அத்தியாயம் 7

“நாலு பேரும் நல்லா தாண்ணா இருந்தாங்க …பாய்ஸ்ல எப்படி ஆறு பேரு சேம் காலேஜ்ல இருந்து வந்திருந்திருந்தோம்..

பம் நானும் குமார் மட்டும் க்ளோஸ் ஃப்ரெண்ட்… அதே மாதிரி அவங்க நாலு பேருமே சேம் காலேஜ்ல இருந்து தான் இங்க வந்தாங்க…

நாலு பேருமே ரொம்பவே குளோஸ் ஃப்ரெண்ட்ஸ்.. நடுவுல இந்த கிறிஸ்டோபர் இருக்கானே எங்க கிளாஸ்  ரெப்ரசென்டேட்டிவ்… அவனால தாண்ணா பிரச்சனை …

 

யாராவது ஒண்ணா இருந்தாலே அவனுக்கு பிடிக்காது… நடுவுல போய் குட்டையை குழப்பி விட்ருவாங்க…

கிளாஸ் ஆரம்பிச்சதும் முதல்ல கவிதா கௌசல்யா அஸ்வினி மூணு பேரும்தான் ஜாயின் பண்ணாங்க ..அதுக்கு அடுத்து ரெண்டு வாரம் கழிச்சு தான் நறுமுகை ஜாயின் பண்ணா..

 

அந்த ரெண்டு வாரம் பாய்ஸ்சும் கேர்ள்ஸ்ம் அவ்வளவா பேசவே மாட்டாங்க… கிறிஸ்டோபர் கிட்ட தான் ஏதாவது டவுட்னா கேட்பாங்க …அப்படித்தான் கவிதா கேட்பா …கிறிஸ்டோபரும் பதில் சொல்லுவான்…

முதல் முதல்ல எங்க கிளாஸ்ல பேசிக்க ஆரம்பிச்சதுனா அது கவிதாவும் கிறிஸ்டோபரும் தான் …அதுக்கப்புறம் நறுமுகை சேர்ந்தா… அவ என்கிட்டயும் குமார் கிட்டயும் நல்லா பேசுவா..

 

பட் கிறிஸ்டோபருக்கு எங்க ரெண்டு பேரை பார்த்தாலே ஆகாது ..என்னதான் எங்க கிட்ட நல்லா சிரிச்சு பேசினாலும் அவனுக்கு நான் குமார் கூட சேருவது பிடிக்காது…

 

நறுமுகை இப்ப எங்க கூட நல்லா பேசுறதால அவளையும் பிடிக்காம போச்சுண்ணா… என்னன்னு தெரியல அவன் பாட்டுக்கு அவளை பத்தி தப்பு தப்பா ரூமரை கிளப்பி  விட்டுட்டான்…

அந்த மூணு பொண்ணுங்களும் இவன் எதாவது சொன்னா வேதவாக்கு மாதிரி கேட்டுப்பாங்க …

 

நறுமுகை அப்படியே ஆப்போசிட் …நீ சொன்னா நான் எதுக்கு கேட்கணும்..?  என்கிற மைண்ட் செட் அவளுக்கு..

அது அப்படியே முட்டிக்கிச்சு.. இதுல லாஸ்ட் இயர் ஒன் வீக் ட்ரிப் வேற கூட்டிட்டு போனாங்களே.. அப்போ நறுமுகையோட அம்மா கிறிஸ்டோபரை பார்த்து என் பொண்ணை பத்திரமா பார்த்துக்கோனு வேற சொல்லிட்டாங்க…

 

அந்த பொண்ணு எங்க கூட ஜாலியா பேசி சிரிச்சுகிட்டு டான்ஸ் ஆடிட்டு செம என்ஜாய்மென்ட்டா வந்துச்சு.. அது அந்த கிறிஸ்டோபருக்கு புடிக்கல போல …கவிதாவை கூப்பிட்டு அவ ஏன் டான்ஸ் ஆடுறா..?  அவ ஏன் பசங்க கிட்ட பேசுறா?? அவங்க அம்மா என்னை பார்த்துக்க சொன்னாங்க அவ ஏன் இப்படி எல்லாம் நடந்துக்கிறான்னு ஒரே குறை…

