அத்தியாயம் 11

“ஆமா, இப்படி பப்லிக் ஆஹ் கிஸ் அடிச்சா எல்லாருக்கும் தானே தெரியும்” என்று அவன் தோள்களை உலுக்கி சொல்ல,  தனேஷ்வரோ, “ஐயோ” என்று சொல்லிக் கொண்டே தலையில் இரு கைகளையும் வைத்துக் கொண்டான்.

அர்ஜுனோ, “ரெண்டு குழந்தை பெத்து இருக்கோம், இதெல்லாம் எங்களுக்கு பழகி போன ஒன்னு தான்” என்றான் கிண்டலாக…

“அதுக்கு இல்ல அண்ணா, இப்போ யார் யார் கிட்ட சொல்லி இருப்பாங்களோ?” என்று கேட்க, விழிகளை சுழற்றி ராகவியை தேடினான் அர்ஜுன்…

அவளோ பெண்களிடம் சிரித்து சிரித்து பேசிக் கொண்டு இருக்க, “எங்க குடும்பத்துக்கு இந்நேரத்துக்கு பரவி இருக்கும்” என்றான் அர்ஜுன்…

“ஐயோ” என்றான் தனேஷ்வர்…

“கல்யாணம் பண்ணிக்கிற ஐடியா இருக்கு தானே, அப்புறம் என்ன?” என்று கண் சிமிட்டி கேட்டு விட்டு அர்ஜுன் நகர்ந்து விட, அங்கே தொய்ந்து அமர்ந்தான் தனேஷ்வர்…

அவனுக்கு ஹன்சிகாவை பிடிக்கும் தான்… 

காதலிக்கின்றான் தான்…

ஆனால் திருமணத்திற்கு முன்னே கர்ப்பம் என்பது அதிகப்படி தான்…

விழிகளை சுழற்றி தன்னவளை தேடினான்…

அவளோ குழந்தைகளுடன் பபில்ஸ் விட்டு விளையாடிக் கொண்டு இருந்தாள்…

‘என்ன டென்ஷன் பண்ணிட்டு அவ ஜாலியா இருக்கா’ என்று நினைத்தாலும், அவளது சந்தோஷத்தை குலைக்க விரும்பாதவன் மென்மையாக புன்னகைத்துக் கொண்டான். 

சின்ன வயதில் இருந்தே இருவரும் நண்பர்கள் தான்…

அவனை விட ஓரிரண்டு மாதங்கள் அவள் மூத்தவள்…

ஆனாலும் ஒரே வகுப்பில் தான் கல்வி கற்று இருந்தார்கள்… 

மாறி மாறி பிடித்தம் உண்டாகி விட்டது…

அவனுக்கோ பெண் நண்பிகள் ஏராளம்…

அவனை ரசிக்கும் பெண்களும் ஏராளம்… பார்த்ததுமே பெண்களை ஈர்த்துக் கொள்ளும் சினிமா நடிகன் போன்ற தோற்றம் அவனுக்கு… 

தன்னை விட்டு வேறு பெண்களிடம் சென்று விடுவானோ என்று பயம் ஹன்சிகாவுக்கு…

அவள் தான் காதலை முதலில் சொன்னாள்…

அவனும் சம்மதித்தான்… 

காதலும் வளர்ந்தது…

ஒரே கல்லூரியில் படித்தார்கள்…

அதிகப்படி முத்தமிட்டு இருக்கின்றார்கள்…

இப்போது தனிஷாவின் திருமணத்துக்கு இரு மாதங்கள் முன்னர் தான் அவர்கள் அடுத்த கட்டத்துக்கு சென்றார்கள்…

அதற்கும் அவள் தான் காரணம்…

அவன் மீதான அதிக பிடித்தம் காரணம்…

தனிஷாவுக்கு திருமணம் நிச்சயமான பின்னர் தான் ஹன்சிகா அவனை திருமணம் செய்வதில் மும்முரமாக இறங்கி விட்டாள்…

அவனிடம் கேட்டுப் பார்த்தாள். 

