அத்தியாயம் 38

சுரதை ஈர துணிகளை  காய போட்டு விட்டு படி இறங்கி கீழே வந்த கணம் கேட்டை சடார் என்று திறந்து கொண்டு உள்ளே நுழைந்திருந்தான் விக்ரம்… 

 

அவனைக் கண்டதும் அதிர்ச்சியில் கையில் இருந்த பக்கெட்டை தூக்கிப் போட்டிட.. அவரையும்  கீழே விழுந்த பக்கெட்டையும் அழுத்தமாய் பார்த்த விக்ரம் அவரைத் தாண்டி தன் நீண்ட கால்களால் வேகமான எட்டுக்களை எடுத்து வைத்து உள்ளே நுழைந்தவன்,

 

” நறுஊஊஊஊ….. எங்க இருக்கடீ…???? வெளிய வாடி….”  என கத்தியவன் வேக வேகமாக அவளது அறைக்குச் சென்றான்…

 

மூச்சு வாங்க உள்ளே வந்தவன்  பெண்ணவளது முகத்தைக் கண்டதும் இவ்வளவு நாட்களாய் மனதில் அழுத்தி இருந்த இறுக்கங்களும் அழுத்தங்களும் அனைத்தும் பனித்துளியாய் உருகி கரைந்து அவனை விட்டுப் போய்விட்டது…

 

 ஆனால் வீட்டிற்குள் இருந்து கொண்டே தன்னை பார்க்க விடவில்லையே… இவளும் தன்னுடைய அழைப்புகளை ஏற்கவில்லையே என்கிற கோபம் அவனை வெறியேற்றி இருந்தது…

 

 கோபம் ஒரு புறம் இருந்தாலும் மறுபுறம் இத்தனை மாதங்கள் கழித்து தன்னவளை பார்த்ததும் அவனது கண்ணோரம் கண்ணீர் மெல்ல கசிந்தது …

 

ஒரு நொடி… ஒரே ஒரு நொடி அவளது முழு முகத்தையும் முழுதாய் ஆராய்ந்து விட்டு தன் மனதுக்குள் ஆழ பதித்துக் கொண்டவன் கண்களை இறுக மூடி திறந்து கொண்டு,

 

” வீட்டுக்குள்ளே இருந்துகிட்டு இத்தனை மாசமா என்னை ஏமாத்திக்கிட்டு இருக்கீங்களா..???  அப்படி என்னடி நான் உன்னை பண்ணேன்..???  ஒரு நிமிஷம்… ஒரு நிமிஷம் என்னை பத்தி நீ யோசிக்க கூட இல்லல…

 

 கோவத்துல ஆயிரம் பேசுவோம்… ஆனா அதையே பிடிச்சுகிட்டு தூக்கிட்டு இருப்பியா..???  என் கூட இத்தனை வருஷம் வாழ்ந்தல உன்னை விட்டுட்டு இன்னொருத்தி கிட்ட போக நீ எப்படி பேசலாம்..??? அதுவும் குழந்தைக்காக ..!

 

அன்னிக்கு பண்ணது தப்பு தான் …நீ டைம் கேட்டிருக்கும் போது நான் தந்து இருக்கணும்.. ஆனா அப்ப இருக்குற சிட்டுவேஷன் என்னால எதையும் யோசிக்க முடியல..

 

 ஆனா அதுக்காக உன்னை விட்டு போயிடுவேன்னு நீ எப்படி நினைக்கலாம்..??  எனக்கு உன்னை விட்டா வேற யாருடி இருக்கா..??”  என பேசும் போதே குரல் தழும்பியது அவனுக்கு… 

 

“உங்க அப்பா கிட்ட எத்தனை தடவை தெரியுமா கேட்டேன்.. ஆனா அவர் நீ வெளியூர் போயிருக்கறதா சொல்லிட்டாரு.. எத்தனை தடவை உனக்கு கால் பண்ணேன் மெசேஜ் பண்ணேன்..ஸ்விட்ச் ஆஃப்னு தான் வருது..நீ கூடவா  எனக்கு ரிப்ளை பண்ண மாட்ட… 

 

வீட்டுக்குள்ள தானே இருக்க ஃபோனை எடுத்து ஆன் பண்ணி பார்க்குறதுக்கு என்னடி உனக்கு..?? தாலி கட்டுன புருஷன் இருக்கானா செத்தானானு உனக்கு எதை பத்தியும் கவலை இல்லை..!

