யுகம்-4

எல்லாரும் வெவ்வேறு  விதமான மன  நிலையுடன் ஆபீஸ்க்கு சென்றனர். கீர்த்தனாவும் கார்த்திக்கும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ளவில்லை. பேசிக்கொள்ளவில்லை ஆத்ரேயன் அதன் பிறகு வைஷ்ணவியிடம் பேசுவதை தவிர்த்திருந்தான்.

அலுவலகத்துக்கு வந்தவர்கள் அவரவர் வேலைகளை பார்க்க தொடங்கினர். அப்போது தான் அனாமிகா வைஷ்ணவியை கூப்பிட்டு அனுப்பினாள். வைஷ்ணவியுடனான பேச்சை தவிர்ப்பதற்காகவே அவள் சம்பந்தமான எல்லா வேலைகளையும் அனாமிகாவை மேற்பார்வை செய்ய சொல்லி இருந்தான். “மே ஐ கம் இன்” என்றவாறே உள்ளேச் சென்றாள் வைஷ்ணவி. “மிஸ்.வைஷ்ணவி உங்க பெர்போர்மென்ஸ் இந்த மாசம் ரொம்ப மோசமாயிருக்கு” என்றபடி ஒரு கடிதத்தை அவள் முன் வைத்தவள், “உங்களுக்கான வார்னிங் லெட்டர் இது. ஹோப் யூ வில் இம்ப்ருவ் யுவர்செல்ப் என்றவாறே அடுத்து அவள் முடிக்க வேண்டிய வேலைக்கான பைலை ஐ நீட்டினாள். “ஓகே மேடம்” என்றவாறே அதை பெற்றுக்கொண்டவளுக்கு ஆத்ரேயனின் ஒதுக்கம் ஒரு நெருடலாய் இருந்தது.

அதன் பிறகு மேற்கொண்ட மீட்டிங்கிலும் ஆத்ரேயன்  மறந்தும் அவள் புறம் திரும்பவில்லை. ‘இப்போ நான் என்ன பண்ணிட்டேன் என்று இந்த  நெட்டையனுக்கு என் மேல் கோபம்? அவன் பேசிய பேச்சுக்கு நான் தான் கோபப்படணும்… வர வர யாருமே சரி இல்லை. இந்த கீர்த்தனாக்கும் கார்த்திக்குக்கும் என்னவாச்சு?’ என்று மனதுக்குள் அவனையும் தன் இரு நண்பர்களையும் அர்ச்சித்தவாறே மௌனமாக நடப்பதை கவனித்தாள்.

வீட்டுக்கு வந்தவள் அப்போதும் கீர்த்தனா அமைதியாக கட்டிலில் குப்பற படுத்து  இருப்பதை பார்த்து மனம் நொந்து போனாள். இதுக்கு மேல் சும்மா இருந்தால் வேலைக்காகாது என்றவாறே அவள் திட்டினாலும் பரவாயில்லை என்றபடி, “கீர்த்து எந்திரிடி” என்று உலுக்கினாள். “சும்மா இருடி” என்று முகத்தை நிமிர்த்தாமல் சொன்னவளின் குரலில் அவள் அழுதிருப்பது அப்பட்டமாக தெரிந்தது. அவளை சமாதானப்படுத்தி விடும் நோக்கில் அவள் தலையை வருடியவள், “என்ன என்றாலும் என்கிட்டே சொல்லுடி… மன பாரம் குறையும்.” என்று அவளை பின்னாலிருந்து அணைத்துக் கொண்டாள். அன்பை அள்ளி வழங்குவதிலும் வெறுப்பை காரி உமிழ்வதிலும் அவளுக்கு நிகர் அவள் தான்.