“இப்போ என்னடி அவசரம், மூணு நாலு வருஷம் போகட்டும்” என்று சொல்லி விட்டான்…

அவளுக்கு அந்தளவுக்கு எல்லாம் பொறுமை இல்லை…

வீட்டில் ஆட்கள் இல்லாத சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்டாள்…

குளித்து விட்டு இடையில் டவலுடன் வந்தவனை இறுக அணைத்துக் கொண்டாள்…

“விடுடி” என்று அவன் திமிறினான்…

“செமையா இருக்கு இந்த டட்டூ” என்று அவன் மார்பில் முத்தம் பதித்தாள்.

“வீட்லயும் யாரும் இல்லை, சும்மா டெம்ப்ட் பண்ணாதே, ஏதாவது அப்புறம் பண்ணிடுவேன்” என்றான்…

“பண்ணுடா தப்பில்ல” என்றாள் அவள் கண்களை சிமிட்டி.

“கொன்னுடுவேன் தள்ளுடி” என்று தள்ளி விட முயன்றான்…

“எனக்கு நீ வேணும், தனா” என்றாள்…

“ப்ரெக்னன்ட் ஆயிடுவ, பரவாலையா?” என்று கேட்டான்…

“இன்னைக்கு வாய்ப்பில்லை” என்று பொய்யை அடித்து விட்டாள்…

அவனும் இளமை துள்ளலுடன் இருப்பவன் ஆயிற்றே…

அதற்கு மேல் மறுக்க முடியுமா? இதழ்களை கவ்விக் கொண்டான்…

மொத்தமாக ஆட்கொண்டான்…

அவள் ஆரம்பித்தாள்.

அவன் நிறுத்தாமல் தொடர்ந்தான்… 

திருமணம் ஆகாமலேயே, அடுத்த கட்டத்துக்கு சென்று விட்டார்கள்…

அதன் விளைவு, அவள் இப்போது கர்ப்பமாக இருக்கின்றாள்…

தனேஷ்வருக்கு விஷயத்தை கேள்விப்பட்டதும் அதிர்ச்சி தான்.

இங்கே வைத்து இதனை பற்றி பேசாமல்,  சிங்கப்பூர் திரும்பியதும் இதனை வீட்டில் சொல்லி திருமணத்துக்கு ஏற்பாடு செய்யலாம் என்று நினைத்து இருந்தான்.

இப்போது தனிஷாவுக்கு தெரிந்து விட்டது…

தனிஷா எதையும் மறைத்து வைக்க மாட்டாள்…

எப்படியும் வீரராகவனுக்கு சொல்லி விடுவாள் என்று அவனுக்கும் தெரியும்…

அவன் நினைத்த போலவே, “அம்மா” என்று அக்ஷயாவை அழைத்துக் கொண்டே அறைக்குள் தனிஷா செல்வது தனேஷ்வரனுக்கு தெரிந்தது…

அக்ஷயா எப்படியும் தனேஷ்வரனுக்கு திட்ட மாட்டார்…

அவன் பயம் எல்லாம் வீரராகவனை நினைத்து தான்…

‘நாசமா போச்சு’ என்று வாய்க்குள் முணுமுணுத்துக் கொண்டான்…

அதே போல. தனிஷாவும், “உங்க பையன் என்ன பண்ணி இருக்கான் தெரியுமா?” என்று கேட்க,. “என்னடி?” என்றார்  அவர்…

“ஹன்சிகாவுக்கு கிஸ் அடிச்சு இருக்கான்” என்று சொல்ல, அக்ஷயா அவளை அதிர்ந்து பார்த்தவர், “லவ் பண்ணுறாங்களா என்ன?” என்று கேட்க, அங்கே கீர்த்தனாவும் வந்து விட்டார்…

“அம்மாவும் பொண்ணும் என்ன பேசிட்டு இருக்கீங்க?” என்று கேட்டபடி கீர்த்தனா வர, “உன் பொண்ணும் என் பையனும் லவ் பண்ணுறாங்க போல” என்றார் அக்ஷயா… 

கீர்த்தனாவோ, “ஆஹ் கல்யாணம் பண்ணி வச்சுடலாம்” என்றார்…

தனிஷாவோ, “ஆன்டி, என்ன இது? நீங்க கோபப்படனும்” என்றாள் ஆதங்கமாக…

“நான் எதுக்குடி கோபப்படனும்? தனேஷ், நான் தூக்கி வளரத்த பையன், அவனை போல மாப்பிள்ளை கிடைக்குமா என்ன?” என்று கேட்டவர், “இத செழியன் கிட்ட சொல்றேன்” என்று சொல்லி. அலைபேசியில் நெடுஞ்செழியனை அறைக்குள் அழைக்க, உள்ளே வந்த நெடுஞ்செழியனும், “என்னம்மா?” என்று கேட்டார்…

