அத்தியாயம் 16

அர்ஜுனின் குடும்பம் கிளம்பிய பின்னர் எல்லோரும் தத்தமது வேலைகளில் மூழ்கி விட்டார்கள்…

அன்று நேரத்துக்கே குளித்து, ஆயத்தமாகி இருந்தான் நவநீதன்…

தனிஷா அறைக்குள் வந்த பாடு இல்லை. 

“நேரத்துக்கே வர்றேன்னு சொல்லிட்டு, ஏமாத்துறா கள்ளி” என்று திட்டிக் கொண்டே, வேஷ்டியை மடித்துக் கட்டியபடி வெளியே வந்தான் நவநீதன்.

தனிஷாவோ ஹாலுக்குள் அமர்ந்து வந்தனாவுடன் அரட்டை அடித்துக் கொண்டு இருந்தாள்.

ராம்குமாரும், விஜய்யும் கிரிக்கெட் பார்த்துக் கொண்டு அமர்ந்து இருந்தார்கள்…

‘இவளை எப்படி கூப்பிடுறதுன்னு தெரியலையே’ என்று நினைத்துக் கொண்டே, ராம்குமார் அருகே அமர, “அப்புறம் என்னடா வேலைக்கு போற ஐடியாவே இல்ல போல” என்று கேட்டான்…

“ஹனி மூன்” என்று அவன் கிண்டலாக சொன்னது தனிஷாவுக்கும் கேட்க, அவனை முறைத்தவள் இதழ்களுக்கு, ‘விவஸ்தை கெட்ட பேச்சுன்னா இவரை விட்டா ஆள் இல்ல’ என்று முணுமுணுக்க, வந்தனா சிரித்துக் கொண்டாள்.

“அண்ணி” என்று தனிஷா சிணுங்களாக சொல்ல, “சரி நான் சிரிக்கல” எண்றவளோ, “நவா பேசாம தனிஷாவையும் வேலைக்கு அழைச்சு போறது” என்று வந்தனா சொல்ல, சட்டென எழுந்த தனிஷாவோ, “நான் ரூமுக்குள்ளயே போறேன்” என்று வெட்கத்துடன் சொல்லிக் கொண்டே, ரூமுக்குள் சென்றாள்.

நவநீதன் எதிர்பார்த்ததும் அதற்கு தானே… நேரத்தைப் பார்த்தான்.

குளிக்க போவாள் என்று தெரியும்…

எப்படியும் பதினைந்து நிமிடங்கள் ஆகி விடும்.

குளியலறையை பார்த்துக் கொண்டே அமர்ந்து இருப்பது கொடுமையிலும் கொடுமை…

அதனை விட இங்கேயே அமர்ந்து விடலாம் என்று நினைத்து விட்டான் போலும்…

அப்படியே அமர்ந்து இருந்தான்…

சரியாக பதினைந்து நிமிடங்கள் கழித்து அவன் உள்ளே செல்லவும், அவள் மார்பில் பூந்துவாலையை கட்டிக் கொண்டே வெளியே வரவும் நேரம் சரியாக இருந்தது…

அவளோ, “பிளான் பண்ணி தானே இங்க வர வச்சீங்க?” என்று கேட்டுக் கொண்டே அலுமாரியை திறக்க, கதவை தாழிட்டு விட்டு, அவளை இழுத்து சுவருடன் சாய வைத்தவன், “இப்போ எதுக்கு ட்ரெஸ்?’ என்று கேட்டான்.

“இன்னைக்கு டயர்ட் ஆஹ் இருக்கு” என்றாள் வேண்டுமென்றே…

“பொய் சொல்லாதே” என்று சொல்லிக் கொண்டே போட்டிருந்த பெனியனை கழட்டி  போட்டவன், அவளை மொத்தமாக உரசிக் கொண்டே நிற்க, அவளோ கண்களை மூடி ஆழ்ந்த மூச்சுக்களை விட்டுக் கொண்டாள். 

விரல்களை எடுத்து, அவள் கழுத்தில் பதிந்து இருந்த பற்தடத்தை வருடிக் கொண்டே, “யாரும் எதுவும் கேட்கலையோ?” என்று கேட்டான்…

அவனையே பார்த்தவள், “இன்னைக்கு பூ வச்சு மறைச்சு இருந்தேன்” என்றாள்.

