யுகம்-8

“மாலதி வரும்வரை வைஷ்ணவியை பார்க்க போகாமல் நீ என்ன செய்துக் கொண்டிருந்தாய்? கொஞ்சம் கூட மனிதாபிமானம் இல்லாத மிருகமா நீ? உன்னை பெற்றதுக்கு நான் உன்னை பெறாமலே இருந்திருக்கலாம்” என்று சினந்த முகத்துடன் சீறினார்.

அவர் கூறியதை சட்டை செய்யாமல் அவன் சுவரில் மாட்டி இருந்த போஸ்டர்களை பார்த்துக் கொண்டிருந்தான். அவர் சொன்னதை கேட்டு திடுக்கிட்ட மாலதி, “என்னங்க” என்று ஏதோ சொல்ல வந்தவர் ஆத்ரேயனின் முறைப்பில் அமைதியாகி விட்டார்.

மனம் கேட்காத வைஷ்ணவியும்,

 “மாமா…” என்று வாயை திறக்க. அவள் சொல்ல வருவதை  தடுக்க நினைத்தவன் சற்று குரலை உயர்த்தி, “இவ இருந்தா என்ன செத்தா எனக்கென்ன? ஐ டோன்ட் கேர்” என்றவனின் சட்டையை பிடித்திருந்தது கோகிலாவின் கை… இதனை   அவன் எதிர்பார்க்கவில்லை…

“என் பொண்ணு உயிர் உனக்கு அவ்வளவு சாதாரணமா போச்சா???” என்று கதறியவரை இழுத்து அணைத்துக் கொண்டார் மலர்வேந்தன்.

அந்நேரம் பார்த்து அறைக்குள் வருகை தந்த டாக்டர், “ஹாய்  Mr.ஆத்ரேயன் எங்க போனீர்கள்? Mr.மலர்வேந்தன் உங்க பொண்ணு பிழைக்க இவர் தான் காரணம். இவர் மட்டும் அவங்க அம்மாவோட சரியான நேரத்துக்கு கொண்டு வராவிட்டால் வைஷ்ணவி பிழைத்திருக்கவே முடியாது. அவரின் ரத்தத்தை கொடுத்து உங்க மகளை காப்பாற்றி இருக்கிறார்” என்று வார்டு ரவுண்டு பார்த்துவிட்டு அவர் கிளம்பிச் சென்றார். அம்மாவையும் வைஷ்ணவியையும் அடக்க தெரிந்தவனுக்கு இவரை எப்படி அடக்குவது என்று தெரியாமல் முழித்தான். ‘இப்போ என்ன அப்ரிஷியேட் பண்ணாட்டி குறைஞ்சு போயிருவாரா? அடேய் மொட்டை கொஞ்சம் வாய மூட மாட்டியா?’ என்று அந்த வைத்தியருக்கு அவன் மனதில் அர்ச்சனை விழுந்துக் கொண்டிருந்தது.

‘ஐயோ இப்போ என்ன பண்ணுவேன் ? என்னை பெரிய கடவுள் போல இப்போ எல்லாரும் ட்ரீட் பண்ண போறாங்களே… அழுதழுதே பெர்பார்மன்ஸ் கொடுக்க போறாங்களே!’ என்று அவன் மனம் புலம்பியது.

‘எல்லாரும் நம்மள சுற்றி வளைக்க முதல் கிளம்பிடணும்’ என்று நினைத்தபடி வாசலை நோக்கி நடந்தான்.

“ஆத்ரேயன்” என்று மலர்வேந்தனின் குரல் அவனை அழைத்தது. ‘ஆத்ரேயா நீ மாட்டினடா’ என்று மனதுக்குள் நினைத்தபடி அவரை பார்த்து நின்றான். இதே நேரம் வேற யாரும் கூப்பிட்டிருந்தால் அவன் சட்டை செய்யாமல் வெளியேறியிருப்பான். கூப்பிட்டது மலர்வேந்தனாதலால் தான் அவன் நிக்க வேண்டி ஏற்பட்டது. “ரொம்ப நன்றியப்பா” என்று அவனின் கையை பிடித்து வேண்டினார்.

“பரவாயில்லை மாமா” என்றவன் நிற்காமலே வெளியேறிவிட்டான்.

ஏன் அவன் இவ்வாறு நடந்துக் கொள்கிறான் என்று  யாருக்கும் புரியவில்லை. உலகத்தில் எல்லாரும் தீமை செய்து நல்லவர்கள் போல் நடிக்கும் போது இவன் மட்டும் நல்லது செய்துவிட்டு கெட்டவன் போல நடிப்பது அனைவருக்கும் வியப்பாக இருந்தது.