கூடவே வீரராகவனும் வந்து விட்டார்…

“என்ன விஷயம்?” என்று வீரராகவன் கேட்க, தனிஷாவோ, “உங்க பையன், ஹன்சிகாவுக்கு கிஸ் அடிச்சு இருக்கான், மாப்பிள்ளை வீட்டுக்காரங்க பார்த்து சொல்றாங்க” என்று சொன்னதுமே, வீரராகவனும் நெடுஞ்செழியனும் ஒருவரை ஓருவர் அதிர்ந்து பார்த்துக் கொண்டார்கள்…

சட்டென இருவரும் தலையை உலுக்கிக் கொள்ள, “சீக்கிரம் கல்யாணம் பண்ணி வச்சுடலாம்” என்றார் நெடுஞ்செழியன்…

“அங்கிள் நீங்களுமா?” என்று தனிஷா கேட்க, “ஏன் மா?” என்றார்  அவர்…

“உங்களுக்கு எல்லாம் கோபமே வராதா?” என்று கேட்டாள்…

அவரோ, “எதுக்கு கோபப்படனும்?” என்று கேட்க, வீரராகவனோ, “நாங்க ஏற்கனவே பேசி வச்சது தான்” என்று சொல்ல, “க்கும்” என்று தனிஷா சொல்லிக் கொண்டு இருக்கும் போதே, தயங்கி தயங்கி உள்ளே வந்தான் தனேஷ்வர்…

தனது பிரச்சனை தான் போகும் என்று தெரியும்…

ஹன்சிகாவையும் அழைத்து வந்து விட்டான்…

“டேய், நல்லா இருடா, யாருமே கோபப்படல” என்று தனிஷா சொல்ல, கஷ்டப்பட்டு வீரராகவனைப் பார்த்து தயக்கமாக சிரித்தான் தனேஷ்வர்…

அவன் பின்னே ஹன்சிகா ஒளிந்து நின்றாள்…

வீரராகவனோ, “ஒரு ரெண்டு வருஷம் போகட்டும்” என்று ஆரம்பிக்க, “ரெண்டு மாசம் கூட தாங்க முடியாதுப்பா” என்றான் தனேஷ்வர். 

வீரராகவனின் புருவம் இடுங்கியது.

“ஹன்சா, ப்ரெக்னன்ட் ஆஹ் இருக்கா” என்று சொல்லி விட்டு விழிகளை இறுக மூடிக் கொண்டான்…

“உன்னை” என்று பற்களை கடித்துக் கொண்டு சீறியபடி அவனை நோக்கி வீரராகவன் செல்ல, வீரராகவனை இழுத்துப் பிடித்த நெடுஞ்செழியனோ, “டேய் எனக்கும் தான் டா லைட்டா நெஞ்சு வலிக்குது, அவசரப்படாதே, என்ன இருந்தாலும் என் மருமகன் ஆச்சே” என்றார்…

 நெடுஞ்செழியனை முறைத்த வீரராகவனும், “நீயாச்சு அவனாச்சு” என்று திட்டி விட்டு செல்ல முற்பட, அக்ஷயாவோ, “அதுக்குள்ள என்னை பாட்டி ஆக்கிட்டியா?” என்று கேட்க, “நாசமா போச்சு” என்று அவரையும் திரும்பி பார்த்து திட்டி விட்டு வெளியேறி விட்டார்  வீரராகவன்…

கீர்த்தனாவோ. “என்னடி இதெல்லாம்?” என்று ஹன்சிகாவுக்கு திட்ட, அக்ஷயாவோ, “எதுக்கு அவளை திட்டுற?” என்று கேட்டுக் கொண்டே, ஹன்சிகாவின் கையை பற்றி அங்கே அமர வைத்தவர், “வாந்தி இருக்க்கா என்ன?” என்று கேட்க, அவளோ, “இல்ல ஆன்டி” என்றாள் தயக்கமாக…