அரவணைப்புக்காக ஏங்கிய கீர்த்தனா உடனே எழுந்து வைஷ்ணவியை அணைத்துக்கொண்டு குலுங்கி குலுங்கி அழுதாள். விம்மி விம்மி அழுதவாறே நடந்ததை சொல்லி முடித்தாள். அதை கேட்டவளுக்கு சிரிப்பு பொத்துக்கொண்டு வந்தது. சிரித்தால் கீர்த்தனாக்கு கோபம் வரும் என்பதால் அடக்கிக் கொண்டிருந்தாள். “கொஞ்சம் பொறு” என்று எழுந்துச் சென்றவள் தண்ணீரை எடுத்துக்கொண்டு வந்து கொடுத்தாள். அப்போதும் அவள் விம்மல் நிக்கவில்லை. அழுததால் அவள் கூர் நாசியும் பட்டு கன்னங்களும் சிவந்து போய் இருந்தது. அவளின் அழகை ரசித்தபடி,  “இதுக்கெல்லாமா அழுவாங்க?” என்று  கேட்டவள் கீர்த்தனா முறைக்கவும் உடனே தன் முகத்தை கடினமாக்கிக் கொண்டு, “பச்சை பிள்ளை போல இருந்துட்டு பண்ற வேலைய பாரு… நீ கவலைப்படாதே கீது நான் அவனை நாக்கை புடுங்கிற போல நாலு கேள்வி கேட்கிறேன்” என்று வீராப்பாக  உரைத்தாள்.மனதுக்குள், ‘எப்படியெல்லாம் பெர்ஃபோர்மன்ஸ் கொடுக்க வேண்டி இருக்கு’ என்று சலித்துக்கொண்டாள்.

“நான் கேக்கிறேன் என்று கோபிக்காதே அப்போ நீ சொன்ன கரப்பான் பூச்சி அவன் தானா?” என்று கேலியாய் கேட்டாள். கேட்டுவிட்டு வாயை பொத்திக் கொண்டாள். நண்பியின் செய்கையை பார்த்து முறைக்க முயன்றவளுக்கு அது முடியாமல் போக சிரித்துவிட்டாள்.

“அவன் மேல ரொம்ப நம்பிக்கை வச்சிருந்தேன். இப்படி என் நம்பிக்கையை நாசமாகிவிட்டான்.” என்று உண்மையான வருத்தத்துடன் கூறினாள் .

“அப்போ உனக்கு அவன் கிஸ் பண்ணினது பிரச்சனை இல்ல…உன் நம்பிக்கையை குலைச்சது தான் பிரச்சனையா ? டூ யூ லவ் ஹிம்?” என்று கேட்டாள்.

“லூசு போல பேசாதடி …. எனக்கு அவன் மேலே நிறைய மரியாதை இருக்கு… கண்ணியமானவன் கட்டுப்பாடானவன் என்று எப்போவும் நினைப்பேன்… ஆனால் அவனும் எல்லோரையும் போல சாதாரண ஆம்பிளை என்று நிரூபிச்சிட்டான். வலுக்கட்டாயமாக பெண்களை அடைய நினைக்கும் அவன் மேலே எப்போவும் எனக்கு காதல் வரவே வராது” என்று கண்டிப்புடன் பேசியவளை பிரம்மிப்புடன்  பார்த்தாள் .

“இப்படி பண்ணாமல் எல்லாரையும் போல அவன் காதலை சொல்லி இருந்தா அத அக்ஸ்பட் பண்ணி இருப்பியா?” என்று கேட்டவளை நோக்கி, “கண்டிப்பா யோசிச்சிருப்பன்” என்றாள். ‘அவசரபட்டுட்டியே கார்த்திக்’ என்று வைஷ்ணவியால் அவனை மனதுக்குள் திட்டாமல் இருக்க முடியவில்லை.

ஆனால்  மனதுக்குள் இருவரையும் சேர்த்து வைக்க வேண்டும் என்ற எண்ணம் வர சந்தோஷமாக சிரித்துக்கொண்டாள். அப்போது தான் கதவு தட்டும் சத்தம் கேட்டது. உடனே கதவை திறந்த வைஷ்ணவிக்கு கார்த்திக்கை கண்டதும் சிரிப்பு சிரிப்பாக வந்தது. “வைஷு இன்று அக்காவின் மகனுக்கு 2nd பர்த்டே நீயும் கீர்த்தனாவும் மறக்காமல் வந்துருங்க” என்றவாறு வெளியேற முற்பட்டவனை, “நீயே உள்ளே வந்து கீர்த்தனாவிடம் சொல்லு” என்றபடி அவனின் கையை பிடித்து இழுத்து உள்ளேச் சென்றாள்.

“இல்லடி… நீயே சொல்லு…” என்று சொன்னவனை பொருட்படுத்தாது கீர்த்தனா முன்னால் அவனை கொண்டு நிற்பாட்டினாள். ‘இவளுக்கு அறிவே கிடையாதா?’ என்று மனதுக்குள் இருவரும் அவளை திட்டி  கொண்டிருந்தனர். முகம் பார்க்காமல் முழங்காலில் கைகளை கட்டியபடி இருந்தவளை நோக்கியவன் கண்களில் அவள் நாசியின் சிவந்த நிறம் சொல்லாமல் சொல்லியது அவள் அழுததிற்கான அடையாளத்தை.

