அத்தியாயம் 6

“எதுக்கு இப்போ வேலைக்கு போகனும் வீட்ல இருக்க போர் அடித்தால் மேற்கொண்டு எதாவது படிக்கட்டுமே” என்றார் சேகர்

“நம்ம வீட்டையே பாருங்க எவ்ளோ அழகா மாற்றி இருக்கா நீங்க கூட நல்லா இருக்குனு சொன்னீங்களே நாலு மனுஷங்களோட பழகினாதானே வெளிநடப்பு புரியும்  வேலைக்கு போகட்டுமே ருத்ரன் கிட்ட தானே போறா” என்று நர்மதா மதிக்காக பேச 

மனைவியை ஒரு கணம் திரும்பி பார்த்த சேகர் விழிகள் யார் கண்ணிற்கும் தெரியாத ஒரு நெகிழ்வு “சரி” என்றதோடு முடித்து கொண்டவர்

“மதியை புடவை கட்டி ஒரு போட்டோ எடு”என்றதும்

“எதுக்கு” 

“அவளுக்கு கல்யாணம் பண்ணிடலாம்னு சொன்னேனே மறந்துட்டியா ”

“இப்ப என்ன அவசரம் இப்ப தானே வந்து இருக்கா கொஞ்ச நாள் போகட்டுமே ”

“உடனே மாப்பிள்ளை கிடைத்து விடுமா  இப்ப ஆரம்பித்தா தான் நல்ல மாப்பிள்ளை கிடைக்கும் நாளை மறுநாள் போட்டோ எடுத்து என் நம்பருக்கு அனுப்பு”

                    *************

ஞாயிற்று கிழமை அன்று சேகர் வேலை இருக்கு என்று வராததால் நர்மதா வெண்மதி வருண் ராகுலோடு காரில் கிளம்பி அண்ணன் வீட்டிற்கு சென்றாள்.

கிருஷ்ணனும்  வெண்மதியிடம் இயல்பாகவே பேசினார்.

ஹாலிற்கு வந்த ஷிவானி வெண்மதியை பார்த்ததும்  வெளிப்படையாகவே முகத்தை அஷ்டகோணலாக்கினாள் 

“இவளுக்கு கொஞ்சம் கூட அறிவே இல்லையா சித்தி தான் கூப்பிட்டாங்கன்னா உடனே கிளம்பி வந்துடுவாளா”என மகிழினியிடம் புலம்பினாள்.

“விடு ஷிவானி அத்தை காதுல விழுந்துட போகுது மதிய யாரோ ஒரு ரிலேட்டிவ் போல நினைச்சுகோ”  என்று மகிழினி கூற

“அவ எனக்கு ரிலேடிவ்வா அவள பார்த்தாலே எரிச்சலா வருது அவ ஆளும் மூஞ்சியும்”

“ஏன் அப்படி சொல்ற நல்ல அழகாதான் இருக்கா நான்கூட ரொம்ப பந்தா பண்ணுவான்னு நினைத்தேன் பார்க்க அப்படிலாம் தெரியலை நேற்று பாட்டி பேசினப்ப முகம் சுளிக்காம நல்ல விதமா தான் இருந்தா எனக்கூட மதிய பிடித்து இருக்கு” என்று கூறி விட்டாள்

“ஓ ரொம்ப பிடிச்சு இருக்கா அவளை அப்ப ஏன் என்கிட்ட பேசிட்டு இருக்க போ அவகிட்டயே போ நேற்று வந்தவ நம்மளை பிரிச்சுட்டா….என்னைய  நீ இந்த அளவு புகழ்ந்து பேசி இருக்கியா அவ தான் பெரிய பேரழகியா ஆச்சே அதான் உனக்கு என்னை பிடிக்கலை ” என்று பிடி பிடியேன பிடித்து விட பதறி போனாள் மகிழினி 

