விறு விறுவென அவள் அறைக்குள் நுழைய, நவநீதனோ சுவரில் சாய்ந்து இதழ்களுக்குள் சிரித்தபடி நின்று இருந்தான்…
வாசல் கதவை தாழிட்டு விட்டு அவன் முன்னே வந்து நின்றவளோ, “இப்படி தான் ஆட்கள் முன்னாடி பேசுவீங்களா?” என்று கேட்டாள்.
“நீ போட்டு கொடுக்க பார்த்த தானே” என்றான் ஒற்றைப் புருவம் உயர்த்தி…
“காஃபில உப்பு போட்டு முதலில வம்பிழுத்தது யாரு?” என்று கேட்டாள்.
அவளை மேலிருந்து கீழ் பார்த்துக் கொண்டே குரலை செருமியவன், “சரி அதெல்லாம் விடு, சமாதானம் ஆயிடலாமா?” என்று கேட்டான்.
“ச்சீ, நீங்க பார்த்த வேலைக்கு அது ஒன்னு தான் குறைச்சல்” என்றாள் கோபமாக…
“ஹேய் இங்க பாரு, நான் சும்மா கடலை போட்டு திரிஞ்சேன் அவ்ளோ தான்… உன்னை தவிர எந்த பொண்ணு மேலயும் மூச்சு காத்து கூட பட்டது இல்லை” என்றாள்.
அவனை முறைத்தவள், “ஐ லவ் யூன்னு ஒருத்திக்கு தான் சொல்லணும்… ஒரே நேரத்துல பத்து பேருக்கு சொல்லி இருக்கீங்க சார்” என்றாள்.
“தப்பு தான்டி, அதுக்கு தான் என் அண்ணன் ஓங்கி ஒன்னு ,கொடுத்தார், அதுக்கப்புறம் அடக்கி வாசிக்க ஆரம்பிச்சுட்டேன். அந்த விளையாட்டுக்கு எல்லாம் போறது இல்ல” என்றான்…
“அதுக்கு அப்புறம் தானே நான் லிஸ்ட் ல வந்தேன்” என்றாள்.
“ஏன்னா உன்னை உண்மையாவே லவ் பண்ணுனேன்” என்றான்…
“வாய திறந்தாலே பொய் தான்… உருட்டு உலகநாதன்” என்று திட்டினாள்.
அவனோ, “நிஜமா தான் லைலா” என்றான்…
“என் பேர் தனிஷா” என்றாள் மார்புக்கு குறுக்கே கையை கட்டிக் கொண்டு…
“எனக்கு லைலா தான்” என்றான்…
கண்களை மூடி ஆழ்ந்த மூச்சை எடுத்து விட்டாள்.
இதற்கு மேல் அவனிடம் சண்டை போட்டு பயன் இல்லை என்று தெரிந்தது…
நிதானமாக பிரச்சனையை கையாள்வது உசிதம் என்று பட்டது…
“இதுக்கு மேல எப்படி நம்பிக்கை வரும் நவா?” என்று ஆற்றாமையுடன் கேட்டாள்…
“என் மேல நீ ஒன்னும் நம்பிக்கை வைக்கணும்னு சொல்ல, என் குடும்பத்து மேல நம்பிக்கை இருக்கு தானே… நாலைஞ்சு பொண்ணுங்க பின்னாடி போனா, இந்நேரம் என் அண்ணன் தூக்குல கட்டி தொங்க விட்டு இருப்பார் டி, என் அப்பா கர்லா கட்டையாலயே மண்டையை பிளந்து இருப்பார்… இன்ஸ்ட்டா ல வாய் சவடால் மட்டும் தான் எனக்கு… அதுக்கே என் அண்ணா கிட்ட அப்படி ஒரு அறை வாங்குனேன்… நான் வீட்டை விட்டு முதல் தடவை வந்ததே அவுஸ்திரேலியாவுக்கு மட்டும் தான்… அதுவே எவ்ளோ பிரச்சனை தெரியுமா? அங்கே நான் பார்த்த பொண்ணு நீ தான்… உன்னை தான் டி நான் முதலும் கடைசியுமா கிஸ் அடிச்சே இருக்கேன்… இப்போ வரைக்கும் மறக்க முடியல… அதான் கல்யாண பொண்ணு முகத்தை கூட நான் பார்க்காம சரின்னு சொன்னேன்… பார்த்தா நீயே கல்யாண பொண்ணா வந்து நிக்கிற” என்றான்…
