அத்தியாயம் 2
சென்னை நகரின் மையப் பகுதியில் கம்பீரமாக இருந்தது விஷ்வா பார்மசியூட்டிகல் தலைமையகம்..
அந்த இருபது மாடிக் கட்டிடம், காலை வேலையில் பரபரப்பாக, மிகவும் சுறுசுறுப்பாக செயல்பட்டுக் கொண்டிருந்தது…
அதற்குக் காரணம் ராகவன்..
புதிய சிஇஓ வாக பதவி ஏற்றுக் கொண்டிருந்தவன் தான்..
இதற்கு முன் சிஇஓ வாக இருந்தவர் விஸ்வநாதன்..
அவருடைய வயதுக்கு ஏற்ப கண்டிப்பானவராக இருந்தாலும் ஒரு சில நேரங்களில் ஊழியர்களின் நிலையைப் புரிந்து கொண்டு சில இடங்களில் இளக்கம் காட்டுவார்…
எங்கு சிரிக்க வேண்டும் எங்கு ஆட்களை தட்டி வைக்க வேண்டும் என்று தெரிந்து நடந்து கொள்வார்..
ஆனால் விஸ்வநாதன் இறப்புக்குப் பின், இறப்பு என்று சொல்வதை விட, யாரோ அவரை திட்டமிட்டுக் கொன்று இருந்தனர்…
சரியாக ஒரு மாதத்திற்கு முன், இதே ஆபிஸில், அவருடைய அறையிலேயே மர்மமாக இறந்து கிடந்தார்…
அவருக்கு தொழில் எதிரிகள் இருப்பதால், அதை யார் செய்தார்கள் என்று அவனால் கணிக்க முடியவில்லை…
போலிஸில் அந்த கேஸை திரும்ப பெற்றுக் கொண்டு, தனக்குத் தெரிந்த போலீஸ் நண்பர் மூலம், தனியார் டிடெக்டிவ் அலுவலகம் மூலம் அவன் தேடிக் கொண்டு இருக்கிறான்..
அதற்க்கும் ஒரு காரணம் உண்டு..
கொலை செய்தவர்களை இயல்பாக நடமாட விட்டால், எளிதாக பிடித்துக் கொள்ளலாம் என்று அவன் மனம் கணக்குப் போட அதை செயல் படுத்தினான்..
விஸ்வநாதன் இருக்கும் வரை ராகவை இந்த ஃபார்மா நிறுவனத்திற்குள் அனுமதிக்கவில்லை…
ஏனென்றால், அவருக்குத் தெரியும், இந்த தொழிலில் எந்த அளவுக்கு போட்டி இருக்கிறதோ , அதே அளவு ஆபத்தும் உள்ளது என்று!
எப்பொழுது என்ன வேண்டுமானாலும் நடக்கும்?
மகனின், முன் கோபமும், அவசரமாக எடுக்கும் முடிவுகளும், அவனுக்கு ஆபத்தாக முடியும் என்று !
தன்னால் முடிந்தவரை மகனின் தலையீடு இல்லாமல் பார்த்துக் கொண்டவர் தான்..
ஆனால்! இன்று நிலைமையே வேறு ஆகிப்போனது தான், விதி செய்த சதியோ!
அவர் மறைவுக்குப் பின் , தன் மகன் பொறுப்பு ஏற்க்கும் நிலை வரும் என்று; அந்த பெரிய மனிதருக்கு முன்கூட்டியே தோன்றி இருந்தால்? வேறு யோசித்து இருப்பாரோ! என்னவோ !
இந்நேரம் அவர் இருந்திருக்கக் கூடுமோ என்று பல வித யூகங்களுக்கு விடையளிகக்காமல் அவர் போய்விட்டார் என்று வருத்தப் பட மட்டுமே முடிந்தது…
ராகவன் தலைமைப் பொறுப்பை ஏற்றுக் கொண்ட பின்!
ராகவன் இருக்கிறானோ இல்லையோ அவன் பெயரைக் கேட்ட மாத்திரம் வேலை கிடுகிடுவென நடக்கும் ..
இல்லை இல்லை நடந்தாக வேண்டும்.. சிறு தவறு என்றாலும் வயது வித்தியாசம் பார்க்காமல் முகத்திலேயே அந்த கோப்புகள் வந்து விழும்…
ராகவன், அவனுக்கு சிரிக்கத் தெரியுமோ தெரியாதோ என்று தோன்ற வைக்கும் அளவுக்கு கடுப்பான முகம்..
கம்பீரம் குறையாத மிடுக்கான நடை, எந்த வயதினரும், அவன் கண்ணை நேருக்கு நேர் பார்த்து பேச தயங்குவார்கள்..
ஊசி போல துளைத்து எடுக்கும் பார்வை..