வேலை விட்டு வந்து உடை மாற்றாமல் களைப்பாக இருந்த போது கூட அவளின் அழகு அவனை போதை கொள்ள செய்தது… அவளின் அழகை இமைக்க மறந்து நோக்கியவனை வைஷ்ணவி,  “அடேய் கரப்பான் பூச்சி…. சைட் அடிச்சது போதும் வந்த விஷயத்தை சொல்லுடா” என்றாள்.

அவள் சொன்னதை கேட்டவன், ‘உளறிட்டாளா??’ என்று மனதுக்குள் நினைத்தபடி, “கீர்த்தனா நைட் க்கு வாங்க” என்று தட்டு தடுமாறி சொன்னவன் விறு விறுவென்று வெளியேறினான்.

“என்ன கார்த்திக், பொண்டாட்டிய ரூமுக்கு கூப்பிடுற போல கூப்பிடுற” என்று சத்தமாக உரைத்த வைஷ்ணவி கலகல வென சிரித்தாள். அது கார்த்திக்கின் காதிலும் விழுந்தது… ‘உன்ன போல ஒருத்தி போதும்டி என் வாழ்க்கைய

புரட்டி போடுறதுக்கு’ என்று நினைத்து மானசீகமாக தலையில் அடித்துக்கொண்டான்.

“உன்கிட்ட போய் சொன்னேன் பாரு” என்றபடி கீர்த்தனா குளிக்க போய்விட்டாள். அனைவரும் சென்றதும் வந்த தனிமை வைஷ்ணவியை ஏதோ  செய்ய “பச்… போனிலும் சார்ஜ் இல்லை” என்று முணுமுணுத்தபடி போவதற்கு வேண்டிய உடையை எடுத்தாள்.

கீர்த்தனாவும் வைஷ்ணவியும் ஒரே மாதிரி சுடிதார் அணிந்துச் செல்ல ஆயத்தமானர். கீர்த்தனா வெள்ளை சுடிதாருக்கு ஏற்றபடி தனது நீள முடியை பின்னி… பொருத்தமான நகைகள் அணிந்து பார்க்க தேவதை போல காட்சியளித்தாள்… வைஷ்ணவியோ தன் குட்டை முடியை போனி டைல் போட்டவள் காதில் தோடை தவிர எந்த மேக்கப்பும் இல்லை… நேரமாகியும் வராத தோழியை பார்த்து, “புகுந்த வீட்டுக்கு போறதுக்கு மேக்கப்பை பாரு” என்று கலாய்க்க, “நான் ஒண்ணும் மேக்கப் பண்ணல கொஞ்சம் லிப்ஸ்டிக் தான் போட்டுகிட்டேன்” என்றபடி போக ஆயத்தமானாள்.

லிப்ட்   ஐ அடைந்ததும் அதே நேரத்தில் ஆத்ரேயன் டி-ஷர்ட் அண்ட் டேனிம் ஜீன்ஸ் அணிந்து முடியை ஸ்பைக் விட்டு கட்டுமஸ்தான உடலும் கூர்மையான நாசியும் என பாலிவுட் ஹீரோ போல  வந்து சேர்ந்தான்… போர்மல் உடையில்  பார்த்ததை விட ஐந்து வயது குறைந்து இளம் பையன் போல் நின்றவனை மலைப்பாக பார்த்தாள் கீர்த்தனா.

“யூ ஆர் லுக்கிங் சோ ஹாண்ட்ஸம் அண்ட் யங் சார்” என்றவளை பார்த்து வசீகரமாக சிரித்தவன், “யூ ஆல்சோ லுக்கிங் கார்ஜியஸ் இன் திஸ் ஷல்வார்” என்றபடி லிப்ட் இல் ஏறினான்.

‘இதுங்க ரெண்டுக்கும் வேற வேலை யில்லை மாறி மாறி பியூட்டிபுல் என்றதும் ஹாண்ட்ஸம்  என்றதும்… சை’ என்று மனதுக்குள் திட்டியபடி இருந்தாள்  வைஷ்ணவி… அவனும் டின்னர்க்கு தான் வருகிறான் என்று யூகித்தவர்கள் மேற்கொண்டு எதுவும் பேசவில்லை… கார்த்திக் வீட்டுக்குச் சென்றவர்களை வரவேற்றவனின் கண்கள் அழகு தேவதையாக ஜொலித்த கீர்த்தனாவினை ஒரு முறை அளவிட்டது… அவள் பார்க்கும் போது சடாரென வைஷ்ணவியை பார்த்தவன், “வெள்ளை சுடியில் தேவதை போல சூப்பரா இருக்க வைஷு.” என்று உளறி கொட்டினான். அதை கேட்ட  ஆத்ரேயனின் விழிகள் ஒரு கணம் எட்டி வைஷ்ணவியை பார்த்தது உடனே வைஷ்ணவி, “சும்மா சொல்லி மானத்தை வாங்காம வாடா.”  என்றவாறு வீட்டுக்குள் சென்றாள்.

