அத்தியாயம் 23

 

“எனக்காக எல்லாத்தையும் பார்த்து பார்த்து பண்ணவ எப்படி இப்படி மாறினான்னு தான் எனக்கும் தெரியல..  பொதுவாவே நான் எல்லார்கிட்டயும் ஜாலியா பேசி பழகுற ஆள்..  அதுவும் பசங்கனா  கேட்கவே வேணாம் ஜோவியலா  பழகிடுவேன்..  அது மாதிரி தான் ஜான் குமார் கிட்டேயும் பேசினேன் பழகினேன்..  அப்பெல்லாம் கவிதா எதுவும் சொன்னதே கிடையாது… ஃபர்ஸ்ட் இயர்ல டூருக்கு கூட்டிட்டு போனாங்க அப்போ எங்க அம்மா தெரியாத்தனமா கிறிஸ்டோபர் பார்த்து என் பொண்ண பத்திரமா பாத்துக்கோனு  சொல்லிட்டாங்க..  எங்க அம்மா எப்பவும் இப்படித்தான் ஸ்கூல் படிக்கும் போதும் சரி கூட படிக்கிற பசங்க எல்லார்கிட்டயும் என் பொண்ண பத்திரமா பாத்துக்கோங்க சொல்லி அனுப்புவாங்க..  அதனால எனக்கு ஒன்னுனா அவங்க எல்லாருமே வந்து நிப்பாங்க.. ஆனா இந்த முறை கிறிஸ்டோபர் கிட்ட சொன்னது தான் என் வாழ்க்கையே மாத்திடுச்சு..”  

 

“அப்படி என்ன பண்ண  அவன்?” என கேட்ட விக்ரமிடம் பெருமூச்சுடன் மீதியை தொடர்ந்தாள்  நறுமுகை,

“ டூர் போனப்ப எல்லாரும் டான்ஸ் ஆடுனாங்க பஸ்ஸில்..  நானும் ஆடினேன் அது கிறிஸ்டோபருக்கு எப்படி தோணுச்சுன்னு தெரியல டான்ஸ் எல்லாம் ஆடுவீங்களான்னு கேட்டான்..  இதுல என்ன இருக்கு நானும் நல்லா டான்ஸ் ஆடுவேன் அப்படின்னதும் அப்படியா பட் லிமிட்டா இருந்தா நல்லதுனு சொன்னான்.. பட்  நான் அப்ப அதை பெருசா எடுத்துக்கல பட் எங்க போனாலும் சரி பஸ்ஸை விட்டு நான்  கீழே இறங்கினா நான் எங்க இருக்கனோ  அங்க தான் இருப்பான்.. 

 

நான் பஸ்ல ஏறின  அப்புறம் தான் அவன்  லாஸ்ட்டா ஏறுவான்..  எதுக்கு அவன் அப்படி பண்றான்னு  எனக்கு தெரியல..  நானும் கண்டுக்கல .. அப்புறம் கவிதாவை கூப்பிட்டு ஒரு நாள் பேசினா..  எனக்கு ரொம்ப டிஸ்டர்ப் ஆயிடுச்சு .. கவிதாவை கூப்பிட்டு இவன் எதுக்கு பேசுறான்னு தோணுச்சு  அதுவும் கவிதா வேற உன்னை  பத்தி பேசறதுக்காக தான் அவன் என்னை  கூப்பிடுறான்னு  சொல்லிட்டு வேற  போனா.. 

