெண்மதியிடம் சகஜமாக பேசி இருந்தாலாவது விட்டு செல்லாம் வெண்மதியை பற்றி முழுவதுமாக அறிந்தவளுக்கு அவளை தனியே விட மனமில்லாமல்
“அங்கு உன்னைய யாரும் எதுவும் சொல்ல மாட்டாங்க ஏன் இவ்ளோ தயங்குற உன்னை யாராவது கஷ்டபடுத்தினாங்களா” என கேட்கவும்
“அதில்லை சித்தி நாளைல இருந்து வேலைக்கு போறேனே அதுக்காக தான் கொஞ்சம் டிசைன்ஸ்லாம் பார்க்கனும் நிறைய ஐடியாஸ் யோசிச்சுட்டு இருக்கேன் அதான் நான் வீட்டிலே இருந்து பார்க்கலாம்னு…”
“அதெல்லாம் அங்கே போய் பண்ணிகலாம் உனக்கு தேவையானதை எடுத்து வைத்து விட்டு கிளம்பு… அம்மாவே கூப்பிடுறாங்க நீ வரலைனா தப்பா நினைப்பாங்க இல்லையா…. எவ்வளவு நாள் தான் ஒதுங்கியே இருப்ப” என்றதும் அதற்கு மேல் மறுக்க முடியாமல் கிளம்ப ஆயுத்தமானால்.
ருத்ரனிற்கு வந்த அரைமணி நேரத்தில் புரிந்து போனது நர்மதாவை தவிர மூன்று பேரும் மதியிடம் பேசுவது இல்லை அவளும் தந்தையிடம் பேச முயற்சிக்க வில்லை என்று புரிய மனதிற்குள் இனம் புரியாத கவலை வந்து ஒட்டி கொண்டது
சேகர் வருவதற்குள் தோட்டத்தில் சிறிது நேரம் உலாவிவிட்டு திரும்ப அறைகுள் சென்று அடைந்து கொண்டாள் அதன் பின் அவர்கள் சாப்பிட்டு முடிக்கும் வரை வெளியே வராமல் சேகர் கடைக்கு கிளம்பிய பிறகே வெளியே வந்தாள்.
அப்பாவை தானே பார்க்க வந்தாள் ஏன் பேசாமல் அறைகுள்ளே அடைந்து இருக்கிறாள் எதையோ மறைத்து வேறு வைத்து இருக்கிறாள்…
பாட்டி ஷிவானி சொல்வது போல் அவ அம்மா மாதிரி கெட்ட எண்ணத்துடன் அப்பாவின் குடும்பத்தை கலைக்கும் திட்டமா….இல்லையே நேற்று மாடியில் மயங்கிய நிலையில் கூட அப்பா அப்பா என்று புலம்பினாளே எது நிஜம் ஆனால் எதையோ மறைகிறா என்னவா இருக்கும் வெண்மதி பற்றி யோசித்து கொண்டு இருந்தான்
சேகர் சாப்பிட்டு கடைக்கு சென்ற பிறகு நர்மதா மதியை சாப்பிட அழைக்கவும் தான் வந்தாள்
இந்த மேடமை சாப்பிட அழைப்பு கொடுக்கனுமா என்று எரிச்சாலானான்
“அத்தை கொஞ்சம் சீக்கிரமா வாங்க எவ்வளவு நேரம் ” என்று மதியை முறைத்தபடி சொல்லவும்
இவன் வேற குறுகுறுன்னு பார்த்துட்டு இருக்கான் என்று பாதி உணவிலே கைகழுவி அவர்களுடன் சென்றாள்
நர்மதா வீட்டில் நடக்கும் விருந்து ஏற்பாட்டை கவனித்துவிட்டு தன் தாயிடம்
“என்னம்மா வீட்ல பெரிய விருந்தே ஏற்பாடு பண்ணி இருக்க என்ன விசயம் யாராவது கெஸ்ட் வராங்களா”
“ஆமா நர்மதா உனக்கு சிவராஜ் மாமாவை தெரியுமா” என்றார் பாக்கியம்
“தெரியுமே அம்மாவோட பெரியம்மா பையன் ஆனா அவர் தான் இப்ப உயிரோட இல்லையே அவர் பொண்ணு கவிதா யாரோட ஓடி போனதால தானே வெளியே தலை காட்ட முடியாம தற்கொலை செய்துகிட்டார்”