கீர்த்தனாவினதும் கார்த்திக்கினதும்  மௌனம் வைஷ்ணவிக்கு கவலையை கொடுத்தது. சாப்பிடும் போது கூட கீர்த்தனாவும் ஆத்ரேயனும் பேசிக்கொண்டிருந்தனர். உடனே வைஷ்ணவி தனியாக இருந்த கார்த்திக்கிடம் வந்து, “கார்த்திக், நீ கீத்துவ லவ் பண்றியா??” என்று கேட்டாள்… ஏற்கனவே கீர்த்தனா தன்னை கண்டுக் கொள்ளாமல் ஆத்ரேயனுடன் பேசியதில் கோபத்தில் இருந்தவன்,

“காதலிக்காமல் பெண்களுக்கு முத்தமிட நான் ஒன்றும் தரம் தாழ்ந்து போகவில்லை” என்றான் சூடாக…

“ஹேய் ரிலாக்ஸ் கார்த்திக்… எதுக்கு இப்படி டென்ஷன் ஆகிற???” என்று கேட்டாள்.

“பின்ன என்னடி நான் ஒருத்தன் இருக்கேன் என்ன கண்டுக்காம எல்லாரோடையும் பேசுறா” என்று ஆத்ரேயனையும் கீர்த்தனாவையும் சுட்டிக் காட்டினான். மேலும், “எங்க அவள் என்னை விட்டு போய்விடுவாளோ என்று பயத்தில் தான் அன்று கிஸ் பண்ணினேன். மூன்று வருஷ காதலடி” என்றவனை பார்க்க வைஷ்ணவிக்கு பாவமாக இருந்தது.

இழுத்து மூச்செடுத்தவள், “நீ அவசரப்பட்டுவிட்டாய் கார்த்திக்” என்று தொடங்கி கீர்த்தனாவின் மனநிலையை கூறிமுடித்தாள். “ஐயோ உண்மையா வாடி சொல்ற?” என்று அவனுக்கும் அது அதிர்ச்சியாக இருந்தது. “இது உனக்கு தேவையா?” என்று தன்னை தானே சுட்டிக் காட்டி வடிவேல் பாணியில் பேசியவனை பார்த்து விழுந்து விழுந்து சிரித்தாள். அவள் மனசுக்குள் இருக்கும் காதலை கொண்டுவர ஒரே ஒரு வழி  தான் இருக்கு என்று யோசித்தவள் தன் திட்டத்தை கார்த்திக்குக்கு தெரிவித்தாள். “என்னது???” என்று அதிர்ச்சியடைந்தவன் மேலும், “பிள்ளையார் பிடிக்க போய் குரங்காய் மாறினா என்னடி பண்றது??” என்றான் பாவமாக…

“நல்லதே  நடக்கும்” என்றவள் திட்டத்தை செயல்படுத்த தொடங்கினாள். அவர்களுக்கு தெரியவில்லை அவர்களின் திட்டம் தூங்கிக் கொண்டிருந்த சிங்கத்தை தட்டி எழுப்ப போகிறது என்று.

பேசிக்கொண்டிருந்தவர்களுக்கருகில் வந்த வைஷ்ணவி கீர்த்தனாவின் காதில் ரகசியமாக, “இந்த நெட்டையனோட உனக்கென்ன பேச்சு வேண்டி கிடக்கு? பேசாம எழுந்து வாடி” என்றாள். ஆனால் அது தெளிவாக ஆத்ரேயனுக்கு விளங்கியது… அதை கேட்டு சங்கடப்பட்ட கீர்த்தனா, ” சாரி சார், ஹவ் டு கோ… எக்ஸ்க்யூஸ் மீ” என்றாள்.