அவளுக்கும் அதே மனநிலை தானே…
புரிந்து கொள்ள கூடிய போல இருந்தது…
அவனை விட அவன் குடும்பம் மேல் அளப்பெரிய நம்பிக்கை இருந்தது…
ஆனாலும், “எனக்கு நம்பிக்கை இல்ல” என்று சொல்லிக் கொண்டே நகர முற்பட, அவள் கையை எட்டிப் பிடித்தவனோ, “நீ எதுக்கு கல்யாணத்துக்கு சரின்னு சொன்ன?” என்று கேட்டான்…
அவன் கையில் இருந்து கையை உறுவிக் கொண்டே, “மாப்பிள்ளை யாருன்னு தெரியாம தான் சரின்னு சொன்னேன்” என்றாள் எங்கோ பார்த்துக் கொண்டே…
“மேடம்க்கு மாப்பிள்ளையை பார்க்க தோணலையா?” என்று கேட்க, “பத்து பதினைஞ்சு பேருக்கு ஐ லவ் யூ சொன்ன உங்களுக்கே அப்படி ஒரு ஃபீலிங் இருந்துச்சுன்னா, ஒரே லவ், ஃபெர்ஸ்ட் கிஸ்… எனக்கெப்படி இருக்கும்?” என்று கேட்டாள்.
சட்டென அவளையும் மீறி பேசும் போது குரல் நெகிழ்ந்து விட்டது…
அவன் இதழ்களுக்குள் மெல்லிய புன்னகை…
“அப்போ வாழ ஸ்டார்ட் பண்ணிடலாமே” என்றான்…
“பக்கத்துல வந்தா கொன்னுடுவேன், அலைஞ்சான்” என்று ஒற்றை விரலை நீட்டி திட்டி விட்டு அவள் செல்ல, “என்னடி இது அநியாயமா இருக்கு? நீ வேற அநியாயத்துக்கு அழகா இருக்க” என்று அவன் புலம்ப, சிரிப்பை அடக்கிக் கொண்டே, அவள் வெளியேறி இருந்தாள்.
அவளை தொடர்ந்து அவனும் வெளியேறி வர, அர்ஜுனோ. “என்னடா தேடி எடுத்தாச்சா?” என்று கேட்டான்…
“ஆமா ஆமா ஒளிச்சு வச்சு இருந்தா, இப்போ கொடுத்துட்டா” என்று நவநீதன் சொல்ல, அவனை திரும்பிப் பார்த்து முறைத்து விட்டு, ராகவி அருகே வந்து அமர்ந்தாள் தனிஷா…
“ஏன்டா அந்த பொண்ண படுத்துற?” என்று ராகவி கேட்க, “நிஜமா ஒளிச்சு தான் வச்சா” என்று அவன் சொல்ல, தனிஷாவுக்கு சுர்ரென்று கோபம்…
அவனை முறைத்துக் கொண்டே, அர்ஜுனிடம் “அப்படி எல்லாம் இல்ல அண்ணன், உங்கள பத்தி அவர் சொன்னதை நான் சொல்லிடுவேனோன்னு பயம்” என்றான்…
இதனை எதிர்பார்க்காத நவநீதனோ, “ஷ்” என்று சொல்ல, “என்ன ஷ்? நீ சொல்லும்மா என்ன சொன்னான்?” என்று அர்ஜுன் கேட்டான்…
“சொல்லாத” என்று நவநீதன் சொல்லிக் கொண்டே, அவளை நோக்கி செல்ல, அவனை இழுத்து அருகே அமர வைத்த அர்ஜுனோ, “நீ சொல்லும்மா” என்றான்.
தனிஷாவோ, “எனக்கு நவாவை அவுஸ்திரேலியாவில தெரியும்… ஒரே காலேஜ் ல தான் படிச்சோம்” என்று சொல்ல, “அடிப்பாவி,உளறி வைக்கிறியே” என்று நவநீதன் சொல்ல, அவன் வாயை எட்டி மூடிய அர்ஜுன், “இன்டெரெஸ்ட்டிங் அப்புறம்?” என்றான்..