“ஏய் நான் நார்மலா தானே சொன்னேன் நமக்குள்ள என்ன புகழ்ச்சி வேண்டியது இருக்கு நாம ஒருத்தர பார்த்தா அவங்க பார்க்க எப்படி இருக்காங்கன்னு சொல்லுவோமோ அப்படி தான் சொன்னேன் அதுக்கு ஏன் இவ்ளோ இப்படி ரியாக்ட் பண்ற” என்றாள்

“அவ்ளோ தானா சரி வா நாம கிளம்பலாம்” என்று உடனே சமதானமாகி விட்டவளை கண்டு இவளை புரிஞ்சுக்கவே முடியல என மனதிற்குள் புலம்பியபடி  உள்ளே செல்ல போக 

“மகிழ் இங்கே வா” என சாந்தினி அழைத்தார்

“என்னம்மா” 

“மகிழ் வெண்மதிக்கு நம்ம வீட்டை சுற்றி காட்டு” என்று சொல்ல 

அய்யோ இப்ப தானே அவளை சமாதான படுத்தினேன் அதுகுள்ளயே என்று “ம்மா  நான் கிளம்பனும் ”

“ஆமா ஏதோ கல்யாணத்திற்கு கிளம்புவதை போல தான்…இருக்கிறதுல வெளுத்து போன பேன்ட் சட்டைய போட்டுட்டு  வர்றதுக்கு எவ்ளோ நேரம் ஆக போகுது போ அவ எவ்ளோ நேரம் தனியா உட்கார்ந்து இருப்பா அவளும் நம்ம சொந்தம் தான்” என்று மகிழினியை திட்ட துவங்கினார்

“இல்லைங்க ஆன்ட்டி பரவாயில்லை ”

“ஆன்ட்டியா நான் உனக்கு அத்தை முறை வேணும் வருண் ராகுல் என்னைய அத்தைன்னு தானே கூப்பிடறாங்க அப்ப நீயும் என்னைய அப்படியே கூப்பிடு என்ன பார்த்துட்டு இருக்க போ மதிக்கு சுற்றி காட்டு” 

மகிழும் வாங்க என்று அழைத்து சென்றாள்

சாந்தினி பேசுவது சரோஜாவிற்கும் பாக்கியத்திற்கு முகத்தில் மிளாகாயை அள்ளி பூசியது போல காந்தியது.

ஷிவானி முறைப்பதை கண்டு “அய்யோ இவ வேற நீங்க இப்படி சுற்றி பாருங்க நான் இதோ வந்திடறேன்”  என பாதியிலே கழன்று கொண்டாள் மகிழினி 

மாடி வரை வந்து விட்டவள் பாதியிலே சென்று விட கீழே சென்றால் நிச்சயம் சித்தி கேள்வி கேட்பார் சிறிது நேரம் இங்கேயே நின்று விட்டு கிழே செல்லாம் என நினைத்து நின்றாள்.

அப்பொழுது அஷ்வத் போனில் அழைக்கவும் பேசியபடி நடந்தவள் ஒரு அறைகுள்  சென்றதை உணராமல்  பேசி முடித்து விட்டு அழைப்பை துண்டிக்கும் போது தான் யார் அறைகுள்ளோ வந்து விட்டது தெரிந்து அங்கிருந்து போவதற்குள் ருத்ரன் பாத்ரூமில் இருந்து இடுப்பில் கட்டிய டவலுடன் வந்து நின்றான்.  

அவள் இருப்பதை கவனிக்காமல் துண்டை கழற்ற போனவனை  பேயறைந்ததை போல் பார்த்தவள் “ஆஆஆ” வென கத்தவும்  

பதறி விட்டான”ஏய் நீ நீ எப்படி இங்கே” என அங்கிருந்த பேட்ஷிட்டை எடுத்து இடுப்பில் சுற்றி கொண்டான்.

மாடியில்  யாரும் இல்லாததால் மதி கத்தியது யாருக்கும் கேட்டு இருக்க நியாயம் இல்லை.