 

கவிதாக்கும் நம்ம ஃப்ரண்டை இன்னொருத்தன் இப்படி சொல்றானே நீ எப்படிடா என் ஃப்ரண்டை சொல்வேன்னு கேட்கலை…

 

கிறிஸ்டோஃபர் சொல்றதை தலையாட்டி கேட்டுட்டு நறுமுகை கிட்ட வந்து ஒரே திட்டு.. அவளும் என்ன பண்ணுவா? என்னை எதுக்கு கண்ட்ரோல் பண்ற நான் நார்மலா தான் எல்லார்கிட்டயும் பழகுறேன் அவன் சொல்றான்னு ஏன் என்கிட்ட வந்து சொல்றேன்னு ரெண்டு பேருக்கும் முட்டிக்கிச்சு…

 

சரி கூட இருக்கிற ஃப்ரண்ட்ஸாவது ரெண்டு பேரையும் சமாதானப்படுத்துவாங்கன்னு பார்த்தா அவங்களும் கவிதாக்கும் கிறிஸ்டோபருக்கும் சப்போர்ட் பண்ணி நறுமுகையே டீல்ல விட்டாங்கண்ணா…

 

பாவம் கேர்ள்ஸ்க்குனு ஒரு வாட்ஸ்அப் குரூப் கூட கிரியேட் பண்ணி இருந்தாங்க.. அதுல  ஒரே சண்டை போட்டு இப்ப நாலு பேரா இருந்தவங்க மூணு பேரா மாறிட்டாங்க …

 

அவங்க எல்லாம் ஒரே பெஞ்சில தான் உட்காருவாங்க… சண்டை போட்ட அப்புறம் கவிதா நறுமுகை பக்கம் கூட திரும்பவில்லை. …

அதனால அவ ரொம்பவே அழுவா… என்னைவிட குமார் கூட தான் அவ ரொம்பவே க்ளோஸ்… குமார் கூட என்கிட்ட சொல்லி பீல் பண்ணுவான்..

 

அந்த பொண்ணுங்க ஏன்டா இப்படி பண்ணுதுங்க இவகிட்ட பேசலாமேனு… ஏன் நானும் குமாரும் கூட கவிதா கிட்ட பேசி பார்த்துவிட்டோம் ஆனால் அவ நறுமுகை பண்ணது தான் தப்பு நான் சொல்றதெல்லாம் கேட்க மாட்றான்னு லூசு மாதிரி சொல்லிட்டு இருக்கா…

 

எப்படியோ போங்கன்னு விட்டாச்சு… நறுமுகையும் பேசுறதில்லை இப்பதான் என்னனா என்னன்னு ஏதோ ஓடுது…பட் அவளை அவங்க மூனு பேரும் எதுலையும் சேர்த்துக்க மாட்டாங்கண்ணா….”

 

அதைக் கேட்ட விக்ரமோ ,

 

“ஏன்டா ஒண்ணுமே இல்லாத விஷயத்துக்கு ஏன்டா இப்படி சண்டை போட்டுக்குதுங்க பொண்ணுங்க…?”  என்றதும் வாய் விட்டு சிரித்த ஜானும்,

 

” அதுதான் எனக்கும் தெரியலண்ணா… அவங்களுக்குள்ள ஏதாவது பிரச்சனை வந்து சண்டை போட்டிருந்தாலும் பரவால.. எவனோ ஒருத்தன் அவன் வந்து என்னவோ சொல்லிட்டான்னு லூசு மாதிரி சண்டை போட்டுக்கறாங்க… என்னத்த சொல்ல …

 

இந்த கிறிஸ்டோபர் இருக்கான் பாருங்க ..அவன் ஒருத்தவங்கள கரை வச்சுட்டான்னா போதும் யாரும் ஒண்ணா இருக்க கூடாது…அவங்களை மட்டும் தனியா பிரிச்சு எடுத்துடுவான் இவன்..

