அந்தியாயம் 3
ஜீப் மலையேற்றத்தில் வேகமாக போய்க் கொண்டு இருந்தது.
சுத்தியும் ஒரே இருட்டு, காற்று பயங்கரமாக வீசியது.
நிலாவுக்கு பயத்திலும், குளிரிலும் உடம்பெல்லாம் நடுங்கினாலும், மனசுக்குள்ளே இருந்த கோபம் இன்னும் குறையவில்லை. கயிற்றை அவிழ்க்க முயற்ச்சி செய்து கொண்டே , அக்னியை முறைத்துப் பார்த்தாள்…
“ஏய் ரவுடி ! யாரு டா
நீ ?என்கிட்டயே உன் வேலையைக் காட்றியா?
உன்னை சும்மா விட மாட்டேன்டா. என்னை எங்க கூட்டிட்டுப் போற? ஒழுங்கா ஜீப்பை நிறுத்து!” நிலா கத்திக்கொண்டே இருந்தாள்…
அக்னீஸ்வரன் ஸ்டீயரிங்கை ஒரு கையில் பிடித்துக் கொண்டு, சிகரெட்டை வாயில் வைத்து லைட்டரை பற்ற வைத்தான்…
அந்த சின்ன வெளிச்சத்தில் அவன் முகம் இன்னும் பயங்கரமாக தெரிந்தது. சிகரெட்டை பத்த வச்சு ஒரு இழு இழுத்துட்டு, ரொம்ப கூலா சொன்னான்:
“கொஞ்சம் வாயை மூடிட்டு வர்றியா டாக்டர் அம்மா?
சும்மா கீச் கீச்சுன்னு கத்திக்கிட்டே இருந்தா… அப்புறம் வண்டியில இருந்து தூக்கி வெளிய வீசிடுவேன்.
அப்புறம் இந்த நைட்டுல எந்தக் காட்டுப் பன்னி உன்னை திங்கப்போகுதுன்னு எனக்குத் தெரியாது, பாத்துக்கோ!”
“நீ… நீ என்னைக் கொல்லத்தானே தூக்கிட்டு வந்திருக்க? கொன்னுடு… ஆனா இந்த மாதிரி கட்டி வச்சு சித்திரவதை பண்ணாத!” என்றாள்..
அக்னீ ஜீப்பை கியர் மாத்தி, ஒரு பெரிய வளைவுல திரும்பினான்…
ஏய்! .. அங்க நின்னானே அந்த மொட்டத்தலையன் மருது, அவன் கையில துப்பாக்கியோட உன் நெத்தியில வச்சப்பவே நீ ‘அவுட்’ ஆகியிருக்கணும்.
நானா அங்க வந்து உன்னைத் தூக்கிட்டு வந்ததாலதான் இன்னும் உன் மூச்சு ஓடிக்கிட்டு இருக்கு. அதை முதல்ல புரிஞ்சுக்கோ,
” அக்னீ அவளைத் திரும்பிப் பார்க்காமலே சொன்னான்.
“அப்போ… நீ என்னை அவங்ககிட்ட இருந்து காப்பாத்துனியா?” நிலாவுக்கு ஒண்ணுமே புரியல. “அப்பறம் ஏன் என்னை இப்படி கட்டி வச்சு கடத்துற?”
அக்னீ சிகரெட் புகையை அவள் முகத்தில் விட்டான் ,
“பெரியவர் ஆளுங்ககிட்ட இருந்து தப்பிக்கிறது அவ்ளோ சாதாரண விஷயம் இல்ல.
அங்கேயே உன்னை விட்டிருந்தா, இந்நேரம் உன்னை சிதைச்சு, உன் பாடியை ஆத்தங்கரையில தோண்டிப் புதைச்சிருப்பாங்க.
அவங்க கிட்ட இருந்து உன்னை காப்பாத்த , அதுக்காகத்தான் இந்த டிராமா. புரியுதா?”என்றான்..
நீயே அவங்க ஆளு தானே, நான் இருந்த என்ன செத்தா உனக்கு என்ன டா என்றாள்…
அவளை முறைத்துப் பார்த்தான் , அதில் அவன் கோபத்தைப் பார்த்தவள், ஏதும் , பேசவில்லை, அமைதியாக அழுது கொண்டே வந்தாள்..
ஜீப் மூணாறு காடுகளுக்குள்ள இருந்த ஒரு பழைய, கைவிடப்பட்ட ஃபாரஸ்ட் கெஸ்ட் ஹவுஸ் முன்னாடி வந்து நின்னுச்சு.
சுற்றிலும் அமைதி.
அக்னீ வண்டியை நிறுத்திவிட்டு இறங்கி வந்து,
நிலாவோட கயிற்றை அவிழ்த்து விட்டான். “இறங்கு டி,” என்றான்.
நிலா தன் கைகளைத் தடவிக்கொண்டே, சுற்றிலும் பார்த்தாள். “இங்க யாருமே இல்ல… என்னை ஏன் இங்க கூட்டிட்டு வந்திருக்க?”
அக்னீ அவளைப் பார்த்து ஒரு சின்ன, மர்மமான சிரிப்போட சொன்னான்:
“இனிமே கொஞ்ச நாளைக்கு இந்த அக்னியோட கஸ்டடியிலதான் நீ இருக்கணும்.
நான் சொல்ற பேச்சைக் கேட்டா நீ உயிர் பிழைக்கலாம்.