 

 நான் தான்டி பைத்தியக்காரன்..!”  என தன் நெற்றியில் அறைந்து கொண்டவன் ,

 

“உன்னை… உன்னை மட்டும் தான் நினைச்சுகிட்டு இருக்கேன்.. பாரு நான் எப்படி இருக்கேன்னு..! பிச்சைக்காரன் மாதிரி இருக்கேனா இல்ல பரதேசி மாதிரி இருக்கேனா..??

 எவனாவது ஒருத்தன் நான் ப்ரொபசர்னு சொன்னா நம்புவானாடி..??  என்னால முடியல ..” என்றவன் அப்படியே முட்டிப்போட்டு தரையில அமர்ந்து அவளது மடியில் தலை சாய்த்து கண்ணீர் வடிக்க ஆரம்பித்தான் …

“என்னை விட்டு எங்கேயும் போகாத நறு… நீ இல்லனா நான் இல்ல.. இப்ப என்ன குழந்தைக்காக தானே நமக்குள்ள இவ்வளவு பிரச்சனை.. அப்படிப்பட்ட குழந்தையே எனக்கு வேண்டாம்..  என் கூட நீ இரு எனக்கு அது போதும்..

 

 இத்தனை வருஷம் நீயும் நானும் எவ்வளவு சந்தோஷமா இருந்தோம்… குழந்தைனு ஒரு பேச்சு வர போய் தானே உனக்கும் எனக்கும் நடுவுல அவ்ளோ பிரச்சனை வலி எல்லாமே வந்துச்சு…” என கண்ணீருடன் பேசியவன் மெல்ல தலையை உயர்த்தி நிமிர்ந்து அவள் முகத்தை பார்த்து ,

 

“நம்மளை பிரிக்கிற குழந்தை வேண்டவே வேண்டாம்.. எனக்கு நீ மட்டும் போதும்டீ…நீ இல்லாத இந்த அஞ்சு மாசம் செத்து செத்துப் பிழைச்சேன்.. என்கூட வந்துடு…யாரையும் இனி ஒரு வார்த்தை உன்னை பேச விட மாட்டேன் ..சத்தியம் பண்றேன்.. ப்ளீஸ்… 

 

எனக்கு தெரியும் நான் உன்னை கஷ்டப்படுத்திட்டேனு.. எல்லாத்துக்கும் சாரி.. பத்தலையா எவ்வளவு வேணாலும் என்னை அடிச்சுக்கோ…

 

 ஆனா என்னை விட்டு போகாதடி ..இனி நிஜமா உன் கிட்ட குழந்தைன்னு ஒன்னு கேட்கவே மாட்டேன்.‌”  என வார்த்தைகள் கூறி முடிக்கவில்லை விக்ரமின் பார்வை அவளது வயிற்றை கண்டு விட்டு அதிலேயே நிலை குத்தி நின்று விட்டது. …

 

தலைகாணி உறைகளை துவைத்துப் போட்டதால் அனைத்து தலைகாணிகளுக்கும் உறை போட சொல்லி இருந்தார் சுரதை..

 

 நறுமுகையும் இப்போது ஓரளவு எழுந்து நிற்க மருத்துவர் அறிவுறுத்தியதால் மெல்ல எழுந்த அமர்ந்து கால்களை தரையில் பதித்தவாறு அமர்ந்து இருந்தவள் ஒவ்வொரு தலகாணிகளாய் மடியில் வைத்து உறை போட்டுக் கொண்டிருந்தாள்…

 

 இறுதியாய் இருந்த தலகாணியை  மடியில் வைத்து உறை போட்டுக் முடித்த சமயம் தான் விக்ரம் அறைக்குள் வந்தது… அவனைக் கண்டதும் அதிர்ச்சியுற்றவள் தலகாணியை கீழே வைக்காது தன் மடி மீதே வைத்து விட்டாள்..

 

 அதில் அவளது  மேடிட்ட வயிறு எதுவும் தெரியவில்லை ..