அவன் பேசுவததிற்கும் நடந்துக் கொண்டதற்கும் சம்பந்தம் இல்லாததை நினைத்த வைஷ்ணவிக்கு குழப்பமாகவே இருந்தது. எந்த இடத்திலும் தனது பலவீனத்தை காட்டிக் கொள்ள விரும்பாத  மகனின் குணம் நன்கு அறிந்தவர் மாலதி. ஆத்ரேயனுக்கு தெரியவில்லை அன்பு பலவீனமல்ல பலம் என்பது.

வெளியில் வந்தவனுக்கு அப்போது தான் மூச்சு விட முடிந்தது. யாருக்கும் பயப்படாதவன் முதன் முதலில் பயந்தது வைஷ்ணவியின் கண்களை நோக்குவதற்கு. ஆத்ரேயனை புரிந்துக் கொள்ள முடியாமல் வைஷ்ணவியும் குழம்பி போனாள்.

இன்று தன்னை விபச்சாரி என்று திட்டியவனுக்கும் எந்த தப்பான பார்வையும் பார்க்காமல் தன் கண்ணை பார்த்தபடி அவிழ்ந்த துண்டை கண்ணியமாக கட்டி விட்டவனுக்கும் மலையளவு வித்தியாசம் தெரிந்தது.

இவன் நல்லவனா கெட்டவனா என்று புரியாமல் குழம்பி இருந்தவள் மருந்தின் வீரியத்தால் கண்ணயர்ந்து தூங்க தொடங்கினாள்… வீட்டுக்கு வந்தவன் இனி வைஷ்ணவி இருக்கும் பக்கத்துக்கு தலை வைத்தே படுக்க கூடாது என்று முடிவெடுத்தவனாய் தன் படிப்பில் மூழ்கினான். அவளை தன் பலவீனமாக கருதினான்.

ஆத்ரேயன் வெளியில் கோபக்காரனாய் இருந்தாலும் தன் மனம் கவர்ந்தவர்களுக்காக உயிரையும் கொடுக்க தயங்காதவன். அவனின் இயல்பை இதுவரை புரிந்துக் கொண்டவர்கள் ஆதி,மாலதி மற்றும் மலர்வேந்தன். எந்த இடத்திலும் தான் கீழிறங்க கூடாது என்ற எண்ணமுடையவன். கெட்ட  பெயர் எடுத்தாலும் பரவாயில்லை தன் பலவீனம் யாருக்கும் தெரிய கூடாது என்பதில் உறுதியாக இருப்பவன். யாரும் தன்னை பரிதாபமாக பார்ப்பதை அடியோடு வெறுப்பவன். கண்ணீரையும் பாசத்தையும் தன்னை கட்டுப்படுத்தும் சக்தியாக நினைப்பவனுக்கு கண்ணீர் விடுபவர்களை அறவே பிடிக்காது தன் அன்னையை தவிர. அப்படிப்பட்டவனுக்கு தான் வைஷ்ணவியுடன் நடந்துக் கொண்டது விசித்திரமாக இருக்க தலையை உலுக்கி சமன் செய்தவன் வைஷ்ணவியின் எந்த வித நினைப்பும் வராமல் இருக்க சிரமப்பட்டான்.

அவனுக்கு கொஞ்சம் நிம்மதி கொடுக்கும் விதமாக ஆத்ரேயனுக்கும் தமையனின் அதே கல்லூரியில் இடம் கிடைத்திருந்தது.

இது வைஷ்ணவிக்கும் நிம்மதியை கொடுத்தது. அவனை பார்க்க வேண்டிய சந்தர்ப்பம் வராது, சங்கடமான சூழ்நிலைகள் வராது என்று நிம்மதியாக இருந்தாள்.

அதன் பிறகு ஆத்ரேயன் வைஷ்ணவியை பார்க்கவே இல்லை… எல்லாவற்றுக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக இரு வருடங்கள் கழித்து வர்ஷினியின் 21வது பிறந்த நாள் வந்து சேர்ந்தது.  அதற்காக விடுப்பு எடுத்துக் கொண்டு ஆதியும்,ஆத்ரேயனும் வந்திருந்தனர்.

ஆத்ரேயனை கூட்டிக் கொண்டு கடைக்குச் சென்ற ஆதி வர்ஷினிக்கு பார்த்து பார்த்து நிறைய பரிசுகள் வாங்கி குவித்தான். ‘சென்டிமென்டல் இடியட்ஸ்’ என்று மனதுக்குள் திட்டியபடி  அவனுடன் சேர்ந்து நடந்தான் ஆத்ரேயன்.