நவநீதன் இப்போது திமிறிக் கொண்டு இருக்க, “அப்போ அவங்க அண்ணன் மார் ரெண்டு பெரும் ஹாஸ்பிடல் முன்னாடி பிச்சை எடுக்கிறாங்களாம், நீங்க சூப்பர் மார்க்கெட் முன்னாடி பிச்சை எடுக்கிறீங்களாம், ஜீவி மாமா போலீஸ் ஸ்டேஷன் முன்னாடி பிச்சை எடுக்கிறாராம், அப்புறம் விஜய் அண்ணன் ஃபேக்டரி முன்னாடி பிச்சை எடுக்கிறாராம்ன்னு சொன்னார்” என்று சொல்ல, “என்னடா இது?” என்று ராகவி அதிர்ந்து கேட்க, நவநீதனின் வாயில் இருந்து கையை எடுத்த அர்ஜுனோ, அவன் முகத்தை திருப்பிப் பார்த்துக் கொண்டே, “அந்த பொண்ண கரெக்ட் பண்ண, மொத்த குடும்பத்தையும் பிச்சை எடுக்க விட்டுட்டியே” என்றான்…
நவநீதனுக்கோ சங்கடம், “ஐயோ மச்சான், அது சும்மா ஜாலிக்கு சொன்னது” என்று சொன்னவனோ மேலும், “அவளும் தான் அவ தம்பி கேம்பஸ்ல பிச்சை எடுக்கிறான்னு சொன்னா” என்று சொன்னான்…
“அத விடு, நான் சூப்பர் மார்க்கெட் பிச்சை காரனா?” என்று கேட்டான் அர்ஜுன்…
“ஆஹ் அப்புறம், நீங்க நல்லா பொறுக்கி பொறுக்கி அவருக்கு நிறைய கொடுப்பீங்களாம்” என்று சொன்னாள் தனிஷா அடக்கப்பட்ட சிரிப்புடன்…
கண்களை மூடி சங்கடமாக நாக்கை நவநீதன் கடித்துக் கொள்ள, “அடப்பாவி பைக் எல்லாம் வாங்கி கொடுத்தாரே டா, மனசாட்சி இல்லாம இப்படி பேசி இருக்கியே” என்று கேட்டாள் ராகவி…
“ஐயோ ராகவி அது சும்மா” என்று சொல்லிக் கொண்டே தனிஷாவை முறைக்க, அவளோ வாயில் கையை வைத்து சிரிக்க ஆரம்பித்து விட்டாள்.
‘சிக்க வச்சுட்டு சிரிக்கிறா வேற’ என்று மனதுக்குள் திட்டிக் கொண்டான் அவன்…
அர்ஜுனோ, “அந்த பொண்ணை முறைக்கிறத நிறுத்திட்டு இங்க பாரு” என்று அவன் முகத்தை பிடித்து திருப்ப, “என்ன மச்சான்?” என்றான் இழுவையாக…
“ஏன் டா இப்படி சொன்ன?” என்று கேட்க, “நான் ஏழைன்னு காட்ட தான் மச்சான்” என்று சொன்னான் அவன்…
“யார் ஏழை? என்ன பிரச்சனை?” என்று கேட்டுக் கொண்டே, ராம்குமாரும் கஜனும் வீட்டினுள் நுழைந்தார்கள்.
“நாசமா போச்சு” என்று சொல்லிக் கொண்டே, நவநீதன் எழ முற்பட, “உட்காரு” என்று சொன்ன அர்ஜுன் அவன் கையை பிடித்து அமர வைத்து விட்டு, “இன்னைக்கு எவ்ளோ கலெக்ஷன்?” என்று கேட்டான் அர்ஜுன் கஜனிடம்…
“மச்சான்” என்றான் நவநீதன் இழுவையாக…
“என்ன கலெக்ஷன்?” என்று ராம்குமார் கேட்க, “நீங்க ரெண்டு பேரும் ஹாஸ்பிடல் ல பிச்சை தானே எடுத்துட்டு வர்றீங்க?” என்று கேட்டான் அர்ஜுன்…
“வாட்?” என்று கேட்டுக் கொண்டே கஜனும் ராம்குமாரும் அங்கே அமர, ‘ஒன்னு கூடிட்டாங்கய்யா’ என்று நினைத்துக் கொண்டே, எங்கோ பார்த்தபடி அமர்ந்து இருந்தான் நவநீதன்…
அர்ஜுனோ, “அப்படி தான் உங்க ஆசை தம்பி அவுஸ்திரேலியாவுல வச்சு தனிஷா கிட்ட சொல்லி இருக்கா” என்று சொல்ல, கஜன் அவனை அதிர்ந்து பார்த்து விட்டு தனிஷாவைப் பார்த்தவன், “உனக்கு அவனை ஏற்கனவே தெரியுமா?” என்று கேட்டான்.