 

நறுமுகை மேல கரை வச்சுட்டான் அதான் அவளை தனியா குரூப்ல இருந்து பிரிச்சுட்டான்.. ஆனா எனக்கு என்னவோ கிறிஸ்டோபர் மட்டும் இதுக்கு காரணமா இருக்க மாட்டான்னு தோணுது…

கூட இருக்குறவங்க கௌசல்யா அஸ்வினி ரெண்டுத்துல யாராவது ஒருத்தர் கவிதாவை ட்ரிகர் பண்ணி இருப்பாங்க அதான் சண்டை பெருசாகி இருக்கும்னு தோணும்…”

இடுப்பில் கரம் ஊன்றி ஜானை பார்த்த விக்ரம்,

 

” இப்ப நான் என்னடா பண்ணனும்…? பேசாம நானே ப்ராஜெக்ட் பண்ணிடவா அந்த பொண்ணுக்கு ?” என்றதும் ஜான்  அவசரமாக,

 

“அண்ணா அப்படி எல்லாம் இல்லண்ணா… நீங்க கொஞ்சம் சாஃப்டா சொல்லுங்களேன்.. கண்டிப்பா இந்த பொண்ணு செய்வா …இப்ப கூட அவ ஃபோன் பண்ணி நீங்க அவளை திட்டுனதா கூட சொல்லல..

எனக்கு எதுவுமே தெரிய மாட்டேங்குது நான் ஒரு வேஸ்ட், தண்டம் ..நான் இனிமேல் காலேஜுக்கு வரமாட்டேன் படிக்கறதுக்கே லாயக்கு இல்லைன்னு ஒரே அழுகை..

 

நான் தான் பேசி சமாதானப்படுத்தி அனுப்பி இருக்கேன்.. அவங்க வீட்ல வேற மாப்பிள்ளை பார்க்கிறாங்கண்ணா…

 

இந்த பொண்ணுக்கு இஷ்டமே இல்ல ..ஆனா அவங்க வீட்ல கேக்குற மாதிரி இல்ல போல அவங்க அப்பாக்கு இப்பவே.. பொண்ணுக்கு கல்யாணம் பண்ணி வச்சிடனும்னு ஆசை…

 

இவ படிப்பு முடிஞ்ச அப்புறம் பண்ணிக்கணும்னு இருக்குறா.. ஆனா அவங்க அப்பாவும் அம்மாவும் கேக்க மாட்றாங்க.. அது வேற அவளுக்கு ஒரு மாதிரி ஸ்ட்ரெஸ்சா இருக்கு..

 

இவ வேற படிப்பு வரல காலேஜ் விட்டு நிக்கிறேன் வேற சொல்றா… அதுக்காகத்தான் உங்ககிட்ட பேசுறேன்.. வேற எதுவும் இல்ல ..நிஜமாகவே அந்த பொண்ணு நல்ல பொண்ணுண்ணா…

ப்ளீஸ் அண்ணா ….” என கிட்டத்தட்ட இறைஞ்சினான் ஜான்…

 

அவனை அழுத்தமாய் பார்த்த விக்ரம் ,

 

“சரி ..நான் சாஃப்ட்டா ஹேண்டில் பண்ணுறேன்.. இதுதான் லாஸ்ட்  ஜான்…ஏன்னா பிரண்ட்ஷிப் வேற வேலை வேற ….என் வேலைல யார் இன்டர்ஃபியர் ஆனாலும் பிடிக்காது….புரிஞ்சுதா..?”  என சிறு கண்டிப்புடன் கூறியதும் அவனது கைகளை பற்றி கொண்ட ஜான்,