அவன் இப்படி அதிரடியாய் வந்து நிற்பான் என கொஞ்சம் கூட எதிர்பார்க்கவில்லை நறுமுகை..

 தன்னைத் தேடி உள்ளான்.. தனக்காக ஏங்கி இருக்கிறான்.. என அவன் பேசிய பேச்சுக்கள் ஒவ்வொன்றையும் கேட்கும் போது அவனை வாரி அணைக்க கரங்கள் துடித்துடித்தது …

அவள் மட்டும் அவனைப் பிரிந்து இருந்து சந்தோஷத்தையா அனுபவித்தாள்..??

 

 தினம்தோறும் கண்ணீர் வடிப்பது அவளுக்கு தானே தெரியும்..!

அவன் மடியில் படுத்தபோது அவளையும் அறியாது மேனி சிலிர்த்து அடங்கியது.. நீண்ட நாட்கள் கழித்து அவனது இந்த ஸ்பரிசத்தில் உருகி குழைந்தவள் அவன் பேசப் பேச இது நாள் வரை அவன் மீதான கோபம் மொத்தமும் கரைந்து போய்விட்டது …

 

அவளுமே அவனிடம் எப்படியேனும் பேசிட வேண்டும் என்ற நாளுக்காகத்தான் காத்துக் கொண்டிருந்தாள்.. ஆனால் அவனே வந்து தன்னிடம் பேசிடவும் இதற்கு மேல் மறைத்து என்ன பயன்..?

 

 தன் வயிற்றை மறைத்திறந்த தலையணையை மெல்ல விளக்கிட.. அந்நேரம் அவளது வயிற்றைப் பார்த்த விக்ரம் பேச்சற்று சிலையாகி விட்டான்… 

தன் மனைவியின் மேடிட்ட வயிற்றை சில நொடிகள் அமைதியாக வெறித்தவன் மெல்ல விழிகளை நிமிர்த்தி தன்னவளை கேள்வியாக பார்த்திட.. நறுமுகை கண்ணீருடன் தன்னவனை பார்த்து தன் வயிற்றில் கரம் வைத்து,

 

” ந..ம்ம.. குழந்தை விக்ரம்..”  என்ற கணம் அப்படியே தொய்ந்து போய் பின்னே இருந்த சுவரில் முதுகை சாய்த்த விக்ரமின் உலகம் ஸ்தம்பித்து போய்விட்டது …

 

என்ன நடந்தது..?

 என்ன நடக்கிறது.? என எதுவும் புரியாது தன்னவளையே பார்த்தவாறு இருக்க…

 

”  அன்னைக்கு உங்களை பார்த்துட்டு வந்ததும் வீட்ல மயக்கம் போட்டு விழுந்துட்டேன்.. ஹாஸ்பிடல்ல அட்மிட் பண்ணாங்க.. அப்போ தான் தெரிஞ்சது நான் பிரக்னென்ட்டா இருக்கேன்னு.. 

 

அப்பாவும் அம்மாவும் உங்ககிட்ட விஷயத்தை சொல்லலாம் தான் நினைச்சாங்க.. ஆனா நான் தான் சொல்ல வேண்டாம்னு அவங்களை தடுத்திட்டேன்..” என்றதும் ஏன் என்ற கேள்வியுடன் அவளை பார்த்தான்… 

 

“விவாகரத்து நோட்டீஸ் அனுப்பி இருந்தீங்க.. குழந்தைக்காக என்னை வேண்டாம்னு இன்னொருத்தியை கல்யாணம் பண்ணிக்க முடிவு செஞ்சி இருக்கீங்க..

 இப்ப நான் மாசமா இருக்கேன்னு சொன்னா இப்ப கூட குழந்தைக்காக தானே என்னை ஏத்துப்பீங்க..?

