அத்தியாயம் 8

இதே சமயம் நவநீதனோ, அடுத்த நாளே பைக்கை வாங்கி, அதற்கான வேலைகளை முடித்தும் இருந்தான்…

ஒரு வாரம் கடந்து இருக்கும், தனிஷாவை கேன்டீனில் தான் சந்தித்தான்.

இருவரும் காலையில் சண்ட்விச் சாப்பிட்டுக் கொண்டே பேசியபடி இருந்தார்கள்…

“இன்னைக்கு எத்தனை மணிக்கு நீ ஃப்ரீ?” என்று கேட்டான்.

அவளோ, “பன்னிரண்டு மணிக்கு ஃப்ரீ ஆயிடுவேன்” என்று சொல்ல, “நானும் ரெண்டு மணிக்கு ஃப்ரீ ஆயிடுவேன், ஈவ்னிங் படத்துக்கு போகலாமா?” என்று கேட்டான்.

இதழ்களை சுளித்தவளோ, “நான் கஷ்டபட்ட பொண்ணு மஜ்னு” என்றாள்.

அவனுமே, “நானும் தான், ஆனாலும் என் கூட ஒரு பணக்காரன் இருக்கான், அவன் கிட்ட பைக்கை வாங்கி வந்து இருக்கேன், பணமும் வாங்கி இருக்கேன், போகலாம்” என்றான் கண்களை சிமிட்டி…

“ரொம்ப தான் கொடை வள்ளல் போல” என்று அவள் சொல்ல, அவனோ, “ம்ம், நான் என்ன கேட்டாலும் கொடுப்பான்” என்றான்…

“அப்போ கிளம்பலாம்” என்று அவள் சொல்ல, அவனும் சிரித்துக் கொண்டான்.

அன்று லெக்ஷர் போனவள் மனதில், ‘பைக் வாங்கி இருக்கான் போல’ என்று நினைத்துக் கொண்டவள், தனக்கு உரிய லெக்ஷர் முடிய, அவளுக்காக காத்துக் கொண்டு இருந்தாள்.

ரெண்டு மணி போல, அவனும் பைக்கில் வந்து சேர்ந்து இருக்க, பைக்கை வருடியவள், “புது பைக் போல இருக்கே” என்றாள்…

“ம்ம் போன வாரம் தான் வாங்குனான்” என்றான்…

“உங்கள நம்பி புது பைக்கை தந்து இருக்கான்” என்று கேள்வியாக சொல்ல, “நல்லா ஓட்டுவேன் லைலா” என்றான்.

“இன்டர்நஷனல் லைசென்ஸ் இருக்கா என்ன?” என்று கேட்க, அவனோ குரலை செருமிக் கொண்டே, “அதெல்லாம் உனக்கெதுக்கு? நீ முதல் ஏறு” என்றான்.

அவளும் சிரிப்பை அடக்கிக் கொண்டே, பைக்கில் ஏற, பைக்கும் உயர் வேகத்தில் புறப்பட்டது.

அவளுக்கும் இந்த பைக் பயணம் இனிமையாக இருந்தது… 

வழக்கமாக காரில் தான் அவள் காலேஜுக்கு வருவாள்… 

அவளுக்காக தனி ஃபிளாட் ஒன்றே வாங்கி போட்டு இருந்தான் வீரராகவன்…

காரை காலேஜிலேயே பார்க் செய்து விட்டு தான் அவனுடன் கிளம்பி இருந்தாள் பெண்ணவள்…

அவன் தோள்களில் கையை வைத்துக் கொண்டே, முகத்தில் பட்ட காற்றை ஆழ்ந்து சுவாசித்த பெண்ணவளுக்கு இந்த அனுபவம் புதிது தான்…

ஒரு வழியாக தியேட்டரையும் அடைந்து விட்டார்கள்… 

அவன் தான் இருவருக்கும் டிக்கெட் எடுத்தான்… 

அவளுக்கு சங்கடமாக இருந்தாலும், “இதுக்கெல்லாம் எப்படி கை மாறு செய்ய போறேனோ தெரியல மஜ்னு” என்றாள்…

“நல்லா படிச்சு, உன் பிச்சைக்கார தம்பியை காப்பாத்து, இது என் ஃப்ரென்ட் பணம் தான்” என்று சொல்லிக் கொண்டே, உள்ளே செல்ல, அவளும் சென்றாள்…

