💓அத்தியாயம் 《3》

கதவில் சாய்ந்து நின்ற ஆதிரனுக்கு பழைய நினைவுகள் நிழலாட, கண்களை மூடினான்..

ஸ்ரீராமின் தங்கை புஷ்பா. புஷ்பாவின் கணவர் செந்தில். இரண்டு குடும்பங்களுக்கும் இடையிலான உறவு, சொல்லிக்கொள்ள முடியாத அளவுக்கு அத்தனை நெருக்கமானது. அஞ்சலி ஆதிரனைவிட ஐந்து வயது சிறியவள் என்றாலும், 

இருவரும் நண்பர்களைப் போலத்தான் வளர்ந்தார்கள். அஞ்சலி வயதுக்கு வந்த அந்தத் தருணத்தில், இரு குடும்பங்களும் ஆதிரன் – அஞ்சலி திருமணத்தைப் பற்றிப் பேசி ஒரு முடிவுக்கு வந்திருந்தனர். ஆனால், அந்த விடயம் ஆதிரனுக்கோ, அஞ்சலிக்கோ தெரியாது. அவர்களுக்குள் பூத்திருந்தது நட்பா அல்லது காதலா என்பதைப் பிரித்தறிய முடியாத அளவுக்கு, நாட்களும் பருவங்களும் மெல்ல நகர்ந்தன.

 

ஆதிரன் தன் கல்லூரிப் படிப்பை முடித்ததும், வீட்டில் திருமணப் பேச்சை எடுத்தார்கள். அஞ்சலி அப்போதுதான் முதலாம் ஆண்டு படித்துக் கொண்டிருந்தாள். எதிர்பாராத அந்தத் திருமணப் பேச்சு ஆதிரனுக்கும் அஞ்சலிக்கும் பெரும் அதிர்ச்சியைத் தந்தாலும், அவர்களுக்குள் இருந்த மென்மையான புரிதல், அந்தத் திருமணத்தை வேண்டாம் என்று சொல்லத் தூண்டவில்லை. “நான் லண்டன் சென்று படித்துவிட்டு வருகிறேன். 

 

அதற்குள் அஞ்சலியும் படிப்பை முடித்துவிடட்டும்; பிறகு திருமணம் செய்து கொள்ளலாம்” என்று ஆதிரன் சொன்னபோது, அது அனைவருக்கும் ஏற்புடையதாக இருந்தது.

ஆதிரன் லண்டன் சென்றான். அவன் சென்ற ஒரு வருடத்தில், அவர்கள் இருவருக்கும் இடையிலான நட்பு காதலாக மலர்ந்திருந்தது.

அன்றாடம் கைப்பேசியில் பேசும் பேச்சும், எதிர்காலத்தைப் பற்றிய கனவுகளும் அவர்களது காதலை உறுதி செய்தன. அஞ்சலி தன் படிப்பிலும், ஆதிரன் தன் லட்சியத்திலும் தீவிரமாக இருந்த அந்த வேளையில்தான், விதி தன் விளையாட்டைத் தொடங்கியது.

 

செந்திலின் அக்கா சாரதாவின் உடல்நிலை மோசம் அடைந்தது. அது ஒரு பதற்றமான மாலை நேரம். செந்தில் தன் மகள் அஞ்சலியையும், மனைவி புஷ்பாவையும் அழைத்துக்கொண்டு சொந்த ஊருக்கு விரைந்தான். சாரதாவைச் சுற்றியே வளர்ந்த செந்திலுக்கு, அக்காவின் அந்த நிலைமை பெரும் மனவலியைத் தந்தது.

 

தன்னைக் கண்டதும் தம்பியின் கைகளைப் பற்றிக்கொண்ட சாரதாவின் கண்கள், ஏதோ ஒரு பெரும் பாரத்தைச் சுமந்துகொண்டிருந்தன.

“வந்துட்டியா செந்திலு… உன்னைப் பார்க்காமலே போயிடுவேனோன்னு மனசு பதறிட்டே இருந்தது…” என்று அவர் தழுதழுக்க, செந்திலின் இதயம் கனத்தது.

“அக்கா, இப்படி எல்லாம் பேசாதே. உனக்கு ஒன்றும் ஆகாது,” என்று அவர்  தேற்ற முயல, சாரதா தன் மகன்  

 

விக்ரமைப் பார்த்து ஒரு நீண்ட பெருமூச்சு விட்டார்.

“இல்ல செந்தில்… எனக்குத் தெரியும், நான் இனி அதிக நாள் உயிரோடு இருக்க மாட்டேன். என் பையனைத் தனியா விட்டுட்டுப் போறேனேங்கறதுதான் என் ஒரே கவலை. அவன் உன் கூட இருந்தா நல்லா இருப்பான். எனக்கு அப்புறம் அவனுக்கு யாரும் இல்லை…”

செந்தில் ஏதோ சொல்ல வர, சாரதா பிடிவாதமாக, ” உன் பொண்ணு 

அஞ்சலியை என் பையனுக்குக் கொடுப்பியா?” என்று கேட்டார்.

அறை முழுவதும் நிசப்தம் நிலவியது. அதுவரை அஞ்சலியை ஆதிரனுக்காகவே வளர்த்த செந்திலுக்கு, அந்தச் சூழலில் என்ன சொல்வது என்று தெரியவில்லை. ஆனால், தன்னை தாய்  தந்தையற்ற சிறுவயதில்  அரவணைத்து வளர்த்த அக்காவின் கடைசி ஆசையை 

மறுக்க அவருக்கு மனம் வரவில்லை. தன் மகளின் எதிர்காலத்தையும், ஆதிரன் மீதான அவளது காதலையும் விட, அக்காவின் வேண்டுகோள் அவருக்குப் பெரிதாகத் தெரிந்தது.