“நோ ப்ரோப்லேம் யூ கேர்ரி ஆன்” என்றவாறு தலையை மற்ற பக்கம் திருப்பியவன் மறந்தும் வைஷ்ணவியை பார்க்கவில்லை… அவளும் அதனை சட்டை செய்யாமல் கீர்த்தனாவை இழுத்துக் கொண்டு போனாள்.

“கொஞ்சம் கூட உனக்கு மேனர்ஸ்   இல்லையாடி ??? அவர் என்ன நினைச்சிருப்பார்??” என்று புலம்பியவாறே பின்னால் சென்றாள். “உன் அவர் என்ன நினைச்சாலும்  எனக்கு கவலை இல்லை…. உன் கூட பர்சனல் ஆக கொஞ்சம் பேசணும்” என்றவள் அவளை பால்கனிக்கு கூட்டி வந்தாள்.

“இப்போ சொல்லு உனக்கு கார்த்திக்கை பிடிக்கலையா??” என்று கேட்டவளை பார்த்து, “நான் அப்போ சொன்னதை  தான் இப்போவும் சொல்றேன். இனி இந்த விஷயத்தை பற்றி என்கிட்ட பேசாத” என்றாள் கடுமையாக…

“சோ  உனக்கு பிடிக்கல அப்படித்தானே?” என்றவளிடம், “நீ என்ன செவிடா??” என்றாள்.

“அப்போ நான் கார்த்திக்கை லவ் பண்ணலாம்னு இருக்கேன்… அவனுக்கு உன்னால கொஞ்சம் டிப்ரஷன் ஆக இருக்கு… ஆல்ரெடி எனக்கு அவன் மேல  ஒன் சைடு லவ் இருக்கு… அவனை இந்த நிலையில சத்தியமா பார்க்கமுடியல” என்று குனிந்தபடி வராத கண்ணீரை துடைத்தவளை, நம்புவதா? வேணாமா? என்று சந்தேகமாக பார்த்தாள்.

அவளின் சேட்டைகள் தெரிந்தவள்  தான் கீர்த்தனா, ஆனால்  அவள் எப்போதும் இவ்வாறு கவலைப்பட்டு பேசியதில்லை. ‘எப்படி இருந்தாலும் உண்மை வெளியில் வர தானே வேணும்’ என்று நினைத்தவள், “ஆல் தி பெஸ்ட்” என்றபடி அவளை விட்டு விலகி ஹாலுக்குள் சென்றாள்… அவள் கண்ணில் கண பொழுதில் தெரிந்த வலி தான் வைஷ்ணவிக்கு துருப்பு சீட்டானது. ஒரு பெருமூச்சை விட்டவள், “உனக்கு டிரீட்மென்ட் தரணும்டி” என்றபடி கார்த்திக்கிடம் சென்று இருவரும் தங்கள் அடுத்த திட்டத்தை போட்டனர்.

எல்லாம் முடிந்து வீடு செல்லும் போது கூட கீர்த்தனா கார்த்திக்கிடம் ஒரு வார்த்தை கூட பேசவில்லை. ‘ஏதோ ரேப் பண்ணின போல ரொம்ப தான் சீன் போடுறா’ என்று கார்த்திக் மனதுக்குள் அவளை அர்ச்சித்து கொண்டிருந்தான். அன்று நடந்த நினைவு அவனை கொள்ளாமல் கொன்றது. அவள் இதழை மீண்டும் சுவைக்க தோன்றிய ஆர்வத்தை கட்டுப்படுத்தியவாறு மேலே பார்த்தான்.

“என்ன கார்த்திக் இப்போ தான் உங்க வீட்டை சுற்றி பார்க்கிறீர்கள் போல” என்று கிண்டலடித்த ஆத்ரேயன் அவனிடம் கை குலுக்கி விடை பெற்றான். ‘எல்லாம் உன்னால தான் டா பாவி.’ என்று மனதுக்குள் அர்ச்சித்தவன், “தேங்க்ஸ் போர் கமிங் சார்” என்றபடி சினேகமாக புன்னகைத்து லிப்ட் ஐ நோக்கி அவர்களுடன் நடந்தான்.

அப்போது வைஷ்ணவி  யாரும் எதிர் பார்க்காத விதமாக, “பை கார்த்திக்… ஐ மிஸ் யூ”  என்றபடி  அவனை அணைத்தாள் . இதனை கீர்த்தனா ஆச்சரியமாகவும் ஆத்ரேயன் நெற்றியை சுருக்கியும் பார்த்தனர். கார்த்திக்கும் பதிலுக்கு அணைத்துவிட்டு அவள் கன்னத்தோடு தன் கன்னத்தை உரசியவன் கடைக்கண்ணால் கீர்த்தனாவை நோட்டமிட்டான். அவள் கண்களில் என்ன தெரிந்தது என்று அவனால் ஊகிக்க முடியவில்லை.