மாலதியும்  ஆதியும் எவ்வளவோ கெஞ்சியும் பிறந்த நாளுக்கு வர முடியாது என்று சொன்னான்.

பிறந்த நாளுக்குச் சென்ற ஆதி, வெண்ணிற கல் வேலைபாடுடைய சில்க் புடவையுடனும் அதற்கு  பொருத்தமான வெண்ணிற தோடும் நெக்லசும் போட்டு, பிறை போன்ற நெற்றியில் கல் வேலைபாடுடைய பொட்டும் வைத்து வைர மூக்குத்தி மின்ன  தேவதை போல ஜொலித்த வர்ஷினியின் அழகில் மெய் மறந்து போனான். 

வைஷ்ணவி வெட்டிய கேக்கை எடுத்து வர்ஷினியின் வாய்க்குள் திணித்து விட்டாள். அதை பார்த்த ஆதிக்கு அந்த கேக்கை சுவைக்க வேண்டுமென்ற தாபம் எழுந்தது. கஷ்டப்பட்டு மனதை அடக்கியவன், “ஹாப்பி பர்த்டே”  என்றபடி தான் பார்த்து பார்த்து வாங்கிய  பரிசுகளை அளித்துவிட்டு இரவு சாப்பாட்டுக்காகச் சென்று விட்டான்.

பிறந்தநாள் கோலாகலமாக முடியும் வரை வர்ஷினியுடன் கண்களாலேயே பேசிக் கொண்டிருந்தான். அனைவரும் புறப்பட்டதும் அங்கு மலர்வேந்தனின் குடும்பத்தினரும் கார்த்திகேயனின் குடும்பத்தினரும் மட்டுமே எஞ்சி இருந்தனர்.

“ஆத்ரேயன் ஏன் வரவில்லை??” என மலர்வேந்தன் கேட்டதற்கு மாலதி, “அவனுக்கு கொஞ்சம் சுகமில்லை அண்ணா” என்று சமாளித்து வைத்தார்.

அதற்கிடையில் எப்படி வர்ஷினியை தனியாக சந்திப்பது என்று யோசனையாகவே இருந்தது ஆதிக்கு. அப்போதுதான் வர்ஷினி உடை மாற்றுவதற்காக தனது  அறைக்குச் சென்றிருந்தாள். அதுதான் சந்தர்ப்பம் என்று நினைத்த ஆதி,  “வைஷு ரொம்ப மெலிஞ்சிட்ட போல என்ன சாப்பாடு கட் ஆ?” என்று  பேச்சு கொடுத்தான்.

அவளும், “ஆமா அத்தான் அம்மாவும் அப்பாவும் இப்போ சாப்பாட்டுல ரொம்ப ஸ்ட்ரிக்ட்… நினைச்சதை சாப்பிடவே முடியல” என்று கவலையுடன் மெலிந்த தன் உடலை பார்த்தபடி கூறினாள்.

சிறிது நேரம் அமைதி காத்தவன், “ஒரே அலுப்பாக இருக்கிறது வீட்டை சுற்றி பார்ப்போமா ???” என்றான். “ஏன் இந்த வீட்டை நீங்கள் முன்ன பின்ன சுத்தி பார்த்ததில்லையா?”  என்று கேட்டாள் வெகுளியாக…

‘இவ வேற நேரம் காலம் தெரியாம’ என்று மனதுக்குள் கடிந்தவன், “அப்படியில்லம்மா சும்மா இருக்க அலுப்பாவே இருக்கு” என்றான் கைகளை தூக்கி சோம்பல் முறித்தபடி.

“வாங்க அத்தான்” என்றபடி அவனை கீழ் தளத்திலுள்ள சமையலறைக்கு முதலில் கூட்டிச் சென்றாள்.

‘முதலில்  எங்க கூட்டி வருது பாரு… இவளை திருத்தவே முடியாது. இத பார்த்து நான் என்ன சமைக்கவா போகிறேன்?’ என்று மனதுக்குள்  வைஷ்ணவியை கடிந்தான். கீழ் தளத்தை முழுவதும் சுற்றி காட்டியவள், “அவ்வளவு தான் அத்தான்” என்று சொன்னதும் ‘ஐயோ ஐயோ’ என்று மானசீகமாக தலையில் அடித்துக் கொண்டான்.

