சுரதையும் வேம்புவும் ஹாலிற்கு சென்றுவிட… இப்போது கவிதாவை தான் நறுமுகைக்கு அருகே அமர்ந்திருந்தாள்…
அவளது பார்வை நறுமுகையின் முகத்தை விட்டு துளியளவும் நகர்ந்திடவில்லை… நறுமுகைக்குத்தான் அவளை நிமிர்ந்து பார்க்க அத்தனை சங்கடமாக இருந்தது…
கைகளை பிசைந்தபடி இருந்தவள் பின் ஒரு பெரும் மூச்சுடன் நிமிர்ந்து கவிதாவை பார்த்து ,
“கவிதா…” என்றதும் தான் தாமதம் பட்டென அவளது கரத்திலேயே ஒன்று போட்டவள்,
” ஒரு வார்த்தை கூட சொல்லல.. அன்னைக்கு நான் கேட்டதுக்கு செட் ஆகலேன்னு சொன்ன..??? இப்ப கல்யாண வரையும் வந்திருக்கு …அவ்வளவு தானே முகை… ” என கேட்கும் போதே குரல் தளும்பியது கவிதாவிற்கு…
என்னதான் இருவருக்குள்ளும் சில மனக்கசப்புக்கள் இருந்தாலும் ஒருவர் மீது ஒருவர் அதிக அன்பை வைத்திருந்தனர் …
அந்த அதீத அன்பே அவர்களது உறவில் விரிசல் வருவதற்கு காரணமாகி விட்டது…
நறுமுகை அவளது கரத்தைப் பிடித்துக் கொண்டு,
“ப்ச்… சொல்லக்கூடாதுன்னு இல்ல கவிதா …உன்கிட்ட சொல்லாம நான் வேற யார் கிட்ட சொல்ல போறேன்..!.. அவர் தான் விஷயம் யாருக்கும் தெரியக்கூடாது தெரிஞ்சா தேவையில்லாம பேச்சு வரும்னு ஸ்ட்ரிட்டா சொல்லிட்டாரு.. என்னால என்ன பண்ண முடியும் ..??
இத்தனைக்கும் அவர்தான் மாப்பிள்ளைனு கூட எனக்கு தெரியாது …பொண்ணு பார்க்குற அன்னிக்கு தான் தெரியும் .. அவர் எப்படியும் ஓகே சொல்ல மாட்டாருன்னு நினைச்சுட்டு இருந்தேன்..
பார்த்தா பையன் வீட்டில் இருந்து ஓகே சொல்லிட்டாங்க நானும் சம்மதம் சொல்ல போறேன்னு எங்க அப்பா சொல்றாரு… என்னை என்ன பண்ண சொல்ற…?”
“ம்ம்ம்… நெஜமாவே அவருக்கு உன்னை பிடிக்குமா..?” என கேட்டதும் சட்டென நறுமுகையே ஒருவாறு உடலை குழைந்தாள்…
அதை முகத்தை சுளித்தவாறு பார்த்த கவிதா ,
“போதும்..போதும்… ரொம்ப அசிங்கமா இருக்குது …”
“போடீ…என்னை ரொம்பவே பிடிக்கும் கவிதா அவருக்கு…”
“அப்புறம் எதுக்குடீ அன்னிக்கு அவர் அப்படி திட்டினாரு..?” என ஆச்சரியமாய் கேட்டதும் பெருமூச்சுடன் அனைத்தையும் கூறினாள்…
“ வேலை இருக்கும் போது இது மாதிரி பண்றது அவருக்கு பிடிக்கல.. அந்த கோபம் தான்..”
“ம்ம்ம்…நல்லா இருந்தா சரி… இப்ப கால் எப்படி இருக்கு ..??காயம் எல்லாம் சீக்கிரமா சரியாயிடும் தானே சொல்லி இருக்காங்க ..?ஆயில்மெண்ட் போட்டுட்டு இருக்கியா ..?”
“எல்லாமே போட்டுட்டு தான்டி இருக்கேன் …”
“ஆமா எப்படி குதிச்ச நீ..??? எனக்கு எப்படி தெரியுமா இருந்துச்சு… உன்னை பார்த்ததும் ஷாக் ஆயிடுச்சு.. கவனமாவே இருக்க மாட்டியா முகை?” என கடிந்தவளிடம் உண்மையை கூறலாமா வேண்டாமா என்கிற தயக்கம் வந்தது நறுமுகைக்கு…
தோழியிடம் மறைகிறோமே..வேண்டாம்..
கூறி விடலாம் என வாய் எடுக்கும் நேரம் சுரதையன காபி கோப்பைகளை கொண்டு வந்து கவிதாவிடம் கொடுத்து அவளிடம் பேசிக் கொண்டிருந்தார்..