“நேற்று சிவராஜ் மாமாவுடைய பேரன் இங்கே வந்து இருந்தாப்ல”
“பேரனா ”
“ஆமா சிவராஜ் மாமாவுடைய பெண் கவிதா பிரசவத்துலே இறந்துட்டதால அவங்களை பற்றி எதுவுமே நமக்கு தெரியாம போச்சு… சிவராஜ் மாமா இறந்து போன விஷயமும் அவங்களுக்கு தெரியல சரியான விலாசமும் தெரியலை ”
“சரி இவ்வளவு நாள் விட்டுட்டு இப்ப எப்படி திடீர்னு வந்து நிக்ககிறாங்க அதுவும் நம்மள எப்படி தெரியுமா” என்று தன் சந்தேகத்தை கேட்டாள் நர்மதா
“அவங்க குடும்பத்தில் ஏதோ பிரச்சினை காரணமா மும்பையிலே செட்டில் ஆகிட்டாங்களாம் கவிதா வீட்டுகாரர் தன் மாமாவை பார்த்து மன்னிப்பு கேட்கனும்னு சொல்லிட்டே இருப்பாராம் ஆனா அந்த பையனோட அப்பாவும் பாட்டியும் ஆக்ஸிடன்ட்ல இறந்துட்டாங்க”
“கவிதா படித்த ஸ்கூலில் அவ விலாசத்தை கண்டு பிடித்து விசாரித்தப்ப தான் நம்ம அட்ரஸை கண்டுபிடிக்க ரொம்ப கஷ்டபட்டு இங்கே வந்து இருக்கான்”
ஓ என்று சுவாரஸ்யமின்றி கேட்டு கொண்டாள் நர்மதா
“ஏம்மா அது சிவராஜ் மாமா பேரன் தானா ”
“அந்த பையன் அப்படியே என் அண்ணன் சிவராஜ் ஜாடை கவிதா கல்யாண போட்டோவை கூட காண்பித்தானே பாவம் சொந்த பந்தம் யாரும் இல்லாம தனியா கிடந்து கஷ்டபடுறானா அதான் இன்னிக்கு வீட்டுக்கு வர சொல்லி இருக்கேன் மும்பைல வளர்ந்தாலும் நல்லா தமிழ் பேசுறான் தெரியுமா நல்லா வளர்த்து இருக்காங்க”
தன் தாய்வழி சொந்தத்தை கண்டதும் சரோஜா பாட்டிக்கு சந்தோஷத்தின் உச்சத்தில் இருந்தார் அதை புரிந்ததும் நர்மதா வர போகும் அந்த புதியவனின் பெயரை கூட கேட்டு கொள்ளாமல் விட்டு விட்டார் ஒருவேளை பெயரை கேட்டு இருந்தால் மதிக்கு ஏற்பட போகும் அவமானத்தை தடுத்து இருக்கலாமோ என்னவோ
***************
நர்மதா பாக்கியம் சாந்தினியோடு ஷிவானியும் பேசியபடி சமையல் வேலைகளை கவனிக்க சென்று விட மகிழினி அறையில் சந்தோஷ் வருண் ராகுலோடு படம் பார்க்க சென்று விட
ஆள் இல்லாத தீவில் மாட்டி கொண்டது போல் சரோஜாவிடம் மாட்டி கொண்டு இருந்தால் வெண்மதி
“உன் அம்மா கூட பிறந்தவங்கெல்லாம் யாருமே இல்லையா ”
இருந்தாங்க…
“ஓஆக்ஸிடண்ட்ல தான் உன் அம்மாவோட சேர்ந்து உன் பாட்டி மாமா இறந்துட்டதா நர்மதா சொல்லி இருந்தாலே நான் தான் மறந்துட்டேன்”
எதுவும் பேசாமல் அமைதியாகவே இருந்தால் வெண்மதி
“பெருசா பணம் தான் முக்கியம்னு கெடு கெட்டு ஒரு நல்ல மனுஷன் கிடைச்சும் ஒழுங்கா வாழ துப்பில்லாம பணத்துகாக அவர் மனசை நோகடிச்சுட்டு போனா இப்படி தான் செஞ்ச பாவம் சும்மா விடுமா”
“அப்பத்தா இப்ப எதுக்கு இதெல்லாம் அத்தை காதுல விழுந்திட போகுது” ருத்ரனும் அங்கே தான் லெப்டாபில் வேலை பார்த்து கொண்டு இருந்தான்.