அங்கிருந்து வேகமாக வெளியே ஓடி வந்து விட்டால் 

 உடம்பு மொத்தமும் ஆட்டம் கண்டது ஏதோ ஏதோ நினைவுகள் வந்து அவளை அச்சுருத்தியது.

இதே நிலைமையில் கீழே செல்ல முடியாது என உணர்ந்து பக்கவாட்டில் மொட்டை மாடிக்கு செல்லும் படியை பார்த்தவள் இரண்டிரன்டு படியாக தாவி மொட்டை மாடிக்கு சென்று விட்டாள்

உடையை அணிந்தவன் அவள் மாடிக்கு செல்வதை பார்த்து யாரும் பார்கிறார்களா என பார்த்து விட்டு அவனும் மொட்டை மாடிக்கு சென்றான்.

அங்கே கீழே குத்துகாலிட்டு முழங்காலில் முகத்தை புதைத்து ஏதோ முனுமுனுத்தவள் முன்பு போய் தின்றான் 

“ஏய் எழுந்திரி “அவளிடம் பதிலில்லை

“எழுத்திரினு சொல்றேன்” என அவள் கையை பிடிக்க அவனை பிடித்து தள்ளினாள் 

“எவ்ளோ திமிர் என்னைய தள்ளிவிடற நீயா தான ரூம்க்கு வந்த ஏதோ உன்னை ரேப் பண்ண வந்த மாதிரி பிளேவ் பண்ற” என்று சீறினான்

கேட்டுட்டு இருக்கேன் பதில் பேசுறாளா பாரு என்ன முனுமுனுக்கறா  என காதை அவளருகே கொண்டு சென்றான் 

“மறந்துடு  மறந்திடு வேணாம் எதையும் யோசிக்காத”என முனுமுனுத்து தன்னையே அடித்து கொள்ள 

“ஏய் ஏய் என்ன பண்ற” அவள் கையை பிடித்தவன் அவள் உடல் நடுங்கி கொண்டு இருப்பதை பார்த்து எதுகோ பயபப்படுகிறாள் போல 

“என்ன ஆச்சு உனக்கு” அவளை தோட வந்தவனை யாரோ நினைத்து  தள்ளிவிட்டு “நோ நோ” என பின்னால் நகர்ந்து “அப்பா அப்பா ஹேல்ப் மீ ஹேல்ப் மீ எனக்கு பிடிக்கல பிடிக்கல விடு”என தன் தலையிலே அழுதவளை பார்த்தவன் 

எதையோ நினைத்து பயப்படுகிறாளோ என்று “மதி ஒன்றும் இல்லை உன் அப்பா தான் கூட்டிட்டு வர சொன்னார் வா ” ஏதோ பலநாள் பழகியவன் போல் உரிமையாக பேசி அவளை தன் நெஞ்சில் சாய்த்தவனுக்கு அவளின் இதய துடிப்பை நன்கு உணர முடிந்தது.  

அவள் கண்ணீர் அவன் நெஞ்சை நனைத்து அவனுள் ஏதோ மொத்தமாக நழுவி விழுந்து தான் பலவீனமானதை போல் உணர்ந்தான் அவளை விரட்டுகிறேன் அழவைக்கிறேன் எடுத்த சபதமெல்லாம் எங்கே ஓடி போனதோ தெரியவில்லை.

“ரிலாக்ஸ் ரிலாக்ஸ் ஆர் யூ ஆல்ரைட் உனக்கு ஒன்றும் இல்லை சேஃபான இடத்தில் தான் இருக்க உன் அப்பா கூட இருக்க” என்று அவளை தன் நெஞ்சு கூட்டுக்குள் புதைப்பவன் போல இறுக அணைத்தான் மெல்ல மெல்ல நடுக்கம் குறைந்தாலும் அவள்  அப்பா அப்பா என முனமுனத்தவாறு மயங்கினாள்.