அந்தப் பார்வையிலேயே பேச வந்தவருக்கு நடுக்கம் ஏற்படும்..
அவன் தனியாக MVN லாஜிஸ்டிக்ஸ் நடத்திக் கொண்டு இருக்கிறான்…
அவன் தன் அறையில், மேஜையில் அமர்ந்து இருந்தான்..
முகம், செந்தனலாக மாறி இருந்தது…
நெற்றியில் புடைத்திருந்த நரம்புகள்!அவன் கோபத்தின் அளவைக் காட்டியது..
அவன்க்கு எதிரே நின்று இருந்த மேலாளர், அவன் என்ன சொல்வானோ! என்று பயத்தில் இருந்தார்…
“லண்டன்க்கு எக்ஸ்போர்ட் ஆகுற கூட்ஸ், ஏன் ஹோல்ட் பண்ணி வச்சு இருக்காங்க?”
“ சார், .. சார் அது அ…அது வ.. வந்து கஸ்டம்ஸ் க்ளியரன்ஸ் ஆக லேட் ஆகிடுச்சு சார்” என்றார் அவர்…
“ வாட் ! கொஞ்சம் லேட் ஆஹ்?
அது வரைக்கும் என்ன **** இருந்தீங்களா?” என்றான் காட்டமாக…
“அடுத்த ஃப்ளைட்டுல அனுப்பனும் சார் “என்றார் அவர்..
“எவ்ளோ முக்கிய ஆர்டர் அது!”
“ தே ஆர் அவர் இம்பார்ட்டண்ட் க்ளையண்ட்“ என்று வாய்க்கு வந்த வார்த்தைகளைப் போட்டு திட்டி அவரை ஒரு வழி ஆக்கிவிட்டு இருந்தான்…
அங்கே அந்தப் பிரச்சினையை முடித்து விட்டு தந்தையுடைய ஃபார்மா கம்பெனிக்கு வந்தான்…
“அவன் அலுவலகத்தில் காட்டிய கடுமையை விட இங்கு இன்னும் அதிகமாக கோபத்தை வெளிப்படுத்தினான்”..
“ ஏனென்றால்! இங்கு எதிரிகள் எந்த ரூபத்திலும் இருக்கலாம் ? என்று அவனுடைய போலீஸ் நண்பன் மூலம் சில தகவல்களை அறிந்து கொண்டான்”..
“ இங்கே யாரையும் நம்பக் கூடாது என்று மனதிற்குள் ஆயிரம் முறை கூறிக்கொண்டே இருந்தான்”..
“தந்தையின் நிலைமை தனக்கும் வரக்கூடாது” இனி அவன் தந்தைக்குப் பிறகு அவன் குடும்பத்திற்கு அவன் தானே
அனைத்தும்” என்ற நிலையில் தான் அவன் இருக்கிறான்..
யாரையும் பார்க்காது தன் அறைக்கு வந்தான் ராகவன்..
அவன் மேஜையில் இருந்த ஃபைல்களைப் பார்த்தவன், இன்டர்காம் மூலம் அழைக்க!
அங்கே பதட்டமாக வந்து நின்றாள் நிலா !
“ சார் , ! என்றாள்” அவள் ..
ராகவன் தன் கையில் இருந்த கோப்பை மேஜை மீது வீசினான். ‘டக்’ என்ற சத்தத்துடன் கீழே விழுந்தது…
“வாட் த ஹெல் இன் திஸ் நிலா?”
What the hell is this, Nila?” ராகவனின் குரலில் அதிகாரமும், கட்டுப்பாட்டை மீறிய கோபமும் கொப்பளித்தன.
அவனுக்கு எதிரே நின்றுகொண்டிருந்தாள் நிலா. மிகச் சாதாரணமான ஒரு காட்டன் புடவை, நேர்த்தியாக வாரப்பட்ட தலைமுடி.
முகத்தில் அமைதியை வரவழைக்க அவள் முயன்றாலும், ராகவனின் இந்த அதிரடி அவளுள் ஒரு மெல்லிய அதிர்வை ஏற்படுத்தியிருந்தது…
அது அடுத்த வாரத்தோட போர்டு மீட்டிங் ரிப்போர்ட், சார்,” நிலா தன் குரலை முடிந்தவரை நிதானமாக வைத்துக் கொண்டு பதிலளித்தாள்.
“ரிப்போர்ட்டா? என் பர்மிஷன் இல்லாம, நான் இன்னும் அப்ரூவ் பண்ணாம டேட்டாவை நீ எப்படி ரிப்போர்ட்டா மாத்தலாம்?”
ராகவன் நாற்காலியைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு ஆவேசமாக எழுந்து நின்றான். மேஜையைச் சுற்றி வந்து அவளுக்கு மிக அருகில் வந்து நின்றான்.