அதில் சொல்ல வந்ததை தொண்டையிலேயே விழுங்கியவளுக்கு புத்தி உரைத்தது… நிச்சயம்
இவ்விஷயத்தை கவிதாவிடம் கூறினால் விக்ரமின் கோபம் அளவு கடந்து விடும் ..
தங்கள் இருவருக்கு மட்டும் தெரிந்த விடயத்தை இத்தோடு புதைத்திட வேண்டும் என உறுதி எடுத்தவள் ஆழ்ந்த மூச்சு இழுத்துவிட்டு தோழியை பார்த்தாள் …
நாட்கள் கடந்தன ஓரளவு முகையால் கால் ஊன்றி நடக்க முடிந்தது.. இருந்தும் அவளை கல்லூரி வரை அனுப்பிட பெற்றோருக்கு விருப்பமே இல்லை..
ப்ராஜெக்ட் முடிக்கும் நாட்கள் வேறு குறைவாகவே இருந்திட வேறு வழி இன்றி நாகராஜன் தான் விக்ரமிடம் அவளது வேலைகளை பார்த்திட கூறிவிட்டு இருந்தார் ..
அவர் கூறவில்லை என்றாலும் தன்னவளுக்காக அவன் நிச்சயம் செய்திருப்பான்.. அவனே பேச வேண்டும் என்று தான் எண்ணி இருந்தான் இப்போது நாகராஜனே கூறிடவும் அவனே செய்தவன் ஒவ்வொன்றுக்குமான அப்டேட்களை மட்டும் தன்னவளிடம் தெரிவித்து விடுவான் …
தீசஸ் வேலைகளையும் கிட்டத்தட்ட விக்ரம் தான் பார்த்துக் கொண்டான்.. அவ்வப்போது வீட்டிற்கு வந்து நறுமுகையுடன் பேசியவாறு இருவரும் சேர்ந்து லேப்டாப்பில் வேலை பார்ப்பார்கள் ..
பின் ஒரு வழியாய் நன்றாகவே நடக்க முடியவில்லை என்றாலும் ஓரளவு தனியாக நடக்க முடிந்தது நறுமுகைக்கு.. கல்லூரிக்கும் விரைந்து வந்திட லிப்டில் ஏறிக் கொண்டவளது அருகே கவிதா தான் இருந்தாள்.
கவிதாவும் அவளும் ஒன்றாக தான் வந்தனர் …தோழியை இந்நிலையில் தனியே விட அவளுக்கு விருப்பமே இல்லை..
பின் லேபிற்கு வந்ததும் அனைவரும் அவளை வந்து விசாரித்து விட்டு சென்றனர்.. நாகராஜன் கூட அவளை வந்து விசாரித்தார்…
ஒவ்வொன்றையும் விக்ரம் அவளுக்கு புரியும்படி எடுத்துரைத்தவாறு லேப்டாப்பில் இருவரும் தீசஸ் ஒர்க்கை பார்த்தனர்…
அப்போது தான் அவள் ஒன்றை கவனித்தால் அவள் வந்ததிலிருந்து சாமுவேலையை பார்க்கவில்லை…
மதியம் உணவு உண்ணும் போது கவிதாவிடம் மெல்ல பேச்சு எடுத்தாள்,
“ நீ எல்லாம் முடிச்சிட்டியா கவிதா..??? ”
“ஹான்…முடிச்சிட்டேன்டி ..”
“ஆமா நீ மட்டும் இருக்க..?? எங்க உன் கைட்”
“அவரா அவருக்கும் ஏதோ ஆக்ஸிடெண்ட் ஆயிடுச்சுடீ…” என அசட்டையாக கூறியதும் பக் என்று ஆனது நறுமுகைக்கு…
உண்பதை நிறுத்திவிட்டு,
“ என்னது ஆக்ஸிடென்ட்டா…??”