அவளுக்கு ஏதோ நடந்து இருக்கும் போல அதான் அந்த நினைவு வந்து அப்பாவை தேடுகிறாள் ஆனா ஏன் அவ அம்மா கூட  விருப்பப்பட்டு தானே போய் இருந்தா அவளை சுற்றி  கேள்வி படலம் விரிந்தது.

அவளை தூக்கி கொண்டு இறங்கி படியில் நின்று எட்டி பார்த்து யாரும் இல்லை என்பதை உறுதி செய்து கொண்டு தன் அறைக்கு தூக்கி சென்று பேட்டில் படுக்க வைத்து தண்ணீரை எடுத்து அவள் முகத்தில் தெளித்தான்.

தன் இமை குடைகளை மெல்ல பிரித்தவளுக்கு ருத்ரனை அணைத்தது நினைவில் இல்லாமல் போனது 

அவனை கண்டு பதறி போய் எழுந்தாள்

“ஸாரி நான் எப்படி இங்கே வந்தேன் ”

அவளை ஆழ்ந்து பார்த்து தன் கையை பேன்ட் பாக்கெட்டில் விட்டு “நீங்க…நீ மயங்கி கிடந்த அதான் தூக்கிட்டு வந்தேன் கீழே போக முடியுமா இல்லை தூக்கிட்டு போகனுமா” என ஒரு எட்டு வைக்கவும் 

“இல்லை இல்லை நானே வர்றேன்” என வியர்த்து வழிந்து அந்த அறையை விட்டு ஓடி கீழே சென்றாள்.

“என்ன அத்தை வொய்ட் மூனை எனக்குலாம் அறிமுக படுத்த மாட்டீங்களா ”

“வொய்ட் மூனா ”

“வெண்மதிக்கு ட்ராஸ்லேட்”

“ கொடுமைடா மதி இவன் தான்..”

“எதுக்கு நீங்க கஷ்டபடறீங்க என்னை பற்றி நானே சொல்றேன்” என “ஹாய் நான் சந்தோஷ் என் பெயருக்கு ஏற்ற மாதிரியே நான் எப்பவும் எல்லாரையும் சந்தோஷமா வச்சு இருக்கனும்னு நினைப்பேன் ”

“அதனால தான் நான் ஆபிஸ்கே  போகலை ஏன் தெரியுமா”

“எனக்கு எப்படி தெரியும்” என்றாள் அப்பாவியாக

“அதான் சொன்னேனே நான் எல்லாரும் சந்தோஷமா இருக்கனும்னு நினைப்பேன்னு நான் ஆபிஸ் க்கு போய் எல்லாரையும் மிரட்டி வேலை வாங்குவது எல்லாம் பிடிக்காதே”

“வெட்டியா இருப்பதை எவ்வளவு நாசுக்கா சொல்ற என அவன் தலையில் தட்டி எப்ப தான் திருந்துவியோ” என வந்தான் ருத்ர பிரசாத் 

சாந்தினி சந்தோஷ் ஷிவானி மகழினியுடன் ஒரு காரில் செல்ல நர்மதா மதி வருண் ராகுலுடன் ஒரு காரில் போனார்கள்

ஒரு தீம் பார்க்கிற்கு சென்றார்கள்

“மதி நீ அவங்களோட ஜாயின்  பண்ணிக்க வருண் ராகுல் பயப்படுவாங்க அதனால நானும் அண்ணியும் பசங்களோட இருக்கோம்  நீ போ ”

“சித்தி நான் உங்களோடயே இருக்கேனே ”

“நீ எல்லோரடையும் பழகனும்னு தானே கூட்டிட்டு வந்தேன் போ அவங்க போறங்க பாரு”

“மகிழ் உங்களோட மதியை கூட்டிட்டு போங்க” என சாந்தினி சொன்னதும் 

“வாங்க” என்று அவர்கள் முன்னே நடக்கவும் வேறு வழியின்றி அவர்களை பின்தொடர்ந்தாள் 

“நமக்கு தான் பிடிக்கலைன்னு தெரியுதுல வேண்டாம்னு சொல்றதுக்கு என்னவாம் நீ கண்டுகாம  வா” மகிழினியை இழுத்து சென்றாள் ஷிவானி.