பின்பு தைரியம் வர பெற்றவனாக, “மேலே போய்  பார்ப்போமா வைஷு?” என்ற படி விறு விறுவென மேலே ஏறினான். கதை சுவரசியத்திலிருந்த கார்த்திகேயனும் மலர்வேந்தனும் இதனை கவனிக்கவில்லை. பின்னால் இழுபட்டு வந்த வைஷ்ணவியை எப்படி கழட்டி விடுவது என்று பலமான யோசனையில் ஆழ்ந்தவனுக்கு ஆத்ரேயன் துருப்பு சீட்டாக வந்து சேர்ந்தான். “வைஷு ஆத்ரேயன் அத்தான்  எதுவும் சாப்பிடவில்லை… சாப்பாட்டை கொண்டு கொடுத்து விட்டு வரியா???” என்றபடி ஆத்ரேயனுக்காக கையில் கட்டி வைத்திருந்த பார்சலை நீட்டினான்.

“என்னது ஆத்ரேயன் அத்தானிடமா??” என்று ஒரு கணம் தயங்கியவள் பார்சலை பெற்றுக் கொண்டு நடந்தாள். அப்பாடா என்றபடி வர்ஷினியின் அறையை அடைந்தவன் குளித்து விட்டு இரவு உடைக்கு மாறிய வர்ஷினியை பார்த்து உணர்ச்சிகள் பெருக்கெடுத்து ஓட தொடங்கின. “குட்டிமா” என்றபடி அவளை அணைத்துக் கொண்டவன் இதயம் படபடவென அடித்துக் கொண்டது.

அவன் தேகம் பட்டதில் வர்ஷினி உடல் சிலிர்த்தது… அந்த சிலிர்ப்பை அனுபவித்தவனாக நெற்றியில் முத்தமிட்டான். பிறகு நாசியில் முத்தமிட்டவனின் உதடுகள் வெட்கத்தில் சிவந்திருந்த பட்டு கன்னங்களை அடைந்தது. கன்னங்கள் இரண்டிலும் தன் முத்திரையை பதித்தபடி துடிக்கும் அதரங்களில் தேன் எடுக்க வேட்கை கொண்டான். அவள் உதடுகளை நெருங்கியதும், அவன் மூச்சு காற்று அவளின் உணர்வுகளை தூண்டிவிட பாவையவள் வெட்கத்தில் கண்களை மூடிக் கொண்டாள், அதனை பார்த்து மனதுக்குள் சிரித்துக்கொண்டான் ஆதி. இரு உதடுகளுக்கும் நூலளவு இடைவெளியில் அவள் உதட்டை சுவைக்க போனவனின் செயல்,

“ஆதி…” என்ற கர்ஜனை கேட்டு ஸ்தம்பித்து நின்றது.

உடனே அவளை விட்டு விலகி நின்றவனின் உயிர் உறைந்து போனது பத்ரகாளியாக நின்ற தனது தாய் மாலதியை பார்த்ததும்.

சற்று நேரத்துக்கு முன் நடந்தது…

யோசனையுடன் இருந்த வைஷ்ணவி ஆத்ரேயனை சந்திக்க சங்கடப்பட்டு கொண்டு பார்சலுடன் மாலதி முன் போய் நின்றாள்.  “அத்தை  இதனை ஆத்ரேயன் அத்தானிடம் கொடுக்க சொல்லி ஆதி அத்தான் கொடுத்தார். நீங்களே கொடுத்து விடுறிங்களா ப்ளீஸ்” என்று கேட்டாள்.

“ஆதி எங்கே ?” என்று சந்தேகமாக கேட்ட மாலதிக்கு அவன் மாடிக்குச் சென்றது நல்லதாக தோன்றாமல்,  “அதை கொடு” என்று பார்சலை வாங்கிக் கொண்டு மாடி ஏறினார். அப்போது தான் ஆதியும் வர்ஷினியும் பின்னி பிணைந்துக் கொண்டதை பார்த்து கொதிப்படைந்தார். அவர் காதலுக்கு எதிரியல்ல ஆனால் இது போல செயல்களை அவரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அதனால்  தான் அவன் எல்லை மீற முதல் அவன் பெயரை அழைத்திருந்தார்.

அவரின் குரல் கேட்டு அனைவரும் மேலே ஓடி வந்திருந்தனர். பயத்தில் ஒடுங்கிய வர்ஷினி ஆதியின் பின்னால் ஒளிந்துக் கொண்டாள்.