இல்லன்னா…” அவன் இடுப்பில் இருந்த துப்பாக்கியைத் தொட்டுக் காட்டினான்…
இல்லை, நீ சொல்ற இடத்தில எல்லாம் என்னால் இருக்க முடியாது என்று திமிறினாள்..
அவனிடம் இருந்து விலகி தப்பி ஓட முயன்றாள்..
அடியேய் ! என்று வன்மமாக சிரித்துக் கொண்டே,ஓடிய அவள் அருகில் வேகமாக வந்து, பளார் பளார் என்று இரண்டு கன்னங்களிலும் அடித்தான்..
அதில் தடுமாறி கீழே விழுந்தாள்..
ஏன் டி உனக்கு எத்தனை சொன்னாலும் புரியாதா?
நீ இனிமே என் கஸ்டடியில தான் இருக்கப் போற!
என்று கீழே இருந்தவளின், தலை முடியைப் பற்றி அவளை எழுப்பி விட்டவன்,
ஆஹ் வலிக்குது டா, என்று கூதறினாலும் அவன் அதையெல்லாம் கேட்கவில்லை, கேட்கும் நிலையிலும் இல்லை..
வா டி என்று தரத் தரவென்று வீட்டுக்குள் கூட்டிச் சென்றான்..
வீட்டுக்குள்ளே அவளை அழைத்து வந்தவன், கதவை சாத்திக் கொண்டு, லைட்டரை பற்ற வைத்து , சுவிட்ச் பெட்டியை தேடி, லைட்டைப் போட்டான்…
அது நான்கு அறைகள் கொண்ட வீடு..
கொஞ்சம் பாழடைந்து இருப்பது போல இருந்தது…
இங்க பாரு, இது என் வீடு தான்..
ஆனா இது பெரியவருக்கு மட்டுமில்ல வேற யாருக்கும் தெரியாது…
ஒழுங்கா இங்க இருக்கனும்..
ஏதாவது வில்லங்கமா யோசிச்சு, இங்க இருந்து தப்பிக்க முயற்சி பண்ணா என்னப் பத்தி தெரியாது உனக்கு..
நீ இன்னும் என் கோபத்தை பார்க்கல, அதையும் , பார்க்க வெச்சிடாத, புரியுதா என்றான்…
இல்லை, நான் அந்த கொலையை பார்த்தது பத்தி யாரு கிட்டயும் சொல்ல மாட்டேன்..
ப்ளீஸ் ! என்ன இங்க இருந்து விட்டுங்க!
என்று அழுது கொண்டே கெஞ்சினாள்..
நான் சொல்லிட்டே இருக்கேன் உனக்கு புரியாது, பார்க்க லட்சணமா இருக்கியே , அவனுங்க கிட்ட சிக்குனா , நீ அவ்ளோ தான்?
போனா போகுதுன்னு பரிதாபப் பட்டு காப்பாத்துனா, நீ என்ன டி என்று பேச்சை முடிக்காமல் அவளை அடிக்க கையை ஓங்கினான்..
முதலில் அடித்ததற்கே கண்ணம் இரண்டும் வலிக்க, மறுபடியும் அடிக்கப் போகிறான் என்று கீழே குனிந்து கொண்டாள்…
அடச்சே! என்று அவன் உள்ளிருக்கும் ஒரு அறையின் கதவை திறந்து உள்ளே செல்ல!
நிலாவோ ! வெளியே அவன் பூட்டிச் சென்ற கதவை திறக்க முயற்சி செய்தாள்..
அந்த வெளிக் கதவு பலமானதாகவும் இருக்க!
அவளுக்கு இருக்கும் சோர்வினாலும் , கதவை திறக்க முடியவில்லை..
அதற்க்குள் உள்ளே சென்றவன், அவள் வெளிக்கதவை திறக்க முயன்ற தையும் அவன் பார்த்து விட,
மறுபடியும் அவனிடம், மாட்டிக் கொண்டாள் நிலா..
அடியேய் ! அடியேய் உனக்கு எத்தனை வாட்டி சொல்றது, என் கிட்ட இருந்து நீ தப்பிச்சு போனா அது உன் உயிர் இல்லாத உடம்பா தான் இருக்கும் என்று சொன்னவன், இங்கிருந்து நீ எப்படி தப்பிக்கறன்னு நானும் பார்க்கிறேன் என்று அவளைத் தூக்கிக் கொண்டு உள்ளே இருக்கும் ஒரு அறையில் உள்ள கட்டிலில் போட்டான்…
அவள் உடனே பயந்து போய்!
இல்லை இல்லை நான் தப்பிக்க மாட்டேன்! நீங்க என்ன சொன்னாலும் நான் கேக்கறேன்?
என்ன எதுவும் பண்ணிடாதீங்க என்று கதறினாள் நிலா..
அடச்சீ நீ நெறைய படம் பார்க்கிற ஆளு போல என்று அவளைத் திட்டி விட்டு, அந்தக் கதவை வெளிப்பக்கமாக பூட்டினான்..
ஏன் டி உனக்கு இந்த நிலைமை , நீயா தேடி வந்த வேலை தானே இப்ப பாரு எவ்ளோ பெரிய பிரச்சினைல இருக்கன்னு, யாருன்னே தெரியாதவன் கிட்ட எல்லாம் இப்படி அடி வாங்கனும்,அப்புறம் , எந்த இடம்ன்னே தெரியாம இப்படி மாட்டி இருக்கியே டி என்று அவள் மனசாட்சி அவளைத் திட்டியது…