 

” ஓகேண்ணா… ஓகேண்ணா… புரியுதுண்ணா… நீங்க ஃப்ரீயா விடுங்கண்ணா… நீங்க மட்டும் அவளுக்கு ஜஸ்ட் எடுத்து விடுங்களேன் ..அவ கரெக்டா போயிடுவா..”  என்றதும் சிரிப்புடன் தலையாட்டி  கொண்டான் விக்ரம் …

 

பின் நினைவு வந்தவனாய் ஜானிடம்,

 

“ஆமா… கிறிஸ்டோபர் நறுமுகை பத்தி என்னமோ ரூமரை கிளப்பி விட்டான்னு சொன்னியே என்ன அது..?” என கேட்டதும் தயங்கிய ஜான் பின்,

 

“அது…அவளும் குமாரும் லவ் பண்றாங்கன்னு…”என்றதும் விக்ரமின் விழிகள் இரண்டும் கூர்மையானது..

 

“உனக்கு எப்படி தெரியும்…?”

 

“அது…சாமுவேல் அண்ணா தான் சொன்னாரு…உன் கிளாஸ் பொண்ணு நறுமுகையும் குமாரும் லவ் பண்றாங்களான்னு கேட்டாரு…நான் இல்லைனு சொன்னேன்…பட் அவர் நம்பலை…குமாரை கூட்டிட்டு வந்து சத்தியம் பண்ணாத குறையா பேசுன அப்பறம் தான் அவர் நம்புனாரு…

 

அப்பறம் யார் இப்படி சொன்னாங்கனு கேட்டப்போ கிறிஸ்டோபர் பெயரை சொன்னாரு…ரொம்பவே ஷாக்கிங்கா இருந்துச்சு…

 

நாங்க எல்லாம் லயோலா காலேஜ்ல தான் படிச்சோம்…அங்க கிறிஸ்டோபருக்குன்னு ஒரு பேர் இருக்கு…அவ்வளவு பொறுப்பா நடந்துப்பான்…

 

பட் அவன் இந்தளவு ஒரு பொண்ணை பத்தி தப்பா ரூமரை கிளப்பி விடுவான்னு நினைக்கலை…இத்தனைக்கும் குமாரை அவனுக்கு அவ்வளவு பிடிக்கும்…ம்ம்ம்…சரியான சைக்கோ அண்ணா அவன்…”

 

யோசனையுடன் அதை பார்த்த விக்ரம் பின் அவனிடம் விடைப்பெற்று சென்று விட்டான்…

விக்ரம்  லேபிற்கு செல்ல லிஃப்டுக்காக காத்துக் கொண்டிருக்க , அந்த நேரம் படிகளில் இறங்கும் பெண்களின் பேச்சு சத்தம் தெள்ளத் தெளிவாக கேட்டது…

 

” முகை மூஞ்சு அப்படி இருந்துச்சு …எனக்கு தெரிஞ்சு அவளுடைய எண்ணம் தாண்டி அவ இப்படி இருக்கிறா …

லூசு மாதிரி அந்த விக்ரம் அண்ணா கிட்ட எதையாவது சொல்லி இருக்கும்…

அதனால தான் திட்டு வாங்கி இருப்பா.. நல்லா வாங்கட்டும்.. அப்பவாவது அது அடங்குதான்னு பார்ப்போம்…ஒரு ப்ராஜெக்ட் பண்றோம் எப்படி இருக்கணும்னு கூட அவளுக்கு தெரியாது …

இவ்ளோ மோசமா இருப்பாளா…அவ அந்தளவு நடந்துக்க போய் தானே அந்த அண்ணா திட்டி இருக்காரு…

நல்ல வேலை என்கூடலாம் அவளை போடலை… இல்லைன்னு நினைச்சுக்கோ ரொம்ப கஷ்டம் …” என பேசியது வேறு யாரும் அல்ல கௌசல்யா தான்… அருகே வந்த கவிதாவோ,