“என்ன ஆச்சு??? ஏன் இப்படி கத்தினாய் ??” என்றபடி வந்த கார்த்திகேயனிடம் விஷயத்தை சொல்லுவோமா?  வேண்டாமா? என்று யோசித்தவருக்கு ஆத்ரேயன் வாங்கிய அடி  நினைவு வந்தது.

‘அவன் தாங்குவான் இவன் தாங்கமாட்டானே’ என்று மூத்த மகனை பற்றி நன்கு யோசித்தவர், கார்த்திகேயனை மட்டும் இழுத்துக் கொண்டு சற்று தூரமாக சென்றார்.

“ஆதிக்கு வர்ஷினியை பிடித்திருக்கு போல  இருவருக்கும்  கல்யாணம் பண்ணி வைப்போமா ??? நல்ல பொண்ணு அவள்” என்றார். அவன் முத்தமிடச் சென்ற விஷயத்தை மறைத்துக் கொண்டு அவருக்கு தெரியும் எப்படி கார்த்திகேயனை சம்மதிக்க வைக்க வேண்டுமென்று. தாடையை தடவியபடி யோசித்த கார்த்திகேயன்,

“எனக்கொன்றும் பிரச்சனையில்லை… எனக்கு சந்தோசம் தான் ஆனால் இதுக்கு மலர்வேந்தன் சம்மதிப்பானா ???” என்றார்.

“நம்ம ஆதிக்கு என்ன குறைச்சல்??? நான் அண்ணாவிடம் பேசுறேன்.ஆதி ஒரு கிழமை நிற்பானாம் போக முதல் நிச்சயம் பண்ணி  விடுவோம், ஆதியின் படிப்பு முடிய கல்யாணம் பண்ணி வைப்போம்” என்றார்.

அவருக்கு ஆதி மேல் நம்பிக்கையில்லை. கல்யாணத்துக்கு முதல் ஏதும் தப்பு தண்டா பண்ணி விடுவானோ என்று பயமாக இருந்தது.  “உன் அண்ணாவிடம் பேசி முதல் அவர் சம்மதத்தை வாங்கு” என்றார். கணவன் சம்மதித்ததில்  சந்தோஷமடைந்தவர், தள்ளி இருந்து நடந்ததை அறியாமல் குழம்பிக் கொண்டிருந்த கோகிலாவையும் மலர்வேந்தனையும் நோக்கி வந்தார்.

“அண்ணா உங்க மூத்த பெண்ணை என் வீட்டு மருமகளாக்க  ஆசைப்படுகிறேன். உங்களுக்கு சம்மதமா??” என்று கேட்டார்.

மலர்வேந்தனுக்கு இது ஆச்சரியமாக இருந்தாலும் பூரிப்பாக இருந்தது… கோகிலாவுக்கு ஆத்ரேயன் மேல் தான் நல்ல அபிப்ராயம் இல்லை ஆதி மேல் அவருக்கு எப்போதும் மரியாதையை இருந்தது. அதனாலேயே,

“ரொம்ப சந்தோஷமம்மா” என்றார் மலர்வேந்தன். என்ன நடக்க போகுதோ என்று பயந்துக் கொண்டிருந்த ஆதிக்கும் வர்ஷினிக்கும் ஆகாயத்தில் பறப்பது போல இருந்தது. ஆதியின் பின்னால் ஒளிந்து இருந்தவள் யாருக்கும் தெரியாமல் அவனின் இடுப்பை கிள்ளினாள்.

“ஆ…” என்று அலற வாயெடுத்தவன் குரல் அனைவருமிருந்ததால் நலிந்து ஒலித்தது. இந்த வாரம் நிச்சயதார்த்தம் என்ற செய்தி கேட்டு அவர்களின் சந்தோசம் ரெட்டிப்பானது. வைஷ்ணவிக்கோ சந்தோசம் தாங்க முடியவில்லை. “ஐ… அக்காக்கு கல்யாணம்… புது டிரஸ் வாங்கணும்.” என்று சொன்னபடி கீழே ஓடினாள். எல்லாரும் கீழேச் சென்றதும் ஆதியிடமும் வர்ஷினியிடமும் வந்த மாலதி, “ரெண்டு பேரும் வாலை சுருட்டிக் கொண்டு கல்யாணம் முடியும் வரை சும்மா இருக்கணும்.” என்று கேலியாக மிரட்டி மருமகள் நெற்றியில் முத்தமிட்டார்.