“ஆமாடி ..உனக்கு அடிபட்டுச்சுல அன்னைக்கு ஈவினிங் ஏதோ பிரெண்ட்ஸ் கூட எங்கேயோ போய் இருக்காரு போல… ஆக்சிடென்ட் ஆயிடுச்சாம்…செம அடிடீ.. கால் கை ரெண்டுமே உடைஞ்சு ஃப்ராக்சர் ஆகிருக்கு…
முகம் அப்படி வீங்கி பார்க்கவே ரொம்ப கோரமா வந்தாருன்னு கிளாஸ்ல எல்லாமே பேசிக்கிட்டாங்க…
அந்த அண்ணனால நடக்க கூட முடியலன்னு சொல்லிட்டு இருந்தாங்க..ஊருக்கு போயிருக்காருடீ…
இங்க பார்க்க யாரும் இல்ல போல வண்டி புடிச்சு போயிருக்காங்க…
அப்புறம் நாகராஜன் சார் தான் அவருக்கு அடிபட்டதால வேற கைட் வைக்கவான்னு கேட்டாரு…
அப்புறம் விக்ரம் சார் இருக்காருல அவர்தான் நானே பார்த்துக்கிறேன்னு சொல்லிட்டாரு.. விக்ரம் சார் தான் என்னையும் கைட் பண்ணிட்டு இருக்காரு.. நானும் எல்லாம் முடிச்சிட்டேன்..தீசஸ் ஒர்க் தான் ஏதோ போயிட்டு இருக்கு.. அப்பப்போ டவுட்னா விக்ரம் சார் கிட்ட கேட்டுப்பேன்… தெளிவா சொல்லி தறாருடீ..சாமுவேல் அண்ணா கூட ஜஸ்ட் இதை எதுக்கு பண்ண போறேம்னு மேலோட்டமாக சொல்லிட்டு விட்டுடுவாரு…ஆனா இவர் ஒவ்வொன்னத்தையும் அவ்வளோ சூப்பரா சொல்லி தராருடீ…
கல்யாணத்துக்கு அப்பறம் உன்னை லேப்ல வெச்சி சாவடிக்க சொல்லற இரு..” என கவிதா அவளை கிண்டல் அடிக்கவும் அதில் திகைத்து போன நறுமுகை,
“நீ வேற ஏன்டீ…அவர் கிட்ட வாங்காத திட்டு இல்லை…இதுல லேப்ல ஒர்க் பண்ணா அவ்வளவு தான் என் மூளையை கழட்டி அவர்கிட்ட தந்துட்டு நான் ஓடி போயிடுவேன…”என தோழிகள்
இருவரும் சிரித்து கொண்டனர்…
இருந்தும் நறுமுகையின் புருவங்கள் யோசனையில் முடிச்சிட்டன…
‘ அது எப்படி சரியாக தான் மருத்துவமனையில் இருந்த போது சாமுவேலிற்கு விபத்து நடக்கும்..?’ என்கிற யோசனை உடனே உண்டு முடித்தாள்…
விக்ரமிடம் இதைப் பற்றி பேசிய தீர வேண்டும் என முடிவுடன் இருந்தாள்…
இருவரும் லேப்டாப்பில் வேலை பார்த்துக் கொண்டிருந்தனர் …அவனிடம் பேசலாம் என நெருங்கி வரும் சமயம் சட்டென அவளை திரும்பிப் பார்த்த விக்ரம் சுற்றும் முற்றும் ஒரு பார்வை பார்த்துவிட்டு யாரும் இல்லை என்பதை உறுதி செய்தவன் பின் அவளது சுண்டு விரலை மற்றும் மென்மையாய் பிடித்து,
” இனி காலேஜ்ல வச்சு எதுவும் பேசிக்க வேண்டாம் …
அப்புறம் தேவையில்லாத பிரச்சினை வரும்.. பிரச்சனைக்கெல்லாம் நாமே வழி அமைச்சு தர வேண்டாம் நறு… ஈவ்னிங் நான் பிக்அப் பண்ணிக்கிறேன் ..அப்போ எதுவா இருந்தாலும் சொல்லு..” என்றதும் அவனை எண்ணி சட்டென ஒரு வித கர்வம் உண்டானது அவளுக்கு…
சிறு புன்னகையுடன் சரி என்று தலையசைத்துக் கொண்டாள்…
அதன்படி மாலை விக்ரம் தான் அவளை காரில் அழைத்துக் கொண்டான்… ஏற்றி விட்டது கவிதா தான்… சிறிது தூரம் சென்றதும் விக்ரமே பேச்சை ஆரம்பித்தான்,
” என்னவோ சொல்ல வந்த இப்ப சொல்லு..!” என்றவாறு கியரில் இருந்த கரத்தை எடுத்து அவளது கரத்தை பிடித்துக் கொண்டான் …
அதில் இதமாக உணர்ந்த முகை அவனைப் பார்த்து நன்றாக திரும்பி அமர்ந்து ,
“சாமுவேலுக்கு ஆக்சிடன்ட் ஆயிடுச்சா..??” என பட்டென கேட்டதும் அவளை பிடித்திருந்த கரம் ஒரே ஒரு நொடி இறுகி பின் தளர்ந்தது…
அதை துணுக்குற்று பார்த்த நறுமுகைக்கு தன்னவன் மீதான சந்தேகம் இன்னும் ஊர்ஜிதமானது…
அவனையே தீர்க்கமாக பார்த்த நறுமுகை தலை சாய்த்து,
” அதுக்கு நீங்க தானே காரணம் விக்ரம் ..?” என அழுத்தமாய் கேட்டதும் எதுவும் பேசவில்லை விக்ரம்…
ஆனால் முகம் மட்டும் இறுகிப்போய் காணப்பட்டது..