 “டேய் அங்கே பார்த்தது போதும் என்ன விடுடா” என்று  அவனுக்கு  கேட்கும் குரலில் மட்டும் கூறினாள். சிரித்துக்கொண்டே அவளை விட்டவன், “பை வைஷு குட்டி” என்றபடி தன் வீட்டை நோக்கி நடந்தான். கீர்த்தனாக்கு ஏதோ ஒன்று உடைந்தது போல இருந்தது. அவளுக்கு தெரியும் கார்த்திக் இவ்வாறு விளையாட கூடியவனல்ல என்று.

கார்த்திக் அவள் கன்னத்தோடு கன்னம் வைத்து உரசியதையும் குழைந்து பேசியதையும் கண்ட ஆத்ரேயன் சினத்தின் உச்சத்தில் இருந்தான். வீட்டுக்கு வந்தவனால் நிம்மதியாக இருக்க முடியவில்லை. கதவை திறந்துக் கொண்டு வைஷ்ணவியிடம் பேச வேண்டும் என்ற வெறியில் அவள் வீட்டை நோக்கிச் சென்றான்.

அவன் வீட்டருகில் சென்றதும் வராந்தாவில் கீர்த்தனாவும் வைஷ்ணவியும் பேசியது தெளிவாக விளங்கியது. கீர்த்தனா அவளை நோக்கி, “உன் பெயரை கெடுத்துக் கொள்ளாதே” என்று உரைத்தாள். ‘ஆஹா பொறாமை ஸ்டார்ட்  ஆகிடுச்சே… கீது ஐ   வாண்ட்  மோர் எமோஷன்’ என்று மனதுக்குள் நக்கலடித்தவள் முகத்தை சீரியஸ் ஆக வைத்து கொண்டு, “காதலனை கட்டிப்பிடிக்கிறது தப்பிலேயே” என்றாள்.

சொல்லி விட்டு நிமிர்ந்து பார்த்தாள், கைகளை கட்டியபடி வாசலில் ருத்ரமூர்த்தியாக ஆத்ரேயன் கீர்த்தனாக்கு பின்னால் நின்றுக் கொண்டிருப்பதை. அவளின் அதிர்ச்சியை பார்த்து திரும்பிய கீர்த்தனாவும் அதிர்ந்து நின்றாள். வாயை பிளந்து நின்றவர்கள் முன்னாடி சொடக்கிட்டவன், “இது வராந்தா யாரும் பார்ப்பாங்க… லெட்ஸ் கோ இன்சைட்” என்று அவர்களின் கதவை நோக்கி கை காட்டினான்.

கையிலிருந்த திறப்பினால் கதவை திறந்து உள்ளேச் சென்ற கீர்த்தனா “உள்ளே வாங்க சார்” என்றாள். உள்ளேச் சென்றவன் திரும்பி, “உனக்கு மட்டும் தனியா சொல்லணுமா? உள்ளே வா”  என்றான் வைஷ்ணவியை நோக்கி.  அவளும், “உன் பாடு இன்று திண்டாட்டம் தான் வைஷு” என்று முனகியபடி உள்ளே வந்தாள். கதவை சாத்தியவன் கதவில் ஒரு காலை முட்டு கொடுத்து இரு கைகளையும் கட்டிக் கொண்டு வைஷ்ணவியை கூர்ந்து பார்த்தான். அவன் பார்வை வீச்சை தாங்காமல் ஒரு கணம் குனிந்தவள், ‘நீ  எதற்கு பயப்படணும்… நீ  தான் ஒரு தப்பும் செய்யவில்லையே’ என்று மனசாட்சி கேள்வி கேட்க நிமிர்ந்து அவன் பார்வை வீச்சை தாங்கி நின்றாள்.

“நீ கார்த்திக்கை லவ் பண்றியா?” என்று நேரடியாக கேட்டான். பக்கத்தில் இருந்த கீர்த்தனாவை பார்த்து, ‘எங்கே வந்து என்ன கேள்வி கேக்குது பாரு.’ என்று அவனை மானசீகமாக கடிந்தவள்,  வெண்ணை திரண்டு வரும் போது தாழியை உடைக்க விருப்பமில்லாமல், “எஸ் ஐ லவ் ஹிம்” என்றாள் நெஞ்சை நிமிர்த்தியபடி.

