அத்தியாயம் 1

“உனக்கு என்ன பைத்தியமா பிடித்து இருக்கு இப்ப எதுக்கு அந்த ராங்கி காரி மகளை வர சொல்லி இருக்க ”

“என்னம்மா பேசரிங்க அவ அவளோட அப்பாவை பார்க்க வர்ற இதை நான் எப்படி வர வேண்டாம்னு சொல்ல முடியும்” என்றார் நர்மதா தன் தாயிடம்

“நீ சொன்னா மாப்பிள்ளை கண்டிப்பா கேட்பார் தானே அந்த பொண்ணை வர சொல்லி நீயே உன் தலைல மண்ணை வாரி போட்டுகற நர்மதா” என்றார் சரோஜா

“ம்மா  அவளுக்கு எங்களை விட்டா வேற யார் இருக்கா” என்று  நர்மதா கூற

“நர்மதா அம்மாவோட பயமும் சரிதானே அமைதியா போய்ட்டு இருக்க உன் வாழ்க்கையில் அந்த பெண்ணால எதாவது பிரச்சினை வந்திட போகுது” என்றார் நர்மதா அக்கா பாக்கியம். 

“அதெல்லாம் ஒன்னும் வராது அம்மாவை இழந்த பெண்ணிடம் போய் நீங்க பேசுவது சரியில்லை என்னதான் இருந்தாலும் வெண்மதி என் கணவரோட பெண் நீங்க பேசுறதை  கேட்டா உன் மாப்பிள்ளை தான் சங்கட படுவார் மதி கிட்ட  இதே மாதிரி பேசிடாதிங்க”

“அவளை நாங்க பார்த்தா தானே” என்ற பாக்கியத்தின் அலட்சிய பேச்சில்

“என்னக்கா பேசுற நீ அவளை அங்க தனியா விட்டுட்டு நான் மட்டும் வருவேன்னு நினைத்தியா”

 

“அத்தை விடுங்க  அந்த பெண் என்ன 1 வாரமோ 2வாரமோ இருக்க போற இதுக்காக நீங்க ஏன் இப்படி விவாதம் பண்றீங்க சேகர் நர்மதாவை எவ்வளவு  அன்பா பார்த்துகறார் அவரோட பொண்ணு இங்கு வருவதால்  என்ன ஆகிட போகுது விடுங்க”என அந்த பேச்சிற்கு முற்று புள்ளி வைத்தார் சாந்தினி.

 

சரோஜா மகன்  கிருஷ்ணன் மருமகள் சாந்தினி,   இளம் வயதிலே விதவையான மகள் பாக்கியம்  புகுந்த வீடு ஆதரவின்றி கைகுழந்தையோடு வந்து விட்டாள்.

நர்மதா ஜாதக பிரச்சனையால் திருமணம் ஆகாமல் தள்ளி போய் கொண்டு இருந்த சமயத்தில் கிருஷ்ணனிற்கு அறிமுகமானவர் சேகர்.

சேகர் விவகாரத்து ஆனவர் வாழ்க்கையில் நாட்டமே இல்லாமல் இருந்தவர் நர்மதாவை பார்த்ததுமே பிடித்து போய் திருமணம் செய்து கொண்டார்.

தற்போது சேகர் ஒரு சூப்பர் மார்கெட்  வைத்து இருக்கிறார். இப்போழுது  அவர்களுக்கு வருன் ராகுல் என இரண்டு ஆண் குழந்தைகள்.

கிருஷ்ணன் சாந்தினி தம்பதிக்கு ருத்ர பிரசாத், சந்தோஷ் ,மகிழினி பிள்ளைகள். பாக்கியத்தின் மகள் ஷிவானிக்கும் மகிழினிக்கும் ஒரே வயது இருவரும்‌ சாஃப்ட்வேர் இன்ஜினீயரிங் படித்து கொண்டு இருக்கிறார்கள்.

கிருஷ்ணன்  பல இடங்களில் பெரிய ஜவுளி கடையை வைத்து தன் வியாபாரத்தை பெறுக்கி இருக்கிறார்.

ருத்ரன் தனியே ஒரு ரெஸ்டாரண்டை துவங்கி இருந்தாலும் அப்பாவின் பிஸ்னஸையும் ரெஸ்டாரன்டையும் கவனித்து கொள்கிறான்.சந்தோஷ் இன்னும் எந்த பொறுப்பையும் ஏற்காமல் நண்பர்களுடன் அரட்டை அடித்து பெண்களுக்கு பொது சேவை  செய்கிறேன் என இருப்பவன்.