எனக்கு என்னவோ ஏதோன்னு பதிறிட்டே இருந்தேன் .. அப்புறம் சீனியர் அக்கா மகா தெரியும்ல அவங்க தான் நடக்கறதை எல்லாம் பார்த்துட்டு  அவன் உனனை  லவ் பண்றானா அதுக்காக தான் அந்த பொண்ணு கிட்ட பேச போறேனானு கேட்டுடாங்..  எனக்கு என்ன பண்றதுனே தெரியல..  அப்படிலாம்  எதுவும் இல்லை அக்கா என்ன விஷயம்ன்னு தெரியல அப்படின்னு சொன்னதும் உன்னை  பத்தி பேசணும்னா அவன் உன்கிட்ட   தானே பேசணும் எதுக்கு அவ கிட்ட பேசி தேவையில்லாம சீன்  கிரியேட் பண்றான்னு சொன்னாங்க எனக்கும் அப்பதான் உரைச்சது.. 

 

அதுக்கப்புறம் கவிதாவும் வந்தா அவ  முகத்தை பார்க்கணுமே அவ்வளவு தான் எனக்கு அள்ளு  விட்டுடுச்சு..  என்னை கூப்பிட்டு கிழிக்கிழின்னு கிழிச்சிட்டா..  

 

நீ எதுக்கு டான்ஸ் ஆடுற? கிறிஸ்டோபர் தப்பா எடுத்துகிட்டான்..  நீ எதுக்கு ஜான் குமார் கூட பேசுற? அது கிறிஸ்டோபர் தப்பா எடுத்துகிட்டான்..  அப்படின்னு ஒன்னுத்துக்கும் ஏதாச்சும்  கிறிஸ்டோபர் சொன்னானு சொன்னதும்  எனக்கு ரொம்ப கடுப்பா ஆயிடுச்சு..  அவன் என்னவோ சொல்லிட்டு போறான் ..  நான் நானா இருக்கறதுல அவனுக்கு என்ன பிரச்சனை அப்படின்னு கேட்டேன்.. ம்ம்ம்ம்..   பயங்கரமா நானும் கவிதாவும் சண்டை போட்டோம்..  அப்பதான் எல்லாமே ஆரம்பிச்சது..  கூட இந்த கௌசல்யாவும் அஸ்வினியும் வேற கவிதாக்கு சப்போர்ட்டிவா நின்னு ஏத்தி விடவும் ரொம்பவே கடுப்பாயிடுச்சு.. 

 

அந்த டூரே ஏன்டா போனும்னு ஆயிடுச்சு அவங்க மூணு பேரும் ஒரே சீட்டில் உட்கார்ந்துக்கிட்டாங்க நான் மட்டும் தனியா உக்காந்தேன்..  கவிதா என்கூட உட்காருவா அப்படின்னு நினைச்சேன் ஆனா அவ என்னை  திரும்பி கூட பார்க்கல

அதுக்கப்புறம் டூர் போயிட்டு வந்ததுல இருந்து என்னனேன்னவோ  நடந்து போச்சு விக்ரம்..  கிறிஸ்டோபரால தான் எங்களுக்குள்ள சண்டை அடிக்கடி  வரும்..  நானும் எவ்வளவோ  பேசி பார்த்தேன்..  அவன் யாரு என்னை  பத்தி பேசுறதுக்கு உன்னால அவ கிட்ட கேட்க முடியலையா அப்படின்னு கூட கேட்டு பார்த்தேன்..  

 

ஒன்னும் வேலைக்கு ஆகல கடைசில பெருசா சண்டையை போட்டு இப்படி தனித்தனியா வந்தது தான் மிச்சம்..  அப்புறம் ஒரு நாள் கிறிஸ்டோபர் கிட்ட நானே கேட்டேன் நீ எதுக்கு என்னை  பத்தி கவிதா கிட்ட எல்லாம் தேவை இல்லாம பேசுறேன்னு ..  இல்ல நான் நல்லதுக்கு தான் பண்றேன்னு சொன்னான் துடப்பக்கட்ட..   நல்லது எதுன்னு எனக்கு தெரியும் நீ யாரு எனக்கு நல்லது நினைக்கிறதுக்குன்னு மூஞ்சால அடிச்ச மாதிரி கேட்டேன் அப்ப கூட ஏதோ பதில் சொல்லி மழுப்பிட்டு போய்ட்டான்.. 