“சரி இன்னைக்கு என்ன பண்ணலாம்?” என்று இதழ்களுக்குள் அடக்கப்பட்ட சிரிப்புடன் கேட்க, அவளோ, “எதுன்னாலும் ஓகே சார்” என்றாள் கீழ் அதரங்களை கடித்துக் கொண்டே..

“புசு புசுன்னு நாய்க்குட்டி போல இருக்க லைலா” என்று அவள் கன்னத்தை அவன் கிள்ள, அவளோ, “கோட் வேர்ட் அக்செப்டட்” என்று கண் சிமிட்டி சொல்ல, சத்தமாக சிரித்துக் கொண்டே,. அவள் இதழ்களை கவ்வி இருந்தான்…

அடுத்த நாள் அவள் எழுந்த நேரம், அவன் இல்லை…

முதல் நாளை நினைத்து இன்னுமே, வெட்கம் இதழ்களுக்குள் தேங்கி நின்றது… 

அதே வெட்கத்துடன் குளித்து விட்டு வந்தவள் கண்ணில் நவநீதனைக் காணவே இல்லை…

இன்று அவள் எழவே தாமதமாகி விட்டது…

விழிகளை சுற்றி தேடினாள்.

அவன் கண்ணில் படவே இல்லை. 

அங்கே நின்ற யாழினியிடம், “சித்தப்பா எங்க?” என்று கேட்க, அவளோ, “அவர் வெளிய போய் இருக்காரே” என்றாள்.

“எங்க போனாரோ?” என்று முணுமுணுத்துக் கொண்டே, நின்றவளிடம், “வீட்லயே இருக்காம வேலைக்கு போகலாமே தனிஷா” என்றார் சக்திவேல்…

அவளுக்கும் தொடர்ந்து வீட்டில் இருக்க இஷ்டம் இல்லை தான்…

“சரி மாமா, ஃபேக்டரிக்கு இனி நவா கூட போறேன்” என்று சொல்லி விட, அவரும் சிரித்துக் கொண்டார்.

அவளுக்கு நவநீதனின் நினைப்பு தான்…

காணவே இல்லை…

ஒரு நாள் பார்க்கவில்லை என்றாலும் என்னவோ போல ஆகி விட்டது…

இத்தனை நாட்கள் ஒட்டிக் கொண்டு கூடவே இருந்தான்…

அப்போது தெரியவில்லை…

பிரிவு தான் அவன் மீதான நேசத்தின் ஆழத்தையே அவனுக்கு புரிய வைத்தது…

சொல்லி விட்டு சென்று இருக்கலாம் என்று ஆதங்கம் வேறு… 

அலைபேசியில் அழைக்கலாமா என்று யோசித்தாள்.

சின்ன பிள்ளை தனமாக இருக்கும் என்று விட்டு விட்டாள்.

காலையில் சாப்பாடு கூட இறங்கவில்லை…

ஊஞ்சலில் அமர்ந்து கொண்டே வந்தனாவின் மகனிடம் கதை கேட்டபடி இருக்க, ஜீப் வந்து நின்றது…

விஜய்யும் நவநீதனும் தான் வந்திருந்தார்கள்…

மதியம் சாப்பிட வந்திருக்கின்றார்கள் என்று நினைத்தவள், எதுவும் சொல்லவில்லை…

விஜய்யை பார்த்து சிரித்தவள், “உங்க பையன் நல்லா பேசுவான் போல அண்ணா” என்று சொல்லி விட்டு விஷ்ணுவை தூக்கிக் கொண்டே உள்ளே சென்று விட்டாள்.

நவநீதனைப் பார்க்கவே இல்லை…

விஜய்யோ, “என்னடா சண்டையா?” என்று கேட்க, “இல்லையே” என்று சொன்னவனுக்கே ஏன் அவள் முகத்தை தூக்கி வைத்துக் கொண்டு இருக்கின்றாள் என்று புரியவே இல்லை…

அவளும்  ஹாலில் குழந்தையுடன் விளையாடிக் கொண்டு இருக்க, நவநீதனுடன் வந்த விஜய்யோ, “உன் தம்பி டாட்டூ எல்லாம் போட்டு இருக்கான்” என்றாள்.