“இனி என்ன ஆன்டி? அத்தைன்னு கூப்பிடு” என்று சொல்ல, அவளும் சம்மதமாக தலையாட்டி இருந்தாள்…

கீர்த்தனாவோ, “சீக்கிரம் கல்யாணத்துக்கு ஏற்பாடு பண்ணிடுங்க” என்று நெடுஞ்செழியனிடம் சொல்லிக் கொண்டே வெளியேறி இருக்க,  இப்போது அக்ஷயாவை பார்த்து தனேஷ்வர் மென்மையாக சிரிக்க, அவளோ, ஹன்சிகாவிடம், “நீ போம்மா” என்று சொன்னார்…

அவளும் கிளம்பி இருக்க, அக்ஷயாவோ, தனேஷ்வரிடம். “கதவை மூடிட்டு வாடா” என்றார்…

அவனும் கதவை மூடி வந்தவன், அவர் அருகே அமர்ந்து, “அம்மா, தேங்க்ஸ்” என்று முடிக்கவில்லை…

காதை பிடித்து ஊன்றி திருகி இருந்தார்…

“அம்மா” என்று அவன் அலற, “அம்மா தான் டா, கொஞ்சம் உனக்கு வாலை சுருட்டிட்டு இருக்க முடியாதா? நானும் கோபப்பட்டு இருந்தா, எல்லாரும் போட்டு சாத்தி இருப்பாங்க, அதான் சும்மா இருந்தேன்” என்று சொல்ல, “அம்மா, எனக்கு அவளை பிடிக்கும்மா” என்று சொன்னான் கெஞ்சுதலாக…

“அதுக்குன்னு இப்படியாடா பண்ணுவ?” என்று திட்டியவரோ, பெருமூச்சுடன், “சீக்கிரம் கல்யாணம் பண்ணனும்” என்றபடி எழுந்து கொண்டார்…

அவனோ, “சாரி” என்றான்.

“என்னடா சாரி? கொஞ்சம் விட்டு இருந்தா உங்க அப்பா உன்னை கொன்னு இருப்பார்” என்று சொல்ல, அவனோ, “காப்பாத்த நீங்க இருக்கீங்களே” என்றான் சிரித்துக் கொண்டே…

“அந்த எகத்தாளம் தானே” என்று கேட்டு விட்டு, அவரும் அங்கிருந்து வெளியேறி விட்டார்…

அதனை தொடர்ந்து, அறைக்குள் ஹன்சிகா தான் நுழைந்தாள்…

அங்கே அமர்ந்து இருந்த தனேஷ்வரிடம், “சாரி” என்று சொல்ல, அவன் மென் சிரிப்புடன் அருகே அழைத்தான்…

அவளும் வந்து அமர, “ஹெல்த் எப்படி இருக்கு?” என்று அவள் கையை பற்றி கேட்டான்…

அவளுக்கு அவனை இன்னுமே பிடித்து போனது…

அவள் தான் எல்லாவற்றுக்கும் காரணம்…

மொத்த பழியையும் தானே ஏற்றுக் கொண்டானே…

“என் மேல கோபம் இல்லையா?” என்று கேட்க, “கோபம் தான்… ஆனாலும் என்னை ரொம்ப பிடிச்சு தானே பண்ணுன… அதனால மன்னிச்சுட்டேன்” என்று சொல்லி, அவளை அணைத்துக் கொள்ள, “ஐ லவ் யூ தனா” என்றாள் அவள் நெகிழ்வாக…

“ஐ டூ லவ் யூ” என்று சொல்லி, அவள் இதழில் அழுந்த இதழ் பதித்து இருந்தான் தனேஷ்வர். அவர்கள் பிரச்சனை ஓரளவு சுமூகமாக தீர்ந்து இருந்தது.