நறுமுகை விடவில்லை..
” சொல்லுங்க விக்ரம்.. சாமுவேலுக்கு ஆக்சிடென்ட் ஆனதுக்கு நீங்க தானே காரணம்..?” என இம்முறை சத்தமாக வினவியதும் வண்டியை சடாரென்று ஓரம் கட்டி நிற்பாட்டியவன் அவள் புறம் வேகமாய் தலைத் திருப்பிப் பார்த்து ,
“ஆமாடி… நான் தான் காரணம்… உன் மேல கைய வைப்பான் பார்த்துகிட்டு சும்மா இருக்க சொல்றியா..???? அதான் கை, காலை ஒடைச்சு மூஞ்சை பேத்து எடுத்து விட்டேன் ..இப்ப என்ன அதுக்கு ..??” என மேற்கொண்டு ஏதோ பேச வந்தவனது பின்னந்தலையை வளைத்து தன் புறம் இழுத்து இதழோடு இதழ் பொறுத்திக் கொண்டவள் அவனது இதழ்களை வேக வேகமாக மிகவும் வன்மையாக கடித்துத் தின்றாள்…
ஏதோ கோபமாய் பேச வந்தவனுக்கு அவளது செயலில் ஐஸ்கட்டியை தலையில் வைத்தது போல மொத்த உடலும் குளிர்ச்சியாகியது…
பின் உணர்ச்சிகள் மேல் எழும்பிட மெல்ல மெல்லமாய் குதிரை வேகத்தில் உடல் சூடேறியது…
ஸ்டியரிங்கை தன் நரம்போடிய கரத்தால் பற்றி இருந்தவனது கரம் இறுகி போனது… சிவனே என அமர்ந்திருந்தான் ..முத்த வேலை எல்லாம் நறுமுகை மட்டும் தான் பார்க்க துவங்கியிருந்தாள்…
தலையை சாய்த்து சாய்த்து அவனை முத்தமிட்டவள் மூச்சு வாங்கியவாறு அவனிடமிருந்து விலகி நெற்றியோடு நெற்றி முட்டி ,
“என்னை உங்களுக்கு அவ்வளவு பிடிக்குமா ..??” என மூச்சு வாங்கியவாறு கேட்டதும்,
ஸ்டியரிங்கிலிருந்து கரத்தை எடுத்து தன்னவள் கன்னம் தாங்கி,
” ஏன்டீ உனக்கு தெரியாதா..??” என கேட்டதும் விலுக்கென விழிகளை உயர்த்தி அவனை பார்த்தாள்… ஆடவனும்,
” இப்போ நல்லா தெரிஞ்சுக்கோ..” என கீழ் தட்டை கடித்து காருக்கு முன் இருந்த சாலையை ஒரு கணம் தலை திருப்பி பார்த்துவிட்டு அவளது கழுத்தை தன்னை நோக்கி இழுத்து மீதி முத்தத்தை அவன் தொடரலானான்…
முத்தமிட்டவாரே இடையிடையே ,
“நீ என்னை கிஸ் பண்ணவே இல்லடி… ”
இச்.…
“என்னை அப்படியே சாப்பிடுற..”
இச்…
“எப்படி தெரியுமா கிஸ் பண்ற..?” என ஏதேதோ சொல்லியவாறு அவளை முத்தமிட்டுக் கொண்டே இருந்தான்…
நறுமுகை முழு ஒத்துழை ப்பை அவனுக்கு அளித்தவாறு இருந்தாள்..
நீண்ட நேரம் மாறி மாறி முத்தமிட்டவர்கள் பின் நெற்றியோடு நெற்றி முட்டி ஒருவரை ஒருவர் பார்த்து புன்னகைத்துக் கொண்டனர் அழகாய்…
தனக்காக தன்னவன் இருக்கிறான் என்கிற எண்ணம் அவளது மனதில் ஆழப் பதிந்தது…அது அவளுக்கு ஒரு பெரும் தைரியத்தையும் தந்தது எனலாம்…
ஒரு வழியாய் அனைத்து வேலைகளும் முடிய இடையில் இவர்களுக்கான ஃபேர்வெல் பார்ட்டியும் வந்தது …