சட்டென திரும்பிப் பார்த்தாள் தனிஷா…

“என்னடா? தனிஷா பேரா போட்டிருக்க?” என்று கேட்டுக் கொண்டே நவநீதன் அருகே வர, “பேர் எல்லாம் இல்லை, ஏதோ குட்டி குட்டி வளையம் கோர்த்த போல இருக்கு, என்ன டிசைன்னு தான் தெர்ல” என்று சொல்ல, “எங்கடா காட்டு” என்று வந்தனா பார்க்க, தனிஷா ஒரு பெருமூச்சுடன் மாடியேறி விட்டாள்.

நவநீதன் அவளை பார்த்தான் தான்… அவளது கோபத்துக்கான காரணம் அவனுக்கே புரியவில்லை. 

“எதுக்குடா உடம்பை புண்ணாக்குற?” என்று துளசியிடம் திட்டு வேறு விழுந்தது…

சற்று நேரத்தில் மாடியேறி சென்றான்.

அங்கிருந்த மல்லிகை பந்தலின் கீழ் இருந்த கட்டில் ஓவியமாக அமர்ந்து இருந்தாள் பெண்ணவள்…

“என்னடி?” என்று கேட்டுக் கொண்டே, அவள் அருகே அமர்ந்தான்…

விலகி அமர்ந்தாள்.

இடையை பற்றி தன்னுடன் நெருக்கிக் கொண்டான்…

“விடுங்க நவா” என்று அவனை தள்ளி விட்டு எழுந்து கொண்டாள்.

“இப்போ என்னாச்சுன்னு சொன்னா தானே தெரியும்?” என்று அவன் கேட்க, அவன் முன்னே வந்து நின்றவள், “என்ன ஆகணும்? காலைல சொல்லிட்டு போய் இருக்கலாம் ல, பார்க்காம என்னவோ போல இருக்கு” என்று நலிந்து அவள் குரல் ஒலிக்க, எங்கோ பார்த்தபடி நின்று இருந்தாள்.

அவனோ இதழ்களுக்குள் சிரித்தபடி, “நான் கிஸ் அடிச்சுட்டு தான் கிளம்புனேன்… கும்ப கர்ணி போல படுத்து இருந்தது நீ தான்” என்று திட்டினான்.

“பக்கத்துல இருக்கும் போது எதுவுமே தெரியல, கொஞ்ச நேரம் பார்க்கலன்னா என்னவோ போல இருக்கு, நானும் இனி ஃபேக்கரிக்கு வர்றேனே” என்றாள்.

“என்னடி இப்படி ஆயிட்டே” என்றான்…

அவளோ, “ப்ளீஸ்” என்றாள்.

“ஓகே” என்றான்.

“சரி அதென்ன டாட்டூ?” என்று கேட்டவளை ஆழ்ந்து பார்த்தபடி, கழுத்தைக் காட்டினான்…

அவளோ, அதனை வருடிக் கொண்டே, சட்டென விழிகளை விரித்தவள், இரு கைகளையும் வாயில் வைத்தபடி பின்னே நகர்ந்து நின்று அவனை அதிர்ந்து பார்த்தாள்.

இதழ்களை கடித்துக் கொண்டே, “என்னடி?” என்றான் தாபமாக…

“என்னோட பல்லா?” என்று கேட்டாள்.

அவனோ ஆம் என்று தலையாட்டியவன், “ஆனா யாருமே கண்டு பிடிக்கல, நேத்து கடிச்ச தானே, செம்ம ஃபீல் அது, சோ டாட்டூ போட்டுட்டேன்” என்றான்.

அவளோ, “அப்போ நான் உடம்பு முழுக்க போடணும்” என்று சொல்ல, சத்தமா சிரித்துக் கொண்டே, அவளை இழுத்து மடியில் வைத்துக் கொள்ள, “யாரும் வந்திடுவாங்க நவா” என்றாள் சிணுங்களாக…

அவள் கழுத்தை பற்றி, இழுத்து கீழ் அதரங்களை கடித்து இழுத்தான்…

அவளோ, “ப்ளீஸ் விடுங்க” என்று சொல்லிக் கொண்டே எழ முற்பட, சிரித்துக் கொண்டே அவளை விட்டவன், “உனக்கு என்னை இவ்ளோ பிடிக்கும்னு இன்னைக்கு தான் தெரியும்” என்றான்.