மகிழினிக்கு மதியை பார்க்க பாவமாக இருந்தது எதாவது சொன்னாள் ஷிவானி அழுது ஆர்பாட்டம் செய்து விட்டு சந்தோஷமாக இருக்க வேண்டிய ட்ரிப்பை சங்கடமாக்கி விட்ருவாள் என்பதால் எதுவும் சொல்லாமல் அவளுடன் ரெய்டில் ஏறி சென்றாள்.

“வொய்ட் மூன் வா நான் உனக்கு கம்பேனி தருகிறேன்” என ரெய்டில் அவளுடன் ஏறினான்.

மூவர் அமரும் ரெய்ட்  அது சிறுவர்களுக்கு அனுமதி இல்லாததால் நர்மதா சாந்தினி வருண் ராகுலோடு நின்று கொண்டாள் 

ஷிவானி மகிழினி ருத்ரன் அமர்ந்து கொள்ள இன்னோரு சீட்டில் சந்தோஷோடு வெண்மதி அமர அவள் பக்கத்தில் யாரோ  ஒருவர் வந்து அமர்ந்தார்கள்.

ரெய்ட் சுற்ற ஆரம்பிக்கவும்  “என்கிட்ட இருந்து தப்பித்து  வந்துட்டா விட்ருவேன்னு நினைச்சியா” என குரலில் திடுகிட்டு திரும்பியவள் உச்சகட்ட அதிர்ச்சிக்கு உள்ளானாள் அவளுக்கு பக்கத்தில் நெருங்கி அமர்ந்து அவள் தொடையில் கைவைத்தான் ராக்கேஷ்.

“நீ இங்கு வந்ததும் நல்லதுக்கு தான் அப்பதான் நீ எனக்கு ஈஸியா கிடைப்ப” 

ச…சந்தோஷ் என கூப்பிட அவள் பின்னே எட்டி பார்த்தவன் இவன்லாம் ஒரு ஆளு இவனை துணைக்கு வைத்து இருக்க 

“மரியாதையா கைய எடுடா பொறுக்கி இப்ப நான் கத்துனேன்னு வை மொத்த பேரும் உன் மேல் ஏறி மிதிச்சாங்கன்னு வை ஒரே மிதில செத்துடுவ “ரெய்டில் எல்லோரும் கத்தியதில் சந்தோஷிற்கு மதி பேசியது எதுவும் காதில் விழவில்லை. 

அப்படியா அதையும் பார்க்கலாம்டி யாரு யாரை மிதிக்கறாங்கன்னு என்று ரெய்ட் நின்றதும் இறங்கி யார் கண்ணிற்கும் சிக்காமல் ஓடி விட்டான் ராகேஷ் 

அடுத்த ரெய்டில் ஏறாமல் நர்மதா அருகிலே நின்று கொண்டாள் மதி

“நீ போகலையா மதி ” 

“இல்லை சித்தி எனக்கு தலை வலிக்குது அதான் போகலை” ராகேஷ் பயந்து எந்த ரெய்டிலும்  அவள் ஏறவில்லை 

ருத்ரனோ அவளையே பார்த்து கொண்டு இருந்தான் அவள் அந்த ரெய்டில் யாரோ ஒருவனிடம் கோபமாக பேசுவதை தான் பார்த்து கொண்டே இருந்தானே அவன் யார் என பார்ப்பதற்குள்ளே  அவன் மாயமாகி விடவும் யோசனையுடன் அவளை பார்த்தானே தவிர எதுவும் கேட்கவில்லை.

எல்லாரும் வேறு ஒரு ரெய்டில் ஏற சிறிது நேரத்தில் மதியை காணவில்லை

 

தொடரும்…

 

❤️ Loading reactions...
0 Comments
Oldest
Newest Most Voted
error: Content is protected !!
Scroll to Top