“அவ அம்மா பண்ணினதை தானே சொன்னேன் அப்ப தான் அவ பண்ணினது தப்புன்னு புரியும்”
யாருக்கு புரிய வைக்கிறாங்களாம் எனக்கா புரியாது என்று ஒரு பெருமூச்சு மதியிடம்
தன் மனதை நோகடிக்க தன்னை எள்ளி நகையாட வேண்டுமென்றே பேசுபவர்களை மதி சிறிதும் கண்டு கொள்வதில்லை இது போல பல பேச்சுகளை கேட்டு பழகியவளுக்கு சரோஜாவின் குத்தல் பேச்சு எந்த வித வருத்ததையும் தரவில்லை மும்பையில் அவள் படிக்கும் பள்ளியில் காலேஜில் பேசியதிற்கு சரோஜாவின் பேச்சு எவ்வளவோ தேவலாம்
ஒருவர் மனதை நோகடித்து கலங்க செய்யும் நோக்கில் பேசுபவர்களுக்கு மதி பதிலுக்கு அழுது கோபபடாமல் அவர்கள் கேட்கும் கேள்விக்கு நிதானமாக பதில் அளித்து அவர்கள் முகத்தில் தென்படும் அதிருப்தியை கண்டு சிறு புன்னகையுடன் கடந்து விடுபவள்
“ஆமா பாட்டி நீங்க சொன்னது சரிதான் தப்பு பண்ணி ஒருத்தர் மனதை நொகடிப்பவர்களுக்கு கடவுள் சரியான தண்டனை தான் கொடுத்து இருக்கார் ஆனா என்ன அவங்களுக்கு இன்னும் நல்லா வெச்சு செஞ்சு இருக்கலாம்”
“நீயும் உன் அப்பாவை வேண்டாம்னு தானே போன எப்படியோ என் பொண்ணால உன்னைய என் மருமகன் சேர்த்துகிட்டார் இல்லைன்னா என்ன கஷ்ட பட்டு இருப்பியோ”
என் மருமகன் என்பதை அழுத்தி சொல்லி உன்னைய விட நாங்க தான் முக்கியமான உறவு என்பதை உணர்த்துவது போல் இருந்தது அவர் பேச்சு
“உன் அம்மா இல்லாத ஆறு மாத காலமா நீ யாரோட இருந்த உன் தாய்மாமாவிற்கு ஒரு பையன் இருப்பதா கேள்வி பட்டேனே”
“இருக்கான்” என்றாள்
“என்ன மொட்டையா இருக்கான்னு சொல்ற அந்த பையனோட தான் இவ்வளவு நாள் தங்கி இருந்தியா அதுசரி சேலை போல தான் நூல் நூலை போல தான் சேலை நீயும் உன் அம்மா போல தானா”
திரும்ப ராகேஷை நினைவு படுத்தியதில் வெண்மதி உள்ளுக்குள் பயத்தில் நடுங்கினாலும் ஒரிரு நிமிடங்களில் தன்னை சரி பண்ணி கொண்டாள்
ருத்ரனும் மதியை கூர்ந்து கவனித்து கொண்டே இருந்தவன் அவளின் நிதானமான பேச்சு அவன் கவனத்தை ஈர்த்து இருந்தது ஆனால் மாமா மகனை பற்றி பேசவும் ஏன் பதட்டமடைகிறாள் என அவளை பற்றி தெரிந்து கொள்ள மும்பையில் அவளுக்கு தெரிந்தவர் யாரிடமாவது விசாரிக்க வேண்டும் என நினைத்தவன் போனை எடுத்து கொண்டு அங்கிருந்து சென்றான்.
“என் பேத்தி அப்பா இல்லாத பெண் அவ மனதை வருந்தும்படி நாங்க யாரும் அவளை ஒரு வார்த்தை சொன்னது இல்லை இனிமேலும் அப்படி தான் நீ ஏதோ கொஞ்ச நாள் இருந்துட்டு போறவ ஆன என் பேத்தி இந்த வீட்டுக்கு ராணி போல இந்த வீட்டுக்கு மருமகளாக போறவ”
இதையெல்லாம் ஏன் தன்னிடம் சொல்கிறார் என புரியாமல் இல்லை நாம ஏதோ அவர் பேரனை விரும்புவது போல் தான் எதுக்கு இந்த பில்டப் ஷப்பா முடியல நமக்கும் பாட்டிகளுக்கும் எப்பவுமே ஒற்று போகாது போல
“சேகரிற்கு ஷிவானினா அவ்ளோ பிரியம் நீ அதை பார்த்து எதுவும் சங்கட படாத உனக்கு அப்படி ஒன்னும் பெரிசா பாதிக்காது இருந்தாலும் சொல்றேன் ” என்று வார்த்தையில் விசத்தை தடவி பேசினார் சரோஜா
தன் தந்தையை பற்றி சொன்னதும் மனம் முழுவதும் வெற்றிடமாக இருப்பது போல தோன்றியது பொங்கி வரும் கண்ணீரை உள்ளிழுக்க போராடினாள்.