இரு வீட்டினரும் நிச்சயம் பண்ணி வைத்ததால் என்னவோ பெரிய எதிர்ப்போ சலசலப்போ உண்டாகவில்லை… 

இதே சமயம், நவநீதன் மற்றும் தனிஷாவின் திருமணம் இனிதாக நிறைவேறி எல்லோரும் ஒன்றாக திருமண புகைப்படத்தை எடுத்துக் கொண்டார்கள்…

இப்போது தனிஷா சக்திவேலின் வீட்டுக்கு செல்ல வேண்டும்…

அவளுக்கோ, இன்னுமே நவநீதன் மேல் ஆத்திரம் தான்…

ஆனாலும் தந்தை மேல் ஒரு நம்பிக்கை இருந்தது…

கண்டிப்பாக வீரராகவன் தவறான ஒருவனை மாப்பிள்ளையாக்கி இருக்க மாட்டார்…

அந்த இடத்தில் அவள் நின்று நிதானிக்க வேண்டிய சூழல்…

சக்திவேலின் குடும்பம் பற்றியும் தெரியும்…

நவநீதன் அப்படியான குடும்பத்தில் பிறந்து, மோசமாக இருக்க மாட்டான் என்றும் ஒரு பக்கம் யோசித்தவளோ, ‘அவன் கிட்ட நைட் நிறைய பேசணும்’ என்று யோசித்துக் கொண்டே புறப்பட்டாள்…

வீரராகவன் எல்லோரும் நின்று ஒரு வாரம் கழித்து தான் சிங்கபூர் புறப்படுவதாக இருந்தது…

அணைத்து அழ நாள் இருந்தது…

அதனால் அவள் அழவில்லை…

சக்திவேலின் வீட்டுக்கும் வந்து விட்டாள்…

ராகவி ஆரத்தி எடுத்து, அவளை உள்ளே அழைத்து இருக்க, பல்லவி, அவளை அழைத்துக் கொண்டு போய் சாமியறைக்குள் விளக்கு ஏற்ற வைத்தாள்.

அதனை தொடர்ந்து அவளை அறை ஒன்றுக்கு அழைத்து சென்ற வந்தனாவோ, “எட்டு மணிக்கு தான் முகூர்த்தம், ரெஸ்ட் எடுத்துட்டு குளிச்சுட்டு இருக்கு, நாங்க ஏழு மணி போல அலங்காரம் பண்ண வர்றோம்” என்று சொல்ல, ‘ஃபெர்ஸ்ட் நைட் ஒன்னு தான் குறை’ என்று நினைத்தவளுக்கு இன்னுமே இந்த திருமணத்தை ஜீரணிக்க முடியவில்லை… 

நவநீதன் அருகே இருந்தாலும் அவனுடன் அவள் பெரிதாக பேசவும் இல்லை…

அவளுக்குள் பல்வேறு திசையில் யோசனைகள்.

வீரராகவன் மீது நம்பிக்கை இருந்தாலும், யாருக்குமே தெரியாத அவனது அடுத்த ரூபத்தை பற்றி அறியாமல் திருமணம் பேசி விட்டாரோ என்கின்ற கோணத்தில் யோசனையும் உருவானது…

நிலை கொள்ளவே அவளால் முடியவில்லை…

கோபமாக வந்தது…

தன் மீதே கோபம் வந்தது…

‘நேரத்துக்கே யார்ன்னு விசாரிச்சு கல்யாணத்தை நிறுத்தி இருக்கணும், ரொம்ப பெரிய தப்பு பண்ணிட்டேன்’ என்று தனக்கு தானே திட்டியபடி படுத்தவள் கொஞ்ச நேரம் தூங்கி விட்டு குளிக்க சென்றாள்…

அவள் குளித்து விட்டு வந்து புடவை அணியவும், அவள் அறைக் கதவை தட்டவும் நேரம் சரியாக இருந்தது…

கதவை திறந்தாள்…

ஈசல் போல நிறைய பேர் உள்ளே வந்து விட்டார்கள்…

தனியே வளர்ந்தவளுக்கு இந்தளவு சொந்தங்கள் பிடித்து இருந்தது…

மெதுவாக புன்னகைத்துக் கொண்டே, பல்லவியை பார்க்க, அவளோ, “எங்க போனாலும் இந்த நண்டு சிண்டு எல்லாம் பின்னாடியே வந்துடும்” என்று சிரித்தபடி சொல்ல, யாழினியோ, தனிஷாவின் கையை பற்றியவள், “சித்தி ரொம்ப அழகா இருக்கீங்க, அம்மா இவங்களுக்கு எதுக்கு மேக்கப்?” என்று கேட்டாள் பல்லவியிடம்.