 

 உங்களுடைய நறுவா.. உங்களோட பொண்டாட்டியா என்னை ஏத்துக்க மாட்டீங்களானு தயக்கம்…

 

 அது மட்டும் இல்லாம பிறக்கிற குழந்தை பெண் குழந்தையா இருந்தா அதுக்கும் என்னை மாதிரியே பாதி கர்ப்பப்பையோட பிறந்தா எங்க ஆசையா பெத்த குழந்தையை என்னை மாதிரி குறை இருக்குன்னு எங்களை நீங்க வேண்டாம்னு சொல்லிட்டீங்கன்னா அந்த நிமிஷம் என்னால எதையும் யோசிக்க முடியாது…

 

  எனக்கு தான் வலி அதிகமாக இருக்கும்… அதான் உங்ககிட்ட குழந்தைக்காக வாழ்க்கை பிச்சை கேட்டு நிற்க கூடாதுன்னு முடிவு பண்ணி உங்ககிட்ட இந்த விஷயத்தை சொல்லல..

 

 அப்பா அம்மா கூட எவ்வளவோ பேசி பார்த்தாங்க ..ஆனா நான் எதுக்கும் ஒத்துக்கல ..டாக்டர் பெட் ரெஸ்ட்ல தான் இருக்கணும்னு சொன்னாங்க..

 இப்ப ஃபைவ் மன்த்ந்ஸ் ஆனதால கொஞ்சம் எழுந்து உட்காரலாம்னு சொல்லி இருக்காங்க…

 

 மத்தபடி எனக்கு எல்லாமே இந்த படுக்கை மட்டும் தான் விக்ரம்… உங்க கூட இருந்திருந்தா கண்டிப்பா உங்களுக்கு கஷ்டமா இருந்திருக்கும் ..

நாள் முழுக்கும் படுத்த படுக்கையா தான் நான் கிடக்கணும்… ஒவ்வொரு விஷயத்துக்கும் உங்களை எதிர்பார்க்கணும் ..ஏற்கனவே என்னால் உங்களுக்கு நிறைய கஷ்டம் …

 

உங்க அப்பா அம்மாவும் உங்க ரொம்பவே பிரஷர் பண்ண ஆரம்பிச்சிட்டாங்க.. இதனால நான் இப்படி இருக்கும் போது நீங்க எனக்கு சேவை செய்யறத பார்த்தா கண்டிப்பா அவங்களால தாங்கிக்க முடியாது ..

 

நல்ல ஹெல்தியான பொண்ணை பார்த்து கல்யாணம் பண்ணி இருந்தா என் பையன் ஜம்முன்னு இருந்து இருப்பானே இப்படி அவனுக்கு வேலை பார்க்கணும்னு தலையெழுத்தான்னு கண்டிப்பா உங்க அம்மா கேட்டு இருப்பாங்க…

 

 என்னாலையும் என் குழந்தையாலையும் உங்களுக்கு எந்த கஷ்டமும் வேண்டாம்னு நினைச்சு தான் நான் மொத்தமா விலகி வந்துட்டேன் விக்ரம்..

 

 போனை எடுத்துக் கூட ரொம்ப மாசம் ஆச்சு.. யார் போன் பண்ணி இருக்காங்க மெசேஜ் பண்ணி இருக்கான்னு எதையும் நான் பார்த்ததில்லை ..

 

போன் கையில் இருந்தா கண்டிப்பா உங்களுக்கு கால் பண்ணனும்னு தோணும்.. அதுக்காகவே போனை எடுக்கல ..

 

உங்களை விட்டு விலகி வந்துட்டேன்னு எனக்கு நானே ஏமாத்திட்டு இருந்தேன் விக்ரம்…

 

 உங்களுக்கு எங்களை பத்தி தெரியக்கூடாது ..நீங்க உங்களுக்குன்னு ஒரு வாழ்க்கை அமைச்சுக்கிட்டு என்னால நீங்க அனுபவிச்ச வலி எல்லாம் போதும்னு நினைச்சேன் ..

ஆனா உங்களை நினைக்காத நாள் இல்லை விக்ரம்.. ஒவ்வொரு நாளும் நீங்க மட்டும் தான் கண் முன்னாடி வரிங்க… என் நினைப்பு பூரா இருக்கீங்க… குழந்தை கூட ஒவ்வொரு முறை பேசும்போதும் நீங்க எப்படி எல்லாம் என்னை பார்த்துக் கொண்டீங்கனு சொல்லிக்கிட்டே இருப்பேன்…

 

 மனசளவுல உங்களை விட்டு விலகி வந்துடனும்னு முயற்சி பண்றேன்.. ஆனா முடியல விக்ரம்…

 இந்த உடம்பு மட்டும் தான் உங்களை விட்டு தூரமா இருக்கு ..ஆனா இந்த மனசு உங்களை எப்போ பார்ப்போம்.. உங்களை எப்போ தொடுவோம்னு தவியா தவிச்சுக்கிட்டு இருக்கு விக்ரம்..!

