அத்தியாயம்-1
அந்த அரங்கமே சத்தத்தினால் அதிர்ந்து கொண்டு இருந்தது அரங்கத்தில் இருவர் குத்து சண்டை போட்டு கொண்டு இருந்தார்கள். அந்த அரங்கத்தில் பாக்ஸிங் போட்டி நடந்து கொண்டு இருந்தது. பெண்கள் ஆண்கள் என்று இரு தரப்பிலும் ஆதரவாளர்கள் இருந்தாலும் அங்கே பெரும்பாலும் பெண்கள் ஒரே பெயரை தான் சொல்லி கத்தி கொண்டு இருந்தார்கள் அது தான் மித்ரன். அவனுடன் மோதிக்கொண்டு இருந்தவன் பெயர் வம்சி அவன் பெயரையும் சிலர் சொல்லி கத்திக்கொண்டு இருந்தார்கள் . ஆனால் பெண்கள் கூட்டம் மித்ரனை தான் ரசித்து கொண்டு இருந்தது. இதுவரை அவன் விளையாடியதில் அனைத்து போட்டிகளிலும் வெற்றி கண்டவன். அவன் நாக் அவுட் கிக்கிற்காக ஒரு தனி ரசிகர் பட்டாளமே இருந்தது. இருவரும் மாறி மாறி குத்து சண்டை போட்டு கொண்டு இருந்தார்கள்.
இதுவரை மூன்று சுற்றுகள் முடிவடைந்து இருந்தது. அதில் மித்ரன் தான் முன் நிலை வகுத்தான் என்றாலும் அவன் பொதுவாக ஒரு ஸ்டைல் வைத்து இருந்தான். அவன் எதிராளியை எப்போதும் நாக் அவுட் செய்துதான் வெற்றி பெறுவான். அதற்காகத்தான் இந்த பெண்கள் கூட்டமும் “மித்ரன் நாக் அவுட் மித்ரம் நாக் அவுட்” என்று சத்தம் போட்டு கொண்டு இருந்தார்கள். அவனும் சுற்றி இருப்பவர்களை பார்த்துக்கொண்டே எதிரில் நின்ற வம்சியை பார்த்தவன் சிரித்துவிட்டு முதலில் மெதுவாக ஆரம்பித்த சண்டை அவன் கடைசியாக அடித்த அடியில் வம்சி கீழே விழுந்து விட்டான். நடுவர் ஒன்று இரண்டு என்று சொல்லி என்ன ஆரம்பித்தார். சுற்றி இருந்தவர்களும் கீழே விழுந்து கிடந்த வம்சியை தான் பார்த்து கொண்டு இருந்தார்கள். வம்சி எழுந்திருந்து வரவில்லை “டென்” என்று சொன்னதும் எல்லோரும் மித்ரன் என்று சத்தம் போட ஆரம்பித்தார்கள். நடுவரும் மித்ரன் கையை உயர்த்தி அவன் வெற்றி பெற்றதாக அறிவித்தார்.
அவனுக்கு பரிசு கோப்பையும் வழங்கப்பட்டது. அவனும் மகிழ்ச்சியுடன் அதை பெற்றுக்கொண்டு மேடையில் இருந்து கீழே இறங்கவும் பெண்கள் கூட்டம் “மித்ரன் மித்ரன்” என்று கத்திகொண்டே ஆட்டோகிராப் கேட்டு அவனை மொய்க்க தொடங்கினார்கள். அவனும் எல்லோருக்கும் கையெழுத்து போட்டு கொடுத்து கொண்டு இருக்க அங்கே வந்தான் மித்ரனின் ஆருயிர் நண்பன் இனியன். “டேய் பிளைட்க்கு டைம் ஆகிடுச்சு வாடா” என்று அவனை இழுத்து கொண்டு வந்து காரில் ஏற்றிக்கொண்டு புறப்பட்டு இருந்தான். “டேய் மித்ரா என்ன டா இன்னைக்கும் எப்போதும் போல் உன் மேல இவ்வளவு லிப்ஸ்டிக் மார்க்ஸ் பாரேன்! உனக்கு எங்கயோ மச்சம் இருக்குடா” என்று சொல்லி சலித்து கொண்டான். “இதுல என்ன இருக்கு நீ வேணும்னா பாக்ஸிங் பண்ணு இதெல்லாம் கிடைக்கும்” என்று சொல்லிக்கொண்டே திசுவை வைத்து துடைத்துக்கொண்டே வந்தான். “ரொம்ப பண்ணாத கல்யாணத்துக்கு அப்புறம் தான் உனக்கு இருக்கு” என்று சொன்னான். “எனக்கு கல்யாணமே வேண்டாம். நான் கல்யாணம் செய்துக்க போறது இல்லை” என்று சொன்னான் மித்ரன். “இப்படி