அவளும் ஆமோதிப்பாக தலையாட்ட, “வேற என்ன சொன்னான்?” என்று கேட்டான்.
“இப்போ அதெல்லாம் ரொம்ப முக்கியமா?” என்று நவநீதன் கேட்க, “எங்களுக்கு முக்கியம் தான்” என்று சொன்ன ராம்குமாரோ, “சொல்லும்மா” என்றான்.
அவள் நவநீதனை அடக்கப்பட்ட சிரிப்புடன் பார்க்க, அவன் அவளை முறைத்துப் பார்த்தான்..
அர்ஜுனோ, “நீ இந்த பக்கம் திரும்பு” என்று கன்னத்தைப் பற்றி திருப்பி விட, தனிஷாவோ, “அப்பா கூலி வேலை செய்யுறாராம், ஸ்காலர்ஷிப் ல தான் படிக்க வந்தாராம்” என்று சொன்னாள்.
“மண்ணாங்கட்டி இவனுக்கு ஸ்காலர்ஷிப் ஆஹ்? பெரியப்பாவும் அண்ணாவும் கோடி கோடியா செலவு பண்ணி அனுப்புனாங்க, பாதில வந்துட்டான்” என்று ராம்குமார் திட்டினான்…
“அதுக்கு இவ தான் காரணம்” என்றான் நவநீதன் கடுப்பாக…
தனிஷாவோ, “நவா” என்று வாய்க்குள் கடுப்பாக திட்ட, “இவ்ளோ உளறுன அத மட்டும் ஏன் விட்டு வைக்கிற?” என்று கேட்டவன், கஜனிடம், “அவளை லவ் பண்ணுனேன், அவளும் பண்ணுனா, ஒரு நாள் என் ஃபோன் அவ கிட்ட சிக்கிட்டு, இன்ஸ்டாகிராம் ஓபன் பண்ணி, பழைய மெசேஜ் எல்லாம் பார்த்து இருக்கா” என்று தயக்கமாக சொல்லி முடிக்க, கஜனோ குரலை செருமிக் கொண்டே, “அப்புறம் பிரேக் அப் ஆகலன்னா தான் அதிசயம் ” என்றவனோ, “உன்னை திரும்ப தெரியாம இவன் கிட்டயே சிக்க வச்சுட்டோம் போல” என்றான்…
தனிஷாவோ, “ஐயோ அப்படி இல்ல மாமா, கோபம் தான்… ஆனா இப்போ பெருசா இல்லை… அவர் மேல நம்பிக்கை இல்லனாலும் உங்க மேல இருக்கு” என்றாள்.
“க்கும்” என்று நவநீதன் சொல்ல, ராம்குமாரோ, “அவன் வாய் சவடால் மட்டும் தான் மா, அதுவும் மூணு வருஷமா ரொம்ப ரொம்ப நல்ல பையனா இருக்கான்” என்றான்…
கஜனும், “அப்போ சார் லவ் ஃபெயிலியர் ல தான் மூணு வருஷமா சோகமா இருந்தீங்களாக்கும்?” என்று கேட்க, நவநீதனும், “ம்ம்” என்று தலையை ஆட்டினான்…
கஜனோ அவனை ஆழ்ந்து பார்த்து விட்டு தனிஷாவைப் பார்த்தவன், “யார் கிட்டயும் பேசுனா சொல்லு, தலையை திருப்பிடுறேன், பேச மாட்டான்னு நினைக்கிறன்” என்று சொல்ல, நவநீதனோ, “அப்படி எல்லாம் பண்ண மாட்டேன் அண்ணா” என்று சலிப்பாக சொல்லிக் கொள்ள, அவனை அடக்கப்பட்ட சிரிப்புடன் பார்த்து விட்டு, கஜனைப் பார்த்தவள், “அப்படி எல்லாம் பண்ண மாட்டாருன்னு நம்புறேன்” என்றாள்.