 

அதிலிருந்து அவன் கிட்ட கூட பேசுவதையே விட்டுட்டேன்…கவிதா  இல்லாம ரொம்பவே கஷ்டமா இருந்துச்சு விக்ரம்..  என் மேல எப்பவும் பாசத்தை காட்டினவ திடீர்னு வேண்டாம்னு தூரம் போயிடவும் என்னால ஏத்துக்கவே முடியல..  எல்லாரும் ஒண்ணா தான் மதியம் சாப்பிடுவோம் ஆனா அதுக்கு அப்புறம் நான் சாப்பிட போனாலே அவங்க எல்லாம் எழுந்துருவாங்க இல்ல மூடி வச்சிருவாங்க அதுக்காகவே போக மாட்டேன்.. 

 

ஜான் குமார் கூட எவ்ளோ பேசி பார்த்தாங்க ஆனா கவிதா தான் இவ ரொம்ப மாறிட்டா இவளுக்கு நாங்க முக்கியம் இல்ல நீங்க தான் முக்கியம் அதனால் தான் அவ இப்படி நடந்துக்கிறான்னு  பேசிட்டா..  அதிலேயே மனசு விட்டு போச்சு..  எந்த உறவாக இருந்தாலும் தள்ளி நிற்கறது பெட்டர்  தோணிச்சு..  நானும் தள்ளி வந்துட்டேன்..  இப்ப என்னன்னா என்னன்னு பேச்சு ஓடுது.. 

 

உங்க விஷயத்தை அவ கிட்ட சொல்லலைன்னு ரொம்பவே ஃபீல் பண்ணா..  எனக்கும் கஷ்டமா இருந்துச்சு பட் அதுக்காக ரொம்பலாம்  அலட்டிக்கல..  சொன்னா உங்களுக்கு கம்பர்டபிலா இல்லன்னு புரிய வச்சேன் அவளும் சரின்னு சொல்லிட்டா..” என்றதும் மெல்ல தலையசைத்த விக்ரம்,

 

“பிரெண்ட்ஸ் இல்ல  லவ்வர்சா இருக்கட்டும்..  ஏன் ஹஸ்பண்ட் அண்ட்  வைஃபா இருக்கட்டும் சின்னதா எதாவது ஒரு பிரச்சனை வரும் அப்புறம் அது எப்படி தான் பெருசாகும்னு  தெரியலை..  பிரியிற அளவுக்கு வந்துரும் முக்கியமா ஒரு ரிலேஷன்ஷிப்ல மூணாவது ஆளை  விட்டாலே தேவை இல்லாத பிரச்சனை தான் வரும்”

“ அது என்னவோ உண்மை தான் விக்ரம்” என அவர்கள் பேசி முடிக்கவும் கடற்கரை வரவும் சரியாக இருந்தது..  

 

அதை கண்டதும் தனது கைப்பையை வைத்து அவனை அடித்தவள்,

“ பீச்சுக்கு தான் கூட்டிட்டு வந்தீங்களா? நான் கூட சார் என்னை  பத்திரமா வீட்டுக்கு கூட்டிட்டு போய் விட்டுடுவாரோன்னு நினைச்சேன்”  என்றதும் அவளது கன்னத்தைப் பிடித்துக் கிளியவன்,

“ வா போலாம்”  என இருவரும் கை கோர்த்து மண்ணில் கால்கள் புதைய புதைய நீர் அருகே சென்று நின்று கொண்டனர்..  புடவை கட்டியதால் நன்றாக தூக்கிப் பிடித்துக் கொண்டாள்  நறுமுகை..  அவளை பார்த்து சிரித்தவாறு இருந்தான் விக்ரம்..  அலை வே று அதிகமாக வரவும் நறுமுகை தடுமாறி விட்டாள்.. 