 

 அம்மா கிட்ட ஃபோன் கேட்கவும் வெட்கமா இருக்கு …நான் தான் உங்ககிட்ட எந்த விஷயமும் தெரியக்கூடாதுன்னு சொன்னது.. ஆனா இப்ப நானே கேட்டா அவங்க என்ன நினைப்பாங்களோனு ஒரு பயம்..!

 

 குழந்தை நாளைக்கு என்னை மாதிரி ஏதாவது குறை இருந்து அந்த வலியையும் நீங்க பொறுத்து போகணுமேனு எல்லாம் கஷ்டத்தையும் எனக்குள்ளே போட்டு புதைச்சுக்கிட்டு இப்படி உயிர் இருந்தும் பிணமா இருந்தேன் விக்ரம்..!”  என முகத்தை மூடி கதறியவளை பாய்ந்து வந்து அணைத்து இருந்தான் விக்ரம்…

 

 அவன் அணைத்த நொடி அவனது சட்டை காலரை பிடித்து இழுத்து இன்னும் இறுக்கமாய் கட்டி அணைத்துக் கொண்ட நறுமுகை அவன் தன்னிடம் வந்து விட்டான் என்பதை அவனைத் தொட்டு தொட்டுப் பார்த்து தன்னைத் தானே நம்பும்படி சொல்லிக் கொண்டாள்… 

 இருவருக்கும் பிரிவின் துயரம் வானளவு உயர்ந்திருந்தது… அவரவருக்கு அவரவர் நியாயம்..!

 

 ஆனால் ஒருவர் மீது ஒருவர் கொண்டுள்ள காதல் கொஞ்சமும் குறையவில்லை.. அவளது முகத்தை நிமிர்த்தி இரு கரங்களால் தாங்கிக் கொண்டவன் ,

 

“இவ்வளவு கஷ்டத்த மனசுல வச்சி இருப்பேன்னு சத்தியமா நான் நினைக்கலடி.. நான் ஒரு முட்டாள் ..

 

உங்க அப்பா என்ன சொல்லியிருந்தாலும் வீட்டுக்குள்ளே வந்து பார்த்து இருக்கணும்… நான் இல்லாம நீ எவ்வளவு கஷ்டப்பட்டு இருப்பே..!”  என அவளது முகத்தோடு முகம் சாய்த்து மெளனமாய் கண்ணீர் வடித்தான்…

 

 பெண்ணவளும் அவனது இரு கன்னங்களையும் தன் இரு கரங்களால் தாங்கிக் கொண்டு முகம் முழுவதும் முத்தமிட்டவள் அவனது விழிகளை பார்த்து,

 

” ஐ லவ் யூ விக்ரம்… ஐ லவ் யூ சோ மச் ..” என்றவாரு அது இதழை அழுத்தமாகவும் ஆழமாகவும் கோர்த்துக் கொண்டாள் நறுமுகை …

 

மருமகன் வந்தது அதிர்ச்சியுற்றாலும்  மகளும் மருமகனும் பேச ஆரம்பத்ததுன் கண்ணீரே வந்து விட்டது சுரதைக்கு…

 

 இனியாவது இருவரும் ஒருவாரு பேசி அவர்களே முடிவெடுக்கட்டும் என எதிலும் தலை இடாது தன் கன்னத்தில் வழிந்த கண்ணீரை துடைத்துக் கொண்டு கதவை சத்தம் வராது சாற்றி விட்டு தனது ஓரவதியின் வீட்டிற்கு சென்று விட்டார் …

 

அவர் எண்ணியது போல்விக்ரமும் நறுமுகையும் ஒன்றிணைந்து விட்டிருந்தனர்…

 

 

❤️ Loading reactions...
0 Comments
Oldest
Newest Most Voted
error: Content is protected !!
Scroll to Top