சூப்பர் ஸ்டார் ரஜனிகாந்தின் படம்…

வழக்கமாக ஊரில் எல்லாம் விசில், வெடி என்று அமர்க்களமாக இருக்கும்…

ஆனால் இங்கே, இறப்பு வீட்டில் இருப்பது போல தான் எல்லாரும் இருந்தார்கள்… அருகே இருந்த தனிஷாவைப் பார்த்த நவநீதனோ, “என்ன இது இப்படி இருக்கு? ஒரு விசில் கூட இல்ல?” என்று கேட்டவன் விசிலடிக்க, “ஷ்ஷ்” என்றாள் அவள் சங்கடமாக அக்கம் பக்கம் பார்த்துக் கொண்டே, ‘இவ ரொம்ப எலைட் ஆஹ் இருக்காளே’ என்று நினைத்த நவநீதனோ, “விசில் அடிச்சு என்ஜாய் பண்ணனும் லைலா” என்றான்…

“எல்லாரும் பார்க்கிறாங்க” என்றவளிடம், “யார் பார்த்தா நமேகென்ன, சந்தோஷமா இருக்கிறது தப்பில்லை” என்று சொல்லி, அவன் கையை தட்டி ஆரவாரம் செய்ய, அவளும் அவனை மென் புன்னகையுடன் பார்த்துக் கொண்டே கையை தட்டினாள்…

அவன் பணத்துக்கு குறைவு இல்லாதவன் என்று அவளுக்கு புரிந்தது…

அதே சமயம், மிகவும் பகட்டானவன் அல்ல என்றும் விளங்கியது…

சாதாரண பழக்கவழக்கங்கள் உடையவன் சராசரி மனிதன் தான்…

அவன் பெயர் கூட தெரியாது… 

ஆனாலும் அவனை அறியாமல் ஒரு பிடித்தம் அவன் மீது உருவானது பெண்ணவளுக்கு…

படம் முடிந்ததுமே, “சாப்பிட போகலாமா லைலா?” என்று கேட்டான்.

“மஜ்னு நான்” என்று அவள் ஆரம்பிக்க, “கஷ்டபட்ட பொண்ணு, அதானே, நானும் பிச்சகாரப் பையன் தான், என் ஃப்ரென்ட் கொடுத்த பணம் இருக்கும், சாப்பிடலாம் வா” என்றான் கண்களை சிமிட்டி…

அவளக்கு ஏனோ மறுக்க தோன்றவில்லை…

அவனுடன் பைக்கில் ஏறிக் கொள்ள பைக்கும் புறப்பட்டது…

குளிர்ந்த காற்று வீசியது…

அவளுக்கோ நடுக்கம்… 

பற்கள் தந்தியடிக்க தொடங்கின…

“வீட்டுக்கு போகலாம் மஜ்னு நடுங்குது” என்றாள்…

“கட்டிப் பிடிச்சுக்கோ லைலா” என்றான்…

“என்னது?” என்று அவள் கேட்க, அவனோ, “உனக்காக தான் சொல்றேன், இதுல எந்த தப்பான எண்ணமும் இல்லை” என்றான் இதழ்களுக்குள் சிரிப்பை அடக்கிக் கொண்டே…

அவளும் சற்று நேரம் கையை இறுக கட்டி குளிரை அடக்க முயன்றாள்.

ஒரு கட்டத்துக்கு மேல் முடியவில்லை. 

இறுக அணைத்து விட்டாள்…

அவன் இந்த அணைப்பை எதிர்பார்க்கவே இல்லை.

அவன் வண்டி ஒரு கணம் வேகத்தை குறைத்து பின்னர் வேகமெடுத்தது.

‘வாழ்க்கைல ஒருத்தி முதல் தடவை கட்டி பிடிச்சு இருக்கா’ என்று நினைதவனோ இதழ் குவித்து ஊதிக் கொண்டே, வண்டியை செலுத்த, அவன் இதழ்களுக்குள் புன்னகை தேங்கி நின்றதைப் போல, அவள் இதழ்களுக்குள்ளும் புன்னகை தேங்கி நின்றது.

சற்று நேரத்தில் ரெஸ்டாரண்டும் வந்து விட்டது..

அவள் இறங்கிக் கொள்ள, அவனும் இறங்கிக் கொண்டான்…

அவளோ, “லெட்ஸ் கோ” என்று சொல்ல. அவளை மென் சிரிப்புடன் பார்த்தவன் அவள் கையை பற்ற, அவள் சட்டென அவனை அதிர்ந்து பார்த்தாள்…

“கட்டி பிடிச்சதுக்கு கையை பிடிக்கலாம் ல” என்றான்…

அவனை மேலிருந்து கீழ் பார்த்தவள், “நான் குளிர்னு தான் கட்டி பிடிச்சேன்” என்றாள்…

“எனக்கும் குளிருது லைலா” என்றான் முகத்தை பாவமாக வைத்துக் கொண்டே…

‘சரியான லொள்ளு பிடிச்சவன்’ என்று நினைத்தவளோ, “ம்ம்” என்று சொல்லிக் கொண்டே, நடக்க, அவள் கையை கோர்த்தபடி தான் அவன் உள்ளே நடந்து வந்தான்…

பார்த்தால் காதலர்கள் என்று தான் சொல்வார்கள்… 

ஏனோ அவனை அவளுக்கும் பிடிக்க, அவளை அவனுக்கும் பிடித்துப் போனது.