விக்ரம், “அம்மா, வேண்டாமா… அவசரப்பட்டு முடிவு எடுக்காதீங்க,” என்று கெஞ்சியும் சாரதா கேட்கவில்லை. 

அஞ்சலி சிலையாக நின்றாள். தன் தந்தை இவ்வளவு பெரிய முடிவை எடுப்பார் என்று அவள் கனவிலும் நினைக்கவில்லை. பலரது வற்புறுத்தலால், அஞ்சலியின் விருப்பத்தைக் கூடக் கேட்காமல், செந்தில் அந்தத் திருமணத்திற்குச் சம்மதித்தார்.

அந்த வீட்டின்  பூஜை அறையில், தன் தாயின் கடைசி ஆசைக்காக விக்ரம் 

 

அஞ்சலி கழுத்தில் தாலி கட்டினான். அந்தத் தாலி கட்டப்பட்ட அடுத்த நிமிடமே, சாரதா நிம்மதி பெருமூச்சுடன் கண்களை மூடினார்.

சாரதாவின் இறுதிச் சடங்குகள் எல்லாம் ஒருவழியாக முடிந்தன. வீடு அமைதியாக இருந்தது. விக்ரம் வீட்டின் திண்ணையில் அமர்ந்து, தன் தாயின் நினைவுகளை அசைபோட்டுக் கொண்டிருந்தான். அவனது கண்களில் நீர் 

வற்றிப்போயிருந்தது.

 

செந்தில் மெல்ல விக்ரமிடம் வந்து அமர்ந்தார். அவர் முகத்தில் குற்ற உணர்ச்சி நிழலாடியது.

“மாப்ள…” என்று செந்தில் தயக்கத்துடன் அழைத்தார் 

விக்ரம் அவரை நிமிர்ந்து பார்த்தான். அவனது கண்கள் சிவந்திருந்தன.

“என்ன மாமா?” விக்ரமின் குரல் 

கரகரப்பாக இருந்தது.

“ஊருக்குக் கிளம்பலாம் மாப்ள…

விக்ரம் ஒரு கசப்பான சிரிப்பை உதிர்த்தான். “அஞ்சலிக்கு  நான் தாலி கட்டணும்னு அம்மா ஆசைப்பட்டா, அதுக்காக உங்க மகளோட வாழ்க்கையை ஏன் மாமா பாழாக்கினீங்க?” என்றான் விக்ரம் 

செந்தில் அதிர்ந்து போனார் . 

விக்ரம் இவ்வளவு வெளிப்படையாகப் பேசுவான் என்று அவன் எதிர்பார்க்கவில்லை. “மாப்ள, உன் மேல எனக்கு இருந்த பாசத்தாலயும், என் அக்காவோட கடைசி ஆசைக்காகவும்தான் நான் இப்படி முடிவெடுத்தேன். வேற எதுவும் என் கண்ணுக்குத் தெரியல.”

“ஆனா  நீங்க எடுத்த முடிவு, மூணு பேரோட வாழ்க்கையை கேள்விக்குறியாக்கிடுச்சு மாமா. 

 

என்னால இப்போ அவளை என் மனைவியா ஏத்துக்க முடியாது, அதே சமயம் அவளை விட்டுட்டுப் போகவும் முடியாது. நான் இப்ப என்ன பண்ணனும்னு நீங்களே சொல்லுங்க?” என்று விக்ரம் கேட்க.

செந்தில் , நீங்க எங்களோட கிளம்பி வாங்க என்றார்.   விக்ரமுக்குத்  தன்  மாமாவையும், அவர் மேல் தான் கொண்ட மரியாதையையும் தாண்டி ஏதும் பேசத் தோன்றவில்லை. அம்மாவின் நினைவுகள் அவனை அழுத்தின.

“சரி மாமா, வர்றேன்… ஆனா அஞ்சலியோட வாழ்க்கைக்கு  நான்  ஒரு தடையா இருக்கக் கூடாதுன்னு நினைக்கிறேன்,” என்றான் விக்ரம் .

செந்தில் பதில் சொல்ல முடியாமல் மௌனமாகிப் போனார்.  

லண்டனில் இருந்த ஆதிரனுக்கு அஞ்சலி திருமணம் விடயம் தெரியவும் ஆதிரனின்  வாழ்க்கை அடியோடு மாறியது.

அஞ்சலியின் வாழ்க்கையில் நிகழ்ந்த அந்தத் துரோகம், அவன் காதலில் மட்டுமல்ல, குடும்பத்தின் மீதான நம்பிக்கையையும் சிதைத்துவிட்டது. படிப்பை முடித்தும் இந்தியா திரும்பத் துணியாத ஆதிரன், அந்த ஏமாற்றத்தைத் தாங்கிக்கொள்ள முடியாமல் பல ஆண்டுகள் அங்கேயே தங்கிவிட்டான்.

இப்போது, தாய் தந்தையின் பிடிவாதத்தால் ஊர் திரும்பியிருக்கிறான் ஆதிரன். 

இப்போது ஆதிரனுக்கு  அஞ்சலியின் மேல்  காதல் இல்லை அதைவிட, தான் அடைந்த அந்த ஏமாற்றமும், செந்திலின் துரோகமும் அவன்  கோபமாக உறைந்திருந்தது.

 

❤️ Loading reactions...
0 Comments
Oldest
Newest Most Voted
error: Content is protected !!
Scroll to Top