அந்தப் பெரிய மண்டபத்தில் உறவினர்கள் ,நண்பர்கள் சுற்றத்தில் இருப்பவர்கள் என அனைவரும் குழுமி இருந்தனர்…
அங்கு இருப்பவர்கள் அனைவரது முகத்திலும் மகிழ்ச்சி தாண்டவம் ஆடியது…
அலங்காரம் பூக்களால் ஜோராய் இருந்தது …
மேடையில் இருந்தவர்களிடம் முகம் மகிழ்ச்சியில் திளைத்திருந்தது… அங்கு தன் அன்னையின் கரத்தில் விக்ரம் மற்றும் நறுமுகையின் தவக்குதல்வன் வீற்றிருந்தான்…
முப்பது நாட்கள் ஆகிவிட்டது என்று அந்த இளவரசனுக்கு பெயர் சூட்டும் விழா தான் நடந்து கொண்டிருக்கிறது…
வளைகாப்பைத் தான் நறுமுகையின் உடல்நிலையின் காரணத்தால் எளிதாக கொண்டாடியிருந்தனர்..
இப்போது பெயர் சூட்டும் விழாவை ஊரே பார்க்கும் வண்ணம் சிறப்பாக கொண்டாட முடிவு செய்திருந்ததால் தான் இத்தகைய ஏற்பாட்டை இரு வீட்டு பெரியவர்களும் ஏற்பாடு செய்திருந்தனர் …
தனது கடைக்கு என்று பார்த்து பார்த்து நகைகளை தேர்வு செய்யும் தேசிங்கன் தற்போது தங்களது பேரனுக்கு மொத்த கடையையும் இறக்கி விட மாட்டாரா என்ன..!
ஆண் குழந்தை என்றால் பொட்டு தங்கம் தான் அணிய வேண்டும் என இருக்கிறதா..!
இதோ மேடையில் ஏகப்பட்ட பெட்டிகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தது… தங்கம் வைரம் என பேரனுக்காக பார்த்து பார்த்து வாங்கி வந்திருந்தார்கள் தேசிங்கனும் சுகன்யாவும்…
அவர் மட்டுமா வளவனும் தங்கள் பங்குக்கு தங்கள் வீட்டு பேரனுக்காக ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து வாங்கியிருந்தார்…
ஆக இருவீட்டு பெரியவர்களாலும் அந்த மேடையில் மனிதர்களின் அளவைவிட நகைகளின் அளவு தான் அதிகமாக இருந்தது …
சுகன்யாவின் மடியில் குழந்தை தவழ்ந்து இருக்க…அவருடன் சுரதை வித்யா என பெரியவர்களும் அமர்ந்து குழந்தைக்காக வாங்கிய இருந்ததை பார்த்து பார்த்து ஒவ்வொரு நகைகளையும் அவனை கொஞ்சிக் கொண்டு அழகாய் பூட்டிவிட்டனர்…
பார்ப்பதற்கு இளவரசன் போல இருந்தான் சின்னவன்…
பேரனை நெட்டுமுறித்துக் கொண்டது சுகன்யா அவனைச் செல்லம் கொஞ்சி காதில் முதலில் தங்களது குலதெய்வப் பெயரை மூன்று முறை கூறியவர் பின் பேரனுக்காக மகனும் மருமகளும் தேர்ந்தெடுத்த பெயரை கூறினார்,
” ஆதித்யன்…
ஆதித்யன்…
ஆதித்யன்….”
சுரதையும் வளவனும் வாங்கி அவர்களும் அதேபோல குலதெய்வ பெயரைக் கூறி பேரனது பெயரை மூன்று முறை கூறினர் ..