*****************
“ஏன்டா உன் அக்கா இன்னும் என்ன பண்ணிட்டு இருக்கா”
ஏதோ பேச ஆரம்பித்து வருணின் பாப்கார்னை காலி பண்ணும் திட்டத்துடன் சந்தோஷ் பேசினான்
பாப்கார்னை வாய்குள் அடைத்து கொண்ட கண்ணத்துடன் தன் குண்டு கண்ணை உருட்டி முறைத்தான் வருண்
“இப்ப ஏன்டா என்னை முறைகிற” பாப்காரினிற்குள் கை நுழைத்தபடி கேட்டான்
“நீங்க தானே ப்ராமிஸ் வாங்கினீங்க” பேசும் போது வாய்குள் திணறி கொண்டு இருந்த பாப்கார்ன் சந்தோஷ் முகம் முழுவதிலும் எச்சில் பாப்கார்னை துப்பினான்
மகிழினி ராகுல் அவன் கோலத்தை பார்த்து சிரிக்க ஆரம்பித்தனர்
“அய்யோ அதுக்கு ஏன்டா என்மேல் அபிஷேகம் பண்ற” என்று முகத்தை துடைத்து கொண்டு
“அதை நம்பி இன்னுமாடா பேசாம இருக்க”
“அக்கா பாவம் தெரியுமா எனக்கு அக்கா கூட பேசனும் விளையாடனும்னு ஆசையா இருக்கு… அப்பாவும் அக்கா கிட்ட பேசுறது இல்லை… நான் அக்கா கிட்ட பேசுறேன் மாமா ப்ளீஸ் ப்ராமிஸை வாபஸ் வாங்கிடுங்க” என கேட்டதும் சந்தோஷ் மகிழினிக்கு ஒரு மாதிரி சங்கடமாகி விட்டது
“வருண் நாங்க சும்மா தான் சொன்னோம் அதுக்காக அக்கா கிட்ட பேசாம இருப்பியா என்ன நாங்க மதி கிட்ட பேசுறோமே அது போல நீங்களும் பேசுங்க”
“இல்ல ஷிவானி அக்காவும் மகிழ் அக்காவும் பேசறது இல்ல தெரியுமா
எனக்கும் அக்கா கிட்ட பேசனும்னு ஆசையா இருக்கு…உங்களுக்குத் தெரியுமா அக்கா சூப்பரா வரையராங்க டேன்ஸ் கூட ஆடுறாங்க” என ராகுல் சொன்னதும்
“என்ன மகிழ் இது நீ கூடவா” என்று தங்கையை கடிந்து கொண்டான்
“இல்லண்ணா ஷிவானி”
“அவ ஒரு ஆளுன்னு அவளுகாக ஒருத்தரை ஒதுக்கி வைக்கலாமா என்ன மகிழ் அம்மாக்கு தெரிஞ்சா உன்னைய தான் திட்டுவாங்க வர வர இந்த ஷிவானி அராஜகம் தாங்க முடியல…”
“எதாவது சொன்னா பாக்யம் அத்தை அப்பா இல்லாத பொண்ணை இப்படி கஷ்டபடுத்துறீங்களேன்னு ஆர்பாட்டம் பண்ணிடுது இதுக்கெல்லாம் ஒரே வழி தான் இருக்கு”
“என்ன வழி ” என முவரும் கோரஸாக கேட்டனர்
முவரையும் பார்த்தவன் தோளை குலுக்கி “தெரியல இவ்வளவு நேரம் பேசுனதுல டையர்ட் ஆகிருச்சு வீட்ல வேற தடல்புடலா சமைக்கிறாங்க நான் போய் எனர்ஜி ஏத்திட்டு வந்து யோசித்து சொல்றேன்” என்றவனை மூவரும் தூ என காரி உமிழாத குறையாக முறைக்கவும்
“நான் போய் வொய்ட் மூனை கூட்டிட்டு வர்றேன் நாம மதியோட நல்லா ஃபன் பண்றோம் ஓகே” என்று சென்றான்
“ஹேய் வொய்ட் மூன் நீ இந்த சவுண்ட் சரோ கூட என்ன பண்ணிட்டு இருக்க வா வா”என்று மதி கையை பிடித்து எழுப்பினான் சந்தோஷ்
“டேய் எங்கடா அந்த பொண்ணை இழுத்துட்டு போற”
“சரோ டார்லிங் உனக்கு போரடித்ததுனா வெட்டியா வெடிக்கை பார்த்துட்டு இருக்க இந்த ஜிம் பாடி கிட்ட உன் ரம்பத்தை போடு”என்று போன் அழைப்பை துண்டித்து விட்டு வந்துகொண்டு இருந்த ருத்ரனை கைகாட்டினான்
அந்நேரம் சரியாக வாசலில் ராகேஷ் நின்று இருந்தை பார்த்த மதி அதிர்ந்து பயத்தில் சிலையாக நின்றாள்.