“சரி அத்தை… இனி இவர் பக்கத்தில் வந்தாலே நான் எட்டடி ஓடி விடுவேன்” என்றாள் சிரித்தபடி.  “அத்தையும் மருமகளும் ஒன்று கூடிட்டாங்கப்பா” என்றபடி வர்ஷினியை பார்த்து கண்ணடித்து விட்டு கீழேச் சென்றான்.

“நான் இருக்கிறேன் என்ற மரியாதை கொஞ்சமாச்சும் இருக்கா அவனுக்கு” என்று மருமகளிடம் புலம்பியபடி மாலதியும் கீழேச் சென்றார்.

வீட்டுக்கு வந்த ஆதிக்கு சந்தோசம் தாங்கவில்லை. தமையன் அறைக்கு நேரே வந்து படுத்துக் கொண்டிருந்த ஆத்ரேயன் மேல் விழுந்து  கட்டி புரண்டான்.

“டேய் என்னடா பண்ணுற?? நான் வர்ஷினி இல்ல. விடுடா.” என்று கத்தியவனை ஆதி சட்டை செய்யவே இல்லை. “டேய் நான் ரொம்ப சந்தோஷமா இருக்கிறேன்டா” என்று தொடங்கியவன் நடந்ததை எல்லாம் கூறினான்.

“வாவ்…! அப்போ நம்ம வீடு கல்யாண களை கட்டி விட்டது…” என்றவனை, “ஆமாடா…” என்று  அவன் கன்னத்தில் முத்தம்  கொடுத்துவிட்டு ஆதி தன் அறைக்குள் புகுந்துக் கொண்டான். கன்னத்தை துடைத்தபடியே, “காஞ்ச மாடு கம்புல விழுற போல என் மேலயே பாயுறான் அந்த  பிள்ளை என்ன பாடு படப்போகுதோ?” என்று முணுமுணுத்தான்.

சனிக்கிழமை நிச்சயதார்த்தம் என்று ஐயரிடம்  நேரம் குறித்து வரப்பட்டது… இன்னும் மூன்று  நாட்களே இருந்த நிலையில் இருவரின் வீடுகளும் களை கட்டியது.

அடுத்த நாளே துணி எடுக்க அனைவரும் கடைக்குச் சென்றனர். அண்ணனின் நிச்சயதார்த்தம் என்பதால் ஆத்ரேயனும் சென்றான் அரை மனதுடன். அவனுக்கு மனம் முழுதும் வைஷ்ணவியை பார்க்கவே கூடாது என்ற எண்ணமே ஓங்கி இருந்தது. நீண்ட நாட்கள் கழித்து மெலிந்த உடலுடன் வைஷ்ணவியை பார்த்தவன் ஒரு கணம் ஸ்தம்பித்து நின்றான். பின் சுதாரித்துக் கொண்டு வண்டியை எடுத்தான். வைஷ்ணவியை சொல்லவே தேவையில்லை ஒரு நடுக்கத்துடனேயே வேனில் உட்காந்திருந்தாள்.

வர்ஷினி கோகிலா மற்றும் மாலதி சாரி செலக்ஷன் இல்  உடை எடுத்துக் கொண்டிருந்தனர். வைஷ்ணவியோ சுடிதாரை பார்த்துக் கொண்டிருந்தாள் வேற செக்ஷன்க்கு சென்று. அப்போது அங்கு வந்த ஒரு சேல்ஸ்மேன் வைஷ்ணவியிடம்  எப்படியான உடை வேணும் என்று கேட்டுக்   கொண்டிருந்தான். உடல் மெலிந்திருந்த வைஷ்ணவியின் அழகு சற்று கூடி காணப்பட்டது. வைஷ்ணவியும் தனது எதிர்பார்ப்புகளை சேல்ஸ்மேன் இடம் சொல்லிக் கொண்டிருந்தாள். அவனும் புது புது உடைகளை எடுத்து அவள் மேல் வைத்து  காட்டினான். வைக்கும் போது அவன் கைகள் அவள் மேல் உரசிச் சென்றது. உடைகளின் அழகில் லயித்திருந்தவள் இதனை கவனித்துக் கொள்ளவில்லை. உடை எடுப்பதில் ஆர்வமில்லாமல் தனித்து   இருந்த ஆத்ரேயனுக்கு சேல்ஸ்மேன் மீதும் அதனை அனுமதிக்கும் வைஷ்ணவி மீதும் கோபம் வந்தது. நிறைய நேரம் அவதானித்தவன், சேல்ஸ்மேனின் பார்வையும் தீண்டலும் எல்லை மீறுவதை உணர்ந்து தன் இருக்கையிலிருந்து எழுந்து விறு விறுவென அவ்விடத்திற்குச் சென்றான்.