 

“ ஏற்கனவே ட்ரெஸ் நனைஞ்சிடுச்சு விக்ரம்….  அலை  வேற ரொம்ப ஃபோர்ஸா வருது விக்ரம்..  போகலாம் அப்புறம் ஃபுல்லா நனைச்சுட்டேன்னு வச்சுக்கோங்க உங்க மாமியார் என்னை  ஒரு வழி ஆக்கிடுவாங்க!”  என்றதும் அவளது கையை பிடித்துக் கொண்டு காருக்கு அழைத்துச் சென்றான்.. 

ஏறுவதற்கு முன்னர் புடவையை  நன்றாக தட்டி விட்டு ஏறிட,

“ கசகசன்னு ஆயிடுச்சு விக்ரம்..  கால்ல நல்லா  மண்ணு ஒட்டிக்கிச்சு எல்லாம் உங்களால தான்..  நீங்க ஜாலியா பேண்ட் ஷர்ட் போட்டுட்டு வந்துட்டீங்க”  என அவள் பாட்டிற்கு பேசிக் கொண்டே போக விக்ரமிடம்  இருந்து எந்த ஒரு பதிலும் வரவில்லை.. 

 

அதில்  சட்டென புருவம் சுருக்கி தனது பேச்சை நிற்பாட்டியவள் தலை திருப்பி பார்த்திட அங்கு விக்ரமோ அவளைத்தான் விழுங்கும் பார்வையை பார்த்துக் கொண்டிருந்தான்..  அவனது அந்த ஒற்றை பார்வையில் சட்டென உஷ்ணம் ஏறியது பெண்ணவளது மேனியில்.. 

இருவரது பார்வைகளும் ஒன்றோடு ஒன்று கலந்திட..  அவளது இதழை பார்த்தவாரே நெருங்கி குனிந்து வந்தவன் அவளது கன்னத்தைப் பிடித்து இதழோடு இதழை  ஆழமாய் பொருத்திக் கொண்டான்..  தலையை சாய்த்து சாய்த்து முத்தமிட்ட விக்ரம் அவளது கன்னங்களில் முத்தமிட்டவாரு,

“ செம அழகா இருக்க நறு.. இந்த டிரஸ்ல ! என்னால கண்ட்ரோல் பண்ணவே முடியலடீ “  என  அவளது காது மடலில் இதழ் உரச கிசுகிசுப்பாக  பேசியவாறு கன்னத்தில் இருந்த கரத்தினை கீழ் இறக்கி  அவளது வெற்றிடையே அழுத்தமாய் பற்றிக் கொண்டான்..  அவனது சில்லென்றிருந்த உள்ளங்கை பெண்ணவளது இடை தொட்டதும் பட்டென்று தீ பற்றிக்கொண்டது. .. 

 

“விக்.. ரம் “ என முனங்கியவளின் இதழ்கள் ஆணவனின் இதழ்களுக்குள்  அரைபட்டு கொண்டன..  மற்றொரு கையையும் மெல்ல கீழ் இறக்கி அவளது ஆடைக்குள் இருந்த இடையே அழுத்தமாய் பற்றியது॥ ..  அவனது இதழ் அவனது பேச்சை கேட்காமல் இருக்கும்போது கைகள் மட்டும் கேட்டிடுமா என்ன?

 

வெற்றிடையை அழுத்த பற்றி  இருந்தவனின் கரங்கள் அவளது முதுகி  மொத்தமாய் அளந்தது..  நறுமுகையோ அவனது கழுத்தை வளைத்த படியே முத்தமிட்டு கொண்டிருந்தவளுக்கு முதுகில் மேய்ந்த ஆணவனது கரங்களின் ஸ்பரிசத்தில் தன்னிலை இழக்க ஆரம்பித்தாள்..  