 

மும்பையில் இருக்கும் சேகரின் முதல் மனைவி ஸ்வேதா இறந்து விட்டதால் அவர்களின் மகள் வெண்மதி வரவு நர்மதாவை தவிர யாருக்கும் பிடிக்கவில்லை.

 

வீட்டின் பின்புறம் இருந்த நீச்சல் குளத்தில் அருகே  ருத்ர பிரசாத் லெப்டாப் கையுமாக உட்கார்ந்து அங்கு நடக்கும் உரையாடல்களை கவனித்து கொண்டும் வேலை பார்த்து கொண்டு இருந்தான்.

“இந்த அத்தைக்கு இப்ப ஏன் இந்த வேண்டாத வேலை” என்றாள் மகிழினி

“என் அத்தைல அதான் அப்பப்ப என் குணம் வெளியே வருது” என சந்தோஷ் கூறவும்

அவன் முதுகிலே மொத்தினார்கள் பெண்கள் இருவரும்

“பிசாசுங்களா விடுங்க ஆஆ அந்த பொண்ணு வந்தா உங்களுக்கு என்ன அவ அப்பாவை தானே பார்க்க வர்றா” என முதுகை தேய்த்து கொண்டே கேட்டான் சந்தோஷ்

“அவளை வீட்டுக்கு வேற கூட்டிட்டு வருவதுதான் செம கடுப்பாகுது சித்தப்பாவே அந்த பொண்ணை வர வேண்டாம்னு சொன்னாராம் இவ வந்து என்னெல்லாம் செய்ய காத்திருக்காலோ” என ஷிவானி பொரிந்து தள்ளினால்

“அக்கா வெண்மதி அக்காவும் எங்களுக்கு அக்கா தானே ஏன் எங்க அக்காவை திட்டுற” என 8வயதான வருண் கண்களை உருட்டி கேட்கவும்.

 

“அவ அக்கான்னா அப்ப நான் யாரு உனக்கு நான்தானே  உன் கூட எப்போதும் இருக்கேன் அவ வந்தா நீங்க ரெண்டு பேரும் அவ கூட பேச கூடாது பேசுனிங்கனா நாம அவுட்டிங் போறப்ப உங்களை விட்டுட்டு போயிடுவோம் இந்த வீக் தீம் பார்க் போகலாம்னு நினைத்தேன் ”

“நாங்க பேச மாட்டோம்” என இருவரும் கோரஸாக கூறவும்.ருத்ரன் சிரித்து விட்டான்.

“ஏன் மாமா இப்ப சிரிக்கிற”

“ஏன் ஷிவானி அவலாம் ஒரு ஆளுன்னு அவளை பற்றியே  பேசிட்டு இருக்க அவ இருப்பதே 1 வாரம் தான் விடுவியா” என்று லெப்டாப்பில் வேலை பார்த்தவாறு கேட்டான் ருத்ர பிரசாத்.

“என்னமோ தெரியலை மாமா அவ அம்மா பற்றி கேள்வி பட்டு இருகோம்ல அதான்  இந்த பெண்ணால சித்தி வாழ்கைல எதாவது பிரச்சினை ஆகிடுமோன்னு கவலையா இருக்கு அவ அம்மா தான் முக்கியம்னு போய்டாடால இப்ப எதுக்கு திரும்பி வர்றாளாம் ”

_அவ இங்கே வந்தா ஏன்டா இங்கே வந்தோம்னு ஃபீல் பண்ற அளவு ஓட ஓட விரட்டனும்” என 4 பேரும் சபதம் எடுக்காத குறையாக வெண்மதியின் மீது வெறுப்பை காட்ட துவங்கினர்.