அவனது மூச்சுக்காற்று அவளது முகத்தில் படும் அளவுக்கு நெருக்கம்.
அவனது கூர்மையான கண்கள் அவளது முகத்தில் இருக்கும் ஒவ்வொரு தசையின் அசைவையும், கண்களின் இமைப்பைக் கூட விடாமல் அக்குவேறாக ஆணிவேறாக ஆராய்ந்தன.
“இந்த கம்பெனியோட சிஇஓ நான்!”
“என் அப்பாவோட மரணத்துக்குப் பின்னாடி இங்க நடக்குற ஒவ்வொரு அசைவும் என் கட்டுப்பாட்டுலதான் இருக்கணும்”.
ஆனா, இந்த ஃபைல்ல இருக்கிற சில ரகசிய விவரங்கள் நான் இன்னும் யார்கிட்டயும் டிஸ்கஸ் பண்ணவே இல்லை.
உனக்கு எப்படித் தெரிஞ்சது?
யார் கொடுத்தா இந்த இன்ஃபர்மேஷனை?”
அவனது கேள்விகள் சவுக்கடி போல விழுந்தன.
நிலா தன் பார்வையைத் திருப்ப முயன்றாள்..
ஆனால் ராகவனின் ஊடுருவும் பார்வை அவளை நகரவிடாமல் தடுத்தது.
அவளது கைகள் அவளறியாமலேயே லேசாக நடுங்கின. அதை மறைக்க அவள் விரல்களை இறுக்கமாகக் கோர்த்துக் கொண்டாள்.
அவளது தொண்டை வறண்டது. எப்பேர்ப்பட்ட சூழ்நிலையையும் சமாளிக்கும் நிலாவுக்கு,
ராகவனின் இந்த ஆக்ரோஷமும், அவளது அசைவுகளை அவன் வேட்டையாடுவது போன்ற பார்வையும் முதன்முறையாக ஒரு பதற்றத்தை, பயத்தை உருவாக்கின.
அவளது நெற்றியில் லேசாக வியர்வை அரும்பியது.
“நான்… நான் உங்களுடைய பர்சனல் அசிஸ்டென்ட், சார்…” நிலாவின் குரல் இந்த முறை லேசாகத் தழுதழுத்தது.
“நீங்க பார்க்கிற ஃபைல்கள், உங்க மெயில்களை வச்சு…”
“ஸ்டாப் இட்!” ராகவன் மேஜை மீது கையை ஓங்கி அடித்தான்.
“என்கிட்ட கதை சொல்லாத நிலா! பிஏ-னா நான் சொல்ற வேலையை மட்டும் செய்யணும்.
என் சிந்தனையைக் கணிக்கிறேன்னு சொல்லிட்டு என் பின்னாடி உளவு பார்க்கக் கூடாது!
என் அப்பாவைக் கொன்னவனுங்க இந்த கம்பெனியைப் பிடிக்க வெறியோடு சுத்திட்டு இருக்கானுங்க.
அவனுங்கள்ல நீ யாருக்கு இங்க இருந்து இன்ஃபர்மேஷன் பாஸ் பண்ற?”
நிலாவின் கண்கள் ஒரு நொடி சுருங்கின. அவளது முகத்தில் அப்பட்டமாகத் தெரிந்த அந்த பதற்றமும், ககங்களின் நடுக்கமும் ராகவனின் கண்களிலிருந்து தப்பவில்லை.
அவளது இந்தத் தடுமாற்றமே அவனுக்குப் பெரிய சந்தேகத்தை ஏற்படுத்தியது..
மேலும் அவள் அருகில் நெருக்கமாக வந்தான்..
அவள் பின்னால் நகர்ந்து, அங்கிருந்த சுவற்றில் சாய்ந்து நின்றாள்…
ராகவன், ஒற்றைக் கையை சுவற்றில் வைத்து, இன்னொரு கையால் அவன் பாக்கெட்டில் இருந்த கர்ஃசீப்பை எடுத்து அவள் வியர்வையை துடைத்து விட்டு,
“உன் முகமே காட்டிக் கொடுக்குது நிலா”.
“நீ ஏதோ பெரிய உண்மையை மறைக்கிற”..
“நீ யாருக்காக வேலை செய்யிறேன்னு நானே கண்டுபிடிப்பேன்”.
அதுவரைக்கும் என் கண்ணு முன்னாடிதான் நீ இருக்கணும்.”என்று
அவள் கையைப் பிடித்து கதவருகே தள்ளிவிட்டு!
“கெட் லாஸ்ட் ஃப்ரம் மை ரூம்” என்று கத்தி விட்டு
அவன் இருக்கையில் அமர்ந்து அவன் வேலையைப் பார்க்கத் தொடங்கினான்…