பல்லவி சிரித்துக் கொண்டே, “அவ சொல்றதும் சரி தான்” என்று சொல்ல, தனிஷா சற்று குனிந்து யாழினியின் கன்னத்தில் முத்தமிட்டவள், “உன் அளவுக்கு நான் அழகாக வேணாமா?” என்று கேட்டாள்…

அவளோ, சிரித்துக் கொண்டே மாறி முத்தம் பதித்து இருந்தாள்…

அதனை தொடர்ந்து, அங்கே பால் செம்புடன் வந்த துளசியோ, “சீக்கிரம் அலங்காரம் பண்ணுங்க, இப்படியே பேசிட்டு இருந்தா என்ன அர்த்தம்?” என்று கேட்டபடி மேசையில் பால் செம்பை வைக்க, அதனை எட்டிப் பார்த்த ராகவி, “அம்மா எதுக்கும்மா இவ்ளோ பாதாம்?” என்று கேட்டாள்…

வந்தனாவோ சத்தமாக சிரித்துக் கொண்டே, “சொல்லுங்க பெரியம்மா” என்று கேட்க, துளசியோ, “சும்மா போங்கடி” என்று திட்டிக் கொண்டே, தனிஷாவிடம், “நீ உட்காரும்மா” என்று சொல்ல, அவளும் அமர்ந்தாள். 

மஞ்சள் நிற புடவை அணிந்து இருந்தவளுக்கு முடியை பின்னி பூக்களை அள்ளி வைத்து இருந்தார்கள்…

பேரழகியாக இருந்தாள்….

எப்படியும் எதுவும் நடக்க போவது இல்லை என்று தெரிந்தாலும், சிரித்த போலவே முகத்தை வைத்து இருந்தாள்.

அங்கே குட்டிகள் எல்லோரும் அங்கும் இங்கும் ஓடி திரிய, தனிஷாவின் பெட்டிக்குள் இருந்த பொருட்களை எடுத்து விளையாடவும் ஆரம்பித்து விட்டார்கள்…

“டேய் சும்மா இருங்கடா” என்று சுகனா அவர்களை அதட்ட, “பரவாயில்ல அக்கா, விளையாடட்டும்” என்றாள் தனிஷா…

“உனக்கு தெரியலம்மா இதுங்கள பத்தி… வீட்டையே தலைகீழா மாத்தி வைப்பாங்க” என்று சொல்லி, பெட்டியை மூடி விட்டாள் சுகனா…

தனிஷாவுக்கு அவர்களின் குடும்பத்தை மிகவும் பிடித்து விட்டது…

நவநீதனை மட்டும் தான் பிடிக்கவில்லை… 

பல்லவியிடம், “மாமா டாக்டர் தானே” என்று கேட்டாள் தனிஷா…

திருமணம் பேசிய நேரத்தில் அவள் பெரிதாக மாப்பிள்ளையின் குடும்பத்தை பற்றி கேட்கவில்லை…

இப்போது கேட்டாள்…

பல்லவியும், “ஆமாம்மா துளசி ஹாஸ்பிடல் தான், சொந்த ஹாஸ்பிடல் தான், இப்போவும் டிலிவேரி ஒன்னுக்கு தான் கிளம்பி இருக்கார்” என்றாள்…

தனிஷாவோ, “பெருசா நான் எதுவும் விசாரிக்கல, அது தான் கேக்கிறேன், தப்பா நினைச்சுக்காதீங்க” என்றாள்…

“அதெல்லாம் ஒன்னும் இல்லம்மா, நானே எல்லாம் சொல்லிடுறேன்” என்று சொன்ன பல்லவியோ, “என் புருஷனும் சுகனா புருஷனும் டாக்டர்ஸ்” என்றாள்…

உடனே தனிஷா, ‘ஓஹோ, இவங்க தான் ஹாஸ்பிடல் முன்னாடி பிச்சை எடுக்கிறதா அவன் சொன்னானா? பாவி பய’ என்று நினைத்தவளுக்கு சிரிப்பும் வந்து விட்டது, அடக்கிக் கொண்டாள்.