வைஷ்ணவிக்கு பின்னாலிருந்து சேல்ஸ்மேன் ஐ முறைத்தவாறு போக சொல்லி  தலையால் சைகை செய்தான். ஆத்ரேயனின் அனல் கக்கும் பார்வையில் பயந்தபடி அவ்விடத்தை விட்டு நழுவினான் அவன். உடைகளை காட்டிக் கொண்டிருந்தவன் விலகிச் சென்றதை விசித்திரமாக பார்த்தாள் . உடனே, “இடையில் விட்டு விட்டு எங்கே போறீங்க  அண்ணா ?” என்று கேட்டவளை கவனிக்காதவாறு அவன் வேறு செக்ஷன்க்கு சென்று இருந்தான். ‘என்னாச்சு இவருக்கு???’ என்று யோசித்தபடி திரும்பியவள் பின்னால் அனல் கக்கும் பார்வையுடன் நின்ற ஆத்ரேயனை பார்த்து ஸ்தம்பித்து போனாள்.

‘இவன் எதுக்கு நம்மள இப்படி முறைக்கிறான்??’ என்று யோசித்தபடி விரித்திருந்த உடைகளை பார்த்தாள்.  “டிரஸ் எடுத்தாச்சா??” என்று சிம்ம குரலில் கர்ஜித்தவனை பார்த்து நடுக்கம் ஏற்பட்டாலும் கொஞ்சம் சுதாரித்தவள், “இன்னும் எடுக்கல அதுக்குள்ள அவர் போய்ட்டார்.” என்றாள். அவர் என்ற மரியாதையான விளிப்பில் அவன் பிபி மேலும் எகிறியது.

“ஓ… அவரா??? அந்த தடியனுக்கு மரியாதை வேறயா?? அவன் அங்க தொடுறான் இங்க தொடுறான் நீயும் காட்டிட்டு நிக்குற?? கொஞ்சம் கூட பொம்பளை பிள்ளையா அடக்க ஒடுக்கமா இருக்கணும் என்று அறிவில்லையா??? உனக்கு இந்த வயதில ஆம்பிள்ளைங்க தேவைப்படுது ??” என்று தன்னால் முடியும் வரை அவளை அசிங்கப்படுத்தினான்.

அவனின் வார்த்தைகள் அவளிதயத்தை முள்ளால்  தைப்பது போலிருந்தது. கண்ணில் நீர் கோர்க்க அவனை பார்த்தாள்.

“பச்… இப்போ எதுக்கு அழுகிற ??? எப்போ பார்த்தாலும் அழுதழுது நாடகம் மட்டும் உனக்கு நல்லா போட

தெரியுது…” என்றான் மேலும் அவளை காயப்படுத்துவதற்காக.

இனி இவனுக்கு பேச்சிலேயே பதிலடி கொடுக்கவேண்டுமென்று நினைத்தவள், “நான் என்ன செய்தா உங்களுக்கென்ன?? உங்க அண்ணா தான் என் அக்காவை கட்டிக்க  போறார். அதை மீறி உங்களுக்கு எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை” என்று பதிலடி கொடுத்தவள். மேலும் இருந்தால், அவனின் கூரான வார்த்தைகளை கேட்க வேண்டி வரும் என்று யோசித்து கையில் பட்ட சுடிதாரை எடுத்துக்கொண்டு உடை மாற்றும் அறைக்குச் செல்ல முற்றப்பட்டாள். அவள் கையை பிடித்தவன், “என்னடி சம்பந்தமில்லை? என் ரத்தம் தான் உன் உடம்பில ஓடுது. உனக்கு அவன் கூட உரசணுமா? சொல்லு உரசணுமா?” என்று கேட்க அதில் அதிர்ந்தவள், ‘என்ன வார்த்தை கேட்டு விட்டான்.கடவுள் இவன் நாக்கை கத்தியுடனேயே படைத்து விட்டார்’ என்று மனதில் நினைத்தவள், முழு பலம் கொண்டு கையை உதறிவிட்டு நடக்க தொடங்கினாள். அவள் தன்னுடன் இந்தளவுக்கு பேசி இன்று தான் கேட்டிருக்கிறான். அவனின் முன் மறு பேச்சு பேச அவன் அண்ணாவும் அன்னையும் பயப்படும் போது இவளுக்கு என்ன தைரியமும் திமிரும் என்று யோசித்தவன் தாவிச் சென்று அவள் உடை மாற்றும் அறைக்குள்ளே அவனும் அவளுடன் புகுந்து தாழிட்டுக் கொண்டான்.