அவளின் திமிர் அவனின் கோபத்தை பன்மடங்காகியது. அவளை காயப்படுத்த வேண்டும் என்ற வெறி மீண்டும் உருவாக்கியது.

“சோ பிஸிக்கல்லி யூ நீட் சம் சப்போர்ட்… ரைட்?” என்றவாறு  ஒற்றை புருவத்தை தூக்கியவனை வெறிக் கொண்டு பார்த்தவள், “எஸ் டெபனட்லி, காதலில் அதுவும் உள்ளடக்கம் தானே… மோர்ஓவர் உங்களுக்கு நான் பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை. இது உங்க ஆபீஸ் இல்லை இப்படி தடாலடியாக வந்து கேள்வி கேட்பதற்கு. எனக்கும் என் காதலனுக்கும் ஆயிரம் இருக்கும் அது உங்களுக்கு அவசியமில்லாதது.  சோ ப்ளீஸ் கெட் அவுட் ஆப் மை ஹவுஸ்” என்று அனல் பறக்க பேசியவளை கண்டு ஆத்ரேயனின் பொறுமை காற்றில் பறந்தது.

அவள் பேசி முடிக்க முன் அவனின் வலது கரம் அவளின் இடது கன்னத்தை பதம் பார்த்திருந்து. எல்லாவற்றையும் அதிர்ச்சியுடன் பார்த்த கீர்த்தனா, “சார்” என்றபடி வைஷ்ணவி அருகில் வர முற்பட்டவள், அவனின் சினம் கொண்ட பார்வையையும் வரவேண்டாம் என்ற தோரணையில் காட்டிய கையசைவையும் கண்டு ஒரு கணம் விக்கித்து நின்றாள். கையால் கன்னத்தை பொத்தியபடி கோர்த்திருந்த கண்ணீர் கீழே விழாமல் இருக்க அரும்பாடு பட்டாள். ‘இவன் முன்னால் அழாதே’ என்று மனதுக்கு கடிவாளமிட்டு கொண்டிருந்தாள்.

அப்படியும் கோபம் குறையாதவன் அவளின் கழுத்தை பிடித்து அவளை சுவரில் ஒண்ட வைத்தவன் கோபம் கொப்பளிக்க, “அவன் உனக்கு காதலன் இல்லடி கள்ள காதலன். இப்பவும் நீ Mrs வைஷ்ணவி ஆத்ரேயன் தான்” என்று உறுமியவாறு அவளை  சுவருடன் சாய்த்து அவள் உதடுகளை தன் உதடுகளால் அழுந்த மூடினான். தன் கோபத்தை தணிக்க அவனுக்கு அந்த இதழொற்றல் தேவையாக இருந்தது. கண நேரத்துக்கு பின் அவள் உதடுகளை கடித்துவிட்டு அவளை உதறி தள்ளியவன் தன்னை சமநிலைப்படுத்தும் பொருட்டு ஜன்னல் அருகே வந்து  ஜன்னலை திறந்துவிட்டு பாக்கெட்டில் இருந்த சிகெரெட்டை வாயில் பற்ற வைத்து அதனை புகைக்க தொடங்கினான்.

கீர்த்தனாக்கு பேரிடியாகவும் தர்மசங்கடமாவும் இருந்ததோடு மட்டுமில்லாமல் வைஷ்ணவிக்கும் அது அதிர்ச்சியாக இருந்தது. அவன் அறைந்ததை தாங்கிக் கொண்டவாளால் அவனின் முத்த தாக்குதலை தாங்கிக்கொள்ள முடியவில்லை. அவளின் மூளை வேலை நிறுத்தம் செய்தது. அவள் கையை மீறி கண நேரத்தில் எல்லாம் நடந்து முடிந்திருந்தது. கொஞ்ச நேரம் அங்கு மௌனம் நிலவியது.

கீர்த்தனா மனதுக்குள்,  ‘அடிப்பாவி! நீயும் எனக்கு உண்மையா இருக்கவில்லையா?’ என்று வைஷ்ணவி மீது அர்ச்சனையை தூவிக் கொண்டிருந்தாள். இப்படியொரு பெரிய விடயத்தை  தன்னிடமிருந்து மறைத்து தனது நட்புக்கே களங்கமேற்படுத்திவிட்டாள் என்ற ஆதங்கத்தை தாங்க முடியாமல் அவள் கண்ணிலிருந்து கண்ணீர் வழிந்தது.