மேலும் தொடர்ந்த பல்லவியோ, “நான் காலேஜ் ல லெக்ஷர் பண்ணுறேன், சுகனாவும் டாக்டர் தான், அப்புறம் நம்ம வந்தனாவோட வீட்டுக்காரர் விஜய் தான் நவா கூட சேர்ந்து பிசினஸ், ஃபேக்டரி எல்லாம் பார்த்துக்கிறார்” என்று சொன்னாள்…

‘இவங்க புருஷன் தான் ஃபேக்டரி முன்னால பிச்சை எடுக்கிறவர் போல’  என்று வந்தனாவைப் பார்த்து நினைத்துக் கொண்டே, “போலிஸ் யாரு?” என்று கேட்டாள்…

“அது நம்ம ஜீவி அண்ணன்” என்ற ராகவியோ மேலும், “நேத்ராவுக்கு கொஞ்சம் உடம்பு சரி இல்லன்னு கிளம்பிட்டா, நேத்ரா எனக்கு மச்சி முறை… ஜீவிஅண்ணன் நம்ம அண்ணியோட மச்சான்… மாறி மாறி சம்பந்தம் பண்ணி இருக்கோம்” என்று சிரித்தபடி சொல்ல, மெலிதாக சிரித்த தனிஷாவோ, “அப்போ நவாவோட சுப்பர் மார்க்கெட் மச்சான், உங்க புருஷனா?” என்று கேட்டு விட்டாள்…

ராகவியோ, “தெரியாதுன்னு சொல்லி, நிறையவே தெரிஞ்சு வச்சு இருக்க?” என்று கேட்க, அவளோ மெலிதாக சிரித்தபடி, “மேலோட்டமா தெரியும் அண்ணி, இப்போ நிறைய தெரிஞ்சுக்கிறேன்” என்று கண் சிமிட்டி சொல்லிக் கொண்டாள்…

இதே சமயம், நவநீதன் அறைக்குள் தான் அர்ஜுன், ராம்குமார் மற்றும் விஜய் நின்று இருந்தார்கள்… 

ஆரண்யனும் அங்கே தான் ஓடி திரிந்து கொண்டு இருந்தான்… 

அறையை அலங்காரம் செய்து கொண்டு இருந்தார்கள்…

ராம்குமாரோ “எனக்கு இப்படி எல்லாம் பண்ணுணீங்களா டா? எவ்ளோ பூ” என்று சொல்லிக் கொண்டே, பூக்களை கட்டிலில் தூவ விஜய்யோ, “இன்னைக்கு பண்ணிடலாம் மச்சான்” என்றான்…

அர்ஜுனோ, “க்கும், மூணு புள்ளைங்க வச்சுட்டு இவருக்கு ஃபெர்ஸ்ட் நைட் தான் ஒரு குறை” என்று கிண்டல் செய்ய, ராம்குமாரோ, “அது என்னவோ சரி தான்… எங்களுக்கு எப்போவுமே சிவராத்திரி தான்… நம்ம கடைசி குட்டி இருக்காளே, பகல் முழுக்க தூங்குவா, இரவு முழுக்க முழிச்சு இருப்பா” என்று சொல்ல, “எங்க வீட்லயும் அதே கதை தான்” என்றான் அர்ஜுன்…

ஆரண்யனோ ஓடி வந்து கட்டிலில் படுத்தவன், “அப்பா, நல்லா இருக்குல்ல” என்று சொல்ல, “எந்திரி டா” என்று அவனை பிடித்து எழ வைத்தான் அர்ஜுன்…

அவனோ, “கல்யாணம் முடிச்சா இரவில பூ எல்லாம் போட்டு அலங்காரம் பண்ணுவாங்களா?” என்று கேட்க, விஜய் அடக்கப்பட்ட சிரிப்புடன் அர்ஜுனைப் பார்க்க, ராம்குமாரோ, “ஏதாவது சொல்லுடா, நீ சொல்றத தான் என் பையன் கேட்டா நானும் சொல்லணும்” என்றான்…

“இதுலயும் பிட்டு அடிப்பாங்களா என்ன?” என்று கேட்ட அர்ஜுனோ, “ம்ம், பண்ணுவாங்க” என்றான்…

ஆரண்யனோ, “அப்பா, எனக்கு ரோஜா பூவுல பண்ணனும்… புரியுதா?” என்று கேட்டான்…

விஜய்யோ வாயை மூடி, மறுபக்கம் திரும்பி சிரிக்க ஆரம்பித்து விட்டான்…

“டேய் இதெல்லாம் அப்பா கிட்ட பேசுற பேச்சா டா?” என்று ராம்குமார் சிரித்தபடி கேட்க, அர்ஜுனோ, “என் கஷ்டம் இப்போ புரியுதா?” என்று கேட்டவன், “பண்ணிடலாம் டா” என்றான்…