சொல்றவன் தான் டா முதல்ல கல்யாணம் செய்வான்” என்றான் இனியன். “சரி டா அதெல்லாம் அப்புறம் பார்க்கலாம் முதல்ல ஹோட்டல் ரூமுக்கு போய் குளிக்கனும்டா” என்று சொல்லி கொண்டே தலையில் கைவைத்து கண்மூடி இருந்தான். அவன் இது போல் போட்டி நேரங்களில் சரியாக தூக்கம் மாட்டான். அவன் வெற்றி பெற்றால் மட்டுமே அவனுக்கு நிம்மதியாக தூக்கம் வரும் அப்படி இருக்க அவன் ஹோட்டல் அறைக்குள் சென்றதும் சூடு நீரில் தன் ஆக்ரோஷத்தை குறைத்து கொண்டு இருந்தான். ஆம் அவன் மனம் எப்போது எரியும் கனல் போல் தான் இருக்கும். அதை தனித்து கொள்வதற்காக மட்டுமே இந்த கிக் பாக்ஸிஙகை அவன் கற்று கொண்டது. அது இப்போது அவன் கோவத்திற்கு வடிகாலாகி போனது.
அவர்கள் பிளைட்டில் முதல் வகுப்பு டிக்கெட் எடுத்து இருந்ததால் அவன் தூங்கி கொண்டே வந்தான். அதிகாலை மூன்று மணிக்கு வீட்டிற்கு வந்தவன் அவன் மெத்தையில் விழுந்து தூங்கி போனான். அப்படி இருந்தும் காலையில் ஓய்வு எடுக்காமல் காலை ஆறு மணிக்கு எழுந்து ஜாகிங் ஓடி கொண்டு இருந்தான். அப்போது அங்கே “குட் மார்னிங் மித்ரன்” என்று சொல்லி கொண்டே வந்தார் அவன் தந்தை ரகுநந்தன். “குட் மார்னிங் டாட் கம் வித் மீ டாட்” என்று சொல்லி கொண்டே ஓட ஆரம்பித்தான். அவரும் அவனுடன் ஓடிக்கொண்டே “எப்போ வந்த மித்ரன்?” என்று கேட்டார். “டாட் மூணு மணிக்கு வந்தேன்” என்று சொன்னான். “டேய் மூணு மணிக்கு வந்துட்டு இப்போ ஜாகிங் போயிட்டு இருக்க கொஞ்சம் ரெஸ்ட் எடுக்கலாம்ல!” என்று கேட்டார். “டாட் இதெல்லாம் இப்படி ஓட வேண்டிய வயசு டாட் உங்க வயசுல தான் ரெஸ்ட் எடுக்கணும்” என்று சொன்னான். “நீ சொன்னாலும் கேட்க போறது இல்லை சரி வாட் இஸ் யுவர் பிளான் டுடே” என்று கேட்டார். “டாட் இன்னைக்கு அவார்ட் பங்ஷன் போகணும் இன்னும் கொஞ்ச நேரத்தில் அகிலன் வருவான் பிளைட் பதினோரு மணிக்கு பங்ஷன் ஈவினிங்” என்று சொன்னான். “என்ன இந்த முறையும் உங்களுக்கு தான் அவார்டா?” என்று கேட்டார். “டோன்ட் நோ டாட் பட் திஸ் வில் பி அவர் ஹாட்ரிக் ஐ திங்க்” என்று சொன்னான். “ஓகே ஆல் தி பெஸ்ட் கண்ணா” என்று சொல்லிவிட்டு அவர் கிளம்பிவிட்டார். அவன் காலை எட்டு மணிக்கு குளித்து விட்டு கோட் சூட்டுடன் வந்து அமர்ந்து சாப்பிட்டு கொண்டு இருந்த நேரம் அங்கே வந்தான் அகிலன். “குட் மார்னிங் சார்” என்றான். “குட் மார்னிங் அகிலன் வாட் இஸ் டுடேஸ் பிளான்” என்று கேட்டான். “சார் அவார்ட் பங்ஷன் போகணும் சார்” என்றான். “நாட் தட் அகிலன் ஆபீஸ் ஒர்க் பத்தி கேட்டேன் நான்” என்றான். “சார் இன்னைக்கு ட்ரைனீஸ் ட்ரைனிங் முடிச்சு நம்ம ப்ரோக்ராம்மிங் டீமுக்கு வராங்க சார்” என்று சொன்னான். “எத்தனை ட்ரைனீஸ் இன்னைக்கு ப்ராஜெக்ட்க்கு வராங்க?” என்று கேட்டான். “டுவெண்ட்டி மெம்பெர்ஸ் சார்” என்றான். “ஓகே கம் லெட் அஸ் கோ” என்று சொல்லிக்கொண்டே தன் பி எம் டபுள்யூ காரில் ஏறி கொண்டான் அகிலனும் அவனுடன் தான் வந்தான்.