அதன் பின் நறுமுகையும் ஆசையாய் மகனை வாங்கி நறுமுகையும் விக்ரமும் ஒன்று சேர மகனின் காதில் பெயர் கூறி மகிழ்ந்தனர் …
பிறகு பாரியும் வித்யா ராகிணி ரோகிணியும் குட்டி இளவரசனது காதில் பெயர் சூட்டி அகமகிழ்ந்து போயினர்…
பெற்றவர்கள் இருவரும் ஒன்றாய் சேர்ந்து குழந்தையை அவனுக்காக செய்த தேக்கு மரத் தொட்டிலில் பாந்தமாய் படுக்க வைத்திட.. ராகினியும் ரோகிணியும் தங்களது குட்டி இளவரசனை மெல்ல ஆட்டி மகிழ்ந்தனர்…
ஆதித்யனால் அவர்கள் வீட்டு மகிழ்ச்சி மீண்டும் மீட்டெடுக்கப்பட்டது…இரு குடும்பத்தாரும் பேரனை தாங்கி இருந்தனர்…
விழாவிற்கு கவிதாவும் அவளது கணவனோடு வந்து இருந்தாள்…அவளுக்கும் ஒரு மகன்…நறுமுகை மற்றும் விக்ரமின் சந்தோஷம் கொண்ட முகத்தை கண்டதும் அவளுக்கு நிறைவாக இருந்தது…
குழந்தைக்கான பரிசினை தந்து தோழியிடம் சிரித்து பேசி விட்டே அங்கிருந்து சென்று இருந்தாள் கவிதா…
விக்ரம் முன்பு போல் கம்பீரமாய் தனது பணிக்கு செல்ல…குழுப் கைக்கு ஆறு மாதம் முடியும் வரை வீட்டில் இருந்த நறுமுகை பின் அவளும் அவ்வப்போது தங்களது நகைக்கடைக்கு செல்ல ஆரம்பித்தாள்…
விக்ரம் மற்றும் நறுமுகையின் வாழ்க்கை தெளிந்த நீரோடை போல சென்றது…மாதங்கள் கடந்தோட ஆதித்யனுக்கு முதலாம் வருட பிறந்த நாளும் வந்தது…அதையும் சீரும் சிறப்புமாக கொண்டாடி இருந்தனர்…
ஒரு நாள் மாலை வீட்டின் பால்கனியில் நறுமுகை அமர்ந்து புத்தகம் ஒன்றை படித்துக்கொண்டிருந்தாள்…
விக்ரம் அப்போது தான் வேலை விட்டு உள்ளே நுழைந்தான்…சின்னவன் சுகன்யாவிடம் விளையாடி கொண்டிருந்தான்…
நேரம் போவதற்காக புத்தகத்தை கையில் எடுத்து அமர்ந்து விட்டாள் நறுமுகை…
அறைக்குள் நுழைந்த பின்னர் தான் விக்ரமின் முகமே இயல்பாகியது…அவனது முகம் எப்போதும் போல அந்த ‘சிறுமூஞ்சி’ பாவனையிலேயே தான் இருக்கிறது. …
தன்னவள் தனியாக அமர்ந்து இருப்பதை பார்த்து விட்டு அவளுக்கு அருகில் வந்து, அவள் கையில் இருந்த புத்தகத்தை எட்டி பார்த்தான்.…
அவன் அவளைப் பார்த்து,
“இன்னும் இந்தத் தப்புதான் பண்றியா?” என வேண்டும் என்றே ஒரு பழைய ஆசிரியரின் கண்டிப்போடு கேட்டிட… அந்தச் சத்தம் கேட்டதும் அவள் திடுக்கிட்டு நிமிர்ந்து பார்த்தாள்…
அவனோ,
“கல்யாணத்துக்கு முன்னாடி ப்ராஜெக்ட்ல நீ தப்பு பண்ணும்போது நான் திட்டுவேன்… அப்போ உன் கண்ணுல பயம் இருக்கும்…இப்பலாம் புருஷன் மேல் பயமே இல்லை போலயே….” என உதடு பிதுக்கி கூறியதும் அவனை விழிகள் உயர்த்தி முறைத்தவள்,
“ம்ம் நீங்க பார்த்த அந்த திட்டும் பார்வையில தான் என் இதயம் உங்க கிட்ட ஒட்டிகிச்சு…”என்றதும் கலகலவென சிரித்தான் விக்ரம்…
நறுமுகையோ அவனது வயிற்றில் சாய்ந்து சிரிக்க
தன்னவளது கன்னத்தை பாந்தமாய் பிடித்து காதலாய் பார்த்து சிரித்தான் விக்ரம்…
அந்த அறையில் இருந்த மௌனம், இருவரின் இதயத்துடிப்புகளால் நிரம்புகிறது.…
கல்யாணத்திற்கு முன்னால் இருந்த அந்த ‘சீனியர்-ஜீனியர்’ இடைவெளி மறைந்து, இப்போது இரண்டு இதயங்களும் ஒன்றாக ஒட்டிக்கொண்டன…
சிதறிப் போயிருந்த அவர்களது வாழ்வின் ஒவ்வொரு துண்டுகளும் ஒருவர் மீது மற்றவர் கொண்ட காதலால் இப்போது ஒன்றாக ஒட்டிக்கொண்டு ஒரு முழுமையான இதயமாய் துடிக்கத் தொடங்கிவிட்டது.…
இதே போல என்றும் அவர்கள் மகிழ்ச்சியுடன் வாழட்டும்…
முற்றும்…
நன்றி…
கதையினை படித்து ஆரம்பம் முதல் இறுதி வரை ஊக்கமளித்த அனைவருக்கும் நன்றி.…