அவனின் செய்கையில் முதலில் திகைத்தவள், “வெளிய போங்க” என்று சீறினாள்.

அவள் சீறலில் அவன் ரத்தம் கொதிக்க தொடங்கியது வலது கையால் அவள் வாயை பொத்தி மறுபுறம் திருப்பியவன் இடது கையால் அவளின்  இடது கையை இறுக்கி பிடித்து பின்னால் மடித்து அவள் உடலை தன்னுடலால் விசை பிரயோகித்து நிலைக்கண்ணாடியுடன்  அழுத்தியவன் அவள் காதுக்குள், “ஏதோ உன்னை ரேப் பண்ண போற போல கத்துற.உன்னை பார்க்க கூடாத நிலையில் பார்த்தே ஒன்றும் செய்யாதவன் நான்… இப்போ மட்டும் என்ன செய்ய போறேன்?” என்று உறுமியபடி கையை  முறுக்கினான். உடல் வலி மன வலி இரண்டும் தாங்க முடியாமல் அவள் கண்களில் கண்ணீர் உருண்டோடியது. அவன் எதற்காக தன்னை வதைக்கிறான் என்று அவளுக்கு புரியவில்லை உதவி கேட்பதற்கு வாயையும் திறக்க முடியாமல்  விம்மினாள்.

“வைஷ்ணவி” என்று அழைத்தபடி வந்த கோகிலாவின் சத்தம் கேட்க அவளை விட்டவன், அவளை முன் பக்கமாக  திருப்பி இறுக்கி அணைத்து தன் ஆத்திரத்தை  அடக்கியவன் அவனின் கை குட்டையால் அவளின் கண்ணீரை துடைத்து விட்டு, 

“போ” என்றான். அவளும் கன்றி சிவந்திருந்த கைகளை தேய்த்தபடி வெளியேறினாள். இந்த விடயத்தை மற்றவரிடம் சொல்லி நியாயம் கேட்பதற்கு அக்காவின் வாழ்க்கை தடையாக இருந்தது. சொல்வதென்றால் கூட எதை சொல்லுவது என்று குழம்பினாள். காயமும் படுத்துகிறான் கட்டியும் பிடிக்கிறான். அவன் மனதில் என்ன இருக்கிறது என்று அவளுக்கு புரியவில்லை.

அவனுக்கும் தன்னை சமன் செய்ய நேரம் தேவைப்பட்டது. ஏன் இவ்வாறு நடக்கிறோம் என்று அவனுக்கும் தெரியவில்லை.

 ‘அவளை  யார் உரசினால் உனக்கென்ன?’ என்று அவன் மனசாட்சி அவனிடம் கேள்வி கேட்டது. அவனுக்கு ஒன்று மட்டும் புரிந்தது வைஷ்ணவியால் அவன் தன்னிலை இழக்கிறான். அவள் அருகில் இருக்கும் போது அவன் அவனாக இல்லை. என்ன செய்வது என்று தெரியாமல் நிலை கண்ணாடியில் தலையை சாய்த்து கண்ணை மூடி நின்றவன் சிறிது நேரம் கழித்து வெளியே வந்தான். எல்லோரும் சாரி செக்ஷன் இல் நிற்பதை   பார்த்தவன் அங்கே இருந்த சோபாவில் அமர்ந்தபடி தொலைபேசியை நோண்ட தொடங்கினான்.

“பொண்ணோட தங்கச்சி சாரி உடுக்க வேணும்” என்று மாலதி கட்டாயப்படுத்தி வைஷ்ணவியை அழைத்து வந்திருந்தார். அங்கிருந்த சேல்ஸ்மேன் ஒரு சாரியை  தூக்கி, “இது நல்லா  இருக்கும் பாருங்க” என்று அவள் தோளில்  வைக்க போன போது தடுத்தவள், “தாங்க… நானே வைத்து பாத்துக்கிறேன்” என்றபடி அதனை வைத்து பார்த்தாள்.  அவளின் செய்கையை ஒரு நொடி நிமிர்ந்து பார்த்தவன் சிறு புன்னகையுடன் தலையை குனிந்துக் கொண்டான்.

இயந்திரதனமாக ஒரு சேலையை எடுத்தவள் அதனை ஒழுங்காக பார்க்க கூட அவள் மனம் இடம் கொடுக்கவில்லை.

❤️ Loading reactions...
0 Comments
Oldest
Newest Most Voted
error: Content is protected !!
Scroll to Top