மித்ரன் பின் சீட்டில் அமர்ந்து இருக்க அகிலன் முன் சீட்டில் அமர்ந்து இருந்தான். “நம்ம புது ப்ரொஜெக்ட்ல ட்ரைனீஸ்ல பெஸ்ட் பெற்பார்மர் எல்லோரையும் போடு நாளைக்கு நான் வந்து அந்த டீமை மீட் பண்ணி ஒர்க் அசைன் பண்றேன்” என்று சொன்னான் மித்ரன். “ஓகே சார்” என்று சொன்னான் அகிலன். அவர்கள் மாலை மூன்று மணி போல் டெல்லியை அடைந்து இருந்தார்கள். அவர்கள் ஹோட்டல் ரூமிற்க்கு சென்று தயார் ஆகி அந்த பங்ஷன் நடக்கும் அரங்கிற்கு வந்து சேர்ந்தார்கள். அங்கே இந்தியாவில் முன்னணி சாப்ட்வேர் கம்பெனியை சேர்ந்தவர்கள் வந்து இருந்தார்கள். மித்ரன் பெரிதாக யாரிடமும் நட்பு பாராட்டுவது இல்லை அவனுக்கு தனித்து நின்று அனைத்தயும் சாதித்துதான் பழக்கம். இன்று அதே போல் தான் இந்தியாவில் சிறந்த சாப்ட்வேர் கம்பனிக்கான அவார்ட் கொடுக்கும் பங்ஷன் தான் நடந்து கொண்டு இருந்தது. கடந்த இரு வருடங்களாக மித்ரனின் எம் ஆர் வி டெக்னாலஜிஸ் தான் இந்த அவார்ட்டை வாங்கி இருந்தது. இந்த வருடமும் அவன் அவார்ட் வாங்கினால் ஹாட்ரிக் வெற்றி அவனுக்கு. அவன் இதற்காக கடுமையாக உழைத்து இருந்தான் தான் ஆனால் அவன் இதை விட உலக அளவில் தன் கம்பெனியை கொண்டு செல்ல வேண்டும் என்று தான் உழைத்து கொண்டு இருக்கின்றான். பங்ஷன் ஆரம்பமானது இப்போது யாருக்கு அவார்ட் என்று அறிவிக்கும் நேரம் வந்தது.
“திஸ் இயர் அவார்ட் கோஸ் டு எம் ஆர் வி டெக்னாலஜிஸ் திஸ் விக்டரி இஸ் ஹாட்ரிக் கிவ் தெம் அ பிக் ஆஃப்லாஸ் ஐ வெல்கம் மிஸ்டர் மித்ரன் எம் டி ஆப் எம் ஆர் வி டெக்னாலஜிஸ் டு ரிசீவ் தி அவார்ட்” என்று அழைக்க ஆறடி உயரத்தில் கருப்பு நிற கோட் சூட் அணிந்து கம்பீரமாக மேடையை அடைத்தவனை பல கண்கள் பொறாமையுடன் பார்த்தது என்றால், சில கண்கள் வன்மமாக பார்த்தது. அவன் எல்லோரையும் பார்த்து லேசான சிரிப்புடன் மேடையை நோக்கி சென்றான். அவனுக்கு அவார்ட் கொடுத்துவிட்டு பேசவும் சொல்ல அவனும் மைக்கை பிடித்தவன் “குட் ஈவினிங் ஆல் திஸ் இஸ் மை ஹாட்ரிக் அவார்ட் நெஸ்ட் ஐ வாண்ட் டு கோ போர் தி இன்டர்நேஷனல் மார்க்கெட் ஐ திங்க் வி டிசேர்வ் திஸ் அவார்ட் அண்ட் தேங்க்ஸ் பார் திஸ் ஆபர்சுனிட்டி” என்று மேடையை விட்டு கீழே இறங்கி வந்தான். அவனை இரண்டு கண்கள் அவனை விழுங்கி விடுவது போல் பின் தொடர்ந்தது. அது வேறு யாரும் இல்லை சாக்க்ஷி அவன் பெரிய தொழில் அதிபரின் வாரிசு இப்போது ஒரு மூன்று வருடங்களாக தான் அவள் சாப்ட்வேர் இண்டஸ்ட்ரியில் கால் பதித்து இருக்கின்றாள். அவளுக்கு மித்ரனை அடைய வேண்டும் என்று ஆசை. அவனுடைய அழகு, திமிர், அவன் பாக்ஸிங் என்று எல்லாவற்றிற்கும் அவள் மயங்கி தான் இருந்தாள்.
