💓அத்தியாயம் 《2》

​பேசிக் கொண்டிருக்கும்போது, ஆதிரன் கதிரிடம், “டேய் சர்வேஷ் உன் தங்கச்சி பையனா?” என்று கேட்டான். “ஆமாம்” என்றான் கதிர். “அப்போ உன் தங்கச்சி ஹஸ்பண்ட்?” என்று கேட்டான் ஆதிரன். “அவரு உயிரோடு இல்லடா, இறந்துட்டாரு. இறந்து நாலு வருஷம் ஆகுது” என்றான் கதிர்.

​”நாலு வருஷமா? அப்போ சர்வேஷ் பிறக்கிறதுக்கு முன்னாடியே இறந்துட்டாரா?” என்று கேட்டான் ஆதிரன். 

 

இல்லடா, சர்வேஷிற்கு ஆறு மாசம் இருக்கும்போது ஒரு விபத்தில் இறந்துட்டாரு” என்றான் கதிர். “ஓ… சரிடா, டைம் ஆச்சு நான் கிளம்புறேன்” என்று ஆதிரன் விடைபெற்றான்.

​ஆதிரனும் கதிரும் பேசிக்கொண்டே வெளியே வந்தனர். அப்போதுதான் கோவிலுக்குச் சென்றிருந்த ஆதிரை, இரண்டு குழந்தைகளுடன் வீட்டிற்குள் நுழைந்தாள். அவள் யாரையும் கவனிக்காமல் உள்ளே சென்றுவிட, குழந்தைகள் கதிரிடம் ஓடினர். 

 

சர்வேஷைக் கண்டதும் ஆதிரன் அவனைத் தூக்கிக்கொண்டான்.

​”அங்கிள், நான் கோவில்ல யானை பார்த்தேன்!” என்று ஆர்வமாகச் சொன்னான் சர்வேஷ். “ஓ அப்படியா?” என்றான் ஆதிரன். “ஆமா, அம்மா கிட்ட யானை மேல ரைடு போகக் கேட்டேன், ஆனா அம்மா வேணாம்னு சொல்லிட்டாங்க” என்று சோகமாகச் சொன்னான் சர்வேஷ். “சரி, நான் உன்ன கூட்டிட்டு போறேன்” என்றான் ஆதிரன். 

 

உண்மையாவா? யானை பார்க்க கூட்டிட்டு போவீங்களா?” என்று ஆர்வமாகக் கேட்டான் சர்வேஷ். “கண்டிப்பா கூட்டிட்டு போறேன்” என்று வாக்குறுதி அளித்தான் ஆதிரன்.

​அப்போது கதிர், “சர்வேஷ், மாமா கிட்ட வா, அங்கிள் வீட்டுக்கு கிளம்பணும், டைம் ஆயிடுச்சு” என்றான். சர்வேஷும் கதிரிடம் சென்றுவிட்டான். சர்வேஷை கதிரிடம் கொடுத்துவிட்டு, “சரிடா, நான் கிளம்புறேன். இன்னொரு நாள் குழந்தைகளை கூட்டிட்டு வெளியே போயிட்டு வர்றேன்” என்றான் ஆதிரன். 

 

சரிடா” என்று கதிர் அவனை வழி அனுப்பி வைத்தான்.

​ஆதிரன் காரில் செல்லும்போது சர்வேஷைப் பற்றியே நினைத்துக்கொண்டிருந்தான். 

 

அடையாறு பகுதியில் உள்ள ஆதிரனின் வீட்டில், அவனது தந்தை ஸ்ரீராமும் தாய் லட்சுமியும் இருந்தனர். ஆதிரன் வீட்டிற்கு வந்து காரை நிறுத்திவிட்டு உள்ளே செல்லும்போது, திடீரென்று ஒருவன் அவன் முன்னால் வந்து, “மச்சான், எப்படி இருக்கீங்க?” என்று ஆதிரனை இறுக்கிக் கட்டிக்கொண்டான்.

​ஆதிரன் அவனை விலக்கிவிட்டு, “யார் நீ?” என்று கோபமாகக் கேட்டான். 

 

மச்சான், என்ன தெரியலையா? நான் தான் கோகுல், உங்க மாமா பையன். என்னை மறந்துட்டீங்களா?” என்று கேட்டான். “ஓ நீயா? இப்படி லூசு மாதிரி பண்ணிட்டு இருந்தா உன்னை யார் ஞாபகம் வச்சுப்பா?” என்று கடுப்பாகச் சொன்னான் ஆதிரன். “போங்க மச்சான், எப்ப பாத்தாலும் குறை சொல்லிட்டே இருப்பீங்க!” என்றான் கோகுல். “சரி, இப்ப எதுக்கு இங்க வந்த?” என்று கேட்டான் ஆதிரன். 