பற்கள் ஒன்றோடு ஒன்று மோதிக்கொள்ள..  எச்சில்களும் ஒருவர் இதழில் இறந்து  மற்றவர்  இதழுக்கு தடை இன்றி பரிமாறப்பட்டது..  ஆணவன் கரங்கள் இதற்கு மேல் பொறுக்காது தன்னவளை அறிந்து கொள்ளும் பொருட்டு பரபரப்பாய் தன் வேலையை செய்ய அனுமதிக்காக தவித்து கிடந்தன… நொடி தயங்கி பின்   அதற்கு அனுமதி அளித்ததும் தான் தாமதம் மலரவளின் நிலவுகளை கைப்பற்றி கொண்டான் வெற்றிகரமாக விக்ரம்..  

 

ஆண் மகனின்  இந்த செயலில் பெண்ணவளின் மூச்சு ஒரு கணம் நின்றே  விட்டது..  இதயம் கூட ஒரு நொடி நின்று துடித்தது எனலாம்..  சிலை போல சமைந்து இருந்தவள் இதழ்களையே பாரபட்சமின்றி துவம்சம்  செய்தான் என்றால் அவனது கரங்களோ  பெண்ணவளை அளந்து ஆராயும்  வேலையில் மும்முரமாய் ஈடுபட்டுக் கொண்டிருந்தன..  மொத்தமாய் நிலை குலைந்து போன நறுமுகை அவன் மீது தனது மொத்த எடையையும் சாய்த்துக் கொண்டு தளர்ந்து போய் விட்டிருந்தாள்.. 

 

சட்டென அவளிடம் இருந்து முழுதாய் விலகி அமர்ந்த விக்ரம் வேக  வேகமாக தான் அமர்ந்திருந்த ஓட்டுநர் இருக்கையை சற்று பின் தள்ளி சாய்த்து விட்டவன் பெண்ணவளை பார்த்திட அவளும் என்ன நடந்தது என்பதை முழுதாக கிரகித்துக் கொள்ளும் முன்பே அவளை  தன் இரு கரங்களில் குழந்தை போல அள்ளி  மடியில் அமர்த்திக் கொண்ட விக்ரம் அவளை தன் மேல் சாய்த்துக் கொண்டு மீண்டும் நிறுத்திய முத்தத்தை தொடரானாள்..  

 

அவனது கரங்களும் இஷ்டத்திற்கு மென்னவள் மேனியில் உலா வந்தது .. ஆடைகள் நெகிழ்ந்திட எதை பற்றியும் கவலை கொள்ளாது அவனிடம் சரணடைந்து இருந்தாள்  நறுமுகை..  

நல்லவேளை உள்ளே நடப்பது வெளியே தெரியாத அளவு கருப்பு ஸ்டிக்கர் ஒட்டப்பட்டதால் இருவரும் தப்பித்தனர்..  தன்னவளை தன்னோடு நெருக்கிக் கொண்டு இதழ்  முத்தம் தொடர்ந்தவனது காதில் ஒலித்தது அச்சத்தம்..  நறுமுகையின் கைப்பையில் இருந்த அவளது கைபேசியில் இருந்து தான் அழைப்பு வந்தது..  இருந்தும் அதை பற்றி கவலை கொள்ளாது முத்தத்தை தொடர்ந்து கொண்டு தான் இருந்தான் விக்ரம்.. 

நறுமுகை இவ்வுலகிலேயே இல்லை விக்ரம் எனும் வேறு உலகத்தில் தான் மூழ்கி இருந்தாள்  அவள்..  மற்ற எதுவும் அவளது கருத்திலேயே பதியவில்லை..  மீண்டும் அழைப்பு வரவும் சுதாரித்துக் கொண்ட விக்ரம் மனமே இன்றி அவளை தன்னிடம் இருந்து பிரித்து எடுத்தான்..  மூச்சு வாங்கியவாறு மெல்ல கண்களைத் திறந்து அவனைப் பார்த்த நறுமுகை சரியாக அமரக்கூட முடியாது தடுமாறியவள் அவனது நெஞ்சிலேயே தலை சாய்த்து கொண்டாள் பெரிய பெரிய மூச்சுக்களை விட்டவாறு..  இருவரும் மூச்சு வாங்க ஒருவரை ஒருவர் அணைத்த படி இருந்த போது  நின்ற அழைப்பு  பின் மீண்டும் அழைத்திட ஒற்றை கையை நீட்டி அவளது கைப்பையில் இருந்து கைபேசியை எடுத்துப் பார்த்தான்..  அவளது அன்னை தான் அழைத்திருந்தார்.. 