ஆரண்யனோ, “எஸ், எஸ், எனக்கு ரோஜா பூ டெக்கரெஷன்” என்று சொல்லிக் கொண்டே, துள்ளி ஓடிச் சென்றான்…

இரு கைகளாலும் முகத்தை தேய்த்த அர்ஜுனோ, ‘இவன் கூட முடியல’ என்று புலம்பிக் கொண்டே அலங்காரத்தை செய்ய, அங்கே வந்த நவநீதனோ, “இது எல்லாம் எதுக்கு?” என்று கேட்டபடி அங்கே அமர்ந்தான்…

அர்ஜுனும், “சம்பிரதாயம் டா” என்று சொல்ல, அவனிடம் ஒரு பெருமூச்சு மட்டுமே…

இதே சமயம், தனிஷாவின் அறைக்குள் சென்ற ஆரண்யனோ, “அம்மா, என்னோட கல்யாணம் அன்னைக்கு ரோஜாப்பூ டெக்கரெஷன்னு அப்பா சொல்லி இருக்கார்” என்று சத்தமாக சொல்ல, அங்கே இருந்தவர்கள் எல்லோரும் பக்கென்று சிரித்து விட்டார்கள்…

ராகவியோ, “இந்த அர்ஜுனுக்கு” என்று திட்டிக் கொண்டே புடவையை சொருகியவள், விறு விறுவென அர்ஜுனை தேடி வந்தாள்…

அங்கே அவனோ விஜய், ராம்குமார் மற்றும் நவநீதனுடன் பேசிக் கொண்டு இருக்க, “அர்ஜுன் சின்ன பையன் கிட்ட பேசுற பேச்சா இது?” என்று கேட்டுக் கொண்டே அவன் முன்னால் வந்து நின்றாள்…

“நான் எதுவும் பேசலையே” என்று அவன் யோசனையுடன் சொல்ல, அவனை முறைத்தவளோ, “அவன் ஃபெர்ஸ்ட் நைட்டுக்கு ரோஜா பூவுல டெக்கரேஷன் பண்ணுறேன்னு சொல்லி இருக்கீங்க, அவன் எல்லார் கிட்டயும் சொல்லிட்டு இருக்கான்” என்று சொல்ல, அங்கே நின்ற மீதி மூவரும் சிரிக்க ஆரம்பித்து விட்டார்கள்…

அவளை முறைத்த அர்ஜுனோ, “ஏய் இங்க பாரு, உன் பையன் ஒன்னும் உத்தமன் இல்ல, அவன் தான் ரோஜாப்பூ டெக்கரேஷன் வேணும்னு கேட்டான்… நான் சரின்னு சொன்னேன் அவ்வளவு தான்” என்றான்…

“சின்ன பையனுக்கு என்ன தெரியும்… நீங்க தான் அவனை கெடுக்கிறீங்க” என்று சொல்ல, அர்ஜுனோ, “ஹையோ, உனக்கு அவனே பரவாயில்லை” என்று சலிக்க, ராம்குமாரோ சிரித்துக் கொண்டே, “உன் பையன் தான் டி கேட்டான்… அர்ஜுனா ஒன்னும் சொல்லவே இல்ல” என்றான்…

அதன் பிறகே அவள் ஒரு பெருமூச்சுடன் அர்ஜுனை பார்த்து விட்டு நகர, அவனோ, “முடியலடா” என்று சலித்துக் கொள்ள, “ஃப்ரீயா விடுங்க மச்சான்” என்று அவன் தோளில் கையை போட்டபடி நவநீதன் சொன்னான்…

“இந்த கஷ்டம் உனக்கு ஒரு நாலு வருஷம் கழிச்சு தெரியும்… இப்போ நீ ஆசைக்கு பேசிக்கோ” என்று சிரித்தபடி சொல்லிக் கொண்டான்…

❤️ Loading reactions...
0 Comments
Oldest
Newest Most Voted
error: Content is protected !!
Scroll to Top