 

நீங்க ஊர்ல இருந்து வந்துட்டீங்கன்னு சொன்னாங்க, அதான் பார்த்துட்டு போலாம்னு வந்தேன்” என்றான் கோகுல். “சரி, பார்த்துட்டதனே, கிளம்பு” என்றான் ஆதிரன். “என்ன மச்சான் கிளம்பு சொல்றீங்க? நான் இப்போதைக்கு போக மாட்டேன், இன்னும் கொஞ்ச நாளைக்கு இங்க தான் இருக்க போறேன்” என்றான் கோகுல். கடுப்புடன் அவனைப் பார்த்த ஆதிரன், “சரி, என்று  உள்ளே சென்றான்.

​ஆதிரனை  கண்டதும் ஸ்ரீராமும் லட்சுமியும், “என்னப்பா இப்பதான் வந்தியா? உன் ஃப்ரெண்ட் எப்படி இருக்கான்?” என்று கேட்டார் ஸ்ரீராம். 

 

நல்லா இருக்கேன் பா” என்றான் ஆதிரன். “சரி, அவங்களை ஒரு நாளைக்கு இங்க வரச் சொல்லு” என்றார் ஸ்ரீராம். அப்போது லட்சுமி, “ஆதி, வாப்பா சாப்பிட” என்றார். “இல்லம்மா, நான் கதிர் வீட்லயே சாப்பிட்டேன்” என்றான் ஆதிரன். “அத்தை, எனக்குப் பசிக்குது, சாப்பாடு போடுங்க” என்றான் கோகுல். ஸ்ரீராம் அவனைப் பார்த்து, “டேய், இப்ப கொஞ்ச நேரத்துக்கு முன்னாடிதானே சாப்பிட்ட?” என்றார்.

​கோகுல் அவரை மேலிருந்து கீழ் வரை பார்த்துவிட்டு, 

 

மாமா, நீங்க என் அத்தையைப் பெண் பார்க்க வந்தப்ப என்ன நடந்துச்சுன்னு உங்களுக்கு ஞாபகம் இருக்கா?” என்று கேட்டான். உடனே ஸ்ரீராம், “டேய், நான் ஒன்னும் சொல்லலடா, நீ போய் சாப்பிடு” என்று சொல்லிவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டார். லட்சுமி கோகுல் அருகில் வந்து, “ஏண்டா, அவர்கிட்ட வம்பு இழுத்துட்டு இருக்க? சும்மா இருக்க மாட்டியா?” என்று கேட்டார். “நான் என்னத்த சொன்னேன்? சும்மா ஞாபகம் இருக்கான்னு கேட்டேன், 

அதுக்கு ஏன் அவரு ஓடுறாரு?” என்றான் கோகுல்.​

 

அடுத்த நாள் காலை, ஸ்ரீராம், கோகுல், ஆதிரன் மூவரும் சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். அப்போது கோகுல், “அத்தை, உங்களுக்கு நல்லாவே சமைக்கத் தெரியல. இன்னைக்கு மதியச் சாப்பாடு நான் செய்கிறேன், நீங்க ஒரு வேலையும் செய்யாமல் சும்மா இருங்க” என்றான். “சரிடா, நான் செய்யல, நீயே செய்” என்றார் லட்சுமி. ஸ்ரீராம் கோகுலைப் பார்த்து, “ஏண்டா, சாப்பிடும்போது கூட சும்மா இருக்க மாட்டியா?” என்றார். “மாமா, நீங்க மறந்துட்டீங்கன்னு நினைக்கிறேன், நீங்க அத்தையைப் பெண் பார்க்க வந்தப்ப…” என்று இழுத்தான் கோகுல். “டேய் சாமி, நான் எதுவும் பேசல, ஏடா இப்படி உயிரை வாங்குற?” என்றார் ஸ்ரீராம்.

 

​அவர்கள் பேசிக்கொண்டிருக்கும்போது ஸ்ரீராமின் தங்கை புஷ்பாவும் அவர் கணவர் செந்திலும் உள்ளே வந்தனர். பின்னே அவர்களின் மகள் அஞ்சலி, மருமகன் விக்ரம் வந்தனர். அவர்களைக் கண்டதும் ஸ்ரீராமும் லட்சுமியும் வரவேற்றனர். ஆதிரன் மட்டும் அஞ்சலியையும் விக்ரமையும் பார்த்து, “வாங்க” என்று மட்டும் கூறிவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டான். அஞ்சலியைப் பார்த்து, “எப்படி இருக்கம்மா?” என்று கேட்டார் லட்சுமி. நல்ல இருக்கே அத்த என்றாள் அஞ்சலி.   

ஆதிரன் தன் அறைக்குள் சென்று கதவைச் சாத்திக்கொண்டான்.யாரை  இத்தனை வருடங்களாக பார்க்க குடாதுனு நினைத்தானோ, இன்று அவளை நேரில் பார்த்தது அவனுக்குப் பெரும் அதிர்ச்சியாக இருந்தது.

 

❤️ Loading reactions...
0 Comments
Oldest
Newest Most Voted
error: Content is protected !!
Scroll to Top