 

ருத்ரபிரசாத் எப்போதும் குடும்பத்திற்கு  தான் முதலில் முக்கியத்துவம் கொடுப்பான் பாட்டியை வம்பு இழுப்பதும் கேலி கிண்டல் என வீட்டை எப்போதும் மகிழ்ச்சியாக வைத்து இருப்பான்.சனி ஞாயிறுகளில்  வீட்டிலே இருந்து  நர்மதா குழந்தைகளை அழைத்து வந்து தம்பி தங்கைகளை ஷிவானியுடன் மால் தியேட்டர் என வெளியே அழைத்து  சென்று விடுவான்.குடும்பத்தாருடன்  இருக்கும் சமயத்தில் நண்பர்கள் யார் அழைத்தாலும் தவிர்த்து விடுவான்… அவனது குடும்பம் தான் அவனது சந்தோஷம் நிம்மதி எல்லாம் 

அதை யாரெனும் தொந்தரவு செய்தாலோ  அவர்களை யாரேனும் எதாவது சொன்னால் போதும் ருத்ரன் ருத்ர மூர்த்தியாகி  விடுவான் 

                       **************

மும்பையில் தன் உடமைகளை அடுக்கி பேக் செய்து கொண்டு இருந்தாள் வெண்மதி பால்நிறத்தில் மெழுகு பொம்மை போல் இருந்தவளை வக்கிர பார்வையுடன் அவளை பார்த்தான்  ராக்கேஷ் 

தன் லக்கேஜை அடுக்கி முடித்தவள் தன் தாய் சம்பாதித்த சொத்து முழுவதையும் அவன் பெயருக்கு மாற்றிய பத்திரத்தை அவன் முன் வைத்தாள்.

“இந்த சொத்துகாக தானே இவ்வளவும் இது எதுவும் எனக்கு வேண்டாம்” என தன் தாயின் அண்ணன் மகனான ராகேஷிடம் நீட்டினாள்.

பத்திரத்தை வாங்கும் சாக்கில் அவள் கையை அழுத்தி பிடித்து வாங்கி  “என்ன மதி மாமன் பேர்ல தானே மாத்தி இருக்க அதுக்கு போய் சலுச்சுகற என் பேர்ல இருந்தா என்ன உன் பேர்ல இருந்தா என்ன”என அவன் பார்வை மேனி முழுவதும் ஊர்வலம் நடத்தியது.

 

“இனியும் என்னை தொந்தரவு பண்ணாத நான் போறேன்”என கிளம்பியவளை 

“எங்கே போற இருந்த அம்மாவும் போய் சேர்ந்தாச்சு உன் அப்பாவும் நீ இருப்பதையே மறந்துடார் உனக்குன்னு இனி யார் இருக்கா” என அவள் கையை பிடித்து இழுத்தவனை முதுகில் ஓங்கி உதைத்து இருந்தான் அஸ்வத் ராமன்.

“பொறுக்கி நாயே  உனக்கு சொத்து தானே தேவை அதை வாங்கிட்டு பேசாம போக வேண்டியது தானே அவளுக்கு நாங்க இருக்கோம்”.

“இது என் வீடு என் வீட்ல இருந்துகிட்டு என்னையவே அடிக்கிறியா” என அஷ்வத்தை தாக்க வர ஓங்கி தன்  இரும்பு கரத்தால் ராகேஷின் வயிற்றலே குத்த வலி தாங்காமல் சுருண்டு விழுந்தான்.

 

“அஸ்வத் வா போயிடலாம்” என அஷ்வதின் கையை பிடித்து இழுத்து சென்றாள் போற போக்கில் கீழே கிடந்தவனின் உயிர்நாடியை ஓங்கி மிதித்து விட்டு,

அவன் அலறல் சத்ததை கேட்டு  மனதில் ஏற்பட்ட திருப்தியுடன் சாவு நாயே என கூறி சென்றான் அஷ்வத்.

 

எங்க போவ உன்னை விடமாட்டேன்டி என வலியிலும்  வெண்மதியை கருவினான் ராக்கேஷ்

 

“அவனை இன்னும் நாலு மிதி மிதுச்சு இருந்தா இனி உன் வழிக்கே வர மாட்டான் நீ இங்கேயே இரு நான் போய் ஒரு காட்டு காட்டிட்டு வரேன்” என கை சட்டையை மடக்கி செல்ல போனவனை

 

“விடு அஷ்வத் எனக்கு ஏற்கனவே ஃப்ளைட்டுக்கு நேரமாச்சு வா நான் இங்கே இருந்தா தானே டிஸ்டர்ப் பண்ணுவான் நான் சென்னைக்கு  போற விசயம் அவனுக்கு தெரியது அதனால அவனால் எனக்கு எந்த பிரச்சனையும் வராது திவ்யா ஆண்டி வெயிட் பண்ணிட்டு இருப்பாங்க வா”

 

“அதுவும் சரிதான் அங்க போயும் உனக்கு யாராவது இடைஞ்சல் பண்ணினால் சொல்லு நான் வந்து பார்த்துகறேன் நீ போல்டா இருக்கனும் சரியா”

“சரிடா வண்டிய எடு நாம கிளம்பலாம்”.