 

 

“லூசு சும்மா இருடி… அவளே  ஃபீல் பண்ணிட்டு இருக்கா.. நீ வேற பேசிக்கிட்டு…”  

 

அன்று கௌசல்யாவும் கல்லூரிக்கு வந்திருந்தாள்… அவளது பேராசிரியர் மலர்விழி அவளுடைய கைடை பற்றி கூறுவதற்காக கல்லூரிக்கு வரச் சொல்லி இருந்தார்…

அதனால் வந்திருந்தாள் கௌசல்யா …

 

பின் லேபில் சிறிது நேரம் வேலை பார்த்தவள் கவிதாவுடன் வீட்டிற்கு கிளம்பலாம் என படி இறங்கி வரும் நேரம் தான்  கவிதா வருத்தப்பட்டு நறுமுகையை பற்றி கூறியது …

அதற்கு கௌசல்யா அளித்து கொண்டிருந்த பதிலை தெள்ளத் தெளிவாக கேட்ட விக்ரம் சட்டென்று விழிகள் சுருக்கி பக்கவாட்டாய் திரும்பி பார்த்திட , அங்கு கவிதா விக்ரமை அங்கு எதிர்பாராததால் அதிர்ந்து போய் கெளசல்யாவின் கையை பிடித்து அழுத்தம் கொடுத்தவள்,

 

” விக்ரம் சாருடி ..” என அடிக்குரலில் கூறியதும்,  விக்ரம் அவர்கள் இருவரையும் அழுத்தமாக பார்த்தவாறு நின்றிருந்தான்…. 

 

கௌசல்யாவும் பயத்தில் பேச்சினை விட்டவள்,

 

” குட் ஈவினிங் சார்..”  என்றதும் கவிதாவும் ,

 

“குட் ஈவினிங் சார்…”

 

” குட் ஈவினிங்” என்றவன் தலையை திருப்பிக் கொண்டான்…

லிப்ட்டும் திறந்து கொள்ள அதில் ஏறிக்கொண்ட விக்ரமிற்க்கு கௌசல்யா பேசியதை தான் மெல்ல அசை போட்டான் …

 

அதன் பின்  தன் வேலையை முடித்துக் கொண்டு வீட்டிற்கு சென்றிட, மறுநாள் காலையில் வழக்கம் போல மொட்டை மாடியில் உடற்பயிற்சி செய்தவனது கண்ணில் பட்டது அவன் அன்னை வளர்க்கும் துத்தி செடி…

 

செடி வளர்ப்பதில் அவரது அன்னைக்கு மட்டுமல்ல தந்தைக்குமே ஆர்வம் அதிகம்… பூச்சிப்பொட்டு இல்லாமல் நன்றாக வளர்ந்து இருந்த துத்தியை பார்த்தவன் என்ன நினைத்தானோ கண்ணில் பட்டவரை அனைத்தையும் கவரில் எடுத்துக்கொண்டு பத்திரப்படுத்தியவன் நறுமுகைக்கு கொடுப்பதற்காக கல்லூரிக்கு கொண்டு வந்திருந்தான்…

 

ஆனால் அவளோ கல்லூரியை விட்டு நின்று விடுவதாக கூறியதும் கடுப்படைந்தவன் சமாதானம் செய்து தான் கொண்டு வந்த துத்தியையும் தந்து விட்டிருந்தான்…. 

 

அதை கண்டதும் அவளது முகத்தில் தோன்றிய மகிழ்ச்சியை ஒரு கணம் நினைத்துப் பார்த்தவன் சிறு புன்னகையுடன் தன் வேலையை பார்க்கத் தொடங்கினான்…

 

 

❤️ Loading reactions...
0 Comments
Oldest
Newest Most Voted
error: Content is protected !!
Scroll to Top