அதனை தொடர்ந்து எல்லோரும் சகஜமாக பேச ஆரம்பித்து விட்டார்கள்…
ஆனால் நவநீதன் அதன் பிறகு தனிஷாவை பார்க்கவே இல்லை.
அவளும் அடிக்கடி பார்த்தாள்.
அவன் பார்வை அவளை தழுவவே இல்லை.
அவனும் அன்று இரவு குளித்து விட்டு அறைக்குள் அமர்ந்து இருந்தான்…
தனிஷாவும் குளித்து விட்டு வந்து குங்குமத்தை வைத்தவளுக்கு அவன் அமைதி என்னவோ போல இருந்தது…
விறு விறுவென அவன் முன்னே வந்து நின்றவள், “இப்போ என்ன?” என்று கேட்க, அவனோ, “பச்” என்று சொல்லிக் கொண்டே அவன் எழுந்து நகர்ந்து விட்டான்…
சட்டென எட்டி அவன் கையை பற்றியவள், “இப்போ என்ன?” என்று கேட்க, “கையை விடு” என்றான்.
“இப்போ என்ன பிரச்சனை?” என்று கேட்டாள்.
“எல்லார் கிட்டயும் அசிங்கப்படுத்தியாச்சு, அப்புறம் என்ன??” என்று கேட்டான் அவள் விழிகளை பார்த்துக் கொண்டே…
“அதுல அசிங்கப்பட என்ன இருக்கு? ஜாலியா தானே நீங்களும் எடுத்துக்கிட்டிங்க?” என்று கேட்டாள்.
“இல்ல எனக்கு ஒரே அசிங்கமா போச்சு” என்று அவளுக்கு முதுகு காட்டி நின்று சொன்னவனுக்கு சிரிப்பும் வந்து விட்டது…
அவனுக்கு அப்படி எல்லாம் உணர்வே இல்லை…
அவளுடன் விளையாட நினைத்து விட்டான் போலும்…
கஷ்டப்பட்டு சிரிப்பை அடக்கிக் கொண்டே நின்று இருந்தான்…
அவளுக்கு அவன் பேசிய தோரணையில் ஒரு மாதிரி ஆகி விட, “சாரி நவா, நான் விளையாட்டா தான் சொன்னேன்…” என்று ஆரம்பிக்க, “சரி விடு, நீ உன் வேலையை பாரு, நான் என் வேலையை பார்க்கிறேன்” என்று சொல்லிக் கொண்டே, அவள் கையில் இருந்து கையை உறுவியபடி நடக்க, அவனை மறித்தபடி வந்து நின்றவள், “அப்போ என் கூட பேச மாட்டிங்களா?” என்று கேட்டாள்.
“இப்போ என்ன பேசணும்?” என்று கேட்டான்…
என்ன சொல்வது என்று தெரியாமல் திணறியவள், “ஏதாவது பேசலாமே, இப்படி கோச்சுக்கிட்டு இருக்கிறது, ஒரு மாதிரியா ஃபீல் ஆகுது” என்று சொல்ல, அவளை மேலிருந்து கீழ் பார்த்தவன், “உன்னை மொத்தமா இன்னைக்கு கொடு, நான் பேசுறேன்” என்றான்…
அவளோ வாயில் அதிர்ந்து கையை வைத்தவள், “அடப்பாவி” என்று சொல்ல, “புருஷன் டி, அந்த நினைப்பு உனக்கு இருக்கான்னு கூட தெரியல” என்று சலிப்பாக சொல்லி விட்டு கட்டிலில் சென்று படுப்பதற்காக தலையணையை சரி செய்ய, அவளோ கண்களை மூடி ஒரு பெருமூச்சுடன், “சரி எடுத்துக்கோங்க” என்றாள்.
சட்டென திரும்பிப் பார்த்தான்.
அவள் எங்கோ பார்த்துக் கொண்டு நின்று இருந்தாள்.
“அப்போ ஆரம்பிக்கலாமா?” என்று கேட்டான்…
அவன் விழிகளைப் பார்த்தவளோ, “அது தான் பெர்மிஷன் தந்துட்டேன் ல, வேணம்னா போங்க” என்றாள்.
“நான் ஏன் டி வேணாம்னு சொல்ல போறன்?” என்று கேட்டபடி அவளை நோக்கி நடந்தான் அவளவன்.