அவள் அவனிடம் பேசலாம் என்று நினைக்க அவள் தந்தை சக்கரவர்த்தி இவனை பார்ட்டியில் பார்த்துக்கலாம் என்று நினைத்து கொண்டவள் அவனை கண்களால் பருகிக்கொண்டே அமர்ந்து இருந்தாள். ஆனால் மித்ரன் அங்கே இருந்த யாருடனும் பேசாமல் அகிலனுடன் அமைதியாக இருந்தான். அந்த பங்ஷன் முடிந்ததும் இரவு பார்ட்டிக்கு ஏற்பாடு செய்ய பட்டு இருந்தது. அவனும் ஹோட்டலுக்கு சென்று குளித்து அகிலனுடன் அந்த ஐந்து நட்சத்திர ஹோட்டலுக்கு சென்றான். அவனை பார்த்த சிலர் வந்து அவன் அவார்ட் வாங்கியதற்கான அவனை பாராட்டி விட்டு சென்றார்கள். அவன்அ வர்களை எல்லாம் கடந்து ஒரு டேப்ளேலில் அகிலனுடன் அமர்ந்தான். அகிலனை பார்த்த மித்ரன் “கோ அண்ட் ஹவ் சம் ஃபன் அகிலன்” என்றான். அவனும் “ஓகே சார் ஜஸ்ட் அ ட்ரின்க் ஐ வில் பி பேக்” என்று சொல்லிவிட்டு அவன் செல்ல, மித்ரன் அமைதியாக அங்கே மியூசிக்கிற்கு ஏற்றவாறு ஆடி கொண்டு இருந்தவர்களை பார்த்தான். அவன் குடிப்பான் தான் எப்போதாவது ஆனால் இன்று அவனுக்கு குடிக்கும் மனநிலை இல்லை அதனால் அமைதியாக அமர்ந்து இருந்தான்.
அப்போது மித்ரனிடம் பேச வந்தாள் சாக்க்ஷி “ஹாய் மித்ரன்” என்று சொல்லிக்கொண்டே அவன் அருகில் இருந்த இருக்கையில் அமர்ந்தாள். அவன் அவளை பாக்கவே இல்லை மறுபடியும் “ஹாய் மித்ரன்” என்றாள். “ஹாய் மிஸ்….” என்று நிறுத்த “ஐ அம் சாக்க்ஷி சக்ரவர்த்தி இண்டஸ்ட்ரீஸ் எம் டி” என்று தன்னை அறிமுகம் செய்து கொண்டாள். அவனும் “ஹாய் சாக்க்ஷி” என்று சொன்னான். “மித்ரம் கங்கிராட்ஸ்” என்றாள் கையை நீட்டி அவனும் கையை குலுக்கி “தேங்க்ஸ்” என்றான். அவன் கையை பற்றியவள் “டூ யு ஹவ் எனி பிளான் டுடே நைட்?” என்று கேட்டாள். அவன் அவளை பார்த்துக்கொண்டே “நோ” என்று மட்டும் சொன்னான். “சோ லெட் வி கோ போர் அ டேட்” என்று கேட்டாள். “நோ சாரி ஐ அம் லீவிங்” என்று சொல்லி எழுந்து கொண்டான் மித்ரன். அவள் அவன் கையை பற்றி அவனை மயக்கும் கண்களால் பார்த்து கொண்டே “லெட் வி டான்ஸ்” என்று சொல்ல அவன் பார்வை கோவமாக மாறியது அவன் அவள் கையை பார்த்தான். அவளும் கையை எடுத்து கொள்ள அவன் அகிலனை தேடி சென்றான். “கம் அகிலன் லெட் வி கோ” என்று சொல்லி கொண்டே செல்ல அகிலன் கையில் இருந்த சரக்கை அவசரமாக குடித்தவன். “சரக்கை கூட நிம்மதியா குடிக்க விட மாற்றார்” என்று புலம்பிக்கொண்டே மித்ரனை பின் தொடர்ந்து சென்றான். அவர்கள் அன்று இரவே பயணித்து சென்னை வந்து இருந்தார்கள்.
தொடரும்…………………………………………………………