ஒன்றாக உட்கார்ந்து சாப்பிட்டார்கள்.

இயல்பாக கைகளை பற்றிக் கொண்டார்கள்…

நட்பு என்கின்ற பெயரில் கொஞ்சம் நெருங்கி தான் போனார்கள்…

ஆனால் இன்னுமே இருவரும் உண்மையான அடையாளத்தை வெளியிடவே இல்லை…

அவர்கள் நட்பு நாளுக்கு நாள் நெருங்கிப் போனது… 

நாட்கள் மாதங்களாயின… 

இருவரின் உள்ளத்திலும் நட்பு காதலாகி விட்டது…

ஆறு மாதங்களாகியும் காதலை சொன்ன பாடு இல்லை… 

அடுத்தவருக்கு தம் மீது காதல் இருக்குமா? இல்லையா? உண்மை தெரியாமல் எப்படி காதலை சொல்வது?என்கின்ற சந்தேகங்களினாலேயே காதலை உள்ளுக்குள் புதைத்துக் கொண்டார்கள்…

முதல் தடவை நவநீதனுக்கு ஒரு பெண் மீது ஆழமான காதல்…

எத்தனையோ பேருக்கு காதலை சொல்லி இருக்கின்றான் தான்…

அது எல்லாம் ஓரிரண்டு நாட்கள் தாண்டுவதே கஷ்டம் என்கின்ற நிலை தான்…

ஆனால் இவளுடன் ஆறு மாதங்கள் பழகி விட்டான்…

உள்ளுக்குள் காதலிக்க தொடங்கியும் விட்டான்…

என்னென்னவோ யோசித்து பழக ஆரம்பித்தான்…

ஆனால் இப்போது நிஜமாகவே காதலிக்க ஆரம்பித்து விட்டான். 

காதலை சொல்லி, இருக்கும் நட்பு கெட்டு அவள் விலகி விடுவாளோ என்று பயந்து காதலை அவன் சொல்லவே இல்லை…

அவளுக்கோ அவன் மீது தான் முதல் தடவை காதல் வந்து இருக்கின்றது…

அவனைப் பற்றி எதுவும் தெரியாமல் காதலிப்பது நெருடலாக இருந்தது…

அவனை பற்றி தெரியாமல் காதலை சொல்லவும் தயக்கம்…

எல்லாமே தெரிந்து கொள்ள வேண்டும்…

ஆனால் எப்படி தெரிந்து கொள்வது?

அவனிடம் கேட்க முற்பட்டால், அவளும் சொல்ல வேண்டி வந்து விடுமே…

யோசனையுடன் நாட்களை நகர்த்தினாள்.

காலையில் கேன்டீனில் சந்தித்துக் கொள்வார்கள், அடிக்கடி அலைபேசியில் பேசிக் கொள்வார்கள்… 

ஒன்றாக பைக்கில் வெளியே சென்று வருவார்கள்…

இன்னுமே இருவருக்கும் நிஜமான பெயர் கூட தெரியாது… 

இப்படியான ஒரு நாள், அவளை ஏற்றிக் கொண்டே, ஊர் சுற்றி விட்டு திரும்பிய நேரம் மழை அடித்துப் பெய்ய ஆரம்பித்து விட்டது…

சற்று இருளான நேரம்…

மழைக்குள் ஓடவும் முடியவில்லை…

“லைலா, கொஞ்ச நேரம் மரத்துக்கு கீழ நின்னிட்டு கிளம்பலாம், டிரைவ் பண்ண முடியல” என்று சொன்ன நவநீதன் பைக்கை அடர்ந்த  மரத்தின் கீழே நிறுத்தி இருந்தான்.

இருவரும் மொத்தமாக நனைந்து விட்டார்கள் வேறு…

“என்ன இவ்வளவு மழையா இருக்கு?” என்று கேட்ட தனிஷாவோ கையை மார்புக்கு குறுக்கே கட்டி குளிரை அடக்கிக் கொண்டே, அவனை நெருங்கி நின்றாள். 

அவனும் கைகளை உரசி குளிரை அடக்க முயன்று கொண்டு இருந்தான். இருவரின் தோள்களும் உரசிக் கொண்டன… 

இதழ் குவித்து ஊதிக் கொண்டே அவளை திரும்பிப் பார்த்தான். 

அவளும் பார்த்தாள். 

அவள் இதழ்கள் நடுங்கிக் கொண்டு இருக்க, “குளிருதா ?” என்று கிசுகிசுப்பாக கேட்டான். 

ஆம் என்று தலையாட்டினாள். 