வைஷ்ணவிக்கும் அதே நினைப்புதான். தோழி தன்னை தப்பாக நினைத்திருப்பாள் என்ற எண்ணமே அவளுக்கு மேலோங்கி இருந்தது. நிதானத்துக்கு வந்தவள் ஆத்ரேயனின் முதுகை நோக்கி, “விவாகரத்து ஆன பிறகு கணவனின் பெயர் சொல்லி அழைப்பது இல்லை Mr ஆத்ரேயன்…. நான் இப்போதும் Miss. வைஷ்ணவி மலர்வேந்தன் தான் எனக்கு இன்னொருவரை காதலிக்கவும் கரம் பிடிக்கவும் முழு உரிமை இருக்கிறது… என்னில் உங்களுக்கு எந்த உரிமையும் அதிகாரமும் இல்லை.” என்றாள் கடிக்கப்பட்ட தன் உதடுகளை தடவியவாறு.

அதனை கேட்டு சத்தமாக சிரித்தவன், திரும்பி அவளை நெருங்கி நின்று கைகளை மார்புக்கு குறுக்காக கட்டியபடி,  “விவாகரத்து ஆகி இருந்தால் நான் ஏன் உன்னை  Mrs வைஷ்ணவி ஆத்ரேயன் என்று அழைக்கப்போகிறேன்?” என்றான் ஒற்றை புருவத்தை உயர்த்தி.

‘இதெப்படி சாத்தியம்’ என்று மனதுக்குள் நினைத்தவள் அதனை கேட்கப்போக கையை காட்டி அவள் பேசுவதை நிறுத்தியவன்,

“விவாகரத்து எடுத்து விட்டு நீ என்ன வேணும் என்றாலும் பண்ணிக் கொள். நான் கண்ணசைத்தால் ஆயிரம் பெண்கள் என் பின்னால் வருவார்கள். எனக்கு உன்னை போல தகுதி இல்லாதவளுடன் வாழ விருப்பமில்லை. என் அழகுக்கும் அறிவுக்கும் நீ கால் தூசு…குட் பை” என்று இறுகிய முகத்துடன் கதவை திறந்து வெளியேறினான்.

அவனின் காயப்படுத்தும் பேச்சில் தன்னை மறந்து நின்றவள், அவனின் எந்த செயலையும் கவனிக்கவில்லை. அவளின் முழு மனதும், ‘அதெப்படி விவாகரத்து ஆகாமல் இருக்கும்?’ என்று யோசித்துக் கொண்டே இருந்தது.  கீர்த்தனாவை பார்க்க சங்கடப்பட்டுக்கொண்டு குளியலறையில் சென்று கதவை சாத்திக் கொண்டாள். கதவில் சாய்ந்து நின்று,  “கடவுளே! எனக்கு மட்டும் ஏன் இந்த சோதனை? எனக்கு வாழ்க்கையில் நிம்மதியே இல்லையா?” என்று புலம்பியவளின் கண்களில் இருந்து தாரை தாரையாக கண்ணீர் வழிந்தது.

தன் வீட்டுக்கு சென்ற ஆத்ரேயனோ, ஏன் அவளை முத்தமிட்டோம் ஏன் அவளை காயப்படுத்துகிறோம் என்று புரியாமல்  தடுமாறியபடி பிரிட்ஜ் இல் இருந்த மதுபானத்தை எடுத்து அருந்தியவன் அப்படியே கட்டிலில் சரிந்தான்.

எல்லாவற்றையும் பார்த்த கீர்த்தனா அதிர்ச்சியுடன் சோபாவில் அமர்ந்தாள்.  நண்பியின் வாழ்க்கைக்காக  கவலைப்படுவதா? அல்லது அவள் தனக்கு செய்த துரோகத்தை நினைத்து கோபப்படுவதா? என்று புரியாமல் கலவையான உணர்ச்சிகளில் இருந்தாள். ஆத்ரேயனை அவளால் புரிந்துக் கொள்ள முடியவில்லை. 

‘வைஷ்ணவி தேவையில்லை என்றால் விலகிச் செல்ல வேண்டியது தானே…ஏன் அவளை முத்தமிட வேண்டும்?’ என்று ஒரே கேள்வியை திரும்ப திரும்ப கேட்டுக்கொண்டாள்,அதற்கு விடை  தேடும் பொருட்டு.

❤️ Loading reactions...
0 Comments
Oldest
Newest Most Voted
error: Content is protected !!
Scroll to Top