“எனக்கும் தான்” என்று கண் சிமிட்டி சொல்லிக் கொண்டே, அவனை நோக்கி குனிந்தவள், அவனது டாட்டூவில் முத்தம் பதித்து விட்டு, விலகிக் கொண்டே, “இன்னைக்கு நான் தான் டிசைட்  பண்ணுவேன்” என்றாள்.

அவனோ சத்தமாக சிரித்துக் கொண்டே, “எனக்கு எதுன்னாலும் ஓகே” என்றான் கண்களை சிமிட்டியபடி.

இப்படியே இரு நாட்கள் கடந்து இருக்கும், ஹாலில் அமர்ந்து துளசி சுகானாவின் குழநதைக்கு எண்ணெய் பூசிக் கொண்டு இருக்க , அதனை ரசனையாக பார்த்தபடி அமர்ந்து இருந்தாள் தனிஷா.

அப்போது அவளை பார்த்துக் கொண்டே வந்து அமர்ந்த நவநீதனின் விழிகள் டி வி யில் படிந்தது…

அங்கே வந்த யாழினியோ, “சித்தி நேத்து சித்தப்பா உங்களுக்கு என்ன பாட்டு டெடிகேட் பண்ணுனார் தெரியுமா??” என்று கேட்டாள்.

தனிஷாவும் நவநீதனை ஒரு மார்க்கமாக பார்த்து விட்டு, “ஹூ லெட்ஸ் தெ டாக் அவுட்.. அதானே” என்று கேட்டாள்.

யாழினியோ, “சொல்லிட்டாரா சித்தப்பா” என்று கேட்க, “அவர் ஒன்னும் சொல்லல… எல்லாம் கண்டு பிடிச்ச்சேன்” என்றபடி நவநீதனைப் பார்க்க, அவனோ இதழ் கடித்து சிரிப்பை அடக்கிக் கொண்டே டி வியை பார்த்தான்.

“உங்கள பார்த்து நாய்ன்னு சொல்றார் உங்களுக்கு கோபம் வரலையா??” என்று கேட்டாள்.

“இன்னைக்கு கேட்டு பாரு, மாடுன்னு சொல்லுவார்” என்று அவள் சொல்ல நவநீதன் விழிகளை விரித்து தனிஷாவை பார்த்தான்.

யாழினியோ, “ஏன் சித்திக்கு இப்படி திட்டிட்டே இருக்கீங்க” என்று கேட்க, அவனோ, “அன்பு தான்” என்றான்.

துளசியோ, “நாய் மாடுன்னு திட்டுறதுல என்னடா அன்பு இருக்கு… இனி அவளை இப்படி பேசி பாரு நான் மனுஷியா இருக்க மாட்டேன்.” என்று அவர் திட்ட, தனிஷாவுக்கு சிரிப்பு வந்து விட்டது… 

அடக்கிக் கொண்டே நவநீதனைப் பார்க்க அவனோ ஒரு கணம் திணறி விட்டு, “ஐயோ அம்மா. அது சும்மா” என்றான்.

“ஏன் அப்படி திட்டுறாருன்னு நான் சொல்லட்டுமா அத்தை ??” என்று தனிஷா அவனை பார்த்தபடி கேட்க அவனோ விழிகளை விரித்து இல்லை என்ற தோரணையில் தலையாட்டினான்.

“அப்போ இன்னைக்கு என்ன பாட்டு??” என்று அவள் ஒற்றை புருவம் உயர்த்தி கேட்டாள்…

அவளை ஆழ்ந்து பார்த்து விட்டு டி வி யின் வாலியூமை ஏற்றினான்.

“செண்பகமே செண்பகமே” பாட்டு விழுந்தது…

“இந்த பாட்டு தான்” என்றான்.

“பாட்டி , சித்தப்பா இப்போவும் சித்திய மாடுன்னு சொல்றார்” என்று யாழினி போட்டு கொடுக்க, “ஐயோ அம்மா நான் ராமராஜன் ஃபேன் மா” என்றான் அவசரமாக… “நீ ரஜனி ஃபேன் தானே” என்று கேட்டா துளசியிடம், “இன்னைக்கு ராமராஜன் ஃபேன்” என்று தனிஷாவை பார்த்துக் கொண்டே சொன்னான்.

தனிஷாவின் விழிகளும் அவனையே காதலுடன் நோக்கி இருந்தன.

❤️ Loading reactions...
0 Comments
Oldest
Newest Most Voted
error: Content is protected !!
Scroll to Top