 

சேகரும் ஸ்வேதாயும் காதல் திருமணம் புரிந்தவர்கள் தான்  ஸ்வாதியின் தாய்க்கு சேகரை  பிடிக்கவில்லை சேகர் ஒரு அனாதை ஆசிரமத்தில் வளர்ந்து படிபடியாக முன்னேறி ஒரு மளிகை கடை நடத்தி கொண்டு இருந்த சமயத்தில் தான் ஸ்வாதி சேகரை  விரும்பி திருமணம் செய்து கொண்டாள்.

 

வெண்மதிக்கு 4 வயதாகும் வரை எந்த பிரச்சினை இல்லாமல் இருந்தது.அதன் பின் ஸ்வேதா வேலைக்கு செல்ல ஆரம்பித்தாள் சேகரும் தடுக்கவில்லை குழந்தையை பார்த்து கொள்ள ஸ்வேதா தன் தாயை அழைக்கவும்  அன்னம் தன் மகன்  பேரனுடன் வந்து சேர்ந்தாள்.

அவர்களுக்குள் இருக்கும் சிறு சிறு சண்டையை பெரிதாக்கி சேகரின் பிறப்பை  தர குறைவாக பேசுவாள்.மகளிடம் உன் அழகு என்ன படிப்பேன்ன உனக்கு கொஞ்சமும் பொருத்தமில்லாதவனோடு நீ ஏன் அடி பணிந்து வாழ வேண்டும் என மகளின் மனதில் சேகர் பற்றி பேசவும் ஆரம்பத்தில் தாயை கண்டித்தவளுக்கு போக போக தாய் தன்னை புகழ்வது அவளுக்கு ஒரு போதையை கொடுத்தது. அவள் மனதிலும்  தனக்கு சேகர் பொருத்தமில்லாதவன் எண்ணம் தோன்றி தினமும் சண்டையிடுவாள்  அவனை மட்டம் தட்டுவாள்.சேகர் தன் மகளுக்காக எல்லாவற்றையும் பொறுத்து கொண்டான்.

 

ஸ்வேதா சேகரை மணந்து தன் வாழ்வே வீணா போனதாக எண்ணி கொண்டு இருந்தாள் அப்போழுது அவளுடம் வேலை செய்யும் ஒருவனுடன் பழக்கம்  ஏற்பட்டு அவனுடன் தப்பான உறவு வைக்கும் வரை இழுத்து சென்றது. சேகருக்கும் தெரிய வந்து  இருவருக்கும் விவகாரத்து ‌ஆனது.

 

சேகருக்கு ஸ்வேதாவின் முகத்தை பார்க்கவே பிடிக்கவில்லை  அவளுடன் தன் மகள் இருக்கவே கூடாதென்ன குழந்தையை தன்னிடம் தரும்படி கேட்டான்.8வயதான வெண்மதியிடம் கேட்க அவள் தாயுடன் இருப்பதாக அழுது கொண்டே சொல்லவும் கதறி அழுதார் சேகர் என் குழந்தையை மட்டும் கொடுத்து விடு என கோர்ட் என்றும் பாராமல் ஸ்வேதா காலிலே விழுந்து அழுதான்.

பெண் குழந்தை தாயுடன் தான் வளர வேண்டும் என்ற கோர்ட் உத்தரவில்   புது காதலருடன் தன் தாய் சகோதரனுடன் மும்பைக்கு  

 

  வெண்மதியை சேகர் தன்னுடன் வைத்து கொள்ள எவ்வளவோ முயற்சித்தும் வெண்மதி தன் தாயுடன் மும்பைக்கு சென்றுவிட்டாள்.

இப்போது தன்னை தேடி வரும் மகளை ஆதரிப்பாரா சேகர் 

 

 

தொடரும்.…

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

❤️ Loading reactions...
0 Comments
Oldest
Newest Most Voted
error: Content is protected !!
Scroll to Top