அவளது விரித்து விட்டு இருந்த முடி ஈரமாகி இருக்க ,  முகத்தில் மழை துளிகள் தெறித்து இருந்தன… மெல்லிய வெளிச்சத்தில் அவள் அழகு அவனை ஈர்த்து எடுத்தது… 

குரலை செருமிக் கொண்டே, “டீ ஷேர்ட் உள்ளே வா , சூடா இருக்கும்” என்றான். 

அவளுக்கும் ஆசையாக இருந்தது… அவளும் காதலிக்கின்றாள் தானே… ஆனாலும் தயக்கம். 

இல்லை என்று தலையாட்டினாள். 

“சரி உன் விருப்பம்” என்று சொல்லிக் கொண்டே அவன் விலகி நிற்க , என்ன நினைத்தாளோ தெரியவில்லை. 

அவன் டி ஷேர்ட்டை இழுத்து உள்ளே புகுந்து கொண்டாள். 

இருவரின் முகமும் ஒரே டீஷர்ட்டின் கழுத்தினை அணிந்து இருக்க,  அவன் வெற்று மேனியை அவளும் உணர்ந்தாள். 

சின்ன அதிர்ச்சி அவளுக்கு… 

அவன் தேகம் இரும்பு போல இருந்தது… 

அவன் முகத்துக்கும் பேச்சுக்கும் சிரிப்புக்கு பொருத்தமே இல்லாத திடகாத்திரமான மேனி… மெதுவாக கைகளை சுற்றி அணைத்தபடி அவனை ஏறிட்டுப் பார்த்தவள், “ஜிம் போவீங்களா??” என்று கேட்டாள். அவளையே பார்த்துக் கொண்டு இருந்தவன், “ம்ம்” என்றான். 

இருவரின் விழிகளும் நீண்ட நேரம் நோக்கின… அவன் விழிகள் தன்னையும் மீறி அவள் இதழ்களில் படிந்து மீண்டது.

அவளுக்கும் அதே உணர்வு போல, அவன் இதழ்களை ஒரு கணம் பார்த்து விட்டு விழிகளைப் பார்க்க, அவனோ சித்தம் இழந்து விட்டான்…

உள்ளுக்குள் இருவருக்குமே காதல்…

காதல் இருந்தால் காமமும் இருக்கும் தானே…

அவளை சுற்றி வளைத்து தன்னுடன் நெருக்கிக் கொண்டான்…

அவள் மேனியில் சிலிர்ப்பு…

அவள் இதழ்களைப் பார்த்துக் கொண்டே குனிந்தான்…

அவளும் விழிகளை மூடி, இதழ்களை விரித்து, அவனுக்கு சம்மதம் தெரிவிக்க, அவனோ அவள் இதழ்களில் தன்னிதழ்களை அழகாக பொருத்தி இருந்தான்.

பெயர் கூட தெரியாது…

காதலையும் சொல்லவில்லை…

ஆனால் இருவரும் முத்தமிட்டு விட்டார்கள்…

மேனிகள் சூடேறும் வண்ணம் ஆழ்ந்த அழுத்தமான முத்தம் அது…

எவ்வளவு நேரம் முத்தமிட்டார்கள் என்று இருவருக்குமே தெரியாது…

பெரிய இடி சத்தம் கேட்டது…

வேகமாக முத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்த தனிஷாவோ வேகமாக அவன் டீ ஷேர்டினுள் இருந்து வெளியே வந்தாள்…

அவளால் அவனைப் பார்க்கவே முடியவில்லை…

முத்தமிட அனுமதித்து விட்டாளே…

சற்று பதட்டமாகி விட்டது…

“சீக்கிரம் கிளம்பலாம்” என்றாள் எங்கோ பார்த்துக் கொண்டே…

அவனுக்கு இதழ்களுக்குள் சிரிப்பு…

குரலை செருமியவன், பைக்கில் ஏற, பின்னால் ஏறிக் கொண்டாள்…

பைக்கும் புறப்பட்டது…

ஆனால் இருவருமே பேசிக் கொள்ளவில்லை… 

அவளுக்கோ தடுமாற்றம்… 

எந்த நம்பிக்கையில் இந்த எல்லைக்கு சென்றாள் என்று தன் மீதே ஆத்திரம்…

அவளை வழக்கம் போல கல்லூரி அருகே விட, அவளோ,  வேகமாக இறங்கியவள், அவனை பார்க்காமலே அங்கிருந்து செல்ல, அவனோ பெருமூச்சுடன், ‘ரொம்ப பண்ணுறா, நாளைக்கு பார்த்துக்கிறேன்’ என்று நினைத்து விட்டு வீட்டுக்கு சென்று இருந்தான்.

❤️ Loading reactions...
0 Comments
Oldest
Newest Most Voted
error: Content is protected !!
Scroll to Top