“அத்தை  கால் பண்றாங்க நறு”  என்றதும் மூச்சு வாங்கிய நறுமுகை,

“ம்ச்..  நீங்களே பேசுங்களேன்..”

 

“ விளையாடாத பேசு “ என அழைப்பை அட்டென்ட் செய்து அவளது காதல் வைத்தான்.. 

“ எத்தனை வாட்டிடி கால் பண்றது? கிளம்பிட்டியா இல்லையா?’

 

“ வந்துகிட்டே இருக்கேன்ம்மா..”

“சரி சரி பார்த்து வா..” என அழைப்பை துண்டித்து விட்டிருந்தார் சுரதை.. 

கைபேசியை பக்கத்து இருக்கையில் தூக்கி போட்டவன் அவள்  உச்சந்தலையில் அழுந்த முத்தமிட்டு,

“ கண்ட்ரோல் பண்ண முடியாம என்னென்னவோ பண்ணிட்டேன் தப்பா எடுத்துக்காத”  என்றதும் மெல்ல தலை உயர்த்தி அவனைப் பார்த்த நறுமுகை,

“ எல்லாம் பண்ணிட்டு தப்பா எடுத்துக்காதன்னு சொன்னா ஆச்சா?” என மெல்லிய குரலில் கூறியதும் கீழ் உதட்டை கடித்துக் கொண்டு அவளை பார்த்த விக்ரம் மீண்டும் அவள் இதழோடு இதழ்  ஒற்றி எடுத்து,

“ எவ்வளவு அழகா இருக்க தெரியுமா?”

 

“ அப்படியா ? நீங்க வாய் திறந்து சொல்லலைனாளும்   உங்களை  பார்த்தாலே தெரியுது..” என்றதும் அவள் காதோரம் குனிந்தவன்,

“ எப்படி தெரியுது?’ என கேட்டதும் அதில் குழைந்த நறுமுகை,

“ உங்க கண்ணே சொல்லுது”  என மெதுவாய் கூறியதும் அவளது  கன்னத்தில் அழுந்த முத்தமிட்டவன்,

“ என் கை கூட என்னென்னவோ சொல்லுதுடி”  என வெளிப்படையாக கூறியதும் விழி விரிய அதிர்ந்து போனவள் இரு கரங்களால் தன் முகத்தை மூடிக்கொண்டு அவன் நெஞ்சில் ஒன்று போட்டு,

“ச்சீ..  நீங்க ரொம்ப மோசம்..  போங்க”  என பக்கத்து இருக்கைக்கு தாவி அமர்ந்து  கொண்டாள்.. 

“ சரி சீக்கிரம் டிரஸ் சரி பண்ணிக்கோ கிளம்பலாம்” என்றதும் தன் ஆடையை சரி செய்திட .. அதற்காக விக்ரம் தலையே திருப்பி எல்லாம் கொள்ளவில்லை.. வெட்கமே இன்றி அவளை பார்த்தவாறு அமர்ந்திருந்தான்..   தலை முடியை மீண்டும் வாரிக் கொண்டதும் அவள் அவனது கன்னத்தை முன்னே திருப்பி ,

“வண்டியை எடுங்க “ என்றதும்  அதன் பின்னே வண்டியை எடுத்து அங்கிருந்து கிளம்பி இருந்தான் விக்ரம்…

 

 

❤️ Loading reactions...
0 Comments
Oldest
Newest Most Voted
error: Content is protected !!
Scroll to Top